படத்தின் PRO,”சார் நாங்க குடுக்க வேண்டி கவரை சங்கத்து ஆள்கிட்ட குடுத்துட்டோம். உங்க சங்கத்து ஆளுங்ககிட்டச் சொல்லி யாரும் படம் நல்லா இல்லேன்னு எழுதச் சொல்லாதீங்க. ஆஹா, ஓஹோன்னு எழுதுங்க. வேணுமின்னா எங்க தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாரையும் ஒரு பதிவு ஆரம்பிக்கச் சொல்லி சங்கத்துல சேர்த்து விட்டுறோம். அப்படின்னாதான் யாரும் மொக்க்ப படத்தைக் கூட நல்ல படம் எழுதுவீங்க”
”நானும் பதிவர்டா, நானும் சங்கத்து ஆள்தான். அதுக்காக எனக்கு பின்னூட்டம் போட மாட்டேன்னா எப்படி? நான் போடறது பதிவு சரியில்லேன்னு சொல்லுங்க. அதையாவது பின்னூட்டத்துல சொல்லுங்க. இல்லாட்டி ஒரு மைனசோ, பிளசோ குத்துங்க. ஒன்னுமே சொல்லாம் போனா எப்படி? சங்கத்துல சொல்லிருவேன் ஜாக்கிரதை.”
நீங்க ட்விட்டர்ல மட்டும்தான் எழுதனும், பதிவராகனும்னா 100 பின்னூட்டம் போட்டாத்தான் சங்கத்துல சேர முடியும். இல்லாட்டினா உங்களை பதிவுலகத்தை விட்டே ஒதுக்கி வெச்சிருவோம்
நாங்க ரஜினி ரசிகர்கப் பதிவர் சஙகம். எந்திரன் படம் வரும்போது கமல் ரசிகப் பதிவர்கள் வேற மாதிரி விமர்சனம் போட்டா எல்லாருக்கு மைனஸ் ஓட்டு போட்டுருவோம்னு சொல்லிருங்க. அப்புறம் யாவரும் கேளிர் அப்போ பேஜார் ஆகிரும். நல்லா இல்லே ஆமா
டிஸ்கி: இங்கே சங்கம்னா வ.வா. சங்கம்னு மட்டுமே அர்த்தமா எடுத்துக்கனும்