Monday, September 11, 2006

சர்தார்ஜி - இது நிஜம் அய்யா!

என் வாலிப அனுபவங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த அனுதாபங்களினால் உந்தப்பட்டு, அனுபவச்சிதறல்களையே தொடரலாமே என்ற முடிவுக்கு வந்தேன். (அடங்குடா மவனே என் பதிவுக்கு மட்டும்தான்).

சைட்டடிக்கத்தான் முடியவில்லையே தவிர, வட இந்தியாவில் வேறு எந்த வகையிலும் ஆண்டவன் எனக்குக் குறை வைக்கவில்லை. காமடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் கூடவே ஒரு சர்தார்ஜி நண்பனை அனுப்பி வைத்தார்.

சர்தார்ஜிகளை ஜோக்குகளில் மட்டுமே சந்தித்த வந்த எனக்கு அந்த ஜோக்குகள் முழுக்கற்பனை அல்ல என்று உணர வைத்தவன் இந்த நண்பன். இவனை ஏமாற்றுவது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.

சென்னையிலே பரங்கிமலையில் பிறந்து வளர்ந்தவன் இந்த சர்தார். ஏதோ காரணங்களால் சர்தார்ஜிகளோடு புழங்காமல் ஆங்கிலோ இந்தியர்கள் குடியிருப்புக்கு அருகில் வசித்ததால் சுமாராகத் தமிழும் அரைகுறை ஆங்கிலமும் வைத்து ஒப்பேற்றுவான். இவனுக்கு இந்தி வராது என்று எங்களுக்குத் தெரியாது (நாங்கள் நால்வர், சர்தாரைத் தவிர்த்த மூவரும் அக்மார்க் தமிழர்கள் - தூர்தர்ஷனில் கூட இந்தி பார்க்காதவர்கள்).

உத்தரப்பிரதேசத்தின் ஒரு அழுக்கடைந்த கோல் இந்தியா டவுன்ஷிப்பில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட, தங்குமிடத்துக்கு ஆட்டோ வைக்க வேண்டும். இந்திப் புலவன் என்று நாங்கள் நினைத்திருந்த சர்தார் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினான்.

"எக்ஸிகியூடிவ் ஹாஸ்டல் ஜானா ஹே!"

"வோ கஹான் ஹே?" என்றான் ஆட்டோக்காரன். நல்லவேளையாக வழி சொன்னவர் இன்னொரு அடையாளத்தையும் சொல்லியிருந்தார்.

"ஜி எம் ஆபீஸுக்கு பகல் மே" இந்த உக்குவை நாங்கள் கவனிக்கவில்லை!

"பச்சீஸ் ருப்யா?"

"மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா"

"நாப்பதுக்குக் கேளு" பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல!

"சார்லீஸ் டீக் ஹே?"

அதிர்ந்து போன ஆட்டோக்காரன் "டீக் ஹே" என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.

என் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்!

ஏமாறும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து நாங்களே மறந்த பின்னர் ஏமாந்ததை பறைசாற்றிக்கொள்ளுவது இவன் ஸ்டைல்!

ஒரு முறை ட்ரெயினில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அத்துவானத்தில் சிக்னல் கிடைக்காமல் நள்ளிரவில் மூன்று மணிநேரம் நின்றது. ஆட்டத்திலேயே தூங்கிப் பழகிய நான் ஆட்டம் நின்றதால் எழுந்துவிட்டேன். சர்தார் கனவு கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு நண்பனும் எழுந்து, இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை உபாதை கழிக்க இறங்கினான்,

ஏறும்போது சர்தார் அரைத்தூக்கத்தில் "ஏண்டா வண்டி நிக்குது?" நண்பன் குசும்பு பிடித்தவன். "அதுவா, வழியிலே ரொம்ப முள்ளாம், ரெண்டு மூணு டயர் பஞ்சராம்" இந்த ஜோக் முடிந்துவிட்டது என நினைத்து தூங்கிவிட்டோம்.

மறுநாள் அலுவலகத்தில் பாஸ் ஏன் லேட் என்று கேட்டதற்கு சர்தார்ஜி "வர வழியிலே மூணு டயர் பஞ்சர், அதனாலதான் லேட்" என்று சீரியஸாகச் சொன்னதை இன்றும் அந்த அலுவலகம் மறக்கவில்லை, மறக்கத் தான் முடியுமா?


அரைகுறைத் தமிழில் இவன் அடித்த அட்டகாசங்களை இந்த வருட அட்லாஸ் வாலிபனானாலும் கூட முடிக்க முடியாது.

ஒரு நாள் சீரியஸாகத் தமிழ் பாட்டு ஒன்றைக் கொலை செய்து கொண்டிருந்தான்.

"உல்லுக்குல்ல ஸக்கரவத்தி ஆனா உன்மையிள மெலுகுவத்தி"

"என்ன சர்தார், தமிழ் பாட்டெல்லாம் பாடுற!"

"நல்ல மீனிங்டா இந்த பாட்டு"

"அப்படியா? என்ன மீனிங் சொல்லு பாக்கலாம்!"

"he tells, he is inside sweet matches, but really he is candle matches!"

"ஏறத்தாழ புடிச்சிட்டயே.. அது என்ன Sweet matches?"

"சக்கர ன்னா Sugar தானே? அதான் Sweetனு கண்டுபிடிச்சேன்"

"அடேங்கப்பா! அப்புறம் matches?"

"அதான் வத்தின்னு வருதே.. மாட்ச் பாக்ஸத்தானே வத்திப் பொட்டின்னு சொல்றீங்க?"

அருகிலிருந்த சுவரில் தலையை முட்டிக்கொள்ளப் போனேன்..

"உண்ச்சி வியாசர்பாடி"

"இது என்னடா"

"டென்ஷன் ஆவாதேன்னு தமிழ்லே சொன்னேன்"

'உணர்ச்சிவசப்படாதே" என்று சொல்ல வந்தானாம்!

வேலையைப் பொறுத்தவரை அவன் புத்திசாலிதான். இருந்தாலும் ஓரிரு முறை அவனையும் மீறி அவனுக்குள் இருக்கும் சர்தார் வெளிப்பட்டுவிடுவான்.

மெஷினில் இருக்கும் ரேடியேட்டர் கேப்புகள் Brassஇனால் ஆனவை என்பதால் அடிக்கடி திருட்டுப்போகும். கேப் போவதால் வேறு சில பிரச்சினைகள் வந்து, அடிக்கடி மெஷின்கள் பழுதாவதால் இந்தத் திருட்டுகள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஒரு நாள் நம் தலைவர் வேலையிலிருந்து திரும்பி வந்து "யூரேகா" என்றான் உற்சாகமாக!

"என்னடா ஆச்சு?"

"இந்த ரேடியேட்டர் கேப் பிரச்சினைக்கு ஒரு பெர்மனண்ட் சொல்யூஷன் கண்டு பிடிச்சிட்டேன். எல்லாக் கேப்பையும் எடுத்து ஸ்டோர்க்குள்ளே வச்சிட்டேன்"

"கேப் இல்லாட்டி தண்ணி சிந்திடுமேடா"

"நான் என்ன கேனையனா? எல்ல வண்டிக்கும் கேப் இருந்த இடத்திலே ஒரு பிளேட் வச்சு வெல்ட் செஞ்சுட்டேன்!"

எல்லா வெல்டிங்கையும் நீக்க ஒரு வாரமானது!

ஒரு நாள் மிகக் கோபமாக இருந்தான்.

"என்னடா? கோபமா இருக்கே?"

"என்னை அந்த ஸ்ரீவாத்ஸவ் முட்டாளுன்னு நெனைக்கிறாண்டா!"

"பரவாயில்லையே, ஸ்ரீவாத்ஸவ் புத்திசாலின்னு புரூவ் பண்ணிட்டானே? என்ன ஆச்சு?"

"நம்ம கேடர்பில்லர் ரெகமண்டேஷன் படி மெஷின் டயர்லே வெறும் காத்து அடிக்கக்கூடாது, நைட்ரஜன் தான் அடிக்கணுமுன்னு அவன்கிட்டே சொன்னேன்."

"சரிதான். அது ரெகமண்டேஷன் இல்லடா, வெறும் சஜஷன் தான்"

"இருந்துட்டுப் போகட்டுமே, உண்மையச் சொல்லலாமில்ல, வெறும் காத்துதான் அடிக்கறோமின்னு - அவன் என் கிட்டே பொய் சொல்றாண்டா.. இந்த சைட்லே நாங்க எப்பவும் 78% பியூர் நைட்ரஜன் தான் அடிக்கறோம்னு சொல்றான். நானும் இந்த வொர்க் ஷாப் புல்லாத் தேடிப் பாத்துட்டேன், எங்கேயுமே 78% நைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷனே கிடையாது. வெறும் ஏர் கம்பிரஸர்தான் இருக்கு"

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டு, "சும்மா விடாதே அந்த ஸ்ரீவாத்ஸவ்வை! பொய்யா சொல்றான்" என்று ஏற்றிவிட்டேன்.

கொஞ்ச நாள் கழித்து அவனுக்கும் உண்மை தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரம் ஸ்ரீவாத்ஸவ்வும் நானும் அவன் கண்ணில் படாமல், வி ஆர் த எஸ்கேப்!

35 comments:

Thirumozhian said...

யாராவது உதவி பண்ணுங்கப்பா!

நான் திருமொழியான்-னு ஒரு ப்ளாக் ஸ்பாட்ட தொடங்கிட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு 3 பதிவுகளையும் எழுதி தமிழ்மணத்துல லிஸ்ட்டுல சேத்துட்டேன். ஆனா என்னோட பேருக்கு நேரா மறுமொழி திரட்டப்படுவதில்லை அப்படின்னு வருது.

என்னோட புது பதிவு ஏதையாவது தமிழ்மணத்துல சேர்க்குறதுக்கு என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிய தந்தா ஏற்கனவே கொடுக்கப்பட்ட யூ.ஆர்.எல் அப்படின்னு நிராகரிச்சுறுது.

என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிக்கு பதிலா ஏதாவது ஒரு பதிவோட முகவரிய கொடுத்தா, அதுக்கப்புறமா நியூஸ் ஃபீட்ன்னு எதையோ கேக்குது. அங்க எதைக்கொடுக்கிறதுன்னு தெரியல.

டெம்ப்லேட்ட மாத்துறதுக்கான குறிப்புகள படிச்சி அதுபடியும் செஞ்சிட்டேன். தமிழ்மண ஹைப்பர்லின்க் வருது ஆனா ஒரு புது இடுகைய தமிழ்மணத்துல சேர்க்கறதுக்கான கமாண்ட் பட்டன் வரவே மாட்டேங்குது.

யாராவது உதவி பண்ணுங்கப்பா!
நான் யூஸ் பண்ணுறது லினக்ஸ் ஃபெடோரா கோர் 4 - மோஸில்லா.
my email id is thirumozhivarman@yahoo.co.in
முன்கூட்டிய நன்றிகள்.

திருமொழியான்.

இலவசக்கொத்தனார் said...

இப்போதைக்கு ஒரு சிரிப்பான் போட்டு வைக்கறேன். :-D

கைப்புள்ள said...

அருமையான பதிவுங்க. எனக்கும் ஒரு சர்தார்ஜி ஃபிரெண்டு இருக்கான். என்னைய விட மூனு வயசு பெரியவன்...ஆனா அவன் பண்ணற சேட்டையெல்லாம் பாத்தா எட்டாங்கிளாஸ் பையன் மாதிரி இருக்கும். எம்பிஏ எக்சாம்ல கூட தெகிரியமா மாட்டிக்காம பிட் அடிச்ச பார்ட்டி அவன். "சர்தார்ஜி எல்லாம் சரியா பன்னிரெண்டு மணிக்கு பைத்தியக்காரத் தனமா எதாவது பண்ணுவாங்கன்னு சொல்றாங்களே...அது ஏண்டா?" அப்படின்னு கேட்டா "அதெல்லாம் உன்னை மாதிரி மதராசி கிட்ட சொன்னா அப்புறம் சர்தார்ஜிக்கு என்ன மரியாதை"னு கேப்பான். நெறைய சர்தார்ஜி ஜோக்ஸ் அனுப்புவான்.

//"பச்சீஸ் ருப்யா?"

"மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா"

"நாப்பதுக்குக் கேளு" பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல!

"சார்லீஸ் டீக் ஹே?"

அதிர்ந்து போன ஆட்டோக்காரன் "டீக் ஹே" என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.

என் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்!//

இதே மாதிரி ஒரு அனுபவம் என்னோட பாஸ் ஒருத்தருக்கு நடந்துருக்கு...என்ன ஒரே ஒரு வித்தியாசம் அவரு நம்ம ஊருக்காரரு. ஒரு தரம் டேக்சி புடிக்கும் போது டேக்சி டிரைவர் டேட் சோ ருபியா(150) கேட்டுருக்கான். இந்தியில பிராக்சன்களைப் பத்தி அதிகமா கேள்வி பட்டிருக்காத எங்க பாஸ் "நஹி...நஹி...ஐ வில் கிவ் யூ ஒன்லி டாய் சோ ருபியா(250)"னு தனக்குத் தெரிஞ்ச இந்தியை இங்கிலீசோட மிக்ஸ் பண்ணி சொன்னாராம். நல்ல காலம் இந்தி தெரிஞ்ச ஒரு நண்பர் பக்கத்துல இருந்ததுனால 100 ரூபா தண்டம் ஆகாம தப்பிச்சிச்சு. இப்பக் கூட சொல்லிச் சொல்லி சிரிப்போம்.
:)

dondu(#11168674346665545885) said...

"The Posts and comments in this Blog are all nothing but simulation.."
அப்படியெல்லாம் சொன்னா சிமுலேஷன் சார் கோச்சுப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Syam said...

எந்த ஊர்ல பொறந்தாலும் சர்தாட் சர்தார்தான் அடிச்சிக்க முடியாது...கலக்கலா இருந்தது....ஆமா அந்த வெல்ட் வெச்சது நீங்கனு கேள்வி பட்டோம் :-)

ILA (a) இளா said...

காலங்காத்தால பக்கத்து சீட்டுக்காரன் நல்லா முறைக்கிற அளவுக்கு சிரிச்சு வெச்சுட்டேன். கலக்கல் சர்தார்தான் போங்க..

துளசி கோபால் said...

அய்ய்யோ... போதும்ப்பா.
சிரிச்சு சிரிச்சு இப்போ வயத்துவலி:-)))))

தருமி said...

:)
:)
:)

மதுமிதா said...

:-)

பெனாத்தலாரே
அடங்குறா மகனேயின் உள்ளுக்குள்ளே இருக்கிற சர்தார்ஜீயைப் பத்தி சின்ன கோடி கூட காட்டலியே அன்னைக்கு மீட்ல.

:-)

யாராவது முதல் பின்னூட்டத்தில உதவி கேட்ட அந்த திரிமொழியானுக்கு உதவி பண்ணுங்கம்மா.

பொன்ஸ்~~Poorna said...

பதிவு சூப்பர் சுரேஷ்..

என்ன இருந்தாலும் எல்லா சர்தாரும் முட்டாள்னு ஒத்துக்கமுடியலை... exceptions - examples - தத்துவத்தில் எல்லாரையும் நம்ம தான் கிண்டல் செய்துகிட்டிருக்கோமோ என்னவோ..

ரசிச்சி சிரிச்சது வியாசர்பாடிக்குத்தான்.. வெல்டிங் மேட்டரும் நைட்ரஜன் ஜோக்கும் எனக்குப் புரியலை :(.. கெமிஸ்டிரி, மெக்கானிகல் எல்லாம் படிச்சி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு ப்ரொபஸர்!

ILA (a) இளா said...

//அப்படியெல்லாம் சொன்னா சிமுலேஷன் சார் கோச்சுப்பார்//

சே சே.. அப்படியெல்லாம் நினைச்சுக்கமாட்டாரு. சங்கத்து பக்கம் வந்தா சிரிச்சு மட்டுமே போயிருவாங்க.

Leo Suresh said...

இத்துடன் வயிற்று வலி மாத்திரைக்கான
பில் இனைத்துளேன் உடனே செட்டில் செய்யாவிட்டால் மாக்கமா( அரபில கோர்ட்டுங்க)வுக்கு போய்டுவேன்.
லியோ சுரேஷ்
துபாய்

Unknown said...

தலிவா...பின்னுறீங்களே... அந்த மதிப்பிற்குரிய சர்தார் விலாசம் கொடுத்தீங்கன்னா.. அடுத்த மாசம் அட்லாஸ் வாலிபர் பதவியே அவருக்கே கொடுத்துருவோம்...:)))

Unknown said...

//இத்துடன் வயிற்று வலி மாத்திரைக்கான
பில் இனைத்துளேன் உடனே செட்டில் செய்யாவிட்டால் மாக்கமா( அரபில கோர்ட்டுங்க)வுக்கு போய்டுவேன்.
லியோ சுரேஷ்
துபாய் //

லியோ கவலைப் படாதீங்க நம்ம சர்தார்க்கு மருத்துவமும் தெரியுமாம் அனுப்பிடலாமா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

படித்து சிரித்தேன் நல்ல இருந்தது பதிவு :-))).

ராசுக்குட்டி said...

ha ha...
நல்லா வயிறு குலுங்க சிரிச்சேன் (நமக்கு வலிக்காது!)
கலக்கல் பெனாத்தலாரே!

பொன்ஸ்... சந்தேகங்களை தீர்த்து வைக்க ஆசைதான், ஆனா நான் சீரியசா பதில் சொல்ல நம்மள சர்தார்ஜி வம்சத்துல சேத்துட்டா என்ன பண்றதுன்னு, எஸ்ஸாகுறேன்! இப்போ,

Leo Suresh said...

''லியோ கவலைப் படாதீங்க நம்ம சர்தார்க்கு மருத்துவமும் தெரியுமாம் அனுப்பிடலாமா? ''
தேவ் மாத்திரை வாங்கினப்பிறகு இப்பதானே சொல்றீங்க,அதல்லாம் மாக்காமாவிலே பாத்துக்கிலாம்,லாஸ்ட் வார்நிங்க்.

லியோ சுரேஷ்
துபாய்

பினாத்தல் சுரேஷ் said...

திருமொழியான்,

இன்னும் யாரும் உதவலேன்னா எனக்கு sudamini AT gmail dot com போடுங்க.. என்ன பிரச்சினையா இருந்தாலும் சரி பண்ணிடலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

//இப்போதைக்கு ஒரு சிரிப்பான் போட்டு வைக்கறேன். :-D //

இப்போதைக்கு நானும் ஒத்துக்கறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கைப்பு,

12 மணி கதையா? சொல்லிட்டா போச்சு..

ஒரு சர்தார்ஜி தினம், ஒரு செம்புல பால் எடுத்துகிட்டு ரோடைக் கிராஸ் செய்வாராம். எதிர்லே உள்ள குறும்பனுங்க, "சர்தார், டைம் என்ன ஆச்சி"ன்னு கேப்பானுங்க. இவர் அப்பாவி. செம்பைக்கவிழ்த்து வாட்சைப் பாத்து 12 மணின்னு சொல்வாராம்.

இப்படிக் கொஞ்ச நாள் போன பிறகு, ஒரு நாள் தலைக்கு அறிவு வளர்ந்து, செம்பை கை மாத்தி, வாட்சைப் பாத்து டைம் சொன்னாராம்.

எல்லாரும் அசந்து போய் நிக்கும்போது..

"நான் என்ன இப்படிச் செம்பைக் கவுத்து இன்னிக்கும் பால் கொட்டுவேன்ன்னு நெனைச்சியா"ன்னு பாலைக் கொட்டினாராம்!!!

பினாத்தல் சுரேஷ் said...

டோண்டு சார்,

பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லாம டிஸ்கியைப் பத்தி சொல்றீங்களே? நியாயமா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நிர்மல்.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்யாம்,

ஒரு மார்க்கமாத்தான் கமெண்டு வுடறீங்க நீங்களும் மதுமிதாவும்!

பினாத்தல் சுரேஷ் said...

எலி வால் ராஜா,

என் நண்பன்கிட்டேயே நான் அடிக்கடி சொல்வேன்.. ஒண்ணு உன்னை மாதிரி இருக்காங்க இல்ல மன்மோஹன் சிங் மாதிரி இருக்காங்க! சர்தாருங்கள்லே நடுத்தரமானவங்களே கிடையாதாடா?ன்னு கேப்பேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இளா..

பினாத்தல் சுரேஷ் said...

அக்கா,

நல்லா இருக்கீங்களா? பாத்து ரொம்ப நாளாச்சி. சிரிச்சதுக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

தருமி சார்,

அளந்து சிரிச்சிருக்கீங்களே!

பினாத்தல் சுரேஷ் said...

மதுமிதா,
//அடங்குறா மகனேயின் உள்ளுக்குள்ளே இருக்கிற சர்தார்ஜீயைப் பத்தி சின்ன கோடி கூட காட்டலியே அன்னைக்கு மீட்ல.//

"உள்ளுக்குள்ளே இருக்கிற" வா? என்ன சொல்ல வரீங்க நீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்,

நான் பழகினது இப்படி ஒரு சர்தார்ஜி கூடத்தான். புத்திசாலி சர்தாருங்களையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ரேர்தான்:-))

வெல்டிங் மேட்டர் - ரேடியேட்டர் கேப்பை வெல்ட் செய்தால் தண்ணி எங்கே ரொப்புவீங்க?

காத்துலே 78% நைட்ரஜன், 21 % ஆக்ஸிஜன்.. சின்ன வயசு கெமிஸ்ட்ரி

பினாத்தல் சுரேஷ் said...

லியோ சுரேஷ் - வயித்து வலிக்கு நாங்க பொறுப்பில்லன்னு டிஸ்கியிலேயே இருக்கு. எந்த கன்ஸ்யுமர் மாக்காமாவுலேயும் உங்க கேஸ் நிக்காது!

பினாத்தல் சுரேஷ் said...

தேவ் அய்யா!

//அந்த மதிப்பிற்குரிய சர்தார் விலாசம் கொடுத்தீங்கன்னா.. அடுத்த மாசம் அட்லாஸ் வாலிபர் பதவியே அவருக்கே கொடுத்துருவோம்...:))) //

இலவசக்கொத்தனார், கொங்கு ராசா கவனிக்கிறீங்களா? இவங்க அட்லாஸ் வாலிபனுக்கு என்ன குவாலிபிகேஷன் எதிர்பார்க்கறாங்கன்னு?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன் எண்ணம்.

பினாத்தல் சுரேஷ் said...

ராசுக்குட்டி,

நன்றி..

இப்போ நான் கூடத் தான் சந்தேகங்களைத் தீத்து வைத்தேன், என்னை அப்படியா நினைப்பாங்க? (பயமா இருக்கே)

Unknown said...

பெனாததல் பெருமகனாரே,

கொத்ஸ், ராசா, இப்போ நீங்க எல்லாருமே அட்லாஸ் வாலிபர் பதவிக்கு ஓவர் குவாலிபைட்ங்கற மேட்டர் ப்திவுலக மக்களுக்கு நல்லாவேத் தெரியும்.. இருந்தாலும் பெரிய மனசுப் பண்ணி வந்து விளையாடிட்டு இருக்கீங்க... ஆமா அட்லாஸ் வாலிபராப் பந்தயத்துல்ல பட்டயக் கிளப்புற உங்களுக்கு பரிசா என்னக் கொடுக்கலாம்

அ - கோப்ப
ஆ- ஆப்ப
இ - பெப்ப

உங்கள் பதிலகளை அ அல்லது ஆ அல்லது இ ந்னு டைப் பண்ணி டபுள் சீரோ டபுள் சீரோ நம்பருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க

பினாத்தல் சுரேஷ் said...

சர்தார் குவாலிபைடு, நாங்க ஓவர் குவாலிபைடா?

எங்கே போயிட்டீங்க இ கொ, கொ ராசா?