வெடிக்கிறேன்னு சொல்லிப்பிட்டு கையிலே தூக்கிபோடுறேன் , காலால் ஏத்தி விளையாடிருன்னு சொல்லி விளையாட்டெல்லாம் பண்ணபிடாது. அப்புறம் பர்னால்லும், தேங்கண்ணே, ப்ளூ மையின்னு கையெல்லாம் ஊத்திக்கிட்டு திரியணும்.அப்புறம் இந்த 102 கீயையும் தட்டமுடியாது, ஓரமா கெடக்கிற எலியேயும் புடிச்சு ஆட்டமுடியாது. மொத்ததிலே இப்போ மாதிரி வேலை பார்க்கிறமாதிரி நடிக்க முடியாது. ஏதோ உங்க சத்துக்கு தக்கமாதிரி நாலஞ்சு பட்டாசு டப்பாவை வாங்குங்க, அடுத்தவங்களுக்கு தொல்லை குடுக்காத சத்தம் கம்மியா குடுக்கற பட்டாசைக் கொளுத்தி கொண்டாடுங்க. கீழே படத்துல இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். அதெல்லாம் நீங்க யாரும் முயற்சி பண்ணி பாக்காதீங்க.

நீங்கெல்லாம் வெடிக்கல்னன்னா பரவாயில்லே! ஏதோ உங்க ஏரியாக்குள்ளே இருக்கிற ஏழை குழந்தைகளுக்குக் கொடுங்க. நீங்கெல்லாம் பட்டாசு வாங்கலைன்னா அந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளிக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆனா தொழிலாளிக்கு வருசம் பூராவும் கூலி நஷ்டமப்பா. நம்மால ஆனா உதவியா பட்டாசு செய்யிற தொழிலாளிக்கும் உதவி பண்ணின மாதிரி இருக்குமில்லே . அப்புறம் கொஞ்சூண்டு காசை உங்க ஏரியா பக்கத்திலே இருக்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும்,அனாதை ஆசிரம பிள்ளைகளும் கொடுங்கப்பா. இந்த உலகமே நம்மோட அன்பபை மையப் புள்ளியா வச்சு சுத்துற வட்டமின்னு சொல்லீருக்காங்க பெரியவங்க! நம்ம அப்பனும் மக்கா சுப்பனும் சொன்னது தப்பா போகுதில்லே? ஏதோ எனக்குத் தெரிஞ்சதே சொல்லிருக்கேன். நீங்க அதுக்காக பீலீங் ஆப் கேலக்ஸில்லாம் ஆவ வேணாம். அதுதான் வேலை பார்க்காட்டியும் வேலை பார்க்கிற மாதிரியே நடிச்சு பேரு வாங்குற ஒரு வருத்தப்படாத வாலிபனுக்கு ஏத்த ஜைனடிக்கப்போய்!
தீவாளிக்கு ரெண்டு நா கழிச்சு ரம்சான் வேற வருது. தீவாளி அன்னிக்கு மட்டும் ஒரு பத்து இட்லி கறிகொழம்போ, பருப்பு சாம்பாரோ ஊத்தி சாப்பிட்டு பிட்டு அப்புறம் சுட்டு வைச்சிருக்கே பலகாரமெல்லாம் தின்னு முடிச்சு மறுநா நல்லா தீவாளி லேகியத்தே வாங்கி ஒரு உருண்டை வகுத்துக்குள்ளே திணிச்சிருங்க . ஹி ஹி அப்போதான் பிரியாணி புல்கட்டு கட்டமுடியும்.
(இப்பதிவின் உருவாக்கத்துக்கு உதவி செய்த அருமை தம்பி மதுரை வீரன் "ராயல் ராம்"சாமிக்குச் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது)
104 comments:
டுப் டுப் டுப் டமால் புஸ்ஸ் உய்ய்ய்ய்ய்ய் ஞொய்ங்க்
ஆகட்டும் தல... நீ சொன்னா மாதிரியேக் கொளுத்தி கொண்டாடிருவோம் தல.
வ.வா.சங்கத்தின் அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த தீவாளி வாழ்த்துக்கள். - தேவ்
வரும் பண்டிகை நாட்கள், சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். அதெல்லாம் நீங்க யாரும் முயற்சி பண்ணி பாக்காதீங்க.//
ஆமாம்ப்பா, அத எல்லாம் எங்க தல மட்டும் தான் வெடிக்கனும். வெடிக்கிற வெடியையும் பாத்து பக்குவமா வெடிங்க ராசா
//இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். //
தல 4 அடிக்கு ஊதுபத்தி ஆர்டர் கொடுத்து இருந்தியே அது இந்த வெடிக்கு தானா.... பூ
//நீங்கெல்லாம் வெடிக்கல்னன்னா பரவாயில்லே! ஏதோ உங்க ஏரியாக்குள்ளே இருக்கிற ஏழை குழந்தைகளுக்குக் கொடுங்க. நீங்கெல்லாம் பட்டாசு வாங்கலைன்னா அந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளிக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆனா தொழிலாளிக்கு வருசம் பூராவும் கூலி நஷ்டமப்பா.//
நெஞ்ச நக்கிட்ட தலை!
ஆனால் இங்கே பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்டுறுவோம்னு பயமுறுத்தறாங்களே!
தல பேச்சு பேச்சா இருக்கும்போதே பட்டாச தூக்கி தோல்ல போட்டுட்ட...பாத்து நீ ஏமாந்த சமயம் பார்த்து யாராவது அத கொளுத்தி வுட்டுட போறாங்க... :-)
சிங்கங்களே அனைவருக்கும் தீவாளி வாழ்த்துங்கப்பு...தல சொன்னத கேட்டு நல்லபடியே தீவாளிய கொண்டாடுங்க
:-)
கொண்டாடிவோம்....ஸ்டார்ட் ம்யூசிக்!!!
//
(இப்பதிவின் உருவாக்கத்துக்கு உதவி செய்த அருமை தம்பி மதுரை வீரன் "ராயல் ராம்"சாமிக்குச் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது) //
தல,
என்னை அநியாத்துக்கு விளம்பரம் பண்ணி வைச்சிருக்கே!!! ஹி ஹி அதுக்கு ஒரு டேங்கிஸ்!
சங்கத்து சிங்கங்கள் எல்லா பேத்துக்கும் திபாவளி வாழ்த்துக்கள் அப்போய்... :-)
//சுதர்சன்.கோபால் said...
வரும் பண்டிகை நாட்கள், சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//
சுதர்சன்,
மிக்க நன்றி!!!
உங்களுக்கும் எங்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!!!
//Syam said...
சிங்கங்களே அனைவருக்கும் தீவாளி வாழ்த்துங்கப்பு...தல சொன்னத கேட்டு நல்லபடியே தீவாளிய கொண்டாடுங்க
:-)
//
ரொம்ப நன்றிங்கண்ணோவ்!!!
உங்களுக்கும் சங்கத்து சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்
//ஆனால் இங்கே பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்டுறுவோம்னு பயமுறுத்தறாங்களே!//
தம்பி,
இதெல்லாம் உனக்கு என்ன புதுசா...
அப்பப்ப போயிட்டு வரது தானே...
சும்மா வெடிப்பா ;)
தம்பி,
வாத்யார் ரூம்ல பட்டாசு வெச்சது நீ தான???
அந்த பாவம்தான் உன்னைய தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிக்க முடியாதபடி பண்ணிடுச்சு ;)
//கப்பி பய said...
கொண்டாடிவோம்....ஸ்டார்ட் ம்யூசிக்!!!
//
கப்பி,
உருகுவேல பட்டாசு வெடிக்கலாமா?
//கப்பி,
உருகுவேல பட்டாசு வெடிக்கலாமா?
//
அதுக்கென்ன..தாராளமா வெடிக்கலாமே...நாம வெடிக்கறதைப் பார்த்து எல்லாப் பயலுகளும் அரண்டு போகப் போறாங்க....
வெடியெல்லாம் ஏற்கனவே ஆர்டர் பண்ணியாச்சு..நாளைக்கு வந்துடும் ;)
//தம்பி,
இதெல்லாம் உனக்கு என்ன புதுசா...
அப்பப்ப போயிட்டு வரது தானே...
சும்மா வெடிப்பா ;)//
பக்கத்தில இருந்த பாத்தா மாதிரியே சொல்லறியே எப்டி?
அது போலிசுக்கும் எங்களுக்கும் உள்ள விட்ட கொற, தொட்ட கொற அதையெல்லாம் சபையில சொல்லக்கூடாது.
//அதுக்கென்ன..தாராளமா வெடிக்கலாமே...நாம வெடிக்கறதைப் பார்த்து எல்லாப் பயலுகளும் அரண்டு போகப் போறாங்க....
வெடியெல்லாம் ஏற்கனவே ஆர்டர் பண்ணியாச்சு..நாளைக்கு வந்துடும் ;) //
வெடி ஆர்டர் பண்ணியாச்சா???
கப்பி, மே ஐ கம் இன்???
//பக்கத்தில இருந்த பாத்தா மாதிரியே சொல்லறியே எப்டி?
அது போலிசுக்கும் எங்களுக்கும் உள்ள விட்ட கொற, தொட்ட கொற அதையெல்லாம் சபையில சொல்லக்கூடாது. //
தம்பி,
சபைல நீ ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சா நான் என்ன பண்றது... என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்ல ;)
//அந்த பாவம்தான் உன்னைய தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிக்க முடியாதபடி பண்ணிடுச்சு ;)//
அப்படிலாம் பாக்கப்போனா எந்த ஹாஸ்டல்வாசியும் சின்ன தீக்குச்சி கூட கொளுத்த முடியாது.
ஆமா,
நான் வார்டன் ரூமுக்கு டப்பாசு வச்சத யாரு உனக்கு சொன்னது?
//அப்படிலாம் பாக்கப்போனா எந்த ஹாஸ்டல்வாசியும் சின்ன தீக்குச்சி கூட கொளுத்த முடியாது.
ஆமா,
நான் வார்டன் ரூமுக்கு டப்பாசு வச்சத யாரு உனக்கு சொன்னது? //
நீ தான என்னோட பதிவுல சொன்ன...
இப்ப நல்லவன் மாதிரி கேள்வி கேக்கற ;)
//சபைல நீ ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சா நான் என்ன பண்றது... என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்ல ;)//
அடப்பாவிகளா, விட்டா பேர போட்டு பேரீச்சம்பழத்த வாங்கி தின்னுட்டு கொட்டைய மேல போடுவீங்க போலருக்கு!
ஆமா, இப்போ என்ன நீதி கெட்டுப்போச்சுன்னு நியாயக்கொடி புடிக்கறிங்க?
//நீ தான என்னோட பதிவுல சொன்ன...
இப்ப நல்லவன் மாதிரி கேள்வி கேக்கற ;)//
ஏன்யா தீபாவளிய எம்மேல கொண்டாடுற?
சனிக்கிழமைதான் தீபாவளி. :(
நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.
//அதுக்கென்ன..தாராளமா வெடிக்கலாமே...நாம வெடிக்கறதைப் பார்த்து எல்லாப் பயலுகளும் அரண்டு போகப் போறாங்க....//
கப்பி,
நமீதா வெடிய நாலு கொளுத்தி போடுங்க
பயபுள்ளைக பின்னாடியே வந்துருவானுங்க :)
//அடப்பாவிகளா, விட்டா பேர போட்டு பேரீச்சம்பழத்த வாங்கி தின்னுட்டு கொட்டைய மேல போடுவீங்க போலருக்கு!
//
ஓ இதெல்லாம் வேற நீ பண்ணிருக்கியா???
//
ஆமா, இப்போ என்ன நீதி கெட்டுப்போச்சுன்னு நியாயக்கொடி புடிக்கறிங்க? //
என்ன கெட்டு போச்சா??? பாடம் சொல்லி குடுக்குற வாத்யார் ரூம்ல பட்டாசு வெடிச்சா தப்பில்ல்லையா?
//ஏன்யா தீபாவளிய எம்மேல கொண்டாடுற?
சனிக்கிழமைதான் தீபாவளி. :(
நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.//
முடியாது... டார்கெட் வெச்சாச்சி...
உனக்கில்லைப்பா ;)
//
கப்பி,
நமீதா வெடிய நாலு கொளுத்தி போடுங்க
பயபுள்ளைக பின்னாடியே வந்துருவானுங்க :) //
தம்பி,
தெளிவாத்தான்யா இருக்கே!!!
ஊருப்பக்கம் பாத்திங்கன்னா தீவாளியன்னிக்கு பிகருங்க இருக்கற தெருப்பக்கம் இளந்தாரிகள் நாலு பேரு தவுசண்ட்வாலாவ தோள்ல போட்டுகிட்டு வீறாப்பா நடப்பானுங்க. பிகருங்க வெளிய வந்து மத்தாப்பு கொளுத்தற சமயமா பாத்து தவுசண்ட் வாலாவ ஒரு பக்கமா பத்த வச்சி வெடிச்சி கரைச்சல குடுப்பாங்க. அந்த நேரத்தில மட்டும் அணுகுண்டக்கூட கையால பத்த வச்சி திரிகிட்ட நெருப்பு வந்ததும் தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க. இந்த வெத்து சீனுக்காக அங்கிட்டு இருக்கற பெருசுங்க சாபத்த ப்ரியா வாங்கி கட்டிக்கிவாங்க.
//தம்பி said...
ஊருப்பக்கம் பாத்திங்கன்னா தீவாளியன்னிக்கு பிகருங்க இருக்கற தெருப்பக்கம் இளந்தாரிகள் நாலு பேரு தவுசண்ட்வாலாவ தோள்ல போட்டுகிட்டு வீறாப்பா நடப்பானுங்க. பிகருங்க வெளிய வந்து மத்தாப்பு கொளுத்தற சமயமா பாத்து தவுசண்ட் வாலாவ ஒரு பக்கமா பத்த வச்சி வெடிச்சி கரைச்சல குடுப்பாங்க. அந்த நேரத்தில மட்டும் அணுகுண்டக்கூட கையால பத்த வச்சி திரிகிட்ட நெருப்பு வந்ததும் தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க. இந்த வெத்து சீனுக்காக அங்கிட்டு இருக்கற பெருசுங்க சாபத்த ப்ரியா வாங்கி கட்டிக்கிவாங்க.
//
போன தீபாவளிக்கு தலய பாத்தியா???
இதெல்லாம் நம்ம தலைக்கு சாதரணமப்பா ;)
//முடியாது... டார்கெட் வெச்சாச்சி...
உனக்கில்லைப்பா ;)
//
தனி மனித தாக்குதல் நடத்தும் வெட்டி!!
அசராமல் எதிர்த்து நிற்கும் தம்பி!!
ஜெயிக்கப் போவது யார்???
மெகா மகா தீபாவளி பம்பர் பரிசு!!!!
பெட்டிங் ஆரம்பிக்குது..வை ராஜா வை....
//வெடி ஆர்டர் பண்ணியாச்சா???
கப்பி, மே ஐ கம் இன்??? //
தீவாளி நேரத்துல பஸ்லாம் கொள்ளைக் கூட்டமா இருக்கும்..துண்டைப் போட்டு இடம் புடிச்சு வந்து சேருப்பா :)
//கப்பி,
நமீதா வெடிய நாலு கொளுத்தி போடுங்க
பயபுள்ளைக பின்னாடியே வந்துருவானுங்க :)
//
இப்ப அந்த பேருலயும் வெடி ரீலிஸ் பண்ணிட்டாங்களா?? என்னா கடமையுணர்ச்சிடா சாமி!!! ;))
//தனி மனித தாக்குதல் நடத்தும் வெட்டி!!
அசராமல் எதிர்த்து நிற்கும் தம்பி!!
ஜெயிக்கப் போவது யார்???
மெகா மகா தீபாவளி பம்பர் பரிசு!!!!
பெட்டிங் ஆரம்பிக்குது..வை ராஜா வை....
Friday, October
//
கப்பி,
இங்க என்ன தனிமனித தாக்குதல் நடக்குது???
தம்பியின் பார்வைக்குனு என்ன தனி பதிவா போட்டோம் ;)
//என்ன கெட்டு போச்சா??? பாடம் சொல்லி குடுக்குற வாத்யார் ரூம்ல பட்டாசு வெடிச்சா தப்பில்ல்லையா? //
தொடர்புடைய சுட்டி:
http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_27.html
நன்றி!
:))
//தனி மனித தாக்குதல் நடத்தும் வெட்டி!!
அசராமல் எதிர்த்து நிற்கும் தம்பி!!
ஜெயிக்கப் போவது யார்???
மெகா மகா தீபாவளி பம்பர் பரிசு!!!!
பெட்டிங் ஆரம்பிக்குது..வை ராஜா வை....//
இங்கயும் கடைய போட்டு யாவாரத்த ஆரம்பிச்சிட்டல்ல.
நீதான்யா ஒரிஜினல் யாவாரி!
//கப்பி,
நமீதா வெடிய நாலு கொளுத்தி போடுங்க
பயபுள்ளைக பின்னாடியே வந்துருவானுங்க :) //
அஸின் வெடி, ஸ்ரெயா வெடியெல்லாம் வந்தாச்சா?
//கப்பி பய said...
//என்ன கெட்டு போச்சா??? பாடம் சொல்லி குடுக்குற வாத்யார் ரூம்ல பட்டாசு வெடிச்சா தப்பில்ல்லையா? //
தொடர்புடைய சுட்டி:
http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_27.html
நன்றி!
:))
//
கப்பி உன் கடமையுணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குது கண்மணி...
//இந்த வெத்து சீனுக்காக அங்கிட்டு இருக்கற பெருசுங்க சாபத்த ப்ரியா வாங்கி கட்டிக்கிவாங்க.
//
யாரோ வெடிக்கற வெடிக்கு ப்ரியா எதுக்கு சாமத்தை வாங்கி கட்டிக்கனும்???
//தீவாளி நேரத்துல பஸ்லாம் கொள்ளைக் கூட்டமா இருக்கும்..துண்டைப் போட்டு இடம் புடிச்சு வந்து சேருப்பா :) //
நாங்கெல்லாம் கருஞ்சிறுத்த பரம்பரை பஸ் மேல நின்னுக்கிட்டு வருவோம் ;)
//கப்பி உன் கடமையுணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குது கண்மணி... //
கண் கலங்கறது இருக்கட்டும்... ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களான்னு நீங்க கேட்டீங்க...ஆனா தம்பி, கொசுக்களை ஒழிக்கறதுக்காக வார்டன் ரூமுக்கு வெடி வச்சார்...பழி ஒரு இடம்..பாவம் ஒரு இடமா???? ;)))
//இப்ப அந்த பேருலயும் வெடி ரீலிஸ் பண்ணிட்டாங்களா?? என்னா கடமையுணர்ச்சிடா சாமி!!! ;))//
இப்போ, குஸ்பு பொடவை, நதியா கம்மலு, கவுதமி தொங்கலு, பாவனா பொங்கலுன்னு சொல்லி தாய்க்குலங்கள ஏமாத்தறதில்ல அது மாதிதான் இதுவும்.
உன்னய பட்டாசு வெடிக்க வைக்க என்னென்ன காலித்தனம் பண்ணவேண்டியிருக்கு பாரு.
தல கழுத்துல உள்ள வெடிய நாந்தான் பத்த வைப்பேன்...::)
தல அப்படியே இரு இதோ வந்துட்டேன்
//கப்பி பய said...
//கப்பி உன் கடமையுணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குது கண்மணி... //
கண் கலங்கறது இருக்கட்டும்... ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களான்னு நீங்க கேட்டீங்க...ஆனா தம்பி, கொசுக்களை ஒழிக்கறதுக்காக வார்டன் ரூமுக்கு வெடி வச்சார்...பழி ஒரு இடம்..பாவம் ஒரு இடமா???? ;)))
//
ஏம்பா... அநியாயமா இண்டர்னல்ல மார்க் குறைக்கறது தப்புனு நான் போட்டேன்...
கொசுவ சாவடிக்கறதுக்கு ஏன்யா வாத்தியார ரூமுக்குள்ள வெச்சி வெடிய போடறீங்க???
கப்பி நான் உன்னைய நல்லவன்னு நினைச்சா நீயும் இப்படியா???
அனைவருக்கும்
தீவாளி வாழ்த்துக்கள்
தல தலைதீவாளி கொண்டாட வாழ்த்துக்கள்
//மின்னுது மின்னல் said...
தல கழுத்துல உள்ள வெடிய நாந்தான் பத்த வைப்பேன்...::)
தல அப்படியே இரு இதோ வந்துட்டேன்
//
மின்னலு வா வா...
நாங்களும் அதுக்குத்தான் கைல தீப்பெட்டியோட தேடிக்கிட்டு இருக்கொம்...
பதிவு போட்டுட்டு தல தலைவறைவாயிடுச்சு ;)
/./
கொசுவ சாவடிக்கறதுக்கு ஏன்யா வாத்தியார ரூமுக்குள்ள வெச்சி வெடிய போடறீங்க???
/./
சிக்குன்யா கொசுவா இருந்தா பரவாயில்லை..
ஆனா உள்ள இருந்தது வர்டன் கொசுவாச்சே..:)
//கண் கலங்கறது இருக்கட்டும்... ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களான்னு நீங்க கேட்டீங்க...ஆனா தம்பி, கொசுக்களை ஒழிக்கறதுக்காக வார்டன் ரூமுக்கு வெடி வச்சார்...பழி ஒரு இடம்..பாவம் ஒரு இடமா???? ;)))//
பதிவுலகின் ராம்ஜெத்மலானியே நீவிர் வாழ்க நின் கொற்றம் வாழ்க. தம்பி மீது ஏற்பட்ட சிறு முயல்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலுரைக்க வீறு கொண்டு எழுவதை பார்க்கும்போது என் உள்ளம் பேருவகை அடைகிறது.
வீறு கொண்டுவா!
வெற்றி கண்டுவா!!
/./
பதிவு போட்டுட்டு தல தலைவறைவாயிடுச்சு ;)
/./
தல உடம்பில் உள்ள
வெடி வெடிச்சதும் வாயிலேந்து புகை வருமே அத பாக்காம போனா தீவாளி நல்லாவா இருக்கும்..:)
தல வந்துடு தல எல்லாரும் வெய்டிங்
come on
//கொசுவ சாவடிக்கறதுக்கு ஏன்யா வாத்தியார ரூமுக்குள்ள வெச்சி வெடிய போடறீங்க???//
கொசுக்களின் கூடாரமாகிப்போன வார்டனின் ரூமை என்ன செய்வது?.
அச்சமயம் அவர் உள்ளிருந்தது அவர் குற்றமா? என் குற்றமா? இல்லை இப்படி கண்ணாமூச்சி ஆடும் கடவுளின் குற்றமா?
யாரை குற்றம் சொல்ல?
ஓங்குத்தமா ,ஏங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல!
//சிக்குன்யா கொசுவா இருந்தா பரவாயில்லை..
ஆனா உள்ள இருந்தது வர்டன் கொசுவாச்சே..:) //
அப்படி போடு கொசுவலையை ;))
அரை சதமடிக்க வைத்த தம்பிக்கும், கப்பிக்கும், மின்னலுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றிகள்
//பதிவுலகின் ராம்ஜெத்மலானியே நீவிர் வாழ்க நின் கொற்றம் வாழ்க.//
கப்பி,
இதுக்கு பேருதான் ஆப்பு... கண்ணுக்கு தெரியாது ;)
/./
வீறு கொண்டுவா!
வெற்றி கண்டுவா!!
/./
தம்பி உங்கள் வெண்பாவில் குற்றம் உள்ளது நாளையிலிருந்து இகொ கிளாஸுக்கு ஒழுங்கா வரனும்
/./
வீறு கொண்டுவா!
வெற்றி கண்டுவா!!
/./
தம்பி உங்கள் வெண்பாவில் குற்றம் உள்ளது நாளையிலிருந்து இகொ கிளாஸுக்கு ஒழுங்கா வரனும்
//கப்பி,
இதுக்கு பேருதான் ஆப்பு... கண்ணுக்கு தெரியாது ;)//
யார் சொன்னது கண்ணுக்கு தெரியலைன்னு....நல்லா உள்ளங்கை பூசணிக்காய் மாதிரி தெரியுது!!
//சிக்குன்யா கொசுவா இருந்தா பரவாயில்லை..
ஆனா உள்ள இருந்தது வர்டன் கொசுவாச்சே..:)//
இதுக்காக தான் லேப் எழுத விடல :-)
/./
இதுக்காக தான் லேப் எழுத விடல :-)
/../
அதுக்காக தம்பீ ரொம்ப பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுச்சு
ஆனா வெட்டி நீங்க பதிவு போட்டு நாறடிக்கல..::)
//தம்பி said...
//கொசுவ சாவடிக்கறதுக்கு ஏன்யா வாத்தியார ரூமுக்குள்ள வெச்சி வெடிய போடறீங்க???//
கொசுக்களின் கூடாரமாகிப்போன வார்டனின் ரூமை என்ன செய்வது?.
அச்சமயம் அவர் உள்ளிருந்தது அவர் குற்றமா? என் குற்றமா? இல்லை இப்படி கண்ணாமூச்சி ஆடும் கடவுளின் குற்றமா?
யாரை குற்றம் சொல்ல?
ஓங்குத்தமா ,ஏங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல!
//
இதனாலத்தான் உன்னைய பரிட்சை எழுத விடல
தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?
வார்டன் ரூம்ல வெடி குண்டு வெச்சா தப்பா?
இப்படி கேட்டுக்கிட்டே போ ;)
//தம்பி உங்கள் வெண்பாவில் குற்றம் உள்ளது நாளையிலிருந்து இகொ கிளாஸுக்கு ஒழுங்கா வரனும்//
நான் எழுதினது வெண்பாவே இல்லன்னு சொல்றேன், அதில குத்தம் எப்படி வரும்?
இந்த வெண்பா டரியலாலதான் இ.கொ பக்கம் போயி பேயடிச்ச மாதிரி பேக்கடிச்சி ஓடியாந்தேன். இங்கயும் வந்து ஆப்பு வச்சா எப்படி?
மின்னல் கொஞ்சம் பாத்து செய்யுங்கப்பு!
//மின்னுது மின்னல் said...
/./
இதுக்காக தான் லேப் எழுத விடல :-)
/../
அதுக்காக தம்பீ ரொம்ப பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுச்சு
ஆனா வெட்டி நீங்க பதிவு போட்டு நாறடிக்கல..::)
//
நான் எனக்காக கேக்கல மின்னல்...
கஷ்டப்படற மக்களுக்காக கேட்டேன் ;)
தம்பி, பெருந்தன்மையா மன்னிச்சாரா???
அந்த வாதியார் பெருந்தன்மையா மன்னிச்சதால அடுத்த செம்முல எழுதி க்ளியர் பண்ணாரு ;)
//யார் சொன்னது கண்ணுக்கு தெரியலைன்னு....நல்லா உள்ளங்கை பூசணிக்காய் மாதிரி தெரியுது!! //
தெரிஞ்சி என்னா பிரயோஜனம்...
தேவையான நடவடிக்கைய நீ எடுக்கலையே ;)
/./
இப்போ, குஸ்பு பொடவை, நதியா கம்மலு, கவுதமி தொங்கலு, பாவனா பொங்கலுன்னு சொல்லி தாய்க்குலங்கள ஏமாத்தறதில்ல அது மாதிதான் இதுவும்.
/./
தளபதிக்கு புடிச்ச 9தாரா வெடிருக்கா
இருந்தா சங்கத்துல வாங்கி வைங்கப்பு
தளபதியை ரொம்ப நாளா காணும்...
//மின்னுது மின்னல் said...
/./
வீறு கொண்டுவா!
வெற்றி கண்டுவா!!
/./
தம்பி உங்கள் வெண்பாவில் குற்றம் உள்ளது நாளையிலிருந்து இகொ கிளாஸுக்கு ஒழுங்கா வரனும்
//
மின்னல்,
எந்த தைரியத்துல பேசறீங்க???
இது வெண்பானா தமிழறிஞர்கள் எல்லாம் அப்படியே தூக்கு மாட்டிக்குவாங்க...
திருவள்ளுவர் சிலை அப்படியே கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்... வேண்டாம் இந்த விபரீதம்
/./
நான் எழுதினது வெண்பாவே இல்லன்னு சொல்றேன், அதில குத்தம் எப்படி வரும்?
/./
அப்ப எனக்கு புரியாததால் ஹைக்கூனு சொல்லவா..
டிஸ்கி :
(பெரியார் ஹைக்கூ சூப்பர்)
//அதுக்காக தம்பீ ரொம்ப பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுச்சு
ஆனா வெட்டி நீங்க பதிவு போட்டு நாறடிக்கல..::)//
அட சாமி, பெருங்குத்து உடறிங்களே!
/./
மின்னல்,
எந்த தைரியத்துல பேசறீங்க???
இது வெண்பானா தமிழறிஞர்கள் எல்லாம் அப்படியே தூக்கு மாட்டிக்குவாங்க...
திருவள்ளுவர் சிலை அப்படியே கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்... வேண்டாம் இந்த விபரீதம்
/./
ஒரு நாள் க்ளாஸுக்கு போனேன் அங்க இது மாதிரி தான் வா தா னு முடியிற மாதிரி எழுதிகிட்டு இருந்தாங்க
அதுமாதிரி இருந்ததா அதான்
நேர் நிரை நேர் அல்லது மாங்காய் அப்படி இப்படி எதும் வரமாலா போயிடும்...::))0
//அப்ப எனக்கு புரியாததால் ஹைக்கூனு சொல்லவா..
டிஸ்கி :
(பெரியார் ஹைக்கூ சூப்பர்)//
நெம்ப டேங்ஸ்!! :)
//அப்ப எனக்கு புரியாததால் ஹைக்கூனு சொல்லவா..//
இது சிரிப்பு சங்கம்தான்...
ஆனால் எங்களுக்கு இன்னோரு பேரு இருக்கு (யாரப்பா அது பேக்ரவுண்ட்ல மியுஸிக்க போடுங்கப்பா... ) அப்படினு தேவ் வந்து சொன்னாலும் சொல்லுவாரு...
இருந்தாலும் நானும் உங்க கட்சிங்கறதால இது ஒரு வகையான கவிதைனு வெச்சிக்குவோம் ;)
//தளபதிக்கு புடிச்ச 9தாரா வெடிருக்கா
இருந்தா சங்கத்துல வாங்கி வைங்கப்பு
தளபதியை ரொம்ப நாளா காணும்...//
மார்க்கெட்டுக்கு வந்ததே 100 நயன்வெடிதான் மொத்ததையும் அள்ளிட்டு போயிட்டார் ஒருத்தர்.
//ஒரு நாள் க்ளாஸுக்கு போனேன் அங்க இது மாதிரி தான் வா தா னு முடியிற மாதிரி எழுதிகிட்டு இருந்தாங்க
அதுமாதிரி இருந்ததா அதான்
நேர் நிரை நேர் அல்லது மாங்காய் அப்படி இப்படி எதும் வரமாலா போயிடும்...::))0 //
என்னங்க மின்னல் நேரா போனா மாங்காய், வளைஞ்சி போனா எலுமிச்சங்காய்னு சொல்லிட்டு இருக்கீங்க...
சரி... நீங்க பெரிய படிப்பு எல்லாம் படிச்சியிருக்கீங்கனு ஒத்துக்கறோம்...
கவிஞர் கப்பி நிலவன், எங்கப்பா போயிட்ட?
//கவிஞர் கப்பி நிலவன், எங்கப்பா போயிட்ட?//
அடப்பாவி மக்கா..ஏன் இந்த கொலைவெறி???
//கப்பி பய said...
//கவிஞர் கப்பி நிலவன், எங்கப்பா போயிட்ட?//
அடப்பாவி மக்கா..ஏன் இந்த கொலைவெறி???
//
பாதியிலே எஸ்ஸாயிட்டா அப்படித்தான்...
/./
கவிஞர் கப்பி நிலவன், எங்கப்பா போயிட்ட?
/./
கப்பி நீவேற கவுஜ எழுதிரியா
கவிஞர் பட்டம் வேற கொடுத்துடாங்க பெரீயாளா ஆயிட்ட
தலக்கி சொல்லிகுடுங்கப்பு எப்படி எழுதுறதுனு..
காலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்கனுமுல.
அவ்வ்வ்வ்வ்
/./
பாதியிலே எஸ்ஸாயிட்டா அப்படித்தான்...
/./
அப்ப நானும் போக முடியாதா..
அடபாவி மக்கா நானாதான் வந்து மாட்டிக்கிட்டனா..
//கப்பி நீவேற கவுஜ எழுதிரியா
கவிஞர் பட்டம் வேற கொடுத்துடாங்க பெரீயாளா ஆயிட்ட //
பட்டம் கொடுத்ததே தலதான் ;)
//தலக்கி சொல்லிகுடுங்கப்பு எப்படி எழுதுறதுனு..//
இது எங்க தலைக்கு அவமானம்...
இதுக்காக சீக்கிரமே எங்க தலை ஒரு கவுஜ எழுதுவார்...
இல்லைனா அவரை புகழ்ந்து 100 கவுஜைகள் எழுதப்படும் ;)
//அப்ப நானும் போக முடியாதா..
அடபாவி மக்கா நானாதான் வந்து மாட்டிக்கிட்டனா.. //
வந்தது வந்தாச்சு...
இன்னும் கொஞ்ச தூரம்தான்... சீக்கிரம் எல்லாரும் வீட்டிக்கு கிளம்பிடலாம் ;)
தெரியாமத்தான் கேக்கறேன்!
கப்பி ஓகே, நிலவன் என்னத்துக்கு?
பெயருக்கு பின்னால, நிலவன், கிலவன், பித்தன், சூடன், இப்படில்லாம் சேக்கலன்னா கவிஞ்சர்னு ஒத்துக்க மாட்டாங்களா?
யாருப்பா இந்த அடைமொழிய குடுத்தது?
அதெல்லாம் கொண்டாடிப்புடுவொம்லெ:-)
தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்
வெட்டி இன்னைக்கு அடிச்சு ஆடுறாப்புல இருக்கு...நடத்துங்கப்பு
:-)
:-)))o
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
வ. வா சங்கத்தின் இந்த பதிவு ஓவர் e-motion ஆக இருக்கே...
அன்னாத்த ஆசிரமத்துக்கு, தோண்டு நிறுவனம்ன்னு ஒரே செண்டியா வந்துருச்சே...
ஆப்பி தீவாளி!
//நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.//
முடியாது திரும்ப ஆரம்பிக்கணும், ஆரம்பிக்கணும்.
//நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.//
முடியாது திரும்ப ஆரம்பிக்கணும், ஆரம்பிக்கணும்,
//நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.//
முடியாது திரும்ப ஆரம்பிக்கணும், ஆரம்பிக்கணும்,
//பதிவுலகின் ராம்ஜெத்மலானியே நீவிர் வாழ்க நின் கொற்றம் வாழ்க//
அடபாவிகளா, என்னைய வச்சு யாரும் இங்கே காமெடி,கீமடி பண்ணலேயே.... :-)
//யாருப்பா இந்த அடைமொழிய குடுத்தது? //
என்னா தம்பி இப்பிடி கேட்டுபிட்டே.... அது நம்ம தல குடுத்ததுப்பா..... :)))
//இல்லைனா அவரை புகழ்ந்து 100 கவுஜைகள் எழுதப்படும் ;) //
அதற்கு துபாயிலிருந்து எங்கள் தங்ககம்பி ரெடியாக உள்ளார்.... :)
//தம்பி said...
தெரியாமத்தான் கேக்கறேன்!
கப்பி ஓகே, நிலவன் என்னத்துக்கு?
பெயருக்கு பின்னால, நிலவன், கிலவன், பித்தன், சூடன், இப்படில்லாம் சேக்கலன்னா கவிஞ்சர்னு ஒத்துக்க மாட்டாங்களா?
யாருப்பா இந்த அடைமொழிய குடுத்தது? //
தல கொடுத்த பட்டத்தையே தப்பா பேசிட்டயா???
தம்பி,
ஒண்ணும் சரியில்லை ;)
//துளசி கோபால் said...
அதெல்லாம் கொண்டாடிப்புடுவொம்லெ:-) //
டீச்சர் நல்லா கொண்டாடுங்க...
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
//சிவமுருகன் said...
தீபாவளி வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி சிவமுருகன்..
உங்களுக்கும் சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்!!!
//Anonymous said...
தீபாவளி வாழ்த்துக்கள் //
அனானிகள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்
Vajra said...
வ. வா சங்கத்தின் இந்த பதிவு ஓவர் e-motion ஆக இருக்கே...
அன்னாத்த ஆசிரமத்துக்கு, தோண்டு நிறுவனம்ன்னு ஒரே செண்டியா வந்துருச்சே...
ஆப்பி தீவாளி!//
சங்கர்,
செண்டியும் இல்ல ஒண்ணுமில்லை... தல மனசுல பட்டத சொல்றாரு அவ்வளவுதான்...
உங்களுக்கும் சங்கத்தின் சார்ர்பாக வாழ்த்துக்கள்
//karthik said...
தீபாவளி வாழ்த்துக்கள் //
கார்த்திக்,
மிக்க நன்றி!!!
உங்களுக்கும் சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்!!!
//Syam said...
வெட்டி இன்னைக்கு அடிச்சு ஆடுறாப்புல இருக்கு...நடத்துங்கப்பு
:-) //
நீங்க எல்லாம் கலந்திருந்தா இன்னும் ஆட்டம் பட்டைய கிளப்பியிருக்க்கும் ;)
//சோம்பேறி பையன் said...
:-)))o
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன் //
மிக்க நன்றி சுறுசுறுப்பு பையன்
சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்
//ராம் said...
//நிறுத்திக்கிறுவோம் எல்லாத்தையும் நிறுத்திக்கிறுவோம்.//
முடியாது திரும்ப ஆரம்பிக்கணும், ஆரம்பிக்கணும். //
100 போட்டாச்சு...
இப்ப ஓகேவா???
//அடபாவிகளா, என்னைய வச்சு யாரும் இங்கே காமெடி,கீமடி பண்ணலேயே.... :-) //
அது கப்பிய சொன்னாரு ராயலு...
வீணா நீங்களே வந்து ஏன் மாட்டிக்கறீங்க ;)
//இல்லைனா அவரை புகழ்ந்து 100 கவுஜைகள் எழுதப்படும் ;) //
எனக்கு நூறு கவுஜ எல்லாம் எழுத முடியாது வேணுமின்னா எங்க பக்கத்து வூட்டு பாய் பொண்ணு நூற பத்தி எழுதறேன்.
//அதற்கு துபாயிலிருந்து எங்கள் தங்ககம்பி ரெடியாக உள்ளார்.... :)//
வலையுல ஆஸ்தான கவியான கவிஞ்சர் கப்பிநிலவன் இந்த பணியினை இனிதே முடித்து தர முன்வந்துள்ளதாக சற்றுமுன் சங்கத்துக்கு பேக்ஸ் வந்துள்ளது.
கவிஞ்சர் கப்பிநிலவனை வாழ்த்தி வரவேற்போம்!!
ஐ ஆம் தி எஸ்கேப்பு!
//வலையுல ஆஸ்தான கவியான கவிஞ்சர் கப்பிநிலவன் இந்த பணியினை இனிதே முடித்து தர முன்வந்துள்ளதாக சற்றுமுன் சங்கத்துக்கு பேக்ஸ் வந்துள்ளது.
கவிஞ்சர் கப்பிநிலவனை வாழ்த்தி வரவேற்போம்!!
//
யோவ் இன்னும் என்னய்யா பண்றீங்க இங்க?? போய் தீபாவளிக்கு ஆட்டம் பாம் வைங்கடான்னா தல பேச்சைக் கேக்காம இங்க எனக்கு ஆப்பு பாம் வச்சுட்டிருக்கீங்க??
தம்பி...நேத்து உனக்கு சப்போர்ட் வந்தது பெரிய தப்புய்யா!!
Post a Comment