செல்போன் அழகி :
உலகில்யாருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடாது , அப்படியொரு நிலை ராகவனுக்கு , பாவம் அந்த பிள்ளை அவனும் வயசுக்கு வந்த நாள் முதல் பல பிகருகளுக்கு ரூட் விட்டும் ஏனோ ஒரு பிகரும் இவனை திரும்பி கூட பார்ப்பதில்லை . அவனும் போகாத காலேஜ் இல்லை பண்ணாத சேட்டையில்லை . இருந்தாலும் இப்படி ஒரு நிலை .
இந்த உலகம் இருக்கிறதே விசித்திரமானது , ஒருத்தன் பணக்காரன் ஆகிட்டானா அவன் அப்படியே பிக்அப் பண்ணி பணக்காரன் ஆகி போய்க்கொண்டே இருப்பான் . ஆனா ஏழை, அவன் நிலைமை மேலும் மேலும் ஏழையாகிட்டே இருப்பான் . ( ஏன்டா சொறனை கெட்ட சொறி மண்டையா உனக்கு எத்தன தடவ சொல்றது கதை எழுதும் போது கருத்து சொல்லாதேனு )
ராகவனுக்கு இதுவரைக்கும் ஒரு ஃபிகர்கூட செட் ஆகாதது ஏனோ மனசுக்குள் ஒரு நெறிஞ்சிமுள்ளாக துளைத்துக்கொண்டிருந்தது . அவனது நண்பன் கணேஷோ வகைவகையாய் விதவிதமாய் ரகம்ரகமாய் நூற்றுக்கணக்கில் சரவணஸ்டோர் போல இருந்தான் . ஆமாங்க அவனுக்கு மட்டும்எப்படித்தான் பிகர் செட்டாகுதோ தெரியவில்லை . எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே உஷார்தான் . அப்படியே பிக்அப் பண்ணி டேக்ஆஃப் பண்ணி பறந்துவிடுவான். ராகவனுக்கு அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும் . ஒரு நாள் இப்படித்தான் ராகவன் தன் ஆற்றாமை தாங்கமல் வாயை விட்டு கேட்டே விட்டான்
''மாப்பி................. மாப்பி , கணேஷ் மாப்பி '' கொஞ்சினான் ராகவன்.
''என்னடா''
''நான் ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது''
''என்ன எழவுடா சொல்லு ''
''நீ நிறைய பொண்ணுங்ககிட்ட போன்ல கடலை போடற , உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா எனக்கும் ஒரு நம்பர் குடுத்தா நானும் பேசுவேன்ல''
''டே ராகவா... பொண்ணுங்க கிட்ட பேசறது ஒரு கலைடா அதுலாம் உனக்கு வராது , அதும் உனக்கு வயசு பத்தாதுடா ''
''டே டே டே பிளீஸ்டா .. நானும் கத்துக்கறேன்டா''
''சரி ரொம்ப கெஞ்சுற , உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு , இனிதானு ஒரு பொண்ணு இருக்கு , பாத்து பேசணும் , நம்பர் தரேன் யார் தந்தானு கேட்டா என் பேர சொல்லக்கூடாது ''
ராகவன் நம்பரை வாங்கியதும் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் , ஆஹா ''நமக்கும் கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதடா என் செல்வமே'' என்று . மனதுக்குள் பட்டாம்பூச்சி டைனோசரஸ் ஸைசில் பறந்தது .
சரி நம்பர் வாங்கியாச்சு அடுத்த என்ன பண்ண , அவனுக்கு ஒன்றும் தெரியாது , உக்காந்து யோசிச்சான் , நின்னுகிட்டே யோசிச்சான் , படுத்துகிட்டு யோசிச்சான் , வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்து யோசிச்சான் , கக்கூஸ் போகும் போது யோசிச்சான் , டக்குனு ஒரு ஐடியா . எஸ்எம்எஸ் அனுப்பலாம்னு முடிவு பண்ணி அனுப்ப ஆரம்பிச்சான் , அதுதான் கீழ இருக்கு .
hi initha how r u
who is this
im ragav from chennai
ok i dont know u
me too
then why are u msgng
i want to frnedshp u
y
i like u
y
i dont know
ok tel me abt u
..................................................... இப்படியே அவங்க பிரெண்ட் ஷிப் ஈஸியாபிக்அப் ஆகிடுச்சு ( கதையை படிக்கும் வாசகர்கள் இப்படி முயற்சிகளில் இறங்க வேண்டாம் , messaging is injurious to your health and ofcourse your wealth )
மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சு மலர்ந்த நட்பு , போன்ல பேச ஆரம்பிச்சுது , ( அதிலிருந்து சில துளிகள் உங்கள் குஷிக்காக )
ராக : டேய் செல்லம் உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு
இனி ; விட்டா என் தொண்டைய கடுச்சு தின்னுடுவ போலருக்கே
ராக ; போடி
இனி ; நீ ஏன்டா என்ன லவ் பண்ண
ராக ; உன்னோட நல்ல குணம்டா !! நீ ஏன் என்ன லவ் பண்ண
இனி ; நான் நிறைய பசங்ககிட்ட பேசிருக்கேன் , ஆனா நீ ஒருத்தன்தான் அதுல நல்லவன் , ஆமா உன்ன யாராவது லவ் பண்ணிருக்காங்களா
ராக ; ஓஓஓஓ நிறைய ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்திக்காகத்தான்டா இத்தினி நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன்
இனி; ஆனா உன் பிரெண்ட் வினோத் வேற மாதிரி சொன்னானே
ராக ; அவன்கிட்டலாம் நீ ஏன் பேசற , அவனுக்கு நான் உங்கூட பேசறத பாத்து பொறாமை அதான்.
இனி ; அவன உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரியும்டா , டேய் நீ எப்படி இருப்ப
ராக ; நான் சுமாராதான் இருப்பேன்டா , மீடியம் அய்ட், மாநிறம் , ஷார்ட்டா முடி , நீ எப்படிடா இருப்ப
இனி ; நான் நமீதா மாதிரி இருக்கேனு என் பிரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்கடா
ராகவன் இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து குதூகலமாகியிருந்தான் , நமீதா மாதிரி ஒரு பிகரா நமக்கு , இருந்தாலும் இவனோட லெவலுக்கு நமீதா மாதிரி பிகர் ஜாஸ்திதான் என்று எண்ணிக்கொள்வான் .
செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .
இப்போதெல்லாம் கணேஷ்கிட்ட கூட பேசறத்தில்லை . அந்த பொண்ணுகிட்ட இவன் எல்லா உண்மையும் சொல்லி பாவ மன்னிப்பு வாங்கிட்டான் ஏன்னா பாருங்க இவன் ரொம்ப நல்லவன் அதான். இனிதாதான் சொல்லிருக்கா அவனோட சேராத அவன் ரொம்ப மோசம் என்று , அவன்ஏன் என்று கேட்டதற்கு அவனும் நானும் முட்டுக்காடு போனப்ப அவன் என்னோட தப்பா நடக்க முயற்சிபண்ணான் நான் அங்கேயே அவனோட நட்புக்கு முழுக்கு போட்டுட்டேனு சொன்னாள் . கணேஷ் இவனிடம் ஏன்டா என்கிட்ட பேசறதில்லனு கேட்ட போது அவன் இதையெல்லாம் சொன்னான் , அவனோ மச்சி அவள நீ இன்னும் நேர்ல பாத்ததில்ல , அவள மீட் பண்ணி பேசின இப்படிலாம் எங்கிட்ட பேச மாட்டே பிகருக்காக பிரண்ட்ஷிப்ப கட் பண்ற அளவுக்கு போயிடுச்சா தூ போடா என்று துப்பிவிட்டு போனான் . ராகவனுக்கு சுறுக் என்று இருந்தது .
( இதுக்கு மத்தியில் நான் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன் , கதையின் இந்த சீன்வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை என்பதையும் அவர்களது காதலுக்கு இதுவரை வயது பதிமூன்று நாட்கள்தான் என்று நினைவில் கொள்க .)
ஒரு நாள் போனில் பேசுகையில் ஆவலோடு இனிதா செல்லம் நான் உன்னை நேர்ல பாக்கணும்டி என்று கேட்டான் , அவளும் சரிடா புருஷா எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்குடா , சரி ஞாயித்துகிழமை எனக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டில கிளாஸ் அங்க மீட் பண்ணலாம் வரப்போ வெள்ளை டிஷர்ட் கருப்பு பேண்ட் ஓகேவா நான் மஞ்சள் சுடிதார் என்றாள் .
சன்டேக்கு இன்னும் 5 நாள் இருந்தது , அதற்குள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சரவணா ஸ்டோர்ஸில் அலைந்த பனியன் டிஷர்ட் ஜட்டி சட்டை என பலதும் வாங்கினான் , AXE CHOCLATE அப்படினு ஒரு புது சென்ட்டு அதையும் வாங்கி கொண்டான் , அதை அடித்துக்கொண்டால் பெண்கள் நம் மேல் விழுந்து பிச்சு பிராண்டுவார்களாமே !!! எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது . பியூட்டி பார்லருக்கு போய் முகத்தை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவிக்கொண்டான்.
அந்த பொன்னாளும் வந்தது , காலையிலே சீக்கிரம் எழுந்து வீதி முக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் இனிதா பேரில் அர்ச்சனையெல்லாம் செய்தான் . தன் காதலியை பார்க்கும் ஆவலில் விபூதி என்று நினைத்து குங்குமத்தை வாயில் கொட்டியதெல்லாம் பிள்ளையாருக்கு மட்டும்தான் தெரியும் .
மதியம் 2 மணிக்கு சந்திப்பதாய் முடிவுசெய்து இருந்தனர் . இவனோ காலை 11 மணிக்கே போய் இளவு காத்த கிளி போல பீச்சில் காத்திருந்தான் . அங்கே பல காதலர்கள் தானும் அது போல இன்னும் 3 மணிநேரத்தில் தன் காதலியுடன் குஜாலாக இருக்க போகிறோம் என்கிற ஆவல் அவனுக்குள் அதிகரித்தது .
அந்த கன்னியை(?) சந்திக்கப்போகும் தருணத்தை நினைத்தாலே அவனுக்குள் ஏதோ செய்தது , ஏதோ என்றால் ஏதோ அல்ல இது வேறு ஒரு ஏதோ அதாவது மனசுக்குள் மத்தாப்பு , கண்ணுக்குள் நிலவு போல .( நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல )
மணி 2.00 , சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் , எப்படியும் ஒரு நாப்பது பெண்கள் இருந்தனர் . அவர்களில் அவளை எப்படி கண்டு கொள்வது , கூட்டத்தில் பாதி பெண்கள் ஒரளவுக்கு சுமாராக இருந்தாலும் அதில் பாதி பெண்கள் மகா மட்டமாக இருந்தனர் . மனசுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது .
சரி விட்ரா விட்ரா என்று அவளுக்கு போனில் அழைத்தான் , அவள் போனை எடுத்து இருடா ஒரு பத்து நிமிஷம் ரெக்கார்ட் நோட்ல ஸைன் வாங்கிட்டு வந்திடறேன் என்று பதில் வந்தது . ஐயோ இன்னும் பத்து நிமிடமா மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது .
பத்து நிமிடம் மேலும் கற்பனை தொடர்ந்தது .
பத்து நிமிடம் கழிந்தது அவள் வந்தாள் . இவனை போனில் அழைத்தாள் , இவனும் பஸ்ஸடாண்டில் இருந்த அந்த மஞ்சள் சுரிதார் பெண்ணிடம் பேசினான் . அவள் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் , ( தேவயானி போல குடும்பப்பாங்காக )
இருவரும் கடற்கரைக்கு சென்றனர் . காதலித்தனர் . இப்படியே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர் . கணேஷுக்கு வயிறு எரிந்தது . அதன் பிறகு THEY LIVE HAPPILY EVER AFTER தான் .
.
.
.
.
.
.
.
இன்னும் என்னங்க கதை அவ்ளோதான் ...... ஹலோ சார் கதை முடிஞ்சிது கிளம்புங்க ..... என்னது அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்னு நினைச்சீங்களா... யோவ் ஒருத்தன் நல்லாருந்தா உங்களுக்கு புடிக்காதே .... என்னா வில்லத்தனம்......அவனே பாவம் பல வருஷத்துக்கப்புறம் ஒரு பிகர உஷார் பண்ணிருக்கான் அதுவும் அசிங்கமா இருக்கணும் நினைக்கிறீங்களே உங்களையெல்லாம் கொண்டு போய் உகாண்டா கருங்குரங்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு டார்ச்சர் பண்ணனும் .
சரி வந்தது வந்துட்டீங்க அப்படியே என்னை திட்டணும்ன ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்கோ ..... ( மக்கள்ஸ் என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போடலைண்ணா அடுத்த பதிவுல டார்ச்சர் அதிகமா இருக்கும் beware )
___________________________________________________________________
~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Thursday, October 23, 2008
Wednesday, October 22, 2008
தோழர் மப்பு மன்னாரு !!
என் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்
( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )
கொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,
_____________________________________________________________________
இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )
அட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .
மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.
பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )
மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .
மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே
நேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .
அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .
அவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.
இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .
அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..
மச்சி அவ வசிக்கிறா ஆந்திரா
என் மனசில
வாசிக்கிறா தம்புரா...
எல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே
அவ என் மேல வீசறா சிறு பார்வைய
என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய
எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே
மச்சி
அவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா
அவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடா
அந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா
அவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா
அவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ
கற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா
செருப்ப கழட்டி - அப்படிப்பட்ட
விசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....
அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...
என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....
பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )
பருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு
எதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு
அவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு
அவனால்லாம் மண்ணாங்கட்டி சேறு
அவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல
நான் அவளோட போட முடியலயே கடல....
(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )
என் மனசு ஏறி போகுது காருல...
இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இறுமுகிறான் )
அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .
எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...
வாஷ்பேசின குத்திவிட்டா
அதோட அடைப்பு நீங்கும்
உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு
எப்படி தாங்கும்......
குச்சி வச்சு குத்திவிட்டா
அடைப்பு நீங்க
உன் மனசென்ன
கக்கூஸா...
பாவிப்புள்ள போகும்போது
வெடிக்க வச்சிட்டாலே
உன்மனச
பட்டாசா....
இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....
இப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .
நம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........
இந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......

Friday, October 10, 2008
ஜே.கே.ரித்திஷ்குமார் ஆவது எப்படி ? பயிற்சிப்பதிவு
இப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவாகும்.
ரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் . ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது , அதுக்குதாம்பா இந்த பதிவு அக்காங்..........
1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .
2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .
3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்
4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .
5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .
6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்
7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........
8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )
9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்
10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்
11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்
12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.
13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .
14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .
15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்
16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்
17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்
1.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்
2.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது
3.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்
4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )
இதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,
பி.கு. :
இது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல , இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.
இது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்
அதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )
ஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க
Tuesday, October 7, 2008
பிட்டுப்படம் பாக்க வரியா....
'' ராமா எப்படியாவுது இன்னைக்கு அந்த படத்துக்கு போயிறணும்டா, !!!! '' கிருஷ்ணனும் ஒரு வாரமாக தினமும் பத்து முறையாவது இப்படி சொல்லிக்கொண்டே இருந்தான் .
கிருஷணன் புதுக்கல்லூரியில் போன மாதம் சேர்ந்த பின் கிடைத்த நண்பன்தான் ராமன் , பால்மணம் கொஞ்சம் மாறிய பாலக இளைஞர்கள் , கிருஷ்ணனுக்கு அந்த பட போஸ்டரை பார்த்ததிலிருந்து நிலை கொள்ளவில்லை . ஒரு வாரமாக தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த போஸ்டரை ஐந்து நிமிடமாவது பார்த்து ரசித்து விட்டுத்தான் மறுவேலை .
'' கிருஷணா அந்த படத்துல அப்படி என்னதான்டா இருக்கு '' தன் அக்ரகாரத்தை தவிர எதையும் அறியாத ராமன் தலையை சொறிந்தபடி கேட்க ,
''ராமா அதுக்குதான்டா!! ஒரு தடவ அந்த படத்த பார்த்துடலாம்டா !!
அந்த படம் பேர பாத்தியா இளநெஞ்சை கிள்ளாதேனு வச்சுருக்காங்க பேர கேட்டாலே உனக்கு ஒரு மாதிரி இல்ல ''
'' ஆமாடா நேக்கும் ஏதோ மாதிரிதான் இருக்குடா , சரி அந்த சினிமா எந்த தியேட்டர்ல ஒடுறது ''
''ஜோதிலடா , ஒரு வாரம்தான்டா அந்த படம் ஒடும் , இன்னிக்கு புதன்ல நாளானிக்கு வேற படம் மாத்திருவான் ''
'' ஐய்யயோ ஜோதியா!!! கிருஷ்ணா அங்க பக்கத்துல தான் எங்க அத்திம்பேர் வீடு இருக்கு , அவரு இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டா , அது சரி அந்த தியேட்டர் பத்தி இவ்ளோ மேட்டர் எப்படிடா தெரிஞ்சுது ''
'' உங்க அத்திம்பேர பத்தி கவலப்படாத , நாம காலைல காலேஜ் கட் பண்ணிட்டு , 8 மணிக்கே போயி தியேட்டர்ல உக்காந்துருவோம் , ஓகேவா, உங்க அத்திம்பேர் மட்டுமில்ல ஊரே ஆபிஸ் போற பிஸில இருப்பாங்க , பயப்படாதே''
''என்னடா காலேஜ் வேற கட்டா , தப்பு மேல தப்பு செய்ய சொல்றியே , பராவால்ல அப்ப நாளைக்கு காலைல சரியா வந்துடு '' என்று தனது பேருந்து வரவும் அதில் படபடவென ஏறி வீட்டிற்கு கிளம்பினான் .
இரவு இருவருக்கும் தூக்கமே வரவில்லை , முதலிரவுக்கு காத்திருக்கும் மணமகனைப்போல மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் , கிருஷ்ணாவுக்கு அந்த பட கதாநாயகி ரேஷ்மா பற்றியே கற்பனை , ராமனுக்கு அவனது அத்திம்பேர் பற்றியே கற்பனை !!!! . படத்தில் பிட் இருக்குமா , இருந்தால் பாதி காட்டுவார்களா அல்ல முழுதாக காட்டுவார்களா , கதை இருக்குமா , சண்டை இருக்குமா , கதாநாயகன் யாரு , அவர் படம் ஏன் அந்த போஸ்டரில் இல்லை , படப்பேருக்கேத்த மாதிரி காட்சி இருக்கமா , யாராவது பார்த்துட்டா என்ன செய்ய , வீட்டில மாட்டிகிட்டா என்ன சொல்றது , டிக்கெட் விலை எவ்வளவு , இது தப்பில்லையா என இரவெல்லாம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் , சரியான தூக்கமே இல்லை இருவருக்கும் , வீட்டிலிருந்து 7 மணிக்கே இருவரும் கிளம்பினர் .
7.30க்கு சரியாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் , அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து திரையரங்கை 10 நிமிடங்களில் அடைந்துவிட்டனர் . வழியில் இருவரும் இரவு தூங்காமல் யோசித்து கொண்டிருந்ததை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர் . பரங்கிமலை ஜோதி சென்னையில் பலருக்கும் பாலியலை அறிமுகப்படுத்திய அந்த அற்புத திரையரங்கு இன்னும் அந்த இருவருக்காக திறக்கவில்லை , இருவரும் மனம் நொந்து போய் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் விசாரித்ததில் தான் தெரிந்தது படம் 12 மணிக்கென்று , அதுவரைக்கும் என்ன செய்வது எனப்புரியாமல் திரையரங்கு வாசலில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர் .
இருவரும் இரவு உறங்காததால் அப்படியே அங்கேயே உறங்கிபோனார்கள் , கனவுகளிலும் அந்த படம் பற்றிய நினைவுகளே , இருவருக்கும் . கனவில் மழை பெய்தது
11.30 மணிவாக்கில் கிருஷ்ணா படாரென விழித்துக்கொண்டான், பக்கத்தில் யாரோ மூத்திரம் போய் கொண்டிருக்க ராமனை எழுப்பினான் , ராமனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது , '' மச்சி வாடா தியேட்டர் திறந்துட்டாங்க வா போயி டிக்கட் எடுக்கலாம் '' கிருஷணா , ராமனை அங்கிருந்து கிளப்பினான் .
'' தம்பிங்களா இந்த படத்துக்கு சின்ன பசங்கள்ளால் வரக்கூடாது , கிளம்புங்க'' டிக்கெட் கொடுப்பவர் விரட்டினார், இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை , அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களது உருவம் அப்படி .
'' அண்ணா எனக்கும் இவனுக்கும் 18 வயசு ஆயிடுச்சுனா , நம்புங்கண்ணா , காலைலருந்து வெயிட் பண்றேங்கண்ணா '' கிருஷணா போராடினான் , ராமனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தான் .
'' தம்பிகளா உங்கள பார்த்தா ரொம்ப சின்ன பசங்களா இருக்கு உங்கள உள்ள விட்டா எங்களுக்குதான்பா பிரச்சனை ''
'' அண்ணா , இந்தாங்கண்ணா என் காலேஜ் ஐடி கார்டு , இதுல வயசு போட்டிருக்கு பாருங்க !!''
'' தம்பிங்களா காலேஜ்ஜா படிக்கிறீங்க ,முதல்லயே சொல்லிருக்கலாம்ல , சரி இந்தாங்க டிக்கெட் ''
கிருஷ்ணாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்ததது . டிக்கெட் கிழிப்பவரிடம் ராமன் ஆர்வத்தில் '' அண்ணா படத்தில பிட்டு இருக்காணா '' , அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது , முறைத்தபடியே டிக்கெட்டை பட்டென்று கிழித்து கையில் கொடுத்தார் .
தியேட்டரின் உள்ளே குமட்டும் நாற்றம் , சீட்டெல்லாம் கிழிந்திருந்தது , திரையரங்கின் இருளான பகுதியாக தேடிபிடித்து அமர்ந்து கொண்டனர் . ராமனுக்கு வயிற்றை பிறட்டியது , கிருஷ்ணன் மிக ஆர்வமாக அமர்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு அந்த துர்நாற்றம் தெரியவில்லை . திரையரங்கில் மொத்தமாய் 10 பேர்தான் இருந்தனர் .
மணி 12 ஆகியும் படம் தொடங்கவில்லை , 12.30 வரை அதுவே தொடர்ந்தது . மெதுவாக வெள்ளை திரை மேல் இருந்த சிகப்பு திரை மறைய , இருவரும் குஷியாகினர் . இன்னும் படம் தொடங்கவில்லை , இருவரும் மிக ஆர்வமாக திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர் , வெங்கடாசலபதி தரிசனத்திற்கு காத்திருக்கும் கடைநிலை பக்தர்களைப் போல .
இப்போது திரையரங்கில் 30 பேர் கூடியிருப்பர் . அதில் ஒருவன் நேராக இவர்களை நோக்கி வர அதிர்ந்து போயினர் , அவன் '' தம்பி இந்த சீட்டுக்கு யாராவது வராங்களா , '' இருவரும் பயந்த படி இல்லைங்க என்றனர் .
கிருஷ்ணனின் அருகில் அந்த நபர் அமர்ந்து கொண்டார் , பார்க்க காவல்துறை அதிகாரியை போல ஒரு தோற்றம் , அவர்களிருவருக்கும் கிலி மனதில் மட்டுமல்ல நுரையீரல் வரை பரவியது .
வெள்ளை திரை ஒளிர படம் துவங்கியது , எச்சில் துப்பாதீர்கள் , முன்சீட்டில் கால்வைக்காதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் , தினகரன் படியுங்கள் , மாலைமுரசு படியுங்கள் என , ஒவ்வொரு ஒளி கீற்றிற்கும் பக்கத்து சீட்டு நபர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைக்க , கிருஷ்ணனுக்கு குலை நடுங்கியது , படம் துவங்கியது .
'' டேய் ராமா இது என்னடா , யூ சர்டிபிக்கேட் போட்றுக்காங்க '' ,''எங்கிட்ட கேட்டா , உனக்குதான இதெல்லாம் அத்துபடி '' ராமன் கிசுகிசுத்தான் .
படம் பெயர் வந்ததும் தான் கிருஷ்ணனுக்கு நிம்மதியாய் இருந்ததது .
'' இளநெஞ்சை கிள்ளாதே '' '' கனவுகன்னி ரேஷ்மா '' பெயர்கள் ஒடிக்கொண்டே இருந்தது ,
5 நிமிடம் பெயர்கள் மட்டுமே ஓடி கொண்டிருந்தது .
'' நமோ நாராயணா'' ஒரு வயதானவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய படம் துவங்கியது ,
படத்தில் அந்த கிழவரின் இளம் மனைவியை அவர் பல முறை முயன்றும் திருப்தி படுத்த முடியாது கஷ்டப்பட , கதாநாயகன் அந்த பெண்ணை திருப்தி படுத்தினான் . படத்தில் பல முறை மிக நெருக்கமாக இருவரும் நெருங்குவார்கள் சட்டென அடுத்த காட்சி துவங்கிவிடும் . 5 முறை இதுவே தொடர்ந்தது .
படம் ஓடிக்கொண்டிருக்க திரை இருள , எல்லா விளக்குகளும் எரிந்தது . இடைவேளை .
ராமன் கிருஷ்ணனை முறைத்தபடி இருந்தான் , கிருஷணன் ராமனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் .
இடைவேளை முடிந்ததது , இடைவேளையில் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தனர் . விளக்குகள் அணைய படம் தொடர்ந்தது , இருவரும் இப்போதாவது ஏதாவது பிட் வராதா என ஏக்கத்துடன் பார்க்க , படம் துவங்கி 5 நிமிடத்தில் அனைவரும் வெளியேற துவங்கினர் . படம் நிருத்தப்பட்டது . பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவரும் கிளம்ப இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை .
இப்போது திரையரங்கமே காலியாகியிருந்தது , '' தம்பிகளா படம் முடிஞ்சுது கிளம்புங்க !! ''
''அண்ணா கிளைமாக்ஸ் போடவேயில்லையே '' ராமன் ஆர்வமாய் கேட்க '' தோடா கிளம்பு '' என முறைத்தான் திரையரங்க ஊழியன்.
இருவரும் சோகமாக அங்கிருந்து கிளம்பினர் . இருவரும் அந்த படத்திற்கு சென்று திரும்பியதிலிருந்து பேசிக்கொள்வதில்லை . நட்பு முறிந்தது .
இருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல எதிரில் பார்த்தால் முறைத்து கொள்வர் .
20 வருடங்களுக்கு பிறகு ,
ராமனின் நண்பன் வினோ , அது குறித்து கேட்டான் ,
'' அப்படி என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை , ஒரே காலேஜ்ல படிச்சு ஒரே கம்பெனில 15 வருஷமா வேலை செய்றீங்க ''
ராமன் அவனும் கிருஷ்ணனும் பிட்டு படம் பார்க்க போனதை சொன்னான் .
'' அதுல என்னடா பிரச்சனை படத்துல பிட்டு இல்லனா அவன் என்ன செய்வான் , தியேட்டர் காரன் மேலதான உனக்கு கோபம் வரணும் ''
'' என் கோபம் அதுக்கில்லடா , அந்த படத்துல வர கிழவன் பேரு ராமன் , கதாநாயகன் பேரு கிருஷ்ணன் அதுக்குதான்டா , அதுக்காக என்ன பார்த்து கேவலமா சிரிச்சுட்டாண்டா'' கண்களில் கண்ணீருடன் ராமன் .

Thursday, October 2, 2008
காந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி!!!
நம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு , எனக்கு கூட அந்த காலத்தில ( அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ) . சரி நண்பருங்கிட்ட கேட்டா அவங்க அதுலாம் சொல்லித்தந்தா புரியாது அனுபவிக்கனும் மச்சி னுட்டாங்க.
இன்னாங்கடா இவனுங்களோட ரோதனையா பூட்ச்சேனு நாமளா கண்டுபுடிக்கலாம்னு ஆராய்ச்சில இறங்கி ஆராஞ்சா , அப்போதான் தெரிஞ்சிது அட இந்த மேட்டர் (விசயம்ங்க ) அனுபவிக்க வேண்டியது ஆராயக்கூடாததுனு . என்ன இவன் அது என்னானு சொல்ல மாட்டேன்றானேனு நீங்க யோசிக்கறது புரியுது எசமான் , அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கு புடிச்ச ஒரு பிகரையோ ( பல பிகருங்க இருந்தாலும் ஒகேதான் ) அல்லது சில அல்லது பல நண்பர்களையோ ஒன்னா சேத்துகிட்டு ஊருக்குள்ள ரொம்ப காஸ்ட்லியான ( இட்லி இல்ல காஸ்டிலி விலை உயர்ந்த ஒகேவா ) ஹோட்டலுக்கோ இல்ல தியேட்டருக்கோ அதுவுமில்லனா ஒரு நல்ல பாருக்கோ கூட்டிட்டு போயி டிரிட்டுனு சொல்லிட்டோ இல்ல சும்மானாச்சிக்கும் வேணும்கிறதுலாம் உங்க செலவுல பண்ணுங்க , எல்லாம் முடிச்சுட்டு ஆன செலவுக்கு காசு கணக்கு போட்டு கூட்டிகிட்டு போன மக்கள் கிட்ட கணக்கு கேட்டு பாருங்க , அவங்கல்லாம் முகத்தில ஒரு ரியாக்ஷனும் குடுக்காம தேமேனு முழிச்சுக்கிட்டு நிப்பாங்க , அது மாதிரி செலவு பண்றதுக்கு பேருதான் காந்தி கணக்கு . குடுத்தா திரும்ப வராத கணக்கு எல்லாமே காந்தி கணக்குதான் . இந்த மாதிரி வரலாற்றில கூட பல உதாரணங்கள் இருக்கு , ஆனா அதெல்லாம் இங்க சொன்னா என்னயும் சங்கத்த விட்டு விரட்டி என்னையும் புதுசா ஒரு சங்கம் தொடங்க வச்சிருவாங்க அதனால நோ ஹிஸ்டரி , ஸ்டிரைட்டா கம்மிங் டு த பாயிண்டு . கணக்கு கேட்ட விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே .
சரி இந்த காந்தி கணக்குக்கு எதுக்கு காந்தி பேர வச்சாங்கனு தெரியுமா ? அதுக்கு ஒரு கதை இருக்கு ... அப்படினு லாம் சொல்லி பதிவ வளக்க விரும்பல அதுவும் சிம்பிள்தான் , காந்தி தாத்தா நமக்கெல்லாம் என்ன வாங்கித்தந்தாரு , ம்ம்ம் சுதந்திரம் , எதுக்கு வாங்கி தந்தாரு நாமெல்லாம் நல்லாருக்கணும் நாலு இடம் சுத்தணும் வேலா வேலைக்கு தண்ணி அடிக்கணும் , நிறைய தம்மடிக்கணும் , சைட்டடிக்கணும்னுதான , ஆனா பாருங்க அவரு நமக்கு இப்படி ஒரு சுதந்திரத்த வாங்கி தந்ததுக்கு எதினா பிரதிபலன் பாத்தாரா , இல்லையே அது மாதிரிதான் , எந்த பிரதிபலனும் பாக்காம நீங்க மத்தவங்களுக்கு செய்ற செலவுக்கு காந்திகணக்கு னு பேரு .
இதுக்கு டமாரு குமாரு மிக்கீபீடியால இன்னொரு விளக்கமும் இருக்கு அதாவது காந்தி ஒரு தியாகி நம்ம தலைவர் கைப்புள்ள மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு , அதே மாதிரி நீங்க யாருக்காவது காசு குடுத்தாலும் , அவங்க உங்கள ஒரு தியாகியா நினைச்சு உங்களயும் காந்தி லெவல்ல திங்க் பண்ணி அந்த காச திருப்பி குடுத்து உங்கள அசிங்கப்படுத்தாம நீங்க குடுத்த காசு கணக்க .... காந்தி கணக்கா ஆக்கிருவாங்க .... நீங்களும் அவன திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம அஹிம்சா வழில கால் பாதம் தேயற வரைக்கும் காசு கேட்டு அலைஞ்சிகிட்டு காந்தி மாதிரி ஒல்லியாகிடுவீங்க....
மக்களே இப்ப புரிஞ்சுதா காந்தி கணக்குக்கு ஏன் காந்திகணக்குனு பேருவந்திச்சுனு... இது தவிர காந்தி கொள்கை கூட இருக்கு ஆனா அத பத்திலாம் எழுதினா என்ன சங்கம் கவனிக்கும்ங்கறதால கழண்டுக்கிறேன்பா.......
இன்னைக்கு நம்ம சங்கத்தோட சார்பா காந்திஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறது சங்கத்து சிங்கங்கள் .

Wednesday, October 1, 2008
உங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - !!
அண்ணா வணக்கங்கண்ணா
இந்த மாசம் நான்தானுங்கண்ணா அட்லாஸ் சிங்கம் அப்படித்தானுங்கண்ணா வவாச ல முடிவு பண்ணிருக்காங்க ,
இந்த மாசம் முழுக்க என்னோட அறிவ பிழிஞ்சு கசக்கி , மண்டைய குடாஞ்சு உங்களுக்குன்னே சில பல பிரத்யேக பதிவுங்கள போட்டு உங்கள கலங்கடிக்கலாம்னு இருக்கேன்.
இதுனா வரைக்கும் என்னோட வலைப்பூவுக்கு எவ்ளோ ஆதரவு குடுத்தீங்களோ அதே மாதிரி இங்கனயும் குடுக்கோணும்...
ஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதை
தெரிவித்து கொள்கிறேன்ழ
சோத்துக்குதான உலை வைப்பாங்க உயிருக்கு எப்படி உலை வைக்க முடியும்
யாருப்பா இதுலாம் கண்டுபுடிக்கறது...
நாளைக்கு சந்திப்போமா....
வுடு ஜீட்......

Subscribe to:
Posts (Atom)