Tuesday, October 17, 2006

விடு'தலை-தேன்கூடு போட்டிக்கு

ரொம்ப சூடா போயிட்டு இருக்கிற தேன்கூடு போட்டிக்கு தனியாளா எழுதிதான் இருக்காங்க. முதன் முறையா ஒரு குழுமமா சங்கம் சார்பா போட்டியில கலந்துக்க முடிவு செஞ்சு எழுதி இருக்கிற படைப்புதான்(!?) இது.



* நம்ம இட்லி வடையும் இப்போ சுறு சுறுப்பா உள்ளாட்சி தேர்தல் பக்கம் வேலையா இருக்காங்க.
* கோவி கவிதையும், கதையுமா பின்ன, SK இன்னும் வேகமா பாலியல் கல்வி - பெற்றோருக்காக எழுதி பின்னி பெடல் எடுக்கிறாங்க.
* ரவியோ வேலை குடுக்கிற எஜமானர் ஆகிட்டாரு
* லக்கியும் மாயவரத்தாரும் உள்ளாட்சி தேர்தல மையமா பதிவுகளை ஆரம்பிச்சு இருக்காங்க.
* வெட்டிப் பதிவு பக்கம் போனாலே ஒரே தெலுங்கு வாடை, சங்கம் பக்கம் வந்தாதான் தமிழ் வருது அவருக்கு.
* ராசுகுட்டி எஸ்கேப், கைப்பு ஆமைதாபாளையத்து இட மாற்றம், புதுப்பொலிவோட தேவு கச்சேரி....

"Stop this non-sense"

"யாருப்பா அது, கவுண்டமணியா? சங்கத்துக்கு மீட்டிங்கில நீங்க எப்படி ......"

"அப்படித்தான்டா வருவேன். அடங்கொக்க மக்கா, இப்போ தான் தெரியுதா, போட்டியில கலந்துக்கிறீங்கன்னு சொல்லிட்டு அப்புறம் அதுக்குடா இவ்ளோ ஜல்லி அடிக்கிறீங்க? செல்லிகாட்டுக்கு தார் ரோடா போடப்போறீங்க?"

"அட இன்னும் இருக்குங்க மணி சார்"

"இன்னுமா இருக்கு? நாசமா போங்கடா. I am the escape"

இதோ இன்னும் கொஞ்சம் ஜல்லி அடிச்சுறோம்....

தடாலடியார் போட்டியில கலந்துக்கிற எல்லாருமே அந்த பரிசுக்காக இல்லே. போட்டி நடத்துற முறை புதுப்புதுசா இருக்கும். அதான் மஜாவே. ஒரு தடவை ஒரு வரியில சொல்ல சொல்லுவாரு, ஒரு தடவை பத்து கேள்வி கேட்டு பதில் சொல்லுவாரு.

அதே மாதிரி இந்தத் தடவை தேன்கூடு போட்டிக்கு நாமும் ஒரு புதுமை செஞ்சி இருக்கோம். அது ஒரு வார்த்தை.

"டேய், விட்டுருங்கடா படிக்கிறவங்களை, விஷயத்து வாங்கடா"

"வெய்டீஸ் மணிசார்"

சங்கம் சார்பாவும் அந்த படைப்பு இருக்கனும், தேன்கூடுக்கும் செட் ஆவனும்.

" ஆமா, பெரிய ஐஸ்வர்யா ராவை செட் பண்றீங்க. என்னான்னு அந்த ஒரு வார்த்தையை சொல்லித்தொலைங்கடா"

"மணி சார், தலைப்புக்கு ஏத்த மாதிரி படைக்கிறது பழைய ஸ்டைல்.."

"அப்புறம்"

"தலைப்பையே படைப்பாக்குறது சங்கம் ஸ்டைல்"

"இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா படிக்கிறவங்க மண்டைய பிச்சிக்கிட்டு ஏர்வாடிதான் போவனும். அது என்னாங்கடா தலைப்பையே படைப்பாக்குறது"

"மணிசார், எங்க கைப்பை நீங்க எல்லாம் எப்படி கூப்பிடுவீங்க?"

"மரமண்டைத்தலையான்னு"

"உங்கள போய் கேட்கிறோம் பாருங்க, எங்கள சொல்லனும்.."

"அப்புறம் ஏண்டா கேட்கிறீங்க?"

"சரி, நாங்க எல்லாம் எப்படி கூப்பிடுவோம்?"

"தலை'ன்னு"

"சரி, எங்க தலை வாங்காத ஆப்பு இல்லே, அடி இல்லே, பட்டக்ஸ்ல வாங்காத தீக்காயம் இல்லே. விவேக், நீங்க, கோவை சரளா எல்லாரும் அடிச்சும் தலை இன்னியும் ராவா தண்ணியடிக்கிற தெம்புல இருக்க என்ன காரணம்? யாருக்காவது தெரியுமா?"

"ங்கே......'

"ஏன்னு தெரியுமா மணிசார். அதுக்கெல்லாம் நாங்க சொல்ற ஒரு வார்த்தைதான். அதுதாங்க இந்த மாதம் தேன்கூடி போட்டிக்கு நாங்க குடுக்கிற படைப்பு அது...

விடு'தலை.. அடிச்சா அடிச்சுட்டு போவட்டும்.....


"போங்கடாங்கோ...I am the escape"

25 comments:

கைப்புள்ள said...

//விடு'தலை.. அடிச்சா அடிச்சுட்டு போவட்டும்.....//

அப்படீங்கறீங்க

G.Ragavan said...

"ஐயோஓஓஓ...........சாமியோய் இந்த பழிபாவத்துக்கெல்லாம் நானாளாக மாட்டேன். ஓசியில கெடச்சா போட்டியக் கூட சுட்டுத் திங்குறவங்கதான...யப்பா சாமியோவ்...விட்டா கிட்னி கிச்சடி போடுற பயகளப்போய்"ன்னு கதறிக்கிட்டே இந்தப் பக்கந்தான் கவுண்டரு ஓடுனாருங்க. ஏங்க?

ராசுக்குட்டி said...

எத்தனையோ அட்லாஸ் வாலிபர்கள் வந்தும் காப்பாத்த முடியாத தலையை... ஒரே ஒரு வார்த்தைல விடு'தலை'ன்னு சொன்னா விட்ருவோமா... வேணும்னா எல்லா ஆப்பயும் வாங்கிட்டு வரும்போது 'விடு', தல-ன்னு சொல்லி சமாளிப்போம்

இப்போதைக்கு, அஃபீஷியலாவும் சொல்லிர்றேன்....
//I am the escape//

நாகை சிவா said...

சரி தான் விடு தலை.....

Unknown said...

விடு 'தலை'

தீபாவளிக்கு

நீ ராக்கெட் விடு 'தலை'

ரா. பார்த்தீபன் அனுப்பிய எஸ்.எம் எஸ்

Unknown said...

வி டு த லை .... வி டு த லை.....

மகாகவி பாரதி முதல் நம்ம கவிப்பேரரசு வைரமுத்து வரை பாடிய கவிதைச்சொல்

இதை விடச் சிறந்த படைப்பிற்கு ஏற்ற சொல் வேறு உண்டோ?

Unknown said...

அன்று வெள்ளையனை நோக்கி முழங்கிய வீரச் சொல் இன்று சங்கத்துச் சிங்கங்களின் மந்திரச் சொல்

போட்டிக்கு ஆயிரம் பேர் படைப்பு அனுப்புன்னா என்ன...
அட விடு 'தலை' வெற்றி நமதே....

ILA (a) இளா said...

வெற்றி வேல்
வீரவேல்
இது பழைய முழக்கம்

விடு 'தலை'
விடு தல

இது புது முழக்கம்

இராம்/Raam said...

மொதல்ல தல'யே எங்கேப்பா.... அகதமாபாத்லே தலைமறைவா ஆயிட்டரா....???

:-)

ILA (a) இளா said...

கைப்புவைதான் எல்லாரும் தப்பா பேசறாங்கன்னா அவரு போன ஊரைக்கூடவா தப்பு தப்பா சொல்லுவீங்க. அது ஆமைதாபாத் இல்லே ஆமைதாபாளையம். மண்டூகம்'னு கொத்ஸ் சொன்னத நிரூப்பிக்கிறீங்களோ? என்னது இது. சிறுபுள்ளத்தனமா..

Anonymous said...

Super comedy!

Anonymous said...

கலங்குங்க..

நாமக்கல் சிபி said...

//வெட்டிப் பதிவு பக்கம் போனாலே ஒரே தெலுங்கு வாடை, சங்கம் பக்கம் வந்தாதான் தமிழ் வருது அவருக்கு.
//
ஏன் இந்த கொலை வெறி???
தலைக்கு அப்பறம் ஆப்பு நமக்குனு முடிவாயிடுச்சா???

நாமக்கல் சிபி said...

//விடு'தலை.. அடிச்சா அடிச்சுட்டு போவட்டும்..... //
சூப்பருங்கோவ்...

நாகை சிவா said...

//தலைக்கு அப்பறம் ஆப்பு நமக்குனு முடிவாயிடுச்சா??? //

என்ன வெட்டி, இப்படி சபையில வச்சா கேட்பது. அப்புறம் நாங்க உண்மைய சொல்லிடுவோம்ல...

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...
//தலைக்கு அப்பறம் ஆப்பு நமக்குனு முடிவாயிடுச்சா??? //

என்ன வெட்டி, இப்படி சபையில வச்சா கேட்பது. அப்புறம் நாங்க உண்மைய சொல்லிடுவோம்ல...
//
புலி,
நீ சொல்லிதான் தெரியனுமா???
நம்ம யாரு ஆப்பு வாங்கனாலும் அத போய் தல கிட்ட கொடுக்கனும்னு எனக்கு தெரியாதா என்ன?
;)

ILA (a) இளா said...

//ஏன் இந்த கொலை வெறி???
தலைக்கு அப்பறம் ஆப்பு நமக்குனு முடிவாயிடுச்சா??? //
தலைக்கு மட்டுமே ஆப்பு தந்து போர் அடிச்சு போச்சுப்பா, அதுக்குதான் டுபுக்கு இருக்காரு, அவருக்கு சப்ஸ்டிட்டியூட் வேணாமா? அதுதான் "Mr. வெட்டி"

நாமக்கல் சிபி said...

//ILA(a)இளா said...
//ஏன் இந்த கொலை வெறி???
தலைக்கு அப்பறம் ஆப்பு நமக்குனு முடிவாயிடுச்சா??? //
தலைக்கு மட்டுமே ஆப்பு தந்து போர் அடிச்சு போச்சுப்பா, அதுக்குதான் டுபுக்கு இருக்காரு, அவருக்கு சப்ஸ்டிட்டியூட் வேணாமா? அதுதான் "Mr. வெட்டி"
//
இது டென்னிஸ் மாதிரி இண்டிவிட்ஜ்வல் கேம்... இதுல சப்ஸ்டிட்டியூட் எல்லாம் கிடையாது... ஆமாம் சொல்லிட்டேன்... ;)

ILA (a) இளா said...

இப்பக்கூட தலையோட கொளுகையை பின்பற்றலைன்னா எப்படி???
அவரு கொளுகை தெரியுமா? அட அதை விடுங்க சங்கத்து சிங்கங்கள் கொளுகை தெரியுமா?
கொளுகை= விடு'தலை.. அடிச்சா அடிச்சுட்டு போவட்டும்.
குலுக்கல் முறையில வேலையில சேர்ந்தா இப்படித்தான் இருக்கும். அட சங்கம் டெக் வேலையை சொன்னேன்

ILA (a) இளா said...

//கதறிக்கிட்டே இந்தப் பக்கந்தான் கவுண்டரு ஓடுனாருங்க.//
வேற எங்கே? தேன்கூட்டுல நமக்கு ஓட்டுபோடத்தான், இல்லாட்டி ராசா கல்யாணத்துக்கு போயிருப்பாரு. அவர்தானே கவுண்டருக்கு பெரிய ரசிகன்.

Anonymous said...

ஜூப்பரான ஆறுதல்ங்கோ. இந்த ஆறுதல் வார்த்தைக்கு, ஆறுதல் பரிசாவது கிடைக்க என் வாழ்த்துக்கள்


Sudheer

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
ஜூப்பரான ஆறுதல்ங்கோ. இந்த ஆறுதல் வார்த்தைக்கு, ஆறுதல் பரிசாவது கிடைக்க என் வாழ்த்துக்கள்


Sudheer
//
ரொம்ப நன்றிங்கண்ணோவ்!!!

Anonymous said...

Ahaa, kilampittangaiya, kilampittanga.

Super Thalapuuku super Altappu.

Anonymous said...

ஜல்லி மேல ஜல்லி. கடைசியில சூப்பர்.

கதிர் said...

அடப்பாவிகளா!

வேலமெனக்கெட்டு படிச்சுட்டு கடைசில பாத்தா விடு'தலை'யா?

ரைட்டு விடு!