சங்கத்திலே கொண்டாட்டம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஆகிப்போச்சு, ஆனா அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட இணையற்ற ஒப்பிலா தலைவர் கிரேட் கைப்புள்ளயே மட்டுந்தான் காணோம். என்னாச்சு ஏதாச்சு'ன்னு அவருக்காக நைட்பகலா உழைச்சு ஓடாப் போனே சங்கத்து சிங்கங்கள் எல்லாமே கன்னத்திலே கைவைச்சிட்டு கஷ்டத்திலே இருக்கோமின்னு மட்டுமின்னு நினைச்சிராதீங்க, நாங்கெல்லாம் பயங்கரமான சந்தோஷத்திலே மிதந்துட்டு இருக்கோம்.
அதுக்கான காரணம் என்னான்னு பார்த்தா தல கிரேட் கைப்புள்ள'யா இருந்து கிரேக் கைப்புள்ள'யா ஆகி சங்கத்திலே ஆப்பு வாங்கினது பத்தாமே இந்திய கிரிக்கெட் டீம்'க்கே கோச்சா போயி அங்க ஒன்ன முடியாமே இப்போ டோட்டல் டோமேஜ் புள்ளயா ஆகிட்டாரு'லே. அந்த சந்தோஷத்துக்காக ஸ்விட் எடுத்து கொண்டாடி கொண்டாடி களைப்பாகி போயிருக்கோம். இந்தமாதிரி நேரத்திலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டுமின்னு பங்களாதேஷ் vs பெர்முடா விளையாடின சரித்திரபுகழ் மேட்ச பார்த்திட்டு இருந்தோம்.
சரி மேலே இருக்கிறதெல்லாம் கதை சொல்லுறமாதிரி இருக்கு. இனிமே லைவ் கமெண்டரி...
தேவ்:- "ஏலேய் மக்கா நல்லா என்ஞாய் பண்ணுங்கய்யா! இதிலே நாமே காயப்போட்ட பசங்களும் நம்மளை காயப்போட்ட பசங்களும் ஒன்னுக்கூடி மேட்ச் விளையாடிட்டு இருக்காங்க!"
சிபி:- "ஹி ஹி.... இன்னிக்கு யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்ம தல'க்கு பெரிய ஆப்பு வைக்கனும்"
ஜொள்ளு:- "டூட்ஸ், அந்த கேமிரா மேன்ஸ் எல்லாரையும் மாத்தனும்! ஒரு பயலுகளும் எனக்கு ஏத்த மேட்சை காட்டமாட்டேன்கிறாய்ங்கே"
வெட்டி:- "ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?"
ஜொள்ளு:- "சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!"
புலி:-" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
இளா:- "என்ன புலி பசிக்கிதா? இந்த பாப்கார்ன் சாப்பிடு சரியா போயிரும்!"
புலி:- "யோவ் விவ், அந்த டிவி பின்னாடி இருக்கிற ஜன்னலிலே பாருங்கய்யா! ஏதோ கை தெரியுது? அய்யோ இங்க ஏதோ ஒரு ஜகன்மோகினி உள்ளே வந்துருக்கு சாமியோவ்!"
சிபி:- "நான் இங்கேதானே ஒட்கார்ந்து இருக்கேன்! யாரு எனக்கே தெரியாமே ஜகன்மோகினியா??"
சட்டென்னு ஒரு உருவம் உள்ளே நுழைக்கிறது, ஆளு பார்க்க பூனை பழமொழியிலே வர்ற விலங்கினத்தோட சுத்தமான நிறம், அந்த நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமே முட்டியை தொடற அளவுக்கு கிளிப்பச்சை கலருலே ஜிலுக்கு பர்முடா, ஜிவு ஜிவுன்னு கண்ணை பறிக்கிற செவப்பு கலருலே ஒரு தேநீர் சட்டையும் போட்டுக்கிட்டு "தல" சங்கத்து குடிசைக்குள்ளே என்டர்..
தேவ்:- " தல எங்க போயிருந்தே? நீ கொஞ்சநாளு இல்லைன்னோதும் நிறைய ஸ்கூப்நீயூஸ் பரவிருச்சு! அதுவுமில்லாமே ஒனக்கு எங்கதான் இப்பிடியெல்லாம் அட்ராக்ட்வான கலருலே டிரெஸ்ல்லாம் கிடைக்கிது?"
தல:- "ஏலேய் போர்வாளு, ஒனக்கு ரொம்பதான் ஏத்தம்? ஸ்கூப்நீயூஸ் போட்டதே நீதானே? ஏண்டா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்கன்னு கூட்டிட்டு போனா அதே விளையாடமே அங்க இருக்கிற பொண்ணுகளோட செல் நம்பர்ஸ் வாங்கி SMS அனுப்பி அனுப்பி அங்கயிருக்கிற செல்போன் கம்பெனிஸ் எல்லாமே இன்னவரைக்கு ஜாம்'தான்! இப்போ நான் கொலைவெறியிலே இருக்கேன்! டிரெஸ் எங்ககிடைக்கிது'ன்னு கேட்டு இன்னும் என்னோட கோவத்தை ஏத்தாதே?"
ஜொள்ளு:- "தல நோ டென்சன்! கூல் மேன்! வேணுமின்னா இந்த மேட்ச நிப்பாட்டிட்டு இலியானா நடிச்ச பாட்டை போட்டு விடவா? தெலுங்கு பாட்டுதான்! நமக்கு அர்த்தம் புரியலைன்னா வெட்டிக்காரு செப்புவாரு!"
தல:- "வேணாம் விடு பாண்டி! இப்போ நான் இருக்கிற கோவத்துக்கு அந்த தோத்து போன பசங்களை டெவில் ஷோவிலே கவுண்டர் கேட்கிறமாதிரி கேள்வி கேட்கணும், So கிரிக்கெட் விளையாட போறன்னு சொன்ன அந்த வீணாப்போனவங்களுக்கு போனை போடு! நான் பேசியே ஆகனும்"
ஜொள்ளு எல்லார் நம்பர்'க்கும் போன் பண்ணுறார், வழக்கபோலே எல்லாரும் போனை எடுத்துட்டு "We are busy now"ன்னு கட் பண்ண இவனுகளை இப்பிடிதான் சாய்க்கனுமின்னு விளம்பர ஏஜென்ஸியிலே இருந்து பேசுறோமின்னு சொல்லி டெண்டுல்கர்,டிராவிட்,யுவராஜ் முணு பேத்தையும் ஒரெ லைனில் பிடிச்சி கான்பரன்ஸிலே போடுறார்.
தல:- "அடேய் வீணா போனாவய்களா! காசுன்னுதும் ஓடி வந்திட்டிங்களா? பொணம் எந்திருச்சு ஒட்கார்மின்னு சொன்னதுக்கப்புறம் நீங்களல்லாம் எம்மாத்திரம்!"
கிரிக்.கோஷ்டி:- "ஹலோ! நீங்க யாரு?"
தல:- "ஹிம் மும்பை தாதா! ஆட்டுக்காலு மண்டயனுகளா! நாந்தாண்டா கிரேக் கைப்புள்ள பேசுறேன்!"
டிராவிட்:- "ஹய்யா! ஒங்களை தான் டீமை விட்டு தூக்கிட்டாங்களே? இப்போதான் சந்தோஷமா இருக்கு!"
தல:- "ஏண்டா மண்டையா நீ பேசமாட்டே? நூறடி தூரத்திலே இருந்து லொங்கு லொங்குன்னு ஒருத்தன் ஓடிவந்து பந்து போட்டா அந்த இடத்திலே நிப்பாட்டுறவன் தானே நீயீ?"
டிரா:- "ஹலோ மிஸ்டர் கைப்பு! அது என்னோட திறமை! 100 மைல் வேகத்திலே வந்தாலும் ஒரே இடத்திலே நிப்பாட்டி வைக்கிறது திறமை.."
தல:- "மண்ணாங்கட்டி திறமை! நிப்பாட்டி வைக்கிற திறமையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருந்தா நாமெல்லாம் போன வேர்ல்ட் கப்'லெ ஜெயிச்சு இருப்போமிடா? ஏண்டா நீ மட்டுமே பேசுறே? அந்த குள்ளகத்திரிக்காவும், சடைமண்டையனும் பேசமாட்டக்கிறாய்ங்கே?"
டெண்டுல்கர்:- "இப்போதான் புது ரூல் போட்டுருக்காங்களே? தலைவர் தவிர யாரும் பேசக்கூடாதுன்னு? அதுதான் நாங்கெல்லாம் பேசலை!"
தல:- "ஏலேய்! சடைமண்டையா? ஒனக்கு என்ன வந்துருச்சு??"
தோனி:-" நான் மவுனவிரதம்"
தல:- "ஒங்களுக்கெல்லாம் ஏத்தம்தாண்டா! அடேய் இம்புட்டு சம்பாரிச்சிங்களே? அதுக்கு ஏத்தமாதிரி விளையாடுனீகளா??"
டிரா:- "ஆமாம் ஒங்களுக்கு கூடந்தான் 1,7500 டாலர் சம்பளம்! அதுக்கு ஏத்தமாதிரி டிரெய்னிங் கொடுத்தீங்களா??"
தல:- "அடபாவிகளா! எனக்கு ஒன்னே முக்கா ரூவா'க்கு கோலிசோடா வாங்கி அதை பெருமையா எல்லார்கிட்டேயும் காட்டி குடி'ன்னு தீர்ந்து போன மினரல் வாட்டர் கேன்'லே தான் கொடுந்தானுக!"
டிரா:- "இப்போ இதுவரைக்கு ஒங்கிட்டே பேசுனதுக்கு அமெண்ட் எப்போ செட்டில் ஆகும்? டாலரா வருமா ? இல்லை ரூபாய்'வா?"
தல:-" என்னது ரெண்டு வார்த்தை பேசுனுதுக்கே காசா? இவிய்ங்களே எதை கொண்டு அடிக்கலாம்? அடேய் புலி இவியங்களே ஒரு உருமி உருமி பயமுருந்துடா?? பாவிபசங்க தொலைஞ்சு போகட்டும்!"
புலி:- "ஓகே தல.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
தல:- "ஏண்டா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா? சங்கத்தோட முதலாமண்டு போட்டின்னு சொல்லி ஆயிரம் ஓவா தாரேன்னு சொல்லிருக்கீங்களே? மறுபடியும் கஜானாலே கைவைச்சிட்டிங்களா??"
இளா:- "ஆமாம் அந்த கஜானா'விலே பொன்னும்,வைரமும் குவிஞ்சு கிடைக்கிறமாதிரியே பேசு? அதிலே ஒன்னோட ஜிலுக்கு ஜிப்பாவும்,நீ அழுதா ஆட்டுறதுக்கு கிலுகிலுப்பையுதான் இருக்கு! அதே கொண்டு போயி சேட்'கிட்டே அடகு வைக்க கொண்டு போன அவன் அதை பார்த்திட்டு வைச்சிறக்கிறதே நாமே தான் காசு கொடுக்கனுமின்னு எகாந்தாளம் பேசுறான்!"
தல:- "நீரெல்லாம் எலெக்சனிலெ நிக்கலாமய்யா! முச்சு விடாமே பேசிட்டு இருக்கே? யாருடா புதுசா சங்கத்திலே கமலா காமேஷ்'ன்னு யாரோ சேர்ந்து இருக்காலமே! யாரு அது?"
ஜொள்ளு:- "தல அது கமலா காமேஷ் இல்லே? அவங்க ஒரு ஆண்ட்டி, அவங்களை சங்கத்திலே சேர்ந்து என்னா ஆகப்போகுது? அவரு பேரு கமலேஷ் கண்ணன்"
தல:- " அது சரி? நீ நமிதா,இலியானா'ல்லாம் சேர்ந்திருந்தா குஷியா ஆகிருப்பே?"
ஜொள்ளு:- "ஏந்தான் தல என்னைமாதிரியே நீயும் குடையை தலையிலே கவுத்தி போட்டு இருக்கே?"
தல:- "ஹிம் அப்பிடி கேளு கேள்வியை? தோத்திடோம்மின்னு எல்லாபயலுகளும் என்னை கொட்டி கொட்டியே பூசணிக்கா சைஸ்க்கு தலை வீங்கி போயி கிடக்கு! அதை வெளியே தெரியமே இருக்கிறதுக்காக தான் அதை மூடி மறைச்சி வைச்சிருக்கேன்"
இராம்:- "தல! எல்லாரும் பருத்திவீரன் படம் பார்த்திட்டு ஒன்னை பிணந்திண்ணி'ன்னு நினைச்சிட்டாங்களா??"
தல:- "ஏலேய் ராயலு நக்கலா? என்னாட ஆச்சு 105 போட்டி பதிவுகளும்? எவ்வளோ பேரை சார்ட் லிஸ்ட் பண்ணிருக்கீங்க? அதை சொல்லுங்கடா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா??
போர்வாள்:-" ஓகே தல! மக்களே நாலு நாளா கண்முழிச்சி 105 பதிவுகளும் படிச்சி 14 பதிவுகளை இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுந்து இருக்கோம்."
இறுதி முடிவுகள் சங்கத்தின் தொடக்க நாளான நாளை அறிவிக்கப்படும்.
32 comments:
ஃபர்ஸ்ட் நாந்தானா??
ஹி ஹி
//ஃபர்ஸ்ட் நாந்தானா??
ஹி ஹி//
ada pavi post yum neye potutu comment um potutu nan than frst nu solluriye ethu ellam over ah illa unaku.
namalayum adutha round ku sethukitathuku thanks pa
select ஆன எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)))
உண்மையச் சொல்றேங்க. வாலிபப் பசங்களோட நான் போட்டி போட விரும்பலை.ஆனா அபிஅப்பா கலந்துக்கும் போது நாமலும் கலந்துக்கலாமேன்னுதான் [அவரு கோச்சுக்க மாட்டாரு அப்படித்தானே அண்ணே]போட்டிக்கு அனுப்பினேன்.
ஏதோ செமி வரைக்கும் [குவார்ட்டரா?]செலக்ட் பண்ணதுக்கு டாங்ஸுங்கோ...
nammalayum adutha roundukku ittunu pona ellarukkum danks pa :)
அடுத்த ரவுண்ட்டுக்கு வந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
யாரு ஜெயிச்சா... அது தெரியாம ஒரே டென்சனா இருக்கே!
//உண்மையச் சொல்றேங்க. வாலிபப் பசங்களோட நான் போட்டி போட விரும்பலை.//
இப்ப மட்டும் என்ன.... வாலிபர்கள் நாங்கள் நடத்திய போட்டியில் தான் நீங்க கலந்துக்கிட்டீங்க.... எங்களுடன் போட்டி போடலையே!
அபிஅப்பா ஏன் கோவித்து கொள்ள போறார்.... எல்லாம் ஒரே கோஷ்டி தானே!
//select ஆன எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :))) //
இம்சை செலக்ட் பண்ணியவங்களுக்கு சொல்லையா?
கண் விழித்து கடும் பணி ஆற்றி தேர்ந்து எடுத்த நீதிபதி சிங்கங்களும் என் வாழ்த்துக்கள்.
செலக்ட் ஆன அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....(எப்புடிடா எல்லோரும் வெற்றி பெருவாங்கன்னு கேக்கபடாது...வாழ்த்து சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது) :-)
//கண் விழித்து கடும் பணி ஆற்றி தேர்ந்து எடுத்த நீதிபதி சிங்கங்களும் என் வாழ்த்துக்கள்//
நானும் :-)
அபி அப்பா அண்ணே இந்த புலிய வந்து இன்னான்னு கேளுங்க எப்பவும் நாம் ஒரே கோஷ்டிதானேன்னு கலாய்க்குது.அப்டின்னா இன்னா அர்த்தம்.ரெண்டுமே வயசானதுன்னுதானே....
தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
aahaa....naanum irukkenaa!!!aatathula sethukkitadhukku romba nandringa :))
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
@இராம் சொன்னது...
//ஃபர்ஸ்ட் நாந்தானா??
ஹி ஹி
//
பாசக்கார தம்பியாரே,
நீங்களே பதிவு போட்டு நீங்களே ஃபர்ஸ்ட்டு பின்னூட்டத்தையும் போடலாமா?
அஃபிஷியலா சந்தோஷ்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் கமேண்டு போட்டவர். ;-)
//ஃபர்ஸ்ட் நாந்தானா??
ஹி ஹி
//
இதுவும் ஒரு பொழப்பு :))
ஆஹா.. நானும் செலெக்டட்டா? நன்றி சிங்கங்களா!!! :-)
போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அதிலும் ஷார்ட்லிஸ்ட்டட் செய்யப்பட்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. :-)
சிங்கங்களா,
முதல் வருட விழாவுக்கு என்ன நிகழ்சிகள் காத்திருக்கு???
ஓ.. இதுக்குதான் மலேசியாவுல 26 ஏப்ரல் லீவுனு பிரகடனப் படுத்தியிருக்காங்களா??
எனக்கு இன்று லீவு.. எனக்கு விழா அழைப்பிதழ் அனுப்புங்க.. ;-)
//முதல் வருட விழாவுக்கு என்ன நிகழ்சிகள் காத்திருக்கு??? //
1.வைகை சிரீரங்கபுரத்தை சேர்ந்த ஒயிலாட்ட குழுவினர்களின் ஒயிலாட்டம்
2.கள்ளக்குறிச்சியை சேர்ந்த்த நையாண்டி மேள ராஸ் அவர்களின் நிகழ்ச்சி
3.ஊரோரம் புளியமரத்து பக்கத்துல...உலுப்பிவிட்ட சலசலங்கையோட நம்ம தல ஆடும்...சூப்பர் டான்ஸ்
எல்லாம் உண்டு :-)
சந்தோஷ்,
இந்த தங்கச்சிக்கா எப்பிடி இருந்தாலும் வந்து இதேதான் போடுவாங்க?? அதுதான் நானு..ஹிஹி
இம்சை,வேதா நன்றி
கண்மணியக்கா,
இதுக்கு பேருதான் தன்னடக்கமா?? :)
அருண்,
ஹி ஹி
12B,
கலக்கல் கமெண்ட்ஸ் :))
சத்யா, மு.கா, கோல்மால் கோபால்,
நன்றிங்க :)
கப்பி,
இதுதான் நம்ம பொழைப்புன்னு சொல்லி தெரியவேண்டியதில்லே!!! :)
தங்கச்சிக்கா,
ஒங்களை மாதிரி நான் டிரை பண்ணினேன்... அது தப்பா??? :)
நாளை சிறப்பு நிகழ்ச்சிகளை பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்... :)
ROTFL @ நாட்டாமைஸ் கமெண்ட் :)
athu sari Royal, ninga ennamo "Kavalaipadatha Karikaiyar Sanga AAndu vizahvukku vanthatha, kelvi patene? thalaimai ninga thaname? unmaiya?
//வெட்டி:- "ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?"
ஜொள்ளு:- "சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!"//
"சுமா சுமா" superru...
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள
Finalsukku select aana ellarukkum vazhthukkal :-))
Indru oru aandai niraivetrum vavaasangathirkkum vaazhthukkal :-))
சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!!
அடுத்த ரவுண்ட்டுக்கு வந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
//கண் விழித்து கடும் பணி ஆற்றி தேர்ந்து எடுத்த நீதிபதி சிங்கங்களும் என் வாழ்த்துக்கள்//
நானும்! நானும் :)
/athu sari Royal, ninga ennamo "Kavalaipadatha Karikaiyar Sanga AAndu vizahvukku vanthatha, kelvi patene? thalaimai ninga thaname? unmaiya?//
தலைவலி,
உங்களுக்கு அந்த மேட்டரை தெரியாதா?? அவங்க தனியா ஒரு குழுப்பதிவே ஆரம்பிச்சிட்டாங்க.... :)
அங்கேயும் போய் நாந்தான் தலைவியா இருப்பேன்னு போயி தலைவலியே உண்டாக்குங்க... :)))
Post a Comment