Tuesday, January 5, 2010

ஜட்டி காயல, வேலைக்கு போகல!

விடாது பெய்யும் மழை
சிலருக்கு எரிச்சல்
எனக்கும் இன்று
ஜட்டி இன்னும் காயல
வேலைக்கு இன்னும் போகல
அண்டை அயலாரின்
ஜட்டி சேராது எனக்கு
சாமான்யனுக்கு இருப்பது போல்
சாதாரண இடுப்பல்ல என்னது
உன் இடுப்பு தான்
எனக்கு மட்டும் தான்
இது என் ஜட்டி பாடும் பாட்டு
தொப்பையாக நனைந்தாலும்
ஜட்டி நனைப்பது ஆணுக்கு அழகல்ல
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
ஆயிரத்து சொச்சத்தில்
ஜட்டி வாங்கி தர ஆளில்லை
என்ன புலம்பினாலும்
ஜட்டி இன்னும் காயல
வேலைக்கு இன்னும் போகல!



******************
முதல் நாளே புட்டிகதைகள் வேணாம்னு ஜட்டி கவிதை எழுதிட்டேன்!
எனக்கு இந்த வாய்பளித்த வா.வா சங்க தலைவர் இளா அவர்களுக்கு நன்றி!
கும்மியடித்து உங்க ஆதரவை சொல்லிட்டு போங்க நண்பர்களே




46 comments:

குடுகுடுப்பை said...

சாதாரண ஜட்டி. இன்னிக்கு என் பதிவ படிங்க ஓய்

வால்பையன் said...

ஏன் யாரையும் காணோம்!

நிறைய பேருக்கு திறக்க மாட்டிங்குதாம்ல!

கண்மணி/kanmani said...

இதுக்கு நாங்கெல்லாம் பின்னூட்டம் போடலாமா ன்னு தெரியல.இருந்தாலும் கவிதை கவிதை போலத்தான் இருக்கு

வால்பையன் said...

//இதுக்கு நாங்கெல்லாம் பின்னூட்டம் போடலாமா ன்னு தெரியல.இருந்தாலும் கவிதை கவிதை போலத்தான் இருக்கு //

தப்பில்லைங்க!

வேலைக்கு பதிலா, ஸ்கூலக்கு போறதா நினைச்சிங்கோங்க!

hiuhiuw said...

//ஆயிரத்து சொச்சத்தில்
ஜட்டி வாங்கி தர ஆளில்லை
என்ன புலம்பினாலும்
ஜட்டி இன்னும் காயல//

இந்த வேதன யாருக்குதான் இல்ல ... உண்ணா மீறவே ஊருக்குள் ஆளில்ல

hiuhiuw said...

//அண்டை அயலாரின்
ஜட்டி சேராது எனக்கு//

கொடியில காயற ஜட்டியை திருடும் மர்ம ஆசாமி நீங்கதானா

கோவி.கண்ணன் said...

கிழியப் போற ஜட்டி காய்ந்தால் என்ன காயாவிட்டால் என்ன ?
:)

hiuhiuw said...

//கிழியப் போற ஜட்டி காய்ந்தால் என்ன காயாவிட்டால் என்ன ?//

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சுக்கலாம் ..

கு கு கு ... குட்டி நெஞ்சு கிளிஞ்சிருச்சே எங்க மொறையிடலாம்

வால்பையன் said...

//கொடியில காயற ஜட்டியை திருடும் மர்ம ஆசாமி நீங்கதானா //

அதான் சேராதுன்னு சொல்லிடோம்ல!
ஆயிரத்தி சொச்ச அரசியலுக்கு வாங்கப்பா!

hiuhiuw said...

//ஆயிரத்தி சொச்ச அரசியலுக்கு வாங்கப்பா!//

உங்களோட பாலோயர்ச சொல்றீங்களா ?

வால்பையன் said...

//ஆயிரத்தி சொச்ச அரசியலுக்கு வாங்கப்பா!//

உங்களோட பாலோயர்ச சொல்றீங்களா ? //


calvin kelen

ஊர்சுற்றி said...

//ஏன் யாரையும் காணோம்!

நிறைய பேருக்கு திறக்க மாட்டிங்குதாம்ல!//

என்னாது??!!!

hiuhiuw said...

//நிறைய பேருக்கு திறக்க மாட்டிங்குதாம்ல!//

என்னாது??!!!//

உட்டாலக்கடி கிரி கிரி கிரி >>>>> இப்ப தொரந்துச்சா ?

கண்ணா.. said...

//ஜட்டி இன்னும் காயல

வேலைக்கு இன்னும் போகல!//

ஃபிரியா விடுங்க பாஸ்

ஊர்சுற்றி said...

rajan RADHAMANALAN,
கிகிகி... :)

hiuhiuw said...

//ஃபிரியா விடுங்க பாஸ்//

பிரியா விடறதா ? சரி பிரியா விலாசத்த சொல்லுங்க மொதல்ல

வெண்பூ said...

கலக்கல் வால்... செம ஆரம்பம்... கலக்குங்க, காத்திருக்கிறேன்..

வால்பையன் said...

//உட்டாலக்கடி கிரி கிரி கிரி >>>>> இப்ப தொரந்துச்சா ?//

வடகறி விட்டுபோச்சு தல!

வால்பையன் said...

//கலக்கல் வால்... செம ஆரம்பம்... கலக்குங்க, காத்திருக்கிறேன்.. //

ஊக்குவிப்பிற்கு நன்றி தல!

hiuhiuw said...

//வடகறி விட்டுபோச்சு தல!//

அதுக்கே தொரந்துருச்சாம் ! மேல பாடுனா கிழிஞ்சுரும்

கிருஷ்ண மூர்த்தி S said...

/தொப்பையாக நனைந்தாலும்/

பெஞ்சு மேல ஏறி நில்லுங்க!

தொப்[பலாக நனைந்தாலும் என்பது தான் சரி!

/ஆயிரத்தி சொச்ச அரசியலுக்கு வாங்கப்பா!/

ஆயிரம் என்பதும் பார்வைப் பிழை! இப்போது போய்ப் பார்த்தபோது 1184 இருக்கிறது!

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் வந்துமா இந்தப் புலம்பலும், அலம்பலும்!

விட மாட்டீர்களா?

பரிசல்காரன் said...

ஜட்டி போடாம போடா வாலு!

KARTHIK said...

நீங்க கலக்குங்க

pudugaithendral said...

இதுக்கு நாங்கெல்லாம் பின்னூட்டம் போடலாமா ன்னு தெரியல.இருந்தாலும் கவிதை கவிதை போலத்தான் இருக்கு//

ரிப்பீட்டு.....

பீர் | Peer said...

ஆமா.. ஜட்டிக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?

Unknown said...

வேலைக்கு போகனுன்னா ஜட்டி அவசியமா? இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே

hiuhiuw said...

//ஆமா.. ஜட்டிக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?//

அதானே ! பீருக்கும் மோருக்கும் முடிச்சு போட்டா மாதிரி

அன்பரசு said...

ஜட்டி காயலேன்னா, கர்சிப்பக் கட்டிக்கிட்டு கெளம்பவேண்டியதானப்பு! அத விட்டுப்புட்டு நல்லா சொல்ராய்ங்கப்பா டீடெய்லு! அய்யோ............! அய்யோ...!

hiuhiuw said...

தள ஈற ஜட்டி பொடாத பிக்கும் .

இவணுக சொள்றத கெட்டு நி அளின்சது பொதும் வாநா உட்ரு

சொள் அலகன்

வால்பையன் said...

/தள ஈற ஜட்டி பொடாத பிக்கும் .

இவணுக சொள்றத கெட்டு நி அளின்சது பொதும் வாநா உட்ரு//

சரியா சொன்னிங்க தல!
ஜட்டி காயுற வரைக்கும் வேலைக்கே போகாம இருப்பேனே தவிர ஈர ஜட்டி போடமாட்டேன்!

நாங்கெல்லாம் கொள்கைவியாதிகள்!

☀நான் ஆதவன்☀ said...

வால் ரொம்ப நாளைக்கு அப்புறம் வவா சங்கத்திற்கு அட்லாஸ் வாலிபரா வந்திருக்கீங்க. வாழ்த்துகள். ஒரு மாசம் கலக்குங்க

hiuhiuw said...

//சரியா சொன்னிங்க தல!
ஜட்டி காயுற வரைக்கும் வேலைக்கே போகாம இருப்பேனே தவிர ஈர ஜட்டி போடமாட்டேன்!//

காத்தோட்டமா கோவணம் கட்டிக்கலாம் தல

Kumky said...

rajan RADHAMANALAN said...
தள ஈற ஜட்டி பொடாத பிக்கும் .

இவணுக சொள்றத கெட்டு நி அளின்சது பொதும் வாநா உட்ரு

சொள் அலகன்


த .. பார்ரா...

hiuhiuw said...

//த .. பார்ரா...//

என்னதள ஸாக் ஆவுதா ?

hiuhiuw said...

எல்லாம் உங்க ஸ்டைல் தான் ! ஒரு பூச்சி காட்டலாம்னு

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா..ஆரம்பிச்ச்ட்டங்கப்பா..ஆரம்பிச்சுட்டாங்க..

Kumky said...

rajan RADHAMANALAN said...
//த .. பார்ரா...//

என்னதள ஸாக் ஆவுதா ?

எனக்கு மேல இருக்கிற தல என்ன ஆச்சுன்னு தெரியலயே...?

hiuhiuw said...

பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம்

ilavanji said...

// ஜட்டி இன்னும் காயல
வேலைக்கு இன்னும் போகல //

அனுபவத்துல சொல்லறேன்...

மைக்ரோவேவ் அவன்ல வைச்சு 2 நிமிசம் சுத்த விடுங்கப்பு. ஆவி பறக்கும் காஞ்ச ஜட்டிக்கும் கதகதப்பான உணர்வுக்கும் நான் கேரண்டி!! அதுபோக இந்த மாதிரி கவிதை எழுதி புல்லரிக்கவும் வேணாம் :)

hiuhiuw said...

//மைக்ரோவேவ் அவன்ல வைச்சு 2 நிமிசம் சுத்த விடுங்கப்பு//

அடுப்புல வெந்தது
இடுப்புல தொங்குது

ஐலேசா ஐலேசா !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//மைக்ரோவேவ் அவன்ல வைச்சு 2 நிமிசம் சுத்த விடுங்கப்பு. ஆவி பறக்கும் காஞ்ச ஜட்டிக்கும் கதகதப்பான உணர்வுக்கும் நான் கேரண்டி!!//

இது நல்ல ஐடியாவா இருக்கே.

வெண்பூ said...

வெயில் காலத்துல அஞ்சு நிமிசம் ஃப்ரிட்ஜ்ல வெக்குறது உண்டு. இது புதுசா இருக்கு... :)))

cheena (சீனா) said...

கவிதை அருமை

ஜட்டிய வச்சுக்கூட கவிதை எழுத முடியுமா - முடியும் - வாலால முடியும்

ஆமா முடியும் நல்வாழ்த்துகள் வாலு

மோனி said...

கும்மியடிச்சாச்சு ...

மோனி said...

கும்மியடிச்சாச்சு ...

அண்ணாமலையான் said...

வெண்பூ said...

வெயில் காலத்துல அஞ்சு நிமிசம் ஃப்ரிட்ஜ்ல வெக்குறது உண்டு. இது புதுசா இருக்கு... ”
அட ...ஜட்டியே புதுசா இருக்கும்னா....(மீதிய த/உ.த தொடருவார்கள்)