Sunday, March 11, 2012

வ.வா.சங்கம் வாசகர் கடிதம்

பல நாட்களா சங்கத்தில் எந்த பதிவும் போடல்ல..ஆனாப் பாருங்க அதுன்னாலே யாருமே வருத்தமோ கிருத்தமோ படல்லன்னு சிபிஐ செய்தி குறிப்பு சொல்லுது..

சங்கத்தையே மறந்து துறந்து பப்பரப்பன்னு திரிஞ்ச நேரத்துல்ல ஒரு ராகு காலத்துல்ல சங்கத்து மெயில் பாக்ஸ்க்கு வந்து சேந்துச்சு ஒரு மெயில்...

இதுல்ல ஒரு வேளை உள்குத்து இருக்குமோ...எதாவது அயல் நாட்டு சதியோன்னு ஆழமா யோசிக்குற அளவுக்கு அதுல்ல ஒண்ணும் இல்லன்னாலும் இப்படியும் இருக்குமா ...அடடேன்னு சொல்லி ஆச்சரியப்படுற மாதிரி ஒரு  கடிதம்...

வாசகர் கடிதம்....ஆமாங்க இழுத்து பூட்டு போட்டு சாவியைத் தொலைச்ச சங்கத்துக்கு ஒரு வாசகர் கடிதம்

ஒரு வேளை தல கைப்பூ...விவாஜி...வெட்டி..கப்பி..ஜொள்ளு இப்படி இவிங்களே எழுதி போட்டு புதுசா கிடப்புல்ல போட்ட சங்கத்து அடுப்புல்ல சந்தனக் கட்டயை  சொருகி பால் காய்ச்சுறாங்களோன்னு ஒரு டவுட்...

பின்னே முந்தா நாள் பதிவு எழுத வந்தவனுக்கே பகீரன்.. துபாய்..ஓமான்..ஒணான்னு பக்கம் பக்கமா வாசகர் கடிதம் எழுதும் போது பல காலம் இருந்த சங்கத்துக்கு ஒரு கடிதம் வர்றது ஒண்ணும் தப்புல்லயே..

அப்புறம் தனக்கு தானே பின்னூட்டம் மெயில் பாராட்டுன்னு போட்டு விளம்பரப்படுத்தி பதிவுலகத்துல்ல தனக்குன்னு ஒரு இடம் தேடிக்க வேண்டிய கேவலமான நிலைமையிலேயே சங்கம் இருந்தாலும் அப்படி ஒரு மெயில் எழுத எந்த சங்கத்து சிங்கமும் முன்வரமாட்டாங்க...காரணம் அவிங்க எல்லாம் அவ்வளவு பிசி..சில பேருக்கு பிளாகர் அக்கவுண்ட் பாஸ்வேர்டே மறந்துப் போயிருச்சுங்கற வரலாற்று உண்மையான சோகம்...இன்னும் சில பேருக்கு பிளாகரே மறுந்துருச்சாம்...

சோ இந்த வாசகர் கடிதம் கண்டிப்பா நிச்சயமா உறுதியா எங்களுக்கு நாங்களே எழுதிகிட்டதோ இல்ல யாருக்கோ அமவுண்ட் கொடுப்பதாய் சொல்லி ஏமாற்றி எழுதி வாங்கி இங்கு போடுவதோ இல்லன்னு அனைத்து மக்களுக்கு சத்தியம் பண்ணி சொல்லிகிட்டு கடிதத்தை உங்களுக்கு காட்டுறேன்..

அன்புள்ள சங்கத்து சிங்கங்களுக்கு...

கொலவெறி பாட்டு எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே சங்கத்து மேல கொலவெறி கொண்ட முதல் வாசகன்ங்கற முறையிலே நான் இந்தக் கடிதத்தை எழுதுறேன்...ஒரு விசயம் சொல்லணும்ங்க...எல்லா வாசகனும் பதிவர் போடும் பதிவைத் தான் படிப்பான் ஆனா நான் மட்டும் தான் நீங்க போடாத பதிவைக் கூட முழு மூச்சாப் படிச்சு பின்னூட்டம் போட தயாரா இருக்க ஒரு வாசகன்..இப்படி நான் போடாத பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டும் இருபத்தி நாலு லட்சத்து எழுதாயிரத்து முன்னூத்து பத்து...அவ்வளவு தீவிர சங்கத்து ரசிகன் நான்...

உங்க பதிவை எல்லாம் படிச்சு எனக்கு தலையிலே முடி வளந்த அளவுக்கு கூட அறிவு வளரல்லன்னு இலக்கிய உலக மேதாவிகள் மேடைப் போட்டும் மைக் கட்டியும் சொல்ல வக்கில்லாமல் தனி பதிவு போட்டு சொன்னாங்க..அதுன்னாலே என்ன சில பதிவுகள் எல்லாம் படிச்சு அவன் அவனுக்கு மொத்த முடியும் கொட்டும் போது உங்க பதிவு மட்டும் முடி வளத்த வரலாறை எந்த நிலையிலும் உலகுக்கு உரக்க சொல்லும் உண்மை வாசகன் நான்...

லெமூரியா கண்டத்துல்ல சங்கம் இருந்ததாவும் அதுல்ல பதிவு போட்டதாவும் அந்த அரிய உண்மையை கல் வெட்டிலே செதுக்கிட்டே அதுக்கு பக்கத்துல்ல உக்காந்துருந்த தமிழனையும் சரித்திரம் மறந்தாலும் உங்க தரித்திரம் மறக்க விடாது...

சிங்கங்களே இன்னிக்கு அவன் அவன் வர்ற ஒண்ணு ரெண்டு கடிதத்தையும் ஜெராக்ஸ் எடுத்து 10 பதிவா போட்டுட்டு திரியற காலத்துல்ல ஒரு காலத்துல்ல டன் கணக்குல்ல ஓலைச் சுவடி வாசகர் கடிதங்களைப் படிக்கவும் முடியாமல் அதை வச்சு போதிதர்மனின் முற்பிதா சஙிக்மங்கியின் காது குடைய சங்கம் கொடையா வழங்கியதும் அதனால் அவர் வடை போனதும் உலக பதிவுகள் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு ஆச்சே...

உங்க பதிவை எல்லாம் படிக்காத போது குவார்ட்டருக்கு கைத்துடிக்கும் பிரபசனல் குடிகாரனை போல் அறிவு தாகம் என்னை வறுத்து எடுப்பதும் அதைப் படிச்சப் பின்பு மட்டமான கலப்பட சரக்கடித்தவன் தெருவெங்கும் ஆம்லெட் போட்டு மட்டையாவது  போல் சத்தியா இனிமேல் உங்கப் பதிவை எல்லாம் படிக்கக் கூடாதுன்னு சபதம் எடுப்பதும் தமிழ் பதிவுலக வாசகனின் சத்யசோதனை கதைகள்...

இதுக்கு மேல உங்களைப் புகழ எனக்கு தமிழ் மலையாளம் தெலுங்கு துளு இந்தி கன்னடம் உருது இப்படி எந்த மொழியிலும் நல்ல கெட்ட மிகக் கெட்ட வார்த்தைகள் எதுவும் கிடைக்கதாதலும் இந்தக் கடிதத்தை மிகுந்த வருத்தத்தோடு முடிக்கிறேன்...

அப்புறம் சங்கத்து சிங்கங்களே இந்த கடிதம் உங்களுக்கு எழுதுனது..இதை வேற யார் அட்ரஸ்க்காவது பார்வேர்ட் பண்ணி வழக்கம் போல உங்க பெருந்தன்மையைக் காட்ட வேணாம்ன்னு பணிவன்போடு கேட்டுக்குறேன்...

இப்படிக்கு
வ.வா.சங்க கொலவெறி வாசகன்..

பிகு:அடுத்த கடிதம் எழுத யோசிச்சிட்டு இருக்கேன்...