Monday, March 19, 2007

இரு துருவம் - 3

பாகம் - 2

நண்பர்களே, இவ்வளவு லேட்டா இந்த பாகத்தை போடறதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்... ஆணி ரொம்ப அதிகம்.

இனி கதைக்கு போகலாம்...

.......................................................

ஆடிட்டோரியத்திற்குள் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான் சரவணன். ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு வெளியே வந்தான். அங்கே வாசலில் அருமையாக இடப்பட்டிருந்த கோலத்தை பார்த்து ஆச்சரியமானான். அதன் அருகே இருந்தவர்களிடம் சரண்யாவை பற்றி விசாரித்தான். அவள் கோலம் போட்டு கை, கால் எல்லாம் கலரானதால் ஹாஸ்டலுக்கு சென்றிருக்கிறாள் என தெரிய வந்தது.

சரவணனும் மாணவர் விடுதிக்கு வேகமாக சென்று குளித்து ஃப்ரெஷாக வந்து சேர்ந்தான். அவன் வந்து சிறிது நேரத்திலே சீப் கெஸ்ட் வந்து சேர்ந்தார். ஒரு வழியாக விழா நல்ல படியாக முடிந்து சீப் கெஸ்டை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வரும் போது வாசலில் கோலத்தை பார்த்தவுடன் தான் அவனுக்கு சரண்யா ஞாபகம் வந்தது.

அவளை தேடிய பிறகு தான் அவனுக்கு முதலாமாண்டு மாணவர்கள் டிப்பார்ட்மெண்ட் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவில்லை என்ற ஞாபகமே வந்தது. சரி போன் செய்து சொல்லிவிடலாம் என்று அருகிலிருக்கும் ஒரு ரூபாய் பூத்திலிருந்து லேடிஸ் ஹாஸ்டலுக்கு போன் செய்தான்.

போனை எடுத்த மாணவியிடம்

"ஹோலோ! ஃபர்ஸ்ட் இயர் சரண்யா இருக்காங்களா?"

"நீங்க யார் பேசறது?"

"நான் அவுங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி சரவணன் பேசறேன். கொஞ்சம் கூப்பிட முடியுமா?"

"டேய் சரவணா! நான் தான் வித்யா பேசறேன். எதுக்குடா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கு ரூட்விடற?"

வித்யா சரவணின் க்ளாஸ் மேட்...

"ஏய் லூசு... நீதானா? ரூட்டும் இல்ல ஒண்ணும் இல்லை. சும்மா தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும். ஏன்கிட்ட சொல்லு அப்பதான் கூப்பிடவேன்"

"முதல்ல கூப்பிடு அப்பறம் சொல்றேன். சீக்கிரம் கால் கட்டாயிடும். இன்னும் 120 செகண்ட்ஸ் தான் இருக்கு. என்கிட்ட வேற காயின் இல்லை"

"சரி இரு கூப்பிடறேன்" சொல்லிவிட்டு
"ஃபர்ஸ்ட் இயர் சரண்யா... போன்" என்று சத்தமாக கத்தினாள். உடனே முதல் மாடியில் "சரண்யா போன்... சரண்யா போன்" என்று சத்தம் வந்தது.

"டேய் கூப்பிட்டுட்டேன். இப்ப சொல்லு"

"ஒண்ணும் இல்ல. இன்னைக்கு டிப்பார்ட்மெண்ட் ஃபங்க்ஷனுக்கு ஹெல்ப் பண்ணா. அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"டேய். ஏன்டா நாங்களும் தான் வேலை செஞ்சோம் எங்களுக்கு இப்படி போன் பண்ணி சொன்னியா என்ன?"

"லூசா நீ... நம்ம டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு நீ பண்ண. அவளுக்கு என்ன டிப்பார்ட்மெண்ட் எல்லாம் இருக்கு. சரி நீ முதல்ல அவள்ட குடு"

சரியான நேரத்தில் வந்து நின்றாள் சரண்யா.

அவளிடம் போனை கொடுத்துவிட்டு "பேசி முடிச்சிட்டு செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நம்பர் 207க்கு வா" சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் வித்யா.

"ஹலோ" பயம் நிறைந்த குரளில் பேசினாள் சரண்யா.

"ஹலோ நான் சரவணன் பேசறேன்"

"எந்த சரவணன்? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே"

"ஹலோ நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி"

"ஓ!!! சாரி சார்... சொல்லுங்க"

"இந்த சார் மோர் எல்லாம் செகண்ட் இயர் பசங்களோட வெச்சிக்கோ! கோலம் ரொம்ப நல்லா இருந்துச்சி"

"தேங்க்ஸ்"

"அது நான் தான் சொல்லனும். தேங்க்ஸ். சரி அதுக்குத்தான் போன் பண்ணேன். பை" சொல்லிவிட்டு போனை வைத்தான் சரவணன்.

அடுத்த நாள் காலை இண்டர்வெலில் காண்டினில் நண்பர்களுடன் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தான் சரவணன்.

அவனை நோக்கி வந்தாள் சரண்யா. "சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" அவள் சொன்னதை கேட்டதும் அவன் நண்பர்கள் அனைவரும் சரவணனை ஒரு மாதிரி பார்த்தனர். அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

"இருங்கடா வரேன்" சொல்லிவிட்டு கேண்டினை விட்டு வெளியே வந்தான் சரவணன்.

"நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல குடும்பத்து பொண்ணு. இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரிஞ்சா எங்க வீட்ல என்னை கொன்னு போட்டுடுவாங்க. ப்ளீஸ் இனிமே என்கிட்ட பேசாதீங்க" சொல்லிவிட்டு வேகமாக க்ளாஸ் ரூமை நோக்கி நடந்தாள் சரண்யா...

அவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்...

(தொடரும்...)

20 comments:

வெட்டிப்பயல் said...

மக்களே! நீங்க யாரும் படிக்கலைனா அடுத்த பகுதியிலே கதையை முடித்து விடுகிறேன்...

பிடித்திருந்தால் சொல்லவும்...

கோபிநாத் said...

:)))))))))))

Anonymous said...

//
அடுத்த பகுதியிலே கதையை முடித்து விடுகிறேன்
//

enthukku ? "இரு துருவம்" chala bagaundhi.

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

:))))))))))) //

எலேய்,
நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்... உனக்கு சிரிப்பு கேக்குதா?? சிரிப்பு :-)

Anonymous said...

E Katha Baagaundhi Vetti :) Continue Chestanu..

Nayagan.

P.S : En Telugu Correct-a?

ஜி said...

என்ன வெட்டி... அடுத்த பகுதில முடிச்சிடுறீங்களா?? ஏன் இந்த கொலவெறி??

யூ கேரி ஆன்.... நாங்க படிக்கிறோம்...

Syam said...

கதை நல்லா போகுது...ஆனா இந்த எபிஸோட் இவ்வளோ சின்னதா முடிச்சுட்டீங்களே...

நாகை சிவா said...

//எலேய்,
நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்... உனக்கு சிரிப்பு கேக்குதா?? சிரிப்பு :-) //

யோவ் சங்கத்தில் வந்து சீரியஸா பேசின அப்படி தான், கோபப்படாத, தொடர்ந்து எழுது....

நாகை சிவா said...

//அவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்...//

இப்படி தான்ய்யா வந்து குழப்பிட்டு போறாளுக....

பசங்க இத வச்சே ஒரு பில்டப் பண்ணி, நம்மள தேவதாஸ் ஆக்காம விட மாட்டனுங்க...

வடுவூர் குமார் said...

எங்க காலத்துல முதல்ல தொலைபேசி கிடையாது,அப்படியே கோவில்,திருவிழா அப்படி என்று பார்த்து பேசினாலும்,பொன்னுங்க முதல்ல அவுங்க அப்பாவிடம் தான் சொல்லும்.
இந்த விதத்தில் நீங்கள் எல்லாம் "கொடுத்து வைத்தவர்கள்"
நடத்துங்க..
கதை தான் என்றாலும்,கொஞ்சம் உண்மையும் இருக்குமல்லவா!!

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

//
அடுத்த பகுதியிலே கதையை முடித்து விடுகிறேன்
//

enthukku ? "இரு துருவம்" chala bagaundhi. //

உண்மைகாரு,
சால தேங்க்ஸண்டி :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

E Katha Baagaundhi Vetti :) Continue Chestanu..

Nayagan.

P.S : En Telugu Correct-a? //

நாயகன்,
continue chestanu kaathu... continue cheyandi :-)

வெட்டிப்பயல் said...

//
ஜி - Z said...

என்ன வெட்டி... அடுத்த பகுதில முடிச்சிடுறீங்களா?? ஏன் இந்த கொலவெறி??

யூ கேரி ஆன்.... நாங்க படிக்கிறோம்... //

இல்லை மக்கள் படிக்கிறாங்களா இல்லைனு தெரியாம மொக்கையா போட்டுட்டு இருக்கக்கூடாதில்லை...

வெட்டிப்பயல் said...

//Syam said...

கதை நல்லா போகுது...ஆனா இந்த எபிஸோட் இவ்வளோ சின்னதா முடிச்சுட்டீங்களே... //

மிக்க நன்றி நாட்ஸ்...

அடுத்த பகுதி பெருசா போடறேன் :-)

ஏ.எ.வாலிபன் said...

Ada thodarunga bas supera irukku

Anonymous said...

வெட்டி அண்ணா!! கதை ரொம்ப சூப்பரா போகுது.. எதுக்கு முடிக்கணும்

Joe said...

what happened to the next post?

ராஜா said...

எப்போ அடுத்த பகுதி போட போறீங்க??.

கதையே இப்பதான் ஸ்டார்ட் ஆகும் போல அதுகுள்ள அடுத்த பதிவில் முடிஞ்சிடும்னு வேற சொல்றிங்க சீக்கீரம் அடுத்த பகுதிய போடுங்க...

Anonymous said...

nalla than pa irku!!

//பிடித்திருந்தால் சொல்லவும்... //

pidithirukirathu...

Bhuvana said...

Iyoooo adutha part enga irukku. Padikalaina enakku mandai vedichudum. please yaarachum sollunga