"திருச்செந்தூரில் சஷ்டி நாட்களில் கச்சேரிக்கு என்னை கூப்பிடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணி வரை வாசிக்க வேண்டும். அதிகாலை 5 மணிக்கு வரும் அடுத்த நாயன கோஷ்டி எங்கள் வாசிப்பை பாத்து, "என்ன வாசிப்புல ஒரு சுரத்தே இல்லையே"னு கமண்டு விடும்.
- தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் பழனிவேல் அவர்கள் தான் ஒரு டிவி பேட்டியில் இவ்வாறு சொன்னார். நம்ம நிலைமையும் அது போல ஆகி விட்டதோனு எனக்கு தோணுது.
ஒரு மாதமாக இந்த வ.வா சங்கத்தில் பதிவெழுத என்னையும் நம்பி, சங்கத்து சிங்கங்கள் வாய்பளித்தமைக்கு முதலில் நன்றி ஹை. ஆபிஸில் கடுமையான வேலை பளுவுக்கு இடையில் வாரம் ஒரு பதிவாவது போட்டு விட்டேன் என நான் இங்கு சீன் போட விரும்பவில்லை.
இப்ப எதை பத்தி எழுத நினைத்தாலும் கும்மி விடுவார்களோ?னு ஒரு வித பயம் வந்து விடுகிறது. நம்ம கொத்ஸ் மாதிரி தைரியமா பதிவுக்கு நாலு டிஸ்கி போட்டெல்லாம் எழுத தில் வரவில்லை. ஒரு வித தேக்க நிலைக்கு என்னை நானே உட்படுத்தி கொண்டுவிட்டேன் போலும்.
இந்த ஒரு மாதமாக நான் கிறுக்கியதையும் படித்து ஊக்கபடுத்திய மக்களுக்கும், சத்தம் போடாமல் படித்து விட்டு கமண்ட் போடாமல் போன மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து தமது நகைச்சுவை சேவையை சங்கம் தொடர வேண்டும்! என்ற விருப்பத்துடன் விடை பெறுகிறேன்.
பி.கு: சங்கம் நடத்தும் பிரம்ம ரசம் போட்டிக்கு நானும் என்னாலான பிரம்ம சாம்பாரை ஓட விட்டுள்ளேன். (ஹிஹி, ஒரு விளம்பரம் தான்)