Tuesday, October 31, 2006

இந்த ஆப்பு போதுமா?


ராசா மாதிரி சங்கத்து சிங்கங்க எல்லாரும் மீசையை முறுக்கிவிட்டுகிட்டு தேன்கூடு போட்டியில ஏதோ ஒரு இடத்தை புடிச்சுக்கிட்டு இருந்தாங்க. விவசாயி, என்னைய்யா பாவம் பண்ணுனாரு? அவருபாட்டுக்கு தான் உண்டு, தன் விவசாயம், வரப்பு உண்டுன்னு இருந்தாரு. சங்கத்து சார்புல போட்டி போடு ஜெயிக்கலைன்னா என் பேர மாத்திக்கவேன்னு சொன்னியே? என்ன பேரு வெக்கலாம்? இப்படி ஒரு முடிவு தேவையா?




அதான் 10 இடத்துக்கு உள்ளே கூட வர உடாம அடிச்சுபுட்டாங்க இல்லே? அப்புறம் எதுக்குய்யா உனக்கு பென்சில்ல வரைஞ்ச மீசை? எல்லாரும் இங்கே அடிச்சதுன்னு மட்டும் இல்லாம, தேன்கூடு வரைக்கும் போய் சேர்ந்து சொல்லி வெச்சு கும்மியடிச்சு இருக்காங்க ஆப்பு. இது போதுமா? இல்லே, இன்னும் கொஞ்சம் வேணுமா?




இனிமே இந்த மாதிரி போட்டில எல்லாம் கலந்துக்க போவியா? இதெல்லாம் உனக்குத் தேவையா?

15 comments:

கைப்புள்ள said...

//இனிமே இந்த மாதிரி போட்டில எல்லாம் கலந்துக்க போவியா? இதெல்லாம் உனக்குத் தேவையா?//

குட் கொஸ்டின்! ஆனா இந்த கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லனும்
:)

நாகை சிவா said...

போ ... போ... வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்..... இது இல்லாட்டி அடுத்த போட்டியில ஜெயிப்போம்ல, அதுவும் இல்லாட்டி அதுக்கு அடுத்த போட்டியில் ஜெயிச்சுட்டு போறோம். அதுவும் இல்லாட்டி...... இப்படியே போயிக்கிட்டே இருப்போம்....

நாகை சிவா said...

//இது போதுமா? இல்லே, இன்னும் கொஞ்சம் வேணுமா?//

இது எல்லாம் சதாரணம் உங்களூக்கு, இன்னும் நீங்கள் போக வேண்டிய தூரமும், வாங்க வேண்டிய ஆப்பும் நிறைய உள்ளது

Anonymous said...

சங்கத்துல சேர்ந்துட்டா ஈஸியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுரலாம்னு இல்லே பேசிக்கிறாங்க? என்ன ஆச்சு?

Anonymous said...

// Anonymous said...

சங்கத்துல சேர்ந்துட்டா ஈஸியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுரலாம்னு இல்லே பேசிக்கிறாங்க? என்ன ஆச்சு? //

அது வெறும் புரளினு தெரிஞ்சி போச்சு :-)

தோக்கறவங்க எப்பவும் அப்படித்தான் ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க...

நாமக்கல் சிபி said...

சங்கத்து மக்கா,
13 ராசியில்லாத நம்பர் அதனால முதல் 13 பேரை தூக்கிடுவோம்...

அப்படினா???

நம்மதான் முதல் பரிசா???
விவசாயி கலக்கிட்டப்பா....
வாழ்த்துக்கள்!!!

இலவசக்கொத்தனார் said...

புது பேரு என்ன? முடிவு பண்ணியாச்சா?

(உங்க பதிவு நெருப்பு நரியில் சரிஆ தெரியலயே. அலைன்மெண்ட்தான் பிரச்சனையான்னு பாருங்க. ஜஸ்டிபைடா இருந்தா அதை லெப்ட் அலைண்டா மாத்துங்க.)

ஜொள்ளுப்பாண்டி said...

அட விடுங்கதல போட்டியில்ல இதெல்லாம் ஜகஜம்ன்னு தெரியாதவகளா நாம ?? அல்பதனமா சிங்கிள் டிஜிட்ல இடம் வாங்கறதா பெரிசு?? சும்மா டபுள் டிஜிட்ல மார்க் வாங்கி கெலிச்சிடோம்ல?? எப்படி :)))

ILA (a) இளா said...

//13 ராசியில்லாத நம்பர் அதனால முதல் 13 பேரை தூக்கிடுவோம்...
அட, எப்படி எப்படிய்யா, இப்படியெல்லாம் தோணுது? தலை கவுந்து உழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது தெரியும்ல..

கைப்புள்ள said...

விடுதலைன்னு தலைப்பு குடுத்த மாதிரி தறுதலைன்னு ஒரு தலைப்பு வராமலா போயிடும். அப்ப கெலிச்சிக்கலாம் வெவசாயி...அதுவரைக்கும் நீங்க ஒத்துக்கிட்டது மாதிரி ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கங்க....புது பேரு ஒன்னு வைக்கனும் இல்ல...ஹ்ம்ம்ம்....ஏய் சிங்கங்களா...சீக்கிரம் இந்தாளுக்கு ஒரு பேரை வையுங்கப்பா!

நாகை சிவா said...

//தலை கவுந்து உழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது தெரியும்ல.. //

எப்படி ஒட்டும். மீசை இருந்தா தானே.

நாகை சிவா said...

//அதுவரைக்கும் நீங்க ஒத்துக்கிட்டது மாதிரி ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கங்க....//

எங்க இருந்து எடுக்குறது. அவரு என்னமோ இந்தி பட ஹீரோ கணக்காக நல்லா மழிச்சுட்டுல அலையுறாரு. அந்த தைரியத்தில தான் இப்படி எல்லார் கிட்டயும் உதார் விடுறாரோ?

நாகை சிவா said...

////அதுவரைக்கும் நீங்க ஒத்துக்கிட்டது மாதிரி ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கங்க....//

இருந்தாலும் தல நீ ஆசைப்படதால், அவருக்கு மீசை வளர வச்சி பாதி மீசைய எடுக்குறோம். இல்லாட்டி உன்ன மாதிரியே அவருக்கும் பென்சில் மீசை வரைஞ்சு அதில் பாதி எடுக்குறோம். என்ன சொல்லுற....

ILA (a) இளா said...

//புது பேரு என்ன? முடிவு பண்ணியாச்சா? //
அதுக்கும் ஒரு போட்டி வெச்சு பார்த்துரலாமா?

ILA (a) இளா said...

//சங்கத்துல சேர்ந்துட்டா ஈஸியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுரலாம்னு இல்லே பேசிக்கிறாங்க? என்ன ஆச்சு?//
இந்த மாதிரி Sensitive'ஆன விஷயத்தையெல்லாம் அனானி வந்துதான் போடனுமா? ஏன்யா?