Wednesday, November 1, 2006

அட்லாஸ் வாலிபர் - நவம்பர்

டுபுக்கு அக்டோபர் மாதத்தில் அடலாஸ் வாலிபராக இருந்து ஒரு கலக்கு கலக்கிட்டாரு. அக்டோபர் மாதமும் முடிஞ்சு போச்சு. அடுத்து, அதாவது நவம்பர் மாதத்தின் அட்லாஸ் வாலிபர் யாருங்கோ அப்படினு தானே கேட்குறீங்க. நம்ம................ ஆங் ஆசை தோசை அப்பள வடை. எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேனே... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க...

அடாடா ரொம்ப தான் கெஞ்சுறீங்களே....

ஆனா சொன்ன சொல்லையும், போட்ட கோட்டையும் மீறுவதில்லை என்ற எங்க தல கைப்புவின் கொள்கையில் ஊறினவன் நான். அதனால் அவர் பெயர என் வாயாலா சொல்ல மாட்டேன். கையாலையும் டைப் பண்ணவும் மாட்டேன். இருந்தாலும் உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு, அதனால கொஞ்சம் க்ளு கொடுக்குறேன். நீங்களே தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்னருக்கு குசேலர் என்ன வேணும்..... ஆங்க அதான்
கர்ணனுக்கு துரியோதனன் என்ன வேணும்..... ஆங்க அதான்
எம்.எஸ்.விக்கு ராமமூர்த்தி என்ன வேணும்.... ஆங் அதே
ரஜினிக்கு கமல் என்ன வேணும்..... அதே, தளபதி சூர்யாவுக்கு தேவா என்ன வேணும்?

புரிஞ்சு இருக்குமே நண்பன் என்று.....

இவங்க எல்லாம் தங்கள் இனமான இன்னொரு மனிதனிடம் தான் நண்பராக இருக்கின்றார்கள். ஆனா நம்ம ஆள் பெரிய தில்லாங்கட்டி.... வானத்தில் வட்டமா வெள்ளை இருக்குமே, அதாங்க அந்த வச்சு தான் நம்ம தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்கள் பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்காங்களே..... ஆங் நிலா தாங்க. அதுக்கே தோஸ்த் நம்ம ஆள்.

இவருக்கு தான் ஒரு ஹீரோவா இல்ல காமெடியானா டவுட்கீதாம், ஆனா கண்டிப்பா அவரு வில்லன் கிடையாதாம். அவரு அடிக்கடி கவுஜ எழுதுவாரு சந்தோஷமா இருப்பதுக்கு. சில சமயத்தில கவுஜ எழுதியே சோகமா ஆயிடுவார். இது மாதிரி பல கவுஜ எழுதி புக் எல்லாம் போட்டு இருக்காருங்க. ஆனாலும் அவர் நம்மள மாதிரி ஒரு வருத்தப்படாத வாலிபர். தன்னை சுற்றி இருப்பவர்கள் எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். பலருக்கு பல வகைகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்துக் கொண்டு இருப்பவர். சமீபமாக கல்யாணம் ஆனவர். அப்ப வானத்தில் பறக்க ஆரம்பித்தவர், இன்னும் தரையில் கால் வைக்காமல் சந்தோஷ வானில் சிறகடித்து தன் துணையுடன் பறந்து கொண்டு இருக்கின்றார். அது போல என்றும் அவர் தன் துணையுடன் சந்தோஷ வானில் பறக்க சங்கம் வாழ்த்துகின்றது.



இவ்வளவு சொல்லியும், படம் போட்டும், அவரு யாருனு என்னைய மறுக்கா கேள்வி கேககப்பிடாது. ஏதா இருந்தாலும் அவரு வருவாரு. அவருக்கிட்ட பேசுக்கீங்க. சாரு, மாப்பிளை முறுக்குடன் தான் வருவார். அதனால் கொஞ்சம் பாத்து பத்திரமாக ஆப்பு அடிங்க செல்லங்களா. அப்ப நான் வரட்டா......

15 comments:

ILA (a) இளா said...

வணக்கம்! வாழ்த்துக்கள் நண்பரே! வருக! வருக!

நாமக்கல் சிபி said...

ஞானியாரைக் கலாய்க்க இப்பதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு!

:)

வந்தவுடன் பயமுறுத்த வேண்டாம். வாழ்த்தி வரவேற்கிறேன்.

நாகை சிவா said...

தள, இந்த மாசம் இவர் தான் உங்க டார்கெட்டா.,

பாத்து பக்குவமா என்ன?

கோவி.கண்ணன் [GK] said...

சிவா...!

என்ன கொடுமை 'சரவணன்' என்று கேட்க தோனுது !

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க நிலவு நண்பரே வந்து அப்படியாக்கா எங்களையும் நிலாவ சுத்தி காட்டுங்க !! :))

ஆவி அண்ணாச்சி said...

அட்லாஸ்னா இன்னாபா?

ILA (a) இளா said...

ஆவி அண்ணாச்சிக்கு..
http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_115225701532675166.html#comments

ஆவி அண்ணாச்சி said...

ஆஹா! ஆப்பு வெக்க வெத்திலை பாக்கு வெச்சி இன்வைட் பண்ணுறதுதான் அட்லாஸா!

பலே!

ILA (a) இளா said...

சே சே, பாக்கு வெத்திலை வெச்சு ஆப்பும் வெப்போம், அதனால ஒரு மாசத்திலேயே வாலிபரா ஆகிடலாம் பாருங்க

நாமக்கல் சிபி said...

நிலவு நண்பரை வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன் ;-)

நாகை சிவா said...

//நிலவு நண்பரை வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன் ;-) //

என்ன வெட்டி, அவர அரசியல்வாதி ரேஞ்சுக்கு தூக்கி வச்சு வரவேற்க்குற... ஏதும் பெரிசா ப்ளான் பண்ணி இருக்கீயா?

நாகை சிவா said...

//சிவா...!

என்ன கொடுமை 'சரவணன்' என்று கேட்க தோனுது ! //

ஏன், கண்ணன், என்னாச்சு. அவரு பாவம் சொல்லுறீங்களா, இல்ல நாங்க பாவம் சொல்ல வறீங்களா...:-))

நாகை சிவா said...

//வாங்க நிலவு நண்பரே வந்து அப்படியாக்கா எங்களையும் நிலாவ சுத்தி காட்டுங்க !! :)) //

ஒசில டூர் அடிக்க பாண்டி ஐடியா பண்ணிட்டான்ய்யா, அவனோடு நம்மளும் ஒட்டிக்க வேண்டியது தான்....

Syam said...

வாங்க வாங்க நிலவு நண்பரேன்...வரும்போது மறக்காம ஒரு லாரி வாடகைக்கு எடுத்திட்டு வந்துடுங்க...என்னாத்துக்கா எங்க அன்ப வீட்டுக்கு எப்படி எடுத்திட்டு போவீங்க :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எப்படியோ கலாய்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க...விடவா போறீங்க..

வாழ்த்தியவர்களுக்கு வாழ்த்துக்கள்...