Part 1 - வரு வா சங்கம் Behind the scenes – 1
Part 2 - அறிஞன் அநிர்பிரம்மதேவன் : வவாச வரலாறு
Clippings from Part 2
Part 2 - அறிஞன் அநிர்பிரம்மதேவன் : வவாச வரலாறு
Clippings from Part 2
தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.
Part 3 Starts ....
வில்லுப்பாண்டி, அநிர்தேவனின் கச்சேரியில் வில்லுப்பாட்டுப் பாட அடிக்கடி வில்லுப்பாண்டியின் வில்லை இரவல் கொடுத்த வகையில் நன்கு அறிமுகமானவன்தான். வில்லுப்பாண்டி போர்க்காலங்களைத்தவிர பெரும்பான்மையான நேரங்களில் கரும்பு வில்லைத்தான் வைத்துக்கொண்டு படம் காட்டுபவனாதலால் அன்றும் அப்படித்தான் கரும்பு வில்லோடு வருவதைக் கண்டு பேரானந்தம் கொண்டான் தேவன். தங்கவை நாச்சியார் என்ற போர் யானை பேருக்குத்தான் யானை ஆனால் அதற்கு தளையுடன் கூடிய வெண்கரும்பு என்றால் கொள்ளைப்பிரியம் என்பதை அறியாதவனா தேவன்? போர்களத்திலே கூட எதிரிகள் தங்கவை நாச்சியாரின் தாக்குதலையும் இக்கரும்பைக்காட்டி கட்டிப்போட்டனர் என்ற வரலாற்றினையும் நன்கு உணர்ந்த தேவன் கணப்பொழுதில் வில்லுப்பாண்டியின் கரும்பு வில்லைப் பிடுங்கி அதன் நாணை அறுத்து தோகையை ஆட்டியவாரே தங்கவை நாச்சியாரை நோக்கி ஓடினான்.
வழக்கமாக தான் நாடிச்செல்லும் கரும்பு தன்னை நாடி வருவதை பார்த்த தங்கவை நாச்சி கைப்போங்காவை மறந்தது. ஏற்கனவே கைபோங்காவை தட்டாமாலை சுற்றிக்கொண்டிருந்த தங்கவை நாச்சி கரும்பைப் பார்த்த கணத்தில் அப்படியே விட்டெரிந்ததில் அந்தரத்தில் மிதந்து ‘ஐயோ காப்பாதுங்க காப்பாதுங்க ‘ போன்ற வேத கோஷங்கள் முழங்க வீரமாக தேவன் கச்சேரி செய்துகொண்டிருந்த தபேலாக்களின் மீது விழுந்தான். கைபோங்காவைத்த தாங்கிய தபேலாக்கள் எழுப்பிய ஒலி போர்ப்பறையை ஒத்திருந்தன.தங்கவை நாச்சியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாயிருந்த கைபோங்காவை நோக்கி ஓடி வந்த வில்லுப்பாண்டியும் அநிர்தேவனும் கைத்தாங்கலாக திண்ணையில் அமரவைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தனர்.
வீரம் வெளஞ்ச மண்ணில் கூட வெளஞ்ச மாசரு மாணிக்கம் கலாய் கலாய் கலக்கலக்கலாய் என எப்போதும் கோஷமிட்டுக் கொண்டு குதிரைமீது அமர்ந்து ஓடியோடி வீரர்களுக்கு எதிரிகள் தாக்கினால் எப்படி திரும்பி ஓடுவது அவ்வாறு ஓடிவரும்போது கூட ஓடி வரும் தங்கவை நாச்சியாரின் கரும்புக்காட்டு கவனத்தை எப்படி திருப்புவது என சோளம் தின்றுகொண்டே பயிற்சி அளித்துக்கொண்டுந்த சோழத்தளபதி சிப்பிப்பாரை சிபிவர்மனின் பயிற்சிமிக்க காதுகள் தூரத்திலே ஒலித்த போர்ப்பறையை ஒத்திருந்த ஓசையைக் கேட்டன. உடனே ‘கலாய் கலாய்’ என வீரர்களைப்பார்த்து சத்தமிட்டுக்கொண்டே குதிரையிலிருந்து குதித்தான். ‘காலாய்’ எனக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே மண்ணில் குப்புற விழுந்து பதுங்கி தலையை மாத்திரம் தூக்கிப் பார்த்த வீரர்களைக் பார்த்து கோபக்கனல் கக்கியவாரே கேட்டான் சிப்பிப்பாரை சிபிவர்மன். ‘எல்லையில் எல்லாம் வெள்ளைக்கொடியை ஏற்றச்சொன்னேனே. ஏற்றினீர்கள் தானே ! பின் எப்படி இந்தப் போர்ப்பறை?? ‘ கேட்கும்போதே அரையில் கட்டியிருந்த வெண்கொடியை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.’இந்த சத்தம் போர்ப்பரையை ஒத்திருந்தாலும் போர்ப்பறை போல் தோன்றவில்லை தள! ’ என சிப்பாய் சிவனாண்டி நடுங்கியபடியே கூற மண்ணிலிருந்து எழுந்த சிப்பிப்பாரை சிபிவர்மன் படிந்திருந்த மண்ணைத்தட்டிவிட்டவாரே தனது புரவியில் தாவியமர்ந்தான்.
பறையொலி கேட்ட திசையை நோக்கி தனது புரவியை விரட்டிய சிபிவர்மன் அது அநிர்தேவனின் இருப்பிடத்திலிருந்துதான் வந்தது என அறிந்து கொண்டான். வழக்கமாக தேவனின் தபேலக்களை தூரத்தில் பார்த்தாலே காத தூரம் ஓடும் மக்கள் இன்று என்னவோ அவன் கச்சேரி செய்யும் திண்ணையில் திரண்டிருக்கிறார்களே என்ன விசயமாக இருக்கும் என ஐயம் கொண்டான் ! தளபதிகளுக்கேயுரிய வழக்கமான எச்சரிக்கை உணர்வுடன் எதற்கும் இருக்கட்டும் என வெண்கொடியை அரையிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டே நெருங்கினான்.
சிப்பிப்பாரை சிபிவர்மன் அங்கே கண்ட காட்சி அவனுள் ஒரு பெரும் திகிலை ஏற்படுத்தியது. அநிர்தேவனும் வில்லுப்பாண்டியும் உடலெல்லாம் ரத்த விளாராய் போர்க்களத்திலிருந்து அப்படியே வந்ததுபோலிருக்கும் ஒருவனுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தனர், ‘ ஆகா இவ்வீரனுக்கு இவ்வளவு விழுப்புண்களா? எவ்வளவு போர்க்களங்களைச் சந்தித்தானோ? எவ்வளவு தலைகள் உருண்டனவோ ? இவனுக்கே இத்தனை விழுப்புண்களென்றால் இவன் எதிரிகளுக்கு என்ன கதியோ ?? நான் கூட இவ்வாறு களம் கண்டதில்லையே இவனிடமிருந்து எப்படியாவது களம் காண பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்!’ என மனதிலே உறுதி பூண்டான். சிறுது தைரியத்தை வரவழைத்துகொண்டு கைபோங்காவை நெருங்கினான் சிப்பிப்பாரை சிபிவர்மன்.
ஓரமாக ஒய்யாரமாக நின்று நடக்கும் நிகழ்வுகளை பய பக்தியோடு பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயியை நெருங்கிய சிபிவர்மன் ‘என்ன நடந்தது ? விழுப்புண்களோடு அமர்ந்திருக்கும் இம்மாவீரன் யார் ? ’ என பிரமிப்பு விலகாமல் கேட்டான்.
- தொடரும்
37 comments:
தங்களின் தூயதமிழ் வரலாற்று காவிய பணி கண்டு யாதும் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு எங்கள் உள்ளம் பூரித்தது.
நன்றி பாண்டிய பெருமகனாருக்கு
//‘எல்லையில் எல்லாம் வெள்ளைக்கொடியை ஏற்றச்சொன்னேனே. ஏற்றினீர்கள் தானே ! பின் எப்படி இந்தப் போர்ப்பறை?? ‘ கேட்கும்போதே அரையில் கட்டியிருந்த வெண்கொடியை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.//
தம்மாதுண்டு சத்தம் போதுமா நம்ம தளபதிக்கு ;)
புலியோட பேரு சிவனாண்டியா? நல்லாருக்குய்யா.
:)
// ராம் said...
தங்களின் தூயதமிழ் வரலாற்று காவிய பணி கண்டு யாதும் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு எங்கள் உள்ளம் பூரித்தது.
நன்றி பாண்டிய பெருமகனாருக்கு //
வருக ராம் பூரித்த உள்ளம் கண்டு நாமும் பூரித்தோம் பொற்கிழிகள் இல்லாவிட்டாலும் ஓரமாக என்னுடன் அமருங்கள் கிளிகள் காட்டுகிறேன் :))
//நாகை சிவா said...
தம்மாதுண்டு சத்தம் போதுமா நம்ம தளபதிக்கு ;) //
என்ன தம்மாதுண்டு சத்தமா?? தளபதி கலக்குற கலக்குல சங்கமே முழங்கபோகுது பார்த்துகிட்டே இருங்க:))
// கைப்புள்ள said...
புலியோட பேரு சிவனாண்டியா? நல்லாருக்குய்யா.//
தல தல வா தல கம்பெனிப் பணிகள் முன்னால் அழைத்தாலும் சங்கப்பணிகளுக்காக நேரம் ஒதுக்கி பின்னூட்டம் போட்டுட்டீயளே !! அடுத்தது உம் வீரத்தை மெச்சி பொன்ஸக்காவ விட்டு பரணி பாட சொல்றேன் :))
புலிப்பேரு சிவனாண்டி இல்லை தல நம்ம நாகை சிவாதான். ஒரு சின்ன பிட்டு ரோல்தான் இருந்தாலும் தம்பி சிவா கலக்குவாரில்ல?? :)))
// கைப்புள்ள said...
புலியோட பேரு சிவனாண்டியா? நல்லாருக்குய்யா.//
தல தல வா தல கம்பெனிப் பணிகள் முன்னால் அழைத்தாலும் சங்கப்பணிகளுக்காக நேரம் ஒதுக்கி பின்னூட்டம் போட்டுட்டீயளே !! அடுத்தது உம் வீரத்தை மெச்சி பொன்ஸக்காவ விட்டு பரணி பாட சொல்றேன் :))
புலிப்பேரு சிவனாண்டி இல்லை தல நம்ம நாகை சிவாதான். ஒரு சின்ன பிட்டு ரோல்தான் இருந்தாலும் தம்பி சிவா கலக்குவாரில்ல?? :)))
இப்பிடி பத்தி பத்தியா எழுதாதீங்கனு ஒரு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :))
//
இப்பிடி பத்தி பத்தியா எழுதாதீங்கனு ஒரு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :))
//
சாரி மூணு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :))
எம் அன்பு நண்பரே வில்லுப் பாண்டி.. சாரி.. ஜொள்ளுப் பாண்டி.. காலத்தால் அழியாத நம் சங்க வரலாற்றை இப்படிக் கல்வெட்டு போல் பதித்திருக்கும் திறம் கண்டு வியந்தோம்.. மெச்சினோம்..
சோழ நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாகத் படம் காட்டிக் கொண்டிருந்திருந்த வில்லுப்பாண்டி போன்றே,
ப்ளாக்கரைத் தடை செய்ய சட்டமிருந்தும் அதையும் மீறி நம் வரலாறு சொல்லவந்த தீரத்தை..
எப்படிப் புகழ்வது என்று தவித்தோம்.. சொல் தேடிக் களைத்தோம்.. அங்குமிங்கும் இப்படி அலைந்து கொண்டிருக்கும் காலை.. காலை மதியமாகிவிட்டது...
சரி சரி.. கலக்குங்க சாமீ.. அப்புறம் என்னாச்சு??
ஒரு சின்ன பொருட் குற்றம் அய்யா.. இந்த கலாய் என்னும் சொல் கேட்டுக் கலங்கியவன் பெயர் சிவனாண்டி அல்ல என்றும்.. கலாய்த்த்லைக் கண்டு ஒவ்வாமை கொண்டு கதறக் கூடிய ஒரே இளைஞன், அண்ணன் வா.ம. என்று பேரன்புடன் அழைக்கப்படும் கவிஞர் மணிகண்டன் தான் என்றும் சத்திரப் பேரூர் கல்வெட்டுகள் உறுதி கூறுகின்றன.. இத்தகவலைச் சரிபார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்..
//புலிப்பேரு சிவனாண்டி இல்லை தல நம்ம நாகை சிவாதான். ஒரு சின்ன பிட்டு ரோல்தான் இருந்தாலும் தம்பி சிவா கலக்குவாரில்ல?? :)))
//
நாகை சிவாவுக்கு இப்படி ஒரு ரோலா? தல கலாய்க்க ஆரம்பிச்சா நானே எங்க போய் ஒளியறதுன்னு யோசிக்கிறேன் இப்போவெல்லாம்.. இதெல்லாம் அடுக்குமா வில்லு? இன்னும் பெட்டரா வேற ரோல் யோசிப்போம்..
//அமருங்கள் கிளிகள் காட்டுகிறேன் :)) //
அதானே.. இதை என்னிக்கு விட்ருக்கோம்.. Bird Watching ஆராய்ச்சி.. ம்ம்ம்
//அடுத்தது உம் வீரத்தை மெச்சி பொன்ஸக்காவ விட்டு பரணி பாட சொல்றேன் :))//
அட.. பரணி எல்லாம் பாடி அப்புறம் தல என்னை விடுங்கப்பான்னு ஓடிடப் போறாரு..
அந்தக் கவிஞர் நவீன் பிரகாஷ் என்னய்யா பண்ணிகிட்டிருக்காரு? சும்மா சங்கத்துப் பக்கம் கூட்டியா... தலையைப் போற்றிப் பாடச் சொல்லுவோம் ;)
//சாரி மூணு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :)) //
மின்னலு. அடுத்தமுறை குதிக்கும் போது.. லேண்டிங் உன் தலை மேல தான்.. காத்திருக்கவும் ;)
//மின்னுது மின்னல் said...
சாரி மூணு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :)) //
வாங்க மின்னலு :)) மூணு யானை என்ன ஆறு வந்துருச்சு :)))
// பொன்ஸ் said...
எம் அன்பு நண்பரே வில்லுப் பாண்டி.. சாரி.. ஜொள்ளுப் பாண்டி.. காலத்தால் அழியாத நம் சங்க வரலாற்றை இப்படிக் கல்வெட்டு போல் பதித்திருக்கும் திறம் கண்டு வியந்தோம்.. மெச்சினோம்.. //
அக்கா பொன்ஸ் ,
சங்க வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அது ஆறாம் பெரும் காப்பியமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாச்சியின் ஆசி எபோது வேண்டும் வில்ஸ்பாண்டி :)))) ( வில்ஸ் - வில்லுதான் வேற எதுவும் இல்லே !! )
//பொன்ஸ் said...
கலாய்த்த்லைக் கண்டு ஒவ்வாமை கொண்டு கதறக் கூடிய ஒரே இளைஞன், அண்ணன் வா.ம. என்று பேரன்புடன் அழைக்கப்படும் கவிஞர் மணிகண்டன் தான் என்றும் சத்திரப் பேரூர் கல்வெட்டுகள் உறுதி கூறுகின்றன.//
அக்கா பொன்ஸ் :)) பல்வேறு சரித்திரச்சான்றுகளையும் பல்வேறு கல்வெட்டுகளுக்கும் முகவெட்டுகளுக்கும் மத்தியிலும் அயராத ஆராய்ந்து அல்லவா வரலாற்றை செதுக்கினேன்:( எனக்கு வட்டெழுத்துக்களில் அவ்வளவு பரிச்சயம் இல்லாததான் சத்திரபோரூர் கல்வெட்டுக்கள் புரியாததால் நிகழ்ந்த தவறு ! மன்னிக்க !! :))
//அதானே.. இதை என்னிக்கு விட்ருக்கோம்.. Bird Watching ஆராய்ச்சி.. ம்ம்ம் //
இதென்ன பொன்ஸக்கா கடமைவீரனல்லவா இந்தப்பாண்டி ! :)) வரலாற்று சான்றுகளைத்தேடி கன்னிமாரா நூலகத்திற்கு சென்று அங்கே வெளியில் அமர்ந்து பல்வேறு ஆராய்ச்சியிலும் தேடலிலும் ஈடுபட்டிருக்கும் பல்வேரு ஜோடிகளை நோக்கி கவனைத்தினை சிதறவிடாமல் கடமையே \'கண்\' ணாக நோட்ஸ் எடுத்து வந்தேனல்லவா??
//என்ன நடந்தது ? விழுப்புண்களோடு அமர்ந்திருக்கும் இம்மாவீரன் யார் //
விழுந்தா புண்ணாகாத உடம்பு எங்கே இருக்கு
//வருக ராம் பூரித்த உள்ளம் கண்டு நாமும் பூரித்தோம்.//
நன்றி பாண்டிய பெருமகனார்க்கு
// பொற்கிழிகள் இல்லாவிட்டாலும் ஓரமாக என்னுடன் அமருங்கள் கிளிகள் காட்டுகிறேன் :)) //
தாங்கள் இயம்பினால் பொற்கிழிகளை அளிக்க சித்தாமாய் உள்ளேன்.ஆனால் தாங்களோ சொல்வன்மை மாறதவர் சத்திரப் பேரூர் கல்வெட்டுகள் உறுதி கூறுகின்றன எனவும் களிறுவரைபடம் கொண்ட பொன்ஸ் பெருமாட்டி இயம்பியுள்ளார்.ஆகவே மிகவிரைவில் கிளிகளை காட்டவும்.அதற்கு நான் தங்கள் உறைவிடம் வந்து செல்வதற்கான பயணப்படிகளை பொற்கிழிகளுக்கு ஈடாக்கிக்கொள்கிறேன்.
தங்கள் சித்தம் என் பாக்கியம்....
சங்க சிங்கங்கள் எல்லாம் எங்கப்பா இருக்கிங்க எல்லாரும் வாங்க
இ கொ கூப்பிட்டா மட்டும் தான் ஒடெனே ஆஜராவீங்களா ????
எதோ நம்மளால முடிஞ்சது ::)))
//புலியோட பேரு சிவனாண்டியா? நல்லாருக்குய்யா.//
தல சும்மா இருய்யா, நீ எதையும் கிளப்பி விடாத
//புலிப்பேரு சிவனாண்டி இல்லை தல நம்ம நாகை சிவாதான்.//
பாண்டி நீ கன்பார்மே பண்ணிட்டியா. சரி போ
// ஒரு சின்ன பிட்டு ரோல்தான் இருந்தாலும் தம்பி சிவா கலக்குவாரில்ல?? :))) //
சரி நீ இம்புட்டு சொல்லுறதால் ஒத்துக்குறேன். சின்ன ரோலா இருந்தா என்ன பெரிய ரோலா இருந்தா என்ன சரித்திரத்தில் நம்ம பெயர் இடம் பெறுவதே பெரிய விசயம் இல்லையா.
//சாரி மூணு யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க :)) //
சங்கத்துல ஏதுயா மூணு யானை. ஒன்னு தானே இருக்கு.
// இன்னும் பெட்டரா வேற ரோல் யோசிப்போம்.. //
அப்படியா சொல்லுறீங்க, அப்ப சரி...
அது சரி, என்னயே வச்சு நீங்க காமெடி ஏதும் பண்ணும் ஐடியாவில் இல்லையே....
//( வில்ஸ் - வில்லுதான் வேற எதுவும் இல்லே !! ) //
பாத்து பாண்டி, இனிமேல் வில்ஸ் எல்லாத்துலயும் மண்டை ஒடு படத்த போட சொல்லி சட்டம் போட்டு இருக்காங்களாம். எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு
//விழுந்தா புண்ணாகாத உடம்பு எங்கே இருக்கு //
அதானே, இருந்தாலும் நம்ம தல, இதுவரை தான் வாங்கிய புண்களை எல்லாம் புண்ணாக்கு ஆக்கி மாட்டுக்கு கொடுத்து விட்டு மீண்டும் முதுகில் புண் வாங்கும் அசுரன்.
//ஆகவே மிகவிரைவில் கிளிகளை காட்டவும்.//
ராமு, கிளி பாக்க அம்புட்டு ஆசைப்படுறியா. அப்ப சீக்கிரமே காட்டிட்டா போச்சு.
பாண்டி அண்ணன், ராம் தம்பிக்கு நீங்க கிளி காட்டுறீங்களா, இல்ல நான் காட்டடுமா?
//சங்க சிங்கங்கள் எல்லாம் எங்கப்பா இருக்கிங்க எல்லாரும் வாங்க //
இங்கன தான் இருக்கோம், என்னாத்துக்கு இப்படி சவுண்டு உடுர... ஒரு டீக்குடிக்க போக கூடாதே. அதுக்குள்ள ஒரு பஞ்சாயத்த ஸ்டாட் பண்ணிடுறாங்கப்பா.
உள்ளம் பூரித்தது...பாண்டி உன் பதிவினைக் கண்டேன்... புதிய வரலாறு கண்டாய்.. பதிவுலகம் எங்கும் ஆறு ஆறு என அலை அடிக்கையிலே இங்கு நாம் வர லாறு காண்பது எத்துணைப் பெரிய சாதனை... ஆகா கண்மணியே.. காலம் தொடங்கிய போதே மனிதனுக்குக் கவலையும் தொடங்கிவிட்டது அந்தக் கவலையை துடைத்தெறிய நம அருமைத் தலைவன் ஆருயிர் இமயம் கைப்புள்ளயின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் கைப்போங்கா ஆற்றிய அரிய சேவைகளை உலகம் அறியும் நேரம் வந்து விட்டது... ம்ம் இனி கூடாது தாமதம்.... இந்த உலகம் அறியட்டும் வ.வா.சங்கத்தின் தியாக வரலாற்றை.... யானைகளுக்கு ஞானத்தை கவழம் கவழமாக வழங்கிய புராணச் சத்தியங்களை....ம்ம்ம் சிவா.. சேனாதிபதியே கேட்கிறதா அழைப்பு.....
//இங்கன தான் இருக்கோம், என்னாத்துக்கு இப்படி சவுண்டு உடுர... ஒரு டீக்குடிக்க போக கூடாதே. அதுக்குள்ள ஒரு பஞ்சாயத்த ஸ்டாட் பண்ணிடுறாங்கப்பா. //
ஆஹா கழக கண்மணியே சிவா என்ன ஒரு கர்ஜனை கலக்கப்பு !!:))
// Dev said...
உள்ளம் பூரித்தது...பாண்டி உன் பதிவினைக் கண்டேன்... புதிய வரலாறு கண்டாய்.. பதிவுலகம் எங்கும் ஆறு ஆறு என அலை அடிக்கையிலே இங்கு நாம் வர லாறு காண்பது எத்துணைப் பெரிய சாதனை...//
ம்ம்ம் தேவண்ணா எல்லாம் உங்க ஆசீர்வாதம்ணா !! நீங்க போட்ட கோட்டுலதான் நாங்க ரோடு பொட்டுக்குட்டு இருக்கோம் ! சங்க வரலாற்றை நாம் சிறார்களுக்கு பாடமாக்குவோம் !! :)))
// மன்னாரு said...
ஸ்ப்பாபா.. இந்த வலையிலே சிக்கி சிதறி போயிருவோம்ன்னு பயந்து நிக்கையிலே பாத்தா அட இப்படி ஒரு குரூப்பா... நல்லாயிருங்க மக்களே... //
ஆருப்பா இது மன்னார் அண்டு கம்பெனி மொதலாளி போல தெரியுதே!! வாங்கப்பூ வந்து சந்தோசமா இருங்க ! அப்புறம் கம்பெனி எப்படி போகுது ?? :))
சங்கத் தமிழெடுத்துச்
சிங்கத் தமிழ் மகனின்
மங்காச் சரித்திரத்தை,
வங்கக் கடலோரத்தில்
நீங்காப் பெருமையுடன்
வாங்கி நின்ற அடிஉதையை,
இங்குவந்து எமக்கெல்லாம்
தங்கு தடையின்றிப்
பொங்குகின்ற விபியாரே[வில்லுப்பாண்டி]
நும் சேவை
மெச்சத் தக்கது!
மெச்சினோம்!
:)))
//SK said...
சங்கத் தமிழெடுத்துச்
சிங்கத் தமிழ் மகனின்
மங்காச் சரித்திரத்தை,
வங்கக் கடலோரத்தில்
நீங்காப் பெருமையுடன்
வாங்கி நின்ற அடிஉதையை,
இங்குவந்து எமக்கெல்லாம்
தங்கு தடையின்றிப்
பொங்குகின்ற விபியாரே[வில்லுப்பாண்டி]
நும் சேவை
மெச்சத் தக்கது!
மெச்சினோம்! //
ஆஹா ஆஹா ஆன்மீகப் பேரொளியே கண்துஞ்சாமல் ஈசனின் புகழ் பாடும் எஸ்கே உங்கள் வாயால் எனக்கு பாராட்டு மிக்க மகிழ்ச்சி !! எம் தலைவன் மக்கட் தொண்டன்(?!) புகழ் இயம்ப ஏடுதான் போதுமோ? தங்கள் ஆசியுடன் தொடர்வோம் எங்கள் 'தல' பணி !!:)))))
Post a Comment