ஒலக சினிமாவ ஒரண்ட இழுத்து நெம்ப நாளாச்சேன்னு நானும் கொரியா, ஸ்பானிஷ், இத்தாலின்னு படங்கள தேடிட்டு (ஸைட்ல கப்பிக்கிட்ட கருத்து கேட்டுக்கிட்டே) இருந்த சமயத்துல மொக்கை போடுறதுக்குன்னே நட்பு ஒருத்தன் இந்தியாவுல இருந்து ஜிடாக்ல தூது அனுப்புனான். சரி பெங்களூர் ஃபிகர்கள பத்தி விசாரிக்கலாம்னு நானும் நம்பி ஒரு ஸமைலியப் போட்டு ஏழரைய ஏணிப் போட்டு வரவேத்துத் தொலச்சிட்டேன். அங்கிருந்து இன்னும் ரெண்டு பேரு கான்ஃப்ரன்ஸ்ல ஜாயிண்ட் அடிச்சானுங்க. கான்ஃபரணன்ஸ் போட்டாலே எவனோ ஒருத்தன் சிக்க போறான்னு அர்த்தம். வாடிக்கையா மாட்டுற நண்பன் அன்னைக்கு சிக்காம போக பயபுள்ளைங்க டார்கெட் என் மேல பாஞ்சி டோட்டல் ஒன்றரை மணி நேரமும் பேண்டேஜ் மேல டேமேஜ் ஆற அளவுக்கு கும்மியடிச்சிட்டாங்க. அதோட சுருவாக்கம் இங்கே...
"என்னடா.. உன்னோட ரெண்டு கியுபிக்கல் தாண்டி ஒரு சூப்பர் ஃபிகர் இருக்குதுன்னு சொன்னியே.. எப்படி இருக்கா அவ??"
"ங்கொய்யால... நான் நல்லா இருக்கேனா, இல்லையானு ஒரு கேள்வியும் கேக்கல. எடுத்த உடனே எவளோ ஒரு ஃபிகர் பத்தி கேக்குறியேடா?"
"அம்புட்டு நல்லவனாடா நீயீ?? நீ எதுக்கு என் கூட சேட் பண்ணுறன்னு எனக்கு தெரியாதா?? பக்கத்து வீட்டு பவித்ரால இருந்து முக்குச் சந்து முனியம்மா வரைக்கும் விசாரிக்கத்தானே..."
"ஏன் இந்த கொலவெறி?? நண்பன் பிங் பண்றானே... பயபுள்ளைட்ட பேசலாம்னு பாசத்தோட வந்தா... ஏன் இப்படி??"
"சரி... அமெரிக்கால எப்படிடா பொழுது போக்குறீங்க?", இந்த கேள்விய அவன் கேக்கும்போதுதான் இன்னொரு ரெண்டு பேரு வந்து சேந்தாங்க.
"என்ன பண்ணுவோம்?? இப்படி உங்கள மாதிரி யாராவது கெடச்சா மூச்சு தெணர வரைக்கும் மொக்க போடுவோம். அட்டு காமெடிக்கெல்லாம் பேக்ரவுண்ட்ல ஆள வச்சி சிரிக்கிற இங்க்லிஷு சீரியல்கள எல்லாத்தையும் ஒன்னு விடாம பாப்போம். அப்படி, யாருமே சிக்கலைன்னு வையீ.... இருக்கவே இருக்கு ஆர்குட். அதுலையும் புதுசா ஒன்னு போட்டிருக்கான். நாம என்னத்த மாத்துனாலும் எல்லாத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டிடுவானுங்க. ஸோ... கமிட்டட் னு ஸ்டேடஸ மாத்திட்டா அப்புறம் எல்லாரும் வந்து விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் அவுங்களோட கொஞ்ச நேரம் மொக்க"
"இதெல்லாம் ஒரு பொழப்பு. உங்கள எல்லாம் ஒழுங்கா வேல செய்யுங்கடானு ஆன்ஸைட் அனுப்புனான் பாரு... அவன சொல்லனும்"
"இது மட்டுமாடா?? ப்ளாகுங்கற பேருல இவனுங்க பண்ற அக்கப்போரு தாங்க முடியலடா", அதுவரைக்கும் அமைதியா இருந்த இன்னொருத்தன் ஆரம்பிச்சான்.
"அப்படி என்னடா ப்ளாக்ல எழுதுவீங்க?"
"அது ஒரு பெரிய காமெடி மாப்ள... நான் சொல்றேன் பாரு"ன்னு ஆரம்பிச்சு போட்டு தாக்கிட்டான் என்னோட அந்த அமைதியான நண்பன். இது என்னோட நண்பன் சொன்னதுதான் மக்களே... நாந்தான் சொன்னேன்னு தப்பா நெனச்சி போடாதிய... :)))
"வெயிலில் மழை, குடைக்குள் மழை, பீங்கான் மழைன்னு என்னமோ வைரமுத்துவோட ஒன்னுவிட்ட பேரன்னு மனசுல நெனச்சிட்டு தலைப்ப வக்கிறது. அந்த மழையும் இவிங்க கைல மாட்டிக்கிட்டு படாத பாடு படுது. ஆட்டையப் போட்ட துண்டுபீடய அடிச்சதையே ஏதோ ஐன்ஸ்டின் லெவெலுக்கு சாதனை பண்ண மாதிரி எழுதுறது. அதுலையும் தலைப்பு வைப்பாங்க பாரு... 'களவாடிய கட்டபீடி'னு. அப்படியே பொலேர்னு நாலு அப்பு அப்புற மாதிரி. இவனுங்க என்னமோ எழுதி தொலச்சிட்டானேன்னு ஐயோ பாவம்னு 'உங்கள் எழுத்து அருமை'னு கொஞ்ச பேரு சில டெம்ப்ளேட் கமெண்ட போடுவாங்க. அப்ப இவிங்க ஒரு டையலாக் அடிப்பாங்க பாரு. 'என்ன இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் வர முடியுமா?'னு. கேட்டா தன்னடக்கமாமாம். ஆனா, இவிங்கள ஒரு விதத்துல பாராட்டலாம்டா. எல்லாருமே வடிவேலு மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாய்ங்க. மீச முழுக்க மண்ணா இருந்தாலும், ஒட்டாத மாதிரியே ரியாக்ஷன் விடுவாய்ங்க"
"நானும் ப்ளாக் எழுதுறதுக்கு ஏதாவது ஐடியா கொடுடா", இம்புட்டையும் கவனமா கேட்டுக்கிட்டு இருந்தவனுக்கு எப்படித்தான் இந்த ஆச வந்துச்சோ தெரியல :))
"அடப்பாவி.... நீயுமா?? சரி.. சொல்லித் தொலைக்கிறேன். கேளு", மறுபடியும் அசிங்க படுத்த ஆரம்பிக்கப் போறான்னு தெரிஞ்சுப் போச்சு. நம்மள வேற நல்லவன்னு சொல்லிட்டாங்க. அதனால அமைதியாவே இருந்துட்டேன். :((( அவன் சொன்ன ஐடியாஸ் கீழ்வருமாறு...
- 'கன்னுக்குள் கன்னிவெடி'ன்னு ஒரு ப்ளாக ஆரம்பிச்சு, 'அல்வாவை பிய்க்காமல் திங்குவது எப்படி?'னு டிப்ஸ் கொடுக்கலாம்.
- 'காதல் கூச்செரியும் கருவாட்டுக் குழம்பு'னு ஒரு காதல் கவுஜய எழுதி, 'ரெட்டை இன்றில்'னு ஒரு போர்ட மாட்டி போடலாம்.
- நம்மூரு அழுகாச்சி சீரியல பாத்துட்டு, 'சிப்பிப்பய'னு பேர வச்சி 'உலக விமர்சனம்' எழுதலாம்.
- 'பூரிக்கட்டையின் பின்னணியில் புறநானூறு'ன்னு, பூரிக்கட்டயால தங்கமணிக்கிட்ட அடி வாங்குன வரலாற்று சிறப்ப போடலாம். இந்த மாதிரி மேட்டருக்கு 'கம்பி'ன்னு பேரு வச்சா அமோகமா வரலாம்ங்குறது பதிவுலக நியுமராலஜியாம்.
- வீக்கெண்ட் விக்கல்னு வெள்ளிக்கெழம ஆன மங்களகரமான மங்கைகள் படத்தப் போட்டு ஓட்டலாம். ஆனா அதுக்கு சில பேர் கிட்ட இருந்து காப்பிரைட்டு வாங்கனும்.
- ஒரு ரெண்டு மூனு பேரா சேந்து 'பால் டம்ளர்'னு ஒரு பளாக ஆரம்பிச்சு, படத்துல வர்ற மொக்க டையலாக் எல்லாத்தையும் சேகரிக்கலாம்.
- பாப்புலாரிட்டி வேனும்னா, 'மிட்லைட் மசாலா'னு கில்பான்ஸா ஒரு டைட்டில போட்டு, 'நடுராத்திரியில் காய வைப்பது எவ்வகை மசாலா? அ)சிக்கன் மசாலா ஆ)மட்டன் மசாலானு கேள்வி பதில போடலாம். ப்ளாக் பேரையும் வித்தியாசமா 'கண்ணகிக் கூரை'னு வச்சிக்கலாம்.
- வயச கொறக்குறதுக்குன்னே சில பசங்க தடியன், குட்டிப்பையன், தலைப்பையன்னு பேர வச்சிருப்பாய்ங்க. அவுங்கள மாதிரியே நாமலும் ஃபாளோ பண்ணிக்கனும். அப்படியே கமெண்ட் போடும்போதெல்லாம் 'சூப்பர் அங்கிள்', 'சூப்பர் ஆண்டி'னு இளவயசு மாதிரியே இமேஜ மெயிண்டெயின் பண்ணிக்கனும். சில பேரு 'வாலிபன்'ங்குற போஸ்டுக்காகவே சங்கத்துல கூட சேந்திருக்காங்களாம்.
- அப்படி எதுவுமே கெடைக்கலைனு வையீ.. இருக்கவே இருக்கு சங்கிலித்தொடர். 'அசிங்கமான ஆறு' 'பைத்தியமாக்கும் பத்து'னு ஒரு போஸ்ட்ட போட்டு, நாம பழி வாங்குறதுக்கு டார்கெட் லிஸ்ட்ல இருக்குறவங்களையும் இந்த விளையாட்டுல இழுத்து விட்டு கூத்துப் பாக்கலாம்.
பாத்தீங்களா மக்கா!!! இந்த போஸ்ட்ட படிக்கிற நீங்களே எம்புட்டு கொலவெறில இருக்கீங்க. அவிங்க கான்ஃப்ல மாட்டுன நான் என்ன கதின்னு நெனச்சிப் பாத்துக்கிடுங்க. சரி எனக்கு இங்குட்டு என்னல ச்சோலின்னு கேக்குதியளா?? என்ன பண்ண சொல்லுதிய?? இம்புட்டு நாளா ரிஷான் அண்ணாச்சி பட்டைய கெளப்பிட்டு பின்னி பெடலுடுத்துட்டு இருந்தாவள்லா... அதனால சங்கத்துக்கு நெறய திஷ்டி பட்டுடுச்சாம். அதாம்.. அத எப்படி கழிக்கிறதுன்னு பாத்துட்டு இருந்தாவ. அதனால ஓரமா சலம்பிட்டு இருந்த என்னைய கூட்டியாந்து மொக்கயா ஏதாவது போடுப்பானு சொல்லிட்டாவ. அதான்...
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குதியளா?? இருக்குடே... இருக்கு... அத நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க...:)))
37 comments:
மீ தி பர்ஷ்ட்டு?
அட்லாஸ் சிங்கமே
எங்கள் தங்கமே
கடலில் வங்கமே
காஷ்மீரச் சங்கமே
ஒலக நாயகன் ஜீயா
வருக வருகவே! வற்றாச் சிரிப்பு
தருக தருகவே!!
:-)
//ப்ளாக் பேரையும் வித்தியாசமா கண்ணகிக் கூரை'னு வச்சிக்கலாம்.
//
அடப்பாவி மக்கா!
பதிவைப் படிக்காம ரெண்டு பின்னூட்டம் வேற போட்டுட்டேனே! அதுவும் இந்தப் பய புள்ளைய வெல்கம் பண்ணி!
இவனை வெல்கம் பண்ணா, இவன் சூயிங்கம்-ல்ல பண்ணுறான்! இது அந்த மாதவிக்கே அடுக்காது! :-)
அடடடடே ஜி! நீ தானா ராசா இந்த மாசம் அட்லஸ் வாலிபரு!
வாங்கய்யா.... நல்லா எழுதுங்கய்யா... வாழ்த்துக்கள்யா
//பேக்ரவுண்ட்ல ஆள வச்சி சிரிக்கிற இங்க்லிஷு சீரியல்கள
இது சூப்பரு :-)
வாழ்த்துக்கள் ராசா ;)
வ.வா.ச வரலாற்றிலேயே அதிகப்படியான ஆப்பு வாங்கிய அபூர்வ உலக நாயகன் ஜி என்று பேர் எடுக்க வாழ்த்துகள்... :-)
என்ட்ரி குடுக்கும் போதே ஒரு கோல வெறியோடதான் வந்து இருப்பீங்க போல இருக்கு...:-)
/- பாப்புலாரிட்டி வேனும்னா, 'மிட்லைட் மசாலா'னு கில்பான்ஸா ஒரு டைட்டில போட்டு, 'நடுராத்திரியில் காய வைப்பது எவ்வகை மசாலா? அ)சிக்கன் மசாலா ஆ)மட்டன் மசாலானு கேள்வி பதில போடலாம். ப்ளாக் பேரையும் வித்தியாசமா 'கண்ணகிக் கூரை'னு வச்சிக்கலாம்.//
சூப்பரு.... :)
//அடப்பாவி மக்கா!
பதிவைப் படிக்காம ரெண்டு பின்னூட்டம் வேற போட்டுட்டேனே! அதுவும் இந்தப் பய புள்ளைய வெல்கம் பண்ணி!
//
KRS, நீங்க நல்லவர்னு கேள்வி பட்டு இருக்கேன்...ஆனா இம்புட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலலலலவர்னு இப்ப தான் தெரியும்... :-)
எலே, நம்மூர்கார நக்கலை நம்மகிட்டயே காட்டுதியே! :))
நல்லா இருங்கடே! (கொத்ஸ், இதே கமண்டை காப்பி அடிச்சி போடுவாரு பாரு) :p
நெல்லை குசும்பா இந்த மாதம்...
நல்ல நகைச்சுவைங்க இடுகை முழுவது,... :))))
kannabiran, RAVI SHANKAR (KRS)
வாங்க தல!! மொத பின்னூட்டத்த பாத்தபோதே நெனச்சேன்.. அண்ணாச்சி பதிவ படிக்கலைனு ;))))
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...
பிரேம்குமார்
என்னாது?? பட்டிமன்றம் எதாவது நடத்த போறியளா?? டாங்கிஸ் ஃபார் வாழ்த்து :)))
சரவணகுமரன்
என்ன சூப்பர் இது சரவணா??
கோபிநாத்
நன்றிண்ணே...
Syam
என்னாது இது புது கத?? அதிகப்படியான ஆப்பா?? நீங்கெல்லாம் இருக்கும்போது நாங்க பக்கத்துல வர முடியுமா?? ;))) அதுக்கும் மேல அண்ணன் கைப்புள்ள இருக்கும்போது நாம அப்படி எல்லாம் பேசலாமா??
ambi
அது என்னமோ தெரியல.. என்ன மாயமோ தெரியல... பூரிக்கட்டைய பத்தி யோசிக்கும்போது என்னமோ உங்க ஞாபகம்தான் டக்குனு வந்தது...
இராம்/Raam
வாங்க ராயலண்ணே... கேஆரெஸ் அண்ணாச்சிய ஏன் இப்படி ஓட்டுதிய??
தமிழ் பிரியன்
வாங்க வைகைப் புதல்வன்... உங்கள போய் மறந்துட்டானே என்னுடைய ஃப்ரெண்டு...
////ப்ளாக் பேரையும் வித்தியாசமா கண்ணகிக் கூரை'னு வச்சிக்கலாம்//
ஹி ஹி ஹி சூப்பருங்க.
நீங்க எப்படி,'இது வாலிப வயசு'ன்னு அலப்பறைய ஆரம்பிக்கப் போறீங்களா?
//வ.வா.ச வரலாற்றிலேயே அதிகப்படியான ஆப்பு வாங்கிய அபூர்வ உலக நாயகன் ஜி என்று பேர் எடுக்க வாழ்த்துகள்... :-)//
ஷ்யாம், என் மேல அப்படி என்ன கோபம்?
ஜி, அப்பா ராசா, நீதான் இந்த மாசத்துக்கு மாட்டின ஆளா? நல்லா இரு!!
//எலே, நம்மூர்கார நக்கலை நம்மகிட்டயே காட்டுதியே! :))
நல்லா இருங்கடே! (கொத்ஸ், இதே கமண்டை காப்பி அடிச்சி போடுவாரு பாரு) :p//
போடலையே!! :))
அவரு என்னைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே..
:)))))
சிங்கத்துக்கு வாழ்த்துக்கள் :)
:))
வா மக்கா வா!!
//"நாங்களும் உலகநாயகந்தான்!!!"//
அது :)))
அடிக்கற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கனும்..இஸ்டார்ட்ட்ட் மீஜிக் :))
he... he... :P
அட்லாஸ் ' நாயகனுக்கு' நல்வாழ்த்துக்கள்!!
//கப்பி பய said...
அடிக்கற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கனும்..//
எலே சிப்பி பய!
அதான் ஒனக்கு அடிச்சி, சட்டையெல்லாம் சிப்பி சிப்பியா கிழிஞ்சி தொங்குதே! போதாதா? :-)
சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்..ஆரம்பமே அதிர வெச்சுட்டீங்க..ஜீ வந்துட்டீங்கள்ள. இனி கலக்கல்தான் போங்க...
(அப்பாடா... ஒரு வழியா அட்டன்டன்ஸ் போட்டாச்சு)
//ஷ்யாம், என் மேல அப்படி என்ன கோபம்?
//
கொத்ஸ், நீங்க பிரபஞ்ச நாயகன் உங்கள போய் மிஞ்ச முடியுமா...
:-)
உலக நயகானா இல்ல உலக்க நாயகனா ஏதும் கமெடி பனலயெ
//அப்படியே கமெண்ட் போடும்போதெல்லாம் 'சூப்பர் அங்கிள்', 'சூப்பர் ஆண்டி'னு இளவயசு மாதிரியே இமேஜ மெயிண்டெயின் பண்ணிக்கனும்.//
இதுல உள்குத்து ஏதும் இல்லையே அங்கிள் ?
//எம்.ரிஷான் ஷெரீப் said...
அப்படியே கமெண்ட் போடும்போதெல்லாம் 'சூப்பர் அங்கிள்', 'சூப்பர் ஆண்டி'னு இளவயசு மாதிரியே இமேஜ மெயிண்டெயின் பண்ணிக்கனும்.//
இதுல உள்குத்து ஏதும் இல்லையே அங்கிள் ?//
நோ நோ ஒன்லி டைரக்ட் குத்து தான்... :-)
ஒலக நாயகன் ஜீ வாழ்க!
வாங்க; வாங்க!
//வாங்க; வாங்க!//
முதல் வாங்க - வேறு பொருள் கொண்டது!
//அடிக்கற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கனும்..இஸ்டார்ட்ட்ட் மீஜிக் :))//
இது நம்ம தலயோட ட்ரேட் மார்க் டயலாக் ஆச்சே!
ஆடிி வா! பாடி வா! ஆணழகே ஓடி வா! கும்மியிலே கலக்கலாம் வா!
இந்த மாத அட்லாஸ் வாலிபரே!கலக்குங்கள்! வாழ்துக்கள்
வாய்யா வா!
ப்ளாக் ஐடியா எல்லாம் கலக்கலா இருக்க்கே.. அதும் பால் டம்ளர் நல்லா இருக்கு யாராவது ஆரம்பிக்கப்பா...:))
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :D
// கன்னுக்குள் கன்னிவெடி / 'ரெட்டை இன்றில்' / 'சிப்பிப்பய' / 'கம்பி' / சில பேர் / 'பால் டம்ளர்' / 'மிட்லைட் மசாலா' //
ஆரம்பமே வேறமாதிரி போகுதே...
ம்ம்..... புது டிரஸ் போட்ட கொஞ்ச நாளைக்கி மிடுக்கு இருக்கத்தான செய்யும்..
Post a Comment