இதுவரை நமது விஜிலென்ஸ் குழு கண்டறிந்ததிலேயே மிகப்பெரிய கயமைத்தனம் வ.வா. சங்கத்தில் நடந்திருக்கிறது. அந்த சங்கத்தின் முக்கியப் பிரமுகரான கைப்புள்ளதான் இந்த கயமையை செய்திருக்கிறார். இந்த மாதத்தின் அட்லாஸ் வாலிபராம் இலவசக் கொத்தனார் எழுதிய பரிணாம வளர்ச்சி என்னும் தலைப்பில் இடப்பட்ட பதிவு மொத்தம் 550+ பின்னூட்டங்கள் வாங்கி அமோகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அதனைக் குலைக்க வேண்டும் என நினைத்து சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான நாகை சிவா மற்றும் பொன்ஸைத் தூண்டிவிட்டு அப்பதிவை நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமில்லாது வாரம் ஒரு பதிவு என்ற பழங்கால சட்டதிட்டத்தையும் கையில் எடுத்து அட்லாஸ் வாலிபரை வரும் பின்னூட்டங்களுக்கு சரிவர பதில் போட முடியாமல் அவர் கைகளைக் கட்டி மிரட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வலைப்பதிவாளர்கள் தமிழ்மணத்தில் ஒரு புதிய ரெகார்டாக கொத்தனார் ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதை மீறியும், கொத்தனார் சார்ந்துள்ள கட்சியின் தலைவர் இது தொடர்ந்து நடக்கட்டும் என ஆசீர்வதித்ததையும் மீறியும் இது நடந்திருப்பதாகத் தெரிகிறது . இலவசக் கொத்தனாருக்கு ஏற்பட்டுள்ள இந்த மனவேதனையும் சங்கத்தின் கட்டைப் பஞ்சாயத்து பாரம்பரியமும் சோதனைக்குச் சென்ற காவலர்களை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது.
Disclaimer:
It is completely acknowledged with full faith that this post has been inspired by this post.
பி.கு: இப்பதிவினைப் படிக்கும் வலையுலக மேன் மக்கள் வலப்புறத்தில் இருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
228 comments:
«Oldest ‹Older 201 – 228 of 228200!!??
//என்னய்யா இப்படி டெம்ப்ட் பண்ணுறீர்?!! அவனவன் பதிவையே குப்பைங்கிறான்.. அடுத்து பின்னூட்டமும் குப்பைன்னு சொல்லப் போறான்..
கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறீரே!!/
போனாப் போறான் அவனை விடுங்க. நீங்களாவது அடக்கி வாசிக்கறதாவது. நல்ல ஜோக்தான்.
ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணு!
ஆஹா! ஒரே கன்பியூஷனாகிப் போச்சே. யாரு 200 அடிச்சா இப்போ பாக்கலாம்.
200 அடிச்சது பொன்ஸ்!!!!!
கப்பி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
//எத்தனை முறை கண்டிச்சாலும், உங்களுக்கு என் கொள்கைப் பிடிப்பைப் பத்தி தெரியும் தானே?!! //
கொள்கை பிடிப்பு, வாயுப் பிடிப்பு எல்லாந்தான் தெரியும். ஆனாலும் ரொம்பத்தான்.
//அந்தப் பதிவு அமுங்க வேண்டிய பதிவு.. //
மீண்டும் கயமைத்தனம். மீண்டும் கண்டனம்.
//அநியாயத்துக்குப் பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு பதிவே அரட்டை சங்கம் ஆகாமல் காக்க வேண்டிய தார்மீகக் கடமை வ.வா.சங்கத்து அடிப்படை உறுப்பினரா எனக்கு இருக்கு.. அதான் செஞ்சேன்.. //
உங்க தலைவர் கருத்தையும் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.
//நீங்களாவது அடக்கி வாசிக்கறதாவது. நல்ல ஜோக்தான். ///
இந்தப் பதிவுக்காவது 1000 பின்னூட்டம் வரவேண்டும் என்று எண்ணி அதுக்கு என்னை அடக்குறது தான் சிறந்த வழின்னு முடிவு பண்ணித் தானே இப்படி உசுப்பேத்துறீங்க?!! ம்ம்ம்.. இருக்கட்டும்.. எனக்குத் தெரியாதா உம்ம சதி...
பாருங்க அடுத்த இளஞ்சிங்கம் கப்பி அலைஸ் கோவி கண்ணன் வேற வந்தாச்சு..
//உங்க தலைவர் கருத்தையும் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க//
தலைவர் என்ன சொன்னாலும் என் கருத்தைத் தானே நான் சொல்ல முடியும்?
அப்படியே கேட்டாலும் அட்லாஸா வந்த விருந்தாளி மனம் நோகாத மாதிரி தானே எங்க தலையும் பேச முடியும்?!!
நியாயத்தைப் பேசுவதற்கே என்னை மாதிரி ஆட்களை வச்சிருக்காங்க.. நினைவிருக்கட்டும் ;)
//கப்பி அலைஸ் கோவி கண்ணன் //
என்ன இது சிறு புள்ளத் தனமா..
//ஹெஹ்ஹே..நம்ம கிட்டயே போலீஸா...நம்ம டேசன் கதையெல்லாம் படிக்கலையா???//
அதெல்லாம் படிக்காம எப்படி? சரி விடுங்க. அதான் போலீஸ்கார்தான் அப்ஸ்காண்ட் ஆயிட்டாருல்ல. அப்புறம் என்ன? விட்டுத் தள்ளுங்க.
//கொத்ஸ் கொண்ட கொள்கைக்கு இது கூட செய்யலைனா எப்படி :D//
இது கூடவா? இதெல்லாம் ரொம்ப கம்மி, கப்பி. போட்டுத் தாக்குங்க.
//பாருங்க அடுத்த இளஞ்சிங்கம் கப்பி அலைஸ் கோவி கண்ணன் வேற வந்தாச்சு..//
அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை, ஆசைப்பட்டா நானும் என்ன பேச. யே பொன்னம்மா பொன்னம்மா....
//தலைவர் என்ன சொன்னாலும் என் கருத்தைத் தானே நான் சொல்ல முடியும்? //
தலைவர் வழி என் வழின்னு இல்லாம இப்படி எல்லாம் இருந்தா சங்கம் எப்படி வளரும். இதெல்லாம் நம்ம கட்சியில சேர்த்த பின்னாடி, தனியா கவனிச்சுக்கறேன்.
//அப்படியே கேட்டாலும் அட்லாஸா வந்த விருந்தாளி மனம் நோகாத மாதிரி தானே எங்க தலையும் பேச முடியும்?!!//
ஆனா அவரு வாய மூடிக்கிட்டு இருக்காரே. முதல்ல நம்மளை சப்போர்ட் பண்ணலை. ரெண்டாவது உங்களை மாதிரி ஆளுங்க வாய மூட வைக்கலை. மீண்டும் மீண்டும் கயமைத்தனம்.
//நியாயத்தைப் பேசுவதற்கே என்னை மாதிரி ஆட்களை வச்சிருக்காங்க.. நினைவிருக்கட்டும் ;)//
என்னாது? நியாயமும் நீங்களும் ஒரே வரியில வரீங்களா? கலி முத்திப் போச்சுறா சாமீ!
////கப்பி அலைஸ் கோவி கண்ணன் //
என்ன இது சிறு புள்ளத் தனமா..//
நானே நானா யாரோதானா? மெல்ல மெல்ல மாறினேனா? ...:D
அட பாவிங்களா, உண்மையில் இது ஒரு பதிவா. நான் ஏதோ கொத்துஸ் அந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரித்து போட்டு உள்ளார். அடுத்து வேற ஒரு பதிவு போடுவார் என்றுல இருந்தேன்.
சரி, ஏதோ ஒன்னு, நாம ஆடுனும், அது தானே முக்கியம். கொத்துஸ், ஆட்டத்துக்கு வந்தாச்சு. Lets Start Music
கொத்தனாரே, நீங்க ஒன்னும் துரோகம் பண்ணல.
போன சனிக்கிழமை அன்றைக்கு என் நண்பணின் மீது கொஞ்சம் கோபமாக இருந்தேன்.
யாராவது கண்ணில் எசகு பிசகா சிக்கினா, சின்னா பின்னமாக்கிவிடுவது என்ற முடிவுடன் தமிழ்மணத்தைத் திறந்தேன்.
கைப்புள்ளயைத் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதிஷ்டவசமாக முதலில் கண்ணில் பட்டது நீங்கள் (உங்களின் பதிவு).
'ஆம்' என்று ஒரு முப்பது கள்ள ஓட்டுப் போட்டு என் கோபத்தைத் தணித்துக் கொண்டேன். அவ்வளவுதான் டேக் இட் ஈஸி.
//அட பாவிங்களா, உண்மையில் இது ஒரு பதிவா. நான் ஏதோ கொத்துஸ் அந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரித்து போட்டு உள்ளார். அடுத்து வேற ஒரு பதிவு போடுவார் என்றுல இருந்தேன். //
அடப்பாவிங்களா. வாரம் ஒரு பதிவு போடச் சொல்லறாங்களேன்னு முக்கி முக்கி எழுதினா இப்படி வேற சொல்லறீங்களா?
நாந்தான் வாக்கெடுப்பில் கலந்துக்குங்கன்னுதானே சொல்லறேன். என்ன எதிர்ப்பு?
//சரி, ஏதோ ஒன்னு, நாம ஆடுனும், அது தானே முக்கியம். கொத்துஸ், ஆட்டத்துக்கு வந்தாச்சு. Lets Start Music //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மியூசிக் ஸ்டார்டட்.
//இட்ட ஆணையை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றிய அண்ணன் கால்கறியார் வாழ்க.
//
கொத்ஸ், உங்கள் அடக்குமுறையை வன்மையாக எதிர்க்கிறேன். எனக்கு ஆணையிடுவதற்கு நீங்கள் யார்?
வேண்டுகோளை நிறைவேற்றிய என வார்த்தையை மாற்றவும் இல்லையே வ.வா.ச என்பது வயதான வாலிபர் சங்கம் ஆமிவிடும்
//போன சனிக்கிழமை அன்றைக்கு என் நண்பணின் மீது கொஞ்சம் கோபமாக இருந்தேன்.//
யாரது? அந்த ஆளுங்கட்சி, இல்லை, இல்லை எதிர்கட்சி ஆளா? பார்த்துப்பா. அவங்க எல்லாம் கோவம் வந்தா ஆட்டோ அனுப்பற பார்ட்டிங்க. நல்ல வேளை கோவத்த இங்க வந்து காமிச்ச. :)
//கைப்புள்ளயைத் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதிஷ்டவசமாக முதலில் கண்ணில் பட்டது நீங்கள் (உங்களின் பதிவு).//
ஆஹா இதைத்தான் இவனுங்க ஆப்பு ஆப்புன்னு சொல்லறாங்களா? இப்போ புரியுதுடா ஏன் உலகத்தைத் தூக்கச் சொன்னாங்கன்னு. யாருக்கு யாருமேல கடுப்பு இருந்தாலும் இங்க வந்து தீர்த்துக்குங்க. இங்க இருந்து போகும் போது சந்தோஷமா போங்க. அதான் வேணும்.
//'ஆம்' என்று ஒரு முப்பது கள்ள ஓட்டுப் போட்டு என் கோபத்தைத் தணித்துக் கொண்டேன். அவ்வளவுதான் டேக் இட் ஈஸி. //
ஆனாலும் 30 கள்ள வோட்டு எல்லாம் ட்டூமச்சா தெரியலை? அதுக்காக ரௌட்டரை 30 வாட்டியா ரீஸ்டார்ட் பண்ணினீங்க? நல்ல ஆளைய்யா நீங்க.
////'ஆம்' என்று ஒரு முப்பது கள்ள ஓட்டுப் போட்டு என் கோபத்தைத் தணித்துக் கொண்டேன். அவ்வளவுதான் டேக் இட் ஈஸி. //
ஆமாம். இன்னுமா கோவம் தீரலை? 30தை 60 ஆக்கிப்புட்டீரு?
(வேற யாரும் ஆம் வோட்டுப் போட மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை.அதான். ஹிஹி)
எனக்கு போட்ட //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
புலிக்கு போட்ட //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
புலிக்கு போட்ட ம்யூசிக்கை நீளமாக்கா விட்டால் கொத்தனார் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்லிக் கொல்லுகிறேன்
//கொத்ஸ், உங்கள் அடக்குமுறையை வன்மையாக எதிர்க்கிறேன். எனக்கு ஆணையிடுவதற்கு நீங்கள் யார்? //
நான் யார்? நான் யார்? நான் யார்? நாலும் தெரிந்தவர் யார் யார்?
அட நடந்தாச்சுன்னா என்னாலன்னு சொல்லிக்க எவ்வளவு பேர் இருக்காங்க. அதில நானும் ஒருத்தன்னு நினைச்சுக்குங்க.
//வேண்டுகோளை நிறைவேற்றிய என வார்த்தையை மாற்றவும் இல்லையே வ.வா.ச என்பது வயதான வாலிபர் சங்கம் ஆமிவிடும்//
என்ன சொல்லறீங்களோ, உங்களுக்கே வெளிச்சம்.
//புலிக்கு போட்ட ம்யூசிக்கை நீளமாக்கா விட்டால் கொத்தனார் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்லிக் கொல்லுகிறேன் //
நீர் முதலில் வந்தீரு. அவரு லேட்டா வந்தது இல்லாம இதெல்லாம் ஒரு பதிவான்னு வேற அவமானப் படுத்திட்டாரு. அவரு மியூசிக் போட்டதே ஜாஸ்தி. நீங்க வேற.
//புலிக்கு போட்ட ம்யூசிக்கை நீளமாக்கா விட்டால் கொத்தனார் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்லிக் கொல்லுகிறேன் //
கப்பி உன் பாசத்த காட்டு, நான் வேணாம் என்று சொல்லவில்லை. காட்டின இடம் கூட தப்பில்ல. காட்டின ஆளு தான் தப்பு, கொத்துஸ் இதுக்கு எல்லாம் மிரளம் ஆளா, பாரு என்னையும் சேர்த்து அசிங்கப்படுத்தி விட்டார்.
இருந்தாலும் உன் பாசத்தை கண்டு என் மனம் பூரித்தது. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அவரு லேட்டா வந்தது இல்லாம இதெல்லாம் ஒரு பதிவான்னு வேற அவமானப் படுத்திட்டாரு. //
ஹலோ நான் எங்க லேட்டா வந்தேன். ஆரம்பத்தில் ஒபனிங் இறங்கியதே நான் தான். நான் ஏதோ இது லோக்கல் மேட்ச் என்று நினைத்து ரிட்டெயர் கட் வாங்கிட்டு போனேன். நீங்க என்னடானா இது சர்வதேச மேட்ச் என்பதை இவ்வளவு லேட்டா சொல்லுறிங்க. நான் என்ன பண்ணுவது.
//நியாயத்தைப் பேசுவதற்கே என்னை மாதிரி ஆட்களை வச்சிருக்காங்க.. நினைவிருக்கட்டும்//
எங்க பொன்ஸ், இது உங்களுக்கே அநியாயமா தெரியல.
//'ஆம்' என்று ஒரு முப்பது கள்ள ஓட்டுப் போட்டு என் கோபத்தைத் தணித்துக் கொண்டேன். அவ்வளவுதான் டேக் இட் ஈஸி. //
யோவ் நீ கோவப்பட்டது எல்லாம் சரி தான். எல்லாரின் கோவத்தை போக்கி, கவலைகளை மறக்க செய்து சிரிக்க வைப்பது தானே சங்கத்தின் கொள்கையே.
போட்டது தான் போட இல்லை என்பதில் 30 ஒட்டு போட்டு இருக்கலாமல், அது என்ய்யா ஆம் என்பதிலே எல்லா ஒட்டையும் போட்ட.
சங்கத்துக்கு எதிரான வெளிநாட்டு சதி அம்பலம்... நான் பின்னூட்டமிட முயன்றபோது கிடைத்த எதிரிகளின் ஆங்கில கோட்வேர்ட்கள்...
எதிரிகளை அழிப்போம்..களமிறங்குங்கள்....
javax.servlet.ServletException: Servlet execution threw an exception
at org.apache.catalina.core.ApplicationFilterChain.internalDoFilter(ApplicationFilterChain.java:269)
at org.apache.catalina.core.ApplicationFilterChain.doFilter(ApplicationFilterChain.java:193)
at org.apache.catalina.core.StandardWrapperValve.invoke(StandardWrapperValve.java:256)
at org.apache.catalina.core.StandardPipeline$StandardPipelineValveContext.invokeNext(StandardPipeline.java:643)
at org.apache.catalina.core.StandardPipeline.invoke(StandardPipeline.java:480)
at org.apache.catalina.core.ContainerBase.invoke(ContainerBase.java:995)
at org.apache.catalina.core.StandardContextValve.invoke(StandardContextValve.java:191)
at org.apache.catalina.core.StandardPipeline$StandardPipelineValveContext.invokeNext(StandardPipeline.java:643)
at org.apache.catalina.authenticator.AuthenticatorBase.invoke(AuthenticatorBase.java:494)
at org.apache.catalina.core.StandardPipeline$StandardPipelineValveContext.invokeNext(StandardPipeline.java:641)
at org.apache.catalina.core.StandardPipeline.invoke(StandardPipeline.java:480)
அட கப்பி என்னா இது. உன் வேலையில் வந்த error எல்லாத்தையும் இங்கன பின்னூட்டமாக போட்டு கொத்தஸ்ச பயமுற்த்த பாக்குறியா.
//போட்டது தான் போட இல்லை என்பதில் 30 ஒட்டு போட்டு இருக்கலாமல், அது என்ய்யா ஆம் என்பதிலே எல்லா ஒட்டையும் போட்ட.//
தல, முன்னாடி ஓடுற குதிரையை வேகமாக ஓட்டி வெற்றி பெற வைக்கிறதிலா 'தில்' இருக்கு?
பின்னாடி ஓடி வர்ற நோஞ்சான் குதிரையை விரட்டி ஓடவைத்து கெலிக்க வைக்கிறதில்தானே வீரம் இருக்கு!!!
Post a Comment