பொறுப்பு அறிவித்தல் : எச்சரிக்கை இலக்கிய இடுகை
பலின்னு சொன்னா பழி தீர்க்க பலியானவர்களை சொல்லலாம், இயற்கை மரணம் இல்லாமல் பாதியிலே போனவர்களைஎல்லாம் பலி ஆனார்கள் என்று சொல்லலாம்.ஆனா நாம பார்க்க போறது பலி ஆடுகள் என்கிற பரிதாப பட்ட ஜீவன்களை பற்றி பேசுகிறது இந்த கருப்பு ஆடு.கருப்பு ஆடுன்னு ஏன் எல்லோரும் சொல்லுறோம், அது எங்கே இருந்து வந்தன்னு முழம் போட்டு விளக்க மணி அண்ணன் இருப்பதாலே, அவரு என்னன்னு விளக்கம் கொடுப்பாரு, நான் சொல்ல வந்த கதைக்கு திரும்ப வாரேன்.
ஏன் பலி பன்னிகள், பலி கழுதை, பலி குரங்கு, பலி சிங்கம், பலி புலி ன்னு சொல்லுறது இல்லை, கிராமங்களிலே கோவிலுக்கு பலி கொடுப்பதற்கு கடா வளர்ப்போம்.பலி போட்டு, ஆட்டு ரத்தம், கிட்னி, குடல் எல்லாத்தையும் பொரியல் பண்ணி சாப்பிடுவோம்.ஆமா மனுசனா இருக்கிற பலி ஆடுகள், தங்கள் வாழ்கையை தியாகம் செய்து அடுத்தவர் வாழ வழி செய்கிறார்கள்.
இந்த பலி ஆடுகள் எங்கே இருக்கிறது, அதைப்பற்றி இலக்கியத்திலே என்ன சொல்லுறாங்கன்னு பார்க்கலாம்.
கல்யாணம் ஆனா புதுசிலே
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
என்று கண்ணகியை புகழ்ந்த கோவலன், கொஞ்ச நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு பிடிக்காம, கடை பக்கம் போனவன் மாதவியை பார்த்து துண்டு போட்டு உட்கார்ந்து விடுகிறார்.
கோவலன் மாதவிக்கு உதட்டு சாயம், முகச்சாயம் ஆடை அணிகலன்கள் வாங்கின செலவு, பிசா, பர்கர் சாப்பிட்ட செலவிலே,வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு போன மனுஷன், கடைசியிலே மஞ்ச துண்டு போட வேண்டிய நிலை வந்தது.
இங்கே இன்னொரு உண்மையும் சொல்ல வேண்டிய இருக்கு, கோவலனுக்கும்,மாதவிக்கும் பிறந்தவள் தான் மணிமேகலை ன்னு மணிமேகலையை எழுதிய சீத்தலை சாத்தனார் சொல்லுறாரு, கோவலன் மாதவியை திருமணம் செய்து இருந்தால் மாதவி கோவலனை வஞ்சித்து மஞ்ச துண்டு போட வைத்தாளா என்று தெரியலை.
இங்கே பலி ஆடாய் முதலிலே கண்ணகி இருப்பதாக தோன்றினாலும், உண்மையான பலி ஆடு கோவலனே, போன மச்சான் எப்படியும் திரும்பி வருவான்னு நம்பிக்கையோடு காத்து இருந்தாள் கண்ணகி.அவ நம்பிக்கை வீண் போகலை,அடிச்சாலும் பிடிச்சாலும் தங்கமணியே தெய்வமுன்னு திருப்பி வந்தார், அவரு திருந்தி வந்தாரான்னு எனக்கு தெரியலை, இளங்கோவடிகள்ட தான் கேட்கணும்.
திரும்பி வந்த கோவலனுக்கு நல்ல ஒரு ருசியான விருந்து கொடுத்து கண்ணகி அவனை எரித்து இருந்தால், இன்றைக்கு சென்னை கடற்கரையிலே இருக்கும் சிலையானது அகில உலகமெங்கும் பரவி நியூயார்க் சுதந்திர தேவி சிலையே இன்றைக்கு கண்ணகி தேவி சிலையாக மாறி இருக்கும்.கதை ஆசிரியர் ஏன் அதை செய்யலைன்னு தெரியலை, ஒருவேளை அரியணைக்கு தகுதியாக இருந்தும் தம்பி சேரன் செங்குட்டுவனுக்காக துறவு வாழ்க்கை மேற்கொண்டு தியாகம் செய்த காரணமோ என்னன்னு தெரியலை.
முதல் பாதியிலே ஆட்டம், பாட்டு மேலும் களியாட்டம் என்று ஆடி கலைத்து விட்ட நாயகன், இரண்டாம் பாதியிலே வயத்து பொழைப்புக்கு வழி இல்லாம, கண்ணகி காலிலே சரணம் அடைந்து(?) விட,புண்ணியவதி பெரிய மனசு பண்ணி கோவலனை மீண்டும் சேர்த்து கொள்கிறாள்.
வந்தவனை வீட்டு செலவுக்கு பணம் ஏற்பாடு பண்ண மதுரைக்கு தன்னோட கால் சிலம்பை கொடுத்து சேட்டு கடையிலே அடகு வைத்து/வித்து பணம் வாங்கி வர அனுப்பிய கண்ணகியின் நகைகள் கட்டாயமாக கழட்டப் பட்டது. கணவன் அகால மரணத்திற்கு காரணமான மதுரை மண்ணையும், மன்னனையும் சுடு காட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.
இங்கே கதையின் ஆசிரியர் சேர நாட்டை சேர்ந்தவர், ஆனால் கதைகளம் அமைக்கப் பட்டது சோழ, பாண்டிய நாட்டிலே, தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).
கண்ணகி ஏன் மாதவியை எரிக்க வில்லை?,அவளே கோவலனின் நிலைக்கு மூல காரணம்.மாதவியும் தன்பால் சேர்ந்த ஒரு பெண் என்றால், மதுரை எரியும் போது அங்கும் அநேக பெண்கள் இருந்து இருக்க வேண்டும்.இதற்கு
ஊள் வினை, மண் வினை, மச்சி வினை காரணமான்னு தெரியலை.ஆனால் கண்ணகியின் கோபத்துக்கு மதுரை மக்கள் பலி ஆடுகள் ஆகி இருக்கிறார்கள்.அதனாலேயே என்னவோ இன்னும் மதுரை பெரிய கிராமமாக இருக்கிறது(?).
இலக்கியங்களிலே மட்டுமல்ல நிஜ வாழ்கையிலே நிறைய பலி ஆடுகள் இருக்கிறது, பலி ஆடுகள் இல்லாவிட்டால் பணிக்கு இடம் இல்லை. இப்போதைக்கு ஆராய்சி இவ்வளவு தான், இனிமேல ஏதாவது யோசித்தா(?) சொல்லி அனுப்புறேன்.
11 comments:
வெயில் இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியோ ?
வ.வா.சங்கம் என்றால் வண்டமிழ் வாடாச் சங்கம்-ன்னு நினைச்சிக்கிட்டு இந்தப் பதிவை இங்கன போட்டுட்டீங்களா நசரேயன்?
இங்கு லக்கி-யப் பதிவுகள் கூட வரலாம்! ஆனா (இ)லக்கியப் பதிவுகள் வரலாகுமோ? :)
//மதுரை எரியும் போது அங்கும் அநேக பெண்கள் இருந்து இருக்க வேண்டும்//
யூ மீன் தினகரன் ஆபீஸ்-ல?? :)
//**தன்னோட தம்பி** சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே....மதுரையை எரித்து இருக்கலாம்(?)//
//வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு போன மனுஷன், கடைசியிலே **மஞ்ச துண்டு** போட வேண்டிய நிலை வந்தது//
Any Hidden Msg? Athum chemmozhi maanaatukku munaadi? :)
அய்யோ கண்ண கட்டிகிட்டு வருதே,, யாராவது ஜோடா குடுங்கப்பா
//கண்ணகி ஏன் மாதவியை எரிக்க வில்லை?,அவளே கோவலனின் நிலைக்கு மூல காரணம்//
அடப் பாவமே! மாதவி என்ன தப்பு பண்ணா?
சென்றதும், அவளை ஏலாத்தில் வென்றதும், செலவு அழித்ததும், அழிந்ததும் கோவலன் அல்லவா?
அதனால் தான் கண்ணகி மாதவியை எரிக்கவில்லை!
மேலும், சரியோ தவறோ - தன் அன்புக்குரியவரின் அன்பைப் பெற்றவள் மாதவி!
கோவலனின் உள்ள உகப்புக்கு இருக்கவே கண்ணகிக்குப் பிடிச்சிருக்கு!
"லூசு"-ன்னு வேணும்-ன்னா நாம சொல்லலாம்! ஆனால் தேடித் தேடிப் பார்த்தீங்க-ன்னா கூட...
கோவலன் முன்னாடி மட்டுமில்லை...
அவன் இல்லாத போது, தோழிகளிடத்தில் கூட....
மாதவியைக் கண்ணகி வைஞ்சியோ, திட்டியோ பேசுவதாக இருக்காது!
Coz Kannagi was kinda "true lover"!
She knew that Madhavi wasnt the cause, but her own beloved...So she tried to reason out only with Kovalan! This is not fate or oozh vinai! This was just Kannagi's heart!
கண்ணகி கோவலன் மேல் கொட்டிய அன்பை, கோவலனால் reciprocate செய்ய முடியவில்லை! அதைப் பின்னாளில் கண்ணகியின் மடியில் தலை வைத்துத் துயிலும் போது மெய்யாலுமே "உணர்வான்"!
அடப் பாவமே! வ.வா.ச-ல நான் இப்படி என்னிக்குமே பின்னூட்டியதில்லை! :)
(மாதவிப் பந்தல் என்பதால் மாதவிக்காக இப்படிப் பேசறேன்-ன்னும் நினைச்சுக்காதீங்க :)
//இலக்கியங்களிலே மட்டுமல்ல நிஜ வாழ்கையிலே நிறைய பலி ஆடுகள் இருக்கிறது//
//பலி ஆடுகள் இல்லாவிட்டால் பணிக்கு இடம் இல்லை//
:)
அது என்னமோ சரி தான்! முருகா!
சொல்லப் போனால்...உண்மையான பலியாடு...
கண்ணகியும் இல்லை!
கோவலனும் இல்லை!
மாதவியும் இல்லை!
மணிமேகலை தான் உண்மையான பலியாடு!
ஏன் என்று நீங்களே சொல்லுங்க பார்ப்போம்! :)
//இங்கே கதையின் ஆசிரியர் சேர நாட்டை சேர்ந்தவர், ஆனால் கதைகளம் அமைக்கப் பட்டது சோழ, பாண்டிய நாட்டிலே, தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).//
எனக்கு என்னமோ இது தான் உண்மை மாதிரி தெரியுதுண்ணே.....
//மணிமேகலை தான் உண்மையான பலியாடு!
ஏன் என்று நீங்களே சொல்லுங்க பார்ப்போம்! :) //
அப்பாவும் இல்லாம, அம்மாவும் இல்லாம மணிமேகலையால வாழ்க்கைய ஓட்டுறது கஷ்டம்.....
அதுனால தான் அட்சயபாத்திரத்த யாரோ மனிமேகலைகிட்ட கொடுத்து பொழப்ப பத்துக்கிற சொல்லி இருப்பாங்க.....ஆனா நம்ம மக்கள் அந்த தட்டுல உள்ளதையும் தினமும் பொய் வாங்கிட்டு வந்துடுறாங்க...
இவண்,
மண்ணின் மைந்தன் - பாண்டிய நாடு..
Present pottukkaren
நன்றி LK:- போன வார வெயிலோட தாக்கம் தான் இது
நன்றி கே.ஆர்.எஸ் : - பழைய சந்திப்புக்கு அப்புறமா இப்பத்தான் சந்திக்க முடியுது, நல்லா இருக்கீங்களா? .. உங்க விளக்கம் எல்லாம் நல்லா இருக்கு, மணிமேகலை ஏன் பலி ஆடுன்னு நீங்களே இடுகையை போட்டு விளக்கம் கொடுத்தா புண்ணியமா போகும்
நன்றி ILA(@)இளா :- சோடா இல்லைனா பீர் குடிக்கலாம்
நன்றி நல்லவன் கருப்பு
நன்றி டி.வி.ஆர் ஐயா
Bali aadu,,kannagi, madhavi, kovalan yarum illa.. .indha padhiva padicha naanga dhan...
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
Post a Comment