பதிவர்களின் கோரிக்கையை ஏற்று நமீதா பதிவர்களின் சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக வர சம்மதம் சொல்லியதை எடுத்து நிகழ்ச்சி ஒருங்கினைப்பு வேலையை சிபியும், ராமும் புயல் வேகத்தில் செய்கிறார்கள்.
நமீதாவுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன கொடுக்கலாம் என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுது... அரை மணி நேரம் கழித்து
சிபி நமீத்தாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறார்!
ராம் கடுப்பாகி தள அதைதானே அரை மணி நேரமா பேசி முடிவு எடுத்துக்கிட்டு இருக்கோம் என்று டென்சன் ஆக..
சிபி திரும்ப நமிதாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறார்..
வேண்டாம் டென்சன் செய்யாதீங்க நாங்க முடிவு செஞ்சுட்டு சொல்றோம் என்கிறார் இளா.
சிபி திரும்ப நமீதாவுக்கு என்ன தான் பிடிக்கும் என்று சொல்ல...கொஞ்சம் லேட்டாக புரிஞ்சுக்கிட்ட அனைவரும் மொத்து மொத்துன்னு மொத்த...
மெதுவாக அங்கு வந்த வெட்டி என்ன தள அடி கொஞ்சம் பலமோ! என்று கேட்க .. சிபி வடிவேலு மாதிரி..லைட்டா என்கிறார்.
பின் ராம் இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால் அதை பதிவு செய்ய போட்டோ, வீடியோ எடுக்கனும் என்று பேசி முடிவு செய்கிறார்கள்...
போட்டோ கிராப்பியில் புலிகளான CVR, நந்து, ஜீவ்ஸ் மூவரும் போட்டோகிராப்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
நமீதா வீட்டில் இருந்து புறப்பட்டு சந்திப்புக்கு வரும் இடம் வரை போட்டோ எடுப்பது CVR பொறுப்பு என்றும், சந்திப்பில் இருக்கும் பொழுது போட்டோ எடுப்பது நந்து பொறுப்பு என்றும், பின் முடிந்ததும் திரும்ப போகும் பொழுது போட்டோ எடுப்பது ஜீவ்ஸ் பொறுப்புஎன்று மூன்று பகுதிகளாக பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது...
சந்திப்புக்கு இருப்பதிலேயே குட்டி டிரஸாக போட்டுக்கிட்டு வரும் பொழுது அவர் வீட்டில் இருந்து கிளம்பியது CVR கேமிரா பளீச் பளீச் என்று மின்ன
கலக்குறார் பாருய்யா நம்ம ஆளு என்று பெருமை படுகிறார் சிபி..
அடுத்து சந்திப்புக்கு வந்த இடத்தில் கீழே விழுந்து பொறண்டு நம்ம நந்து போட்டோ எடுக்கிறார்..
அடுத்து திரும்பி போகும் பொழுது ஜீவ்ஸ் போட்டோ எடுக்கிறார்...
அவர்கள் எடுத்த போட்டோஸ் பிரிண்ட் போட போய் இருப்பதால்... ஒருநாள் காத்திருக்கவும்.. வந்ததும் இங்கு அப்டேட் செய்யப்படும்.
மிகவும் கிளாமரான போட்டோவாக இருக்கும் என்பதால் ரகசியமான இடத்தில் பிரிண்ட் செய்யப்படுகிறது.