Sunday, August 31, 2008

ஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா!!!

சிங்கம் சிங்கிளா தான் வரும்னு தலைவர் சொன்னாலும் சொன்னாரு, நம்ம சங்கத்துல இந்த மாசம் அட்லஸ் சிங்கம் ஆயில்ஸ் சிங்கிளா ஆடி பட்டையை கிளப்பிட்டாரு. இந்த ஒரு மாசம் முழுக்க பதினாறு பதிவு வித விதமா போட்டு பட்டையை கிளப்பிட்டாரு.

பொண்ணுங்களை வித விதமா பிரிச்சதை சொல்றதா, லவ்வு பண்ண அவர் கொடுத்த பிளானிங்க சொல்லவா, மொக்கையை பத்தி ஆராய்ச்சி பண்ணதை சொல்லவா, இல்லை டைமிங்கா அவர் போட்ட ஒலிம்பிக்ஸ் பதிவு, PIT போட்டிக்கு போட்ட பதிவை பத்தி சொல்லவா, நகைச்சுவை சாம்ராட் சார்ளி சாப்ளின் பத்தி எழுதனதை சொல்லவா இல்லை தசவதாரம் ரீமிக்ஸ் பாடல் மொக்கை நாயகனே பாடலை சொல்லவா? எதை விட எதை சொல்ல. பேசாம இங்க சொடுக்கி ஆயில்ஸ் எழுதின பட்டாசான பதிவு எல்லாத்தையும் சொல்லிடறேன். தவற விட்டவங்க படிக்கலாம். எல்லாமே யூத் ஃபுல் தான் ;)

என்னடா இந்த மாசம் ஒருத்தர் வந்து பட்டையை கிளப்பிட்டாரே, அடுத்த மாசம் யார் வருவார்னு ஆவலா இருக்கீங்களா? அவரும் நகைச்சுவைல பாட்டாசு கிளப்பறவர்தான்.

நான் க்ளூ கொடுக்கறேன் நீங்க கண்டுபிடிச்சிக்கோங்க

சின்ன வயசுல எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா நாங்க எல்லாம் பயந்துக்குவோம். இப்ப அவர் URL தெரிஞ்ச குழந்தைகளுக்கு எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா விழுந்து விழுந்து சிரிக்கறாங்க.

2011ல நானும் முதலமைச்சர் தானு சொல்லி வந்தது Gaptain மட்டுமில்லை... இவரும் தான்.

இவர் ஒரு தீர்க்கதரிசி. ஆமா. நிஜமா தான். நம்புங்க. 2030 எப்படி இருக்கும்னு இப்பவே சொல்லிட்டு இருக்காரு.

சாப்ட்வேர் ஃபீல்ட்க்கு யார் யார் வந்தா என்ன என்ன மாற்றங்கள் வரும்னு இவர் போட்டதை பார்த்து சாப்ட்வேர் இண்டஸ்ட்ரீயே நடுங்கி போய் இருக்கு.

அவருக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.

இதுக்கு மேலயும் நீங்க கண்டுபிடிக்கலனா நீங்க இன்னும் வலைப்பதிவெல்லாம் அதிகமா படிக்க ஆரம்பிக்கனும். நீங்க ரெட் அலர்ட்ல இருக்கீங்கனு அர்த்தம் ;)

ச்சின்னப்பையன் அவர்களை வருக வருக என்று சங்கம் வரவேற்கிறது...

10 comments:

ஆயில்யன் said...

வாங்க ச்சின்னபையன்
வாங்க! :)))

சின்னப் பையன் said...

மீ த பஷ்டு!!!

சின்னப் பையன் said...

ஓ! இல்லையா... சரி பரவாயில்லை....:-))

தமிழன்-கறுப்பி... said...

வாங்க ச்சின்னப்பையன்...:))

தமிழன்-கறுப்பி... said...

உங்க புரொபைல் படத்துலயே நீங்க சிங்கம்றது புரிஞ்சிடுச்சு...:)

தமிழன்-கறுப்பி... said...

சங்கத்துல சிங்கம்னா...

தமிழன்-கறுப்பி... said...

எதுக்கும் தயாராத்தான் உள்ள வரணும்...

தமிழன்-கறுப்பி... said...

அதனால எப்படி கலாய்ச்சாலும் தாங்குவீங்கன்ற நம்பிக்கைல...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்.....!

கலக்குங்க...:))

தமிழன்-கறுப்பி... said...

10.....