Wednesday, November 8, 2006

காதல் அரசாங்கம்

Photobucket - Video and Image Hosting


காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்


சாதி மதம் பார்க்காததால்
காதல் ஒரு
சமத்துவபுரம்

தன்னைத்தானே
உருக்கிக் கொள்வதால்
காதல் ஒரு
நமக்கு நாமே திட்டம்

நம்
கறுப்பு வாழ்க்கையை
கலராக்குவதால்
காதல் ஒரு
இலவச கலர்டிவி திட்டம்

இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்

இருவருக்குமே
லாபம் கிடைப்பதால்
காதல் ஒரு
உழவர் சந்தை

ஆகவே
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்

- ரசிகவ் ஞானியார்

17 comments:

ILA (a) இளா said...

அட்டகாசம் ஞானி, ஆனா எதிர்க்கட்சி யாருன்னு சொல்லி இருக்கலாமே

Anonymous said...

ஆக மொத்தம் காதல் ஒரு தி.மு.க, அப்படின்னு சொல்ல வரீங்கதானே

Anonymous said...

//இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்//
ஹ்ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹா

Syam said...

//சாதி மதம் பார்க்காததால்
காதல் ஒரு
சமத்துவபுரம்//

அப்படினா பாதில கைவிடப்படும்னு அர்த்தமா? :-)

Syam said...

//நம்
கறுப்பு வாழ்க்கையை
கலராக்குவதால்
காதல் ஒரு
இலவச கலர்டிவி திட்டம்
//

செல்வாக்கு உள்ளவங்களுக்குதான் கிடைக்குமா :-)

Syam said...

//இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்//

திறப்பு விழாவுக்கு யாராவது வர வரைக்கும் அம்போனு பீச்ல கடலை சுண்டல் சாப்பிட்டு இருக்கனும் :-)

Syam said...

மொத்தத்துல காதலயும் அரசாங்கத்துயும் ஒன்னுனு சொல்லிருக்கீங்க...ரெண்டுமே நிலை இல்லாததுனாலயா :-)

Unknown said...

அட அட... வாலிபர்களும் அரசியலுக்கு வாங்கனு ஞானி என்னமா எடுத்துச் சொல்லுறார்...

காதலும் ஒரு அரசியல் தான்... ரைட்ங்கோ ஞானிங்கோ....

Unknown said...

ஆமா என்னப்பா இது ஞானி பதிவு மட்டும் தான் போடுவாரா.. இங்கிட்டு பின்னூட்டத்தில்ல வைக்கற ஆப்பையெல்லாம் வந்து வாங்கிட்டுப் போக மாட்டாரா.. இதென்னப்பா நியாயம்.. கேளுங்க மக்களே கேளுங்க...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
அட்டகாசம் ஞானி, ஆனா எதிர்க்கட்சி யாருன்னு சொல்லி இருக்கலாமே //


நான் அடிவாங்குறதுல உங்களுக்கேன் அப்படியொரு ஆசை ;)


//Anonymous said...
ஆக மொத்தம் காதல் ஒரு தி.மு.க, அப்படின்னு சொல்ல வரீங்கதானே //

யாருங்க இது மறைஞ்சிருந்து தாக்குறது..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஹ்ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹா//

சிரிச்சு கவுக்குற மாதிரி தெரியுது..? இல்லை அனுபவமாய் இருக்குமோ?

//Syam said...

செல்வாக்கு உள்ளவங்களுக்குதான் கிடைக்குமா :-) //

இருந்தாலும் இல்லைன்னு பொய் சொல்லுங்க..நான் காதலைப்பற்றி சொல்லுகினறேன் :)

//அப்படினா பாதில கைவிடப்படும்னு அர்த்தமா? :-) //

நம்பிக்கை இருறந்தா கடைசிவரை நம்மோடுதான்..இதுவும் காதலைப்பற்றிதான்ங்க..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Syam said...

திறப்பு விழாவுக்கு யாராவது வர வரைக்கும் அம்போனு பீச்ல கடலை சுண்டல் சாப்பிட்டு இருக்கனும் :-)

Syam said...
மொத்தத்துல காதலயும் அரசாங்கத்துயும் ஒன்னுனு சொல்லிருக்கீங்க...ரெண்டுமே நிலை இல்லாததுனாலயா :-)
//

உங்க அனுபவத்தை ஏன் இங்க வந்து சொல்றீங்கபா..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தேவ் | Dev said...
அட அட... வாலிபர்களும் அரசியலுக்கு வாங்கனு ஞானி என்னமா எடுத்துச் சொல்லுறார்...

காதலும் ஒரு அரசியல் தான்... ரைட்ங்கோ ஞானிங்கோ.... //

நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே.. :)


//ஆப்பையெல்லாம் வந்து வாங்கிட்டுப் போக மாட்டாரா.. இதென்னப்பா நியாயம்.. கேளுங்க மக்களே கேளுங்க... //

அட ஆப்பையெல்லாம் வாங்கத்தானப்பா வந்திருக்கேன்..

ILA (a) இளா said...

//உங்க அனுபவத்தை ஏன் இங்க வந்து சொல்றீங்கபா..? :)//
அப்படியா மேட்டரு? ஸ்யாமு பதில் சொல்லுங்க சாமி

ILA (a) இளா said...

//காதலும் ஒரு அரசியல் தான்//
ஆஹா இதுக்கும் ஞானி ஒரு கவிதை எழுதுவாரு பார்த்துகிட்டே இருங்க

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
//காதலும் ஒரு அரசியல் தான்//
ஆஹா இதுக்கும் ஞானி ஒரு கவிதை எழுதுவாரு பார்த்துகிட்டே இருங்க //



எந்த ஞானியைச் சொல்றீங்க..? ஓ போடு எழுதினாரே அவர்தானே..

காதலிச்சு ஞானி ஆனவங்களும் உண்டு

ஞானிகள் காதலிச்சதும் உண்டு

நளாயினி said...

காதல்லை அப்பிடி என்ன வெறுப்பு அரசியலோடை ஒப்பிட. நீங்க சொன்னா சரியா இருக்கலாம்.