
LK: சேட்டை! இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்! இங்கே தான் ஒரு மாசம் நீங்க மொக்கை போடப்போறீங்க...அதாவது இடுகை எழுதப்போறீங்க! அப்படியே நீங்க உள்ளே போங்க! நான் இடுகை போட்டு ஆறுமணி, முப்பத்தி மூணு நிமிஷம், நாற்பத்தி ரெண்டு செகண்டு ஆகுது! உடனே போய் ஒண்ணுமில்லாட்டியும் ஒரு காதல் கவிதையாவது எழுதணும். இல்லாட்டி எல்லாருக்கும் பயம் விட்டுப்போயிரும். வரட்டுமா?
சே.காரன்: என்ன கார்த்தி? சந்திரமுகியிலே வர்ற வேட்டையாபுரம் அரண்மனை மாதிரி இருக்கே?
LK: அதுனாலே தான் ரஜினி மாதிரி உங்களை இந்த மாசம் வரவழைச்சிருக்காங்க! என்ஜாய்!
சே.காரன்: கார்த்தி, என்னை வச்சுக் காமெடி,கீமெடி பண்ணலியே? என் மூஞ்சியைப் பார்த்தா ரஜினி மாதிரியா இருக்கு?
LK: உண்மையைச் சொல்லப்போனா உங்க மூஞ்சி வடிவேலு மாதிரி கூடத்தான் இல்லை.
சே.காரன்: அப்ப சரி, நீங்களும் வாங்க!
LK: சேட்டை, நான் சொல்றதைக் கேளுங்க! உங்களை அபி அப்பா கிட்டே போட்டுக்கொடுத்து இங்கே மாட்டிவிட்டதோட என் டியூட்டி முடிஞ்சது. அதையும் மீறி என்னை மாதிரி ஒரு நல்ல பதிவரை வ.வா.சங்கத்துக்குள்ளே இழுத்துக்கிட்டுப் போறது அவ்வளவு நல்லாயில்லை!
சே.காரன்: திகில் கதையெல்லாம் எழுதறீங்க, வ.வா.சங்கத்துக்கு வர பயப்படறீங்களே? வெட்கமாயில்லே..?
LK: நீங்க இனிமேல் என் இடுகைக்குப் பின்னூட்டமே போடாட்டாலும் சரி; நான் வர மாட்டேன்.
சே.காரன்: அட, இதென்ன மே மாசத்துலேருந்து தொடர்ச்சியா மாசத்துக்கு ஒரு இடுகை மட்டும் இருக்கு?
LK: என்ன பண்றது? அது கூட போடலேன்னா சங்கத்து வாலிபர்களெல்லாருமே ரொம்ப வருத்தமாயிருக்காங்களோன்னு சந்தேகம் வந்திருமில்லே? பேரு ரிப்பேரு ஆயிராது...?
சே.காரன்: ஆக, யாரோ ஒருத்தர் அப்பப்போ வந்து தூசி தட்டி சுத்தமா வச்சிருக்காருன்னு சொல்லுங்க!
LK: ஆளு வந்தாத் தானே தூசி வரும்! சேட்டை, நீ போய் உன் மொக்கையை ஆரம்பி சேட்டை! எனக்கே ரெண்டு பிளாகு இருக்கு! அது போக நான் தினமும் நிறைய பிளாகுக்குப்போயி அட்டெண்டண்ஸ் போடணும். இல்லாட்டா ஆப்சன்ட்னு மார்க் பண்ணி ஓட்டுலே மண் விழுந்திரும் சேட்டை! என்னை விட்டிரு சேட்டை!
சே.காரன்: இருங்க கார்த்தி, அதென்ன ஒருத்தரு 81 இடுகை போட்டிருக்காரு
LK: அதுவா? இளான்னு ஒருத்தரு பாவம்! அவரு தான் ஆளில்லாத கடையிலே கடமை தவறாம டீ ஆத்திக்கிட்டு இருக்காரு ரொம்ப நாளா.....
சே.காரன்: ஒரே ஒருத்தரு 81 இடுகை போட்டிருக்காரு! நாம ரெண்டு பேரும் உள்ளே போறதுக்குப் பயப்படுறோம்..சே!
LK: அதுக்கென்ன பண்ணுறது? அவரு தலையெழுத்து அப்படி! எனக்கென்ன போச்சு? நான் கிளம்பறேன்! ஐயையோ....இந்த சேட்டைக்கு வழிகாட்ட வந்தது தப்பாப் போச்சே!
சே.காரன்: கார்த்தி, இந்த வ.வா.சங்கத்தோட ஹிஸ்டரி தெரியுமா உங்களுக்கு?
LK: இப்போ இங்கே ஹிஸ்டரியெல்லாம் கிடையாது. கொஞ்ச மாசமாவே ஒரே மிஸ்டரியா இருக்கு! பதிவர்களைக் கலாய்க்கிறதுக்குன்னே இப்படியொரு பதிவை ஆரம்பிச்சாங்களாம். ஆனா, இவங்க பண்ணுற காமெடியை விடவும் கொஞ்சம் பேரு சீரியஸா காமெடி பண்ணுறதுனாலே சங்கமே பங்கமாயிருச்சாம்.
சே.காரன்: சரி வாங்க போகலாம்
LK: ஐயையோ, என்னையும் உள்ளே இழுத்துட்டுப் போறாரே இந்த சேட்டை! ஐயோ, டாஸ்மாக் கடை மாதிரி அங்கங்கே மனிசங்க கவுந்து கிடக்கிறாங்களே!
சே.காரன்: மனிசங்க கவுந்து கிடக்கலே கார்த்தி! பதிவருங்க படுத்துத் தூங்கிட்டிருக்காங்க!
LK: பதிவருங்களா? தூங்கட்டும் தூங்கட்டும்! இவங்க முழிச்சாத்தான் பிரச்சினைன்னு ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க
சே.காரன்: அப்படி இந்த சங்கத்துலே என்னதான் எழுதுறாங்க கார்த்தி?
LK: பதிவருங்களைப்பத்தி நக்கலா இடுகை எழுதுவாங்க
சே.காரன்: ஹை! ஜாலி!!
LK: கிண்டலா கவிதை எழுதுவாங்க!
சே.காரன்: அமர்க்களம்!
LK: அப்பப்போ ஜாடைமாடையா புனைவு எழுதுவாங்க!
சே.காரன்: பு...னை...வா.....? :-(((((((((
LK: இதுனாலேயே நம்ம இளா இல்லை, இளா, அவரு மாசத்துக்கு ஒருவாட்டி திறந்து பார்த்து போனாப்போகுதுன்னு ஒரு இடுகை போட்டுட்டு துண்டைக்காணோம், துணியைக்காணோமுன்னு ஓடிருவாராம். இவ்வளவு பயமிருக்கிறவரு எதுக்கு தனியா இந்த வ.வா.சங்கத்துலே எழுதிட்டு......!
அட சேட்டைக்காரனைக் காணோம்? சேட்டைக்காரா...சேட்டைக்காரா...!
சேக்கா....ஓடிட்டாரே நேக்கா..!
ஐயோ, இப்போ என்னை அபி அப்பா பார்த்தா என்னையும் அட்லாஸ் வாலிபராக்கிருவாரே? நான் என்ன பண்ணுவேன்? இளா...அண்ணே இளா! எங்கே இருக்கீங்க இளா? வெளியே போற வழி எங்கேயிருக்குன்னு சொல்லுங்க இளா! அது சரி, உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களே போயிருக்க மாட்டீங்களா? நான் எப்படித் தப்பிக்கப்போறேன்னு தெரியலியே!