Tuesday, June 24, 2008

சீனா,நமீதா,நான்

வ.வா.சிங்கம் அன்னிக்கு படங்கள் காட்டி கேள்வி கேட்டேன்ல.
யாருமே சரியான பதில் சொல்லல.

குலுக்கல் முறையில சரியான விடை சொன்ன வருத்தப்படாத வாலிபரைத் தெரிவு செஞ்சு அவரை சீனாவுக்கு அழைச்சிட்டுப் போறதுக்காக வந்த நமீதா அக்கா 'என்ன ரிச்சு..இப்படி ஆகிடுச்சு?'ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க.
அதனால அவங்களைக் கையோட நானே சீனாவுக்குக் கூட்டிட்டுப் போய் சுற்றிக்காட்டும் படி ஆகிடுச்சு.
(நமீதா அக்கா சீனா போனதுக்கும் அங்க பூகம்பம் வந்ததுக்கும் சம்பந்தமே இல்லைங்க)

நாம போனதுக்கப்புறம் தான் அங்கே ஆங்கிலம் மருந்துக்கும் உதவாதுன்னு புரிஞ்சு போச்சு.எனக்கோ,நமீதா அக்காவுக்கோ ஒரு துளிக் கூட சீன பாஷை வராது..'எப்படி இருக்கு அந்த சீனா பாஷை'ன்னு கேட்டதுக்கு ஒரு கோடிக் கொசு வந்து காதுக்குள்ள ரீங்காரம் பண்றது மாதிரி இருக்குடா மச்சான்.ஒண்ணுமே புரியல'ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..

'சரிப்பா இங்க்லீஷ் தெரியுமே..அதை வச்சுக்கொஞ்சம் சமாளிச்சுக்குவோம்'ன்னு ஆறுதல் படுத்தினா கோபத்தோட முறைச்சுப் பார்த்தாங்க..ஏர்போர்ட்ல வச்சே சில போட்டோக்களை மட்டும் எடுத்து கையில கொடுத்தாங்க..நீங்களும் பாருங்க..














சரி..இப்ப நம்ம அடுத்த மேட்டருக்கு வருவோம்.

இதச் சொல்றேன்னு சஞ்சய்,சிவா மற்றும் நமீதா அக்கா ரசிகர்கள் யாரும் சண்டைக்கு வரக்கூடாது.

நமீதா அக்கா வாந்தியெடுக்க நான் காரணமாகிட்டேங்க.

அந்தக் கதை என்னன்னா,ரெண்டு பேருக்குமே ரொம்பப் பசிச்சதால நாங்க தங்கியிருந்த ஹோட்டல்லயே சாப்பிட்டுட்டு ஊர் சுத்தலாம்னு முடிவெடுத்தோம்.சாப்பிடுறதுக்காக போய் நின்னா..
இதுக்கு மேல என்ன சொல்றது? இந்தப் படங்களையே பாருங்க.







இதையெல்லாம் நேர்ல பார்த்துட்டு நமீதா அக்கா வாந்தியே எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
'சரி..ரொம்பப் பசில வேற இருக்கீங்க..உடம்பு வீக்காகிடும்'னு சொல்லி வெளியே கூட்டிட்டு வந்தேன்.

அப்படியே 'கடலுணவுகள் மட்டும்'னு போர்ட் போட்டிருக்குற ஒரு ரெஸ்ட்டூரண்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்.

அங்கே போய்ப் பார்த்தா....
வேண்டாம்.அதை எப்படி என் வாயால சொல்றது? நீங்களே பாருங்க..முழுசாப்பார்த்துட்டு என்னைத் திட்டப்படாது.ஆமா !



சரி..இவ்ளோ நீளப்பதிவு எழுதி,நம்ம தமிழ் சினிமாக் கணக்காக் கதை சொன்னா,க்ளைமேக்ஸ் ரயில்ல வைக்கச் சொல்வீங்கள்ல..

சரி..இனி க்ளைமேக்ஸ்..

சாதாரணமா அங்க பயணம் போகணும்னா பக்கத்து ரோட்னா சைக்கிள்லயும் பக்கத்து ஊர்னா ட்ரையின்லயும்தான் போவாங்க.

அப்புறம் நீங்களும் ட்ரையின்ல எல்லாம் போயிருப்பீங்க..அதுவும் ஆபிஸ் போற நேரத்திலயும் வர்ற நேரத்திலயும் எம்புட்டுக் கூட்டம்?
அதுவும் நம்ம தமிழ் சினிமாக்கள்ல வில்லனுங்க கூட அருவாளோட வர்ற அடியாட்களாட்டம் ஒவ்வொருத்தரும் மொறைச்சுப் மொறைச்சு அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துட்டிருக்கும் போது நீங்க சைட் அடிக்கவும்,கடலை போடவும் வசதியில்லாம ரொம்ப நொந்து போயிருப்பீங்க..

ஆனா அதுதாங்க வாழ்க்கை..வேலை வேலைன்னு நேரம் காலம் பார்க்காம அலைஞ்சிட்டு ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சுப் பாருங்க..அப்பதாங்க உங்க கால்வலி உங்களுக்கே புரியும்.. (இது தத்துவமா? மொக்கையான்னு புரியல..நீங்கதாங்க சொல்லணும்)

இப்போ இந்த வீடியோவைப் பாருங்க.அங்கயெல்லாம் ட்ரைய்ன்ல ரொம்பக் கூட்டம் சேர்ந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதி,சனம் பூராத்துக்கும் எப்படி உதவியா நடந்துக்குறாங்கன்னு நல்லாப் பாருங்க...

அதிலயும் கூட்ட நேரத்துல நீங்க சிக்கிட்டீங்கன்னு வைங்க..டீவி சீரியல்ல வர்ற அப்பாவி ஹீரோயினாட்டம் ரொம்பத்தான் நொந்துடுவீங்க..சீன மக்களுக்கு அது பழகிடுச்சாம்..அவங்களுக்குத்தான் தொப்பை இல்லையே..அதனால நோ ப்ராப்ளம்..ஆனா உங்களுக்கு? ( என்னை சேர்த்துக்க வேணாம்..எனக்குத்தான் தொப்பை இல்லையே....ஆமா...இதை சொன்னதுக்கு எதுக்குங்க உங்க காதுல இவ்ளோ புகை வருது? )





இதையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் நாங்க சீனால இருக்கணுமா என்ன?
ஒரே ஓட்டமா ஓடியே வந்துட்டோம் ல?

39 comments:

  1. //அவரை சீனாவுக்கு அழைச்சிட்டுப் போறதுக்காக வந்த நமீதா அக்கா 'என்ன ரிச்சு..இப்படி ஆகிடுச்சு?'ன்னு//
    ரொம்ப அக்கா, அக்கான்னு அநியாயத்துக்கு பாசத்தைப் பொழியிறியேப்பா...
    பாசமலர் பார்ட் 2 இதுதானா?

    ஆமா நமிதாவோட எவ்ளோ நல்ல படம்லாம் இருக்கு.. போடலாம்ல..(சிவா ஹெல்ப் ப்ளீஸ்...)

    ReplyDelete
  2. ரிச்சு! வ.வா.ச. க்கு வந்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டே! ஹ்ம்ம். என்னத்தச் சொல்றது? ரொம்ப சோ...கமா இருக்குப்பா :(

    ரயில் வீடியோ மட்டும் பார்த்தேன். OMG! புளிமூட்டை மாதிரி நிஜமாவே வச்சு அடைக்கிறாங்களே!

    ReplyDelete
  3. //தமிழ்ப்பறவை said...
    ஆமா நமிதாவோட எவ்ளோ நல்ல படம்லாம் இருக்கு.. போடலாம்ல..(சிவா ஹெல்ப் ப்ளீஸ்...)//



    சிவா அண்ணே உங்க புகழு எகிடு தகிடா பரவி கிடக்கே!!!!!

    ReplyDelete
  4. /சீனா நமீதா நான்/

    நமீதாவை விடமாட்டேங்கிறாருப்பா இந்தாளு...

    ReplyDelete
  5. அப்ப நிஜமாலுமே சீனா போனிங்களா அண்ணாத்தை...!?

    ReplyDelete
  6. ஹல்லோ நாங்க இங்க பி ஆர் சி மக்கள் கிட்ட படுற பாடு இருக்கே சொல்லி மாளாது. ஒரு தடவை ஒரு பி ஆர் சி என்கிட்டே வந்து அவன்பாட்டுக்கு சீன மொழில பேசிட்டே போறான். நான் ஒன்னும் புரியாம விழிக்க நான் எதோ வேணும்னே பதில் சொல்லாத மாதிரி மொறைச்சிட்டு வேற போனான். என்னத்த சொல்லுறது? ஒலிம்பிக்ஸுக்கு சைனா போறவங்க பாடு திண்டாட்டம் தான்.

    ReplyDelete
  7. இந்த மாதிரி ட்ரெயின்ல நமீதாவோட ட்ராவல் பண்றதுக்கு குடுத்து வெச்சிருக்கணும்யா!!

    :))))

    ReplyDelete
  8. /
    இந்த மாதிரி ட்ரெயின்ல நமீதாவோட ட்ராவல் பண்றதுக்கு குடுத்து வெச்சிருக்கணும்யா!!

    :))))
    /

    @ரிசானு
    ஆனா என்ன உன்னைய மொதல்ல அமுக்கி ஒரே தள்ளு உள்ள தள்ளிபுட்டு நமீதாவை உள்ள தள்ளறதுக்குள்ள அவங்களுக்கு நாக்கு தள்ளிடும் வெளில

    :)))))

    ReplyDelete
  9. /
    இதச் சொல்றேன்னு சஞ்சய்,சிவா மற்றும் நமீதா அக்கா ரசிகர்கள் யாரும் சண்டைக்கு வரக்கூடாது.



    நமீதா அக்கா வாந்தியெடுக்க நான் காரணமாகிட்டேங்க.
    /

    ஆமா அதுக்கு ரிசான் காரணமில்ல கிளம்பறதுக்கு முன்னாடியே அதுக்கு........................

    :))))))

    ReplyDelete
  10. ///எனக்கோ,நமீதா அக்காவுக்கோ ஒரு துளிக் கூட சீன பாஷை வராது..'எப்படி இருக்கு அந்த சீனா பாஷை'ன்னு கேட்டதுக்கு ஒரு கோடிக் கொசு வந்து காதுக்குள்ள ரீங்காரம் பண்றது மாதிரி இருக்குடா மச்சான்.ஒண்ணுமே புரியல'ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..///

    அவுங்களுக்கு தமிழ் மட்டும் வருமா அண்ணாத்தை :)?

    அது சரி அக்கான்னுறிங்க அவுங்க மச்சான்னுறாங்க எங்கயோ இடிக்குதே...,:))

    ReplyDelete
  11. மங்களூர் சிவா சொன்னது...

    ///இந்த மாதிரி ட்ரெயின்ல நமீதாவோட ட்ராவல் பண்றதுக்கு குடுத்து வெச்சிருக்கணும்யா!!

    :))))///

    ரிப்பீட்டு...:)

    -தலயோட கமன்ட்டுகளே தனிதான்:)

    ReplyDelete
  12. நீயும் எதாவது கோக்கு மாக்கா பண்ணிக்குனுதான் இருக்குற

    ReplyDelete
  13. //அது சரி அக்கான்னுறிங்க அவுங்க மச்சான்னுறாங்க எங்கயோ இடிக்குதே...,:))//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேஏஏய்ய்ய்ய்

    ReplyDelete
  14. ஆஹா, எனக்கெல்லாத்தையும் விட ஆச்சர்யமா இருக்குறது நமீதாவோட சூப்பர் தமிழ்தாங்க.(nonveg videos) எப்படியோ பாக்கக் கூடாததஎல்லாம் பார்க்க வெச்சிட்டீங்க.

    ReplyDelete
  15. english ல நாம பரவாயில்லை போல

    ReplyDelete
  16. யோவ், உங்ககிட்ட போய் என்ன போஸ்டே கணோமுன்னு கேட்டேன் பாரு...என்னைத்தான் நானே நொந்துக்கணும் :-)

    ReplyDelete
  17. வாங்க தமிழ்ப்பறவை :)

    //ஆமா நமிதாவோட எவ்ளோ நல்ல படம்லாம் இருக்கு.. போடலாம்ல..(சிவா ஹெல்ப் ப்ளீஸ்...)//

    நமிதா அக்கா போட்டோவுக்கும் நம்ம சிவா அண்ணாச்சிக்கும் என்ன சம்பந்தமுங்க? யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்..

    ReplyDelete
  18. //ரிச்சு! வ.வா.ச. க்கு வந்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டே! ஹ்ம்ம். என்னத்தச் சொல்றது? ரொம்ப சோ...கமா இருக்குப்பா :(//

    வாங்க கவிநயா :)
    என்ன பண்றது?
    இந்த மோசமான பசங்களுக்கு தலைமைச் சிங்கமா இருக்கணும்னா சிங்கம் எவ்ளோ மோசமானதா இருக்கணும்? அதான்.. :)

    //ரயில் வீடியோ மட்டும் பார்த்தேன். OMG! புளிமூட்டை மாதிரி நிஜமாவே வச்சு அடைக்கிறாங்களே!//

    ஆமா...மனுஷங்களையே இப்படி அடைக்கிறாங்களே..அப்போ புளிமூட்டையை எப்படி அடைப்பாங்க?

    ReplyDelete
  19. //சிவா அண்ணே உங்க புகழு எகிடு தகிடா பரவி கிடக்கே!!!!!//

    கையைக் கொடுங்க நிஜமா நல்லவன்..
    இப்பதாங்க நீங்க நிஜமா நல்லவன் :)

    ReplyDelete
  20. //தமிழன்... said...
    /சீனா நமீதா நான்/

    நமீதாவை விடமாட்டேங்கிறாருப்பா இந்தாளு...//

    யாரைச் சொல்றீங்க தமிழன்..?
    சஞ்சய் அங்கிள் / சிவா அங்கிள்?

    ReplyDelete
  21. // தமிழன்... said...
    அப்ப நிஜமாலுமே சீனா போனிங்களா அண்ணாத்தை...!?//

    போகாமலா சிங்கம் இம்புட்டுச் சொல்லுது? :P

    ReplyDelete
  22. //நிஜமா நல்லவன் said...
    ஹல்லோ நாங்க இங்க பி ஆர் சி மக்கள் கிட்ட படுற பாடு இருக்கே சொல்லி மாளாது. ஒரு தடவை ஒரு பி ஆர் சி என்கிட்டே வந்து அவன்பாட்டுக்கு சீன மொழில பேசிட்டே போறான். நான் ஒன்னும் புரியாம விழிக்க நான் எதோ வேணும்னே பதில் சொல்லாத மாதிரி மொறைச்சிட்டு வேற போனான். என்னத்த சொல்லுறது?//

    இதுக்குத்தான் பக்கத்துல நமீதா அக்காவை வச்சுக்கணும்னு சொல்றது..
    யாருமே உங்களை மொறச்சி பார்த்துட்டு போக மாட்டாங்க :P

    ReplyDelete
  23. // மங்களூர் சிவா said...
    இந்த மாதிரி ட்ரெயின்ல நமீதாவோட ட்ராவல் பண்றதுக்கு குடுத்து வெச்சிருக்கணும்யா!!

    :))))//

    என்ன சிவா அங்கிள்?
    இப்படியா பகிரங்கமா ஜொள்ளு விடுவீங்க? :P

    ReplyDelete
  24. //@ரிசானு
    ஆனா என்ன உன்னைய மொதல்ல அமுக்கி ஒரே தள்ளு உள்ள தள்ளிபுட்டு நமீதாவை உள்ள தள்ளறதுக்குள்ள அவங்களுக்கு நாக்கு தள்ளிடும் வெளில

    :))))) //

    சிவா அங்கிள்,நமீதா அக்காவைப் பார்த்த உடனே எல்லோரும் வழிவிட மாட்டாங்களா என்ன?

    ReplyDelete
  25. //அவுங்களுக்கு தமிழ் மட்டும் வருமா அண்ணாத்தை :)?//

    தமிழன் சரியாத்தான் கேக்குறீங்க :)

    //அது சரி அக்கான்னுறிங்க அவுங்க மச்சான்னுறாங்க எங்கயோ இடிக்குதே...,:)) //

    இப்பத்தானே கத்துக்குடுக்க ஆரம்பிச்சிருக்கேன்...இனிமே கத்துக்குவாங்க...கத்துக்கிட்டு உங்களைப் பார்த்து 'தம்பி'ன்னு கூப்பிடுவாங்க தமிழன் :P

    ReplyDelete
  26. // jackiesekar said...
    நீயும் எதாவது கோக்கு மாக்கா பண்ணிக்குனுதான் இருக்குற //

    சிங்கம் ல.. :P
    இப்படி எழுதினாத்தான் நம்ம பசங்க எட்டியாவது பார்ப்பாங்க..அதான் :)

    ReplyDelete
  27. // மீறான் அன்வர் said...
    //அது சரி அக்கான்னுறிங்க அவுங்க மச்சான்னுறாங்க எங்கயோ இடிக்குதே...,:))//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேஏஏய்ய்ய்ய் //

    மீறான் அன்வர் எதுக்கு இப்படி சவுண்ட் விடறீங்க,அதுவும் காதுல புகையோட?

    ReplyDelete
  28. //rapp said...
    ஆஹா, எனக்கெல்லாத்தையும் விட ஆச்சர்யமா இருக்குறது நமீதாவோட சூப்பர் தமிழ்தாங்க.(nonveg videos) எப்படியோ பாக்கக் கூடாததஎல்லாம் பார்க்க வெச்சிட்டீங்க.//

    வாங்க ராப்..
    அவங்க சாப்பிடக் கூடாததெல்லாம் சாப்பிடுறாங்க...நீ பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்தா என்ன தப்புங்குறேன்? :P

    ReplyDelete
  29. // முரளிகண்ணன் said...
    english ல நாம பரவாயில்லை போல //

    இங்க்லீஷ் ல மட்டுமில்லைங்க..
    சாப்பாட்டு விஷயத்துலயும் தான்.. :)

    ReplyDelete
  30. //மதுரையம்பதி said...
    யோவ், உங்ககிட்ட போய் என்ன போஸ்டே கணோமுன்னு கேட்டேன் பாரு...என்னைத்தான் நானே நொந்துக்கணும் :-) //

    எதுக்குங்க இப்படி மனசே வெடிக்குற மாதிரி ஒரு பீலிங்? ஏதாச்சும் ஸ்பெஷல் காரணம்? :P

    ReplyDelete
  31. ada, en friend oruthan africa porache, adventure clubnu yedho hotelku poi, mudhalai kari thuntu vandhu peethikinu irukkan. uvvey

    ReplyDelete
  32. அண்ணா, நான் சீனாவுல தான் படிக்கிறேன், உங்களோட பதிவப் பாத்ததும் "அட, நம்ம ஏரியாவாச்சே" என்டு ஒரு பின்னூட்டம் போடலாம்னு வந்தேன், உண்மையிலயே சீனா வந்தீங்களா???
    நாங்க தினம் தினம் படுற துன்பத்த மற்ற மக்களும் படும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா...
    :-)
    (இப்போ பழகிட்டுது!!!! )

    ReplyDelete
  33. வாங்க முத்துகிருஷ்ணன்,

    //அண்ணா, நான் சீனாவுல தான் படிக்கிறேன், உங்களோட பதிவப் பாத்ததும் "அட, நம்ம ஏரியாவாச்சே" என்டு ஒரு பின்னூட்டம் போடலாம்னு வந்தேன்,//

    ஓஹ்..நீங்க சீனால தான் இருக்கீங்களா? நல்லதாப் போச்சு...எப்படியிருக்கீங்க?

    //நாங்க தினம் தினம் படுற துன்பத்த மற்ற மக்களும் படும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா...
    :-)//


    என்னா ஒரு நல்லெண்ணம்? அவரா நீங்க? :P

    ReplyDelete
  34. ஏன் எல்லாரும் என்ட பெயர பிழையாவே வாசிக்கிறீங்க??!!!
    :((
    நான் மது கிருஷ்ணா!!!
    :(
    முத்துகிருஷ்ணன் இல்லை இல்லை இல்லை!!!
    :((


    ஹிஹிஹி!

    //ஓஹ்..நீங்க சீனால தான் இருக்கீங்களா? நல்லதாப் போச்சு...எப்படியிருக்கீங்க//
    நாங்க ஏதோ இருக்கிறம், நீங்க எப்பிடி?!
    :D

    ReplyDelete
  35. வாங்க மதுகிருஷ்ணன்,

    //ஏன் எல்லாரும் என்ட பெயர பிழையாவே வாசிக்கிறீங்க??!!!//

    அச்சச்சோ...மன்னிச்சுக் கொள்ளுங்கோ..நான் தான் தவறாச் சொல்லிட்டேன்..வருத்தப்படாதீங்கள்..
    (சீனப் பெண்கள் தவறாச் சொல்லும் போது வருத்தப்படமாட்டீங்களெண்டு எனக்குத் தெரியும் :P )

    //நாங்க ஏதோ இருக்கிறம், நீங்க எப்பிடி?!//

    நாங்க என்டால் அது யாரு மற்றவர்..? :P
    நானும் நல்ல சுகமாக இருக்கிறேன் :)

    ReplyDelete
  36. மதுகிருஷ்ணா ஒரு பெண்ணாக இருக்கலாம் என்டு நினைக்கேல்லயா ரிஷான் அண்ணா??
    நான் மதுகிருஷ்ணன் இல்ல!!!
    ஹும்!!!
    நாங்க என்டு சொல்றது சும்மா ஒரு ஸெல்ஃப் ரெஸ்பெக்ட்டுக்கு!
    ஹிஹிஹி!!!

    ReplyDelete
  37. //மதுகிருஷ்ணா ஒரு பெண்ணாக இருக்கலாம் என்டு நினைக்கேல்லயா //

    யாரோ ஒரு நடிகையின் கண்கள் போட்டோ போட்டிருக்கீங்களென்டு நினைச்சேன் :)

    //ரிஷான் அண்ணா??//

    அண்ணாவோ? நான் அப்பாவிச் சிறுவனுங்க.. :P

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)