~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Sunday, August 31, 2008
ஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா!!!
பொண்ணுங்களை வித விதமா பிரிச்சதை சொல்றதா, லவ்வு பண்ண அவர் கொடுத்த பிளானிங்க சொல்லவா, மொக்கையை பத்தி ஆராய்ச்சி பண்ணதை சொல்லவா, இல்லை டைமிங்கா அவர் போட்ட ஒலிம்பிக்ஸ் பதிவு, PIT போட்டிக்கு போட்ட பதிவை பத்தி சொல்லவா, நகைச்சுவை சாம்ராட் சார்ளி சாப்ளின் பத்தி எழுதனதை சொல்லவா இல்லை தசவதாரம் ரீமிக்ஸ் பாடல் மொக்கை நாயகனே பாடலை சொல்லவா? எதை விட எதை சொல்ல. பேசாம இங்க சொடுக்கி ஆயில்ஸ் எழுதின பட்டாசான பதிவு எல்லாத்தையும் சொல்லிடறேன். தவற விட்டவங்க படிக்கலாம். எல்லாமே யூத் ஃபுல் தான் ;)
என்னடா இந்த மாசம் ஒருத்தர் வந்து பட்டையை கிளப்பிட்டாரே, அடுத்த மாசம் யார் வருவார்னு ஆவலா இருக்கீங்களா? அவரும் நகைச்சுவைல பாட்டாசு கிளப்பறவர்தான்.
நான் க்ளூ கொடுக்கறேன் நீங்க கண்டுபிடிச்சிக்கோங்க
சின்ன வயசுல எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா நாங்க எல்லாம் பயந்துக்குவோம். இப்ப அவர் URL தெரிஞ்ச குழந்தைகளுக்கு எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா விழுந்து விழுந்து சிரிக்கறாங்க.
2011ல நானும் முதலமைச்சர் தானு சொல்லி வந்தது Gaptain மட்டுமில்லை... இவரும் தான்.
இவர் ஒரு தீர்க்கதரிசி. ஆமா. நிஜமா தான். நம்புங்க. 2030 எப்படி இருக்கும்னு இப்பவே சொல்லிட்டு இருக்காரு.
சாப்ட்வேர் ஃபீல்ட்க்கு யார் யார் வந்தா என்ன என்ன மாற்றங்கள் வரும்னு இவர் போட்டதை பார்த்து சாப்ட்வேர் இண்டஸ்ட்ரீயே நடுங்கி போய் இருக்கு.
அவருக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இதுக்கு மேலயும் நீங்க கண்டுபிடிக்கலனா நீங்க இன்னும் வலைப்பதிவெல்லாம் அதிகமா படிக்க ஆரம்பிக்கனும். நீங்க ரெட் அலர்ட்ல இருக்கீங்கனு அர்த்தம் ;)
ச்சின்னப்பையன் அவர்களை வருக வருக என்று சங்கம் வரவேற்கிறது...
கடைசி பரீட்சை நாள்!
எழுத வேண்டியதெல்லாம் எழுதி விட்டு பராக்கு பார்த்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த கடைசி ஒரு மணி நேரமும் அப்படியே மனசுல உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருக்கும்!
நாளையிலேர்ந்து லீவு ஜாலி எங்க போகலாம்?
ஊரைசுத்தலாமா?
ஊரை விட்டு ஓடிப்போகலாமா? - தனியாத்தான்:-(
இப்படியாக பல நினைப்புக்கள் ஒரு பத்து நிமிஷத்திற்குள் வந்து ஆளை புரட்டி சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டுச்செல்லும் சமயத்தில் தான் அது தோணும்!
சரி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே சும்மா ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுனா என்ன? என்று நினைத்து பேப்பர் வாங்கிய பிறகுதான் ஆமாம் என்ன எழுதுறது என்று நினைக்கதோணும்!
எழுதுவோமே! அப்படின்னு மெயின் பேப்பர்ல இருக்கற விஷயங்களை ஆங்காங்கே பொறுக்கி எடுத்து சாய்ஸ் கொஸ்டீன் எழுதி (சிவுப்பு இங்க்ல அண்டர்லைன் பண்ணனும்!) அதுக்கு பொறுக்கிய விசயங்களை எடுத்துகொண்டு வந்து போட்டா போதும்! ஒ.கே ஆயிடும்! ( இப்படி பரீட்சை எழுதி பெத்த படிப்பு முடிச்சாச்சு!)
அப்படி ஒரு மீள் பதிவு நன்றி போட்டுக்கிறேன்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி சொல்லும் நேரம்!
நானாக நானிருந்த காலம் போய்,
வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;
வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்
ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்???
நகர்ந்து விட்டது நாட்கள்!
தகர்ந்து விட்டது ஆசை!
நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம் தான்
எல்லோருக்கும் உண்டு.!
நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!
நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!
நகர்வு இருக்க வேண்டும்
நன்மை செய்யும் நகர்வாகவே..!
என் நகர்வு வரும் பயணிக்கு,
நலமாக அமையவேண்டும்!
நாளும் நல்லது சொல்வோம்
நாளும் நல்லது செய்வோம்
நாளும் நலமுடன் வாழ்வோம்!
நாளும் நல்லவராக வாழ்வோம்!
நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி ஒரு மாசம் இங்க குந்திக்கினு எழுதுன பரீட்சைக்கெல்லாம் ரிசல்ட் வந்தாத்தான் தெரியும் பாசா பெயிலான்னு!
சரி இங்க் அடிச்சுக்கிற நேரம் வந்துடுச்சு!
இது வரைக்கும் இந்த பக்கமே வராத சிங்கங்களெல்லாம் கொஞ்சம் வந்து நில்லுங்கப்பா!
நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!

பதிவு போட்டே டென்ஷன் ஆகிட்டேன்!
முழுசா மூணு நாள் ரெஸ்ட் எடுத்தாத்தான் இனி உசுரு வாழமுடியும்!

Saturday, August 30, 2008
ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - வேற எதுக்கு லவ் பண்ணத்தான்!!!!

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!
பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!
இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!
ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!
(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)
இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!
இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!
நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ த எஸ்கேப்பூ!)
இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு ஒ.கே!)
இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!
வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”
இரு கைகளை கொண்டு உழைத்து வாழ் அதுக்கு காரணமாக அமைவது நீ எடுக்கும் ரிஸ்க்குகள்தான் !
டிஸ்கி:- முடியப்போற டைம்! முடிவு பண்ணியாச்சு இனி சாண் போன என்ன முழம் போனா என்னன்னுத்தான் தைரியமா நகைச்சுவை/நையாண்டியில இந்த பதிவ சேர்த்துட்டோம்ல!
பாட்ஷா!

எதிர்பார்ப்புக்கள் அற்றிருந்த காலகட்டத்தில் வந்த இந்த படம்தான் அடுத்தடுத்த வந்த வரப்போகின்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு என்றதொரு அம்சத்தினை ரஜினி ரசிகர்களுக்கு அளித்த படம்!
படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை வியாபித்திருந்த ரஜினி! படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தார் - அமராமல் வேகத்தோடு...!
உண்மையை சொன்னேன் காட்சியிலாகட்டும்,உள்ளே போ! என்ற மிரட்டலிலாகட்டும் ரசிகர்கள் என்ற எல்லை கடந்து எல்லா மக்களின் ரசனைக்கும் இந்த காட்சிகள் தீனியாகப்போனது உண்மையான விஷயம்
என்றைக்குமே மறக்கமுடியாததொரு வசனம் - நான் ஒரு தடவை சொன்னா!
இது சாதாரணமாகவே நம் ஊர்களில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைத்தான் !
சாதத்தை தட்டுல போட்டு சாப்பிட்டுன்னு உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது நூறுதடவையா சொல்லணும்! - இது ஆணை அதட்டும் தாய்!
தலையை நீயே சீவிக்கிட்டு ஸ்கூலுக்கு போடீன்னு ஒரு தடவை சொன்னா புரியாது நூறு தடவை சொல்லணுமா? - இது பெண்ணை அதட்டும் தாய்!
ஆனால் படத்தில் வெளிப்பட்ட வசனம்தான் இன்றும் கூட நீங்கள் பார்த்தால் அசத்தல் வசனம்தான் அது என்று சொல்லிக்கொள்வீர்கள்!
மொத்த படத்திற்குமே ஹைலைட் செய்யும் காட்சி எது என்று நீங்கள் படம் பார்த்தவர்களை கேட்டால் கண்டிப்பாக கூறும் காட்சிகளில் முதன்மையானது இதுவாகத்தான் இருக்கும்!
பார்த்து ரசித்திருங்கள்!
இது ஒரு மனிதனின் கதை!

உலகின் முதல் நாள்;
கடவுள் மாடு அவதரிக்க செய்து அதனிடம் மாடாகிய நீ விவசாயிகளிடம் சென்று அவர்களோடு இருந்து,எல்லா நாட்களிலும் அவர்களுக்கு உதவி செய்து வரவேண்டும் உனக்கு வாழ்க்கை 50 வருடங்கள் என்று கூறினாராம்
அதற்கு அந்த மாடு 50 ஆண்டுகளும் நான் என் காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாழ விரும்பலை அதனால எனக்கு 20 வருஷம் போதும் மீதி 30 வருஷத்த நீங்களே எடுத்துக்கோங்கன்னு சொல்லி கொடுத்துட்டு போயிடுச்சாம்!
ரெண்டாவது நாள்;
இன்னிக்கு கடவுள் ஒரு நாயை அவதரிக்க செய்கிறார் அதனிடம் உனக்கு வேலைன்னு சொன்னா,நீ நாள் பூராவும் வீட்டுல இருந்து காவல் காத்திக்கிட்டிரு,யாராவது புது ஆளுங்க வந்தாங்கன்னா அவங்கள வெளிகதவுக்கிட்ட யே பார்க் பண்ணி நிப்பாட்டிடணும்! உன்னோட வாழ்க்கை 20 வருடங்கன்னு சொல்ல
அதற்கு நாய் என்னது? நாள் பூராவும் ஒரே இடத்தில் குந்திகினு இருக்கணுமா? சான்ஸே இல்ல எனக்கு பத்து வருஷம் போதும் இந்தா மீதி பத்து வருஷம் நீயே வச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிடுச்சாம்
மூணாவது நாள்;
இந்த மூணாமத்த நாள் கடவுள் குரங்கை அவதரிக்க செய்கிறார்! யேய்..! குரங்கு உனக்கு வேலை மக்களை சந்தோஷப்படுத்தணும் அப்புறம் எல்லாரையும் சிரிக்கவைக்கனும் முக்கியமா குரங்கு புத்தின்னா என்னானு எல்லாருக்கும் காமிக்கணும் உனக்கு நான் 20 வருஷம் லைப் தர்றேனு சொல்ல,
இல்ல சாமி! எல்லாரையும் குஷிப்படுத்துறதுக்கு எனக்கு 10 வருஷம் மட்டும் போதும் அதுல எல்லாரையும் குஷிப்படுத்தி வைச்சா அதுவே ரொம்ப திருப்தியாக இருக்கும் அவங்களுக்க்கு போதுமானதாகவும் இருக்கும்னு சொல்லி மீதி 10 வருஷத்தை ரிடர்ன் பண்ணிட்டு போயிடுச்சாம்!
நான்காவது நாள்;
இன்னிக்குத்தான் மனிதனை கடவுள் படைக்கிறார்
இந்தாப்பா உனக்கு திங்கிறது தூங்குறது விளையாடுறது அவ்ளோதான்! வாழ்க்கையை என் ஜாய் பண்ணு! ஒண்ணும் செய்யவேணாம்! சந்தோஷமா இருந்தா போதும்! உனக்கு 20 வருஷ வாழ்க்கை இது ஒ.கேவான்னு கேட்க ?
என்னது? திங்கிறது தூங்குறது,விளையாடறது சந்தோஷமா இருக்கறது இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு 20 வருஷம் தான் டைமா?
நோ சான்ஸ்..!
ஒ.கே நான் இப்ப உங்ககிட்ட ஒரு டீலுக்கு வர்றேன் நீங்க ஒண்ணும் புதுசா கொடுக்கவேணாம் அந்த மாடு கொடுத்த 30 வருஷம், நாய் கொடுத்த 10 வருஷம் அப்புறமா அந்த குரங்கு கொடுத்த 10 வருஷம் இதெல்லாம் என்னோட 20 வருஷத்தோட சேர்த்துக்கொடுன்னு, சொல்ல சரி ஒ.கேன்னுட்டாராம் கடவுள்!
அதோட கஷ்ட காலங்கள்தான்...
முதல் 20 வருஷம் மனுசனாட்டம் சாப்பிட்டு,தூங்கி,விளையாடி சந்தோஷமா இருந்துட்டு, அடுத்த 30 வருஷத்துக்கு மாடு மாதிரி மழை வெய்யில்னு பார்க்காம உழைச்சுக்கொட்டி, அடுத்த 10 வருஷத்துக்கு நம்ம பேரப்புள்ளைங்களுக்கு நம்ம குரங்கு தனங்களை காட்டி சிரிக்கவைத்து, கடைசியா பத்து வருஷத்து வீட்ல் உக்காந்து காவல் காத்து,யாராவது வந்தா தேவையில்லா கேள்வியெல்லாம் கேட்டு அடிக்காத குறையா தூரத்திவிட்டுக்கிட்டு இருக்கோம்!
டிஸ்கி:-
ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு ஏத்துக்கணும்
- நாய் சேகர்
(என்னது ஏற்கனவே கேட்டு புளிச்சுப்போன கதையா!!! சொல்லவே இல்லை?????)
Friday, August 29, 2008
கேளீர்!
எல்லாருக்கும் மனசுக்குள்ளயே இருக்கு ஆனா யாரும் எக்ஸ்பிரஸ் பண்ணமுடியாத அளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்துல வந்துட்டு போயிக்கிட்டும் இருக்காங்க!
ஸோ...! நான் அவுங்க சார்பா நான் கேள்வி கேட்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!
பட் யாருக்கிட்ட கேட்கறதுன்னு ஒரு கொயப்பம்! நம்ம மனசுகுள்ள இருக்கறத வெளியே பொதுவா சொல்லிவைப்போம் எத்தினியோ நல்ல மனுசங்க இருக்காங்க
யாராவது நம்ம கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம ஃபீலிங்க்ஸ கொறைப்பாங்களேன்னு ஒரு தைரியத்தில் களம் இறங்கியாச்சு!
நீங்க தமிழ்மணத்துல அதிகம் உலாவும் போது யாரும் அதிகம் பார்க்காத பேஜ் ஒண்ணு இருக்குன்னா அது கேளீர் பக்கமாத்தான் இருக்கும்! (கரீக்டா புடிச்சான்ய்யா!)
பட் என்ன பிரச்சனைன்னை அதுல போய் பார்த்தா எனக்கு முகப்புல தெரியற புரியற மாதிரி எதுவுமே புரியமாட்டிக்கிது!!! (என்னது அது படிக்க அந்தந்த மொழி தெரிஞ்சுருக்கணுமா?)
அங்க எல்லா மொழியும் மிக்ஸ்ர் காரபூந்தி மாதிரி கலந்து கிடக்குது எது நகைச்சுவை இனிப்புன்னு தெரியல? எது அரசியல் காரம் அப்படின்னும் விளங்கிக்க முடியலை !
ஒரு பொதுவான வகைப்படுத்தல் இருந்தாக்கா ஏதோ இங்கீலிசு பேப்பரை பார்த்து பார்த்து சிரிக்கறமாதிரி இந்த பக்கங்களுக்குள்ளயும் போய்வரலாம்ல?!
இதையெல்லாம் விட அங்கன பதிவுகள் எழுதுறது யாரு ஆணா பொண்ணான்னு தெரியல ! (நொம்ப முக்கியம் நானெல்லாம் மலையாளப்பக்கம் நிறைய ரசிகர் ரசிகைக்ள்
லைன் கட்டி நிக்க வைச்சிருக்கேனாக்கும்!)
அவுங்கெல்லாம் யாரு?
எந்த ஊரு?
ஏன் இப்படி இருக்காங்க?
அட்லீஸ்ட்
நான் சாட் இன்வைட் அனுப்பினா ஏத்துக்குவாங்களா? மாட்டாங்களா?
அல்லது ஹாய்ன்னு சொல்லியாச்சும் மெயில் அனுப்புவாங்களா?
இப்படியான விசயங்கள் எல்லாம் இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள யாராச்சும் நல்ல உள்ளங்கள் பதிவாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் மெயிலாகவோ எங்க
இன்பாக்ஸ் கதவினை தட்ட வேண்டும்!
இது கோரிக்கை! அம்புட்டுதான்!
Tuesday, August 26, 2008
என் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்

திடீருன்னு டூக்கா விட்டுட்டு போன நி.நல்ல அண்ணனை நினைச்சு நேத்து ஃபுல்லா ஒரே ஃபீலிங்க்ஸ் ஆபிஸ்ல வேலையே ஒடலை! ஒரே சோகப்பாட்டாவே போய்க்கிட்டிருந்துச்சு அதுல ஒண்ணு ஏற்கனவே பழசாகிடுச்சு! இப்ப இங்க ஒண்ணு!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Come blog with me before u go
Come blog with me before u go
உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்
இனி கூகுளும் உன்னை அழைக்கும்
உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்
இனி கூகுளும் உன்னை அழைக்கும்
Come blog with me before u go
Come blog with me before u go
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
ஓரு பிளாக் கொண்டு தமிழ்மணத்தில் இன்று
ஆயிரம் ஹிட்ஸ் கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் கமெண்ட்ஸ் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
மொக்கை முயற்சிகள் தோற்பது இல்லை
புது புதுபதிவில் நீ ஆடி அசைந்து வந்தாலும்
பின்னூட்டம் குறையவில்லை உன் பதிவில்
உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்
Come blog with me before u go
Come blog with me before u go
பிளாக் உள்ள மனிதன் ஓரவதாரம்
கும்மி கணக்கில் நூறவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவும் கொண்டாய்
விஞ்ஞானி மொக்கசாமியையும் புரிந்து கொண்டாய்
விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்
கும்மியில் கிடந்து நெடு தபசிருந்து
நீயே உன் நிலை கடந்தாய்
இப்போது எஸ்கேப்பூ ஆகிவிட்டாய்!
உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்
இனி கூகுளும் உன்னை அழைக்கும்
கும்மி நாயகனே....கும்மி நாயகனே
Come blog with me before u go
Come blog with me before u go!
டிஸ்கி :- இன்னுமாடா இந்த உலகம் நம்மள மொக்கை பதிவர்ன்னு நம்பாம இருக்கு!
Monday, August 25, 2008
வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்காவில் போராட்டம்

இந்நிலையில் சென்ற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அமெரிக்காவின் பல்வேறு பெருநகரங்களில் ஜே.கே.ரித்தீஷின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடக் கோரியும் தடைகள் உண்டாக்கிய கருங்காலிகளைத் தண்டிக்க கோரியும் போராட்டம் நட்த்தினர். அனைத்து பெருநகரங்களிலும் மாபெரும் பேரணியும் பேரணியின் முடிவில் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த போராட்டத்தின் காரணமாக பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய புகழ்பெற்ற ஆங்கில இயக்குனர் லீமான் "வீரத்தளபதி தமிழ் திரையுலகின் 'அசைக்க' முடியாத சக்தியாக 'வளர்ந்துகொண்டிருக்கிறார்'. அவர் வளர்ச்சியை அந்நிய சக்திகளால் தடுத்து நிறுத்த முடியாது" என்று கருத்து கூறினார். டிங்கர் கிச்சான் பேசுகையில் "இது
விழாவில் பேசிய கிஜய.டி.ராட்ரிகேஜர்
"இந்தூரு காப்பி கடை ஸ்டார் பக்ஸு
இருமல் வந்தா தடவிக்கோ விக்ஸு
இத்தனை நாளா அடிச்சது ஒலிம்பிக்ஸு
இனி அடிக்கும் ரித்தீஷோட கிலிம்பிக்ஸு" என்று மேடையில் தாளமிட்டு பாடி ரித்திஷுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். இதை நரி செய்தித் தொலைக்காட்சி ஸ்லோமோஷனில் போட்டுக்காட்டி டி.ஆர்.பியை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டது.
நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய சிங்கர் படோனா வீரத்தளபதியின் "நிலா நிலா ஓடி வா" பாடலைப் பாடி ஆடினார். வீரத்தளபதியின் புகழ் பாடும் பாடல்களின் கேசட் விற்பனை களைகட்டியது.
Thursday, August 21, 2008
இனிய இணைய தமிழ் பதிவர்களிடம் - உதவி வேண்டி...!
உங்களின் பாசத்துக்குரிய... - சரி வேணாம் விடுங்க!
திடீருன்னு ஒரு எண்ணம் தோன்றியது!
ஏன் நாம் இந்த பணியினை செய்யக்கூடாது என்று!
கடந்து வந்த பாதைகளில் நாம் கேட்ட பார்த்த விசயங்கள் தானே?
நம்மால் முடியாவிட்டாலும் கூட மேலும் பலரின் - வலைப்பதிவர்கள் - F1களால்
நாம் இந்த பணியினை சிறப்பாக முடிக்க முடியும் என்று ஒரு எண்ணம்!
தங்கள் எண்ண அடுக்குகளில் அவ்வப்போது வந்து நிற்கும் சொற்களினை கொண்டு மட்டும்
இந்த பணிக்காக உதவலாம்!
இந்த பணிக்கு உதவுவதன் மூலம் 1ம் பெரிய ஆதாயங்கள் இல்லாவிட்டாலும் கூட
பெரிய சாதனையாகவே இது காலா காலத்துக்கும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு!
உங்களுக்கும் கூட வரக்கூடும்!
நன்றி!
ஆஹா!!!
இதுவரைக்கும் மேட்டரை சொல்லலையா????
சரி இதுவரைக்கும் வந்த திரைப்பட பாடல்களில் - தமிழில் மட்டும்
பயன்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தபட்ட வார்த்தைகளினை
திரட்ட எண்ணியுள்ளோம் - இது ஒரு டீம் ஒர்க் அதாவது குழுமப்பணி!
ஸோ ஹெல்ப் பண்ணுங்க மக்கா! ஹெல்பு பண்ணுங்க!

நான் அறிந்த சொற்கள் இது (இதை நீட்டவேண்டியதோ அல்லது அப்படியே ஆறப்போடவேண்டியதோ இனி வரும் கால சந்ததியினரின் கீ போர்டுகளில்தான் உள்ளது!)
டோலாக்கு டோல் டப்பிம்மா!
உய்யலலோலோ
உம்மஹாசீயா
மெஹோ மெஹோ
ஹேய் ஜிங்கிலி
பல்லேலக்கா பல்லேலக்கா!
ரண்டக்கா ரண்டக்கா
சோலேயோ சோலேயோ
ஒசாக மொயா!
ஊ லலலா ஊஊ லலலா
குமுசுகு குமுசுகு குப்புச்சு!
ரிங்கோசெய்யோ ரிங்கோசெய்யோ மாட்டிச்செய்யோ!
டண்டண்டண்டர்ரா! டண்டணக்காடர்ரா!
டிஸ்கி:-
தமிழுக்காய் உழைத்து ஓடாய், மாடாய், மனிதனாய் மாறிப்போன எம் தமிழ்க்கவிகளுக்கு சமர்ப்பணம்!
Tuesday, August 19, 2008
காத்திருந்து...! காத்திருந்து...!
சோககீதம் பாடிக்கொண்டிருக்கிறது - (லைட்டா)
காத்திருத்தல் சுகம் தான் ஆனால் எத்தனை நாட்கள்/மாதங்களாகுமோ???
அட நான் ஒண்ணும் பெருசா எதிர்பார்த்து காத்திருக்கலைங்க!
நான் பாட்டுக்கு சிவனேன்னுத்தான் அடிச்சு புடிச்சு டெய்லி ஒரு போஸ்ட தட்டிக்கினு போயிக்கினிருந்தேன்!
திடீருன்னு சங்கத்துல கூப்பிட்டாங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ் சவுண்டு வுட்டு பின்வாங்கியாச்சு!
பட் ஆனா பாருங்க விதி வெளையாடிடிச்சு!
ஒருத்தரு காலையில எந்திரிச்சு காபி குடிச்சுட்டு எப்பவும் ஓளி & ஒளியில விளையாண்டுக்கிட்டிருப்பாரு! அவுரு சொன்ன வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத்தான் வந்தேன்!
தம்பி நீ சங்கத்துக்கு போ! அப்புறம் நீ எப்படியெல்லாம் ஃபீல் பண்ணுவேன்னு பாரு! அப்படின்னாரு!
சரி என்னாடா இது ரொம்ப அழுத்தமா சொல்றாரேன்னு திரும்ப திரும்ப கேட்ட கேள்விகள்ல சொன்னது
ஆண் சிங்கங்கள் பாதுகாப்பில நிறைய பெண் சிங்கங்கள் வந்து போற இடமாம்! (நிறைய Ad's பண்ணி வைச்சிருக்காங்களாம் இன்போசிஸ் விப்ரோ டிசிஎஸ் இப்படி பல ஜிகிடிங்க வாழுற இடங்களில்!)
ஸோ எதாவது ஒரு பெண் சிங்கமாவது உன்னோட அழகுல(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மயங்கினாலும் மயங்கலாம்ன்னு சொல்லிட்டுப்போயிட்டாருங்காஆஆ!
நமக்குத்தான் கிட்டதட்ட கொஞ்ச வருசமா ஒரு எதிர்பார்ப்பு இருக்குல்ல சரின்னு ஒத்துக்கிட்டேன்! ஆனா கடைசியில

இப்படி ஆகிப்போச்சு!
Monday, August 18, 2008
ஏமாற்றம்!
ஏமாத்துறவங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!
மனசுக்குள்ளயே சிரிச்சுக்க்கிட்டு இருப்பாங்க ஒரு சிலர் சப்தம் போட்டு ஊருக்கே மாதிரி ஹாஹாஹான்னெல்லாம் சிரிப்பாங்க!
கொஞ்சம் வித்தியாசமான டைப்பு ஆளுங்களும் இருக்காங்க அவுங்களை நீங்க என்னாதான் ஏமாத்தினாலும் சரி அதை பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க!
நல்ல மனுசங்க - மனசுங்க!
சரி இதெல்லாம் எப்படிடா ராசா உனக்கு தெரியும்ன்ன்னு கேட்கறீங்களா?
இது சம்பந்தமா ஒருத்தரு பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காருங்க அதை பார்த்துதான் நான் இவ்ளோ கத்துக்கிட்டேனாக்கும்! ஏதோ இருக்கற நேரத்த இப்படி ரொம்ப யூஸ்புல்லா பயன்படுத்திகளாமேன்னு ஒரு எண்ணம் வந்துடுச்சி!
சரி நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

டிஸ்கி:- எதாவது சொல்லலாம்ன்னு நினைச்சேன் - ஒண்ணுமில்ல!
Friday, August 15, 2008
PIT ஆகஸ்ட்! - விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே!




அவ்ளோதான்!
எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? (2ம் 1தானே!)
Thursday, August 14, 2008
பகிரங்க கடிதம் எழுதுபவர்களுக்கு - பகிரங்கமாய்...!
இனியும் வந்துக்கிட்டே இருக்கும் - நான் நம்புறேன்! -
யாரு வேணும்னாலும்,
யாருக்கு வேணும்னாலும்
பகிரங்க கடிதம் எழுதட்டும்!
தப்பு கிடையாது!
அதை பலபேரும் படிக்கறதாலயும் தப்பு கிடையாது !
ஏன்னா....!
அதுதான் பகிரங்க கடிதம் ஆச்சே! (பாயிண்ட்டு!)
ஆனா எல்லாருமே ஒரு விசயத்தை மறந்துட்டு கடுதாசி எழுதி தள்ளிக்கிட்டே இருக்காங்கப்பா!
கடுதாசியில
அனுப்புநர் அப்படின்னு எழுதி,
அனுப்புறவங்க பேர் & அட்ரஸ் இருக்கணும்!
பெறுநர் அப்படின்னு எழுதி,
இங்கன யாருக்கு எழுதுறீங்களோ அவுங்க அட்ரஸ் பேரு இருக்கணும்!
இதுதான் சரியான முறை!
இப்படி அட்ரஸ் இல்லாம அனுப்பினா யாருக்காவது மாறிப்போய்டாதா?
போஸ்டாபீஸ்ல வேலை பார்க்கிறவங்களும் பாவம்தானே!!!
ஹய்யோ! ஹய்யோ! இதெல்லாம் இஸ்கூல்ல மூணாம்ப்பு படிக்கிறப்பவ சொல்லிக்கொடுத்திடுவாங்களே....!
மறந்துட்டீங்களா????

குறிப்பு:- முடிஞ்சா இன்லேண்டு லெட்டருலயும் எழுதி அனுப்புங்க! ஏதோ நிறைய கடிதம் எழுதினா கொஞ்சம் கவர்ண்மெண்டுக்கும் ரொம்ப ஹெல்பூ பண்ணுன மாதிரியும் இருக்கும்ல!
Wednesday, August 13, 2008
100 கெட்ட வார்த்தைகள்!

ரொம்ப ஆர்வமா இருக்கீங்கன்னு புரியது சரி இப்ப பார்க்கலாம்...!
1. the
2. be
3. to
4. of
5. and
6. a
7. in
8. that
9. have
10. I
11. it
12. for
13. not
14. on
15. with
16. he
17. as
18. you
19. do
20. at
21. this
22. but
23. his
24. by
25. from
26. they
27. we
28. say
29. her
30. she
31. or
32. an
33. will
34. my
35. one
36. all
37. would
38. there
39. their
40. what
41. so
42. up
43. out
44. if
45. about
46. who
47. get
48. which
49. go
50. me
51. when
52. make
53. can
54. like
55. time
56. no
57. just
58. him
59. know
60. take
61. people
62. into
63. year
64. your
65. good
66. some
67. could
68. them
69. see
70. other
71. than
72. then
73. now
74. look
75. only
76. come
77. its
78. over
79. think
80. also
81. back
82. after
83. use
84. two
85. how
86. our
87. work
88. first
89. well
90. way
91. even
92. new
93. want
94. because
95. any
96. these
97. give
98. day
99. most
100. us
டிஸ்கி: அன்னைக்கும் இன்னிக்கும் என்னைக்குமே ஆங்கிலம் தானே நம்மளுக்கு பிடிக்காத கெட்ட வார்த்தை யாருப்பா அது? பதிவுல ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பத்தி பேசுறாங்கன்னு கமெண்டறது....????? இது ரொம்ப யூஸ்ஃபுல்லுதானே:)
Monday, August 11, 2008
மொக்கை Management! - பாடம் ஒண்ணு.!
அதாகப்பட்டது இந்த ஐடி கம்பெனியெல்லாம் வந்து பயபுள்ளைங்களை அள்ளிக்கிட்டு போய் ஏசியில குந்த வைச்சு,நேரா நேரத்துக்கு சோத்தை வாயில வைச்சு ஊட்டி விட்டு வேலை பாருங்கப்பான்னு சொன்ன காலத்திலேருந்து ஆரம்பிச்சிது இந்த மொக்கை ரொம்ப பிரபலமாக!
இப்ப நாம ஸ்டெப் பை ஸ்டெப்பா மொக்கை மேனேஜ்மெண்ட் பத்தி படிக்க போறோம் - இல்ல,இல்ல ச்சும்மா ஒரு ரவுண்ட் ரெப்ரஷ் பண்ணிக்கப்போறோம்!
திரும்ப, திரும்ப சொல்றேன் மொக்கை அப்படிங்கறது ரொம்ப சிம்பிளான விசயம்தாங்க!
பெரிய படிப்பு படிச்சவங்க அப்புறம் பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் மெத்தை சைசுக்கு புக் போடற அளவுக்கு இதை பத்தி எழுதிட்டாங்க! ஆனா அதையெல்லாம் படிச்சுட்டு மொக்கைபோட்டா டென்சன் ஆகிடுவீங்கன்னு அவுங்களுக்கு தெரியாது!
ஒரு உதாரணத்துக்கு, ஆயிரம்ந்தான் இருந்தாலும் அந்த ஆயிரத்தி1வது மொக்கை அவ்ளோ சூப்பரா இருக்கும்ம்னு சொன்னதை நம்பி அம்புட்டு மொக்கையையும் படிக்கிற மக்கள்கிட்ட கேட்டீங்கன்னா மொக்கைய பத்தி ரொம்ப நல்லாவே சொல்லுவாங்க!
ஆக்சுவலா இந்த மொக்கை அப்படிங்கற வார்த்தை ரொம்ப அதிகம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட சில சமயம் கடியாகிடும்! ஆமாங்க மொக்கை சில சமயம் கடி மாறுவேஷத்திலயும் வரும்!
எவ்ளோதான் கடிச்சாலும் கடைசியா வர்ற மொத்த பேருமே என்னா மாதிரி மொக்கை போடுறாண்டா இவன்னு ஆனந்த கண்ணீர் வடிக்க செய்து விடும் வாய்ப்புகள்தான் அதிகம்!
மொக்கை சில விஷயங்களை ரொம்ப கிளியரா சொல்றதுக்குத்தான் பெரும்பாலும் நாம பயன்படுத்துறோம்!
1.ஒரு வேலையும் இல்லாததால!
2.கடலை போட ஒரு ஃபிகரும் சிக்காத பாவியாக போனதால...!
3.ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும் கூட டேமேஜர்களை டென்ஷன் பண்றதுக்கொசரம்!
4.சில சமயம் மத்தவங்க என்னமா மொக்கை போடறாங்க நாமளும் டிரைப்பண்ணுவோம்ம்னு
ஒரு அல்ப ஆசையில!
5.வேலைகள் கொடுக்கும் டென்ஷனை குறைக்க
இப்படியாக பல இடர்பாடுகளினை தவிர்த்தும்,தந்தும் நம்மால் போடப்படும் மொக்கைகளுக்கும் ஒரு மனுசன் ரெஸ்பாண்ட் பண்ணி பதில் சொல்றான்னே அவனுக்கு நாம என்ன பண்ணனும்!
கிழக்கு பார்க்க நிப்பாட்டி வைச்சு அவங்க காலுல விழணும்ங்க!
எங்க நீங்க கிழக்கு பார்க்க நில்லுங்க பார்ப்போம்!

என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்கப்பு!
இனி இவையும் கூட வரக்கூடும்!(இண்ட்ரோ!)
the Scope of mokkai
the Quality of mokkai
the time of mokkai
&
the Risk of mokkai!
Saturday, August 9, 2008
காதல் சொல்ல வந்தேன்....!
கடைசியாக முடிவெடுத்துவிட்டேன்
காதல் வாழ்க்கையினை ஆரம்பிக்கவேண்டும்
ஆனாலும்
சில பயங்கள்
சில எண்ணங்கள்
எல்லாவற்றிற்கும் பதில் தெரிந்துக்கொண்டுதான்
காதலிக்கவேண்டுமென்றால் காதலை தவிர்த்த மற்றவைகளைதான் காதலிக்கவேண்டும்
என்ற இனிய இணைபிரியா நண்பர்களின் கருத்துகள் ஜெயித்தன!
மணி சரியாக 2.00 பஸ் வரும் நேரம்.
அவுங்களும் வந்து நின்னுக்கிட்டு இருந்தாங்க (மரியாதை! மரியாதை!)
நெருங்கி செல்கையில் மனதில் ஏனோ ஒரு குழப்பமும்க்கூட் புதியதாய் வந்துசேர்ந்துகொள்ள
பின் வைக்கும் கால்களை அதட்டி
முன் கொண்டு செல்கையில்...
என்ன....?
லேசான அதட்டலில் வந்த குரலில்,
யில்ல நான் பேரு உங்க ஆயில்யன்
கேட்டுட்டு நீங்க போகலாம்ன்னு
நான் வந்தேன்!
அவுட்!!!!!!!!!!!!!

இவள் என் அவள்!
எப்படியும் சொல்லிடுவோம்ல!
Friday, August 8, 2008
08.08.08 - சீனா ஒலிம்பிக் - இந்தியா ”ஒளி”ம்பிக்
08 வருடம்
08ஆம் மாதம்
08ஆம் நாளில்,
08 மணிக்கு,
08 நிமிடம்
08 விநாடிக்கு துவங்கியது ஒலிம்பிக் (பயங்கரமான செண்டிமெண்ட்! - 8 அவுங்களுக்கு ரொம்ப புடிச்ச நம்பராம்!)
கடந்த 20 ஆண்டுகளில் நான் கேள்விப்பட்ட பார்த்த ஒலிம்பிக் போட்டிகள் எனக்கு (எனக்கு மட்டுமல்ல!) பெரும் ஆர்வத்தினையும் மகிழ்ச்சியினையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருந்தது என்று சொன்னால் அது உண்மை! பெரும்பாலும் இரவுகளில் ஒளிபரப்பான போட்டிகளுக்காக கலர் டிவி வைத்திருந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நண்பர்கள் குழுமத்தோடு பார்த்தது நினைவில் நிற்கிறது!
கொஞ்சம் கொஞ்சமாக ஒலிம்பிக்கின் மீதான கவனம் குறைய. கிரிக்கெட் அல்லது அவ்வப்போது ஹாக்கி போன்ற போட்டிகளில் மட்டும் ஆர்வம் அதிகரிக்க காரணம் ஏதோ அதில் மட்டும் மிக திறமையான வீரர்களை இந்தியா பெற்றிருக்க்கிறது என்ற குருட்டு எண்ணமும் ஒரு காரணம்! நம் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் அபரிமிதமான ஊக்கமும் ஒத்துழைப்பும் கூட நம் மக்களிடையே ஒலிம்பிக் கவனத்தினை திசை திருப்பியும் இருக்ககூடும்!
இன்றும் கூட கிராமப்புறங்களில் எத்தனையோ வாலிபர்கள் மிகுந்த ஆர்வமுடன் கால்பந்து & கைப்பந்துகள் விளையாடுவதை நாம் பார்க்க நேரிடுகிறது! அரசு இது போன்ற வீரர்களினை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் வரும் காலத்தில் குறைந்த பட்சம் பஒலிம்பிக்ஸில் இந்தியா அங்கம் வகிக்கிறது என்ற சொல்லாவது நிலைக்கலாம்! சரி இதை விட்டு தள்ளுங்க!
நிறைய முயற்சிகள் எடுத்து கடும் உழைப்பில் சீனா ஒலிம்பிக்ஸ் நடைப்பெற சீனா அரசும் அந்நாட்டுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்!
புதிய புதிய முயற்சிகள்!
அசர வைக்கும் தொழில்நுட்பங்கள் அடங்கிய கட்டுமானங்கள்!
எதிர்பாராமல் இயற்கை எதுவும் சதி செய்யுமோ என்ற எதிர்பார்ப்பில் அதற்கும் தயாராகவே டெக்னிக்கல் டீம் தயாராக...! ( மேகங்களை விரட்டிப்புட்டு மழை வராம பண்ணுறாங்களாம்!)
கொள்ள பேரு கூடி இருக்காங்களாம் இதுமட்டுமில்லாமல் போட்டிகள் நடக்குமிடங்களிலெல்லாம், காலநிலை எப்படி இருக்கு? அதிகம் தூசு இருக்கா? மழை பெய்யுமா? வேற எதுனா ரிஸ்க் வருமான்னு சல்லடை போட அலசாத குறையா கண்டுபிடிக்கறதுக்கு புது புது கருவிகள் இன்ஸ்டால் பண்ணியிருக்காங்களாம்!
மொத்ததில சீனா ஐட்டமா? பக்கா லோக்கலு நல்லா இருக்காதுப்பான்னு! யாரும் சொல்லாத அளவுக்கு ஒலிம்பிக்ஸ் நடத்திகாட்டப்போறாங்களாம் !
பார்க்கத்தானே போறோம்!

இதுதான் சைனீஸ்ங்கீலிசு!

எல்லா பயபுள்ளைங்களும் இப்படித்தான் மொட்டையை போட்டுக்கிட்டு திரியறாங்களாம்!
டிஸ்கி 1 - 08.08.08 ஒலிம்பிக் ஆரம்பிக்கிற நேரத்துல சங்கத்துல டெம்ப்ரரி சிங்கமா இருந்துக்கிட்டு நம்ம பேரை பொறிக்காம போன நல்லா இருக்குமான்னு திங்கியதில் பொங்கிய எண்ணங்கள்!
டிஸ்கி 2 - மக்கள் தொகையில் மட்டும் இரண்டாம் இடத்திலிருந்தும் பெரிய நாடான இந்தியாவே! - ஓளிந்துக்கொள்!
Thursday, August 7, 2008
ரஜினி இல்லாத சீயான், மதராஸி ஜோக்ஸ்
எனக்கு ஒரு சந்தேகம்...
- நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.
- ஓவியக் கலைன்னா படம் வரையறது.
அப்ப தவக்களைன்னா?
[நடு ரோட்டில் கவுந்தடிச்சு படுத்துகிட்டு யோசிப்போர் சங்கம்]
இன்றைய தத்துவம்
1) செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
[கோவில்ல செருப்ப தொலைச்சுட்டு சைஸ் சரியா இருக்கிற செருப்புக்காக வெயிட் பண்ணும் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ]
2) என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,
அதால,
டிகிரி வாங்க முடியாது!!!
3) பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
யூனிவர்ஸிட்டில ஃபர்ஸ்டா வர வழிகள்
நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!
[மை பிரண்டு யூனிவர்ஸ்டி பர்ஸ்டா வந்த கதை தெரிந்த சங்கம்]
மொழி'பெயர்ப்பு
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!
நான் பார்க்க நான் பார்க்க நான்
உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
[துர்கா வுடன் சேட் பண்ணி சேதுவான சீயான் சங்கம்]
நாட்ட்ட்ட்டாமை....
பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!
[இப்படி பேசிப் பேசியே KRS மாதிரி அடுத்தவன் உசுர வாங்கும் சங்கம்]
டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.
திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).
செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
[ஒன்லி இங்கிலிபீசுன்னு பீலாவுடற சங்கம்]
மதராஸி ஜோக்ஸ்
1) கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
மதராஸி: ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.
2)ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
மதராஸி: எனக்கு தெரியாது சார்.
3) ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
மதராஸி: காந்திஜிக்கு நாலு வயசு சார்!
[சர்தார்ஜி சோக்கு சொன்னா மண்டைய ஆட்டி கேட்கும் சங்கம்]
கடிக்கும் கொத்ஸ்க்காக (கடிக்கும் கொசுக்காகன்னு படித்தால் சங்கம் அதற்கு பொறுப்பாகாது)
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,
"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!
டீச்சருக்காக:
ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
நண்பன் : கார் ஓட்டி பாரேன்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி (Ver 2008-Software Eng)
அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.
இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.
[நன்றி:: மடல் போட்டா பதிவா வரும்னு தெரியாதோர் சங்கம்]
பெண்கள்!
ஹார்ட் டிஸ்க் பெண்கள் - எல்லாத்தையும் அப்படியே ஞாபகத்தில வைச்சிருப்பாங்க எப்போதுமே!
ராம் - பெண்கள் :- நீங்கள் இருக்கும் வரைதான் உங்களை பற்றிய நினைப்பு, பிறகு எல்லாம் மறைஞ்சிடும்!
விண்டோஸ் பெண்கள்:- இந்த டைப்பு பெண்கள் செய்யும் எதுவும் சரியாகவே இருக்காது இருந்தாலும் இப்பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
ஸ்கீரின் ஸேவர் பெண்கள் - எதுவுமே செய்யாமல் இருந்தாலும் பார்க்கறதுக்கு அழகா இருப்பாங்க!
இண்டர் நெட் பெண்கள் :- ரொம்ப கஷ்டம் கரெக்ட் பண்றது
சர்வர் பெண்கள் :- எப்போதுமே பிசியானவர்கள்
மல்டி மீடியா பெண்கள்:- அழகற்றதையும் அழகாக காண்பிப்பவர்கள்
சிடி ரோம் பெண்கள் :- எப்போதுமே வேகத்திலும் மிக வேகம் கொண்டவர்கள்
இ-மெயில் பெண்கள் :- பத்து விஷயங்கள் சொன்னால் அதில் 8 விஷயங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்
வைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு!

நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க ஆனாலும் வருவாங்க,அவங்களாவே இன்ஸ்ட்டால் ஆகிப்பாங்க உங்க சொத்து எல்லாத்தையும் பயன்படுத்திப்பாங்க நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ண டிரைப்பண்ணினா நீங்களும் கொஞ்சம் சொத்துக்களை இழப்பீங்க! நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ணலைன்னா மொத்த சொத்தும்....
ஆஹயா ஆஹயா!
ஹோகையா
போங்கையா!
Tuesday, August 5, 2008
லவ்வு பண்ண பிளானிங்!

2.லொக்கேஷனை முதல்ல லொக்கேட் பண்ணனும், வீட்ல தூரமா இருக்கணும், ஆனாலும் டக்குன்னு போகற மாதிரியான ரூட்டா இருக்கணும்! ஒரே டைம்ல 2 அல்லது 3 பார்க்கணுமா அல்லது 1 போதுமான்னும் ஆரம்பத்திலேயே கிளியர் பண்ணிக்கணும்! சாய்ஸ் ரெடி பண்ணிக்கிட்டு டிரைப்பண்றது பெட்டர்ப்பா! - நான் சொல்றது முதல் கட்ட நடவடிக்கையில மட்டும்தான் ஒ.கே!
3. டீமை ரெடி பண்ணனும் இதுதான் "S"க்கு வழிவகுக்கும் (சூப்பராகவும் சரி,எஸ்ஸாகவும் சரி!). டீம்ல நல்ல ப்ரெண்டுகளா இருக்கணும் அடி விழும்ன்னு தெரிஞ்சா எஸ்கேப்பு ஆகுறவனுங்களா இருக்கக்கூடாது,எதிர்த்து நிக்கிற மாதிரியான ஆளுங்களா இருந்தாத்தான் நாமளால ஏரியாவை ரவுண்ட் வரமுடியும்! எக்ஸ்ட்ரா ஸ்ட்ரங்த்துக்கு லோக்கல் பார்ட்டீகளை கரெட் பண்ணிக்கணும்! டீக்கடை, பொட்டிக்கடை, சலூன் இது மாதிரி இடங்கள்ல ப்ரெண்ட்ஷிப் நல்லா டெவல்ப் பண்ணி வைச்சுக்கோணும்!
4.அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்! அவுங்கவுங்க பொருளாதாரத்துக்கு ஏத்தமாதிரி சைக்கிள்லேர்ந்து - கார் வரைக்கும் வைச்சுக்கலாம் (பட் கார் வைச்சுக்கிட்ட்டா நிறைய பிரச்சனைகள் இருக்குங்க! முக்கியமா கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க முடியாதுங்க!?) சைக்கிள்லன்னா பிரச்சனையே இல்ல பிகரை கிராஸ் பண்ணி போனாக்கூடாது திரும்ப யூ டர்ன் போட்டு வரலாம்! அப்புறம் பிகரு வர நேரமாச்சுன்னா சைக்கிளை தெருவில வைச்சுக்கிட்டு பெல் ரிப்பேர் பண்ணலாம் - ஸ்டாண்ட சரி பண்ணலாம்! இப்படி பல மெயிண்டனஸ் வேலைகளை பார்த்துடலாம் அந்த டைமிங்க்ல!
5.சரி இப்படியேவா போய்க்கிட்டிருக்கறது? அப்பப்பா நாம ப்ராக்ரஸ் செக் பண்ணி பார்க்கணும் நாம பிளான் பண்ண மாதிரிதான் போய்க்கிட்டிருக்கா இல்லை, பிளான் ஒரு மாதிரியும் ப்ராக்டிகலா வேற மாதிரியும் போய்க்கிட்டிருக்கான்னு செக் பண்ணனும்! இதுக்கு நம்ம டீம் ஆளுங்க அம்புட்டு பேரையும் கூப்பிட்டு வைச்சுக்கிட்டு, தம் டீயெல்லாம் அடிச்சுக்கிட்டே பேசினா நல்லா இருக்கும்! வேற மாதிரி மீட் எல்லாம் இந்த டைம்ல டிரைப்பண்ணக்கூடாது! டிரைப்பண்ணுனா...? அவ்ளோதான் சந்தி சிரிக்கும்!
6.எதாச்சும் சாதகமான புராகிரஸ் இருக்கான்னு செக் பண்ணியதுக்கப்புறம் சரி ஒ.கே கரெக்ட் ரூட்லதான் போய்க்கிட்டிருக்கோம்ன்னு கன்பார்ம் பண்ணிக்கணும் அதுக்கு அடுத்த ஸ்டெப்பு....!

அட...! அடுத்த ஸ்டெப்புன்னாலே முன்னேற்றம் தானே இன்னிக்கு இத்தோட நிப்பாட்டிக்குவோம்! கம்பெனி மூடற டைம் ஆகிடுச்சுல்ல!
(சப்ஜெக்டை வைச்சு இதுவரைக்கும் ஒரு பதிவு கூட போடலையேடா ஆயில்யா அப்படின்னு பட்ட குறையெல்லாம் இன்னியோட தீந்துச்சுப்பா!)