
எதிர்பார்ப்புக்கள் அற்றிருந்த காலகட்டத்தில் வந்த இந்த படம்தான் அடுத்தடுத்த வந்த வரப்போகின்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு என்றதொரு அம்சத்தினை ரஜினி ரசிகர்களுக்கு அளித்த படம்!
படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை வியாபித்திருந்த ரஜினி! படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தார் - அமராமல் வேகத்தோடு...!
உண்மையை சொன்னேன் காட்சியிலாகட்டும்,உள்ளே போ! என்ற மிரட்டலிலாகட்டும் ரசிகர்கள் என்ற எல்லை கடந்து எல்லா மக்களின் ரசனைக்கும் இந்த காட்சிகள் தீனியாகப்போனது உண்மையான விஷயம்
என்றைக்குமே மறக்கமுடியாததொரு வசனம் - நான் ஒரு தடவை சொன்னா!
இது சாதாரணமாகவே நம் ஊர்களில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைத்தான் !
சாதத்தை தட்டுல போட்டு சாப்பிட்டுன்னு உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது நூறுதடவையா சொல்லணும்! - இது ஆணை அதட்டும் தாய்!
தலையை நீயே சீவிக்கிட்டு ஸ்கூலுக்கு போடீன்னு ஒரு தடவை சொன்னா புரியாது நூறு தடவை சொல்லணுமா? - இது பெண்ணை அதட்டும் தாய்!
ஆனால் படத்தில் வெளிப்பட்ட வசனம்தான் இன்றும் கூட நீங்கள் பார்த்தால் அசத்தல் வசனம்தான் அது என்று சொல்லிக்கொள்வீர்கள்!
மொத்த படத்திற்குமே ஹைலைட் செய்யும் காட்சி எது என்று நீங்கள் படம் பார்த்தவர்களை கேட்டால் கண்டிப்பாக கூறும் காட்சிகளில் முதன்மையானது இதுவாகத்தான் இருக்கும்!
பார்த்து ரசித்திருங்கள்!
4 comments:
:))
ஏய் பாட்சா பாரு.. பாட்சா பாரு
ஆயில் காட்டும் படத்த பாரு...
தலைவர் ஒரு அடி அடிச்ச வேகத்துல லைட் கம்பதிதில போய் விழுந்து தெரிச்சு வரும் பாருங்க... அதை பத்து இது வரைக்கும் எத்தனை படத்திலே காட்சி அமைச்சிட்டாங்க?!
சூப்பர் சீன்'லே அது...... எல்லாரும் எவ்வளவு தடவை பார்த்துருக்கமின்னே தெரியாது... :)
தல (உங்க அண்ணன்) இருக்கும் போது வால் ஆடக்கூடாதுப்பா ;)
Post a Comment