Thursday, July 5, 2007

சோடி போடுவோமா சோடி...

திருவாளர் திருமதி, சில்லுனு ஒரு சேலஞ்ச் அப்டி இப்டினு சன் டிவி, ஸ்டார் டிவி, விஜய் டிவின்னு எக்கசக்கமா போட்டிகள நடத்திட்டு வர்றாங்க. சங்கத்துச் சிங்கங்கள் பல பேர் இப்ப ஜோடி ஜோடியா சுத்துறதுனால அவிங்களுக்கும் அதே மாதிரி ஒரு போட்டிய நடத்தலாம்னு பிரபல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 'ஜி'க்கிட்ட அவரோட டைட் ஸெடிவ்ல்ல ஒரு டைம ஃபிக்ஸ் பண்ணியாச்சு. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரபல குருவி உருண்டை நிறுவனம் கண்ணம்மாபேட்டை பண்ணாடை அண்ட் கோ நிறுவனம் ரெண்டு குச்சி மிட்டாயும் ஒரு குருவி உருண்டையும் பரிசாகத் தரப் போகிறார்கள் என்பதையும் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓவர் டூ த ப்ரோகிராம்...

பக்கப்பட்டி பல்குத்தி குழுவினர் சும்மா கும்மு கும்முன்னு குத்துப்பாட்ட பேக் ரவுண்ட்ல போட்டு விட ஒவ்வொரு ஜோடியா அரங்கத்துக்குள்ள வர்றாங்க.

முதலில் சங்கத்தின் இளைய தளபதி சு(ம்)மா ஆரஞ்சு கலர் சட்டை, ஊதாவும், பச்சையும் மிக்ஸ் பண்ணின பேண்டும் போட்டுக்கிட்டு, கிளிப்பச்சை கலரு, அதுல கலர் கலரா பூப்போட்ட சேலை உடுத்தி அண்ணி சுமாவோட உள்ள நுழையிறாரு.

"என்ன வெட்டி. ராமராஜன் ஸ்டைல்ல வந்திருக்கீங்க?"

"இது ராமராஜன் காது. இளைய கேப்டன்காரு பால்யா ஸ்டைலு", படக்குன்னு சுமா அண்ணி எடுத்துவிட

'என்னது ராமராஜன் காதா? ஐயய்யோ.. அத இப்ப நளினிக்கிட்டகூட கேக்க முடியாதே..'

அடுத்தப்படியாக புது சிங்கம் தம்பியும் மஞ்சுளாவும் கை கோர்த்து நடந்து வர்றாங்க. பின்னாலையே ரெண்டு மூனு தவளையும் துள்ளித் துள்ளி வருது.

"எங்களுக்கு தவளையெல்லாம் சுத்தி நின்னாதான் லவ் மூடே வரும்", அப்படியே சேலை நுனியை கடிச்சிக்கிட்டே சொன்னாங்க மஞ்சு. வெட்கமாம். அதுக்குத்தான் அந்த ஆக்ஷன்.

எல்லாரும் ஜோடியா வந்தாங்க. ஆனா ராம் மட்டும் ஒரு பக்கம் ரஞ்சனி, இன்னொரு பக்கம் மஹாவோட உள்ள நுழைஞ்சார்.

"என்ன ராம். ரஞ்சனி அண்ணியும் மஹா அண்ணியும் உங்க வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி ஓமக்குச்சி மாதிரி இருந்தீங்க. இப்ப உசுலமணி மாதிரி ஆயிட்டீங்க?"

"யோவ் நீ வேற. ஆப்பரேஷன் கில்மான்னு எனக்கு ஆப்பு அடிச்சதால இவளுங்க ரெண்டு பேரும் ரெண்டு பக்கமும் நின்னு சாத்து சாத்துன்னு சாத்துறாளுங்க. அதுல வீங்கிப் போன ஒடம்புய்யா"னு அழாத குறையா ராம் சொன்னார். இனிமே அவர அப்படியெல்லாம் ஓட்டாதீங்கப்பா. சொல்லிட்டேன் ராம்.

அடுத்தது புலி, சூடான் கறுப்பு ஃபிகர் ஒருத்தியோட உள்ளே நுளைகிறார்.

"ஹூ இஸ் திஸ் ப்லேக் பியுட்டீ?"

"புலிக்கு ஜோடி பூனையாகுமா? அதுக்குத்தான் இந்த கறுஞ்சிறுத்தை. இவ பேரு கேத்தரின் லைட்"

'லைட்டுன்னு சொன்னீங்க. ஒரே இருட்டா இருக்கு??'

அடுத்து எண்ட்ரீ கொடுத்தார் ஜொள்ளுப் பாண்டி. பின்னால கிட்டத்தட்ட ஒரு நூறு பொண்ணுங்க.

"சார். இது ஜோடிகளுக்கான நிகழ்ச்சி"

"செல்லுகூட இல்லாம இருப்பான் மனுசன். ஆனா ஜொள்ளு இல்லாம இருக்க மாட்டான். அப்படிப்பட்ட ஜொள்ளுக்காக பேட்டையே வச்சிருக்கும் என்னைய 'ஒருத்தி'ங்ற அடைமொழில அடைக்க பாக்குறீங்களா? நெவெர்"னு சிவாஜி ஸ்டைல கற்ஜித்து,

"இன்னும் ரெண்டு லாரி ஃபிகர்ஸ் பின்னால வர்றாங்க"னு சொல்லிட்டு போனார்.

முதல் சுற்று. பாட்டுப் பாடணும்.

சொன்ன உடனே சுமா மைக்க எடுத்து "உதறவா? உதறவா?"ன்னு சொல்ல

"மைக்க உதறுனா எப்படி பாடுவ?"ன்னு கேட்க, அப்புறந்தான் தெரிஞ்சுது சந்திரமுகி ஜோவாட்டம் தெலுங்குல பாடப் போறாங்களாம். அதுக்குத்தான் அந்த அக்கப்போரு. சுமாவும் அந்தப் பாட்டுக்கு அதே காஸ்ட்யும்ல ஆடி முடிச்சவுடனே வெட்டிக்கிட்ட அவர் வாழ்க்கைல நடந்த சுவாரஷ்யமான சம்பவத்தக் கேக்க அப்படியே அழ ஆரம்பிச்சிட்டாரு.

"அல்வா பண்ணிறுக்காளேன்னு ஆசையா சாப்பிட போனாக்கூட அதுலையும் மொளவத்தல அள்ளிப் போட்டுருக்கா."னு கதர குடும்ப சண்டைல நாம எதுக்கு மூக்க நுழைக்கனும்னு அடுத்த ஆட்டக்காரர் ராமுக்குத் தாவிட்டேன்.

"ஆட்டத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம். ரெண்டு பேரு வந்தா ஜோடி. மூனு பேரா வந்தா என்ன சொல்வீங்க?"னு அறிவியல் கேள்வியெல்லாம் கேக்க, நாமத்தான் க்விஸ்ல வீக்காச்சே. எப்படி சமாளிக்கலாம்?னு யோசிச்சப்ப ஐடியா அழகுராஜா நமக்குக் காட்சித் தந்து ஒரு ஐடியாவ அருளினார்.

"மூனு பேருனா அது 'த்ரி'டி"

"ஓ. மூனு பேருங்கறதால த்ரியா?"

"இல்ல. ஜோதிகால ஜோ பக்கத்துல..."

"சூர்யா"

"யோவ். குறுக்கால பேசினா எனக்கு மறந்திடும். கம்னு இரு. ஜோ பக்கத்துல டி போட்டு ஜோடி ஆக்குனாங்க. அது மாதிரி த்ரிசால 'த்ரி' பக்கத்துல 'டி' போட்டா த்ரிடி"

"அப்போ கூட்டமா இருந்தா கூடியா?", ஓரமா கடலப் போட்டுக்கிட்டு இருந்த ஜொள்ளுப் பாண்டி எகிற

"பிரபு தேவா, சரத் குமார், கங்குலி ன்னு நக்மாக்குத்தான் ஒரு சரித்திரமே இருக்குது. அதனால கூட்டமா வந்த அதுக்குப் பேர் நக்டி"

"ஐ.. நக்டி.. நக்டி.."னு பார்வையாளர் ஒருத்தர் குஷில சவுண்டு விட, பக்கத்துல ஐஸ்க்ரீம் சாப்டுக்கிட்டு இருந்த அவரோட தங்கமணி, "யாரப் பாத்து 'டி' போட்டு பேசுற?"ன்னு பொலேர்னு அவர் மண்டைல தட்டிட்டாங்க.

"சரி. உங்கப் பாட்டு?"னு ராம் த்ரிடியக் கேக்க

"புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ரஞ்சனிக்காக"னு ரஞ்சனிப் பாட, வேகமா மைக்கப் புடிங்கி "இல்ல மஹாவிற்க்காக"ன்னு மஹாப் பாட, இதெல்லாத்தையும் கவனிக்காம ஸைட்ல போய்க்கிட்டு இருந்த ஒரு ஃபிகர்க்கிட்ட இளந்தல ASL கேக்க, ஹேண்ட் பேக்ல ரெடியா வச்சிருந்த பூரிக்கட்டைய எடுத்து ரஞ்சனியும் மஹாவும் கரெக்ட்டா ராமோட நடுமண்டைலையே தூக்கி வீசுனாங்க. பக்கத்துல அட்ரஸ் தெரியாம முழிச்சிட்டு இருந்த பொண்ணுக்கிட்ட அட்ரஸ் சொல்லிக்கிட்டு இருந்த என் மேல பூரிக்கட்டை விழுந்திடக் கூடாதுன்னு அங்க இருந்து நானும் எஸ்கேப். :))

அடுத்தது தம்பிப் பக்கம் வந்தா, தம்பியும் மஞ்சுளாவும் "என் சயின்ஸ் லேப்பில் நீ தவளையா? கரப்பான் பூச்சியா?"னு தில் பாட்ட ரீமேக் பண்ணி டைட்டானிக் ஜேக் அண்ட் ரோஸ் ரேஞ்சுக்கு டான்ஸ் ஆட,

"எவன்டா என்ற பொண்டாட்டி இழுத்துட்டு வந்தது?"னு விஜயக்குமார் வாசல்ல இருந்து கத்த, தம்பி எஸ்கேப்.

அடுத்தது புலிப் பாடணும்.

"கருவாப் பொண்ணு கருவாப் பொண்ணு"னு சிவா அந்த கறுப்பிய சுத்தி சுத்தி வர,"வாட் இஸ் திஸ்?"னு அந்தப் பொண்ணு ஜெர்க் ஆக, "தொரச்சி இங்கிலிபிஸெல்லாம் பேசுது"னு கோவை சரளா வாய்ஸ்ல பார்வையாளர்கள் சவுண்டு விட அப்படியே புலி இங்கிலிஸ்காரன் ரேஞ்சுக்கு மின்சாரக் கனவு வெண்ணிலவேப் பாட்ட ஆங்கிலத்துலப் பாடுனார்.

"White Moone, white moone, do you come by jump the sky? we want pair for playing..", அவரு பாடி முடுக்கும்போது விசிலும் கைத்தட்டலுமா அரங்கமே அதிரும்னு பாத்தா, பொண்ணுங்கக்கூட தம்மடிக்க அரங்கத்த விட்டு வெளில போயிட்டாங்க.

சரி. அடுத்தது ஜொள்ளுப் பாண்டி முறைனு திரும்பிப் பாத்தா, பாண்டியக் காணோம். விசாரிச்சுப் பாத்தாதான் தெரிஞ்சுது அது காலேஜ் விட்டு பொண்ணுங்கெல்லாம் வர்ற ஜொள்ளுற டைம். அதனால தலைவர் எஸ்கேப்.

எல்லாரும் போனதுக்கப்புறம் எதுக்கு ஜோடி விளையாட்டெல்லாம். அதான் ஆட்டத்தக் கலச்சாச்சு. :))

9 comments:

Anonymous said...

:))))

gee.ithu romba nalla irunthathu.

நாகை சிவா said...

ஏலேய்!

நேத்து புலிக்கவுஜ போட்ட மன்னிச்சேன், இன்னிக்கு புலிய கவுறடிச்சிட்டியே... உன்னய எல்லாம்....

ஜி said...

//†hµrgåh said...
:))))

gee.ithu romba nalla irunthathu.//

வாம்மா மின்னல்... நீ வந்தாலே கொஞ்சம் பயமா இருக்குது :((.. நல்ல வேளை இந்த தடவ கரெக்டா கமெண்ட் போட்டுட்ட :))

ஜி said...

// நாகை சிவா said...
ஏலேய்!

நேத்து புலிக்கவுஜ போட்ட மன்னிச்சேன், இன்னிக்கு புலிய கவுறடிச்சிட்டியே... உன்னய எல்லாம்....//

என்ன புலி.. இதுக்கெல்லாமா கோவப் படுவாங்க.. பாருங்க மத்த சிங்கங்கலெல்லாம் லோக்கல்தான். நீங்க்தான் இண்டெர்னேஷனல் லெவெல் :))

கதிர் said...

எலேய் மஞ்சுளா யாருன்னு உனக்காச்சும் தெரியுமா?

இராம்/Raam said...

ஜியா,

ஏன் மக்கா? இப்பிடி எங்க இமேஜ் எல்லாம் டேமேஜ் பண்ணுறே??

நாங்கல்லாம் பேச்சிலர் அதுதானாலே ஒன்னும் சொல்லமாட்டோம்... மிச்சம் இருக்கிற பேச்சு இலர் சிங்கங்களை வைச்சி இதை மாதிரி புரோகிராம் நடத்திக்காட்டு... :))) நாங்க நீ வீரன்தான்னு ஒத்துக்கிறோம்....

ஜி said...

//தம்பி said...
எலேய் மஞ்சுளா யாருன்னு உனக்காச்சும் தெரியுமா? //

அங்க இங்க கேள்விபடுறதுதான்.. இதுக்கெல்லாம் பெர்சனல் இண்டர்வியுவ் வச்சா தெரிஞ்சிக்குவாங்க :))

ஜி said...

// இராம் said...
ஜியா,

ஏன் மக்கா? இப்பிடி எங்க இமேஜ் எல்லாம் டேமேஜ் பண்ணுறே??//

ஆமா. உங்க இமேஜ் இதுக்கு முன்னாடி டாப்ல இருந்தது. இப்ப நான் என்னமோ புதுசா டேமேஜ் பண்ற மாதிரில்ல பேசுதிய?? :))

//நாங்கல்லாம் பேச்சிலர் அதுதானாலே ஒன்னும் சொல்லமாட்டோம்... மிச்சம் இருக்கிற பேச்சு இலர் சிங்கங்களை வைச்சி இதை மாதிரி புரோகிராம் நடத்திக்காட்டு... :))) நாங்க நீ வீரன்தான்னு ஒத்துக்கிறோம்.... //

ஹி..ஹி.. அவிங்கெல்லாம் ஒரிஜினல் ஆப்பு வாங்குதாங்கல்லா. அதுனாலதான் அவிங்கள விட்டுட்டோம்.. :))

கப்பி | Kappi said...

:))))