Thursday, August 17, 2006

சங்கம் - கவிதைப் போட்டி- 1

இந்தச் சங்கத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நீங்க கேட்டா அதுல தப்பே இல்லை. ஆனா இருக்குன்னு தான் நாங்க பதில் சொல்லுவோம். எதுக்கு தமிழ்ச்சங்கம் அப்படின்னு ஆரம்பிச்சீங்கன்னு ஒருத்தர் தனி மடல்ல என்னையை ரின் சோப்பு இல்லாமையே துவைச்சு தொங்கப் போட்டுட்டாரு. உங்களுக்கு பொதுவுல பதில் சொல்றேன்னு அப்போ தப்பிச்சிகிட்டேன். தமிழ்நாட்டுக்கு அப்பால் இருக்கிற மக்கள் தமிழ்
பேச வாய்ப்பு கம்மியானாலும் தமிழ் மேல ஒரு அக்கறை ஈடுபாடு வந்துரும். இதைப் பொய்'ன்னு சொல்றவங்க கையை தூக்கலாம்.

சரி, போட்டிக்கான் விஷயத்துக்கு வருவோம். இது ஒரு கவிதைப் போட்டி. இது எங்கள் முதல் முயற்சி. உங்கள் ஆதரவைப் பொறுத்து தொடர்ச்சியா போட்டிகளை நடத்த நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"

* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)

* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல - kavithai.tsangam@gmail.com



இனி விதிமுறைகள்
1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம்
2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது
4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.
5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும். தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)
7. உங்கள் படைப்பினை தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.
9: போட்டிக்கான முடிவுகள் பிறகு அறிவிக்கப்படும்.
10. 'போட்டிக்கான நடுவர் கவிதைக்கு கௌரவம் தந்த மிகப் பெரிய கவிஞர். அவர் யார் என்பது அடுத்த அறிவிப்பில்!'
11. போட்டிக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31-Aug-2006 (நள்ளிரவு 23:30-IST)

16 comments:

இராம்/Raam said...

இந்தா வந்துட்டேன்......

G Gowtham said...

நல்ல காரியமும் பண்ணும் லொள்ளுப் பார்ட்டிக்கள் வாழ்க!

Unknown said...

யாரு நம்ம ஜிகே வா அப்ப பரிசு எனக்குத்தான் :))

யப்பா எப்படியோ தலைய மாடிவிட்டாச்சு

இல்ல எஸ்கே வா அப்ப நான் எஸ்கேப்பு :)

யப்பா அவரையும் ஆன்டி லிஸ்டில சேத்தாச்சு.....

ஆமா கவிதை மின்னஞ்சல் மட்டும்தான் அனுப்பனுமா அது சரிதான் இல்லன்னா நம்மாளுங்க அவங்க இடத்துல போட்டு லிங்க் வச்சா நல்லா இருக்காது நெறைய பேரும் எழுதுவாங்க அனுப்பி வைக்கனும்னா நமக்கு கொஞ்சம் சோம்பல் வருமே அதுக்கு சொன்னேன்

ILA (a) இளா said...

ராம்--> வருகைக்கு நன்றி, இப்பொழுதே வாழ்த்துக்கள்

ஜி கெளதம்-->வாழ்த்துக்கு நன்றிங்க.

ILA (a) இளா said...

//கவிதை மின்னஞ்சல் மட்டும்தான் அனுப்பனுமா அது சரிதான் இல்லன்னா நம்மாளுங்க அவங்க இடத்துல போட்டு லிங்க் வச்சா நல்லா இருக்காது நெறைய பேரும் எழுதுவாங்க அனுப்பி வைக்கனும்னா நமக்கு கொஞ்சம் சோம்பல் வருமே அதுக்கு சொன்னேன் //
அதனால என்னங்க மகேந்ந்திரன்.பெ, எவ்வளவோ மின்னஞ்சல் தினமும் அனுப்புவீங்க, அதுல இதுவும் ஒன்னுன்னு நெனச்சிக்குங்க. அவ்வளவுதான்.

பொன்ஸ்-யோசனை பண்ணவேண்டிய விஷயம் தான். பண்ணிட்டாப் போச்சு.

Unknown said...

யப்பா இளா கருத்து சொன்னதுக்காக எங் கவிதைய நிராகரிச்சுடாதீங்கப்பா நான் எதோ உங்க சங்க பதிவையெல்லாம் படிச்சுத்தான் தமிழ் மணத்தில சிரிக்கவே செய்யிறேன்

Unknown said...

கோவி.கண்ணன் --> தங்கள் ஆதரவுக்கு நன்றி.

மகேந்திரன் -->தங்கள் ஆதரவுக்கு நன்றி. கவலைப் படாதீங்க போட்டியின் அறிவிக்கப் பட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்ட எந்தக் கவிதையுமே நிராகரிக்கப் படமாட்டாது என்று உறுதி கூறுகிறோம்.

நாகை சிவா said...

மகேந்த்!
யாருடைய கவிதையும் நிராகரிக்கப்படாது, விதிகளுக்கு உட்பட்டு இருந்தால்.

இங்கு சிரிக்க, அங்கு சிந்திக்க.

Anonymous said...

கவிதை அனுப்பியாச்சு ... !
சொக்கா ... ! ஆயிரம் பொன்னும் எனக்கே கெடெக்கனும் !
:))

Anonymous said...

சிரிப்பு சங்கதுக்கு ஒரு லிங்க் ப்லிஸ்ஸ்

கதிர் said...

அட பரவாயில்லயே...!
சீக்கிரமே வரேன்..!

நாகை சிவா said...

அட பாவி அனாமி. அது தமிழ் சங்கம் அய்யா..... இங்கன போயி பாருங்க

ILA (a) இளா said...

லொள்ளு, குடும்பு, நக்கல், நையாண்டி, எகத்தாளம், கிண்டல், கேலி, அப்படின்னா என்னான்னு பதில் சொல்ல முடியுங்களா?

Syam said...

//ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல//

இதுல கைப்புவ தாக்குனா விலக்கு உண்டுங்களா :-)

ராசுக்குட்டி said...

சமூகத்துக்கு வணக்கம். உங்க தமிழ்ச் சங்கம் நமக்கு புடிச்சிருந்ததால நம்மளால முடிஞ்ச விளம்பரம் பண்ணலாமேன்னு நேற்று ஒரு பதிவிட்டேன் அதில் வ.வா.சங்கத்தை பற்றி ஒரு வரி (சர்ச்சைக்கு உட்பட்ட) வந்து விட்டது.

கீழ் கொடுக்கப் பட்ட இணைப்பில் சென்று ஒரு பார்வை பார்த்து விடுங்கள்...ஏதாவது ஆட்சேபனை இருந்தால் நீக்கி விடுகிறேன்!

விளையாடலாம் வாங்க

மற்றபடி தமிழ்ச் சங்கத்திற்கு எனது பாராட்டுக்கள், தொடரட்டும் இந்த நல்ல முயற்சி!

வ.வா. சங்கத்திற்கும்தான்!

ராசுக்குட்டி said...

மேலும் என் பதிவிலிடப்படும் மறுமொழிகளை பதிவிட்டாலும், தமிழ்மண முகப்பில் தெரிவதில்லை, என் வார்ப்புருவுக்கு வைத்தியம் செய்ய நேரமாகுமென்று நினைக்கிறேன்!

ஏதோ சொல்லனும்னு தோணுச்சு!