வணக்கம்...வந்தனம்...சுஸ்வாங்கதம்....நமஸ்கார்....என்னயும் ஒரு மனுசனா மதிச்சு இங்க வந்து ஆப்பு வாங்க வெச்ச சங்கத்தின் சிங்கங்களோட பெருந்தன்மைய பத்தி நான் தனியா சொல்ல வேண்டியது இல்ல....நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரத்துல ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்...இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..
இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....
என்னடா இழுவ மேட்டருக்கு வாடானு சொல்றீங்களா...மேட்டர் இருந்து இருந்தா வந்துருக்கமாட்டேனா....
எனக்கு ஒரு சந்தேகம்....நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா....மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...நாட்டின் முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....
இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...சாப்பிட்டு முடிச்ச உடனே எல்லோருக்கும் பீடா குடுத்தாங்க...அது வெத்தலை மத்த பீடா ஐய்டம் எல்லாம் போட்டு அரச்சு கல்கத்தா பான் னு pack பண்ணி இங்க விக்கறாங்க...அத பார்த்திட்டு வெள்ளைகாரர் ஒருவர் இது எப்படி பண்றாங்கனு கேட்டதுக்கு நம்ம ஆள் ஒருத்தர் சொன்னார்...கல்கத்தால இது குடிசை தொழில்...அங்க அங்க ஒரு 50 அல்லது 100 பேர வரிசையா உக்கார வெச்சு வெத்தலை,மத்த ஐட்டம் எல்லாம் குடுத்திட்டு போவாங்க...உக்காந்து இருக்கவங்க வாயில போட்டு மென்னு குடுக்கறத பின்னாடியே ஒரு ஆள் வந்து வாங்கி பேக் பண்ணுவாருனு...வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....
நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க...அதுனால பல நன்மைகள் இருந்தாலும்...சில தீமைகளும் இருக்கதான் செய்யுது...நன்மைனா பாருங்க நான் சென்னைல இருந்த டைம்ல ரூல் இல்லனாலும் ஹெல்மெட் போட்டுதான் போவேன்...ஒரு நாள் பார்டிக்கு போய்டு லேட் நைட் திரும்பி வரும் போது போலீஸ் நிறுத்துனாங்க...நிறைய பேர நிறுத்தி வாய் ஊதிகாட்டுனு சொல்லிட்டு இருந்தாங்க...என்கிட்யும் கேள்வி கேட்டாங்க...உன் பேரு என்ன...லலாம்(சியாம்)...என்னாது....லலாம்(சியாம்)...யோவ் குடிச்சு இருக்கியா...கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே...லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் (இல்ல என் பேரு கலாம் இல்ல சியாம்)...என்ன சொல்றான் தெலுங்குல பேசரான் போல இருக்கு நமக்கு புரியல சரி போ...தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...
எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...