அட்[த்]லாண்டிஸில் பாசக்காரகுடும்பம்--பாகம்-1
முன் கதை:
அட்[த்]லாண்டிஸ் மேலே மேலே போய்க் கொண்டிருந்தது.
'ஆடி வா...பாடி வா...ஆனந்தம் காணலாம் வா..'என பாட்டுச் சத்தம் கேட்க
ஓடம் அந்தத் திசையில் போகப் பார்த்தால்,
தேவலோகத்தில் இந்திரன் ரம்பா ,ஊர்வசியோடு குஜாலாக ஆடிக் கொண்டிருந்தார்.
சரி இங்கேயே இறங்கி சந்திப்பை நடத்துவோம் என முடிவு செய்ய ஓடம் ஒருவழியாக
தேவலோகத்தில் லேண்ட் ஆனது.[தொடரும்]
அட்[த்]லாண்டிஸில் பாசக்கார குடும்பம்-பாகம்--2
இனி:
தேவலோகத்தில் இறங்க ஒவ்வொருவரா வெளியே வந்தார்கள்.புவி ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் காரணத்தால் ஒவ்வொருவரும் லேசாக மிதந்தபடியே [பறந்தபடியே] வர
'கன பாடிகளான' அபி அப்பா ,ஷென்ஷி க்கு மட்டும் சோதனை.
பூமியில நடக்கும் போதே லேசா காத்தடிச்சா பறக்கற பார்ட்டிங்க.இங்க அவிங்களால எறங்கவே முடியலை.
எல்லோரும் பறந்தபடியே இறங்கிட்டாங்க இந்த ரெண்டு பேரைத் தவிர.
குசும்பன்,'பேசாமா இங்கனேயே இருந்து ஏதாச்சும் சமைச்சு வைங்க நாங்க ரம்பா ஊர்வசியெல்லாம் பாத்துட்டு வர்ரோம்'
'அப்பக்கூட உப்பில்லாத உப்புமாதான் கிண்டுவோம்' என ஷென்ஷி முறைக்க
'முடியாது நாங்க இல்லாம நீங்க மட்டும் ரம்பா,ஊர்வசி பாக்க போகக்கூடாது' என அபிஅப்பா அழ
மின்னலுக்கு ஒரு ஐடியா.அபிஅப்பாவையும் ஷென்ஷியையும் சேத்து ஒன்னாக் கட்டிவிட்டுட்டு
'அபி அப்பா ஆக்ஸிடெண்ட் ஆன லாரிய இன்னொரு லாரி இழுக்கற மாதிரி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இழுத்துக்கிட்டு வாங்க' என
ஒரு வழியா ஓகே ஆகி ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவி மாதிரி வந்தனர்.
மை பிரண்ட்,'ஆம ரம்பா,ஊர்வசி ன்னு சொல்றீங்களே ஏதாச்சும் ஷூட்டிங்கா அப்ப என் சித்தூ வருமா'என
'சித்தும் வராது பத்தும் வராது வாயைப் பொத்து.இவங்க தேவலோக டேன்சர்ஸ்.
நம்ப கோலிவுட் ஊர்வசியும் ரம்பாவும் இப்பவே முக்கா கிழம்
அதுகளை அக்கா ரோலுக்குக் கூட கூப்பிடுவது இல்லை
இங்க கூட்டீயார்ராங்களா' என இம்சை அரசி முறைத்தது.
'என்ன கோபி வாயே திறக்கலை'--காயத்ரி.
' கிடேசன் பார்க் போகாமயே இப்படி காத்துல மெதக்கிற மாதிரி இருக்கே பேசாம எங்க ஆபிஸ இங்கயே வச்சிருந்தா என்ன?--கோபி
அதற்குள் ஒரு காவலாளி வந்து அனைவரையும் உள்ளே அழைத்துப் போக
டான்ஸ் ஆடி முடிச்ச களைப்பில் ரம்பையும் ஊர்வசியும் வியர்வையைத் துடைத்தபடியே அமர்ந்திருக்க
மின்னல் ஓடிப் போய் 'மே ஐ ஹெல்ப் யூ '
குட்டி பிசாசு மின்னல் காலை மிதித்து,'இங்கல்லாம் துபாயை விட மோசமான தண்டனையாம் வேணுமா'
'யார் நீங்கல்லாம்?இங்கு ஏன் வந்தீர்கள்? கேட்ட தேவேந்திரன் வடிவேலு மாதிரி இருந்தார்.
'நாங்கல்லாம் பாசக்கார குடும்பம் ஒரு மீட்டிங் போட இங்கிட்டு வந்திருக்கோம்'
'யார்கிட்ட பர்மிஷன் வாங்கினீங்க.நாடுவிட்டு நாடு போனாவே பாஸ்போர்ட் விசா வேணும்.
நீங்க கிரகம் விட்டு கிரகம் வந்திருக்கீங்க.'
'ச்சும்மா மீட்டிங் போட்டுட்டு போயிடுவோம்.கண்மணி டீச்சர்தான் ஆர்கனைசர்.இதோ இவிங்கதான்'
'தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை 'டீச்சர்' தான்.
டீச்சருங்க தொல்லைக்குப் பயந்துதான் நான் படிக்காம எப்படியே தேவலோகத்துல கட்சி ஆரம்பிச்சு தலைவனாயிட்டேன்'
'இங்கெல்லாம் கட்சி இருக்கா .புதுசா ஆரம்பிச்சா ஜெயிக்க முடியுமா'
'நானே இந்த ரம்பா ஊர்வசிய கொ.ப.செ ஆக்கித்தான் மீட்டிங் போட்டு பேசி ஜெயிச்சேன்'
கோபி உடனே,'அபிஅப்பா நாமும் ஒரு கட்சி தொடங்குவோம்.நீங்க தலைவர் நான் பொதுச் செயலாளர்.மின்னல் பொருளாளர்.குட்டிக்கும்,குசும்பனுக்கும் வாரியம் குடுத்துடுவோம்.
'அப்ப நாங்க'என காயத்ரி அலைய
'அய்யனார் ஆண்கள் இலக்கிய அணிக்கும் காயத்ரி பெண்கள் இலக்கிய அணிக்கும் தலைவர்கள்'
'ஏன் கட்சி இருக்கனுமா வேனாமா?இவிங்க கவுஜயக் கேட்டே எல்லாம் எதிர் கட்சிக்குத் தாவிடுவாங்க 'என சென்ஷி பயம்காட்ட
'மை பிரண்ட் தான் மகளிர் அணி செயலாளர் இம்சையரசி துணைச் செயலாளர்'
'அப்ப கண்மணியக்கா?'என குட்டி பிசாசு கேக்க
'அவங்க லொல்லு தாங்கலைன்னு தானே புதுக்கட்சி இப்படி கேள்வி கேட்டா
உன்னைய பொறுப்புலேர்ந்து தூக்கிடுவோம்'....குசுகுசுப்பாக --- குசும்பன்.
இதற்குள் எப்படியோ பூலோகத்தில் இருக்கும் சிபிக்கு விஷயம் லீக்காகி ,
வாழ்த்துக்கள் னு மெசேஜ் அனுப்ப,
முத்துலட்சுமி,'இவரு என்னா தமிழ் மணத்துலதான் பதிவு போட்ட செகண்டே சுடச்சுட பின்னூட்டம் போட்றாருன்னா விண்வெளி சந்திப்பிலுமா' என வியக்க
'ஹலோ நாங்க இங்கன இருக்கமில்ல.என்ன சின்னப் புள்ளத்தனமாயிருக்கு.நீங்க பாட்டுக்குப் பேசுறீங்க டரியலாயிடுவீங்க 'என தேவேந்திரன் முறைத்தார்.
'இதெல்லாம் பேசி என்னை திசை திருப்பாதீங்க.அது சரி நீங்கெல்லாம் யாரு?முதல்ல உங்களைப் பத்திச் சொல்லுங்க'
குட்டி பிசாசு,'அதுக்குத்தான் டீச்சர்கிட்ட அப்பவே சொன்னேன் எங்க CV யெல்லாம் ரெடி பண்ணி ஃபார்வேர்டு பண்ணிடுங்கன்னு'
மை பிரண்ட்,'நோ பிராப்ளம் சார் ஐ வில் ஹெல்ப் யூ'என்றபடி ஒவ்வொருத்தரைப் பற்றிச் சொல்ல
அபிஅப்பா: இவரு இப்ப ஆல்ரவுண்டர்.'தல' மாதிரி.
காமெடி,ஆன்மிகம் ன்னு அப்பப்ப டிராக் மாத்துவாரு.படிக்காமயே பின்னூட்டம் போடுவதில் கில்லாடி.
ஷென்ஷி: இவரு அடிக்கடி அரசியல்வாதி மாதிரி காணமப் போயிடுவாரு
கோபி:அமைதியானவர்.ஆனா எல்லோருக்கும் எல்லாத்துக்கும் கம்பெனி குடுப்பார்
மின்னுது மின்னல்:ஆளு இருக்கிறத பார்த்து பயந்துடாதீங்க.கொழந்த மாதிரி
அய்யனார்:இவரு ப்ப்பெர்ர்ர்ரிய கவுஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.[அவருக்கு நெனப்பு]
குட்டி பிசாசு:சின்னபுள்ளை.ந்நல்ல புள்ளை.டீச்சர் அக்காகிட்ட பயம்+பாசம்
காயத்ரி:இவ கவிதாயினி...நாலு லைன் எழுதிட்டு நானூறு பின்னூட்டம் வாங்குவா ;))
முத்துலட்சுமி: இவங்க ஆல் இன் ஆல் அழகு ராணீ.வாயைத்திறந்தா மூடமாட்டாங்க :))
இம்சை அரசி:ஹீ...ஹீ..நல்ல அக்கா வாயே திறக்க மாட்டாங்க.திறந்துட்டா பாய்பிரண்டு கேப்பாங்க ;)
நான்:மலாய் மயிலு.மீ த பர்ஸ்ட்டு ன்னு கூவும் குயிலு....[நல்ல பொண்ணுங்க]=D
கண்மணி:இவிங்கதான் எங்க கொள்ளைக் கூட்டத் தலைவலி சாரி...டீச்சர்...அக்கா
பொறுமையாக் கேட்டுக் கொண்டிருந்த தேவேந்திரன் ஒட்டு மீசையைத் தடவியபடியே,
'ஆமா நீங்கெல்லாம் எங்கிருக்கீங்க எப்படி ஒன்னா சேர்ந்து எல்லோரையும் சாவடிக்கிறீங்க'
எல்லோரும் கோரஸாக,'தமிழ்மணத்துல இருந்து வாரோம்'
'தமிழ்மணமா அது எங்கிட்டு இருக்கு.அங்கன யாரு ஆட்சி செய்யறா'
'அங்கன எல்லோருமே நானே ராஜா நானே மந்திரி டைப்புங்கோ'
'ஓகோ மொத்தத்துல தமில் தமில் ன்னு சொல்லி கூட்டமா கும்மியடிக்கிற கூட்டமா?'
'அப்பாடா நாங்க கும்மி பார்ட்டின்னு இப்பவாச்சும் தெரிஞ்சிக்கிட்டீங்களே'
'என்ன மீட்டிங் போடப் போறீங்க'
'எங்க மீட்டிங்குக்கு டாபிக் கிடையாது.எதுனாலும் பேசுவோம்.
நல்லா சாப்பிடுவோம்.போயிடுவோம்'
'அப்பால'
'போய் ஆளுக்கொரு பதிவாப் போடுவோம்'
'ஒன்னுமே உருப்படியாப் பேசாம என்னன்னு போடுவீங்க'
'உருப்படியாப் போட்ட யாரும் படிக்க மாட்டாங்க.இங்கன வந்து உங்களை, ரம்பா,ஊர்வசியப் பாத்தத போட்டோவோடு போட்டமின்னா சும்மா தமிழ்மண்மே 'அதிருமில்ல''
தனித்தனியாக அபிஅப்பா,மின்னல்,கோபி,குட்டிபிசாசு,அய்யனார்,ஷென்ஷி என எல்லோரும் ரம்ஸ் ஊர்வசியோடு போஸ் குடுத்தனர்.
எப்பவும் போல தாய்க்குலம் எஸ்கேப்.
அடங்க மக்கா இதுக்கா இந்த அலம்பலு அரசியல்வாதிங்ககூட உங்க 'கும்மி'கூட்டத்துக்கிட்ட தோத்துடுவான் போல.
உடனே கெளம்புங்க.நம்மளுக்கே ஆப்பு வச்சிராதீங்கப்பூ'னு வடிவேலு சாரி தேவேந்திரன் விரட்டையடிக்க
எப்படியோ ஒருவழியாக பாசக்கார குடும்பம் அட்[த்]லாண்டிஸில் போய்
'விண்வெளி சந்திப்பை 'முடித்துக் கொண்டு திரும்பியது.
[முற்றும்]
32 comments:
கன பாடிகளான' அபி அப்பா ,ஷென்ஷி க்கு மட்டும் சோதனை.
ஹா ஹா ஹா
'சித்தும் வராது பத்தும் வராது வாயைப் பொத்து.
ஹா ஹா ஹா
அய்யனார்:இவரு ப்ப்பெர்ர்ர்ரிய கவுஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.[அவருக்கு நெனப்பு]
ஹா ஹா ஹா
ய்கோவ் சூப்பரு
ச்சும்மம அதிருதுல்ல டீச்சரின் காமடி பதிவை படிச்சா! இனி முடிவு பண்ணியாச்சு ஆபீஸ்ல படிக்க கூடாதுப்பா டீச்சர் பதிவ!:-))
சென்ஷியோட என்ன கட்டினா கூட பிரயோஜனமில்ல கூட நம்ம பீம்பாய்யும் சேர்த்து கட்டினாதான் சரி வரும்!
ஹப்பா பதிவ படிச்சு பின்னூட்டம் போடறேன்ன்னு எப்படில்லாம் நிரூபிக்க வேண்டி இருக்கு!
அடுத்து எங்க டீச்சர் கூட்டிட்டு போக போறீங்க?
வேற்று கெரக மிட்டிங்கு வாழ்த்துக்கள்
//'என்ன மீட்டிங் போடப் போறீங்க'
'எங்க மீட்டிங்குக்கு டாபிக் கிடையாது.எதுனாலும் பேசுவோம்.
நல்லா சாப்பிடுவோம்.போயிடுவோம்'
'அப்பால'
'போய் ஆளுக்கொரு பதிவாப் போடுவோம்'
'ஒன்னுமே உருப்படியாப் பேசாம என்னன்னு போடுவீங்க'
'உருப்படியாப் போட்ட யாரும் படிக்க மாட்டாங்க.இங்கன வந்து உங்களை, ரம்பா,ஊர்வசியப் பாத்தத போட்டோவோடு போட்டமின்னா சும்மா தமிழ்மண்மே 'அதிருமில்ல''//
ரம்பை, ஊர்வசி பாத்துட்டு இப்படியா உண்மைய உளறிட்டு வருவாங்க.
இங்கன வந்து டீச்சர் அடி பின்ன போறாங்கனு நினிக்கிறேன்
??????????//
ஊர்வசி ரம்பையை பாத்துகிட்டே இருந்தனா பின்னுட்டம் போட மறந்துட்டேன்..:)
அங்க எடூத்த போட்டோவை மறச்சிட்டீங்களே
விண்வெளியில் மாநாடுகண்ட தலைவலி...சாரி ...தலைவி சொர்ணாக்கா வாழ்க.
யக்கா...கலக்கல் பதிவு;-))
ஆமா...டெலிபின்ம்மாவும், தருமி ஐயாவும் என்ன ஆனாங்க..அதை சொல்லவேல்லியே
\\அபி அப்பா said...
அடுத்து எங்க டீச்சர் கூட்டிட்டு போக போறீங்க?\\
அதான் மேலோகம் வரைக்கும் வந்தாச்சியில்ல அப்புறம் எங்க அவ்வளவு தான்....நம்மளை காலி பண்ணிட்டாங்க...புரியுதா ;-)))
\முத்துலெட்சுமி said...
விண்வெளியில் மாநாடுகண்ட தலைவலி...சாரி ...தலைவி சொர்ணாக்கா வாழ்க. \\
சொர்ணாக்கா வாழ்க !! ;-)
\மை பிரண்ட்,'ஆம ரம்பா,ஊர்வசி ன்னு சொல்றீங்களே ஏதாச்சும் ஷூட்டிங்கா அப்ப என் சித்தூ வருமா'என\\
;-)))))))
சூப்பருக்கா..
\குட்டி பிசாசு:சின்னபுள்ளை.ந்நல்ல புள்ளை.டீச்சர் அக்காகிட்ட பயம்+பாசம்\\
அப்படியா....எல அக்காவை இன்னுமா ஏமத்திக்கிட்டு இருக்கா...பாவம் அவுங்க ;-))
\காயத்ரி:இவ கவிதாயினி...நாலு லைன் எழுதிட்டு நானூறு பின்னூட்டம் வாங்குவா ;))\\
மாசத்திற்கு எவ்வளவு செலவாகும் காயத்ரி ;-))
\\நான்:மலாய் மயிலு.மீ த பர்ஸ்ட்டு ன்னு கூவும் குயிலு....[நல்ல பொண்ணுங்க]=D\\
நம்பிட்டோம்.... ;-)))
குசும்பா மொத பின்னூட்டமா சரி சரி
கணக்குப் புள்ளையப் பாத்து கமிஷன் வாங்கிக்க
தேங்ஸ் டெல்பின் மேம்
அபி அப்பா நெலமையப் பாருங்க பயந்து போயி 4 பின்னூட்டம் போடுறார் ஆமா படிச்சீங்களா இல்லையா?
வாங்க ஜே.கே சீக்கிரமேஎங்க குடும்பத்துல சேந்துடுங்க
முத்துலட்சுமி நீங்க பேசினா தான் தலைவலி ஆனா நாம ஆளே தலைவலி தான்..ஹாஹா
மின்னலு உன்னைய மறுபடியும் பாக்கனுமின்னு ரம்பா அழுதுகிட்டிருக்காம்.
கோபி உன்னைய பாராட்டலேன்னு என்னை கலாய்க்கிறியா?
நிசமாலுமே நீ ரொம்ப நல்லவன் தம்பி யாரு எங்கே எப்போ எதுக்குக் கூப்பிட்டாலும் கம்பெனி குடுப்பதானே
[நீ வேற கம்பெனின்னு நெனச்சா நான் பொறுப்பில்லப்பா]
எலே மக்கா கும்மிக் கூட்டம் பண்ற லொல்லு லோலாயி தாங்கலைன்னு பரிகாசம் பண்றாங்கப்பூ.
ஒழுங்கா இனி அவிங்க அவிங்க படிச்ச பாடம் எழுதுங்க இல்லை கட் பேஸ்ட் போட்டமான்னு இருங்க.பிரியுதா?
சிரிச்சிப் புடாதீங்கப்பூ.
laughter is the best medicine ன்னு யாரோ வெளங்காதவங்க சொல்லிப்புட்டாங்க.
ஏக்கா. 4 போட்டோ புடிச்சு போட்டிருக்கலாமில்ல
//ரம்பா,ஊர்வசியப் பாத்தத போட்டோவோடு போட்டமின்னா சும்மா தமிழ்மண்மே 'அதிருமில்ல''//
போட்டோ இல்லாம...
போங்க டீச்சர் ஏமாத்திபுட்டீக...
//மின்னலு உன்னைய மறுபடியும் பாக்கனுமின்னு ரம்பா அழுதுகிட்டிருக்காம்.//
நான் ஏன் வரலைன்னு ஊர்வசிட்ட இருந்து திட்டி ஒரு மயிலு வந்திருக்கு..
பாருங்க .. இப்படி பண்ணிட்டீங்களே!
போங்க தருமி சார் நீங்களும் டெல்பினும் தான் பைலட்ஸ் ஆச்சே அதான் வி.ஓடத்திலேயே இருக்கச் சொல்லிட்டோம்.
ஜெ.கே & சி.அம்மினி அடுத்த வாட்டி படம் காட்டிப்புடுறோம்.அழுவாதீங்க
தாங்க்யூ டீச்சர்....
Post a Comment