Monday, June 9, 2008

வயசுப்பொண்ணுங்களுக்கு மட்டும்..பசங்க தப்பித்தவறிக் கூட எட்டிப்பார்க்காதீங்க..!

இன்னிக்கு இந்தப் பதிவு வயசுப்பொண்ணுங்களுக்கு மட்டும்தான்..பசங்க தப்பித்தவறிக் கூட இன்னிக்கு இங்க வந்துடாதீங்க [அப்புறம் நான் தொலைஞ்சேன் :( ]

இந்தப் பதிவு எதைப் பத்தின்னா பொண்ணுங்க நீங்க உங்க பாட்டுல ரோட்ல போகும் போது பின்னாலயே சுத்திட்டிருப்பாங்கள்ல..
அப்புறம் காலேஜ்ல,கடைத்தெருவுல,கல்யாண வீட்டுல ஏன் கருமாதி வீட்டுல கூட லுக்கு விட்டுட்டுத் திரிவாங்கள்ல.

நீங்க த்ரிஷா ரேஞ்சுக்கு சூப்பரா இல்லாட்டியும்
நமீதா மாதிரி நச்சுன்னு இல்லாட்டியும் ஏதோ சுவலட்சுமிவிஜயலட்சுமி சரண்யா
மாதிரி சுமாரா இருந்தாக் கூட

ஐஸ்வர்யா ராய்,சுஷ்மிதா சென் ரேஞ்சுக்கு உங்களைப் புகழ்ந்துட்டுத் திரிவாங்கள்ல..

அந்த மாதிரிப் பசங்கள சும்மா ஏதோ ஒரு விஷ ஜந்தைப் பார்க்குற மாதிரியோ,அற்பப்பிராணியைப் பார்க்குற மாதிரியோ நீங்க பார்த்துட்டாக் கூடப் போதும்.

அவனுங்க எல்லாம் ஏதோ அம்பானி வீட்டுக்கு மருமகனாகிட்ட மாதிரியும்,

அசினோட அடுத்த படத்துல ஹீரோ ஆகிட்ட மாதிரியும் கனாக் கண்டுட்டு,
தலகாணியை பிராண்டிப் போர்வையை உதறி 'நீ பார்த்தாய்,நான் உதிர்ந்தேன்' ரேன்ச்ஜுக்குக் கவுஜ,கவுஜயா ஒரு சுத்தமான தாள்ல எழுதித்தள்ளி கண்ல ஒத்தி உங்ககிட்ட கொண்டாந்து நீட்டுவாங்க.. நீங்களும் 'அடப்பாவமே.இவனுக்கு என்ன கஷ்டமோ?'ன்னு பரிதாபப்பட்டோ இல்லேன்னா 'இன்னிக்கு ஒரு ரோசாப்பூச் செலவு மிச்சம்'னு கஞ்சப்பட்டோ அந்த லெட்டர வாங்கிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்பால இருக்குறது மேட்டர்...நீங்க ஏமாந்திட்டீங்களா? அவன் நல்லவனான்னெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறது...?

இங்கிட்டு வாங்க..நான் சொல்லித்தர்றேன்..


ஐயோ..இதுக்காகக் கால்லயெல்லாம் விழாதீங்க..ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் தெரியும்..அதான் அதோட ஆழத்தை உங்களுக்குச் சொல்லி அவனுங்களுக்கு ஆப்பு வைக்கிறேன்.. :)

நாளையிலிருந்து இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு பாடத்த ஆரம்பிக்கப் போறேன்..

புள்ளைக பூராப்பேரும் நேர காலத்தோட வந்துடுங்க..!











60 comments:

  1. இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))

    ReplyDelete
  2. தலைப்பு வச்சு கால பண்ணிட்டியே தல

    ReplyDelete
  3. //ambi said...

    இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))//

    அதைநான் வழிமொழிகிறேன்.
    ஈரோடு கிளை

    ReplyDelete
  4. நாளையிலிருந்து இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு பாடத்த ஆரம்பிக்கப் போறேன்..
    புள்ளைக பூராப்பேரும் நேர காலத்தோட வந்துடுங்க//unakku nearam seriyillainnu ninaikken.naanum en purushanoda waren...mavaney wettu onnu thundu renduthaan

    ReplyDelete
  5. போச்! போலீஸ் பாதுகாப்போட இருக்கவும்!

    (ஆமா, அஸின் எங்கேப்பா?)

    ReplyDelete
  6. //பசங்க தப்பித்தவறிக் கூட எட்டிப் பார்க்காதீங்க//

    அதான் எட்டிப் பார்க்காம, எட்டாம பார்த்து வந்தேன் ரிஷானு!

    //ஐயோ..இதுக்காகக் கால்லயெல்லாம் விழாதீங்க..//

    கையில பிரேஸ்லெட் மாதிரி காலில் கூட மாடர்னா ஒரு பிரேஸ்லெட் போட்டிருக்காயமே ரிஷான்! அதான்! வேற ஒன்னுமில்ல-ன்னு சில அம்மணிகள் என் காதைக் கடிச்சிதுங்க! :-)

    //ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் தெரியும்..//

    டாவடிக்கும் போது போட்டியா வர நண்பனுக்கு எப்படி எப்படி ஆப்பு வைக்கலாமா-ன்னா?

    //அதான் அதோட ஆழத்தை உங்களுக்குச் சொல்லி அவனுங்களுக்கு ஆப்பு வைக்கிறேன்.. :)//

    உனக்கு நேரஞ் சரியில்லடீ ரிஷானு! சேம் சைட் கோல்-ஆஆ?
    கும்முற கும்முல என்ன ஆவுற பாரு!

    ReplyDelete
  7. //
    நமீதா
    சுவலட்சுமி
    விஜயலட்சுமி
    சரண்யா
    ஐஸ்வர்யா ராய்
    சுஷ்மிதா சென்
    //

    பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு டோய்!

    ரிஷான் அங்க்கிள் அவரு வயசுல பாத்த நாயகிகளைச் சொல்றாருப்பு! இதுக்குப் போயி கோச்சிக்கலாமா அம்பி?

    நம்ம பாவனா, நம்ம அசின், நம்ம நயன்ஸ், நம்ம மீரா ஜாஸ்மின், நம்ம இலியானா - இவிங்கள எல்லாம் நாமத் தான் சொல்லணும்!

    பாவம் ரிஷான் அங்க்கிள்! அவர் குஷ்பு, சுவலட்சுமி, ஐஸ், சுஷ், விட்டா பானுப்ரியா, சங்கவி-ன்னு எல்லாம் கூடச் சொல்வாரு! :-))))

    ReplyDelete
  8. ரிஷானு
    அது என்னாப்பா மொதல் பின்னூட்டத்துல யாருக்குப் பொட்டு வச்சிருக்க? :-)

    ReplyDelete
  9. நான் இந்த பக்கம் வரவேயில்லை....
    :-))))

    ReplyDelete
  10. நமீதாவை விட மாட்டிங்க போல போற போக்கப்பாத்தா கட்டார்ல மன்றம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பிங்க போல...:))

    ReplyDelete
  11. பாவனாவை சேர்க்கலங்கிறதில எனக்கும் ஆட்சேபனை இருக்கு...

    ReplyDelete
  12. நமீதாக்கு பதிலா நயன்தாராவை போட்டிருக்கலாம்...

    ReplyDelete
  13. எல்லாம் சரி.... மலையாள கவிதை சரண்யா'வே எதுக்குங்க சுமார் ஃபிகருன்னு சொல்லியிருக்கீங்க????? :@

    ReplyDelete
  14. ஆனா aishwarya rai,sushmita sen மாறி இருந்தாலும் கூட சுமாரான பொண்ணுன்னு சொல்றவ்கள என்ன பண்லாம் பா.....?????

    ReplyDelete
  15. பாவனா எங்கே எங்கே எங்கே ? மாபெரும் கண்டனப் பேரணி நடக்கவிருக்கிறது

    Sydney Branch

    ReplyDelete
  16. //கானா பிரபா said...

    பாவனா எங்கே எங்கே எங்கே ? மாபெரும் கண்டனப் பேரணி நடக்கவிருக்கிறது//

    இது எப்ப்போ தொடக்கம்??

    ReplyDelete
  17. /
    கனாக் கண்டுட்டு,
    தலகாணியை பிராண்டிப் போர்வையை உதறி 'நீ பார்த்தாய்,நான் உதிர்ந்தேன்' ரேன்ச்ஜுக்குக் கவுஜ,கவுஜயா ஒரு சுத்தமான தாள்ல எழுதித்தள்ளி
    /

    இப்படி எழுதியதுக்கு தலையனைகவி தமிழன் சார்பாக கடும்ம்ம்ம்ம்ம்ம் கண்டனங்கள்
    :((

    ReplyDelete
  18. /
    கனாக் கண்டுட்டு,
    தலகாணியை பிராண்டிப் போர்வையை உதறி 'நீ பார்த்தாய்,நான் உதிர்ந்தேன்' ரேன்ச்ஜுக்குக் கவுஜ,கவுஜயா ஒரு சுத்தமான தாள்ல எழுதித்தள்ளி
    /

    இப்படி எழுதியதுக்கு தலையனைகவி தமிழன் சார்பாக கடும்ம்ம்ம்ம்ம்ம் கண்டனங்கள்
    :((

    ReplyDelete
  19. /
    கனாக் கண்டுட்டு,
    தலகாணியை பிராண்டிப் போர்வையை உதறி 'நீ பார்த்தாய்,நான் உதிர்ந்தேன்' ரேன்ச்ஜுக்குக் கவுஜ,கவுஜயா ஒரு சுத்தமான தாள்ல எழுதித்தள்ளி
    /

    இப்படி எழுதியதுக்கு தலையனைகவி தமிழன் சார்பாக கடும்ம்ம்ம்ம்ம்ம் கண்டனங்கள்
    :((

    ReplyDelete
  20. /
    ambi said...
    இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))
    /
    /
    புரட்சித் தமிழன் said...
    i agree with ambi
    /

    நயந்தாரா, பாவனா படங்களை போடாததற்கு வருத்தம் தெரிவிக்கு வேளையில்

    திரிசாவை சீக்கு கோழி என சொன்ன 'அனானி அம்பி'க்கும் ரிப்பீட்டிய புரட்டாசி தமிழனுக்கும் கடும் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  21. /
    ambi said...
    இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))
    /
    /
    புரட்சித் தமிழன் said...
    i agree with ambi
    /

    நயந்தாரா, பாவனா படங்களை போடாததற்கு வருத்தம் தெரிவிக்கு வேளையில்

    திரிசாவை சீக்கு கோழி என சொன்ன 'அனானி அம்பி'க்கும் ரிப்பீட்டிய புரட்டாசி தமிழனுக்கும் கடும் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்

    ஏன்னா வரலாறு ரொம்ப முக்கியம்!!

    ReplyDelete
  22. ஆஹா.. ஒரு planவோட தான் திரியிராங்கப்பா!! அவ்வ்வ்..

    ReplyDelete
  23. நயந்தாரா படம் போடாததற்கு கத்தாரில் பெரும் கலவரம் நடக்க இருக்கிறது

    மங்களூர் கிளை

    ReplyDelete
  24. ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தெரியும் போட்டுகுடுத்து உசார் பண்ணிடலாம்னு பாக்கிற 'எட்டப்பன்' ரிசானுக்கு கடும் கண்டனங்கள்
    :))))))))

    ReplyDelete
  25. இதோட இன்னைக்கு ஏகப்பட்ட கண்டன அறிக்கை விட்டாச்சு கமெண்டெல்லாம் மொதல்ல பப்ளிஷ் ஆகட்டும் அப்புறம் வரேன். இப்பத்தைக்கு அப்பீட்ட்டு

    :)))

    ReplyDelete
  26. மக்கா, என்னலே உனக்கு புடிச்ச நமீதாவ மட்டும் முதல்ல போட்டுட்டு
    பாவனா, நயந்தாரா, மீரா வெல்லாம் அம்போன்னு வீட்டுட்டவே?

    பயலுவ என்னறமா துடிச்சுப்போறானுவ பாத்தியாடே?

    //நாளையிலிருந்து இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு பாடத்த ஆரம்பிக்கப் போறேன்..
    புள்ளைக பூராப்பேரும் நேர காலத்தோட வந்துடுங்க..!
    //

    நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருடே!!! நல்லா இரு!!

    ReplyDelete
  27. //ambi said...
    இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))//

    மங்களூர் சிவா,இங்க அடுத்தாத்து அம்பியொருத்தர் உங்க அத்தைப் பொண்ணு சீமைக் கோழி த்ரிஷாவை சீக்குக் கோழின்னு சொல்லுறாரோல்லியோ? வந்து என்னன்னு கவனிங்க.. :P

    ReplyDelete
  28. // புரட்சித் தமிழன் said...
    i agree with ambi//

    ஓஹ்..உங்களுக்கும் நயன்தாராவும் பாவனாவும் வேணும்கிறீங்களா? அடுத்த பதிவுல தந்துட்டாப்போச்சு:)

    ReplyDelete
  29. // jackiesekar said...
    தலைப்பு வச்சு கால பண்ணிட்டியே தல//

    அதுக்கென்ன வாங்க சேகர்.. :)
    கையில கேமராவோட வந்திருக்கீங்க..
    என் கிளாஸ் பொண்ணுங்களை போட்டோ எடுத்துடக் கூடாது..ஆமா..சொல்லிட்டேன்..

    ReplyDelete
  30. வாங்க கார்த்திக்.. :)

    //இந்த சூப்பர் லிஸ்ட்டில் நயன் தாரா, பாவனாவை விட்டுவிட்டு சீக்கு கோழி த்ரிஷாவை வைத்து இருட்டடிப்பு செய்ததை நான் பெங்களூர் கிளையின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :))//

    அதைநான் வழிமொழிகிறேன்.
    ஈரோடு கிளை //

    அட நீங்களுமா?
    ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போலிருக்கு..
    அடுத்த பதிவுல உங்களுக்காகப் போடுறேன் :)

    ReplyDelete
  31. //wayasupponnoda amma said...
    நாளையிலிருந்து இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு பாடத்த ஆரம்பிக்கப் போறேன்..
    புள்ளைக பூராப்பேரும் நேர காலத்தோட வந்துடுங்க//unakku nearam seriyillainnu ninaikken.naanum en purushanoda waren...mavaney wettu onnu thundu renduthaan //

    ம்ஹ்ம்..வாங்க வயசுப்பொண்ணோட அம்மா.. :(
    (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

    இந்தக் கிளாசுக்கு உங்க மகளை மட்டும் அனுப்பிவைங்க..பீஸ் கூட வேண்டாம்.

    உங்கள மாதிரி வயித்துல ஒரு ஸ்டவ் அடுப்பையே சுமந்துட்டு திரியிறவங்களுக்கு இன்னொரு பதிவு எழுதுறேன்..அங்கிட்டு வாங்க..என்ன?

    ReplyDelete
  32. வாங்க கவிநயா :)

    //போச்! போலீஸ் பாதுகாப்போட இருக்கவும்!//

    நானும் அந்த ஐடியாலதான் இருக்கேன்..பொண்ணுங்களைக் கூப்பிட்டா பூராப் பசங்களும் இங்கிட்டே சுத்திட்டிருக்காங்க..

    (ஆமா, அஸின் எங்கேப்பா?)

    அவங்க பாலிவுட்டுக்குப் போயிட்டதால மறந்துட்டேன்..அடுத்த பதிவுல போடுறேன் :)

    ReplyDelete
  33. வந்துட்டீங்களா கேயாரெஸ்?

    //அதான் எட்டிப் பார்க்காம, எட்டாம பார்த்து வந்தேன் ரிஷானு!//

    தெரியுமே...பொண்ணுங்க எல்லாம் எங்க இருப்பாங்களோ...அங்கே அங்கிளும் வந்துடுவாருன்னு தெரியுமே :P

    //கையில பிரேஸ்லெட் மாதிரி காலில் கூட மாடர்னா ஒரு பிரேஸ்லெட் போட்டிருக்காயமே ரிஷான்! அதான்! வேற ஒன்னுமில்ல-ன்னு சில அம்மணிகள் என் காதைக் கடிச்சிதுங்க! :-) //

    அதுக்குப் பேருதான் கால்கட்டுப்பா..அது சரி..நான் கால்கட்டுப் போட்டா அவங்க எதுக்காக உங்க காதைக் கடிக்கணும்? ஒரு வேளை மைக் டைசன் பேமிலியா இருக்குமோ ? :)

    //உனக்கு நேரஞ் சரியில்லடீ ரிஷானு! சேம் சைட் கோல்-ஆஆ?
    கும்முற கும்முல என்ன ஆவுற பாரு!//

    உங்களால ஒண்ணும் பண்ணமுடியாது..இங்கிட்டு வந்தா ஈவ்டீஸிங்னு சொல்லி உள்ளே தள்ளிடுவம்ல :P

    ReplyDelete
  34. நேத்தென்னமோ தொட்டிலோட தூக்குறோம் அது இதுன்னு சொல்லிகிட்டு திரிஞ்ச ரிசானு !!

    நல்லா ரோசிச்சிக்க தொட்டிலோட தூக்க முடியற ஆளா நமீதான்னு

    ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடப்போவுது
    :))))))

    ReplyDelete
  35. //
    நமீதா
    சுவலட்சுமி
    விஜயலட்சுமி
    சரண்யா
    ஐஸ்வர்யா ராய்
    சுஷ்மிதா சென்
    //

    கேயாரெஸ் அங்கிள்..அழகி த்ரிஷாவை விட்டுட்டீங்களே..இதிலிருந்தே அவரு வயசு புரியலையா மக்களே?

    //நம்ம பாவனா, நம்ம அசின், நம்ம நயன்ஸ், நம்ம மீரா ஜாஸ்மின், நம்ம இலியானா - இவிங்கள எல்லாம் நாமத் தான் சொல்லணும்!//

    அது என்ன நம்ம?
    படங்களைப் பார்த்தோமா..
    கதையை ரசிச்சோமான்னு மட்டும் இருக்கணும்..இப்படிச் சின்னப் பொண்ணுகளையெல்லாம் உங்களோடதுன்னு சொல்லிட்டுத் திரிஞ்சீங்கன்னா என்னை மாதிரி வயசுப்பசங்க என்ன ஆவாங்க?

    //பாவம் ரிஷான் அங்க்கிள்! அவர் குஷ்பு, சுவலட்சுமி, ஐஸ், சுஷ், விட்டா பானுப்ரியா, சங்கவி-ன்னு எல்லாம் கூடச் சொல்வாரு! :-))))//

    நான் அங்கிளா? சரியாப்போச்சு..
    நல்லவேளை தமிழ்ல சொல்லல நீங்க.. :)
    அந்தளவுக்குச் சந்தோஷம்..

    அதுசரி கேயாரெஸ் அங்கிள்..மீனாப்பொண்ணுக்கு ரொம்ப காலமா கல்யாணத்துக்கு மாப்ள தேடிட்டு இருக்காங்க..நீங்க ஏன் முயற்சிக்கக்கூடாதுப்பா? :P

    ReplyDelete
  36. //ரிஷானு
    அது என்னாப்பா மொதல் பின்னூட்டத்துல யாருக்குப் பொட்டு வச்சிருக்க? :-)//

    பின்னூட்டத்துல வைக்காம கிளாஸுக்கு வர்ற பொண்ணுங்க நெத்தியிலா வைக்கமுடியும்..?நான் வாத்தியாருப்பா :)

    ReplyDelete
  37. // பிரேம்ஜி said...
    நான் இந்த பக்கம் வரவேயில்லை....
    :-))))//

    வந்து பார்த்து நீங்க விட்ட ஜொள்ளுல இப்படி நடந்ததையே மறப்பீங்கன்னு கனவுல கூட நினைக்கல பிரேம்ஜி :P

    ReplyDelete
  38. /
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ரிஷானு
    அது என்னாப்பா மொதல் பின்னூட்டத்துல யாருக்குப் பொட்டு வச்சிருக்க? :-)
    /
    rippeateyyyyyyy

    ReplyDelete
  39. வாங்க தமிழன்,

    //நமீதாவை விட மாட்டிங்க போல போற போக்கப்பாத்தா கட்டார்ல மன்றம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பிங்க போல...:))//

    எப்பவோ ஆரம்பிச்சாச்சு தமிழன்..
    நம்ம ஆயில்யனும்,ரசிகனும் தான் பொறுப்பாப் பார்த்துக்குறாங்க..
    நான் கொள்கைப்பரப்புச் செயலாளர்..அம்புட்டுதேன் :P

    ReplyDelete
  40. // இராம்/Raam said...
    எல்லாம் சரி.... மலையாள கவிதை சரண்யா'வே எதுக்குங்க சுமார் ஃபிகருன்னு சொல்லியிருக்கீங்க????? :@ //

    அதாவது இராம்...அதுங்க நாலுபேரும் ஹோம்லி பிகருங்க இல்லையா? அதான்..அப்பதானே நமக்கு சேப்டி..?
    என்ன நான் சொல்றது ?

    ReplyDelete
  41. வாங்க சத்யா..

    //ஆனா aishwarya rai,sushmita sen மாறி இருந்தாலும் கூட சுமாரான பொண்ணுன்னு சொல்றவ்கள என்ன பண்லாம் பா.....????? //

    ஓஹ்..நீங்க அப்படி வாறீங்களா?
    அப்போ எங்கேயோ இருக்கவேண்டிய ஆளுதான் நீங்க..எப்படி இன்னும் நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கண்ணுல சிக்காம இருக்கீங்க? :P

    வாங்க..வந்து முன்வரிசையில உட்காருங்க :)

    ReplyDelete
  42. // கானா பிரபா said...
    பாவனா எங்கே எங்கே எங்கே ? மாபெரும் கண்டனப் பேரணி நடக்கவிருக்கிறது //

    ஐயோ..வேண்டாம் கானாபிரபா..
    அடுத்த பதிவுல உங்களுக்காகவே போட்டுடறேன்..இந்த மேட்டர் பாவனாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோ? :P

    ReplyDelete
  43. /// Thooya said...
    //கானா பிரபா said...

    பாவனா எங்கே எங்கே எங்கே ? மாபெரும் கண்டனப் பேரணி நடக்கவிருக்கிறது//

    இது எப்ப்போ தொடக்கம்?? ///

    இது தெரியாதா தூயா?
    அவருக்குக் கல்யாணம் ஆன நாள்லிருந்துதான் :)

    ReplyDelete
  44. //இப்படி எழுதியதுக்கு தலையனைகவி தமிழன் சார்பாக கடும்ம்ம்ம்ம்ம்ம் கண்டனங்கள்
    :(( //

    அப்படியா தமிழன்?
    ச்ச்ச்ச்சொல்லவேயில்ல ? :)

    ReplyDelete
  45. //நயந்தாரா, பாவனா படங்களை போடாததற்கு வருத்தம் தெரிவிக்கு வேளையில்

    திரிசாவை சீக்கு கோழி என சொன்ன 'அனானி அம்பி'க்கும் ரிப்பீட்டிய புரட்டாசி தமிழனுக்கும் கடும் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்//

    அப்படி வாங்க பெண்கள் சமூகக் காவலர் சிவா :)
    வெறுமனே கண்டனம் மட்டும் போதுமா? உள்ளே தள்ளி,முட்டில நாலு தட்டுத் தட்டிடுவோமா?

    ReplyDelete
  46. //ஏன்னா வரலாறு ரொம்ப முக்கியம்!!//

    ஏங்க சிவா..? அதுலதான் அரியர்ஸ் வச்சிருக்கீங்களா? :P

    ReplyDelete
  47. // Thamizhmaangani said...
    ஆஹா.. ஒரு planவோட தான் திரியிராங்கப்பா!! அவ்வ்வ்..//

    அடுத்த பதிவுக்கும் வாங்க தமிழ்மாங்கனி :)
    ப்லேன் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பசங்க எல்லாம் சேர்ந்து அழலாம்..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  48. //நயந்தாரா படம் போடாததற்கு கத்தாரில் பெரும் கலவரம் நடக்க இருக்கிறது

    மங்களூர் கிளை //

    வேண்டாம் வேண்டாம்..ஏற்கெனவே இங்க சூடு ஜாஸ்தி..அடுத்த பதிவுலயே போட்டுடறேன்..கூல்...

    ReplyDelete
  49. //நயந்தாரா படம் போடாததற்கு கத்தாரில் பெரும் கலவரம் நடக்க இருக்கிறது

    மங்களூர் கிளை //

    வேண்டாம் வேண்டாம்..ஏற்கெனவே இங்க சூடு ஜாஸ்தி..அடுத்த பதிவுலயே போட்டுடறேன்..கூல்...

    ReplyDelete
  50. //ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தெரியும் போட்டுகுடுத்து உசார் பண்ணிடலாம்னு பாக்கிற 'எட்டப்பன்' ரிசானுக்கு கடும் கண்டனங்கள்
    :)))))))) //

    அடுத்த பதிவுலயும் இருக்குங்க உங்களுக்கு ஆப்பு :P

    ReplyDelete
  51. வாங்க கோகுலன் அண்ணாச்சி :)

    //மக்கா, என்னலே உனக்கு புடிச்ச நமீதாவ மட்டும் முதல்ல போட்டுட்டு
    பாவனா, நயந்தாரா, மீரா வெல்லாம் அம்போன்னு வீட்டுட்டவே? //

    அவுக போட்டோவை சீக்கிரமா போட்டுடறேன் அண்ணாச்சி..

    //பயலுவ என்னறமா துடிச்சுப்போறானுவ பாத்தியாடே?//

    நெசந்தானுங்க எசமான்..

    //நாளையிலிருந்து இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு பாடத்த ஆரம்பிக்கப் போறேன்..
    புள்ளைக பூராப்பேரும் நேர காலத்தோட வந்துடுங்க..!
    //

    //நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருடே!!! நல்லா இரு!! //

    நன்றிங்க அண்ணாச்சி..வெறும் வாழ்த்துமட்டும் தானா? வந்த கையோட சங்கத்து சிங்கத்துக்கு ஏதாவது அன்பளிப்பாக் கொடுத்துட்டுப் போங்க :P

    ReplyDelete
  52. //நல்லா ரோசிச்சிக்க தொட்டிலோட தூக்க முடியற ஆளா நமீதான்னு

    ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடப்போவுது
    :))))))//

    அட என்னங்க சிவா நீங்க..அவங்களுக்கும் புடவைக்கும் தான் சம்பந்தமேயில்லையே .அதுல தொட்டிலாவது ஒண்ணாவது...நீங்க வேற... :P

    ReplyDelete
  53. //ஐயோ..வேண்டாம் கானாபிரபா..
    அடுத்த பதிவுல உங்களுக்காகவே போட்டுடறேன்..இந்த மேட்டர் பாவனாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோ? :P//

    அது.... பாவனா சார்பா குரல் கொடுத்த எல்லாருக்கும் நன்றி...அதுல கொஞ்சம் ஓஓவரா உனணர்ச்சிவசப்பட்ட ' கானாப்ரபா ' வுக்கு சிறப்பு நன்றிகள்..

    ஆமா அடுத்த பதிவுலயாவது தலைவி படம் வருமா..?

    பாவனா பண்பாட்டுக்கழகம்,
    வட இந்திய கிளை....

    ReplyDelete
  54. அம்பி,புரட்சித்தமிழன்,ஈரோடு கார்த்திக்,கேயாரெஸ்,தமிழன்,கானா பிரபா,மங்களூர் சிவா,கோகுலன் ஆகியோரே...

    வாங்க..வந்து பார்த்து ஜொள்ளுங்க
    http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_10.html

    ReplyDelete
  55. வந்தாச்சு தமிழ்ப்பறவை :)

    அப்படியே பறந்து இங்கிட்டு வாங்க :P
    http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_10.html

    ReplyDelete
  56. // தலகாணியை பிராண்டிப் போர்வையை உதறி 'நீ பார்த்தாய்,நான் உதிர்ந்தேன்' ரேன்ச்ஜுக்குக் கவுஜ,கவுஜயா ஒரு சுத்தமான தாள்ல //

    இங்க பாருங்க ரிஷான்...
    பேச்சு பேச்சா இருக்கணும்...
    இப்பிடி எல்லாம் பண்ணக் கூடாது....

    அழுதுருவேன்...ஆமா ....

    ReplyDelete
  57. //இங்க பாருங்க ரிஷான்...
    பேச்சு பேச்சா இருக்கணும்...
    இப்பிடி எல்லாம் பண்ணக் கூடாது....

    அழுதுருவேன்...ஆமா ....//

    இதுக்கெல்லாம் அழக்கூடாது ரீகன் அங்கிள்..சும்மா ஜே.ஜேன்னு இருக்கணும் :P

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)