Alone... in a Woman's Worldடோடத் தொடர்ச்சி...
வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...
"இந்தப் பக்கம் என்னடா பார்வை? உன் வேலையைப் பாருடா"ன்னு ஒரு கத்து கத்திருந்தாங்கன்னாக் கூட ஒன்னும் இருந்திருக்காது.
ஆனா நான் திரும்பிப் பாத்ததை கவனிச்ச அந்த ஆண்ட்டிகள்ல ஒருத்தங்க ரொம்பப் பொறுமையாச் சிரிச்சிக்கிட்டே "நாங்க பேசறதெல்லாம் கேட்டா உங்களுக்கு ரொம்ப வித்தியாசமாவும் தமாஷாவும் இருக்குமில்ல?"ன்னு கேட்டாங்க. நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க. ஒரு வேளை அவங்க பிரைவேட் பேச்சைக் கலைக்கற மாதிரி திரும்பிப் பாத்திருக்கக் கூடாதோன்னு தோணுச்சு. கொஞ்சம் சங்கடமாவும் போச்சு. அதுக்கு நான்"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க"ன்னு சொல்லி வச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் அமைதிக்கப்புறம், "பாலை கேஸ்ல வச்சிருந்தது, அதை நிறுத்த நேரம் ஆனது, அதனால ஜீப்பை வெயிட்டிங்ல வெச்சிருந்தது, பசங்க ஸ்கூல் ஆனுவல் டே, வீட்டுக்காரரோட வாக்கிங் போறது" இதப் பத்தியெல்லாம் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் தான் என் குற்ற உணர்வுக்கு விடுதலை கிடைச்சது. இதையெல்லாம் படிச்சிட்டு லேடீஸ் பேசறதை நான் ஒட்டுக் கேக்கறேன் அது இதுன்னு யாராச்சும் பின்னூட்டம் போட்டீங்க...முப்பது பின்னூட்டம் நாப்பது பின்னூட்டம்னு கூட பாக்க மாட்டேன்...மிகக் கொடூரமான முறையில் மட்டுறுத்திப்புடுவேன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ஜாக்கிரதை. ஏன்னா நான் எழுதறது எல்லாம் ஒரு வழிப்போக்கனா தற்செயலா என் காதுல வாங்குனது தான். என்னாது அது...ஆங்...லோன்லி டிராவலரு...அதுவா இருக்கும் போது.
ஃபாஸ்ட் ஃபார்வர்டு பண்ணி எதிர்காலத்துல கொசுவர்த்திய சுத்துனப்ப போன பதிவுல சொன்ன எழுதாத சட்டத்தை(cardinal rule) நான் உடைச்சது நெனவுக்கு வந்தது. ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். என்ன தான் எதேச்சையா அந்த ஆண்ட்டியும் அக்காவும் பேசறது நம்ம காதுல வந்து விழுந்தாலும் ஒரு வேளை நாமப் பண்ணறதுக்குப் பேரு தான் 'e(a)vesdropping'ஓ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்துடும். "சே! சே! நாம யாரு. ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்? நாமளாவது? லேடீஸ் பேசறதைப் போய் ஒட்டுக்கேக்கறதாவது"ன்னு நியாபகப் படுத்திக்க அப்பப்போ கடல் அரிப்பைத் தடுக்க அரசாங்கத்துக்கு என்ன யோசனை குடுக்கலாம்னு ஒரு முன்னாள் சிவில் இஞ்சினியரா சிந்திக்க ஆரம்பிச்சிடுவேன், அந்த யோசனையெல்லாம் சேகரிச்சு முடிச்சதும் ரோட்டோரத்துல காயப் போட்டிருக்கற கருவாடு ஏன் இவ்வளோ நாத்தம் அடிக்குதுன்னு செந்தில் மாதிரி யோசிக்க ஆரம்பிப்பேன்.
ஆனா செந்திலா இருந்தாலும் சிவில் இஞ்சினியரா இருந்தாலும் Woman's Worldஇல் ஒரு தனி பயணியா இருக்கற த்ரில் கிடைக்காதுப்பா. "பாப்பா! கப்பல் பாரு...கப்பல் பாரு" தூங்கிக்கிட்டிருக்க பாப்பாவை எழுப்பி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல நின்னுட்டிருந்த கப்பலைக் காட்டறதுக்கு பாப்பாவோட கிராண்ட்மா(சும்மா ஆயான்னு சொல்லாம ஒரு சேஞ்சுக்கு கிராண்ட்மா) முயற்சி பண்ணாங்க. பாப்பாவுக்கு நல்ல தூக்கம் போல. லைட்டா கண்ணை முழிச்சிப் பாத்துட்டு, மறுபடியும் படக்குன்னு கண்ணை மூடி சடக்குன்னு என்மேல சாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சிடுச்சு.
மறுபடியும் அவங்களோட கொஸ்டின் ஆன்ஸர் ஆரம்பம் ஆச்சு. அந்த 50+ ஆண்ட்டி கேள்வி கேக்கறதும், 30+ அக்கா பதில் சொல்றதுமான்னு இப்படியே போச்சு அவுங்க பேச்சு. இடையிடையில அவங்க கத்துக்கிட்ட விஷய ஞானத்தை எல்லாம் அந்த அக்காவுக்குப் போதிக்கறதுமே அவங்கக் குறிக்கோளா இருந்துச்சு. அவங்க எதோ பேசிக்கிட்டே இருக்கறதும், நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாக்கறதும், உள்ள அவங்க பேசறதைக் கேக்கறதுமா போய்க்கிட்டிருந்தது.
ஒரு வாட்டி நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாத்துட்டு திரும்பவும் உள்ள வரும் போது "நேத்து ராத்திரி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளிச்சு பருப்பு கடைசல் வச்சேன்மா. ரொம்ப நல்லாருந்தது. காலையில அதையே பழையதுக்கு போட்டுக்கிட்டு சாப்புட்டாரு" அப்படின்னாங்க ஆண்ட்டி.
"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?
"நேத்து பூண்டு வெங்காயம் போட்டு ஒரு குழம்பு வச்சேன். பாப்பாவுக்கு மட்டும் தனியா பருப்பு வேக வச்சி சாதத்துல போட்டுப் பெசஞ்சு பன்னெண்டு மணிக்கெல்லாம் ஊட்டிட்டேன்"னு வாயால வலைக்குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டாங்க அக்கா. அதுக்கப்புறமும் என்னென்னமோ பேசினாங்க...
துறைமுகத்துக்குள்ள நுழையறதுக்குத் தயாரா நின்னுட்டிருந்த பெரிய டிரெயிலர் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆகி ஆட்டோ ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர வேண்டியதாப் போச்சு. அந்த அஞ்சு நிமிசம் மட்டும் ஆட்டோவில் அமைதி நிலவியது.
நெரிசல் குறைஞ்சு ஷேர் ஆட்டோ வேகம் கூட்ட ஆரம்பிச்சதும் "ஏம்மா! கட்டை செவுத்துல பாப்பா ஜட்டியைக் காயப் போட்டிருந்தியே? எடுத்து உள்ள வச்சிட்டியா?"ன்னு ஆண்ட்டி அக்காவைக் கேட்க, "அதையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எடுத்து மடிச்சி வச்சிட்டேன்"னு பதில் வந்துச்சு.
குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஆனா சிரிப்பை வரவழைத்த அந்த விஷயத்தை மீறி ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. என்ன தான் பசங்க உக்காந்துருக்காங்களேன்னு ஆட்டோவில ஏற யோசிச்சிருந்தாலும், அந்த பசங்க கவனிப்பாங்க அப்படிங்கறதை மீறி அவங்க பேசன விஷயங்கள்ல ஆதார ஸ்ருதியா இருந்தது ஒன்னு தான்...அது தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் காட்டும் 'அன்பு'. ஒரு சில்பான்ஸ் விஷயத்துக்கு இந்தளவுக்கு நான் பிலிம் காட்டறதாக் கூடத் தோணலாம். ஆனா எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரையும் பாத்து ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதிகமாப் படிச்சிருக்கக் கூட மாட்டாங்க...ஆனா அந்த அரை மணி நேர நெருக்கத்துல எத்தனை விதமான விஷயங்களைப் பத்திப் பேசியிருப்பாங்க... அதுக்கெல்லாம் எவ்வளவு வேகமா யோசிச்சிருப்பாங்கன்னும் நெனச்சி பாக்கறேன். Everything for somebody else's sake. பிரமிப்பாத் தான் இருக்கு.
அந்நேரம் பசங்க ஞாயித்துக் கெழமை ஒழுங்கா வேலை செய்யிறாங்களா இல்லை ஓபி அடிக்கிறாங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்காக எங்க பாஸ் என்னோட மொபைல்ல போன் பண்ணாரு. எல்லாம் நல்லபடியா ராயபுரம் கல்மண்டபத்தை நோக்கி பிரியாணிக்காகப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியப் படுத்திட்டு ராயபுரம் கல்மண்டபத்துல எறங்க ஆயத்தமாகிட்டு இருக்கும் போது "சோத்துக் கத்தாழையும் சீமை பொன்னாங்கண்ணியையும் ராத்திரி சட்டியில ஊறப்போட்டு வச்சிடு" அப்படின்னு எதோ பேசிட்டிருந்தாங்க. அடடா! எதோ அழகு குறிப்பு போலிருக்கே...இவுங்க சொல்லற சமாச்சாரத்தைத் தான் Aloe Veraன்னு சொல்லி லேக்மியும் கவின்கேரும் குப்பியில அடைச்சி விக்கிறானுங்கன்னு நெனச்சிக்கிட்டேன்.
நான் மட்டும் இருந்திருந்தா ஒரு வேளை ஆட்டோவுலேயே பீச் ஸ்டேஷன் போயிருப்பேனோ என்னவோ? ஆனா கூட வந்தவன் என்னைக் கொன்னு களையும்ங்கிறதுனாலயும் நான் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்னு நிலைநாட்ட வேண்டி இருந்ததுனாலயும் மயிலின் ஆட்டத்தை அறியா வான்கோழியின் சுவையைத் தெரிஞ்சிக்கிறதுக்காகவும் ஆட்டோவை விட்டு இறங்குனேன். எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.
38 comments:
கைப்புள்ளெ,
பொம்பளைங்க பேச்சுலே அக்கம்பக்கத்து அக்கப்போர் மட்டும் இருக்குன்னு
நினைச்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கு வச்சீங்க ஒரு ஆப்பு:-)
ரசிச்சுப்படிச்சேன். நாலு விவரமும் தெரிஞ்சவங்கதாங்க நாங்க.
கைப்புள்ளெ,
பொம்பளைங்க பேச்சுலே அக்கம்பக்கத்து அக்கப்போர் மட்டும் இருக்குன்னு
நினைச்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கு வச்சீங்க ஒரு ஆப்பு:-)
ரசிச்சுப்படிச்சேன். நாலு விவரமும் தெரிஞ்சவங்கதாங்க நாங்க.
நல்லா கேட்டீரய்யா அக்க போரு, இதுல நாலு விவரம் இருக்கறதா வேற டீச்சர் சொல்லறாங்க. ஒண்ணுமில்லாதத ஊதி ஊதி தொடர் பதிவு போடறது எப்படின்னு உம்ம கிட்டதான்யா கத்துக்கணும்.
//பொம்பளைங்க பேச்சுலே அக்கம்பக்கத்து அக்கப்போர் மட்டும் இருக்குன்னு
நினைச்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கு வச்சீங்க ஒரு ஆப்பு:-)
ரசிச்சுப்படிச்சேன். நாலு விவரமும் தெரிஞ்சவங்கதாங்க நாங்க//
வாங்க துளசியக்கா,
நீங்க சொன்னீங்கன்னா சரியாத் தான் இருக்கும் :) உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் ஒரே ஹேப்பி ஹேப்பியா இருக்கு. ரொம்ப நன்றி.
அப்புறம் அந்த வான்கோழி டேஸ்ட் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே. நீங்க வேற தொடரும் அப்படின்னு போட்டுத் தொலைக்கலையா? அதான் அடுத்த பதிவு இருக்கோ இல்லையோன்னு இங்கயே கேட்டுட்டேன்.
//நல்லா கேட்டீரய்யா அக்க போரு, இதுல நாலு விவரம் இருக்கறதா வேற டீச்சர் சொல்லறாங்க. ஒண்ணுமில்லாதத ஊதி ஊதி தொடர் பதிவு போடறது எப்படின்னு உம்ம கிட்டதான்யா கத்துக்கணும்//
ஏங்க? சோடா குடிச்சோமா வெரலை சொடக்கி மாளவிகாவை ஆட வச்சோமான்னு இல்லாம ஏங்க இப்படி போணி ஆவற நேரத்துல பொழப்பைக் கெடுக்கறீங்க? ஏன் இந்த கொலை வெறி?
:)
//அப்புறம் அந்த வான்கோழி டேஸ்ட் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே//
அடடா...சரியா ஞாபகம் வச்சி கேட்டீங்களே? சும்மா சொல்லக் கூடாதுங்க சூப்பர் டேஸ்டுங்க. நார்த் மெட்ராஸ் காரவுங்களை நெனச்சா பொறாமையாத் தான் இருக்கு...நெனச்ச போது போய் சாப்புடலாம். நாம சண்டே ஆப்பீஸ் போனாத் தான் உண்டு.
நல்லா எழுதி இருக்கீங்க .
இப்படி கேட்டுட்டு அதுக்கு
ரியாக்ஷன் காண்பிக்க முடியாம
போறப்ப படற கஷ்டம் இருக்கே ...
சிரிப்பு வந்தா சிரிக்க முடியாம
கேள்விகேட்க வாய் வரும்
அடக்கிக்கணும். நீங்க....ரொம்ப நல்லவர்ங்க.
நீங்க எழுதின தொனிய வச்சு
ஒட்டு கேட்டீங்களான்னு திட்டி
எந்த லேடீஸ்கிட்ட இருந்தும்
பின்னூட்டம் வராது. மாறாக
உங்க ஆளுங்க தான் வந்து
இதெல்லாம் ஒரு விஷயமான்னு
பின்னூட்டம் போடுவாங்க.ஏற்கனவே
ஒன்னு வந்துடுச்சு.
நீயு என்னிக்கோ ஒரு ஞாயித்து கிழமை வேலைக்குப் போனங்கற வவுத்து எரிச்சலை இம்புட்டு நாள் சேத்து வச்சு இங்கிட்டு வந்து பதிவாப் போட்டு அதுவும் தொடராப் போட்டு அதுல்ல சித்தூர்கட் பிளாஷ் பேக் வேற... உன் டேமேஜர் கிட்டச் சொல்லி உன் ஆபிஸ்ல்ல இருக்க அம்புட்டு தேவை இல்லாத ஆணியையும் உன்னியப் புடுங்க விட்டாத் தான் நீ திருந்துவ... நல்ல பொழப்புய்யா இது..
hi kaipullai!!!
Ponbalainga ellarum oru chinna timekulla niraya think panni niraya therinji vachi irupaanga...
ada veli kondu vanthathuku nandri hai!!
தல,
சூப்பரா இருக்கு.... அதெப்பிடி எல்லாத்தையும் இம்புட்டு நாளா ஞாபகம் வைச்சிருந்தீங்க... :))
தல அட இதென்னா இப்போவாச்சும் வான்கோழி பிரியாணிய சாப்புட்டு இருப்பீங்க டேஸ்ட் எப்படீன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்போதான் ஆட்டோ ஹோட்டல் வாசல்ல இறக்கிவுட்டுருக்கு !!! :))))))
எங்கே வான்கோழி எங்க வான்கோழின்னு காத்துகிட்டு இருக்கேன் இனிமேலயும் பிரியாணி சாப்ட கதைய எழுதலை !! அவ்ளோதான் !!
ஆண்டவா பிரியாணி டேபிளுக்கு முன்னாட்டி யாராச்சும் ஆண்டிக பிரியாணி சாப்பிடிருக்காம இருக்கணுமே !!!
நல்ல நடை நல்ல ஞாபம் தல !!! சுவாரசியாமாதேன் இருக்கு படிக்க !! :))))))))
//யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?//
தல, அப்பப்ப இப்படி சொல்லிகிடுங்க.. இல்லன்னா..யாரும் நம்ப மாட்டாங்க.. எது எழுதினாலும்.. இந்த "ஜெண்டில்மேன்" மட்டும் மறக்கப்படாது ஆமா.. !!
எல்லாரும் என்ன உங்க ஞாபக சக்திய ஓவராத்தான் புகழ்றாங்க..?!! உண்மையாத்தான் இருக்குமோ?
சரி.. நான் சீக்கிரம் கிளம்பறேன்..வான்கோழி பிரியாணி கிடைக்கலன்னு நம்ம ஜொள்ளு அண்ணே.. என்னைய பிரீயாணி ஆக்கிபுட போறாரு..
//நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க.//
இப்படி தானே சமாளிச்சு ஆகனும்.
//ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். //
இப்ப அப்படி இல்ல. அடங்கா பிடாரியா சுத்திக் கிட்டு இருக்கே. அப்படி தானே......
//நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?//
இத வேற அடிக்கடி சொல்லிக்குற. சொல்லாட்டி உனக்கு இது மறந்துடுமா என்ன?
//குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். //
புரியுதுப்பா. நான் இங்கனு குபீர்னு என்ன படீர்னு சிரிச்சு வச்சி ஆபிஸ்ல வெளியே போய்ட்டு இருந்தவனை என்னை வந்து பாத்துட்டு போற மாதிரி வச்சுட்டேன்.
//அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது. //
இந்த பயணம் உலகத்தில் எந்த மூலைக்கு போனால் தொடரும். நல்ல பயணப்பா......
கைப்புள்ளை,
எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சுவைக்காக உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். இது எல்லோருக்கும் கைவந்துவிடாத அரிய விடயம். சில இடங்களில் வாக்கிய அமைப்பும் என்னைக் கவர்வதுண்டு.
///எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது///
இதில் இந்த வாக்கியம்.
தல, சும்மனாச்சுக்கும் கலாய்ச்சு எழுத ரொம்ப பேரு இருக்காங்க. இந்த மாதிரி வித்தியாசமா யோசிக்க, எழுத நீங்க மட்டும்தான் இருக்கீங்க. அம்மா "சமையல் எப்படிடா இருக்கு?"ன்னு கேக்கும்போது, நான் இதுக்கு முன்னாடியெல்லாம் "ஏன், நல்லாத்தான்!"ன்னு சொன்னவன், ஒரு நாள் உங்களை மாதிரி யோசிச்சு முடிவெடுத்தேன். இப்ப எல்லாம் விளக்கமா, எது பிடிக்குது, எது ரொம்ப பிடிக்குதுன்னு விலாவாரியாய் சொல்றேன். பின்னாடி, கல்யாணம் ஆன பின்னாடி இந்த அனுபவங்கள் நிச்சயம் உதவும்.
கைப்புள்ள உங்க ஆட்டோ அனுபவம் நல்லாவே இருக்கு. காதைக் கழட்டிவச்சுடுவாங்க சில பெர். நல்லாத் தீட்டியே வச்சு இருக்கீங்க நீங்க.
இந்த மாதிரி எங்களைப் பத்தி நல்ல விஷயமே எழுதுங்க.
கையிலே கர்சீஃப் வச்சுகிட்டா அதுக்குள்ள சிரிச்சுக்கலாம்.
இந்த மாதிரி சமயத்தில:-0)
முன்னாலே எழுதினது பின்னாலே இருக்கான்னு பின்னாலே போய்ப் பார்த்தால் பின்னாலே ஒண்ணும் இல்லை, சரின்னு முன்னாலே வந்தால் பின்னாலே என்னோட கமெண்டைக் காணோம். என்ன செய்யறது? பெண்கள் உலகில் பேசும் பேச்சை எல்லாம் கேட்டுக் கண்டு உணர்ந்து நீங்கள் அனுபவித்துக் கொண்டு நீடூழி வாழ வாழ்த்திட்டு அப்புறமா வரேன்.
அண்ணே!
அடுத்த முறை பாண்டியாஸ் போகும்போது, நாட்டுக்கோழி பிரியாணி சாப்ட்டுப்பாருங்க!
ஒரு முழு நாட்டுக்கோழியப்போட்டு அத மறைக்கற அளவுக்கு பிரியாணியும் போட்டு அவங்க குடுக்கற அழகு இருக்கே! ஆஹா! சாப்ட்டுட்டு ஆபிஸ் போன பிறகும் கையில அந்த நெய் வாசம் கமகமக்கும்ணே! விசேஷம் என்னன்னா வன்கோழி பிரியாணி பொல இல்லாம வாரத்துல எல்லா நாளும் நாட்டுக்கோழி பிரியாணி கிடைக்கும்!
குறிப்பு: பாண்டியாஸ்ல சாப்பிட வடசென்னை தான் போகணுமின்னு அவசியமில்லை. நம்ம வடபழனி கமலா தியேட்டர் எதுக்க அவங்க Branch இருக்கு. டேஸ்ட அப்படியேதான். எந்த மாற்றமும் இல்லை
பொம்பளைங்க பேசுரத ஒட்டு கேட்டதும் இல்லாம...நான் ஜெண்டில்மேனு ஜெண்டில்மேனு என்ன தல இது.... :-)
//சும்மா சொல்லக் கூடாதுங்க சூப்பர் டேஸ்டுங்க. நார்த் மெட்ராஸ் காரவுங்களை நெனச்சா பொறாமையாத் தான் இருக்கு...//
அதுவும் நார்த் மெட்ராஸ்காரங்க மீன் குழம்பு டேஸ்ட் அடிச்சுக்க முடியாது :-)
//நல்லா எழுதி இருக்கீங்க .
இப்படி கேட்டுட்டு அதுக்கு
ரியாக்ஷன் காண்பிக்க முடியாம
போறப்ப படற கஷ்டம் இருக்கே ...
சிரிப்பு வந்தா சிரிக்க முடியாம
கேள்விகேட்க வாய் வரும்
அடக்கிக்கணும். நீங்க....ரொம்ப நல்லவர்ங்க.//
வாங்க மேடம்,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
ஆஹா... ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கய்யா சொல்லிட்டாங்கய்யா...இன்னுமா சாக்கிரதையா இருந்துக்கிடணும்.
:)
//நீங்க எழுதின தொனிய வச்சு
ஒட்டு கேட்டீங்களான்னு திட்டி
எந்த லேடீஸ்கிட்ட இருந்தும்
பின்னூட்டம் வராது. மாறாக
உங்க ஆளுங்க தான் வந்து
இதெல்லாம் ஒரு விஷயமான்னு
பின்னூட்டம் போடுவாங்க.ஏற்கனவே
ஒன்னு வந்துடுச்சு.//
அவரு நம்மளைக் கலாய்க்கறதுக்கு போட்டுருக்காரு. மத்தபடி நான் பாத்த வரைக்கும் அவரும் ரொம்ப நல்லவரு தான்.
:))
//நீயு என்னிக்கோ ஒரு ஞாயித்து கிழமை வேலைக்குப் போனங்கற வவுத்து எரிச்சலை இம்புட்டு நாள் சேத்து வச்சு இங்கிட்டு வந்து பதிவாப் போட்டு அதுவும் தொடராப் போட்டு அதுல்ல சித்தூர்கட் பிளாஷ் பேக் வேற... உன் டேமேஜர் கிட்டச் சொல்லி உன் ஆபிஸ்ல்ல இருக்க அம்புட்டு தேவை இல்லாத ஆணியையும் உன்னியப் புடுங்க விட்டாத் தான் நீ திருந்துவ... நல்ல பொழப்புய்யா இது..//
ஆயிரம் ஆணி திரண்டு வந்தாலும் ஆப்புகள் குறைவதில்லை...அதனால் எனக்கு கவலையில்லை :))
இம்புட்டு ஃபீலிங் பண்ணி ஒருத்தன் பேஜை ஃபில்லிங் பண்ணி இருக்கான் அதை விட்டுப் போட்டு ஆணி கோணின்னு பேசறியே? நல்லாவா இருக்கு இந்த பொழப்பு?
:))
//hi kaipullai!!!
Ponbalainga ellarum oru chinna timekulla niraya think panni niraya therinji vachi irupaanga...
ada veli kondu vanthathuku nandri hai!!//
வாங்க சுதா,
வருகைக்கும் பாராட்டுக்கும் டேங்கீஸ் ஹை
:)
//தல,
சூப்பரா இருக்கு.... அதெப்பிடி எல்லாத்தையும் இம்புட்டு நாளா ஞாபகம் வைச்சிருந்தீங்க... :))//
ரொம்ப நன்றிப்பா ராயல். ஒரு காலத்துல இதையே இங்கிலீசுல ஒரு பதிவாப் போட்டேன்...அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
//தல அட இதென்னா இப்போவாச்சும் வான்கோழி பிரியாணிய சாப்புட்டு இருப்பீங்க டேஸ்ட் எப்படீன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்போதான் ஆட்டோ ஹோட்டல் வாசல்ல இறக்கிவுட்டுருக்கு !!! :)))))) //
கீழே ecr சொன்னதைப் படிச்சிப் பாரப்பா.
//ஆண்டவா பிரியாணி டேபிளுக்கு முன்னாட்டி யாராச்சும் ஆண்டிக பிரியாணி சாப்பிடிருக்காம இருக்கணுமே !!! //
ஆண்டிகளா? யூ மீன் ஹோலி மென்? நெத்தி மேல பட்டை நெக் மேல கொட்டை ஹாண்ட்லே திருவோடு வைட் கலர் கோமணம்? நோ நோ அவங்கள்லாம் பிரியாணி சாப்பிட மாட்டாங்கப்பா :)
//தல, அப்பப்ப இப்படி சொல்லிகிடுங்க.. இல்லன்னா..யாரும் நம்ப மாட்டாங்க.. எது எழுதினாலும்.. இந்த "ஜெண்டில்மேன்" மட்டும் மறக்கப்படாது ஆமா.. !!//
ஆங்...அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவோம்ல?
//எல்லாரும் என்ன உங்க ஞாபக சக்திய ஓவராத்தான் புகழ்றாங்க..?!! உண்மையாத்தான் இருக்குமோ?//
எல்லாம் கேமரா ட்ரிக்...டுபாக்கூர்...நீ கண்டுக்காதே
:)
//சரி.. நான் சீக்கிரம் கிளம்பறேன்..வான்கோழி பிரியாணி கிடைக்கலன்னு நம்ம ஜொள்ளு அண்ணே.. என்னைய பிரீயாணி ஆக்கிபுட போறாரு.. //
சே...சே...ஜொள்ளு அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு...அணில் பிரியாணி...கேக்கவே நல்லால்லையே
//இப்படி தானே சமாளிச்சு ஆகனும்.//
//இப்ப அப்படி இல்ல. அடங்கா பிடாரியா சுத்திக் கிட்டு இருக்கே. அப்படி தானே...... //
நைல் புலீ....என்னா இது சின்னப்பில்லத் தனமா? என்னா ஒரு வில்லத் தனம்?
//இத வேற அடிக்கடி சொல்லிக்குற. சொல்லாட்டி உனக்கு இது மறந்துடுமா என்ன?//
சரி நான் சொல்லலை...நீங்க சொல்லுங்க நான் ஜெண்டில்மேன்னு...நீங்களும் சொல்லமாட்டீங்க நானா சொல்லிக்கிட்டாலும் விடமாட்டீங்க. எந்த ஊரு நியாயம்ப்பா இது?
//புரியுதுப்பா. நான் இங்கனு குபீர்னு என்ன படீர்னு சிரிச்சு வச்சி ஆபிஸ்ல வெளியே போய்ட்டு இருந்தவனை என்னை வந்து பாத்துட்டு போற மாதிரி வச்சுட்டேன். //
சிரிச்சியா. நான் தான் அன்னிக்கு சிரிக்க முடியாதவனாயிட்டேன். சந்தோஷமாயிருப்பா
//இந்த பயணம் உலகத்தில் எந்த மூலைக்கு போனால் தொடரும். நல்ல பயணப்பா......//
நன்றிப்பா புலி.
//கைப்புள்ளை,
எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சுவைக்காக உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். இது எல்லோருக்கும் கைவந்துவிடாத அரிய விடயம். சில இடங்களில் வாக்கிய அமைப்பும் என்னைக் கவர்வதுண்டு.//
வாங்க மேடம்,
உங்க பாராட்டைப் படிச்சதும் மிக்க மகிழ்ச்சியா இருந்தது.
///எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது///
இதில் இந்த வாக்கியம். //
ரசிச்சதுக்கும் அதை எடுத்து சொன்னதுக்கும் மிக்க நன்றி மேடம்.
//"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்?//
இந்த இடத்துல சிரிக்க ஆரம்பிச்சது தாங்க... கொஞ்ச நேரம் நல்ல காமெடி!
அப்புறம் கைப்புள்ள.. நீங்க ஏன்ன செஞ்சீங்க..
வீட்டுக்குப் போய் துணியெல்லாம் தொவைச்சுப் போட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு எல்லாம் ஒழுங்கா சமைச்சிட்டு குழந்தைங்க துணியெல்லாம் மடிச்சு வச்சு அடுத்த நாள் பள்ளிக்கூடத்தூக்கு வேணும்கிறதெல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா அன்னிக்கு? ;-)
//எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.
//
:)
அருமையான பதிவு. நமக்கு வாழ்வியல் அனுபவங்கள் ஒவ்வொரு இடத்திலும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது, அது ஷேர் ஆட்டோ ஆக இருந்தாலும் சரி, மாநரக மன்னிக்கவும், மாநகர பேருந்துப் பயணமாக இருந்தாலும் சரி. கவனித்தும் கவனிக்காதது போல் நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயன்ற ஜெண்டில்மேன் பிம்பம், தனது முகமூடியை இந்த வலைப்பதிவில் கழற்றிவைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment