மனம் ஒரு குரங்கு என்பது உண்மையோ பொய்யோ ஆனா எங்க 'தாமரை இல்லத்து'[ஹாஸ்டல்] மரம் பூராவும் இலைகளால் இல்லைங்க குரங்குகளால் தான் சூழப் பட்டிருக்கும்.
ரெண்டு வருஷத்தை அரியர்ஸ் இல்லாமக் கூட ஒப்பேத்திடலாம்.ஆனா குரங்கு அனுபவம் இல்லாம ஒப்பேத்த முடியாது.
மணியடிச்சா எங்களுக்கு கேக்குதோ இல்லையோ அதுங்களுக்குக் கேட்டு 'டைனிங் ரூம்' பக்கம் டான்னு ஆஜராயிடுங்க.
ரூமுக்குள்ள வந்துடிச்சிங்கன்னா,கண்ணாடியப் பாக்கறதும்,
பௌடர் டப்பாவ கொட்டிக் கவுக்கிறதும்,பேஸ்ட் பூராவும் பிதுக்கி எடுப்பதும் ,துணி காயப் போடும் கம்பியில தொங்கிகிட்டு ஊஞ்சல் ஆடும் அழகும் சொல்லி மாளாது.
அதிலேயும் இந்த குட்டிக் குரங்குங்க அடிக்கிற லூட்டி அதிகம்.
இப்படித்தான் ஒருமுறை என் பிரண்டு எக்ஸாமுக்குப் போவதற்குமுன் டைனிங் ஹால் போனாள்.
சாப்பிட்டு வந்து ஹால் டிக்கெட் எடுக்க ரூமுக்குள்ளேயே போக முடியலை.நாலஞ்சு குரங்குங்க அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. உள்ளே நுழையவிடாம உர்ர்ர்ர்ர்ர்ர் னு முறைக்க இவ பயந்து போய் அலற ,வாட்ச் மேன் பெரிய தடியோடு வந்து விரட்டியடிச்சி ஹெல்ப் பண்ணார்.
இன்னொருமுறை ஒரு கேரளத்துப் 'பேன் குட்டி' ஒருத்தி
[ஞான் சரியாயிட்டுத்தான் பறஞ்ஞது.தலை முழுக்கப் பேன் வச்சிருந்தா பின்ன எப்படி விளிக்கின்னுது?]
தலைக்குக் குளித்துவிட்டு கூந்தலை விரித்துப் போட்டபடி கார்டனில் படித்துக் கொண்டிருக்க விடுவாங்களா நம்ம வானரப் படை.
வசமா அவள் தலையைத் தன் பக்கம் பிடித்துக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கி விட்டது.
அவள் பயத்தில் அலற கடுப்பான குரங்கார் குர்ர்ர்ர்ர்ர்ர்ர் என முறைக்க கத்தக் கூட முடியாமல் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தாள்.
'அப்பாடி இன்னையிலிருந்து பேன் தொல்லை விட்டது.
இவளால் ரூம்ல எல்லோருக்கும் 'கை வேலை'தான் என்று அவ ரூம்மேட்கள் கிண்டலடித்தாலும் மறுபடியும் வாட்ச்மேன் உதவி நாடினர்.
வாட்ச் மேனின் அதட்டலுக்கும்,தடிக்கும் கூட அசைந்து கொடுக்காமல் குரங்கார் 'கருமமே'கண்ணாயினாராக இருந்தார்.
அதற்குள் கேட்கீப்பர் வந்து ஒரு வாழைப் பழத்தை குரங்கார் முன்னால் காட்டியபடியே
சற்று தொலைவில் தூக்கி எறிய ,கொஞ்ச நேரம் யோசித்த குரங்கார்
தாவிப் போய் பழத்தை எடுப்பதற்குள்
'பெண் குட்டியை' [இப்பத்தான் பேனெல்லாம் போயிடுச்சே] மீட்டுவிட்டோம்.
அதுக்கப்புறம் அவ ரொம்ப நாள் பயம் தெளியாம தலையில 'கேப்' போடதான் இருந்தாள்.
அடுத்தவங்க மாட்டுன கதையைப் புட்டு வக்கிறீயே ஆச்சி உன் கதை என்னன்னு கேக்கறீங்களா? நான் மாட்டுனதையும் சொல்லித்தான் ஆகனும்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.காலேஜ் இல்லையென்பதால் 9 மணிக்குத்தான் நமக்கு திருப் பள்ளியெழுச்சி.
நல்லாத் தூங்கிக் கிட்டிருந்தவ காதுல ஏதோ கச முசான்னு சத்தம்.
'ஏய் கண்ணை தொறக்காதடி.'
கத்தாதடி.அப்படியே படுத்துக்கிட்டிருடி'
'பயப்படாதடி'
என்ன ஏதாவது கனவு காண்கிறோமா இல்லை யாராச்சும் பேசறாங்களான்னு கண்ணைத் திறந்தா, அம்மாடி என் போர்வைக்கு மேலே என் காலருகே கிட்டத்தட்ட வயத்துக்கு மேலே ஒரு குட்டிக் குரங்கு உட்கார்ந்திருந்தது.
மெதுவாகத் திரும்பினால் ரூம் கதவு சாத்தியே இருந்தது.பின்ன எப்படி?
ஜன்னலருகில் இருந்ததால் ஜன்னல் கம்பி வழியே இந்த குட்டி வந்திருக்கு.
மொத்தம் ஐந்து பேர் உள்ள ரூமில் ஒருத்தி குளிக்க பாத்ரூம் போனவ குரங்கப் பாத்துட்டு மறுபடியும் பாத்ரூமுக்கே போயிட்டாள்.
இன்னொருத்தி காலை நான்கு மணிக்கே எழுந்து சோடா புட்டியப் போட்டுக்கிட்டு புஸ்தகத்தை தலை கீழா பொரட்டும்.அப்பிடியும் அது ஜஸ்ட் பாஸ்தான் வாங்கும்.இப்பவும் அந்த மூதேவி ரூமில் நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது போல புஸ்தகத்தை உருட்டிக் கொண்டிருந்தது.
மிச்சமிருந்த ரெண்டு பேரும் கதவ திறக்கப் போனாலே குரங்கு குட்டி குர்ர்ர்ர் என்பதால் பயந்து உட்கார்ந்த இடத்தை விட்டு நகரலை.
எனக்கு பயத்தில் உதறல் எடுத்தாலும் கால் ஆடினால் கோபப் பட்டு ஏதாச்சும் செஞ்சிடுமோன்னு பயந்து தம் பிடித்தேன்.
இதற்குள் கு.கு [குட்டிக்குரங்கு] நான் முழிச்சிக்கிட்டதுக்காவே காத்திருந்தது போல
என்னைப் பார்த்து கிர்ர்கிர்ர்ர் என்றது.
'ஏய் நீயும் ஏதாவது செய் அப்பத்தான் அது போகும்' என ரூம் மேட்கள் சொல்ல
பாத்ரூமிலிருந்தவள்,'பேசு கண்மணி பேசு, உன் பேச்சைக் கேட்க ஓடி வந்திருக்கும் குட்டிக் குரங்கை ஏமாற்றாதே பெரிய குரங்கே, என்றாள்.
'வாடி வெளியே அப்புறம் சொல்றேன் பெரிய குரங்கு நீயா நானான்னு' நான் கத்த
கு.கு கடுப்பாகி முறைத்தது.
'ஏய் ஃப்ளீஸ் கத்தாதேடி அது பாஷையிலே பேசுடி.இல்ல கடுப்பாகுது பார்'
அடிப்பாவிகளா? நான் ஏதோ குரங்கு பாஷை கத்துக்கிட்டது மாதிரி அது பாஷையிலே பேசனுமாம்.
வேற வழி?
கு.கு குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என நானும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கு.கு க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்படியாக எங்கள் சம்பாஷனை கொஞ்ச நேரம் தொடர, ஒரு கட்டத்தில் கு.கு கையைத் தூக்கி தலையில் வைக்க,
சல்யூட் அடிக்கிறதுன்னு நெனைச்சி நானும் கையைத் தூக்கி தலைகிட்ட வச்சி சல்யூட் அடிக்க,
கிகீகிகீகிகீ....ன்னு சிரித்தபடியே ஜன்னல் வழியே ஓட,
அட ராமா இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே ஒரு வணக்கம் சொல்லியிருக்கலாமேன்னு தோனுச்சு.
பிறகு? பிறகென்ன?
கொஞ்ச நாள் 'குரங்கு குசலா' ரேஞ்சுக்கு நாமதான் ஹாட் டாபிக்.
டிஸ்கி: இப்படி குரங்கிடம் மாடியவர்களின் கதை நிறைய.
சமீபத்தில் என் தோழியின் பெண்ணொருத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த போது மரத்தருகே சண்டை போட்டுக் கொண்டிருந்த குரங்குகள் இவளைப் பிடுங்க,ஊசி போட்டுக் கொண்டதோடு மூணு மாதமே ஆன தன் குழந்தைக்கும் மதர் ஃபீட் நிறுத்தி விட்டாள்.
கிரிவல புகழ் அருணையில் அருண்கிரி நாதர் மண்டபம் அருகே கிளி கோபுரம்னு ஒன்னு உண்டு.சிலர் அதைப் பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொள்வர்.அப்படி ஒருவர் செய்து கொண்டிருந்த போது கோபுரத்தீன் மீதிருந்து குரங்கு உருட்டி விட்ட ஒரு கல் இவர் தலையில் விழுந்து கபால மோட்சம் அடைந்தார்.
19 comments:
குரங்கிலிருந்து பிறந்தவர்கள்னு நிரூபிச்சிட்டீங்க போங்க. அந்த குரங்கையெல்லாம் இப்படியா பயமுறுத்துரது.
அக்கா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ;))
அட்டகாசமாக எழுதியிருக்கிங்க...இப்ப தான் அந்த பழைய கண்மணி அக்காவை பார்த்த மாதிரி இருக்கு....கலக்குங்க ;)))))
கண்மணி எப்படி இருக்க?
சின்ன அம்மினி நாந்தானே பயந்தேன் அந்த கு.கு கிட்ட
டெல்பின் இது நிஜமாவே என் ஹாஸ்டல் அனுபவம்.கு.கு நான் அலறியதைப் பார்த்து ஓடிப் போச்சு.[இங்க கொஞ்சம் 'ஜிகிடி' வேலை பண்ணீ கு.கு.கிட்ட நான் பயந்த மாதிரி சொல்லிட்டேன்.]
கோபி அக்கா வா குரங்கா? [கொக்கா]கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குட்டிகுரங்கே
நான் நல்லாயிருக்கேன்.
அய் கோபி உனக்கும் குரங்கு பாஷை தெரியுமா
அய் கோபி உனக்கும் குரங்கு பாஷை தெரியுமா
குரங்கு கதை சூப்பர். அந்த படம் அதைவிட சூப்பர். என் மகள் பார்த்துட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்தில் வந்து நின்று 'Who is this'ன்னு கணிணியை கைக்காட்டி கேட்டா, நானும் ரொம்ப அக்கறையா 'கண்மணி ஆண்ட்டி பதிவு'ன்னு பதில் சொன்னேன். 'Why Kanmani aunty is wearing glass and she looks like monkeyன்னு சொல்றாப்பா. அப்பதான் புரிஞ்சது அவள் அந்த படத்தைப் பார்த்து கேட்டான்னு :-)))))
ஜெஸி குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்க்கிய்கிய்ய்ய் .....நான் என்ன இவ்ளோ அழகா?தேங்க்யூ
\\ஜெஸிலா said...
குரங்கு கதை சூப்பர். அந்த படம் அதைவிட சூப்பர். என் மகள் பார்த்துட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்தில் வந்து நின்று 'Who is this'ன்னு கணிணியை கைக்காட்டி கேட்டா, நானும் ரொம்ப அக்கறையா 'கண்மணி ஆண்ட்டி பதிவு'ன்னு பதில் சொன்னேன். 'Why Kanmani aunty is wearing glass and she looks like monkeyன்னு சொல்றாப்பா. அப்பதான் புரிஞ்சது அவள் அந்த படத்தைப் பார்த்து கேட்டான்னு :-)))))\\
;)))))))))))))))
(கண்மணி யக்கா....சாரிக்கா)
அதே போல எங்க மல்லிகையிலும் அவிங்க அட்ட காசம் தாங்காது! மல்லிகைல ஒரு ஜன்னல்லயும் கம்பி கிடையாது. நம்ம வானர படை எல்லாத்தையும் பிடுங்கிடுச்சு!
Why Kanmani aunty is wearing glass and she looks like monkeyன்னு சொல்றாப்பா. அப்பதான் புரிஞ்சது அவள் அந்த படத்தைப் பார்த்து கேட்டான்னு :-)))))
//
ரிப்பீட்டேய்ய்
கோபி கூல்...கூல்...ஒய் ஒர்ரே ஃபீலிங்க்ஸ் ஆப் இண்டியா?
கண்மணி, கு.குவின் அம்மா அசப்புல உங்களைப் போல இருக்குமோ??? (நல்லா கவனிச்சிப் படிங்க, கு.குவின் அம்மா போல நீங்களான்னு கேக்கலை :-)
குரங்கு சேட்டைகள் சுவாரஸ்யமாயிருந்தன, கண்மணி!!
அண்ணாமலையில் ரஜினியோடு பாம்பு
விளையாடிய காட்சி ஞாபகம் வந்தது
நீங்கள் 'உங்கள்தோழியோடு' விளையாடியது.
நானும் என் தோழியோடான அனுபவங்களை என் பதிவில் போடட்டா?
ச்சே இந்த ஜெஸிலா தன் பொண்ணு சொன்னமாதிரி குரங்கு மாதிரியிருக்கேன்னு சொல்றாங்க.
உஷா கு.கு வோட அம்மா உங்கள மாதிரியான்னு கேக்குறாங்க.
நானானி 'உங்க தோழின்னு' சொல்லுறாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment