Saturday, July 1, 2006

எருமை கன்னுக்குட்டி

கண்ணுங்களா! உங்கள்ல யார்னா 'மந்திரி குமாரி' படத்துல வர்ற 'எருமை கன்னுக்குட்டி'ங்கிற பாட்டைக் கேட்டிருக்கீங்களா? முந்தா நேத்து காலைல எந்திரிச்சதுலேருந்து இந்த பாட்டு திடீர்னு உதட்டுல வந்து எக்கச்சக்கமா உக்காந்துக்குச்சு. எதனாலன்னு தெரியலை. ஆனா பாட்டோட முதல் வரியான 'எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி'யைத் தவிர வேறு எதுவுமே நெனப்பு வரலைமா. என்ன தான் சொல்லு கண்ணு... எருமை கன்னுக்குட்டியும் பாக்கறதுக்கு அப்பாவியா க்யூட்டா சப்பியாத்(சரியா படிங்கய்யா - அது chubby) தான் இருக்கும். பசு கன்னுக்குட்டியைத் தூக்கி கொஞ்ச நம்ம பசுநேசன் உட்பட பல பேரு கெடச்ச மாதிரி, எருமை கன்னுக்குட்டிக்குன்னு யாரும் கெடக்கலை - இந்த பாட்டைப் படத்துல பாடிக்கிட்டு வர்ற அந்த சதரவட்டை பையனைத் தவிர. நான் கூட ரொம்ப நாளா ஒரு பெட் அனிமல்ஸ் வளக்கணுமின்னு ஆஸ் பட்டுக்குனுருக்கேன். பாப்போம். இந்த பாட்டைப் பாடுற வாய்ப்பு எனக்கு எப்பயாச்சும் வாய்க்குதான்னு பாப்போம்.

சில சமயம் இத மாதிரி எதாச்சும் பாட்டோட வரிகளோ, ஒரு படத்தோட பேரோ யோசிச்சி யோசிச்சி பார்த்தும், நெனப்புக்கு வராம ரெண்டு நாளைக்கு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கும். இருக்குற வேலையெல்லாம் போட்டுட்டு இதே வேலையாத் திரிய வைக்கும். நாம நெனச்ச விசயம், சம்மந்தமே இல்லாம வேற வேலையா இருக்கும் போது நியாபகம் வரும். ஆனா எருமை கன்னுக்குட்டி கேஸ்ல ரெண்டு நாளா முயற்சி பண்ணி பார்த்தும் தோல்வி தான். ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சதுல, படத்துல எம்.ஜி.ஆர் பேரு வீரமோகன்ங்கிறதும், ஆன்ட்டி-ஹீரோவா(Aunty இல்லப்பா) வர்றவரு பேரு எஸ்.ஏ.நடராஜன்ங்கிறதும், ஹீரோயின் பேரு மாதுரிதேவிங்கிறதும், 'அரண்மனை நாயே அடக்கடா வாயை'ங்கிற கலைஞர் வசனமும், தீபன் சக்கரவர்த்தி அவுங்க நைனா திருச்சி லோகநாதன் பாடுற 'வாராய் நீ வாராய்' பாட்டுல வர்ற "முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்"ங்கிற வரியும், 'வாத்தியார்' அடிபட்டு கெடக்கும் போது ஜிம்மி மேலே ஒக்காந்துக்கிட்டு ஒரு 'பியூட்டிஃபுல் பாய்' எருமை கன்னுக்குட்டி...ன்னு பாடிக்கிட்டு வர்ற சிச்சுவேசனும் நியாபகம் வந்துச்சு.

ஆனா இதெல்லாம் நெனப்பு வந்து என்ன புண்ணியம்? 'எருமை கன்னுக்குட்டி...' பாட்டு மட்டும் தேய்ஞ்ச ரெக்கார்டு மாதிரி அதே எடத்துல நிக்குது. அதுக்கு மேலே ஒரு வார்த்தை கூட நெனப்பு வரலை. ஆகவே மகாஜனங்களே! இந்த பாட்டைக் கேட்டவங்களும் பாடல் வரிகள் தெரிஞ்சவங்களும் என் மண்டை காய்ச்சலுக்கு மருந்தாய் அவுங்கவுங்க எருமை கன்னுக்குட்டியைச் சங்கத்துப் பக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு வாங்க.

அப்படி ஓட்டிக்கிட்டு வந்தீங்கன்னா இன்னிக்கில்லன்னாலும் என்னிக்காச்சும் ஒரு நாள், எளிய எருமை கன்றுகளும், அழகிய ஆர்மடில்லோக்களும், பிளிறும் யானை கன்றுகளும், கூவும் கூக்காபுர்ராக்களும் ஒரே தட்டில் ஒன்றாக, சப்பளங்கால் போட்டு சமத்தாச் சாப்புடும் காட்சியைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம். அதுனால "எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி..."இதுக்கடுத்த வரி என்னான்னு சொல்லுங்க, ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

(பி.கு : சொல்ல மறந்துட்டேனே! நம்ம 'கன்னிவெடி' சித்தர் பிரிகேடியர். நாகை சிவா வளர்க்கும் பெட் ஆர்மடில்லோவின்(Armadillo) பேரு டி.ஏ.மதுரம். காரணம் கேக்காதீங்க... சொல்லமாட்டேன்! யாரு கையிலயும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் போட்டுருக்கேன். பி.பி.சியில் பிஸ்கோத்து சாப்பிட்டு சி.என்.என்னில் சைனா டீ குடிக்கும் சங்கத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கீதா மேடத்தின் அன்பில் சங்கீத பயிற்சி பெறும் அந்த பேறு பெற்ற கூக்காபுர்ராவின்(Kookaburra)பேரு மகாலிங்கம்)

(ஐயோ! இன்னொரு பி.கு.வையும் மறந்துட்டேனே: "வீ வாண்ட் நாமக்கல்லார்"னு கோஷம் எழுப்பற தளபதி அவர்களின் பல நூறு கோடி ரசிகர்களுக்காக - இன்னிக்குக் காலையில சங்கத்துக்கு வந்த பேக்ஸ் செய்தி. அதுல "அருள்மிகு மலையாள பகவதி துணை. எண்டே ஒரே தலைவி கண்விண்மீனிற்கும் விரல்விளையாட்டு வித்தகருக்கும் தற்சமயம் சமாதானம் ஏற்படும் சூழல் நிலவிக் கொண்டிருப்பதால், அது ஏற்படாமல் தடுக்க தற்போது ரத, கஜப் படைகளையும் ஏவிப் பொருதிக் கொண்டிருக்கிறேன். இப்பணியைச் செவ்வனே முடித்துவிட்டு சங்கப் பணிகளை ஆற்ற இதோ வந்து கொண்டே இருக்கிறேன். இப்படிக்கு அ.உ.க.வி.மீ.ர.ம.தலைவர் சிபி 'ஷாஜி'. ஆலப்புழா மாவட்டம்"ன்னு போட்டுருந்துச்சுப்பா.)

(சாரி...சாரி...லாஸ்ட்டா இன்னும் ஒரே ஒரு பி.கு: கூக்காபுர்ராவோட இனிஷியலைச் சொல்ல மறந்துட்டேன் - "டி.ஆர்".)

இப்பாடலின் வரிகளை சிவஞானம்ஜி அவர்களின் "வ.வா.சங்கம் தேடும் பாடல்" எனும் பதிவில் காணலாம்.

28 comments:

நாகை சிவா said...

//நான் கூட ரொம்ப நாளா ஒரு பெட் அனிமல்ஸ் வளக்கணுமின்னு ஆஸ் பட்டுக்குனுருக்கேன்.//
நல்லா இருக்கு தல. இத படிச்சவுடன் எனக்கு என்ன ஞாபகம் வந்துச்சுனா...
ஏதோ ஒரு படத்தில் பார்த்தி, ரம்பாவை பாத்து ஒரு பணியாரம் இன்னொரு பணியாரத்தை சாப்பிடுதுனு சொல்லுவார். அது மாதிரி இருக்கு இப்ப நீங்க சொல்லுரது.

கைப்புள்ள said...

//இத படிச்சவுடன் எனக்கு என்ன ஞாபகம் வந்துச்சுனா...
ஏதோ ஒரு படத்தில் பார்த்தி, ரம்பாவை பாத்து ஒரு பணியாரம் இன்னொரு பணியாரத்தை சாப்பிடுதுனு சொல்லுவார்.//

ஒதாரணம் குடுக்க ஒனக்கு வேற பேரே கெடக்கலையா? ஏன்யா?

மணியன் said...

எனக்கும் இந்த பாடல் தெரியும். இப்போது ஞாபகம் வர மாட்டேனெங்கிறது. இதுவே திரு TM சௌந்தரராஜனின் அறிமுகப் பாடல்.

கைப்புள்ள said...

//இதுவே திரு TM சௌந்தரராஜனின் அறிமுகப் பாடல்.//

வாங்க மணியன் சார். புது தகவல் சொல்லிருக்கீங்க. நன்றி.

அடுத்த அடி மட்டும் நியாபகம் வந்தாக் கூட வந்து ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க.
:)

வெட்டிப்பயல் said...

தன்னைப் பத்தி பாடுறதுன்னா தலைவருக்கு ரொம்ப பிடிக்கும்!

:))

(ஸ்மைலி போட்டுட்டேங்கோ)

வெட்டிப்பயல் said...

யாரோ நம்மளை கூப்பிட்டா மாதிரி சத்தம் கேட்டுதே!

ALIF AHAMED said...

//
அடுத்த அடி மட்டும் நியாபகம் வந்தாக் கூட வந்து ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க
//

............
............
............

இது கூடவா தெரியல நல்லா படிச்சி ஞாபகத்தில் வச்சிக்கோ அப்பறம் கேக்கபிடாது.

நாகை சிவா said...

//'கன்னிவெடி' சித்தர் பிரிகேடியர். நாகை சிவா //
தல, என்ன இது கன்னி வெடினு எழுதி இருக்கீங்க, ஏற்கனவே இந்த கன்னி மேட்டரல எல்லா அனாமியும் சேர்ந்து ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அத முதல கண்ணினு மாத்துங்க........

அப்புறம் அந்த பாட்டுக்கு நானும் நெட்ல நல்லா தேடி பாத்தேன். வாராய் நீ வாராய் பாட்டு தான் இருக்கு. அத தவிர வேற பாட்டு ஏதும் இல்லை.

அப்புறம் அந்த உதாரணத்தை முழுசா சொல்லட்டி நல்லா இருக்காது பாருங்க,
"ஒரு பெட் அனிமல் இன்னொரு பெட் அனிமல் வளர்க்க ஆசைப்படுது"

கைப்புள்ள said...

//தல, என்ன இது கன்னி வெடினு எழுதி இருக்கீங்க, ஏற்கனவே இந்த கன்னி மேட்டரல எல்லா அனாமியும் சேர்ந்து ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அத முதல கண்ணினு மாத்துங்க........//

அது முடியாது. நீ சின்னப்பில்ல. நீ சொல்லி நான் மாத்துனேன்னு இருக்கக் கூடாது. நான் சொல்றது தான் ரைட்டு.
:)

கைப்புள்ள said...

//தன்னைப் பத்தி பாடுறதுன்னா தலைவருக்கு ரொம்ப பிடிக்கும்!
//

ஒனக்கு நான் தலைவனா? இது என்ன புது கதை?

கைப்புள்ள said...

//யாரோ நம்மளை கூப்பிட்டா மாதிரி சத்தம் கேட்டுதே!//

பார்த்திபா!
எங்க பாதுகாப்பு கேடயம் ஆலப்புழா பக்கம் சேச்சியைப் பாக்கப் போயிருக்காரு...அவ்ரு இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு வந்து எகத்தாளமாப் பேசுறே? தளபதி எங்க இருக்கீங்க...சீக்கிரம் வாங்க. அப்புறம் நாமக்கல் சிபி(பெருசு)ன்னு போடற மாதிரி ஆகிடப் போவுது.

கைப்புள்ள said...

//............
............
............
//

ஆஹா...எருமை கன்னுக்குட்டியின் குணநலன்களை விளக்கும் அருமையான பாட்டு. எப்பிடிப்பா இப்பிடியெல்லாம் பட்டையைக் கெளப்புறீங்க?

கோவி.கண்ணன் said...

//முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்//
ஜொள்ளுப்பாண்டி மட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் அந்த பாடலுக்கு படத்தில் நடித்திருப்பவர் டிஸ்கோ சாந்தியின் அப்பா ஆனந்தன்.

அருமை கைப்பு எருமை பாடல் எனக்கும் தெரியாது...

கைப்புள்ள said...

//"ஒரு பெட் அனிமல் இன்னொரு பெட் அனிமல் வளர்க்க ஆசைப்படுது"//

ஒனக்கு நம்ம அளவு இங்கிலீசு வராதுன்னு ஒனக்குத் தெரியும்...அதுக்குன்னு பெரியவங்க வந்து போற எடத்துல இப்பிடி தப்பு தப்பாப் பேசி சங்கத்து மானத்தைக் கப்பலேத்தாதே? சரி...பரவால்லை தல நான் ஒன்னிய திருத்துறேன். அது 'பெட் அனிமல்ஸ்' எங்கே சொல்லு...

siva gnanamji(#18100882083107547329) said...

"ஏச்சுப் பிழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் வாழுறானே;அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே...
எருமைக் கண்ணுக்குட்டி என்னருமைக்
கண்ணுக்குட்டி......."
இப்பாடல் காட்சியில் மாஸ்டர் சுப்பையாவும் தல யும்{?}நடித்தனர்
இது பற்றிய குறிப்பு சென்ற ஆண்டில்
ஆ.விகடனில் கலைஞர் எழுதிய "என் கலைப்பயணத்தில் உள்ளது. ஒருவேளை இது கலைஞர் எழுதிய
பாடலாகவும் இருக்கலாம்

siva gnanamji(#18100882083107547329) said...

அவர் ஆனந்தன் அல்ல...'புலி மாணைக் கொல்லாமலிருந்தால்,கொக்கு மீணைக்கொத்தாமல் இருந்தால்,,,,'
என்று வசனம் பேசியவர்
ஏஸ். ஏ. நடராஜன்

கைப்புள்ள said...

//இப்பாடல் காட்சியில் மாஸ்டர் சுப்பையாவும் தல யும்{?}நடித்தனர்
இது பற்றிய குறிப்பு சென்ற ஆண்டில்
ஆ.விகடனில் கலைஞர் எழுதிய "என் கலைப்பயணத்தில் உள்ளது. ஒருவேளை இது கலைஞர் எழுதிய
பாடலாகவும் இருக்கலாம்
//

சிவஞானம்ஜி! கலக்கறீங்களே சார். இந்த வரிகளைக் கேட்ட ஞாபகம் வருது இப்போ. ஆனா ராகம் தான் உதைக்குது. ஆனாலும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி தான் போங்க. தல நடிச்சது தானுங்க...எங்க ஆத்தாவும் என்னைய அப்படித் தான் கூப்பிடும். கலைஞர் பாட்டுன்னு தான் நானும் நெனக்கிறேன். எனக்கு சந்தேகமா இருந்துச்சு. அதனால தான் எழுதலை.
:)

siva gnanamji(#18100882083107547329) said...

அட!கைப்ஸ்தாண் உதைக்ற கேஸ்னு இருந்தேன்.இப்ப ராகமும் உதைக்குதா?
நன்றி கைப்ஸ்

கைப்புள்ள said...

//அவர் ஆனந்தன் அல்ல...'புலி மாணைக் கொல்லாமலிருந்தால்,கொக்கு மீணைக்கொத்தாமல் இருந்தால்,,,,'
என்று வசனம் பேசியவர்
ஏஸ். ஏ. நடராஜன்//

நானும் எஸ்.ஏ.நடராஜன்னு தானே போட்டுருக்கேன்?
:)

siva gnanamji(#18100882083107547329) said...

கோவி கண்ணன், ".....நடித்தவர்
டிஸ்கொ சாந்தியின் அப்பா ஆனந்தன்"என்று குறிப்பிட்டிருந்தார் .அதை மறுத்துதான் எஸ்.எ,நடராஜன் பெயரைக் குறிப்பிட்டேன்
ஆனந்தன் ஹீரோ வாக நடித்த முதல் படம்"விஜயபுரி வீரன்"

Geetha Sambasivam said...

பிபிசி, சிஎன் என் ரேஞ்சுக்கு என்னை உயர்த்திய தலைவா! உனக்கு என்ன கை மாறு செய்வேன்?(கை மாறு) கை மாறுதல் என்னனு புரிஞ்சுதா? (சூட்கேஸ்)

துளசி கோபால் said...

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

கைப்புள்ள said...

//உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
//

இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி துளசியக்கா. சந்தோஷமாயிருக்கு.

கைப்புள்ள said...

////முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்//

இந்த பாட்டுல ஒரு சிறப்பு இருக்கு கோவி.கண்ணன். காதலனை நம்பி மலை மீது ஏறி வரும் பெண் காதல் கொண்டு பாடுவதற்கு பதிலாக அமையும் காதலனின் வரிகள் "டார்லிங்! உன்னை க்ளோஸ் பண்ணப் போறேன்"ங்கிற உள்ளர்த்தத்தை தருவதாகவே இருக்கும்.

இந்த பாட்டுல வர்ற இன்னொரு வரி "இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்து உயர்விண்ணினைக் காண்பாய் அங்கே". இந்தப் படத்துல எஸ்.ஏ.நடராஜனோட கேரக்டர் ஒரு நயவஞ்சக கேரக்டர்.

கைப்புள்ள said...

//உனக்கு என்ன கை மாறு செய்வேன்?(கை மாறு) கை மாறுதல் என்னனு புரிஞ்சுதா? (சூட்கேஸ்)//

அப்பப்போ வந்து எல்லாரும் நம்மளைச் சின்னா பின்னமாக்கும் போது ஆறுதலா ரெண்டு வார்த்தை சொன்னாலே போதும் மேடம். என் கிட்ட சூட்கேஸ் எல்லாம் இல்லியே டிரங்க் பொட்டி கை மாத்திக்கலாமா?
:)

கைப்புள்ள said...

//அட!கைப்ஸ்தாண் உதைக்ற கேஸ்னு இருந்தேன்.இப்ப ராகமும் உதைக்குதா?
//

அடி உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்கன்னு பழமொழி இருக்கு. நமக்கு கொஞ்சம் கூடுதலாவே இவுங்கல்லாம் உதவறாங்க. என்ன பண்ணறது?

ALIF AHAMED said...

இங்க பாரு தல உன்னோட ஆச எருமைகன்னு குட்டி.....
http://sivagnanamji.blogspot.com/2006/07/blog-post.html

சங்கத்துல சேர்த்து எதாவது கொடு... புரியுதுல ::))

வெட்டிப்பயல் said...

////இப்பாடல் காட்சியில் மாஸ்டர் சுப்பையாவும் தல யும்{?}நடித்தனர்//

:))

தலை நடிச்ச முதல் படமோ!

//அப்புறம் நாமக்கல் சிபி(பெருசு)ன்னு போடற மாதிரி ஆகிடப் போவுது.
//

அவரே பெருசுதானய்யா அப்புறம் பேருல வேற பெருசைச் சேர்க்கணுமா?


//?(கை மாறு)//

கைப்புள்ளயின் கைம்மாறுன்னு ஜெயா டிவில ட்ரைலர் போடுறாங்களாம்.

(ஆமா, கை மாறு ன்னா மாறு கால், மாறு கை வாங்குறதாப்பா?)