Thursday, March 1, 2007

BE CAREFUL!!!

வானுச வையோரே வயசுல பெரியோரே வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். மக்கள்ஸ் எல்லாரும் நலமா. இந்த அப்பாவி அப்ரண்டீஸை அட்லாஸ் ஆக்கிப் பாத்துப்புடனும்னு சங்கத்து சிங்கங்கள் முடிவெடுத்துட்டாங்க. எப்ப, யார் சிக்குவாங்கன்னு ரெடியா ஆப்பை கைல வச்சுகிட்டு ஸ்பேர் ஆப்பை பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு திரியறவங்க இப்ப வகையா ஒருத்தன் சிக்கினா விடுவாய்ங்களா. வகைதொகை இல்லாம வரிஞ்சு கட்டப்போறாய்ங்க. இதுக்கெல்லாம் அசரவய்ங்களா நாம? 'நான் ஒரு முறை ஆப்பு வாங்கிட்டா அடுத்த ஆப்பை நானே மதிக்க மாட்டேன்'ன்னு வலியை வெளியக் காட்டாம ரியாக்ஷனை கண்ட்ரோல் பண்ணி சிரிச்சுட்டே இருக்கறதுதான் தலகிட்ட நாம எடுத்த ட்ரெயினிங்குக்கு மதிப்பு. அதே மாதிரி 'நான் ஒரு முறை மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் மொக்கையை நானே தாங்க மாட்டேன்'. அதனால Be Careful :))

நம்ம தல கிட்ட எடுத்த ட்ரெயினிங்ல முக்கியமான எபிசோட் ஓசி காஜி அடிக்கறது. ஓசில ஆப்பே வந்தாலும் அதுல சீரியல் செட் அலங்காரம் போட்டு அல்டாப்பா உக்கார சொல்லிக்கொடுத்திருக்காரு தல. காலைல பல் துலக்கறதுல இருந்து ராத்திரி இழுத்துப்போத்திக்க பெட்சீட்டு வரைக்கும் இப்படி ஓசியிலயே ஓட்டறவய்ங்க பல பேர் இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அவங்க கேட்கற விதம்தான், பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கற மாதிரி. நம்ம ப்ரெண்டு ஒருத்தர் இருக்காரு. எதையுமே அவருக்கு வேணும்னு கேட்கமாட்டாரு. "பாஸு, அந்த கடைல தேங்கா போளி நல்லாயிருக்கும் சாப்பிட்டிருக்கீங்களா"ன்னு தான் ஆரம்பிப்பார். இதுக்கப்புறம் நாம என்ன சொன்னாலும் எடுபடாது. நம்மள கையப்புடிச்சு கடைக்குக் கூட்டிட்டு போய் ஒரு போளியை வாங்கி அவர் சாப்பிட்டுட்டு கூட்டிட்டு வந்த கடனுக்கு நம்ம வாயில ஒரு போளியைத் திணிச்சு நம்ம பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து அவரே செட்டில் பண்ணிடுவாரு. நாம ஒன்னுமே செய்ய வேணாம். செய்யவும் முடியாது. அவர் அம்புட்டு திறமைசாலி.

அவரே காலேஜ் படிக்கற காலத்துல இன்னொரு காமெடி பண்ணியிருக்காரு. அப்பல்லாம் கைல அஞ்சு பத்து தான் இருக்கும். மாச மொத வாரத்துல வீட்டுக்கு போன் பண்ணாத்தான் பணம் வரும். அதுக்கப்புறம் ஒரு வாரத்துல போன் பண்ணவும் காசு இருக்காது. கடன் வாங்கி போன் பண்ணாலும் பணம் வராது. அப்படியான நேரத்துல நைட் ஸ்டடி போடறோம்னு நான், நம்ம ஓசி காஜி, அப்புறம் என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி மூனு பேரும் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பட்டறையைப் போட்டுட்டிருந்தோம். பட்டறைனா தெரியும்ல...அதாம்பா டாப்பு.

திடீர்னு நம்ம பாசுக்கு டீ குடிக்கற ஆசை வந்துடுச்சு. அவர் என்னைக்கு பாக்கெட்ல பணம் வச்சிருக்காரு? "பாசு, தூக்கம் வர மாதிரி இருக்கு. அக்கா கடைக்கு போய் டீ குடிச்சுட்டு வரலாமா?"ன்னு பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சார். சரி ஒரு டீ அடிச்சுட்டு வரலாம்னு கெளம்பியாச்சு. மூனு டீ ஆறு ரூபாய்ன்னு கணக்கு பண்ணி என்கிட்ட இருந்த நாலு ரூபாய்கூட பக்கத்து ரூம் பையன்ட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கிட்டு போனோம்.

கடைக்குப் போனதும் நம்ம பாசு "பாஸு, நான் டீ குடிக்க மாட்டேன். பால் தான் குடிப்பேன்"ன்னாரு. "இல்ல பாசு, ஆறு ரூபா தான் இருக்கு.மூனு டீ தான் வரும். பால் மூனு ரூபா. பத்தாது"ன்னோம்.

உடனே பாஸு கடைக்காரர் பக்கம் திரும்பி ஆர்டர் கொடுத்தாரு பாருங்க. "ஒரு பால். ஒரு டீ ஒன் பை டூ". அவருக்கு பாலாம். காசு குடுக்கற எங்களுக்கு ஒன் பை டூ டீயாம். டேய் பாவி ஓசில குடிக்கற எகத்தாளத்தைப் பாருன்னு அவனை மொறச்சா ரியாக்ஷனே காட்டாம இருக்கான். அதுமட்டுமில்ல மிச்சமிருக்கற ஒரு ரூபாய்க்கு மசால் வடை வாங்கி பாதியை அவன் எடுத்துகிட்டு மீதி பாதியை எங்க ரெண்டு பேருக்கும் தூக்கிப்போட்டான். என்னத்த சொல்றது. நாங்களும் அரை டம்ளர் டீயாவது குடிக்கவிட்டானேன்னு வந்துட்டோம்.

இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.

தில்லுமுல்லு படம் பார்த்திருக்கீகளா? அதுல தேங்காய் சீனிவாசன் அப்பரண்டீசுகளுக்கு இண்டர்வ்யூ வச்சு நொங்கெடுப்பாரு. அப்ப சுப்பிரமணிய பாரதின்னு ஒரு அப்பரண்டீசு வருவாரு. அந்த டயலாக் ஞாபகம் இருக்கா?

"ல-னாவும் வராது!! ள-னாவும் வராது! ழ-னாவும் வராது!! பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. நீர் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் துரோகம் செய்யறீர்ய்யா"ம்பார் தேங்காய்.

அதுக்கு அசராத அப்பரண்டீசு "ஸார்ட் நேம் சுப்பி சார்"ன்னு இளிக்கும்.

"சுப்பியாவது கப்பியாவது கெட்டவுட்"ன்னு சீறுவார் தேங்காய்.

இதுமாதிரி எதுவும் வராம கப்பித்தனமா காமெடி பண்ணிட்டிருந்தவனை அலங்காரம் பண்ணி அட்லாஸ் ஆக்கிவிட்டிருக்கீங்க. உங்க வாழ்த்துக்களோட ஆட்டத்தை ஆரம்பிக்கறேன். தொடர்ந்து ஆதரவு தாங்க :)

BE CAREFUL! (நான் எனக்கு சொன்னேன்)

29 comments:

Unknown said...

வா ராஜா வா.. உனக்குன்னு சைட்ல்ல வெளம்பர போர்ட் வச்சு அதுல்ல நேரம் எல்லாம் ஓடுற மாதிரி டகால்டி வேலை எல்லாம் காட்டி வச்சா.. நீ என்ன கொடுத்த டைமுக்கு முன்னாலே வந்து இருக்க?

சரி வந்தது வந்துட்ட.. சங்கத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தமா வை... அப்புறம் பாக்கெட்ல்ல எவ்வளவு இருக்கு... தோ பாருடா கிரெடிட் கார்ட்..

வாங்க மக்கா.. போய் அஞ்சப்பர்ல்ல நெஞ்சு எலும்பு சூப்ல்ல ஆரம்பிச்சு... அப்படியே தாஜ் பார்ல்ல டின்னர்.. கின்னர் எல்லாம் முடிஞ்சு.. சக்கம்மாக் கடையிலே வெத்தலையும் போட்டுட்டு வருவோம்..

அப்பூ கப்பி கார்ட்ல்ல போதுமான அளவு பணம் இருக்குல்ல.. ஆங் அப்புறம் உன்னியப் பார்த்த முப்பது நாளுக்கும் சேத்துச் சாப்பிட்டு வந்தாப்பல்லத் தான் தெரியுது.. இருந்தாலும் தமிழ் மரபுன்னு ஒண்ணு இருக்குல்ல .. உனக்கு ஏதாச்சும் வேணுமா? கூச்சப்படாமக் கேளுப்பா.. வாங்கிட்டு வர்றோம்

Unknown said...

தோடா எல்லாம் சொல்லிட்டு ஒனக்கு வெல்கம் சொல்ல மறந்துட்டேன் பாரு.. வெல்கம் கப்பி..

உங்கள் நண்பன்(சரா) said...

வா ராசா வா!

நம்ம சங்கத்துப் பலகைலையே இந்தமாச அட்லூசு யாருனு இன்னும் அறிவிப்புக் கூட வரலை அதுக்குள்ள ஆப்பு வாங்கறத்துக்கு என்ன ஒரு அவசரம்! நல்லா தெரியுது நீ அவ்வளவு சீக்கரத்தில் அசரமாட்டேனு, நாங்களும் விடமாட்டோம் தெரியும்ல ?

அன்புடன்...
சரவணன்.

Santhosh said...

வாப்பா வா,
ஊருல இருந்து வந்த உடனே சங்கத்துல ஆப்பு வெச்சிடாங்க போல.

தேவு,
தலை இப்ப தான் ஆன்சைட்ல இருந்து வந்து இருக்காப்புல என்ன பாக்கெட்டுல பணம் எல்லாம் தேடிகிட்டு பொட்டியை பாரு foriegn credit card ஆ வெச்சி இருப்பாரு டாலருல என்ஜாய் பண்ணுங்கப்பா என்ன நீங்க சங்கம் ஒண்ணும் சரி யில்ல போங்கப்பூ..

அப்புறம் Quota 30 கமெண்டு நீ என்ன வெல்கம் சொல்றேன் கமெண்டு போடுறேன்னு 2 கமெண்டு விட்டே. சவுண்டை கம்மி பண்ணுங்கப்பா.. :))

கைப்புள்ள said...

வாங்க கவிஞ்சரே,
இந்தியா உங்களை இருகரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது. Cómo eres? Te tienen comenzó a desplumar los tornillos en oficina? பீ கேர்ஃபுல் வழக்கம் போல கப்பி டச்சோட சூப்பரப்பு.

சரி உங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாததை நாங்க சொல்றோம் கேட்டுக்கிடுங்க.
மார்ச் மாத அட்லாஸ் வாலிபர் பயோடேட்டா
பெயர் : கப்பி பய
நண்பர்கள் அழைப்பது: ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பி நிலவன்
அடையாளம் : ஆர்க்குட்டிலும் அடக்கமான பையன்
தொழில்: ஜாவாவில் கவிதைகள் புனைவது
உப தொழில்: ஸ்பேனிஷ் சோர்ஸ் கோடைத் தமிழில் மொழி பெயர்ப்பது
நீண்ட நாள் சாதனை : ஓராண்டாக உருகுவேயில் உருக்கமாக ஆணி புடுங்கியது
சமீபத்திய சாதனை : காதலர் தினத்தன்று காஞ்சிபுரத்தில் இருந்தது
பிடித்த கேள்வி : யார் அந்த டினா?
பிடித்தும் பிடிக்காத கேள்வி : இந்தியாவின் தேசியப் பறவை பெங்குயினா?

படிக்கிற மக்கள்ஸ்களா? உங்க விருப்பம் போல அட்லாஸோட பயோடேட்டாவை அப்டேட் பண்ணுங்கப்பு.

வெட்டிப்பயல் said...

ஜாவா பாவலர் கப்பி நிலவா...
வந்துட்டியா??? ரொம்ப சந்தோஷம்...

உன் பதிவுக்கு அருமையா இருக்குனு சொல்லி சொல்லி போர் அடிச்சி போச்சி... இருந்தாலும் மறுபடியும் சொல்றேன். அருமையா இருக்கு...

இருந்தாலும் 15 நாள் காதலர் தினம் கொண்டாடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்...

இராம்/Raam said...

வாலே வாலே கப்பி மக்கா, ஒனக்காக எம்புட்டு பேருக காத்துக்கிட்டு கிடக்கோம், இந்த மாசம் புல்லா பின்னி பெடல் எடுக்கணும் ஆமா சொல்லிட்டேன்...

போஸ்ட் சூப்பரப்பு......... :)

இலவசக்கொத்தனார் said...

வாடே, வந்து பொளந்து கட்டிறணும், என்னா?!!

தெனாலி said...

போட்டுத் தாக்குங்க!
:-) welcome!

கதிர் said...

வாங்க ஜாவா புரவலரே!

கதிர் said...

//என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி //

இந்த மாதிரி ஒரு பிராணிய நான் கேள்விப்பட்டதே இல்லையே.

Anonymous said...

வாங்க வாங்க _/\_

Syam said...

வாங்க கப்பி ஆரம்பமே அமர்களமா இருக்கு....எதுக்கும் துனிஞ்ச்சு தான் வந்து இருப்பீங்க போல....சபாஷ் & வாழ்த்துக்கள் :-)

Syam said...

//போய் அஞ்சப்பர்ல்ல நெஞ்சு எலும்பு சூப்ல்ல ஆரம்பிச்சு... அப்படியே தாஜ் பார்ல்ல டின்னர்.. கின்னர் எல்லாம் முடிஞ்சு.. சக்கம்மாக் கடையிலே வெத்தலையும் போட்டுட்டு வருவோம்..
//

ரெடி ரெடி....ஆனா இது எல்லாம் முடிச்சிட்டு வரும் போது...கப்பி கார்டுல காசு மிச்சம் ஏதாவது இருந்தா...அவருக்கு ஒரு பீடா வாங்கி குடுத்துடனும்...எவ்வளவு நேரம் தான் நம்ம சாப்பிடுறது வேடிக்கை பார்த்திட்டு இருப்பார் :-)

இளங்கோ சிதம்பரம் said...

கப்பி கலக்குறீங்க...
ஒரு குறிப்பு: வாரும் சபை(வை)யோரே..னு தானே இருக்கனும்? வானுச வையோரே இல்லையே?

நாகை சிவா said...

வாய்யா வா

சரியான நேரத்தில் தானய்யா வந்து இருக்க.......

டாலர் எல்லாம் எங்குட்டு வச்சு இருக்கு. களவாணி பய ஊருய்யா இது. அதுனால அம்புட்டு டாலரையும் நம்ம பாண்டிக்கிட்டு கொடு, பத்திரம் வச்சுப்பார். தேவைப்படும் போது கேளு, பாத்து எதாச்சும் செய்றோம்.

டாலர்னு சொன்னதுக்காக முருகன் டாலரா, ஐயப்பன் டாலரானு லொள்ளு பேசக் கூடாது. யு.எஸ். டாலர் தான் புரியுதா!

நாகை சிவா said...

//எவ்வளவு நேரம் தான் நம்ம சாப்பிடுறது வேடிக்கை பார்த்திட்டு இருப்பார் :-) //

அவன் நல்லவன், நாம எவ்வளவு சாப்பிடாலும் வாங்கி தருவான், பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பாப்பான். கப்பி சரி தானே......

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்கப்பூ கப்பி !!
அட உங்க வீக்னெஸை இப்படி தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லுபுட்டீயளே !! இனி அவ்ளோதான் !! சரி சரி சிவா சொன்ன மாதிரி பண்ணிடுங்க சரியா ??;))))))))))))))

கவிதா | Kavitha said...

//இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.//

:)) தல அண்டா மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு சிரிச்சி சிரிச்சி ஹைய்யோ.. அது எப்படிங்க.. சங்கத்துல எல்லாரும் இப்படியே இருக்கீங்க...?!!

Unknown said...

அம்புட்டு பயபுள்ளையும் ஓட்டுன ஓட்டுல்ல கப்பி ஓட்டைப் பிரிச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டானா?

ஒரே போஸ்ட்ல்லயே ஓட வச்சிட்டீங்களேப்பா..

பி.கு. வேணும்ன்னாப் பாருங்க கப்பி திரும்பி வந்து ஆணி புடுங்குனேன் கோணி வித்தேன் அதான் இந்தப் பக்கம் வர முடியல்லன்னு கதைச் சொல்லுவான் பாருங்களேன்..

கப்பி | Kappi said...

//வேணும்ன்னாப் பாருங்க கப்பி திரும்பி வந்து ஆணி புடுங்குனேன் கோணி வித்தேன் அதான் இந்தப் பக்கம் வர முடியல்லன்னு கதைச் சொல்லுவான் பாருங்களேன்..
//

ஹி ஹி அதே கதை தான் தேவ் அண்ணாத்தே...சொன்னா நம்பனும் :))))


//நீ என்ன கொடுத்த டைமுக்கு முன்னாலே வந்து இருக்க?
//
ஒரு மணி நேரம் லேட்டா வந்தேன்...-ல ஓடிட்டு இருந்துச்சு :)

கிரெடிட் கார்டா? என்னை நம்பி எங்க வீட்டு பால் கார்ட் ரேஷன் கார்ட் கூட கொடுக்க மாட்டாங்க..கிரெடிட் கார்டாம் :))))

வெல்கம்க்கு டாங்க்ஸ்ண்ணா


சரா

//ஆப்பு வாங்கறத்துக்கு என்ன ஒரு அவசரம்! //

வாங்கறதுன்னு ஆயாச்சு...என்ன சொன்னாலும் கேட்கப்போறதில்ல..அப்புறம் என்ன? :))

சந்தோஷ்

/ஊருல இருந்து வந்த உடனே சங்கத்துல ஆப்பு வெச்சிடாங்க போல.
//

அம்புட்டு பாசம் :))

பாரின் கிரெடிட் கார்ட்டா? கொரியர்ல நீங்க அனுப்பிவச்சா தான் உண்டு :))

கப்பி | Kappi said...

//Cómo eres? Te tienen comenzó a desplumar los tornillos en oficina?//

muy bien thala..y vos?
Si...mas los tornillos :(

பயோடேட்டாவெல்லாம் படு பயங்கரமா இருக்கே? இதே பயோடேட்டாவை உனக்கு திருப்பிவிட எவ்வளவு நேரமாகும்னு யோசிச்சுப் பாரு தல ;))

கப்பி | Kappi said...

//ஜாவா பாவலர் கப்பி நிலவா...
வந்துட்டியா??? ரொம்ப சந்தோஷம்//

வெட்டி

வந்தாச்சு வந்தாச்சு!! வாழ்த்துக்களுக்கு நன்றி வெட்டி!! :)

//இருந்தாலும் 15 நாள் காதலர் தினம் கொண்டாடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்...
//
ஆமா ஓவர் தான்..யார் கொண்டாடினாங்க? :))

இராம்சாம்
// இந்த மாசம் புல்லா பின்னி பெடல் எடுக்கணும் ஆமா சொல்லிட்டேன்...
//
தலைமுடியை பின்னுவாங்க..கூடையெல்லாம் பின்னுவாங்க...மாசத்தை எப்படிய்ய பின்றது??? அதுல எங்கயிருந்து எப்படி பெடல் எடுக்கறது? எனக்கு ஒன்னுமே தெரியலயே :((

//போஸ்ட் சூப்பரப்பு......... :) //

டாங்கிஸ் இராயல் :)

கப்பி | Kappi said...

//வாடே, வந்து பொளந்து கட்டிறணும், என்னா?!!
//

கொத்ஸ்
உங்க ஆசியோட செஞ்சுரலாம்ண்ணா... :))

தெனாலி
//போட்டுத் தாக்குங்க!
//

தாக்கிரலாம் தெனாலி :)
போட்டுத் தாக்குறதுன்னெல்லாம் சொல்றீங்க..இப்ப பயமெல்லாம் போயிடுச்சா? ஜெயராம் நல்ல டாக்டர் தான் :))

கப்பி | Kappi said...

//வாங்க ஜாவா புரவலரே! //

வந்துட்டேன் தம்பியண்ணன்

//
இந்த மாதிரி ஒரு பிராணிய நான் கேள்விப்பட்டதே இல்லையே.
//

கண்ணாடி பாருங்க தெரியும் :P

பலமான வரவேற்புக்கு நன்றி உண்மை :)

கப்பி | Kappi said...

//எதுக்கும் துனிஞ்ச்சு தான் வந்து இருப்பீங்க போல....சபாஷ் & வாழ்த்துக்கள் :-)
//

எல்லாம் தல ட்ரெயினிங்க் தான் :))

வாழ்த்துக்களுக்கு நன்றி நாட்டாமை :)

//கப்பி கார்டுல காசு மிச்சம் ஏதாவது இருந்தா...அவருக்கு ஒரு பீடா வாங்கி குடுத்துடனும்...எவ்வளவு நேரம் தான் நம்ம சாப்பிடுறது வேடிக்கை பார்த்திட்டு இருப்பார்//

உங்களுக்காவது என் ஞாபகம் வந்துச்சே...நல்லாயிருப்பீங்க :))

//கப்பி கலக்குறீங்க...
ஒரு குறிப்பு: வாரும் சபை(வை)யோரே..னு தானே இருக்கனும்? வானுச வையோரே இல்லையே?
//
நன்றி இளங்கோ

அந்த 'வானுச வையோரே' மட்டும் நானா எழுதினதில்ல..மண்டபத்துல எழுதி வாங்கி வந்தது...அதனால எதுனாலும் என்னைக் கேட்காதீங்க..தலய கேட்டுக்கோங்க ;))

கப்பி | Kappi said...

புலி

// பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பாப்பான். கப்பி சரி தானே......
//

இல்ல :))

//முருகன் டாலரா, ஐயப்பன் டாலரானு லொள்ளு பேசக் கூடாது.யு.எஸ். டாலர் தான் புரியுதா!
//

யு.எஸ்.னா? அது எந்த ஊரு சாமி? :P

கப்பி | Kappi said...

//வாங்கப்பூ கப்பி !!
அட உங்க வீக்னெஸை இப்படி தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லுபுட்டீயளே !! இனி அவ்ளோதான் !! சரி சரி சிவா சொன்ன மாதிரி பண்ணிடுங்க சரியா ??;)))))))))))))) //

வாங்க ஜொள்ஸ்ண்ணா

நம்ம வீக்னெஸ் ஊருக்கே தெரிஞ்சதுதானேங்ண்ணா :)))

சிவா சொன்னா மாதிரி பண்ணனும்னா நீங்கதேன் எனக்கு கடன் கொடுக்கோனும் :))

கப்பி | Kappi said...

கவிதா

வாங்க வாங்க :)

//சங்கத்துல எல்லாரும் இப்படியே இருக்கீங்க...?!! //

மாத்தி சொல்லிட்டீங்க...இப்படி இருக்கவங்க எல்லாம் சேர்ந்துதான் சங்கம் வச்சிருக்கு :))