இந்த பாருங்க, அவசரமா நான் என் பிரண்டை பாக்க ஹாஸ்பிடல் போறேன். சமையல் எல்லாம் முடிஞசது. கிரைண்டரில் இட்லிக்கு மாவு போட்ருக்கேன். அத கொஞ்சம் பாத்து, அப்பப்ப தண்ணி விட்டு, தெரியலைனா உங்க பிரண்ட் கொத்தனார் கிட்ட கேட்டு, சரியான பதத்துல மாவை அந்த சட்டியில வழிச்சு வைங்க! என்ன நான் சொல்றது புரியுதா? என பதிலுக்கு கூட காத்திருக்காமல் மேடம் பறந்து போக, நம்ம கைப்பு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?னு புரியாமல் பே! என ஒரு நிமிடம் முழித்து பின் சுதாரித்து கொள்கிறார்.
என்னாது???? தெரியலைனா, கொத்தனாருகிட்ட கேட்டுக்கனுமா? அவரு இதுக்கெல்லாம் கூடவா டெக்னிகல் கன்சல்டன்ட்டா இருக்காரு? சரி, தேவைனா கேட்டுக்கலாம், என்றபடியே மாவாட்டும் கிரைண்டரை பார்கிறார் கைப்பு. எப்படியும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்தா போதும்! என நிம்மதியாக மறுபடி பேஷன் டிவியை மியூட்டில் போட்டு (என்ன செய்ய, பழக்க தோஷம்) செட்டில் ஆகிறார்.
சரியாக பத்து நிமிடம் கழித்து வந்து பார்க்க, எவ்ளோ தண்ணி விடனும்?னு சிறிது குழப்பமாகி, ஜிடாக்கில் இருக்கும் கொத்ஸை பிங்க் பண்ணி மேட்டரை சுருக்கமாக சொல்லி உதவி கேட்க,
கொத்ஸ், "மாவு எதுக்கு? இட்லிக்கா? தோசைக்கா? "
அட என்னப்பா, நாளைக்கு இட்லி, மறு நாள் தோசை, இதுல என்னபா உனக்கு சந்தேகம்?
இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?
கைப்பு ஓடிபோய் மாவை உத்து உத்து பாத்தும் ஒன்னும் புலப்படாமல், மறுபடி ஓடி வந்து ஜிடாக்கில், "அரிசி மாதிரி தான் இருக்கு. இருந்தாலும் உளுந்துக்கும் சேர்த்தே ஐடியா சொல்லிடுங்க".நீ முதல்ல அது அரிசியா? உளுந்தா?னு கண்டுபிடிச்சு வை, மீதிய அப்புறமா சொல்றேன்! என கொத்ஸ் நழுவ,
ஐடியா கேட்டா, குவிஸ் நடத்றாரு இந்த கொத்ஸ்! இந்த மேட்டரை நாளைக்கு நாலு டிஸ்கி போட்டு பதிவர் வட்டம்!னு லேபிள் குடுத்து ஒரு விவாதத்தை வேற ஆரம்பிச்சுடுவாரு. ஆளு பாத்து கேட்டேன் பாரு! என்ன சொல்லனும் என நொந்தபடி வேற யாரும் ஜிடாக்கில் சிக்குவார்களா?னு பாக்க அங்கு கேஆரெஸ் மாட்டுகிறார்.
ஆகா! இவர் ரொம்ப நல்லவரு, பக்குவமா கேட்டா பதமா சொல்லுவாரு! அண்ணே! எப்படிண்ணே இருக்கீங்க? என மெல்ல பேச்சை துவங்க,
"நம்மாழ்வார் அருளால் நலமாக உள்ளேன் கைப்பு! என்ன விஷயம்..?"
ஆகா! இப்பவே ஆரம்பிச்சிட்டார்யா இந்த மனுஷன்! சரி பேசித்தான் பாப்போம்! என கேஆரெஸிடம் விவரத்தை கூற,
"இது ஒன்னும் பெரிய கஷ்டமில்லை கைப்பு. இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?னு தெரியனும் அவ்ளோ தானே!"
"அவ்ளோ தான்! அவ்ளோ தான்! இது தெரிஞ்சா கொத்ஸ் உதவி பண்றேன்னு சொல்லியிருக்கார்".
அப்படியா? சரி, நல்லா கேட்டுக்கோங்க கைப்பு. "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்! இதுல கம்பர் என்ன சொல்லியிருக்கார்னா...
அண்ணே! இதுல கம்பர் எங்கண்ணே வந்தாரு?
பொறுங்க கைப்பு, நான் மேட்டருக்கு வரேன், அவ்ளோ உறுதியான மனம் படைத்த இலங்கை வேந்தனே மனம் கலங்கி விட்டான், அது போல உங்க கிரைண்டரில் உள்ள மாவு கொஞ்சம் உறுதியா, கெட்டியா இருந்தா அரைச்சுட்டு இருக்கறது அரிசி!னு சொல்ல வந்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்! அப்ப உளுந்துனா?
பாற்கடலில் கால் மாட்டில் இலக்குமி அமர்ந்திருக்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் கமலன் கண் திறக்க காத்திருக்க, "சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ" என பாட பாம்பணை மீது பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான்.....
அண்ணே! என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே?
பொறுங்க கைப்பு! அந்த பாற்கடலில் பொங்கி வழியும் அமுதம் போல உங்க கிரைண்டரில் மாவு பொங்குதா?னு பாருங்க. அப்படி பொங்குச்சுனா அது உளுந்து. சரி, நான் வரட்டா? என அவர் அப்பீட்டாக தலையில் கை வைத்து அமருகிறார் கைப்பு.
...தொடரும்