~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Saturday, June 30, 2007
கம்பெனி மேனேஜர் கைப்புள்ள!
முதல் நாள் அலுவலகத்தில்.... அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து காலை 11:30 மணிக்கு வேலை நடப்பதை பார்த்தபடி சுற்றி வந்தார். வேலையாட்கள் அனைவரும் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்ற கைப்பு, "இந்தாப்பா... தம்பி... உனக்கு சம்பளம் எவ்வளவு?" என்றார்.
கொஞ்சம் ஆச்சர்யமடைந்த அவன் சட்டென சுதாரித்து, "மாசத்துக்கு 300 ரூபாய். ஏன் சார் கேக்குறீங்க?" என்றான்.
கைப்புள்ள சட்டென தன் சட்டைப் பையில் கை விட்டு பணம் எடுத்து எண்ணி 900 ரூபாயை அவனிடம் கொடுத்து "இந்தா உன் மூணு மாச சம்பளம். இப்ப வேளில போ. திரும்ப இந்தப் பக்கமே வராத" என்று சப்தமிட்டார். முதலிலேயே தான் கறாரான மேலாளர் என்பதை வேலை பார்க்காமல் நின்று கொண்டிருந்த ஒருவனை வேலையை விட்டு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் அனைவருக்கும் நிரூபித்து விட்ட திருப்தியில் முகத்தில் ஒரு பெருமித புன்சிரிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி "அந்த சோம்பேறி இங்க என்ன வேலை பாத்துகிட்டு இருந்தான்னு யாராவது சொல்ல முடியுமா?" எனக் கேட்டார் அவர்.
கொஞ்சமாக அசடு வழிந்தபடி அங்கிருந்த ஒரு பணியாள் சொன்னார். "அவன் எதிர்த்தாப்ல இருக்குற tea கடைல வேல பாக்குற பையன். காலைல tea கொடுத்த க்ளாசை(glass) எல்லாம் வாங்கிக்கொண்டு போக வந்திருந்தான் சார்!"
கைப்புள்ளைய ஏமாற்றிய பார்த்தி!
"வேனாம்... என்ன விட்டுரு.. அப்றம் நான் அடிச்சா ஒரே அடில சுருண்டுருவே மகனே" எச்சரித்தார் கைப்புள்ள.
"நான் ஒரு குத்து விட்டேன்னா நீ அப்பீட்டு தெரியுமா?" பார்த்தியும் கொஞ்சம்கூட சளைக்க வில்லை!
இருவரும் அப்படியே விவாதம் செய்தபடி நடந்து போனபோது தெருவில் லாட்டரி டிக்கெட் ஒன்று கிடந்தது! அது யாருக்கு என்பதில் மறுபடியும் சண்டை சூடு பிடித்தது!
கடைசியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவரும் பலப்பரீட்சை நடத்தி வெற்றி பெறுபவர் அந்த லாட்டரி சீட்டை எடுத்துக் கொள்வது என்று! கைப்புள்ள மனசுக்குள் கணக்கு போட்டார். 'முதலில் இவனை அடிக்க விட்டு இவன் பலம் அறிந்து கொண்டு பிறகு செமையா போட்டு தாக்கிர வேண்டியதுதான்!'
கைப்புள்ள முந்திக்கொண்டு பார்த்தியிடம் சொன்னார், "முதலில் நீ என்னைத் தாக்கு. பின்னர் நான் உன்னைத் தாக்குகிறேன். யாருக்கு அடி பலமோ அவரே தோற்றவர்! என்ன சொல்ற?"
பார்த்தியும் ஒப்புக்கொண்டு, பத்து அடி பின்னால் போய், பாய்ந்து வந்து கைப்புள்ளையின் கால்களுக்கிடையில் ஓங்கி உதைத்தார். அடி ரொம்ப கனம்தான். பறந்து மல்லாக்க விழுந்த கைப்புள்ளை 10 நிமிடம் கழித்து மெல்ல எழுந்து பார்த்தார்.
நூறு மீட்டர் தூரம் ஓடிப்போய் நின்றுகொண்டு பார்த்தி சொன்னார்,"அடேய்... முட்டாள். அந்த டிக்கெட்டை நீயே வச்சுக்கோ.! அது குலுக்கல் முடிஞ்ச பழைய லாட்டரி டிக்கெட்டு!"
பார்த்தி அடிச்சது கூட பரவால்ல, ஆனா டிக்கெட்டும் பழசா? கைப்புள்ள மயங்கி விழுந்தார்!
Friday, June 29, 2007
இதோ தொட்டுவிடும் தூரம்தான்!
வெளிச்சத்தில்
தொலைத்துவிட்டு
இருட்டில்
தேடிக்கொண்டிருக்கிறது
இளைஞர் உலகம்!
கண்விழியோர
தூக்க நரம்புகளோடு
சேர்ந்து கொண்டு
தூங்கப் பார்க்கிறது
எங்கள்
கலாமின் கனவு!
இதோ எட்டிவிடும்
தூரத்தில்தான் இருக்கும்
வெற்றிக் கனியை
பறிக்க விடாமல்
சோம்பலாகித் திரிகிறது
இளைஞரின் மூளைகள்..!
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையாக
நினைத்து முன்னேறாமல்
பாதையைத் துழாவிக்
கொண்டிருக்கின்றன
அவர்களின்
நம்பிக்கை வெளிச்சங்கள்!
வெற்றியைக் குறித்தான
தொடரோட்டத்தில்
வெற்றி ஒன்றே
நமது குறிக்கோள்...
அருகில் ஓடுவோரும்
தெரியக் கூடாது
நம் கண்களுக்கு...!
உலகினை மறந்து
உன் குறிக்கோள்
ஒன்றையே நினைத்து
உழைத்துப்பார்....
இதோ தொட்டுவிடும்
தூரம்தான் உன் இலக்கு!
தன்னம்பிக்கையின்
துணையோடு
முயற்சியின் எல்லையில்...
இதோ உனக்காகக்
காத்திருக்கின்றது
புத்தம்புது விடியல்.....!
Thursday, June 28, 2007
கைப்புள்ள கொடுக்கின் லூட்டி!
அந்த மனிதர் அடிக்குரலில் அடிக்கடி உறுமினார், "கைப்புள்ள கம்முன்னு வா. இது பொது இடம். அசிங்கமா நடந்துக்காதே. பார்க்கிறவங்க சிரிப்பாங்க!"
மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, அந்த தந்தையும், "வேண்டாம் கைப்புள்ள. இது கூடாது கைப்புள்ள. சொன்னாக் கேளு. அப்புறம் அடி விழும். அசிங்கமாயிடும் கைப்புள்ள!" என்று கூறியவாறே இருந்தார்.
இவ்வளவு களேபரத்தையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.
கடைசியாக சொன்னாள், " சார், ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட். பொது இடத்துல பையனை அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருந்தீங்க! ரியலி ஐ அப்ரிசியேட் யூ!"
அவரே பிறகு பையனைப் பார்த்து, "ஏம்பா கைப்புள்ள.. நீ இவர் பையனா..? அப்பா பாவம்தானே, ஏன் இவ்ளோ கஷ்டத்தை கொடுக்குறே?"
பையன் சொன்னான், "நான் அவர் பையந்தான். ஆனா கைப்புள்ளங்கிறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!"
பின்குறிப்பு:- கொடுக்கு என்றால் பையன் என்று அர்த்தம்
கவுண்டரின் கவுஜ திறனாய்வுப் பத்திரம்.
ஆரம்பமே அட்வைஸா? ஏன்டா வீட்ல இந்தப் பெருசுங்க தொல்லத்தான் தாங்க
முடியலைனா, நீங்களுமா??
மூன்று வேளையும் அமிர்தம் உண்டும்
நஞ்சேறவில்லை இந்த பிஞ்சு நெஞ்சில்.
நஞ்சை நஞ்சே முறிக்குமாம்
நீ எந்தன் நெஞ்சில் இருப்பதனால்.
அல்வாக்கும் அமிர்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத பஞ்சர் மண்டையா. நீ மூனு
வேளையும் மூக்குப் பிடிக்க திங்குறதுக்கு ஏன் டா எவளோ ஒருத்திய குத்தம் சொல்ற?
காதலித்ததுதான் தவறா?இல்லை...காதல்தான் தவறா?
நீ காதலிச்சதுதான்டா தப்பு... லவ் பண்றதுக்கு என்ன மாதிரி ஒரு பெர்சனாலிட்டி
வேணும்டா. நாங்கெல்லாம் காலேஜ்ல படிக்கும்போது....
பெரிதாக ஒன்றும் கேட்க வில்லை
ஆமா.. நீ கேட்டா மட்டும் அவ கொடுதிட போறாளா?
"ஆம்""இல்லை"இரண்டிலொன்று வேண்டும்.
எவன்டா இவன் சரியானக் கேனப் பயலா இருக்க? கேக்குறதுதான் கேக்குற.. ஒரு
பத்து லட்சம் பணம், பங்களான்னு கேக்க வேண்டியதுதானே??
இல்லை என்பது உன்பதில் எனில்
இந்தமேகம் வேறு ஆகாயத்தில்வேறு
உருவில் இணைய ஆயத்தமாகும்.
ஏன்டா உனக்கெல்லாம் ஒரு ஆகாயத்துல தூறல் விழுந்தாலே பெரிய விசயம்.
இதுல இன்னொரு ஆகாயமா?
ஆம் எனில் இப்போதே கூடி மழையாக
தரையிறங்கி வாழ்வோம்.
டேய். உச்சா போறதா இருந்தா ஒழுங்கா போ. அத ஏன்டா தண்டோரா போட்டு ஊருக்குச் சொல்ற? இங்க அவன் அவன் மழை பொய்யாம காஞ்சி போய் இருக்கான். இதுல இவரு மழை பொய்ய போறாராம். டேய்... எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும்? நீ ப்ரோபோஸ் பண்றியா? இல்ல வானிலை அறிக்கை சொல்றியா?
இரண்டிலுமில்லாத மவுனத்தைபதிலாக தருகிறாய்.
ஏன்டா ஒரு ஊமச்சிக்கிட்ட பேசு பேசுன்னு சொன்னா அவ எப்டிடா பேசுவா
டப்பாத் தலையா...
என் இருப்பை நியூட்ரலிலேயே வைத்திருப்பதில்
என்ன சுகமடி உனக்கு?
ஆமா.. இது பெரிய அரசு கஜானா இருப்பு. உன் இருப்பு நியூட்ரல்ல இருக்குதுன்னா,
நி ஒக்காந்துக்கிட்டு இருக்குற சேர்ர முன்னாலையும் பின்னாலையும் கொஞ்சம் ஆட்டு..
இன்றாவது பதில் வருமா?
வரலைனா கொஸ்டீன் பேப்பர லீக் அவுட் பண்ண போறியா?
48 டிகிரி செல்சியஸ் வெயிலோடு
போட்டி போடுகிறது என் இதயம்.
ஆமா.. இவரு பெரிய ஃபெண்டாஸ்டிக் ஃபோர். இவரு இதயம் நெருப்பா இருக்குதாம். டேய் உன்னையெல்லாம் அணுகுண்டு தயாரிக்கிற உலைல போட்டு வதக்கணும்டா...
அதை விட வாட்டுகிறது என்னை உன் மவுனம்.
ஏன்டீ.. நீயாவது கொஞ்சம் மவுன விரதம், ஊமைனு ஏதாவது சொல்லி தொலையேன்டி.
காத்திருக்கும் கணங்கள் சாதாரணமாயினும்
அது ரணமாக இருக்கிறதே மானே.
பத்து வருசமா பஸ்ஸே வராத பஸ் ஸ்டாப்ல காத்திருந்தா ஏன்டா ரணமா இருக்காது.? அதுலையும் சும்மா நிக்காம அந்த பம்புசெட்டுல தண்ணி புடிக்கிற அந்தப் பொண்ணு கையப் புடிச்சு இழுத்தா?. அதுவும் அவ புருசன் போன வாரந்தான் ஜெயில்ல இருந்து வந்தான்னு தெரிஞ்சும் அவக்கிட்ட வம்பு பண்ணா ரணமாவது?
கள்ளனிடம் தேடியும் கிடைக்கவில்லை
உன் உதட்டுக் கதவினை திறக்கும் சாவி.
நீயே ஒரு திருட்டு மண்டையன். நீ இன்னொரு கள்ளங்கிட்ட தேடுனியா? ஏன்டா
அவளே பல்லுல கிளிப்ப மாட்டிக்கிட்டு வாய மூட முடியாம இருக்கா? உங்க
கற்பனைக்கு ஒரு அளவே இல்லையாடா?
நான்காவது கியரில் பிகரோடு பறக்க
காத்திருக்கிறேன் நியூட்ரலிலே
நிறுத்தி வைத்திருப்பதுஎன்ன நியாயமடி.
பெட்ரோல் போடக்கூட காசு இல்லாம திரியுற தகரடப்பா மண்டையா. ஒரு அம்பது ருபாய்க்காக ஒரு பொண்ண லவ் பண்றேன்னு வெக்கமில்லாம சொல்றியே...
உனக்கே இது அசிங்கமா இல்ல??
இன்பாக்சை ஸீரோவாக்கி உன்
மெயில் கொண்டு நிரப்பி.
மயில் எழுதிய மடல் என்று
பெயரிடுவேன் கண்ணே.
அப்படியே...சகிலாவின் சாகசங்கள், மும்தாஜின் முனுகல்கள்னு சப்ஸ்க்ரைப் பண்ணி வைய்யி. இன்பாக்ஸ் ஃபுல் ஆகும். இவனுக்கெல்லாம் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தவன மிதிக்கணும்.
சீக்கிரம் வா தேனே!
ஏன்? டப்பா போட்டு விக்கப் போறியா?
இந்த வருட இறுதி வரை காத்திருப்பேன்.
அடுத்த வருச முதல் நாள் சொன்னா ஒத்துக்க மாட்டியா?
இப்படிக்கு கவுஜயான காதலன்.
உங்களுக்கெல்லாம் ஜி மாதிரி கவுஜன கூட்டி வந்து அவனோட ஆயிரம் கவுஜய உன் காதுக்குள்ளச் சொல்லணும்டா. அப்பத்தான் இனி கவுஜைய எழுதாம மக்கள தொல்லப் பண்ணாம இருப்பீங்க.
நன்றி: கவுண்டர்"ஜி"
இதுபோலவே நீங்கள் எழுதி கவிதை/படைப்பை கவுண்டரிடம் கொடுத்து திறனாய்வு
செய்து கொள்ளுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி
காலிங்
மேட்டுக்குடி அரண்மனை
மேட்டுக்குடி
Wednesday, June 27, 2007
நம்ம கிட்ட வாலாட்ட முடியுமா?
ரவுசுக்கார பய புள்ளைங்க நம்ம கட்டத்துரையவும் கேட்டானுங்க.. அதுக்கு நம்ம கட்டத்துரை சொன்னாரு, "போங்கடா பொச கெட்ட பயலுவளா.. எம்பொண்டாட்டி நேத்தைக்கு கூட தலை குனிஞ்சு என்ன சொன்னா தெரியுமாலே?"
மத்த ரெண்டு பசங்களும் அசந்து போயி, "என்னலே சொன்னா?" ன்னு ஆர்வமா கேட்டாங்க.
அதுக்கு நம்ம கட்டத்துரை சொன்னாரு, "ஏன்யா... கட்டிலுக்கு கீழே போய் ஒளிஞ்சுக்கிட்டீரு.? நீ உண்மையிலயே ஆம்பளயா இருந்தா வெளியே வந்து சண்ட போடும்யா" ன்னு சொன்னா. நானும் விடல்லியே.. பயப்படாம விடியற வரைக்கும் அப்பிடியே அவள கத்த விட்டேனாக்கும்!"
லைலாவ பண்ணு இம்ப்ரஸு...
ஸைட் அடிக்கிற ஃபிகர பாக்கப் போகுமுன்னாடி, நல்லா மேக்கப் பண்ணிட்டு போங்க. ஆனா ஒன்னுங்க. அப்படி ஸைட் அடிக்கக் கெளம்பும்போது உங்கள விட கொஞ்சம் சுமாரா பசங்க யாராவது இருந்தாங்கன்னா, அவுங்கள தயவு செஞ்சு கூட்டிட்டுப் போயிடாதீங்க. அவனுக்கு செட் ஆனாகூட பரவாயில்லீங்க. அப்புறம் அவன் உங்க ஆளோட லவ் பண்ண உங்கள காவலுக்கு விட்டுறுவான். அதாவது பரவாயில்ல. நம்மள சுண்டல் வாங்கித் தரச் சொல்லி நம்ம கண்ணு முன்னாலையே நம்ம ஃபிகர் கூட கடலை போடுவான்.
நம்முடைய வீக்னெஸ், நம்ம ஃபிகரோட ஸ்ட்ராங்னஸ்ஸா இருந்துட்டா பெரும் பிரச்சனை. இப்படித்தான், நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது, எங்க க்ளாஸ்லையே சூப்பர் ஃபிகர் ஒன்னு உண்டு. அவளுக்கு எப்படியாவது பிராக்கட் போட்டு அப்புறம் ராக்கெட் இல்லாமலே சந்திரமண்டலத்துல அவகூட டூயட் பாடணும்னு திரிஞ்சவங்க எக்கச்சக்க பேர். கூட்டம் எங்க சேந்தாலும் அதுல குடியிருக்குற ஆளாச்சே நாமெல்லாம். இந்தக் கூட்டத்துல மட்டும் சேராம இருந்திடுவோமா?? ஒரு தடவ, இயற்பியல் லேப்ல ஒரு எக்ஸ்பெரிமெண்ட்ட முடிச்சுட்டு நோட்ட சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஏ.ஆர். ரகுமானும், இளையராஜாவும் கம்பினேஷன்ல டாமினேஷன் போட்டு அடிச்ச வித்தியாசமான மெல்லிய குரல் அப்படியே காதுல விழுந்து மூளைல ஒரு டிராஃபிக் ஜாமையே ஏற்படுத்திச்சு.
"ஜி"
என்னத்தான் அசிங்கப் பட்டாலும் நம்ம ஃபிரண்ட்ஸ்கிட்ட நம்ம 'கெத்'த மெயிண்டெயின் பண்ணிக்கனும். அப்புறம் அவனுங்க ஃபிகருக்கிட்ட காமெடி பண்ணும்போது நம்மள ஊறுகாயா ஆக்கிடுவானுங்க. அதுனாலத்தான், அந்தச் சம்பவம் முடிஞ்ச வுடனே, நேரா நம்ம நண்பர்கள்கிட்ட,
"மச்சான், இன்னைக்கு அந்த ஃபிகர் ஏன்கிட்ட பேசினாடா... நாந்தான் அவளுக்கு ஃபிசிக்ஸ் லேப்ல சொல்லிக் கொடுத்தேன்"னு ஒரு பிட்டப் போட்டு அவுங்க காதுலையும் வாயிலையும் புகை வர வச்சேன்.
ஃபிகர் விசயத்துல என்னைக்குமே அவசரப் படக்கூடாது. என்னோட நண்பன் இப்படித்தான் ஒரு ஃபிகருக்கு நூல் விட்டுக்கிட்டு இருந்தான். அது எல்லாருக்கும் தெரியுங்றதால எல்லாரும் அவுங்க ரெண்டு பேரையும் வச்சி ஓட்டுவாங்க. ஒரு நாள் அந்தப் பொண்ணுக்கிட்ட இருந்து மெயில் மயிலா வந்திருந்துச்சு.
"நான் படிக்க வந்திருக்கேன். உன்ன மாதிரி ஊர் சுத்த வரல. உன்னையும் என்னையும் வச்சு ஓட்டுற மேட்டர் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, அப்புறம் என்னோடப் படிப்பையே நிறுத்திடுவாங்க"ன்னு அந்த மெயில்லப் போட்டிருந்துச்சு. பயபுள்ள பயந்தடிச்சு வேகவேகமா, அவசர அவசரமா அதுக்கு ஒரு பதிலத் தட்டி விட்டான்.
"நானும் படிக்கத்தான் வந்திருக்கேன். பசங்க ஓட்டுனா, அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்.", அப்படி, இப்படின்னு எக்கச் சக்கமா அந்தப் பொண்ண வஞ்சி எழுதிப்புட்டான். அதுக்கப்புறம் என்கிட்ட வந்து மெல்லமா இந்த மேட்டர சொன்னான். 'வேற யாருக்கெல்லாம் இந்த மேட்டர் தெரியும்?'னு கேட்டேன். பயபுள்ள உண்மையான நண்பன் நாந்தான்னு என்கிட்டத்தான் மொதல்ல சொல்லிருக்கான். அப்புறம் அவன்கிட்டச் கேட்டேன்.
"ஏன்டா அவதான் அந்த மெயில அனுப்புனாளான்னு உனக்குத் தெரியுமா?"
"ஆமாம்டா. அவ மெயில் ஐடில இருந்துதான் மெயில் வந்துச்சு"
"மாப்ள. இந்த ஃபேக்மெயில்ஸ் ஃபேக்மெயில்ஸுன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? அதுல இருந்து யார் ஐடில இருந்தும் யாருக்கு வேணும்னாலும் மெயில் அனுப்பலாம்"னு லேசா சிரிச்சிக்கிட்டேச் சொன்னேன்.
அன்னைக்கு ஹாஸ்டல் முழுக்க என்னையத் தொரத்தி தொரத்தி அடிச்சான். நானும் நண்பனுக்கு செட் ஆகணும்னு ஒரு நல்லெண்ணத்துலதான் அதப் பண்ணினேன். பயபுள்ள அவசரப் பட்டதால எல்லாம் போச்சு.
ஆர்வக் கோளாறு அறவே கூடாது. ஃபிகர் செட் ஆகுறதுக்கு முன்னாடி யோசிக்காமப் பேசுனா ஆப்பு. செட் ஆனதுக்கப்புறம் யோசிச்சாலே ஆப்பு. ஒரு தடவ டூர் போயிட்டு பஸ்ல வரும்போது ரொம்ப மும்முரமா எல்லாரும் அன்தாக்ஷ்ரி விளையாடிட்டு இருந்தாங்க. நம்ம நண்பன் ஒருத்தன் அவனோட ஃபிகர இம்ப்ரஸ் பண்றதுக்காக எக்கச்சக்கமா காதல் பாடல்கள அள்ளி விட ஆரம்பிச்சான். எதிர் அணில அவனோட ஆளோட சேத்து முக்காவாசி பொண்ணுங்கதான். தலைவர்தான் இந்த அணில ஃப்ரண்ட்ல நின்னு பாடிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல நம்ம நட்போட அணிதான் பாடணும். 'எ'னு தொடங்குற எல்லாப் பாட்டையும் அதுக்கு முன்னாடி பாடியாச்சு. எதுவுமே தோணல தலைக்கு. நம்மளோட இன்னொரு நண்பன் அவன் காதுல ஒருப் பாட்ட பத்திச் சொன்னான். அவனும் ஓவர் ஆர்வக்கோளாறுல அந்தப் பாட்டையும் பாடித் தொலச்சிட்டான். அதோட நின்னுப் போச்சு அன்தாக்ஷ்ரி. என்னப் பாட்டுனு கேக்குறீங்களா? கிழக்குச் சீமையிலேயில பாண்டியன் பாடுற பாட்டுத்தாங்க... "எதுக்குப் பொண்டாட்டி..."
நமக்குத் தெரியாத மேட்டர் நம்ம ஃபிகருக்குத் தெரிஞ்சுதுன்னு வைங்க, உடனே போய் 'எனக்கு அத சொல்லித் தாயேன்'னு அப்பாவியாய் கேட்டுக்கணும். ஆனாலும் அதுலையும் ரொம்ப கவனமா இருக்கணும். என்னோட நண்பன் ஒருத்தன், ஒரு பொண்ணுக்கிட்ட, ஹிந்திக் கத்துக்கிட்டு இருந்தான். நமக்கு ஒரு ஃபார்வேர்ட் மெயில் வந்திருந்தது. அதுல பாதி ஆங்கிலத்துலையும், பாதி ஹிந்திலையும் இருந்தது. நல்ல காமெடி மெயில். ஆஹா, நம்ம பயபுள்ளைக்கு இந்த ஹிந்தி மெயில் ரொம்ப உபயோகமா இருக்குமேன்னு அவனுக்கு அனுப்பி அதுக்கு அர்த்தத்த அவக்கிட்டக் கேக்கச் சொன்னேன். அவனும் அத அவளுக்கு ஃபார்வேர்ட் பண்ணி அதுக்கான அர்த்தத்த கேட்டான். அதுக்கு அவ பதிலே சொல்லல. அவன் திரும்ப திரும்ப ஒரு அஞ்சாறு ரிமெயிண்டர் மெயில் அனுப்பி அவள உசுப்பேத்திக்கிட்டே இருந்தான். அவளும், அவன் டார்ச்சர் தாங்க முடியாம அதுக்கு பதில அனுப்பினா. அப்புறந்தான் தெரிஞ்சுது அது வெவெகாரமான ஹிந்தி 'ஏ' ஜோக்குன்னு. பயபுள்ள நம்ம மேல பாய, நம்மத்தான் 'ஏக் காவுமே, ஏக் கிஷான் ரகு தாத்தா' கும்பல்டான்னு அவனுக்கு வெளக்குனேன். அப்புறம் எனக்கு அந்த மெயில அனுப்புன பயலுக்கு ஒரு ஃபோனப் போட்டு, 'ஏன் டா வெவகாரமான மெயில் அனுப்புறதா இருந்தா ஸ்டார் போட்டு அனுப்புன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்'னு டோஸ் விட்டா, பாவம்போல அவன் சொன்னா
"எனக்கு மட்டும் ஹிந்தி தெரியும்னா நெனச்ச?"
அதுனால என்னைக்குமே அவசரப்படாம, விசாரிச்சு அப்ரோச் பண்ணனும்.
க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))
அப்பாடா... எப்படியோ நாமலும் ஒரு மெஸேஜ வச்சி ஒரு பதிவுப் போட்டாச்சு.
Tuesday, June 26, 2007
கைப்புள்ளயின் சுற்றுலா அனுபவம்!
குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடா. ஒரு வழியா படகை பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.
படகில் இருந்த ஒருவர் சொன்னார், "அட வெளங்காப் பயலே.. இன்னும் ஒரு நிமிசம் காத்திருந்தீன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீ பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?"
கைப்புள்ள மனைவி வாங்கிய புதுகிளி!
"அடடா.. இந்தக் கிளி இவ்ளோ அழகா இருக்கே.. என்ன விலை..?"
"அது வேணாம்மா.. அதுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி..!"
"நீ ஏம்பா கவலைப் படறே.. பரவால்ல.. நான் சமாளிச்சுக்கறேன்..!"
"இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!"
"பாவம்பா அது.. வாயில்லா ஜீவன்.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!"
"சொன்னா கேளுங்கம்மா.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!"
வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி பேச ஆரம்பித்தது!..
"புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!"
கைப்புள்ள பொண்டாட்டிக்கு ஆச்சர்யம்..!
பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்.. கிளி. மீண்டும் சொல்லிற்று...
"புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..!"
எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..
இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே அந்த கடைக்கார கடன்காரன்.. கட்டையில போக..!
சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...
"புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு... அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"
Monday, June 25, 2007
பிச்சை புகினும் கற்கை நன்றே!
சரின்னு உண்டியல் வைக்க போனார் தல. கோயிலில் உள்ளவங்க இவரை வைக்க விடல. சரி ஆனதுதான் ஆச்சு, முன்வெச்ச கால பின்வைக்க வேனாம்னு முடிவு பன்னி தலையில் இருந்த முண்டாச அவுத்து ஒதறி தரையில் போட்டு உக்காந்துட்டாரு... வசூல் பரவால்ல. ஒரு நாளைக்கு 200க்கு குறைவில்லாம வசூலாகுது!
ஒரு ஆள் தெனந்தோறும் சாயங்காலம் 7 மணிக்கு கோயிலுக்கு வரதும் இவருக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுவதும் வழக்கமாயிருச்சி. தலயின் ரெகுலர் கஸ்டமர்(!) ஆயிட்டாரு அந்தாளு! அந்தா இந்தான்னு ரெண்டு வருஷமாச்சு. கடந்த வருடத்தில் இருந்து ஒரு ரூபாயில் இருந்து குறைந்து 50 காசு போட்டாரு.. தலைக்கு செம கடுப்பு. சரி பரவால்லன்னு அதையும் பொறுத்தாரு.... ஆனா பாருங்க இன்னிக்கு 25 காசுதான் போட்டாரு... தலைக்கு கோவம் மண்டை உச்சிக்கு போயிருச்சி!
"ஏன்யா முன்னாடி ஒத்த ரூவா கொடுத்தீய... பொறவு 50 காசு கொடுத்தீய... இப்போ என்னடான்னா அதுவும் 25 காசுக்கு வந்துருச்சி... ஏஞ்சாமி இது ஒங்களுக்கே நாயமா தோனுதா?"
"தம்பி, முன்னாடி நான் தனி ஆளு... ஒரு ரூவா கொடுத்தேன். பிறகு என் பொஞ்சாதி வந்தா.. நெலமய சமாளிக்க முடியல. அதான் 50 காசு... இப்போ எனக்கு கொழந்தை பொறந்துருச்சி... அதயும் நான் கவனிக்கனும்ல.. அதான் 25 காசு!"
தலக்கு வந்தது கோபம்... எழுந்து அந்தாளு சட்டைய புடிச்சிட்டாரு..., "யோவ் நீ கல்யாணம் பன்னு, புள்ளய பெத்துக்க.. அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அதுக்கெல்லாம் என் காசில் எப்படிய்யா நீ கை வைக்கலாம்?"
8ஆ, இந்தா 11. <<பதில் நீங்கதான் சொல்லோனும்>>
8 வெளையாட்டுக்கு சேர்த்துக்கலேன்னு சிங்கத்துக்கு கோவம் வந்துருச்சு. சிங்கத்தோட கோவத்துக்கு ஆளாகி சின்னா பின்னா ஆகிராதீங்க.
- STD க்கு எதிர்மறை என்ன?
- பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?
- ஒரு காட்டுல 10 பேர் போய்ட்டு இருக்காங்க திடீர்னு சிங்கம் ஒன்னு வந்து 6 பேரை கொன்னுருச்சு. 4 பேரை விட்டுருசு, ஏன்?
- கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?
- புல்லு சாப்பிட்டா கண்ணு நல்லாத் தெரியும், உதாரணத்துடன் விளக்கனும்?
- பஸ்ல போயிட்டு இருந்தப்ப ஒருத்தர் தோல் தட்டி இது ராயப்பேட்டையான்னு கேட்டா, சங்கத்து சிங்கங்கள் என்ன பதில் சொல்லுவாங்க?
- பெரிய பட்ஜெட் படத்துல -கதாநாயகன் வில்லனை ராக்கெட் லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு, அதே சின்ன பட்ஜெட் படம்னா?
- கமல் மீசை இல்லாம நடிச்ச முதல் படம் எது.?
- வெங்காய கடைக்காரங்க எல்லாம சேர்ந்து சங்கம் வெச்சா என்ன பேர் வெப்பாங்க?
- இந்த e-commerce, e-business, e-mail இதுக்கெல்லாம் போட்டியா ஏதாவது வந்தா என்ன பேர் வெக்கலாம்?
- முதலாம்ப்பு படிக்கிற பையன் பரீட்சைக்கு போறான், வினாத்தாள் வாங்கின உடனே சட்டை டவுசர் கழட்டிட்டு பனியன் ஜட்டியோட பதில் எழுத ஆரம்பிக்கிறான் ஏன்? (கொஞ்சம் கருப்பு ஸ்டைல் கேள்வி இது)

பதில் சொல்லி எங்க சிங்கத்தை Cool ஆக்குங்க.
Saturday, June 23, 2007
எமதர்மராஜாவின் லொள்ளு!
அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்!
"பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!"
"இவர்கள் செய்த குற்றம் என்ன?"
"இவன் ஒரு கொலைகாரன்!"
"சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"
"இரண்டாமவன் ஒரு திருடன்!"
"இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"
"இந்த பெண் ஒரு நாட்டியக்காரி... பூலோகத்தில் தன் நாட்டியத் திறமையால் பலரை மயக்கி தன் வலையில் விழவைத்தவள்!"
காலையில் நடந்த சண்டையை கொஞ்சம் யோசித்த எமதர்மராஜா, "இனியும் எமலோகம் தாங்காது. இவளை மறுபடியும் பூலோகத்துக்கே அனுப்பிச்சுரு, இனிமே பொண்ணுங்களை எல்லாம் நான் விசாரிக்க மாட்டேன்"
"என்னடா இது எமதர்மன் எப்பவுமே இப்படி சொல்லமாட்டாரே"ன்னு சித்திரகுப்தன் சுற்றி பார்க்க, சிரித்தவாறு பெருமை பொங்க எமதர்மனையே பார்த்துக்கொண்டு இருந்தார் எமதர்மன் மனைவி.
Friday, June 22, 2007
ரகசிய ஏஜெண்ட் 007 (மீள் பதிவு)

தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது அந்த கறுப்பு கோட் அணிந்த உருவம்.
தெரிந்து கொல்!
Thursday, June 21, 2007
கல்யாணமான கபோதிகள் சங்கம் - ஆத்திச் சூடி
ஆ- ஆட்டுக்கல்: மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
இ- இரு சக்கர வண்டி: தாம்பத்யம் என்பது சைக்கிளைப் போல; நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இல்லா விட்டால் முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை.
ஈ- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படியே நிற்க வேண்டியது தான்.
உ- "உயிரொப்பந்தம்' எனப்படும் ஆயுள் இன்சூரன்ஸ்: உங்கள் ஆயுளை இன்ஸ்யூர் செய்து, பாலிசியில், "நாமினி' பெயரைப் பூர்த்தி செய்யாமல் விட்டு வையுங்கள். மனைவி கொஞ்சம் இடக்கு பண்ணும்போது, "நாமினி' என்று சொல்லிப் பாருங்கள். மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி விடுவாள். இல்லாவிட்டால் "என் உயிருக்கு .....தான் காரணம்"னு எழுதி வெச்சுக்குங்க, தேவைபடும்போது உன் பேரை எழுதிருவேன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லியே காலம் தள்ளலாம்.
ஊ- ஊமை: காலையில இருந்து ராத்திரி வரைக்கு ஓயாம பேசுற பொண்டாட்டி கட்டினவனுக்கு பொண்டாட்டி அப்படி ஆயிரக்கூடாதுன்னு தோணும். அந்த அது "ஊமை". இல்லாட்டி புருசனுங்க அதுவா மாறிடலாம். இப்பவும் அந்த அது ஊமை. பிரச்சினை பாதி குறைஞ்சுரும். காதும் கேட்காம போச்சுன்னா சூப்பர்.
எ- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்
ஏ- ஏய்!: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லிப் பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
ஐ- ஐன்ஸ்ட்டீன்: "ரிலேடிவிட்டி' தியரியைக் கண்டுபிடித்தவர். இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களை போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.
ஒ- ஒரு முழம்: வாழ்க்கையே வெறுத்துப் போவும் போது விட்டத்தைப் பார்த்தா .. வேணாம் விடுங்க.
ஓ- ஓமத் திரவம்: எந்த மனிதனுக்கும் தன் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்குமா? நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாக சாப்பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது! அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திரவம் கொடேன்!' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுங்கள்.
ஒள- ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி.
ஃ-சீனாவுல சண்டை போடுறவங்க எல்லாம் இப்படிதான் பொட்டு வெச்சுக்குவாங்களாம் . இப்படி வாழ்க்கை முழுசா சுத்தி, சுத்தி அடி வாங்கினதை சொல்றேங்க.
நன்றி-கல்யாணமான கபோதிகள் சங்கம்-டுபுக்கு
படுத்துகொண்டே சம்பாதிக்கலாம்!
"என்ன வேலைக்கு போகச் சொல்ற? எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"
"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே... அங்க போகக் கூடாதா?"
"அது சேல்ஸ் மேன் வேலையாம். நின்னு நின்னு கால் வலி எடுக்கும்!"
"சரி, அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே, அதுக்காவது போகலாமில்ல?"
"அது ஒரே போர். உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி எடுக்கும்!"
"சரிடா... அந்த டி வி ஷோரூம் வேலைக்காச்சும் போகலாமில்ல?"
"அதுவும் ரொம்ப கஷ்டம்பா! டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி எடுக்கும்!"
"படவா...அப்ப எந்த வேலைக்குதான் நீ போவே?"
"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே? படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு, பார்க்கிறேன்!"
"தெருமுக்கத்தில மெக்கானிக் சங்கர் இருப்பான். நான் சொன்னேன்னு சொல்லி அவன்கிட்ட சேந்துக்க!"
குறிப்பு:- சம்பாஷணையில் இடம்பெற்றது தலையும் அவரின் அப்பாவும்!
Wednesday, June 20, 2007
நாங்களும் காதலிப்போம்ல்ல
மூன்று வேளையும் அமிர்தம் உண்டும்
நஞ்சேறவில்லை இந்த பிஞ்சு நெஞ்சில்.
நஞ்சை நஞ்சே முறிக்குமாம்
நீ எந்தன் நெஞ்சில் இருப்பதனால்.
காதலித்ததுதான் தவறா?
இல்லை...
காதல்தான் தவறா?
பெரிதாக ஒன்றும் கேட்க வில்லை
"ஆம்"
"இல்லை"
இரண்டிலொன்று வேண்டும்.
இல்லை என்பது உன்
பதில் எனில் இந்த
மேகம் வேறு ஆகாயத்தில்
வேறு உருவில் இணைய
ஆயத்தமாகும்.
ஆம் எனில் இப்போதே
கூடி மழையாக தரையிறங்கி
வாழ்வோம்.
இரண்டிலுமில்லாத மவுனத்தை
பதிலாக தருகிறாய்.
என் இருப்பை நியூட்ரலிலேயே
வைத்திருப்பதில் என்ன சுகமடி உனக்கு?
இன்றாவது பதில் வருமா?
48 டிகிரி செல்சியஸ் வெயிலோடு
போட்டி போடுகிறது என் இதயம்.
அதை விட வாட்டுகிறது என்னை
உன் மவுனம்.
காத்திருக்கும் கணங்கள்
சாதாரணமாயினும் அது
ரணமாக இருக்கிறதே மானே.
கள்ளனிடம் தேடியும்
கிடைக்கவில்லை
உன் உதட்டுக் கதவினை
திறக்கும் சாவி.
நான்காவது கியரில் பிகரோடு
பறக்க காத்திருக்கிறேன்
நியூட்ரலிலே நிறுத்தி
வைத்திருப்பது
என்ன நியாயமடி.
இன்பாக்சை ஸீரோவாக்கி
உன் மெயில் கொண்டு நிரப்பி.
மயில் எழுதிய மடல் என்று
பெயரிடுவேன் கண்ணே.
சீக்கிரம் வா தேனே!
இந்த வருட இறுதி வரை காத்திருப்பேன்.
இப்படிக்கு கவுஜயான காதலன்.
எச்சரிக்கை: இதுபோலவே கவுஜ எழுதி காதலியிடம் கொடுத்து பாருங்கள்.பின்னால
தெரியும் சேதி.
இளைய முதியவர்!
"தங்களுடைய இளமையின் ரகசியம் என்னங்கய்யா?"
"ஓ அதுவா... தினமும் நாலு பாக்கெட் சிகரெட் அடிக்கிறேன். படுக்கப்போகுமுன் கஞ்சா இழுக்கிறேன். அது தவிர வாரத்தில் குறைந்தது நான்கு நாளாவது முழு பட்டில் சாராயம் அடிக்கிறேன். சாப்பாட்டைப் பொருத்தவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவும் கிடையாது. ஊர்வன. பறப்பன. நடப்பன.குதிப்பன, தாண்டுவன எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவேன். சொல்ல மறந்து விட்டேன். தேகபயிற்சி என்று எதையும் நான் மறந்து போயும் செய்றது கிடையாது!"
"அப்படியா?!" ஆச்சர்யத்தில் வாய்பிளந்தேன்... "சார் நிஜமாவே இப்போ உங்க வயசு என்ன? ஒரு 75 இருக்குமா?"
"என்ன விளையாடுறீங்களா? ஆடி வந்தா... 24தான்!"
Tuesday, June 19, 2007
கவிதையும் கவுண்டமணியும்
காதலிக்கோர்க் கடிதம்...
காதலிக்கு கடிதம்னு சொல்லிட்டு ஏன்டா அவளோட தங்கச்சுக்கு ஒரு காப்பி அனுப்பி வச்சிருக்க??
அண்ட அழகிகளெல்லாம்
மண்டியிடும் பேரழகியே...
அடப்பாவி.. அடப்பாவி... ஆரம்பத்துலேயே ஏன்டா அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகுற? அவள லோக்கல் கண்டஸ்ட்டுக்கு அனுப்புனாலே, கேட்லையே அடிச்சுத் தொரத்திடுவானுங்க. இதுல அணடப் பேரழகி மண்டி போடும் அழகியா? டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென். தயவுசெஞ்சு இந்த அபத்தத்த மட்டும் ஐஸ்வர்யா ராய்க்கோ, சுஷ்மிதா ஷென்னுக்கோ சொல்லிறாதீங்க. அப்புறம் அவளுக ரத்த வாந்தி எடுத்தே செத்துப் போயிடுவாளுங்க.
உன் சுவாசம் தாங்கியச்
சந்தனக் காற்று
நாசி துளைத்து இதயம் நுழையும்
அனுதின சுகத்தில்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னமும் இதயம்...
ஏன்டா... காத்து மூக்கு வழியா உள்ள போனவுடனே நுரையீரலுக்குப் போகும்னு அடிப்படை அறிவு கூட இல்ல. நீயெல்லாம் ஏன்டா கவுஜ எழுதுற? மொதல்ல போய் அஞ்சாப்பு அறிவியல படிச்சுட்டு வாடா. ஏன்டா, அவ சுவாசம் தாங்கும் சந்தனக் காற்றா? ஊசிப் போன பிரியானிய மூனு நாளு மூடி வச்சி ஓபன் பண்ணா வரும் நாத்தக்காத்து உனக்கு சந்தனக் காத்தா? உன்னையெல்லாம் அவ மூக்குல இருந்து ஒரு டியுப விட்டு அவ விடுற கார்பன் டையாக்சைட உன் மூக்குல விடணும்டா. அப்பத்தான்டா நீங்கெல்லாம் திருந்துவீங்க.
நீ தொலைந்துபோன
நொடிகளிலெல்லாம்
மூர்ச்சையாகிறது
என் கைக் கடிகார முள்...
ஒன்னா ருவாய்க்கு பேட்டரிப் போட வக்கில்லை. இதுல அவ போனதுனாலத்தான் நின்னுப் போச்சுன்னு அலப்பற வேற. ஏன்டா, நீ போட்டிருக்குறது ஒரு வாட்ச்? அத பிச்சக்காரன்கிட்டக் கொடுத்தாக்கூட, அந்த வாட்ச்ச மூனு தடவ தலையச் சுத்தி எச்சித் துப்பி உன் மூஞ்சிலேயே விட்டெறிவான். அந்த வாட்ச்ச வச்சிக்கிட்டு ஊருலயில்லாத பில்ட்-அப் விடுற??
கணப்பொழுதில் கண்பறிக்கும்
மின்னலையும் மிஞ்சும்
உன் ஒற்றைப் பார்வை
ஒளிக் கீற்றில்தான்
விரிகிறது உலகம்
என் விழிகளில்...
ஆங்.. அப்படியே அத ஒரு பல்ப்ல புடிச்சு ஊருக்கு வெளக்கேத்துறது. உன் கண்ணுல கோளாறுன்னா கண் டாக்டர்க்கிட்டப் போ. அத வுட்டுப்புட்டு மின்னல் கீற்று, தென்ன மட்டைனு ஏன்டா ஒளறுற? உன்னையெல்லாம் கேப்டன் மாதிரி தவுஸண்ட் வாட்ஸ் கரெண்ட ஒடம்புலப் பாய்ச்சணும்டா.
உன் இதழ்கள் பதித்த ஓர்
முத்தச்சுவடுப் போதும்
மரித்துப்போன
மானுட உணர்வுகளெல்லாம்
உலகாள உயிர்த்தெழும்...
இதுக்குத்தான் இந்த பில்ட்-அப்பாடா? டேய். அவ முத்தச் சுவட வச்சி என்னடா பண்ணுவ? அத கொண்டு போய் லண்டன் மியுசியத்துல வைக்கப் போறியா? மரித்துப் போன... உயிர்த்தெழும்... எந்த மாதா கோயில் வாசல்ல இருந்துடா காப்பி அடிச்ச?
மகா ஜனங்களே... இந்த மாதிரி கவுஜ எழுதுறேன்னு சும்மா இருக்குற நிலாவ விளையாட வான்னு ஒரண்ட இழுக்குறது, பூவக் கொடுத்துத் தலைல வைங்கன்னு சொன்னா, 'நீ பூ மாதிரி இருக்க.. புலி மாதிரி பாய்ற'னு குப்புறப் படுத்தவன் பாதி ராத்திரில எழுந்திருச்சு உளற்ற மாதிரி உளறுறது, 'ஐயோ பாவம்'னு ஆண்டவன் நதி, அருவி, புல்வெளி, மழைத்துளி, மேகம்னு நமக்காகப் படச்சத, இவனுக வெரட்டி வெரட்டி, வளச்சி வளச்சி வம்பிழுக்குறது, இதே பொழப்பாப் போச்சு இந்த கவுஜன்களுக்கு. இதே மாதிரி இனி கண்டினியூவாச்சி...
--------------------------***********----------------------------

கவுஜனா கவுஜ எழுதி, கவுண்ட மணியா வாசிச்சுப் பாத்த எஃபெக்ட் இப்படியாகிப் போச்சு. மொதல்ல வேற யாராவது எழுதுனதுக்குத்தான் அணிந்துரை எழுதலாம்னு பாத்தேன். வீணா எதுக்குச் சண்டைனுதான், என்னோடதுலேயே ஆரம்பிச்சுட்டேன். யாருக்காவது அணிந்துரை எழுதணும்னா மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் வந்து செவ்வனே என்னுடையப் பணிய செய்றேன். :))
என் இனிய நமீதா!
அடடே... சொல்லவே இல்லை பாருங்க. என் செல்ல மோட்டார் பைக்குக்கு நான் வைத்து இருக்கும் பெயர்தான் நமீதா. புதிதாகத்தான் வாங்கினேன். அதன் முன்பக்கம் பின்பக்கம், நடுப்பக்கம் எல்லாம் சுற்றிச் சுற்றி வந்து பார்த்ததில் என் மனதில் தோன்றிய ஒரே பெயர் நமீதா!
நேற்று காலையில் உதைத்ததும் கிளம்பவில்லை. அணைத்து ஒரு செல்ல முத்தம் கொடுத்தபிறகு புதுமணப் பெண்போல் முறுக்கிக் கொண்டு பிறகு கிளம்பியது. மாலை வேலை முடிந்ததும் அதேபோல கோவித்துக் கொண்டு கிளம்பவில்லை. மறுபடி அணைத்து தாஜா செய்ததும் கிளம்பிற்று!

இதனைக் கட்டி மேய்த்து செலவு செய்வதற்கு நிஜ நமீதாவையே கட்டி மேய்க்கலாம் போல தோன்றுகிறது எனக்கு. அல்லது இதனை விற்றுவிட்டு அசின் அல்லது ஷ்ரேயா வாங்கலாம் என நினைக்கிறேன். என்ன நான் சொல்றது?
நீங்க அடிக்க வர்றதுக்குள்ள நான் எஸ்கேப்பு!
Monday, June 18, 2007
தினமணியில் வ.வா.சங்கம்-மீள்பதிவு
இந்த சுட்டிய தட்டி நீங்களே பார்த்துக்குங்க. நாங்க எல்லாரும் ஆனந்த கண்ணீரோட இருக்கோம். எங்களுக்கு பேச்சே வர மாட்டேங்குது.
எல்லாருடைய அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றிங்க.
எங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து எங்களை பேட்டி கண்டு வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் கோடான கோடி நன்றிங்க.
அட ஒரிஜினலைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுப் போங்கப்பூ!!
பெண்ணின் மனதைத் தொட்டு!
22 வயது: வெள்ளைக் குதிரையில் அழகான ராஜகுமாரன் வரவேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படி ஒருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்கு முக்காடச் செய்யும் காதலனாக இருக்க வேண்டும்.
32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லா விட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் முழு திருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்ய வேண்டும். ஒட்டு மொத்தத்தில் ஒரு குடும்பப் பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.
42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லா விட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.
52 வயது: குறைந்த பட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.
62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.
72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் அதுவே பெரிய ஆச்சரியம். அப்படியே இருந்து விட்டால், அவன் சுவாசித்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலே போதும்.
Sunday, June 17, 2007
தினமணியில் வ.வா.சங்கம்
இந்த சுட்டிய தட்டி நீங்களே பார்த்துக்குங்க. நாங்க எல்லாரும் ஆனந்த கண்ணீரோட இருக்கோம். எங்களுக்கு பேச்சே வர மாட்டேங்குது.
எல்லாருடைய அன்புக்கும் நன்றிங்க.
எங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து எங்களை பேட்டி கண்டு வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் கோடான கோடி நன்றிங்க.
எப்பா சிங்கம்ஸ், ஏதோ சி.டி. ஸ்கேன்னு சொல்றாங்களே அதைப் பண்ணி தினமணியில வந்ததை ஒரு பதிவா போடுங்கப்பா..
இதோ போட்டாசில்ல???
அட ஒரிஜினலைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுப் போங்கப்பூ!!
Added the images below to archive the original news item in Dinamani)
Saturday, June 16, 2007
சிவாஜியின் மாமனார்!
என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு பாக்காதீங்க. இப்படி கவர்ச்சியா வெச்சாதான் பதிவருங்க எட்டிப் பாக்குறாங்க.. அதோட சிவாஜி படத்துக்கும் இந்த பதிவுக்கும் லேசா சம்பந்தம் இருக்கு!
சிவாஜி படத்தில் ரஜினிக்கு மாமனாரா ஷ்ரேயாவுக்கு அப்பாவா நடிச்சவர் பேர் ராஜா. சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் கலக்கு கலக்குன்னு கலக்குவார்! பார்க்கத்தான் ராஜா ஒல்லி. ஆனால் "அணுகுண்டு' ஸ்டைலில் காமெடியை வீசுவதில் ஆள் பலே கில்லாடி. ராஜாவின் ஒரு காமெடி கலாட்டா இதோ...
ஒரு பட்டிமன்றத்துல "ஆண் பெண் நட்பு தேவையா, இல்லையா?'னு தலைப்பு. ராஜா தேவையில்லைனு பேசறார். "பெண்கள், தங்கள் கணவர்மேல ரொம்ப பொஸஸிவ்வா இருப்பாங்க. அவங்களால இதுமாதிரியான நட்பைச் சரியா எடுத்துக்க முடியாது. நான் எதிர்வீட்ல இருக்கிற குழந்தை படிக்கட்டுல இருந்து கீழே விழுந்திடப் போகுதுன்னு பிடிக்க ஓடினேன். அந்தக் குழந்தையோட அம்மாவும் ஓடி வந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் இடிச்சுக்கிட்டோம். என் மனைவி "என்ன அடி பலமா?'னு கேட்டாங்க. நான் குழந்தையைத்தான் கேட்கிறானு நினைச்சு, "இல்ல, காப்பாத்திட்டோம்'னு சொன்னேன். "நான் கேட்டது குழந்தைக்கு இல்ல, உங்களுக்கு..? ஸ்லோமோஷன்ல போய் இடிச்சீங்களே!'னு சொன்னாங்க. இப்படி இருந்தா ஆண் பெண் நட்பு எப்படி வளரும் சொல்லுங்க' என்று போட்டாரே ஒரு போடு! கூட்டம் "அனுபவித்து' சிரித்தது.
Friday, June 15, 2007
சிவாஜி - ஸ்பேஷல் ஷோ - முடிவுகள்
"நாங்க சொல்லுறதையும் செய்வோம்
சொல்லாதையும் செய்வோம்" என்ற ரஜினி வாக்கின்படி
சொன்ன மாதிரி டிக்கெட் அரெஞ்ச் பண்ணியாச்சா.... இதுல இந்த சொல்லாத மேட்டரு என்னா வாங்கி இருந்த டிக்கெட்ட சங்கத்தின் சிங்கங்களே எடுத்துட்டு ஒடிடுச்சுங்க... ஆளுக்கு ஒன்னுனா கூட பரவாயில்லை வெள்ளிக்கிழமையும் பாப்போம், சனிக்கிழமையும் பாப்போம் சொல்லி நாள் கணக்குல அள்ளிட்டு போயிட்டாங்க... மிஞ்சினது இரண்டு தான். அதையாச்சும் கமெண்ட் போட்ட மக்களுக்கு கொடுப்போம் என்று கமெண்ட்டியவர்களில் இருவரை குலுக்கி எடுத்து தேர்வு செய்தால்
அதில் ஒருத்தர் நான் நேத்து ராத்திரியே பாத்தாச்சுனு சொல்லிட்டார்...(இன்னிக்கு பதிவு வேற போடுவார், படத்தை வெற்றியில் பார்த்த வெற்றி வீரன்... முருகனின் அண்ணனின் வேறு பெயர் கொண்டவர்)
இன்னொருவர் பெண்மணி (நல்ல வேளை பாதிக்கு பாதி வந்துச்சு, இல்லானா தேவையில்லா சலசலப்பு வரும்) "வேதமான" இவர் தஞ்சைக்கு அவர் தம்பி செல்வதால் எனக்கு வேணாம், வேற யாருக்கும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்( என்ன லாஜிக்கோ)
என்னடா இரண்டு பேரும் இப்படி சொல்லிட்டாங்களேனு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போது டிக்கெட் டெலிவரி இன்சார்ஜ் சிபி, அவங்க தான் வேண்டாம் சொல்லிட்டாங்களே நான் எடுத்துக்குறேன் என்று அந்த இரண்டு டிக்கெட்டையும் லவுட்டிக்கிட்டு போயிட்டார். சரி டிக்கெட் போகட்டும். வெற்றி பெற்றவர்களை விட்டு விடுவோம். பின்ன மேட்டரு இருக்கே...
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுர்களின் ஒரே மனோ தைரியத்தை பாராட்டி, அவர்களை தெம்பூட்டும் விதத்தில் நம்ம சங்கம் தர போற அதிரடி அற்புத பரிசு ............
சிவாஜி படப்பிடிப்பின் இடைவேளையில் தேராடூன் தேக்கு, கதக் ஆட்ட காரிகை நம்ம ஸ்ரேயா சாப்பிட்டுட்டு மிச்சம் வச்ச லாலிபாப்கள்...


சந்தோசமா வாங்கிகோங்க... சே... பாத்துக்கோங்க... பீல் பண்ணி பாருங்க ஸ்ரேயா வாசம் அடிச்சாலும் அடிக்கலாம்.
Thursday, June 14, 2007
கற்பும் கருப்பும்!
ஆனால் அதற்காக தவறான வழியில் எல்லாம் போகலை. மனசு கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு. அது எல்லா மனிதனுக்கும் வேனும். எத்தனையோ முறை எத்தனையோ நேரங்களில் வழி தவற அருமையான வாய்ப்பு கிடைத்தும் அந்நியன் அம்பி மாதிரி ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தது போல நல்வழியில் சென்றேன்.
நாகரீகம், கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். 10 வயசு பெண் இங்கே எனக்கு ஒரு பாய்பிரண்டு இருக்கான் என்று சொல்வதை சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. தந்தை, தாய் இருவருமே வேலைக்குப் போகும் கட்டாயத்தில் இருப்பதால் மதிய நேரங்களில் வீட்டில் யாருமில்லா சூழ்நிலையில் தொலைக்காட்சியில் "ஆய்" படங்கள் பார்த்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் சிறார்கள் மிக அதிகம். நாகரீக வளர்ச்சி என்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளே இறங்கிப் பார்த்தால் ரொம்ப அசிங்கம்.
பகல் நேரங்களில் கூட விரைவு ரயில்களில், சாலைப் பேருந்துகளில் உடலைக் காட்டும் உடைகளும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும் வெகு சாதாரணம். பகல் வேளைகளில்கூட பூங்காக்களில் காதல்கள் அரங்கேறும். அடுக்குமாடிக் கட்டிடங்களில் இளைப்பாற கட்டப்பட்டுள்ள சிமெண்டு கட்டைகளில் விரல்கள் களியாட்டம் போடும். விரல் விளையாட்டு இங்கே வெகு பிரசித்தம்!
இதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கு பெண்கள் என்றாலே ஒருவிதமான வெறுப்புதான். வேலைக்காக மேம்போக்காக பேசினாலும் அருகில் அமர்ந்து உண்மையை, சக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் நான் அவர்களை பார்த்ததே இல்லை! அதனாலேயோ என்னவோ எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நீண்ட நாட்களாக இல்லை.
என்னுடன் ஒன்றாக பணிபுரியும் "அத்தாக்" என்ற சீன நண்பரும் திருமணம் செய்துகொள்ள வில்லை. அவருக்கு என்னைவிட இரண்டு வயது அதிகம். ஒருநாள் திடீரென என்னிடம் கல்யாணப் பத்திரிக்கை கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி பிரித்துப் படித்தேன்... வாழ்த்தினேன். ஆனால் பெண் இந்தோனேசியா என்று இருந்தது பத்திரிக்கையில்!
"என்ன அத்தாக், ஏன் அங்கே போனே? இங்கேயே பாத்திருக்கலாமே? லவ் மேரேஜா?"
"அட அதெல்லாம் இல்லை. அதான் உனக்கே தெரியுமே.. இங்க உள்ளது ஒன்னுமே பிடிக்கலை. அதான் அங்கே போய்ட்டேன்"
"ஓ சரி சரி.. புரியுது.."
"அதுசரி நீ ஏன் கல்யாணம் கட்டிக்கலை இன்னும்?"
"I am waiting for a virgin"
"Better you go and search in Kindergarden!"
நடுமண்டையில நச்சுன்னு எவனோ இரும்புக் கழியால அடிச்சதுபோல உணர்ந்தேன்!
Wednesday, June 13, 2007
நகைச்சு வையுங்களேன்!
ஒசாமா: அமெரிக்காவ இந்த உலக மேப்ல இருந்தே மொத்தமா அழிச்சிடனும்!
தல: கவலையே வேனாம். அந்த பொறுப்ப என்கிட்ட விட்டுரு... நம்ம அமைச்சரோட அஞ்சாவது பொன்னு ஸ்கூல் பேக்ல இருந்து திருடுன அழி ரப்பர் இப்ப எங்கிட்டதான் இருக்கு!
********************
அமைச்சர் வேகவேகமாக ஓடிவருகிறார்...
அமைச்சர்: மன்னா மன்னா...!
தல : என்னா?
அமைச்சர்: தூது வந்த புறாவை ரோஸ்ட் செய்து சாப்பிட வேனாம்னு சொன்னேன், கேட்டீங்களா?
தல: இப்ப என்னா அதுக்கு?
அமைச்சர்: அந்த அரசன் நம்ம மேல இப்போ படையெடுத்து வந்து கொண்டிருக்கிறான்...
*****************
ஈராக்கில் தீவிரவாதிகளின் பகுதியில் ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் பழுதாகி விழுந்து, பைலட் மாட்டிக் கொண்டார். முகமூடி அணிந்தவர்கள் அவரை வீடியோ எடுத்து, மண்டையில் ரைஃபிள் வைத்துச் சுடும் நேரத்தில்... அந்த இளம் பைலட் பாஸ்டனில் படிக்கும்போது கொஞ்சம் அரபிக் கற்றிருந்ததால் தீவிரவாதிகளிடம், "நண்பர்களே, சண்டை முடியப்போகிறது. நாங்கள் உங்கள் நாட்டைவிட்டு இதோ ஓடிப் போகப் போகிறோம். எனக்கு இளம் மனைவி, இரு பெண் குழந்தைகள் உண்டு. இதோ அந்த போட்டோ! உங்கள் உள்ளத்தில் கருணை உண்டு என்பது எனக்குத் தெரியும். என்னை விடுவித்தால், உங்கள் மனிதாபிமானம் வெளிப்படும். கொஞ்சம் யோசியுங்கள்!"...என்றான்.
தீவிரவாதிகள் கும்பலாக கூடி கூடிப் பேசினார்கள். "சரி, உன்னை விடுவிக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷனின் பேரில்..!"
"எது வேனாலும் செய்றேன்... சீக்கிரம் சொல்லுங்கள்?"
"அதோ, அங்கே மூன்று கூடாரங்கள் இருக்கின்றன பார்... அவற்றில் அடுத்தடுத்துப் புகுந்து, மூன்று காரியம் செய்து முடித்துவிட்டு வெளிவந்துவிட்டால் போதும். உடனே விடுவிக்கிறோம்!"
"அவ்வளவுதானே... கூடாரத்துக்குள் என்ன?"
"முதல் கூடாரத்தில் பத்து பாட்டில் வோட்கா இருக்கும். நாங்கள் குடிப்பதில்லை. அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் குடித்துவிட்டு வெளிவர வேண்டும். இரண்டாவது கூடாரத்தில் ஒரு பசித்த புலி இருக்கிறது. அதற்குப் பத்து நாட்களாக உணவில்லை. பல்வலியால் மிகுந்த அவதிப்படுகிறது. வெறும் கைகளால், ஒரு மணி நேரத்தில் அதன் பல்லைப் பிடுங்க வேண்டும்...!"
"சரி... மூன்றாவது கூடாரத்தில்?"
"ஓர் அழகான, ஆரோக்கியமான இளம்பெண் இருக்கிறாள். அவளை இன்பமாக்கி விட்டு வந்தால், உன்னை விடுதலை பண்ணுகிறோம்!"
அமெரிக்க பைலட், உயிர் போகப்போறது நிச்சயம்... எதற்கும் முயற்சி பண்ணிப் பார்ப்போமே... காசா, பணமா? என்று முதல் கூடாரத்தில் நுழைந்தான். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை மடக், மடக்கென்று குடிக்கும் சத்தம் கேட்டது. காலி வோட்கா பாட்டில்கள் வெளியே ஒவ்வொன்றாக வந்து விழுந்தன. ஒரு மணி நேரத்தில், நிற்கக்கூட முடியாமல் தள்ளாடித் தள்ளாடி வெளியே வந்தான். பத்து பாட்டில் என்றால் சும்மாவா? அதுவும் வோட்கா!
தடுமாற்றத்துடன், "ழெண்டாவது கூடாழம் எங்க?" என்று கேட்டுக்கொண்டே அடுத்த கூடாரத்திற்குள் நுழைந்தான். புலியின் பெரிய உறுமல் கேட்டது. அவன் அதனுடன் நைச்சியமாகப் பேசுவதும் கேட்டது.
"ஒனக்கு நல்லழுதானே செய்யப் போழேன். கொஞ்சம் அஷங்காம இரு, புளி!"
முதலில் எழுந்த போராட்ட சத்தங்கள் மெள்ள மெள்ள அடங்கி, கொஞ்ச நேரத்தில் புலி மௌனமானது. தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பைலட் வெளியே வந்தான், ஒரே தள்ளாட்டமாக... சட்டை கிழிந்து... உடம்பெல்லாம் புலி கீறிய ரத்தத்துடன். ஆனால், ஆள் முழுசாகத்தான் இருந்தான். சுற்றிச் சுற்றி வந்தான்.
"என்னப்பா தேடுற?"
"இல்ல வந்து வந்து... அ... அடுத்தது... அந்தப் பல்வலிப் பெண் எங்க... காட்டுங்க?" என்றான்.
**************
Tuesday, June 12, 2007
ராயல்ஜி - The Boss
சிவாஜி - The Boss டிரெயிலரை எல்லாரும் பார்த்திருப்பீங்க. எங்க பாஸோட டிரெயிலரை பார்த்தீங்களா? சங்கத்தோட கடனை அடைக்க சின்ன தலயை வச்சு பூஜை போட்ட படம் தான் "ராயல்ஜி - The Boss". பலவிதமான கெட்டப்புக்காக ஜெமினி சர்க்கஸ்ல சிங்கத்துக்கு பிடறிமுடி சீவிவிடும் மேக்கப் மேனை ஸ்பெஷலா கூட்டிட்டு வந்து மேக்கப் போட்டு ராயலோட கேமராவுலயே ஸ்டில்ஸ் எடுத்து டிரெயிலர் ரீலிஸ் பண்ணோம். டிரெயிலரைப் பார்த்தே அரண்டு போன ஷங்கர், ஏவிஎம் சரவணன் பயந்துபோய் எங்க படத்தை டிராப் பண்ண சொன்னப்போ கூட கேட்கல. அப்புறம் சூப்பர் ஸ்டாரே வந்து கேட்டதால படத்தை டிராப் பண்ணிட்டோம். அந்த படத்தோட எக்ஸ்க்ளூசிவ் டிரெயிலர் கீழே!
"தடதட ஓடுவது உன் ஸ்டைல்
அவ்வ் அவ்வ் அவ்வ் அழுவது உன் ஸ்டைல்
கடகட சிரிப்பது உன் ஸ்டைல்
அடிக்கடி அடிபடுவது உன் ஸ்டைல்
எல்லாமே ஸ்டைல்"
"எனக்கு தேவை சங்க கலாசாரத்தோட ஒரு ஆப்பு"
"ஆப்பு போனா வரும் உயிர் போனா வருமாங்க. இனிமே என்ன தேடி வராதீங்க"
"ஆப்பு இல்லாத நாள் தெரிஞ்சுபோச்சுன்னா வாழற நாள் நரகமாயிடும். ஆப்பு தாங்க முக்கியம்"
"நான் என்ன பிசினஸ் பண்றதுக்காய்யா பர்மிஷன் கேட்டேன்? சங்கத்துல ஆப்பு வாங்கறதுக்கய்யா"
"என்ன ஏன்மா இராயலா பெத்த?"
"இல்லன்னா மத்தவங்க ஆப்பு அடிக்க முடியாதுன்னு தாம்பா இராயலா பெத்தேன்"
"நம்ம நாட்டுல ஆப்படிக்கறது இன்னும் குறையல. ஆப்படிக்கறவன் அடிச்சுட்டே இருக்கான். வாங்கறவன் வாங்கிட்டே இருக்கான்"
"இதான் என் சங்கம். இதுக்கு நல்லது செய்யாம விடமாட்டேன்"
"எங்க தல இதுவரைக்கும் பத்தாயிரம் பேருக்கு மேல ஆப்பு வாங்கியிருக்காருங்க"
"நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா இப்படி இருக்க உங்க சங்கம்
இப்படி ஆயிடும்"
"இராயல் எவ்வளவு பெரிய ஆப்புகள் வாங்கிட்டிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"யாரு?"
"கோன் ஹை?"
"BOSS. Bachelor of Sangam Service"
"பேரைக் கேட்டவுடனே சும்மா ஆப்படிக்கனும்னு தோணுதுல்ல"
சைட் அடிக்கப் போனா சும்மா அதிருதுல்ல...
"எல மாப்ள. பத்தாப்பு படிக்கோம். மாடு மாதிரி வளந்து நிக்கோம். இன்னும் நம்மள இந்த வாத்திமாரு மதிக்கவே மாட்டுக்கிறானுவளே. ஏம்ல?"
"எல சவுத்து மூதி. ஏற்கனவே லேட் ஆவுதுல்லா. நீ வேற என்னத்தலப் போட்டு சலம்புத?"
"இந்த ஆறாப்புப் படிக்குற ரோஸ்மேரி பயலுவெல்லாம் பேண்டு போட்டு அலையிறானுவ. பத்தாப்பூ வந்தும் நம்மள டவுசர் போடச் சொல்லுதானுவள்ல. அதத்தாம்ல சொல்லுதேன்"
"எல. அவிங்க பள்ளியூடத்துல கேள்ஸ் இருக்காவள்லா. அதான்."
"நம்மப் பள்ளியூடத்துல ஏம்ல கேள்ஸ் இல்ல?"
"பொண்ணுங்க இல்லாமலே இந்தப் பயலுவ ரவுசு தாங்க முடியல. இதுல அவிங்களையும் சேத்துப் போட்டானுங்கன்னா... நம்ம தமிழ் வாத்தியார் பீரியட்லெல்லாம் ஒரு பொண்ணாவது ஒக்காந்து அவரு பேசுறத கேக்க முடியுமா?"
"அதுக்கு இல்ல மச்சி. அவுளவலும் நம்ம ஸ்கூல்ல படிச்சாவன்னா, நாம இப்படி அலைய வேண்டியது இல்லைல. அதுக்குத்தாம்ல சொன்னேன்"
"அப்ப மட்டும் போவாம இருப்போமா? இக்கரைக்கு அக்கரை பச்ச மாப்பு"
வேகமா பேண்ட மாட்டி, சட்டைய இன்ஸெர்ட் பண்ணி, பெரிய பட்டி பெல்ட்ட போட்டுக்கிட்டு, நண்பன்கிட்ட பெல்ட், பேண்ட், சட்டை ஆங்கிளெல்லாம் கரெக்ட்டா இருக்குதான்னு செக் பண்ணச் சொன்னேன்.
"மக்கா... பாக்குறதுக்கு அஜித் மாரி இருக்கேனா?", அப்படியே தலையைச் சீவியவாறேக் கேட்டான் என் நண்பன்.
"எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாவ. கழுதைக்கு பேரு முத்துமாலைனு"
"மவனே... இன்னைக்கு உனக்கு ஒரு ஃபிகரும் மாட்டாது"
"ஆமா. இவருக்கு மட்டும் எக்கச்சக்கம் சிக்கப் போவுது?"
அதுக்கப்புறம் வேகமா ஸ்கூல் ஸைட்ல "குடிநீர். குடிப்பதற்கு மட்டும்" னு போட்டிருக்குற பைப்ல தண்ணிய கைலப் புடிச்சு மூஞ்ச கழுவி, கர்சீப்ல ஏற்கனவே போட்டு வச்சிருந்த பவுடர பூசிட்டு, எங்க தண்டர் பேர்ட் ஹெர்குலஸ் ஸைக்கில்ல கெளம்பினோம்.
"மாப்ள இன்னைக்கு எந்த ஸ்கூல்?", வெகுளியான நாந்தான்.
"சைல்ட் ஜீஸஸ் வேணாம் மாப்பு. பாத்து பாத்து போரடிச்சிடிச்சு. அதுவுமில்லாம எக்கச்சக்க மொக்க ஃபிகரா இருக்குது. பேசாம பஸ் ஸ்டாண்ட் போயிடலாம். மூனு ஸ்கூல் சஞ்சமிக்கிர எடம். சாரா டக்கர் ஃபிகரெல்லாம் டக்கரா இருப்பாளுவ. கான்வெண்ட் ஃபிகர்களும் அங்குன வருவாளுவ. அப்படியே ரோஸ்மேரி ஃபிகர்ஸும் வரும்"
"சூப்பர் மச்சி.. இதுக்குத்தான் நம்ம பாளையங்கோட்டையத் தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டுனு சொல்லுதாவளோ?"
பஸ் ஸ்டாண்ட்ல போய் நின்னா நாம ஸைட் அடிக்கிறது க்ளீனா தெரியும்ங்றதால, பஸ் ஸ்டாண்ட் போற வழில ரோஸ்மேரி ஸ்கூல் பக்கத்துல ஒரு கையேந்தி பவன் இருக்கும் அங்குன ஆளுக்கு ரெண்டு ரூபாய்க்கு பஜ்ஜிய வாங்கித் தின்னுக்கிட்டு அப்படியே பேக் ரவுண்ட்ல "கவலை மறந்தோம்.. பெண்ணைக் கண்டு"னு ஒரு ஸாங்க ஓட விட்டுக்கிட்டு அப்படியே பார்வைய மேய விடுவோம்.
5 மணி இருக்கும். ஒரு அழகான புள்ள ஸைக்கிள்ல, அப்படியே பறக்குற குதிரையப் பூட்டுன ரதத்துல போற தேவதை மாதிரி பறந்து போய்க்கிட்டு இருந்தா. அவ சைக்கிள் பெடல மிதிக்கிற ஒவ்வொரு மிதியும் சுத்தி நின்னுக்கிட்டு இருந்தவனுவ நெஞ்சுல விழுந்துச்சு. அவளப் பாத்துக்கிட்டே சூடா அம்புட்டு நேரம் திங்க முடியாம இருந்த பஜ்ஜிய அப்படியே வாயில போட்டோம். அன்னைக்குச் சாகுபடி நல்ல படியா முடிஞ்சு வீட்டுக்குக் கெளம்பிட்டோம்.
அடுத்த நாள் அதே மாதிரி 4:30 மணிக்கு கும்முன்னு அதே எடத்துல நின்னுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேக்கப். ஜீன்ஸ் பேண்ட். என்னுடைய நண்பன் என்கிட்டச் சொல்லாமலேயே ஷூவும் போட்டுக்கிட்டு வந்துட்டான். துரோகி. அதே நேரம், அதே தேவதை. அப்படியே கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் பாத்துக்கிட்டே இருந்தோம்.
"மாப்ள அவள ஃபாலோ பண்ணுவோமா?", நண்பன் வெவெகாரமா ஆரம்பிச்சான்.
"என்னடா மாப்பு சொல்லுத? ஏதாவது எடக்கு மடக்கா ஆயிறாதுல்ல?"
"அதெல்லாம் ஆவாது மாப்ள. கெளம்பு. கெளம்பு", என்னோட பதிலுக்கு நிக்காமையே வேகமா சைக்கிள அழுத்த ஆரம்பிச்சிட்டான். வேற வழி இல்லாம நானும் அவன்கூட போனேன். மெதுவா சமாதானபுரம் வழியா போய்க்கிட்டு இருந்தவ பின்னாலேயே ஏதோ நாங்க பேசிட்டே போற மாரி போனோம். நாங்க பின் தொடருறத அவ பாத்துட்டா. சைக்கிள வேகமா அழுத்துனா. அதுவுமில்லாம அப்பப்ப திரும்பி திரும்பி நாங்க அவளத்தான் ஃபாலோ பண்றோமான்னு செக் வேற பண்ணா. அவ மொகத்துல செம பயம். நேரா போக வேண்டியவ, சட்டுனு ஒரு முக்குல திரும்பி அழுத்த ஆரம்பிச்சா. நாங்க விடுவோமா?? அதே சந்துல திரும்புனா அவளுக்குச் சந்தேகம் அதிகமாயிடும்னு அடுத்தச் சந்துல திரும்பி கரெக்ட்டா அவ பின்னாடி வந்து சேந்தோம். அப்புறம் பாத்தா, அவ எங்க ஏரியாக்கேப் போறா. அப்பத்தான் நமக்கு லேசா கலக்க ஆரம்பிச்சது.
மண் புழுவப் பாத்தாலே பாம்புன்னு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடுற தைரியசாலி நாம. ஒரு பொண்ண அவ ஏரியாலையே ஃபாளோ பண்றோம். நம்ம ஏரியாவும் கூட. அவ ஆளுங்க ரெண்டு பேரு வந்து 'ஏம்ல இங்க சுத்துதிய?'னு கேட்டாலே எல்லாத்தையும் ஒளறிடுவோம். நம்ம ஏரியால வேற காந்திக்கு அப்புறம் நல்லவன் ஜி தான்னு ஒரு பேர வேற எடுத்துத் தொலச்சொட்டோம்.
"மாப்ள. மறந்தே போயிட்டேம்ல. எங்க சித்தப்பா வீட்டுக்குப் போவனும். நான் போயிட்டு வர்றேன். நீ கண்டினிவ் பண்ணு"னு எஸ்கேப் ஆயிட்டேன்.
அடுத்த நாள் பக்கத்து க்ளாஸ் நண்பன் வீட்டுக்குப் போனோம். அவன் வீட்டுக்கு அப்பத்தான் ஃபர்ஸ்ட் டைம் போனோம். பாத்தா, அந்தச் சிட்டு அவன் வீட்டுக்குப் பக்கத்து வீடு.
"எல மக்கா. இனி உங்க வீட்டுக்கு அடிக்கடி வரணும் போலையே..", லேசா ஆரம்பிச்சோம்.
"என்னல ஒரு மாரி பேசிறிய? பக்கத்து வீட்டுப் புள்ளையப் பாத்தியளோ?"
லேசாய் வழிஞ்சுக்கிட்டே, "அவ பேரு என்ன மாப்பி?"
"அவ பேரு xxxxxx (பேரப் போட்டு மாட்டிக்கிடதுக்கு நான் என்ன ராமா? இல்ல தம்பியா?). எலேய் அவள ரூட் விடுற வேலையெல்லாம் வச்சிக்கிடாதிய"
"உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தா அவ உன் ஆளா? அவ பப்ளிக் டெலிஃபோன் பூத். யாரு வேணும்னாலும் ஸைட் அடிக்கலாம்"
"எல. பக்கத்து வீட்டுல இருந்துக்கிட்டே நான் ஏன் அவள ஸைட் அடிக்காம இருக்கேன்னு சொல்லு?"
"அவுங்க அம்மா உங்க அம்மாக்கிட்ட சீனி கேட்டிருப்பாங்க. அப்படியே உனக்கும் அந்தப் பொண்ணத் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்ச பொண்ணுங்களத்தான் ஸைட் அடிக்க முடியாதே. அதுனாலத்தான் நாங்க எந்தப் பொண்ணுங்களையும் தெரிஞ்சிக்கிறதே இல்ல.", அவன்கிட்ட பேசிட்டு இருந்தாலும் நாலு கண்ணு மட்டும் அவ வீட்டையே நோட்டம் விட்டுட்டு இருந்துச்சு.
"எங்க அம்மா சீனியும் வாங்கல. உப்பும் வாங்கல. கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம சீனியர் ஒருத்தனப் போட்டாங்கள்ல. அது இந்தப் பொண்ணுக்காகத்தான்"
"என்னல சொல்லுத?" பேச்சு வாயில வர்றதுக்குள்ள எக்கச்சக்க நேராமாயிடிச்சு.
"ரெண்டு கேங்கல இருந்து இந்தப் பொண்ண ரூட் விட்டுக்கிட்டு இருந்தானுவ. அதுல ஒரு கேங்க்தான் இன்னொரு கேங்க் ஆளப் போட்டுத் தள்ளுனானுவ"
அப்படியே எங்களுக்கு வேக்க ஆரம்பிச்சது. கைல லேசா நடுக்கம். நம்ம கேங்கெல்லாம் 'அண்ணாச்சி. இவன் இங்குட்டுத்தான் ஒழிஞ்சிக்கிட்டு இருக்கான்'னு காட்டிக் கொடுக்குத எட்டப்பன் பயபுள்ளைங்களாச்சே. அந்த நேரத்துல அவ வீட்டைவிட்டு வெளில வந்து, எதுத்தாப்ல இருக்குறக் கடைக்குப் போனா. போற வழில எங்களையே மொறச்சிப் பாத்துக்கிட்டேப் போனா. அந்தக் கடைக்காரங்கக்கிட்ட வேற எங்களப் பத்தி ஏதோ சொல்லுத மாதிரி இருந்துச்சு. அப்படியே அந்த நண்பன் பக்கத்துல போய்
"மச்சான். நாங்க யாருன்னு யாராவது கேட்டா, தெரியாது. சும்மா அட்ரஸ் கேட்டாங்கன்னு சொல்லு. ஸ்கூல்ல உன்கிட்ட ஆட்டையப் போட்ட பேனாக்காக பழி வாங்கிறாதடா. இது உயிர் பிரச்சனை"னு வேகமா சைக்கிள அழுத்திக்கிட்டு அந்த எடத்தவிட்டு கெளம்புனதுதான். அதுக்கப்புறம் பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கங்கூட போகவே இல்ல.
சட்டையில் இருப்பது சிங்கப்பூரில் குற்றம்!
என்னங்க ஒன்னும் புரியவில்லையா? சட்டை என்பது ஹேங்கை(வன்முறைக்குழு) குறிக்கும். இங்கே பல குழுக்கள் இது போல இருக்கின்றன. கட்டப் பஞ்சாயத்துகள், முழு நீல வண்ணப்படம் விற்பது, நான்கிலக்க லாட்டரிச் சீட்டு சட்டத்திற்குப் புறம்பாய் விற்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது, தூள்(கஞ்சா, அபின், ஹெராயின்) விற்பது, பொம்பளை பிசினஸ் என்று பல குற்றங்களைச் செய்கின்றனர் இந்த சட்டைகள்.
உறுப்பினர்களின் தலைவன் மண்டை அல்லது தல என அழைக்கப் படுகின்றனர். சட்டை உறுப்பினர்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட கட்டணத்தை தங்கள் தலைமைக்கு கட்டுகின்றனர். இந்த நிதியானது தலையின் தண்ணி, தம் போன்றவற்றிற்கும் சண்டைக்காக செல்லும்போது வாடகை ஊர்தி, பேனா, நோட்டு போன்ற பொதுப் பிரச்னைகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் கருப்பு டிசர்ட் அல்லது கருப்புச் சட்டைகளையே அணிகின்றனர். உடலில் பச்சைகள், காதில் வளையம் போன்றவை இத்யாதி.
சட்டைகளுக்கு என நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. சட்டையின் உறுப்பினர்களில் ஒருவர் சிகரெட் கேட்டால் ஒன்றை எடுத்து நீட்டுதல் கூடாது. பெட்டியைத் திறந்து ஒன்றை மட்டும் வெளியே சற்று இழுத்து வைத்து முழுப் பெட்டியையும் நீட்ட வேண்டும். அவர் அந்த ஒன்றை உருவிக் கொண்டு நன்றி சொல்வார். அதேபோல தண்ணியடிக்கும் முன்னர் சியர்ஸ் சொல்ல வேண்டும். அனைவரும் வாய் வைத்து சூப்பிய பின்னரே கிளாசை கீழே வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எல்லா பீரையும் குடிக்கக் கூடாது. கண்டிப்பாக கடைசியில் கொஞ்சம் சாமிக்கு வைக்க வேண்டும். மீறுவோர் சட்டை தலையினால் எச்சரிக்கப் படுவர். அடிக்கடி மீறுவோர் சட்டையில் இருந்து தள்ளி வைக்கப் படுவர்.
இந்த சட்டைக்கும் அடுத்த தெரு சட்டைக்கும் சண்டை வந்து விட்டால் மூன்றாம் தரப்பு சட்டைகளும் சில சமயம் அமைதிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வது உண்டு. மண்டையோடு மண்டைகளும் சட்டையோடு சட்டைகளும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கும்போது வலது கையின் கட்டைவிரலை ஒன்றோடு ஒன்று மோதுவர்!
எக்காரணத்தைக் கொண்டும் இன்னொருவரின் சரக்கை(கேர்ள் பிரெண்டை அப்படித்தாம்பா சொல்றாங்க) கச்சரவு(டிஸ்டர்ப்பின் மலாய் வார்த்தையாம்) பண்ணக் கூடாது. மீறுவோர் மண்டையால் எச்சரிக்கப்படுவார். ஏரியா மாறி அடுத்த சட்டையின் சரக்கை கலாய்ப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. ஒரே சட்டைக்குள் இருக்கும் பெண் உறுப்பினர்களை அவர்களின் சம்மதத்தோடு ஆண் உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும்!
சட்டையின் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரமும் மண்டையால் பாதுகாப்பு கொடுக்கப்படும். 24 மணி நேரமும் எல்லாரும் மண்டையை அழைத்து தகவல் சொல்லலாம். தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் பிரச்னைகளை தீர்க்க ஆவன செய்யப்படும்.
இதெல்லாம் எனக்கு சட்டை உறுப்பினர் ஒருத்தர் சொன்னார். என்னையும் அதில் சேரச் சொன்னார். வேண்டாம்யா வம்பு என்று ஓடி வந்துட்டேன். இத்தனை களேபரங்கள் நடக்கின்றன சட்டையாலும் மண்டையாலும். ஆனால் நம் சங்கத்து தலை இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடுவது இல்லை. அவுரு ரொம்ப ரொம்ப நல்லவரு!
Monday, June 11, 2007
சங்கம் - சோசியல் சர்வீஸ்
அது அனைவரும் அறிந்த செய்தி!!!!
அப்போட்டியை அறிவித்தப் பொழுது நாங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் ஒருவருக்கு வழங்கப்படும் என்றே குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் அப்போட்டியை அறிவித்த வினாடி முதல் வந்து குவிந்த வரவேற்பை முன்னிட்டு பரிசுத்தொகையை அதிகப்படுத்தி அதை ஆறு பேருக்குப் பங்கிட்டு தரலாம் என முடிவு செய்தோம்,
வந்து மலையெனக் குவிந்த 105 பதிவுகளில் பரிசுக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்றே தடுமாறிதான் போனோம்.
சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் வெவ்வெறு நாடுகள், மாநிலங்கள் என இருப்பதும், காலச்சூழ்நிலை, பணிச்சுமை என பலவகையான காரணங்களையும் தாண்டி போட்டியின் முழுப் பொறுப்பினையும் செவ்வன செய்து முடித்தது இனியதொரு அனுபவமாக அமைந்தது.. அதற்கு நம்ம சங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கிறோம்
போட்டியும் வைச்சாச்சு அதில் ஆறு பேர் ஜெயிச்சாச்சு.. பரிசை அவங்க கிட்டச் சேக்கணும்.. . பரிசை எப்படி அனுப்புவது என ஆலோசிக்கையில்.. பரிசினைத் தாங்கள் பெறுவதை விட தங்கள் வெற்றி இன்னும் பலரை மகிழ்விக்கும் விதமாகப் பரிசினை எதாவது தொண்டு நிறுவனத்திற்கு அளிக்குமாறு மனமுவந்து கருத்துக்கு உடன்பட்டு வெற்றியாளர்கள் இன்னொமொரு வெற்றி பெற்றனர்.. இம்முறை அவர்கள் பல இதயங்களையும் வென்றனர்..
பரிசுத் தொகையான 3000 ரூபாயோடு, நண்பர் சிவிஆர் அனுப்பிய தொகையான 2000 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக இயங்கி வருகின்ற
காக்கும் கரங்களுக்கு நாங்களே நேரடியாக சென்று Rs.5000/- நம் வ.வா.சங்கத்து நண்பர்கள் பெயரில் வழங்கி வந்தோம்.

எந்தவொரு செயலுக்கும் ஊக்கமாய் உறுதுணையாய் என்றென்றும் எங்களுக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சிறம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாக்கட்டும். இன்னும் இதேப்போல பலவகையான சமுகப்பணிகளை மேற்கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம் என்பதை இங்கே அறிய தருகின்றோம். அதற்கும் உங்களின் மேலான ஆதரவுகளை எதிர் நோக்கி என்றொன்றும் உங்களின் நண்பர்கள்
தலைமுடி தத்துவங்கள்!
இதுக்கு எதுக்கு காசு? சும்மா குளிச்சிட்டு வந்து துண்டால தலையை துவட்டினாலே இப்படித்தான்டா இருக்கும் என்றேன். என்னை அடிக்கத் துரத்தினான் அந்த சீனன்! எப்படி எல்லாம் நாட்டில் கொள்ளை அடிக்கின்றனர் பாருங்கள்!
தலைமுடி உதிர்வது ஒரு சிலருக்கு கவலை! முடி நிறைய இருப்பதுவோ முடிவெட்ட பணம் இல்லாதவர்களுக்கு பெரும் கவலை! இப்படி கவலைகள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதம். தற்போது டென்மார்க்கில் முடி நடுவது, முடி ஒட்டுவது போன்ற முறைகளால் தலை முடி இல்லாதவர்கள் தமது தேவைளைப் பூர்த்தி செய்கிறார்கள். சமீபத்தில் இறந்து போன ஒருவரின் தலை முடியை தோலோடு சீவி எடுத்து, உயிருடன் இருக்கும் இன்னொருவருக்கு ஒட்டியிருக்கிறார்கள்.
உலகில் ஆண்கள், பெண்கள் என்று தலை முடியலங்காரம் செய்வதென்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் இவ்வேளையில் தலைமுடிக்கு நிறமூட்ட அல்லது நீட்டப் பயன்படும் இரசாயனப் பொருட்களின் பக்க விளைவால் பலர் தங்கள் உண்மை அழகை இழந்து வரும் நிலை உலகில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரிப்பு, சொறி, வீக்கம், விகாரம் போன்ற நோய் அறிகுறிகளைக் காண்பிக்கவும் செய்வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
தலைமுடி நிறமூட்டிகளில் உள்ள para-phenylenediamine (PPD) எனும் நச்சுப் பொருளே இந்த வகையான ஒவ்வாமை விளைவுகளுக்கு முக்கிய காரணம் என்றும் PPD யும் தலை முடி நிறமூட்டிகளில் காணப்படும் இன்னோர் இரசாயனமான tetrahydro-6-nitroquinoxaline எனும் இரசாயனமும் சேர்ந்து உடற்கலங்களில் உள்ள டிஎன்ஏ எனும் பிறப்புரிமையியல் பதார்த்தத்துடன் தாக்கமுற்று விகாரங்களை தோற்றுவித்து புற்றுநோய் தோன்ற வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!
ஸ்டைல், நிறம் என அலையும் இளைய சமுதாயத்தினர் கவனமாக இருக்க வேண்டும்! அல்லது பேசாமல் நம்ம கைப்புள்ள ஸ்டைலில் அப்படியே விட்டுரலாம்... செலவும் மிச்சம்.
தலைமுடிகளைப் பற்றி பெரியவர்கள் சொன்னது இதோ:-
பாப்பாக்களுக்கு, தலையில் முடி இல்லை. இதேபோல, முதியவர்களின் தலைகளும் உள்ளன. தொட்டிலுக்கும் சாமதிக்கும் இடையே, முடி வெட்டுதலும் ஷேவ் செய்து கொள்ளலும் இருக்கின்றன. - சாம்யூவல் ஹாபன்ஸ்பெயின்
உங்களுடைய தலைமுடி ஒவ்வொன்றும் எண்ணப்பட்டு இருக்கின்றன. - பைபிள்
பத்து நுகத்தடிகளில் பூட்டப்பட்ட எருதுகள்கூட, ஒரு பெண்ணின் முடியைப்போல, நம்மை இழுக்க முடியாது. - லாங்பெலோ
Sunday, June 10, 2007
Operation கில்மா - 2
அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com
"என்னண்ணா இது பேரு..."
"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...
அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்
நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்
ராயல் : ASL please...
"அண்ணா இது என்ன எங்க ஐத்தான் ABCD தப்பு தப்பா சொல்லுது?"
"தாயி... இது ABCD இல்லை. இதுக்கு Age, Sex, Locationனு பேரு"
"என்னணா இப்படி அசிங்க அசிங்கமா பேசறீங்க"
"தாயி... நீ நினைக்கிற மாதிரி அந்த Sex கிடையாது. ஆணா/பொண்ணானு கேக்கறாரு உங்க ஐத்தான்"
"அதக்கேட்டு என்ன பண்ண போறாக?"
"வயசு, ஊரு தெரிஞ்சாதான் பேசுவாகளாம்"
"அது எதுக்க அவகளுக்கு?"
"இப்ப பாரு தாயி உனக்கே புரியும்"
MP: 20,F,Salem
அண்ணா இது என்ன சேலம்னு போட்டிருக்கீக?
ஆமாந்தாயி.. 20 வயசு பொண்ணா இருந்தாதான் பேசுவாரு. இல்லைனா இண்டர்நெட் பிரச்சனைனு கிளம்பிடுவாங்க.
அண்ணா...எங்க ஐத்தான் நல்லவக. அவுகள இப்படி சொன்னீக அப்பறம் அந்த ஆத்தா மகமாயி உங்கள சும்மாவிட மாட்டா
தாயி... நான் எதுவும் சொல்லல. நீயே பாரு. இனிமே எதுவும் பேசாத. இந்த சேட்டை மட்டும் பாரு
Royal: Hey... u from Salem. Me from Bangalore yaa...
MP: Is it? What are you doing in Bangalore?
Royal: Me??? U know Microsoft???
MP: Yes... very big company
Royal: I am a project manager in Microsoft
இங்க பாரு தாயி... Microsoft Windowsஅ திறந்த காத்து வருமானு கேட்ட பய இப்ப கலர் கலரா ரீலு விடறான் பாத்தியா?
MP: wow... neenga periya aalu thaan poala...
Royal: he he.. athellam illai... en latchiyame Bill Gatesai vida oru roobai athigam sambathikanumnu thaan... BTW, nee enna panra?
நேத்து வியாபாரி பார்த்திருப்பானு நினைக்கிறேன். அடிச்சி விடுடா ராசா...
MP: naan inga Nirmala collegela B.Sc Comp Science padikiren...
Royal: OMG!!! neengalum comp field thaana?
"அண்ணா.. அது என்ன ஓம்ங்?"
"தாயி.. அது ஓம்ங் இல்லை... Oh!!! My God"
"இப்ப எதுக்கு சாமிய கூப்பிடறாக?"
"சாமியையும் கூப்பிடல மாமியையும் கூப்பிடல... அவரு ஃபீல் பண்ணறாராம். ரெண்டு பேருக்கும் இருக்கற ஒத்துமையை நினைச்சி"
"ஓ"
MP: pinna B.Sc Comp Sciencena Computer field illama paddy fieldaa?
Royal: ROFTL... sema humour sense unaku... i like it ya...
அண்ணா.. அது என்ன ரோபல்?
அது ரோபலும் இல்லை கோபாலும் இல்லை.. தரையில விழுந்து விழுந்து சிரிக்கறாகளாம்...
அய்யோ பார்த்து சிரிக்க சொல்லுங்கண்ணா. விழுந்து சிரிக்கும் போது அடிப்பட்டுடப்போகுது
தாயி.. அண்ணன கொலக்காரனாக்காத.

Royal: naan actuala embedded systemla real time operating systemai implement panrathula iruken... u know thats really high funda... lets talk abt some interesting stuff ya.. un unmaiyana peru enna?
MP: unga perai sonna thaan naan en perai solluven...
Royal: ekapathini viruthar... avar peru thaan en peru
MP: ponnusamy?
Royal: athu yaaru?
MP: enga appa. avaruku enga amma mattum thaan...
Royal: LOL
அண்ணா இப்ப எதுக்கு கொரைக்கறாக?
அது கொரைக்கறதில்லைமா... சத்தம் போட்டு சிரிக்கறாகளாம்
ஓ... எங்க ஐத்தான் எப்பவும் சத்தம் போட்டு தான் சிரிப்பாக. அவருக்கு அப்ப கன்னத்துல வேற குழி விழும் பாருக... பிரபுவே தோத்துடுவாக... அம்புட்டு அழகு
தாயி... வேணாம். என் பொருமைய சோதிக்காத. இப்ப பாரு
MP: unga peru raamaa?
Royal: Wow... sema talentpa nee... eppadi kandupidicha?
MP: athellam enga thiramai.. en pera Akila
Royal: ehhh.... Akilandeswari thaane
MP: Wow... eppadi kandupidichinga?
Royal: athuvaa... en close friend peru kooda Akilandeswari thaan. aana Akhilanu style-a solluva...
MP: ohhh... athaan kandupidichiteengala?
Royal: un peroada Speciality theriyuma unaku?
MP: athu enna speciality?
Royal: Akhilandeswarina intha ulakathaiye paathukaravanganu artham... Akhila Akhila paatu kooda antha arthathatula thaan ezhuthinaanga
MP: kalakareenga... summava Microsoftla velai koduthaanga
Royal: he he... ithu ellam saatharanam... enaku salemla close friend kooda oruthan irukaan... neenga salemla enga?
நல்லா மாட்டினார் உன் மாமன்... அவருக்கு சேலம் சுத்திக்காட்டுவோமா?
டூரா? எங்க மாமாவுக்கு டூர்னா ரொம்ப பிடிக்கும்...
சரி. அப்ப டூர் அடிக்க வெச்சிடுவோம்...
(தொடரும்...)
Saturday, June 9, 2007
கீழ்ப்பாக்கத்தில் நம்ம தல!
மருத்துவர் ஒரு வட்டம் வரைஞ்சி "இது என்ன"ன்னு கேட்டாரு.
அதுக்கு நம்ம தல "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்ன்னு சொன்னாரு.
அப்புறம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "இது என்ன"ன்னு கேட்டாரு.
அதுக்கு தல "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்.
அப்புறம் மருத்துவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னு கேட்டாரு.
அதுக்கு நம்ம தல "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னு சொன்னாரு.
அதிர்ந்து போன அந்த மருத்துவர் "அடச்சே! அசிங்கம் புடிச்சவரே.. இவ்வளவு அசிங்கமா அசிங்கமா சிந்திக்கறியே, என்ன ஆளுய்யா நீர்?"ன்னு கேட்டாரு...
உடனே நம்ம தலைக்கு தலைக்கு மேல இல்ல இல்ல மூக்குமேல கோவம் வந்துட்டுது..."பின்ன நீ மட்டும் என்னய்யா.. நானும் அப்போ புடிச்சு பார்த்துக்கிட்டே இருக்கேன்... நீயும் அசிங்கம் அசிங்கமாவே வரைஞ்சிக்கிட்டே இருக்கே"ன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்...
Friday, June 8, 2007
சிவாஜி ஸ்பேஷல் ஷோ - Update

முதலில் சிவாஜி ஸ்பேஷல் ஷோவிற்கு சிலரை தேர்ந்து எடுத்து ஒரு திரையரங்கில் மட்டும் டிக்கெட் கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் பலரும் பல இடங்களில் டிக்கெட் கேட்ட காரணத்தால் மீண்டும் ரசிகர் மன்றங்களில் மிக தீவிரமாக இருக்கும் நெருங்கிய நண்பர்களை தொடர்புக் கொண்டு நிலைமை விளக்கி பல இடங்களில் உள்ள திரையரங்களில் டிக்கெட் பெற முயற்சி செய்தோம். அதில் வெற்றியும் வெற்று உள்ளோம்.
அடுத்த வாரத்தில் (12 அல்லது 13 ) எந்த எந்த திரையரங்கம், எந்த நாள், எந்த காட்சி என்பதையும் கூடவே குலுக்கலில் வெற்றி பெறும் நண்பர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும். பல இடங்களில் டிக்கெட் வழங்க இருப்பதால் டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு - பின்னூட்டங்களில் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கத்து சிங்கம் பற்றிய ரகசியம்!
அன்புள்ள கடவுள் அவர்களுக்கு,
தற்போது எனது நிதிநிலைமை மோசமாக இருப்பதால் அவசரமாக என் பெயருக்கு ரூபாய் 50 அனுப்பி வைத்து உதவி செய்யுங்கள்.
இப்படிக்கு,
விவசாயி
சங்கத்து சிங்கம்
வ.வா. சங்கம்
என்று கையொப்பமும் இட்டு அதனை கடவுள், இந்தியா என்று விலாசமிட்டு தபால் பெட்டியில் போட்டார். அந்த தபாலைப் பார்த்த குசும்பு புடிச்ச தபால்காரர் அதை நம்ம இந்திய நிதித்துறை மந்திரிக்கு அனுப்பி வைத்து விட்டார்...
அந்த கடிதத்தை பிரித்து படித்துப் பார்த்து உச்சு கொட்டிய மந்திரி, சிங்கத்தின் மீது பச்சாதாபம் பார்த்து போனாபோகுதுன்னு இரக்கம் கொண்டு 20 ரூபாய் அவருக்கு பெரிய உதவியாக இருக்கும் என எண்ணி அதை அனுப்பி வைக்க தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார்!
அந்த தொகையை பெற்ற நம் சிங்கத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரவால்லியே... சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அந்த ஆண்டவரே நமக்கு காசு அனுப்பி இருக்காரேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டார்! நன்றி மறப்பது நன்றன்று...! எனவே கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பி பதில் கடிதம் எழுதினார் நம்ம சிங்கம்..
"என் மீது தனிப்பட்ட அன்புள்ள கடவுளுக்கு நன்றி.. நீங்கள் அனுப்பிய பணம் வந்து கிடைத்தது. பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. இருந்த போதிலும் அந்த பணத்தை நீங்கள் இந்திய நிதித்துறை மந்திரி மூலமாக அனுப்பி வைத்திருக்கிறீர்...அந்த குரங்குகள் 30 ரூபாயை வரிப்பணமாக பிடித்து விட்டனர்! அடுத்தமாதச் செலவுக்கும் 50 ரூபாய் தேவைப்படுகிறது எனக்கு. எனவே இனிமேல் நீங்கள் எனக்கு பணம் அனுப்புவதாக இருந்தால் நேரடியாக அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்!"
அதுக்குப் பிறகும் பணம் வந்துதான்னு கேட்கறீங்க...!... இது நம்ம சிங்கம் டவுசர் போட்டு அஞ்சாப்பூ படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி. உண்மையா பொய்யா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
*போட்டுக் கொடுத்தவர்: கருப்பு!*
Thursday, June 7, 2007
என் முதல் ராத்திரி அனுபவம்...!
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. மூளைகூட சரிவர செயல்பட மறுத்தது. என் எண்ணம், மூளை, செயல் எல்லாம் என் கட்டுப்பாட்டில் சுத்தமாக இல்லை! 6.6.19**- அன்றுதான் நான் இந்த பூமியில் ஜனித்த நாள்... அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தபின் நான் கொஞ்சம் லேட்டாக 1 மணி நேரம் கழித்து பிறந்தேன்... என்னையும் சேர்த்து அந்த ஆஸ்பத்ரியில் 5 குழந்தைகள் பிறந்தோம் அன்று..! அவர்கள் எல்லாம் எனக்கு முன்னாடியே பிறந்து விட்டிருந்தனர். நான் பிறந்தது பெரிய தனியார் மருத்துவமனை எல்லாம் இல்லை.. அரசாங்க இலவச மருத்துவமனை... இரு மருத்துவர், 5 தாதிகள், ஒரு கோட்டி, இரு துப்புறவாளர்கள் கொண்ட சிறிய மருத்துவமனைதான்.
பூவுலகைத் தரிசித்ததும் நிறைய அழுதேனாம். கண்களில் மட்டும் நீர் வரவே இல்லை என்று பிறகு சொன்னார்கள். தாதிகள் அம்மாவுக்குப் பக்கத்தில் என்னையும் படுக்க வைத்திருந்தனர். அப்பா வந்து ஆஸ்பத்ரியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மருத்துவ ஊழியர் சிலருக்கு பணமாக அன்பளிப்பும் வழங்கினார்.
மாலை நேரமாகியது. அம்மாவையும் என்னையும் பார்க்க வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் ஒருவர்பின் ஒருவராக விடைபெறத் தொடங்கினர். நானும் அம்மாவும் மட்டுமே தனித்து விடப்பட்டோம். அது பொது அறை என்பதால் அடுத்தடுத்த படுக்கைகளில் என் நண்பர்கள் அவரவர் அம்மாவோடு படுத்திருந்தனர்.
அனைவரும் போகும் வரை எனக்கு ஏதும் தெரியவில்லை.. ஆனால் சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய எனது அழுகை பெரியதாக மாறியது.! அம்மாதான் பால் கொடுத்து என்னை அழவிடாமல் தடுத்தார். உண்ட மயக்கத்தில் திருப்தியாக உறங்கிப் போனேன். நள்ளிரவு நடுநிசி... கனவில் பெரியார், அல்லா, ஏசு, சிவன் வந்தனர்.... பயந்து போன நான் 'ஓ' வென்று கத்திக்கொண்டே படுக்கையை 'ஈர'மாக்கி விட்டேன்..!!!
ஈரம் பட்டதால் விழிப்பு வந்த அம்மா என்னைத் துடைத்து படுக்கைத் துணிகளை மாற்றினார்.
-இதுதான் எனது முதல் ராத்திரி அனுபவம்....
பதிவுலகில் ரொம்ப பேர் மொக்கை போடுறாங்க... கருப்பு மட்டும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் இருந்தால் எப்படி? அதான்.... சாரி சார்... ரொம்ப கோவிச்சுக்காதீங்க.... சும்மா கலாய்ச்சேன்!
Operation கில்மா - 1
"அண்ணா... பெங்களூருல இருந்து தானே வாரீக"
"ஆமாம்மா"
"அவுகள பாத்திகளா?"
"அவுகனா யாருமா?"
"என்னணா! பெங்களூருல இருந்து வாரீக. அவுகள தெரியாதா? அங்க இருக்கற எல்லாருக்கும் அவுகள தெரியும்னு சொன்னாரே. இப்படி சொல்லிபுட்டீக"
"இப்படி மொட்டையா அவுக அவுகனு சொன்னா எப்படி அம்மணி தெரியும்? சும்மா பேர சொல்லு தாயி"
"ஐயோ அவுக பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களேதான் கண்டுபிடிக்கனும்"
"சரி ஏதாவது ஒரு க்ளூ கொடு. கண்டுபிடிக்கிறேன்"
"ராவுல ஆராம்பம்... மதியமுல முடிவு"
"ஏன் அம்மணி? இப்படி சொன்னா என்னத்த கண்டுபிடிக்க? வேற ஏதாவது சொல்லுமா"

"திராட்சைக்குள்ள இருந்து ஆரம்பிச்சி மாம்பழத்துல கடைசியா முடியும்"
"அம்மணி என்ன டென்ஷனாக்காத. வீக் எண்ட் ஜாலியா இருக்கலாம்னு தான் பொள்ளாச்சிக்கூட போகாம மதுரை பக்கம் வந்திருக்கேன். நீ என்னனா இப்படி போட்டு கொல்லறீயே. ஒழுங்கா சொல்லும்மா"
"சரி கடைசியா சொல்றேன்...ராகத்துக்கு கால ஒடைச்சா அவுக வருவாக. இப்பவாது கண்டுபிடிங்க"
"பேசாம என் காலை எவனாவது உடைச்சிருந்தாக்கூட நான் நிம்மதியா பெங்களூர்லையே இருந்திருக்கலாம் போல"
"அண்ணா... இப்பவாது கண்டுபிடிங்க ராகுகாலத்துல ஆரம்பிச்சி எமகண்டத்துல முடியும்"
"தாயி... எனக்கு தான் இப்ப செவன் அண்ட் ஆப் ஸ்டார்ட் ஆயிடுச்சினு நினைக்கிறேன்"
"அண்ணா செவன் அப் எல்லாம் இங்க கிடைக்காது...
சரி நீங்க கண்டுபிடிங்க - கைல வில்லுக்கூட வெச்சிருப்பாரே"
"மன்மதனா?"
"அவரு மன்மதன் தான்.. ஆனா அந்த பேர் இல்லை... வில்லு உடைச்சாரே"
"ராமரா?"
"அதேதான். அதுல முதல் ரெண்டு எழுத்து மட்டும்"
"ராமா???"
"ஆமாண்ணா. அவுகளேதான். அவுக பட்டணத்துல எப்படி இருக்காக? என்னையே நினைச்சிட்டு இருக்கறதா எப்பவுமே சொல்லுவாக"
"யாரு. அவரா? எந்நேரமும் கடலை தான் போடறாரு"
"அண்ணா கடலை எல்லாம் இல்லை. நெல்லுதான் இங்க போடுவோம்"
"தாயி நான் அந்த கடலைய சொல்லல. நான் பொண்ணுங்கக்கூட போடற கடலையை சொன்னேன்"
"அப்படினா?"
"இரு தாயி... உனக்கு சொன்னா புரியாது. நேர்லையே காட்டறேன்"
இருவரும் அருகிலிருக்கும் ப்ரௌசிங் செண்டருக்கு செல்கிறார்கள்.
"இங்க பாரும்மா. இது தான் மெசஞ்சர். இப்ப நான் என் பேர்ல உள்ள போறேன்" சொல்லிவிட்டு விவா லாகின் செய்ய உள்ளே ராயல் ஆன்லைனில் இருக்கிறார்...
விவா ராயலுக்கு பிங் செய்கிறார்
விவா: ராயல்.. எப்படிப்பா இருக்க?
ராயல்: நான் ரொம்ப பிஸி... இண்டர்நெட் வேற பிரச்சனை பண்ணுது. ரிலையன்ஸ்காரவங்கள் சரியான ஃபிராடு. நான் அப்பறம் பேசறேனு உங்ககிட்ட
விவா: சரிப்பா... எனக்கும் நேரமாச்சி. நான் கிளம்பறேன். சும்மா மெயில் செக் பண்ணதான் வந்தேன்
ராயல்: பை... have a good day
விவா... லாக் அவுட் செய்கிறார்
அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com
"என்னண்ணா இது பேரு..."
"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...
அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்
நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்
ராயல் : ASL please...
(தொடரும்...)