Tuesday, January 12, 2010

டேய்! நீ இன்னும் திருந்தலையா!..

எங்க வீட்ல மொத்த மூணு பசங்க, எனக்கு பின்னாடி ரெண்டு தம்பிகள் இருக்க்றாங்க, ஆனா அது பேருக்கு தான், ஊருகுள்ள என்னை தான் தம்பின்னு சொல்லுவாங்க, அம்புட்டு அடம் பிடிப்பேன் சின்ன வயசிலிருந்து, எங்க மூணு பேர்த்துக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை வந்துகிட்டே இருக்கும்!, ஒரு நாள் எங்கப்பா கூப்பிட்டார், செமத்தியா விழுகப்போகுதுன்னு பயந்துகிட்டே போனோம்!, சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார், அவனும் எடுத்துட்டு வந்தான், நடுதம்பியை கூப்பிட்டு வெளக்கமாத்தை எடுத்துட்டு வரச்சொன்னார், அவன் அடிவிழப்போகுதுன்னு தயங்கிகிட்டே நின்னான், அடிக்க மாட்டேன்னு சொல்லி எடுத்துட்டு வரசொன்னார், முதலில் குச்சியை ஒடித்தார், ஒடிந்தது, பின் வெளக்கமாத்தை ஒடித்தார், ஒடியவில்லை, இதிலிருந்து என்ன தெரியுதுன்னு என்னை கேட்டார், ”விளக்கமாறு மாதிரி இருக்கனும்”னு சொன்னேன்! பின் அந்த விளக்கமாறு உண்மையிலேயே உடைந்தது!

***

நான் அப்போ ஒன்பதாவது படித்து கொண்டிருந்தேன்(இன்னைக்கு வரைக்கும் அம்புட்டு தாண்டா படிச்சிருக்கே)ஈரோடு செங்குந்தர் பள்ளியில், எட்டுவரை டவுசர், அதற்கு மேல் பேண்ட், பேண்ட் போட்டவுடன் காலேஜ் செல்லும் கற்பனை வந்து விடும்! பெரிய சைஸ் புத்தக பைகளை தூக்கி செல்வதை அவமானமாக கருதுவோம், ஒரு பெரிய ரிக்கார்ட் நோட்டை கையில் சுற்றி கொண்டே செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று , மேலும் நானும் , சில நண்பர்களும் கடைசி பெஞ்சில் அமர்ந்து செவுற்று சுண்ணாம்பை தேய்த்து எடுக்கும் ரகம், அதனால் பெரிதாக ஆசிரியர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்!, ஆனால் அன்றைக்கு மட்டும் விதிவிலக்கா அமைந்தது, ஓவிய ஆசிரியரை வேறு நண்பர்கள் புத்தகம் வைத்து ஏமாற்ற முடியாது, அன்று அவரைய வேண்டியதை அன்றே அவரைய வேண்டும், நானும் இன்னும் சில நண்பர்களும் ஓவிய புத்தகம் எடுத்து செல்லவில்லை! ஆசிரியர் அனைவரையும் முட்டி போடச்சொன்னார்!

என்னுடன் முட்டி போட்டிருந்தவர்கள், கடா மாடு சைஸில் இருந்ததால் அடிக்க தயங்கி அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார், நீங்கெளெல்லாம் மாடு மேய்க்க தான் லாயக்கு என்று தான் ஆரம்பித்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படியே பன்றி வளர்க்க தாவினார், பன்னி ஆறு மாசத்தில் பத்து குட்டி போடும், அது ரெண்டு வருசத்தில் ஒவ்வொன்னும் பத்து குட்டி போடும், ஆறே வருசத்தில் நீ லட்சாதிபதி ஆயிறுவே, படிக்கிறக்கு பதிலா பேசாம நீங்கெல்லாம் பன்னி மேய்க்கப்போங்கன்னு கத்தினார், கடைசியா என்னை பார்த்து “என்ன புரியுதா” என்றார்!, நான் தலையை ஆட்டினேன்! ”என்ன புரியுது” என்றார்!, ”பன்னி மேய்க்குறதுல உங்களுக்கு நிறைய அனுபவம்”னு புரியுதுன்னு சொன்னேன்!, அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன!?

****

விடுமுறை குடிகாரனான நான், சனி, ஞாயிறு அளவில்லாமல் குடிப்பேன் என்று நண்பர்களுக்கு தெரியும், அந்த நாட்களில் வண்டி ஓட்டாமல் குடிக்காத யாராவது நண்பர்களை அழைப்பேன், அன்றும் அப்படிதான், பிலாலை வரசொல்லிவிட்டு அமர்ந்தேன்! அவன் வர லேட்டாகி விட்டதால் ஆறேழு குவாட்டர் பக்கம் போயிருச்சு! பூமி என்னை தாங்க முடியாமல் தடுமாறுது, என்னை எப்படியாவது கீழே தள்ளிவிட துடித்தது, நமக்கு இது மானப்பிரச்சனை ஆச்சே, நானும் ஆடி கொண்டே ஸ்டெடியாக!? நின்றேன்! சரியாக பிலால் வந்து நின்று நான் வண்டியில் ஏறும் போது கால் தடுமாறிவிட்டது, எதிரில் காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை, பிலால் குடிக்கவில்லை என்பதால், அதை அவன் பொருட்படுத்தவில்லை!

என்னை பார்த்த காவலர், பிலாலை அழைத்தார், அவனும் போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தேன்! நம்ம பயலை எதோ மிரட்டுறாங்களோன்னு நானும் அங்கே போனேன்!, ”அவன் தான் குடிக்கவேயில்லையே அவனை எதுக்கு சார் புடிச்சி வச்சிருக்கிங்கன்னு கேட்டேன், அவனை விட்டுட்டு என்னை ஜீப்பில் ஏறச்சொன்னாங்க, நான் தான் வண்டியே ஓட்டலையே பின்ன எதுக்கு ஏத்துறிங்கன்னு கேட்டேன், நீ நிறைய குடிச்சிருக்கே வண்டியில ஏறுன்னாங்க, ”குடிக்கிறது தப்புன்னா ஏன் அரசாங்கமே ஒயின்ஷாப் நடத்துது”ன்னு தாங்க கேட்டேன்! உடனே, ”இவன் நக்ஸ்லைட் மாதிரி பேசுறான்” ஜீப்புல ஏத்துனுடாங்க, எதோ ஈரோட்ல நாலு பேர்த்த பழக்கபடுத்தி வச்சிருந்ததால சின்ன பெட்டி கேஸோட வெளியே வந்தேன்!,

அப்ப கோர்ட்ல பார்த்த என்னோட பழைய ஃப்ரெண்டு ஒருத்தன் கேட்டான்.
“டேய் நீ இன்னும் திருந்தலையா!?”

23 comments:

  1. நான் இன்னும் திருந்தல தானே!

    ReplyDelete
  2. விடுங்க தல... திருந்தி என்ன ஆகப்போகுது....

    வாழ்க்கைய அனுபவிங்க...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான தொகுப்பு...
    நல்லா இருக்கு...!

    ReplyDelete
  4. நீங்க சொல்லணும் நான் எப்போ கெட்டு போனேன் திருந்த்துவதற்கு என்று

    அப்படியே இந்த கவிதை படிச்சிட்டு கமெண்ட் சொல்லுங்க

    எண்ணங்கள்


    அது வரை சனையா(musaffah sanaiyaa-Industrial area in abudhabi, uae)சனையா

    என்று கூவியவன்(டாக்ஸி டிரைவர்)

    மல்லு(Malayala) ஃபிகரை

    பார்த்தவுடன்

    அபுதாபி அபுதாபி(City)

    என்றான்

    யார் சொன்னது

    இந்திய பெண்கள்

    அழகு இல்லை என்று

    வாருங்கள் எங்கள்

    மளையாள தேசத்திற்கு

    மறந்து விடுவீர்கள்

    மற்ற எல்லாவற்றையும்



    jayakumar
    abudhabi, uae

    ReplyDelete
  5. //வாருங்கள் எங்கள்
    மளையாள தேசத்திற்கு
    மறந்து விடுவீர்கள்
    மற்ற எல்லாவற்றையும்//

    எனக்கு அந்த அனுபவம் உண்டு!

    ReplyDelete
  6. எதுக்கு திருந்தனும். என்ஜாய் தி லைஃப் வாலு
    :-)

    ReplyDelete
  7. Hi Vaal,

    Naanum Erodudhan, Naanum Sengunthar Hr.Sec School than. Then, with CNC, Erode. I was in erode upto 1991. But, now at Saudi. if your time permits, write to r_nachooo@yahoo.com

    Natpudan
    Narasimhan.R

    ReplyDelete
  8. அண்ணே நீங்க எனக்கு பயங்கர சீனியர், நானெல்லாம் குழந்தைபையன்!
    ஈரோடு வரும் போது சொல்லுங்க, ஒரு மீட்டிங் போடலாம்!

    ReplyDelete
  9. அட.டா....அப்பவே முளைக்க ஆரம்பிச்சிடுச்சா இந்த வாலு.....

    ReplyDelete
  10. விளையும் பயிர்” அப்படீன்னு ஏதோ பழமொழி இருக்காமே....
    சரி விடுங்க வாலு..இப்ப திருந்தி மட்டும் என்ன ஆகப்போகுது...
    கேட்ட கேள்விகள் எல்லாமே சரியாத்தான் இருக்கு..

    ReplyDelete
  11. மொத மேட்டரு என்னவோ கவித மாதிரியே இருக்கு தல..

    ReplyDelete
  12. வால்பையன் said...
    நான் இன்னும் திருந்தல தானே!//

    ரைட்டு...::)

    ReplyDelete
  13. விடுங்க தல... திருந்தி என்ன ஆகப்போகுது....

    ReplyDelete
  14. விடுங்க தல... திருந்தி என்ன ஆகப்போகுது....//
    வாலை தலைன்னு சொன்னா தப்பா?

    ReplyDelete
  15. ஏன் திருந்தனும்? :))

    ReplyDelete
  16. இனிமேலாச்சும் திருந்தி தொலை.!!!

    ReplyDelete
  17. D.R.Ashok
    ஏன் திருந்தனும்? :))//

    லெஃப்டு...:(

    ReplyDelete
  18. நாமெல்லாம் திருந்தினால்தான் தாங்காது உலகம் அருண்.இப்படியே இருக்கலாம்.ஒலகம் பொழைக்கட்டும்!

    :-))

    சந்தோசமான மனுஷன்க நீங்க.உங்களை பாக்காம கட்டை வேகாதுன்னு நினைக்கிறேன் அருண்.

    ReplyDelete
  19. சுவாரஸ்யமான தொகுப்பு...

    :-))))

    ReplyDelete
  20. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  21. . தள்ளாட்டத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்த தைரியம் வேணும்.ரசித்து படித்தேன்,

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)