நேற்று பொங்கலை ஒட்டி தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன..இதில் ராகதேவன் இசைஞானி இளையராஜாவின் துபாய் இசைக் கச்சேரி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது நாம் அனைவரும் அறிந்ததே..
இந்த நிகழ்ச்சிக்கு நம் பதிவுலகைச் சேர்ந்த சிங்கங்கள் சென்று சிறப்பித்து வந்த விவரம் பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டதை உலகமே அறியும்...
பொங்கி வழிந்த அவர்களின் இசை ரசனை பதிவுகளில் கண்டு நாம் பழரசம்...சாரி பரவசம் அடைந்த விவரத்தை இப்போது உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
அப்பட பட்ட உயர்வான இசை ரசனை கொண்ட நம் பதிவுலகச் சிங்கங்கள் ராஜாவின் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டு அகில பதிவுலகமும் கொந்தளித்து கொப்புளித்துப் போய் உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்றும் நம் சிங்கங்களின் வருகையை கலைஞர் தொலைக்காட்சி பதிவு செய்ய தவறியுள்ளது ஒரு திட்டமிட்ட சதிச் செயலாகவே பரவலாகக் கருதப்படுகிறது..
தமிழே புரியாத ஷேக்குகளின் வரவைக் கூட மீண்டும் மீண்டும் க்ளோஸ் அப் வைத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள் கலைஞர் டிவியினர்.. அதிலும் பாதி ஷேக்குகள் ஓசி டிக்கெட் எடுத்து வந்திருந்தார்களாம்..அவர்களுக்கு அளித்த முக்கியத்துவம் கூட நம்ம நற்றமிழ் இசை ரசிகர்களுக்கு அளிக்கப்படாத்து பதிவுலகின் பல மட்டங்களிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரவ விட்டுள்ளது.
இது குறித்து நேற்று மாலை கிடேசன் பார்க்கில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது..
அதில் நம் துபாய் பதிவுலகப் பெருந்தகைகள் பினாத்தலார், ஆசிப் அண்ணாச்சி, குசும்பன், கோபி, சென்ஷி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.. இந்த ஆலோசனைக் கூட்டத்தககுச் செல்ல புறப்பட்ட அபி அப்பா, அய்யனார் மற்றும் நம்ம சங்கத்து சிங்கம் தம்பி கதிர் ஆகியோர் தடுக்கப்பட்ட நிலையில் கிடேசன் பார்க் சுவர் ஏறி குதித்து அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பதிவுலகம் எங்கும் நேற்று மதியம் முதல் பரவத் தொடங்கிய இந்த தகவல் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கபடுகிறது..
இது குறித்து கருத்து தெரிவிக்கவும் இயலாத நிலையில் பெனத்தலார்,அண்ணாச்சி ஆகியோர் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.
தொலைபேசியில் வ.வா.சங்கத்து நிர்வாகிகளோடு தொடர்பு கொண்ட நண்பர் குசும்பன் இது குறித்து கூறியதாவது..." நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிச் சென்ற எங்களது வருகையை கலைஞர் டிவி வேண்டுமென்றே இருட்டடிப்பு செயதுள்ளது..நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் வந்த இளையராஜாவையும் அவர் மொத்தக் குழுவினரையும் காட்டியதைக் கூட பரவாயில்லை என்று ஏற்று கொள்ள முடியும்... குஷ்பு, ஜெயராம் போன்றவர்களும் டிக்கெட் வாங்காமல் மேடை வரை அனுமதிக்கப்பட்டதும் கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டதும் எங்களை வருத்தப்பட வைத்துள்ளது... அத்தோடு மொழி புரியாத ஷேக்குகளையும் அவர்களோடு வந்து இருந்த கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் " எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
நிலைமையின் தீவிரம் உணர்ந்து வ.வா.சங்கம் நடந்து முடிந்துள்ள இந்த அநியாயத்தைக் கிடேசன் பார்க் மக்களோடு சேர்ந்து கண்டப்படி கண்டனம் செய்கிறது...கண்டனத்துடன் பெரும் போராட்டமும் அறிவிக்கிறோம்.. போராட்டத்தின் கோரிக்கையாக
அடுத்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக சங்கத்தினரையும் கிடேசன் பூங்காவினரையும் அழைத்து நடந்த நிகழ்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..