Saturday, August 30, 2008

ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - வேற எதுக்கு லவ் பண்ணத்தான்!!!!


பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!

பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!

இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!

ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!

(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)

இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!

இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ எஸ்கேப்பூ!)

இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு .கே!)

இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!

வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசிக்

இரு கைகளை கொண்டு உழைத்து வாழ் அதுக்கு காரணமாக அமைவது நீ எடுக்கும் ரிஸ்க்குகள்தான் !


(பெரிய வட்டம் போட்டு நானும் காப்பி ரைட்டு போட்டுக்கிறேன்ப்பா!)

டிஸ்கி:- முடியப்போற டைம்! முடிவு பண்ணியாச்சு இனி சாண் போன என்ன முழம் போனா என்னன்னுத்தான் தைரியமா நகைச்சுவை/நையாண்டியில இந்த பதிவ சேர்த்துட்டோம்ல!


(கொஞ்சம் அதிகம் ஆங்கில வார்த்தைகள் வந்திருக்கேன்னு யாரும் ஃபீல் பண்ணாதீங்கோ எல்லாம் ஆபிஸ்ல இருந்துக்கிட்டே தமிழ்மணத்துல வேலை செஞ்சா, அதுவும் ஒவர்டைமா சங்கத்துல வேலை செஞ்சா இப்படித்தான் நடக்கும்!)

13 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...:)

Thamiz Priyan said...

ஆமா... ஆயில்யன் அந்த தடிமாடுக்ளிடம் பட்ட அனுபவங்களை சொல்லாம விட்டுட்டீங்களே!???

ஆயில்யன் said...

/தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...:)

/

ரைட்டு:)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
ஆமா... ஆயில்யன் அந்த தடிமாடுக்ளிடம் பட்ட அனுபவங்களை சொல்லாம விட்டுட்டீங்களே!???
//

என்னாது இது சின்னபுள்ளதனமா இருக்கு!

(அதையெல்லாமா இங்க சொல்லுவாங்க!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப யாரோடையோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் தம்பி துரத்திவிட்டத்தில் தான் துபாய் வந்துட்டீங்களோ சார்? :)

மங்களூர் சிவா said...

ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடற மாதிரி!!

மங்களூர் சிவா said...

/
முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்ப யாரோடையோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் தம்பி துரத்திவிட்டத்தில் தான் துபாய் வந்துட்டீங்களோ சார்? :)
/

வழி மொழிகின்றேஏஏஏஏஏன்

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

ஆமா... ஆயில்யன் அந்த தடிமாடுக்ளிடம் பட்ட அனுபவங்களை சொல்லாம விட்டுட்டீங்களே!???
/

ரிப்பீட்டு

கானா பிரபா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அப்ப யாரோடையோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் தம்பி துரத்திவிட்டத்தில் தான் துபாய் வந்துட்டீங்களோ சார்? :)//

இத இதத்தான் எதிர்பார்த்தேன் ;)


//மங்களூர் சிவா said...
ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடற மாதிரி!!//

சிங்கம்லே

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அப்ப யாரோடையோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் தம்பி துரத்திவிட்டத்தில் தான் துபாய் வந்துட்டீங்களோ சார்? :)
//

:))

ரிப்பீட்டேஏஏஏஏஏ

Anonymous said...

//வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”///

:)))))))

இராம்/Raam said...

கலக்கல்....

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சொந்த அனுபவமும் கலந்த மாதிரில்ல இருக்கு... யாருக்கு தெரியும், என்னா நடந்ததோ?