ஒரு ஐட்டி கம்பெனி ரொம்ப நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்ததால் திறமையான நிர்வாகம் வேண்டும் என நம்ம கைப்புள்ளயை அனைத்து பொறுப்புகளும் உள்ள நிர்வாக மேலாளராய் புதிதாக வேலைக்குச் சேர்த்தார்கள்.
முதல் நாள் அலுவலகத்தில்.... அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து காலை 11:30 மணிக்கு வேலை நடப்பதை பார்த்தபடி சுற்றி வந்தார். வேலையாட்கள் அனைவரும் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்ற கைப்பு, "இந்தாப்பா... தம்பி... உனக்கு சம்பளம் எவ்வளவு?" என்றார்.
கொஞ்சம் ஆச்சர்யமடைந்த அவன் சட்டென சுதாரித்து, "மாசத்துக்கு 300 ரூபாய். ஏன் சார் கேக்குறீங்க?" என்றான்.
கைப்புள்ள சட்டென தன் சட்டைப் பையில் கை விட்டு பணம் எடுத்து எண்ணி 900 ரூபாயை அவனிடம் கொடுத்து "இந்தா உன் மூணு மாச சம்பளம். இப்ப வேளில போ. திரும்ப இந்தப் பக்கமே வராத" என்று சப்தமிட்டார். முதலிலேயே தான் கறாரான மேலாளர் என்பதை வேலை பார்க்காமல் நின்று கொண்டிருந்த ஒருவனை வேலையை விட்டு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் அனைவருக்கும் நிரூபித்து விட்ட திருப்தியில் முகத்தில் ஒரு பெருமித புன்சிரிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி "அந்த சோம்பேறி இங்க என்ன வேலை பாத்துகிட்டு இருந்தான்னு யாராவது சொல்ல முடியுமா?" எனக் கேட்டார் அவர்.
கொஞ்சமாக அசடு வழிந்தபடி அங்கிருந்த ஒரு பணியாள் சொன்னார். "அவன் எதிர்த்தாப்ல இருக்குற tea கடைல வேல பாக்குற பையன். காலைல tea கொடுத்த க்ளாசை(glass) எல்லாம் வாங்கிக்கொண்டு போக வந்திருந்தான் சார்!"
3 comments:
அது!
:-)))) கலக்கல் காமடி !
super comedy kaaipulla
Post a Comment