Tuesday, June 17, 2008

பிட்டுப்படங்கள் பார்க்கலாம் வாங்க...!

நேத்து நம்ம 'பொடியன்'சஞ்சய் இருக்காரில்லையா...?
அவரு போதைக்கு நான் ஊறுகாயாகிட்டேன்.

நான் பிட்டுப் படம் எடுக்கப்போறதா அவரோட வலைப்பதிவுல குத்த வச்சி உக்காந்து ஊரக் கூட்டி,உலகத்தக் கூட்டி தண்டோரா போட்டுச் சொல்லிட்டு ரெண்டு குவார்ட்டர அடிச்சிட்டுக் குப்புறக் கவுந்துட்டாரு.

இத்தனூண்டு சின்னப்பையனப் போய் அண்ணான்னு வேற கூப்பிட்டு ஆரம்பிச்சு வச்சாச்சா,மீசையெல்லாம் நரைச்சு நாளன்னிக்கு ஆகாசம் பார்க்கப்போறவனெல்லாம் கூட அண்ணான்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டானுங்க.இதுல நெசமா நல்லவன்னு ஒருத்தரு வார்த்தைக்கு வார்த்தை அண்ணான்னு சொல்லி நெசமாக் கெட்டவனாகி என்னைப் போட்டுத் தாளிச்சிட்டாரு.எனக்கு ஒரே அழுவாச்சியா வந்துச்சு.

நல்லவேள ஒரு புள்ள கூட என்னை அந்த வார்த்தை சொல்லிக் கூப்பிட்டு அழ வைக்கல..அந்த மட்டுக்குச் சந்தோசம்..

ஆனாலும் அப்பால பார்த்தாக்க எங்கிட்டிருந்தோவெல்லாம் 'எலே ராசா..பிட்டுப் படம் எடுக்குறியாலே..?எனக்கும் ஒரு சான்ஸ் குடேன்'ன்னு அவனவன் மெயில் மெயிலா அனுப்புறானுங்க.

ஷங்கர் சார் இதப் பார்த்துட்டுப் பீதியாகி "தம்பி,'ரோபோ' ரிலீஸ் நேரத்துல உங்க படத்த ரிலீஸ் பண்ணிடாதீங்க தம்பி.அப்புறம் நானு,ரஜினி,ஐஸ்வர்யா ராயி எல்லாம் நடுத் தெருவில தான் நிக்க வேண்டியிருக்கும்..என்னோட 'செட்'டுல மண்ணள்ளிப் போடாதீங்க தம்பி"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு.

அதுல வேற போற போக்குல கேயாரெஸ் அங்கிள் என்னையும் பண்டறி பாய்னு ஒருத்தரையும் சேர்த்து கிசுகிசுவக் கிளப்பிட்டுட்டுப் போக விகடன்,குமுதத்துல இருந்தெல்லாம் கோல் பண்ணி "கவர் ஸ்டோரி'யாப் போடலாமா சார்?" னெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

சஞ்சய் பதிவுங்குறதால அதைப் படிச்சிட்டு நமீதா அக்கா கூட 'என்ன ரிச்சு..படம் எடுக்கப் போறியாமே? எனக்கு ஒரு சான்ஸ் குடேன் மச்சான்.உன் படத்துல நடிச்சி நம்ம தமிழ் சினிமால எல்லார் வாயிலயும் நுழையிற பெயரா என் பெயர் ஆகணும்'னு சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணியிருந்தாங்க.

வருங்கால சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் கூட 'உங்களோட படத்துல நான் நடிக்கணும்குறது என்னோட லட்சியம் ஐயா.நான் சூப்பர் ஸ்டார் ஆனதுக்கப்புறமும் இந்த நன்றியை மறக்காம நீங்க எப்பக் கூப்டாலும் வந்து நடிச்சுக் கொடுக்குறேன்'ங்குறார்.

இம்புட்டுப் பேர் வந்து சொல்ற அளவுக்கு இருக்கே..ஆனா நெசமாலுமே பிட்டுப்படம்னா என்னன்னு எனக்கு ஒண்ணுமே புரியல...ஆருக்கிட்டயாவது கேட்கலாம்னு பார்த்தா ஆருமே வசமாச் சிக்கல.சிக்கின சிலபேரும் தசாவதாரத்துலயும் ஜிலேபிலயும் மூழ்கி முத்தெடுக்கக் கிளம்பிட்டிருந்தாக.

அப்புறம் சீனா ஐயா,மௌலி ஐயா,நாதாஸ் அண்ணா,கார்த்திக் அண்ணா(இந்தக் கடைசி ரெண்டு பேரும் PIT போட்டிக்கான படத்தைச் சொல்றாய்ங்களோன்னு ரொம்ப அப்பாவியாக் கேட்டாக)அம்புட்டுப் பேருட்ட கேட்டும் ஒண்ணும் வேலைக்காவல..ஒண்ணுமே வேலைக்காவல.

ஆரையாவது கேட்டுச் சொல்லுங்கண்ணேன்னு கெஞ்சிக் கூத்தாடி,மடங்கி மன்றாடிக் கேட்டதுக்கப்புறம் தான் ஒரு புண்ணியவான் நம்ம மங்களுர் சிவா பேரச் சொல்லி 'அந்தாளு தான் எத்தியோப்பியால பிட்டுப்படம் போட்டாக் கூடச் சொந்தச் செலவுல போய் எட்டிப் பார்க்குறவரு..அவருக்கிட்டயே போய்க் கேட்டுக்கோ'ன்னாரு.

மங்களூர் சிவா அண்ணாக்கிட்ட கேட்டாக்க 'எலே ராசா..அது மசாலாப்படம் ராசா'ன்னாரு..சரி..உங்கக்கிட்ட இருக்குறதுல நல்லதாப் பார்த்து ஒண்ணு கொடுங்க..நாளைக்கு வ.வா.சங்கத்துல ஷோ காட்டறேன்னா 'சின்னப் பையன் கேக்குற படமாடா இது'ன்னு நடு மண்டையில நச்னு குட்டிட்டாரு..ஒரு கணம் ஒலகம் புரியாம ஆடிப்போயிட்டேன்னா பார்த்துக்குங்களேன்..

உங்களுக்காக மசாலாப்படங்களைத் தேடி இந்தச் சின்னப்பையன் எங்கிட்டுப் போவான்? ஆனாலும் உங்களை அப்படியே திருப்பி அனுப்ப மனசு வரலீங்க..

..அதான் என்னால முடிஞ்ச மசாலாப்படங்களைக் கீழே போட்டிருக்கேன்..

பக்கத்துல யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்துக்குங்க..வீட்டுக்காரம்மணி,ஆபிஸ் சகதர்மிணிகள் பக்கத்துல இல்லாமப் பார்த்துக்குங்க..அப்புறம் இதெல்லாம் வேணும்னு கேட்டா இந்தச் சின்னப்பையன மாட்டி விட்றாதீக..இனிக் கீழ போங்க...











































































43 comments:

  1. அண்ணாச்சி நீங்க ரொம்ப அப்(ட)பாவி ன்னு நம்பிட்டோம் :P

    ReplyDelete
  2. இந்த மசாலாப் படங்கள்ள... சக்தி மசாலா... ஆச்சி மசாலாப் படங்கள்ளாம் இருக்காமே....அதையும் போடுறது...நீங்க போட்டுருக்குறது வடக்கத்தி மசாலாக்களாச்சே!

    ReplyDelete
  3. ரிசானு
    உன் பிரியாணிக்கு நாங்க மசாலாவா?

    ReplyDelete
  4. //அதுல வேற போற போக்குல கேயாரெஸ் அங்கிள் என்னையும் பண்டறி பாய்னு ஒருத்தரையும் சேர்த்து கிசுகிசுவக் கிளப்பிட்டுட்டுப் போக//

    கிசுகிசு-வா?
    அப்படின்னா என்ன ரிசான் அங்க்கிள்?

    //விகடன்,குமுதத்துல இருந்தெல்லாம் கோல் பண்ணி "கவர் ஸ்டோரி'யாப் போடலாமா சார்?" னெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க//

    விகடன் குமுதம் எல்லாம் நல்லவங்க! வல்லவங்க! பொய் சொல்ல மாட்டாங்க! கரெக்டாத் தான் கேட்டிருக்காங்க!

    ReplyDelete
  5. //கவர் ஸ்டோரி'யாப் போடலாமா சார்//

    இதுக்கு வேற தனியா
    பால் கவர், பாலிதீன் கவர், இன்லான்டு கவர்-ன்னு பதிவு போட்டேன்னு வையி, ரிசானு, உன் கதை கந்தல் தான்! சொல்லிட்டேன்!

    எங்கள் தங்கம், மங்களூர் சிங்கம் - அதன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!

    ReplyDelete
  6. ரிசானு, இதான் பிட்டுப் படமா - ஓக்க்கே - ஓக்க்கே - இந்தப் படந்தான் எடுத்தியா நீனு - உண்மைலேயே நீ ச்ச்ச்சின்ன்ன்ன்னப் பய தான்.

    ReplyDelete
  7. //இந்த மசாலாப் படங்கள்ள... சக்தி மசாலா... ஆச்சி மசாலாப் படங்கள்ளாம் இருக்காமே....அதையும் போடுறது...நீங்க போட்டுருக்குறது வடக்கத்தி மசாலாக்களாச்சே!//
    அதானே

    ReplyDelete
  8. ரிச்சுவா! அட, நமீதா நல்லாதேன் பேரு வச்சிருக்காக! அவிகள்ட்ட சொன்னீகளா, இந்த வடக்கத்தி மசாலக்களோடதேன் நடிக்கோணும்னு? ஈஸியா வாயில நொழய வசதியாப் போச்சே! :)

    ReplyDelete
  9. ஹாஹா... மசாலா வாழ்க!!

    ReplyDelete
  10. அடப்பாவி.. அடப்பாவி... நீ ரொம்ப நல்லவந்தான்... வாய்ல எதெதோ வருது.. வேணாம்.. பொய்ஹு இடம்..பொழச்சி போ... நமீதா அக்காவா?... வாணி அக்கா உன்ன பத்தி ஒன்னு சொன்னாங்க...அத இங்க சொல்ல வச்சிடாத.. :))

    ... உனக்கு இருக்குடி அடுத்த ஆப்பு தல KRS கிட்ட இருந்து...

    ReplyDelete
  11. அண்ணா.. ரிஷான் அண்ணா இந்த மசாலா விளம்பரத்துக்கு எவ்வளவு காசு வாங்கினிங்க? :)

    ReplyDelete
  12. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ரிசானு
    உன் பிரியாணிக்கு நாங்க மசாலாவா//

    அதானே.. பதில் சொல்லுங்க ரிஷான் அண்ணா.

    ReplyDelete
  13. அண்ணா உங்கள "மின்ஸ்மீட்" பண்ணிடுவேன்...:)

    ReplyDelete
  14. //அப்புறம் சீனா ஐயா,மௌலி ஐயா,நாதாஸ் அண்ணா,கார்த்திக் அண்ணா//

    அடப் பாவி மக்கா... என்னையப் போயி சீனாய்யாவோட சேர்த்ததுக்கு கடும் கண்டனங்கள்....சீனா ஐயா எம்புட்டு நல்லவரு, வல்லவரு...நான் அவரு முன்னாடி சுள்ளான்...ஹிஹி

    ReplyDelete
  15. //ரிசானு
    உன் பிரியாணிக்கு நாங்க மசாலாவா//

    அதானே.. பதில் சொல்லுங்க ரிஷான் அண்ணா.//

    பதில் சொல்லுங்க டயருடக்கர்.

    சஞ்சய் உங்க பதிவு super
    வால்பையன் பேசுறது கொஞ்சம் புரியர மாதிரி இருக்கு.
    இங்க அவரு நான் யாருக்கு என்ன செஞ்சேன்னு தேம்பி தேம்பி அலுவுராறு.

    ReplyDelete
  16. இப்போ எல்லாம் ரிஷானு பெரியப்பு மெயில் ல வராத எடுத்து பதிவு போட ஆரமிசிட்டார். குசும்பு வேற ரொம்ப அதிகமாகிகிட்டே போகுது..
    லொள்ளு வேற ஏறிகிட்டே போகுது...
    நையாண்டி , நாதரிதனம் , இது மாதிரி நிறைய நிறய திறமைகள் கொண்டிருக்கிற எனது பெரியப்பு ரிஷானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. அண்ணே! ரிஷான் அண்ணே... பிட்டு படம் பார்க்க வந்தவங்களை ஏமாத்திப்புட்டீங்களேண்ணே!.... ஆனாலும் மசாலா விளம்பரம் சூப்பரோ சூப்பர் அண்ணே... ;))

    ReplyDelete
  18. வாங்க தமிழன் :)

    //?????????????//

    எதுக்கு இம்புட்டுக் கேள்விக் குறிகள்? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நொந்துட்டீங்களா? :P

    ReplyDelete
  19. // nathas said...
    அண்ணாச்சி நீங்க ரொம்ப அப்(ட)பாவி ன்னு நம்பிட்டோம் :P //

    அண்ணாமார்களே..
    நம்ம நாதாஸ் உங்களைத்தான் சொல்றாரு..கேட்டுக்குங்க :P

    ReplyDelete
  20. வாங்க ஜிரா அண்ணாச்சி..

    //இந்த மசாலாப் படங்கள்ள... சக்தி மசாலா... ஆச்சி மசாலாப் படங்கள்ளாம் இருக்காமே....அதையும் போடுறது...நீங்க போட்டுருக்குறது வடக்கத்தி மசாலாக்களாச்சே!//

    முதல்ல வடக்கத்தி மசாலாப்படமா எடுக்குறதுன்னு முடிவெடுத்தேன்.
    நம்மூர்ப் பசங்கதான் உள்ளூர் பிட்டுப் படங்களை தைரியமாப் பார்க்க மாட்டாங்களாமே :P

    ReplyDelete
  21. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ரிசானு
    உன் பிரியாணிக்கு நாங்க மசாலாவா?//

    பிரியாணியா?
    நான் சுத்த சைவம் அங்கிள் :P

    ReplyDelete
  22. //விகடன் குமுதம் எல்லாம் நல்லவங்க! வல்லவங்க! பொய் சொல்ல மாட்டாங்க! கரெக்டாத் தான் கேட்டிருக்காங்க!//

    அதத்தான் நானும் சொன்னேன் கேயாரெஸ் அங்கிள் :P

    ReplyDelete
  23. //cheena (சீனா) said...
    ரிசானு, இதான் பிட்டுப் படமா - ஓக்க்கே - ஓக்க்கே - இந்தப் படந்தான் எடுத்தியா நீனு - உண்மைலேயே நீ ச்ச்ச்சின்ன்ன்ன்னப் பய தான்.//

    ஆமா சீனா ஐயா :)
    உங்க தயவுல இதுதான் எடுக்கமுடிஞ்சது :P

    ReplyDelete
  24. /
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ரிசானு
    உன் பிரியாணிக்கு நாங்க மசாலாவா?
    /

    repeateyyyyyyyy

    ReplyDelete
  25. /
    'அந்தாளு தான் எத்தியோப்பியால பிட்டுப்படம் போட்டாக் கூடச் சொந்தச் செலவுல போய் எட்டிப் பார்க்குறவரு..அவருக்கிட்டயே போய்க் கேட்டுக்கோ'ன்னாரு
    /

    கொக்க மக்கா யாருப்பா அது சொன்னது!?!?

    ReplyDelete
  26. வாங்க சின்ன அம்மிணி :)

    ////இந்த மசாலாப் படங்கள்ள... சக்தி மசாலா... ஆச்சி மசாலாப் படங்கள்ளாம் இருக்காமே....அதையும் போடுறது...நீங்க போட்டுருக்குறது வடக்கத்தி மசாலாக்களாச்சே!//
    அதானே////

    அதத்தானே தினமும் நீங்க சீரியல் பார்க்கும் போது கண்ணீர் மறைக்க மறைக்க பார்த்துட்டிருப்பீங்க..

    இங்க கொஞ்சம் தெளிவா பார்க்காத பிட்டுப் படமா பாருங்க :P

    ReplyDelete
  27. வாங்க கவிநயா :)

    //ரிச்சுவா! அட, நமீதா நல்லாதேன் பேரு வச்சிருக்காக!//

    அட..அது செல்லமா கூப்டறதுங்க..அவிகளுக்கு மட்டும்தேன் அனுமதி.. :P

    //அவிகள்ட்ட சொன்னீகளா, இந்த வடக்கத்தி மசாலக்களோடதேன் நடிக்கோணும்னு? ஈஸியா வாயில நொழய வசதியாப் போச்சே! :)//

    அவிகள்ட்ட நானெது சொன்னாலும் 'ஓகே டா மச்சான்'னுல்ல சொல்றாக..

    (என்னமோ சத்தம் கேட்டதேன்னு பயந்துடாதீக..அது நம்ம சஞ்சய்,சிவா,கேயாரெஸ்ஸோட ஹார்ட் வெடிச்சு காதுல புகை வர்ற சத்தம்)

    ReplyDelete
  28. வாங்க தமிழ்மாங்கனி :)

    //ஹாஹா... மசாலா வாழ்க!!//

    வாழட்டும் வாழட்டும் :P

    ReplyDelete
  29. //அடப்பாவி.. அடப்பாவி... நீ ரொம்ப நல்லவந்தான்... வாய்ல எதெதோ வருது.. வேணாம்.. பொய்ஹு இடம்..பொழச்சி போ... நமீதா அக்காவா?... :))//

    சஞ்சய் அங்கிள்,வற்றப்பவே வாயில வசவோட வர்ரீகளே :(
    நமீதா அக்கா என் பக்கத்துல நின்னா அக்கா மாதிரிதான் இருப்பாங்க..
    உங்க பக்கத்துல நின்னாத்தான் உங்க பேத்தி மாதிரி இருப்பாங்க அங்கிள் :P

    //... உனக்கு இருக்குடி அடுத்த ஆப்பு தல KRS கிட்ட இருந்து...//

    கேயாரெஸ் அங்கிள்..நல்லவரு..வல்லவரு...நாலும் தெரிஞ்சவரு..அவரு அப்படியெல்லாம் இந்தப் பச்ச மண்ணுக்குப் போய் ஆப்பு வைக்கமாட்டார் அங்கிள் :P

    ReplyDelete
  30. // SanJai said...
    அண்ணா.. ரிஷான் அண்ணா இந்த மசாலா விளம்பரத்துக்கு எவ்வளவு காசு வாங்கினிங்க? :)//

    இப்படியெல்லாம் ஒரு இயக்குனரப் பார்த்துப் பொதுவாக் கேட்கப்படாது.
    என் இனிய தமிழ்மக்களுக்கு இலவசமாக் காட்டுறேனோல்லியோ..பார்த்துட்டுப் போனோமா..வாங்கினோமா...வீட்டுக்காரம்மிணிக்குச் சமைச்சுப் போட்டோமான்னு இருக்கணும்.. :P

    ReplyDelete
  31. // SanJai said...
    அண்ணா உங்கள "மின்ஸ்மீட்" பண்ணிடுவேன்...:)//

    முதல்ல இந்த மசாலாவையும்,மீட்டையும் போட்டுச் சமைச்சு என்னை மீட் பண்ற வழியைப் பாருங்கோ :P

    ReplyDelete
  32. வாங்க மௌலிண்ணா:)

    //அடப் பாவி மக்கா... என்னையப் போயி சீனாய்யாவோட சேர்த்ததுக்கு கடும் கண்டனங்கள்....சீனா ஐயா எம்புட்டு நல்லவரு, வல்லவரு...நான் அவரு முன்னாடி சுள்ளான்...ஹிஹி//

    உண்மையைச் சொல்லுங்கோ..எம்புட்டுக் குடுத்தாக இப்படிப் பேச?

    ReplyDelete
  33. வாங்க கார்த்திக் :)

    //வால்பையன் பேசுறது கொஞ்சம் புரியர மாதிரி இருக்கு.
    இங்க அவரு நான் யாருக்கு என்ன செஞ்சேன்னு தேம்பி தேம்பி அலுவுராறு.//

    ஹையோ..ரொம்ப அழவேண்டாம்னு சொல்லுங்க..
    அப்புறம் வாலுப்பையன் நூலுப்பையன் ஆகிடுவார் :P

    ReplyDelete
  34. //மஹாராஜா said...
    இப்போ எல்லாம் ரிஷானு பெரியப்பு மெயில் ல வராத எடுத்து பதிவு போட ஆரமிசிட்டார். குசும்பு வேற ரொம்ப அதிகமாகிகிட்டே போகுது..
    லொள்ளு வேற ஏறிகிட்டே போகுது...
    நையாண்டி , நாதரிதனம் , இது மாதிரி நிறைய நிறய திறமைகள் கொண்டிருக்கிற எனது பெரியப்பு ரிஷானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

    இதையெல்லாம் மக்கள் உங்கக் கிட்ட கேட்டாகளா? கேட்டாகளா? கேட்டாகளா?
    இப்படியெல்லாம் உள்குத்தோட பேசினீகன்னா உங்க நாட்டு மேலயும் படையெடுக்க வேண்டிவரும்..ஆமா..

    ReplyDelete
  35. // தமிழ் பிரியன் said...
    அண்ணே! ரிஷான் அண்ணே... பிட்டு படம் பார்க்க வந்தவங்களை ஏமாத்திப்புட்டீங்களேண்ணே!.... //

    இதப் பாருங்க..ஆயிரந்தான் இருந்தாலும் ஆயிரத்தொரு பதிவரா நிக்குற நான் உங்க எல்லோரையும் விடச் சின்னப்பையனுங்க..தம்பின்னு உங்க பொக்கைவாய் நெறையக் கூப்பிட்டா எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கும்ல.
    ஆமா..நீங்க என்ன எதிர்பார்த்து வந்தீகண்ணே..?

    ReplyDelete
  36. //மங்களூர் சிவா said...
    /
    'அந்தாளு தான் எத்தியோப்பியால பிட்டுப்படம் போட்டாக் கூடச் சொந்தச் செலவுல போய் எட்டிப் பார்க்குறவரு..அவருக்கிட்டயே போய்க் கேட்டுக்கோ'ன்னாரு
    /

    கொக்க மக்கா யாருப்பா அது சொன்னது!?!?//

    அதான் ஊர் சொல்லுது,உலகம் சொல்லுது..ஏன் நானே சொல்லுறேனே ? :P

    ReplyDelete
  37. /
    எம்.ரிஷான் ஷெரீப் said...
    //மங்களூர் சிவா said...
    /
    'அந்தாளு தான் எத்தியோப்பியால பிட்டுப்படம் போட்டாக் கூடச் சொந்தச் செலவுல போய் எட்டிப் பார்க்குறவரு..அவருக்கிட்டயே போய்க் கேட்டுக்கோ'ன்னாரு
    /

    கொக்க மக்கா யாருப்பா அது சொன்னது!?!?//

    அதான் ஊர் சொல்லுது,உலகம் சொல்லுது..ஏன் நானே சொல்லுறேனே ? :P
    /


    ஊரும் சொல்லலை உலகமும் சொல்லலை நீ ஒண்டிதான்யா சொல்லற

    :)))))

    ReplyDelete
  38. //ஊரும் சொல்லலை உலகமும் சொல்லலை நீ ஒண்டிதான்யா சொல்லற

    :)))))//

    நான் கூட சொல்றேன்.. அடுத்து நம்ம பாரதி கூட வந்து சொல்வார்...

    ... ஆனாலும் அதுக்காக பெரியவர் ரிஷான் நல்லவர்னு சொல்லிட முடியாது...

    ReplyDelete
  39. //ஆனாலும் அதுக்காக பெரியவர் ரிஷான் நல்லவர்னு சொல்லிட முடியாது... //

    ரொம்ப நல்லவரென்று சொல்லப் போறீங்களா சஞ்சய்?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)