நரகத்தில் மாட்டுப்பட்ட ஆன்மீகப் பதிவர்களை நோக்கி, நம்ம கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் தளதள என்று மிதக்கும் கண்ணபிரான் ரவிசங்கர்!
முந்தைய பாகம் இங்கே! கவுண்டர்: ஹே மேன்...வாட் இஸ் யுவர் நேம்?
ரவி: அடியேன்
Kannabiran Ravi Shankar (krs)கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?
ரவி: யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்!
கவுண்டர்: டேய் பள்ளி கொண்ட மண்டையா, இது தானே வேணாங்கறது! அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா?
சரி...
அது இன்னாடா அது மாதவிப் பந்தல்? ஒனக்கு வேற பேரே கெடைக்கலியா?
கலைஞர் கண்ணகிக்கு சிலை வச்சாரு சரி!....நீ இன்னா அவருக்குப் போட்டியா, மாதவிக்கு பதிவு வைக்கறியா?
டான்ஸ் ஆடுற பொண்ணு பேர எல்லாம் எதுக்கு மேன் பதிவுக்கு வைக்கறீங்க?
ரவி: ஐயோ கவுண்டரே! அது சிலப்பதிகார மாதவி இல்லை....
கவுண்டர்: பின்னே ராஜ பார்வையில் கமல் கூட ஜோடி போட்டுச்சே, அந்த மாதவியா?
டேய் திருப்பதி லட்டு மண்டையா...வைக்கறது தான் வைக்கற!
ஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ?
வந்துட்டானுங்க மாதவிப் பந்தல், தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல்-ன்னு...பந்தல் போடறதுக்கு!
ரவி: ஐயோ, என்னைப் பேச விடுறீங்களா! இது அந்த மாதவி எல்லாம் கிடையாது!
கண்ணன் வீட்டில் ஒரு பந்தல் இருக்கும்; அதில் செண்பகப்பூ கொடிகள் படர்ந்து இருக்கும்; அதுக்கு மாதவிப் பந்தல்-ன்னு பேரு.
கவுண்டர்: டேய், நீ இன்னா கண்ணன் வூட்டு கேர் டேக்கரா? இல்ல ட்ரவுசர் போட்ட தோட்டக்காரனா?
என்னமோ செடி வளருதாம், கொடி வளருதாம்! கதை வுடறானுங்கப்பா....
ரவி: அச்சோ அச்சோ, "
மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்" ன்னு திருப்பாவையில் வருமே! நீங்க படிச்சதில்லையா கவுண்டர் ஐயா?
கவுண்டர்: ஐயோ! கொல்லுறானே, கொல்லுறானே! அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க?
பாடாதீங்கடா...பேசுங்கடா...அதுவும் புரியறாப் போல தமிழ்-லலலலல பேசுங்கடா.....
நான் எப்படிப் பேசுறன்? பாக்கற இல்ல? அது போல பேசுடா!
ரவி: அது எப்படிங்க ஐயா, உங்களால் மட்டும் இப்படி எல்லாம் "அடித்துப்" பேச முடிகிறது?
கவுண்டர்: டேய்! அதுக்கெல்லாம் அறிவு வேணும்டா! எனக்கு ஒடம்பு பூரா மூளை டா!
ரவி: ஒடம்பு பூரா இருந்தா அதுக்குப் பேரு கொழுப்புண்ணே. மூளை மண்டையில் மட்டும் தான் இருக்கணும். மண்டையா மண்டையா-ன்னு அடுத்தவங்களை எப்ப பார்த்தாலும் கூப்படறீங்க...ஆனா இது தெரியலயே ஒங்களுக்கு?
(கவுண்டர் செம டென்சன் ஆகிறார்...)
கவுண்டர்: டேய், என்னையே எதிர்த்துப் பேசுறியா நீயி! Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க! அப்ப தான் அடங்குவானுங்க!
(கோபமே வராது என்று சொல்லிக் கொள்ளும் ரவிக்குக் கூடக் கோபம் வந்து விடுகிறது...கவுண்டரை நெற்றிக்கண் ரேஞ்சுக்கு முறைக்கிறாரு ரவி)...
கவுண்டர்: ட்ட்ட்டேய்...இன்னா லுக்கு வுடறே?
மாதவி-ன்னு பேரு வச்சிக்கினு...
கண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற? நோண்டிடுவேன் ஜாக்கிரதை!.....
(அன்பு நண்பர் ரவியைக் காப்பாற்ற எண்ணுகிறார் ஜிரா.
கவுண்டரைத் திசை திருப்ப, உரத்த குரலில், சுசீலாம்மா பாட்டை எடுத்து விடுகிறார்...யார் யார் யார் அவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ??...)
கவுண்டர்: யாரு மேன் அது காட்டுக் கூச்சல் போடறது? ஓ நீயா! உன் பேரு என்னடா? krsஆ இல்லை grsஆ?
ஜிரா: நான் பக்தியுடன்,
ஜி ராகவன்கவுண்டர்: அப்ப நாங்க என்னா, சக்தியுடன், ஜி. மணியா?
இந்த நக்கல் தானே வேணாங்கறது! சரி, அது இன்னாடா அது ஜிரா?....
ஸ்நேகா ஸ்வீட் ஸ்டால்ல, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போட்டுக்கினு இருந்தியா நீயி? -
ஜிரா, ஜீரா-ன்னுகிட்டு! ஒரே பிசு பிசுன்னு!
ஜிரா:அவலா கொன்றோ மிசையா கொன்றோ...அவ்வழி நல்லை வாழிய நலனே!
கவுண்டர்: டேய்...மவனே யாரப் பாத்து கொன்றோ கொன்றோ -ன்னு மிரட்டுற நீயி? என்னைக் கொன்னுடுவியா நீ? பிச்சிப்புடுவேன் பிச்சி!
ஜிரா: ஆகா! பிச்சி!.... என்ன ஒரு சொல்! சொல் ஒரு சொல்!
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாள்!
விச்சியாள், அவள் பிச்சியாள்! தலை உச்சியாள். தமிழ்க் கட்சியாள். வெற்றி வெட்சியாள்!
கவுண்டர்: ஆமாண்டா, மச்சியாள், நம்ம மச்சியோட ஆள்.
டேய் டேய், அடங்குங்கடா! அடங்குங்க!.....இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, ஒனக்கு மட்டும் அண்டாவைத் தூக்கிவிட்டு குண்டாவுல காய்ச்ச சொல்லிடுவேன்! நமக்குன்னு வரானுங்கு பாரு! பிச்சி,மச்சி,குச்சி-ன்னு! ச்சே.....
(கவுண்டரின் செல் போன் அடிக்கிறது....)
கவுண்டர்: அலோ, ஐ ஆம் ஆல்-இன்-ஆல் அழகுராஜ், கவுண்டர் ஸ்பீக்கிங்...யாரு மேன் லைன்-ல?
கவுண்டரே வணக்கம், நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! @$%">@#$%&*())
கவுண்டர்: அப்படீங்களா மேடம். ஆல்ரைட் மேடம். ஓக்கே மேடம். கவலைப்படாதீங்க மேடம். நான் பாத்துக்குறேன் மேடம். வைச்சிடறேன் மேடம்!
(ஜிராவைப் பார்த்து...) வாடி ரங்கநாயகி...வாயக் கொடுத்து மாட்டிக்கினியா நீயி? Guards...இவனுக்குச் சாப்பிட என்ன கொடுக்கறீங்க?
Guards: உப்புக் கருவாடும்..ஊற வைச்ச சோறும், மோரில் துவைத்த வெங்காயமும், கார அடையும்......
கவுண்டர்: ஸ்டாப்..ஸ்டாப்...ஸ்டாப்! இது என்ன நரகலோகமா? இல்லை நளந்தா பேலஸா?
இனிமே இவனுக்கு வெறும் ஓட்ஸ் உப்புமா கொடுங்க, போதும்.
மேலிடத்தில் இருந்து ஸ்ட்ராங்கான உத்தரவு!
குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!

அடுத்து யாரு மேன் லைன்ல?
குமரன்: அடியேன் சிறிய ஞானத்தன்.
கூடல் குமரன்.கவுண்டர்: ஓ நீயும் அடியேன் தானா? இப்பல்லாம் அடியேன், என்னை இன்னொரு தபா அடியேன்-ன்னு, அடியைக் கேட்டு கேட்டு வாங்கறானுங்கப்பா.
சரி...அது இன்னா மேன் அது,
பின்னூட்டக் கோனார் நோட்ஸ்?
இந்த வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கு எதுக்கு மேன்?
குமரன்: யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!
கவுண்டர்: ஐ..ஐ...ஐ....
இவரு பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமாம்!
ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!
இன்னா தப்பு செஞ்சிட்டு மேன் இங்க வந்த நீயி?
குமரன்: ஐயகோ! என்னடி மீனாட்சி! சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி!
கவுண்டர்: ஏய், இன்னா, மீனாட்சி-ன்னு சத்தமாக் கூவினா, மதுரைக்காரங்க எல்லாம் செட்டு சேந்துக்கலாம்-னு திட்டம் போடறியா நீயி?
அது எல்லாம் என் கிட்ட நடக்காது! ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர்! யூ நோ?
அது இன்னா மேன் அது? ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?
இப்பல்லாம் பூலோகத்துல,
பசங்களுக்கு ஒன்-டு-த்ரீ எண்ணறதுக்கு, உன் ப்ளாக்-கைத் தான் முன்னாடி வைக்கறாங்களாம்!பசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்குற கணக்கு டீச்சர் கனகாவே, உன் கணக்குல கன்ப்யூஸ் ஆயிட்டான்னா பாத்துக்கோ! - இது எல்லாம் தேவையா மேன் உனக்கு?
குமரன்: :-)
கவுண்டர்: இந்தச் சிரிப்புக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல! அடுத்து யாரு மேன்?
VSK: நாதவிந்து கலாதீ நமோ நம! மயிலை மன்னாரு டீயோ கமோ கம!
கவுண்டர்: உன் பேர் என்ன மேன்?
VSK: என்னை
SKன்னு கூப்பிடுங்க.
கவுண்டர்: நீ சொல்லி நான் என்ன மேன் கூப்பிடறது? நான் VSKன்னே கூப்டுக்கறேன்.
எதுக்கு மேன் மெட்ராஸ் பாஷையில திருக்குறள் நோட்ஸ் போடற நீயி?
அதப் படிச்சிட்டு, பசங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்குப் போயி, மெட்ராஸ் பாஷைல திருக்குறள் எழுதி ஃபெயிலாயிட்டு வருதுங்களாம்.
இப்படி எல்லாம் டகால்டி வேலை பண்ணறியே! இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?
VSK: லப் டப்...லப் டப்...லப் டப்...
கவுண்டர்: ஓ...நீங்க மருத்துவர் வேற இல்லை? (மனசுக்குள்: சரி...ரொம்ப நோண்ட வேண்டாம்...நமக்கும் ஹார்ட்டு வீக்கு...நரகத்துல சிகிச்சைக்கு இந்த ஆளு உதவி தேவைப் பட்டாலும் படலாம்)
யார் அங்கே? இந்த ஆளுக்கு தினமும் ஒரு கப் கூழு எக்ஸ்ட்றா ஊத்துங்க! என்ஜாய் மேன் VSK!
கவுண்டர் அப்படியே நகர்ந்து,
ஞானவெட்டியான் ஐயாவைப் பார்க்கிறார்...(மனசுக்குள்: ஐயோ மிலிட்டிரி ஆளு போலத் தெரியுதே...வம்பே வேணாம்)
ஹாய் மேன், ஹவ் ஆர் யூ என்று கை குலுக்குகிறார். இருந்தாலும் இயற்கையா இருக்கும் லொள்ளு அவருக்குத் தானாத் தலை தூக்குகிறது!
முனைவர்
நா.கண்ணனைக் காண்கிறார்...
ஹாய் மேன், இது இன்னா நரகத்துல வந்து தொப்பியும் கூலிங் க்ளாஸும்? இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலை?
தானா வாயக் கொடுத்து மாட்டிக்கின மேன் நீயி. அது இன்னா
கிகா பைட்டும், பாவ புண்ணியம்-னு உன் பதிவு?
இந்த ஐடியாவை பிக்-அப் பண்ணி நரகலோகம் ஃபுல்லா கிகா பைட் ஆக்கிட்டாங்க!
டோட்டலா கம்ப்யூட்டர் பண்ணிட்டாங்க மேன்! இனிமே பாவக் கணக்க முன்ன பின்ன மாத்திக் கூட எழுத முடியாது... இது தேவையா மேன் ஒனக்கு?
வல்லி சிம்ஹனைக் காண்கிறார்
... கவுண்டர்: நீங்க தான் வல்லியம்மா-வா?
வல்லியம்மா: ஆமாண்டா குழந்தே! நல்லா இருக்கியா நீ?
கவுண்டர்: ஏய் ஏய்...நோ சென்டி ஓக்கே! நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே!....இனிமே டெய்லி நான் காபி குடிக்கும் போது வந்து ஒரு பாட்டு பாடணும்...இன்னா சரியா?
வல்லியம்மா: பாடிட்டாப் போச்சு; காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா?
கவுண்டர்: அடங்கொக்க மக்கா...காபி குடிக்க கூட ஒரு ராகம் கண்டுபுடிச்சிட்டானுங்களா? இசை இன்பம்னு வலைப்பூ தொடங்கி
இம்சை இன்பம் பண்ணுறானுங்கடா சாமீ!
கவுண்டர்: நெக்ஸ்ட்...
கார்ட்ஸ்...எங்கே அந்த ட்வின் பசங்க?
என்றென்றும் ஆப்புடன் பாலா and தேசி தேசிகன்?
Guards: சார்....அவிங்க ரெண்டு பேரும் சுஜாதாவோட கிரிக்கெட் ஆட ஸ்ரீரங்கம் போயிருக்காங்க சார்!
அப்படியே அவரு கிட்ட நைசாப் பேசி, சிவாஜி படத்துல சிவாஜியா நடிக்கற ஹீரோ பேரு ரஜினி-ன்னு, ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சிக்குனு வருவாங்க சார்....
கவுண்டர் தலையில் அடித்துக் கொண்டு நகர்கிறார்...
கீதா சாம்பசிவம் அவர்களை நோக்கி...

கவுண்டர்: ஹாய் மேன்! ஹவ் ஆர் யூ?
கீ.சா: ஐ ஆம் நாட் மேன்! ஐ ஆம் வுமன்!
பர்ஷ்டு அண்டர்ஸ்டாண்ட் தட்! அண்டு
ஆல்சோ கால் மீ...தலைவி!
கவுண்டர்: சொறிங்க தலைவி....சாரி...சாரீங்க தலைவலி!
இன்னா, எனக்கே ஆர்டர் போடுற அளவுக்கு திமிரா? தலைவிங்கிற தலைக்கனமா?
சரி சரி...அந்த அம்பிப் பையனை எதுக்கு ஆனா ஊன்னா பின்னிப் பெடல் எடுக்கற நீயி? நல்லவங்க நாலு பேரை சும்மா வுடலீன்னா தூக்கமே வராதா?
கீ.சா: நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு....எல்லாம் சிதம்பர நாதனைப் பற்றிப் பதிவு எழுதும் எனக்குத் தான் தெரியும்.
கவுண்டர்: உக்கும்...எல்லாம் தெரிஞ்ச மகராசி...இதையும் தெரிஞ்சுக்கோ...அந்த அம்பி தான் ஒன் மேல பெட்டிஷனாத் தட்டி வுட்டு, இப்ப இங்க வந்து நிக்கறீங்கோ! - இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ!
நெக்ஸ்ட்...
பித்தானந்தா நாமக்கல் சிபி.... கவுண்டர்: டேய் நீ நம்ம ஆளுல்ல...நீ எங்கடா இங்க?.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே! வேறெங்க வருவ? சரி, வந்தது வந்துட்ட! வா, ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்!
சிபி: அண்ணே, முக்கியமான ஒரு ஆள நீங்க வுட்டுட்டீங்கண்ணே!
போட்டுக் கொடுக்கறதா நெனைச்சுக்காதீங்க! நான் போடாமத் தான்-ணே கொடுக்கறேன்!
கவுண்டர்: யாருடா அவன்?
சிபி: வெட்டி-ண்ணே!கவுண்டர்: ஓ...அந்த கொல்ட்டி மண்டையனா!
சிபி: அவனே தான்! லவ் ஸ்டோரி லபக்குதாஸ் அவன் தான்ணே!
கவுண்ட்ர்: சரியான குசும்பு புடிச்சவன்-பா அவன்! அவன் எப்படி இவனுங்க ஆன்மீக லிஸ்ட்-ல வந்து சேந்தான்?
சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!
கவுண்டர்: கொதிக்கற அண்டாவோட சூடு தெரியல உனக்கு? அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல? - நல்ல ஷிப்புடா இந்த பிரெண்டுஷிப்பு!
சரி வா, உன் ஆசைக்கு அவனைப் போயி ஒரு நொங்கு நொங்கிட்டு வரலாம்! அது சரி, இவனுங்க எல்லாம், எப்படி இங்க வந்து மாட்டுனானுங்க-ன்னு கேட்டு, எமனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வச்சேன்....
எருமை மாட்டு வேகத்துல பதில் வந்துக்குனு இருக்கு போல!
(தொடரும்....
அடுத்த பகுதியில் நிறையும்!)