Wednesday, January 13, 2010

அந்த கொலையை நான் தான் செய்தேன்!

இதை பகிரங்கமாக ஒத்து கொள்வதில் எனக்கு வருத்தம் எதுவுமில்லை!
நான் ஏன் இதை மறைக்கவேண்டும், எத்தனையோ பேர் செய்யமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை நான் செய்தேன் என்பதில் எனக்கு பெருமையே.

இன்னொன்றையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்,
என் நிலையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.
இங்கே வாழும் மனிதர்கள் காந்தியைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும்,
காந்தி போல் வாழ முடிவதில்லை. எல்லோர் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

நானும் மனிதன் தான், எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு,
ஒரு நாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.
என்று திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்தானோ அன்று ஆரம்பித்தது எனக்கு அந்த பிரச்சனை, ஒரு மனிதன் பகலிலெல்லாம் வேலை செய்து இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான், அந்த நிம்மதியே கெடுவதென்றால் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பான், எனக்கும் அதே நிலை தான்.

ஈரோட்டிலே இம்மாதிரியான பொருள்களுக்கு பேர் போன கடை சங்கீதா ஷாப்பிங் சென்டர், நான்காவது தளத்தில் எனக்கான பொருள் இருந்தது, அதை பொருள் என்று சொல்வதை விட ஆயுதம் என்று தான் சொல்லவேண்டும், விளையாட்டு பொருள் போல் தெரிந்தாலும், அது மிக பயங்கரமான ஆயுதம்,

கைப்பிடியிலேயே அதன் நேர்த்தி தெரிந்தது, கடைக்காரன் இருநூறு ரூபாய் சொன்னான், என்னிலையோ அதற்காக ஆயிரம் ஆனாலும் செலவு செய்வேன். இருந்தாலும் புத்தி போகுமா, அவனிடம் பேரம் செய்தேன், இது ”நீண்ட நாள்” உழைக்கும் என்றான். விட்டால் என்னை சீரியல் கில்லர் ஆக்கி விடுவான் போலிருக்கு.

அன்றிரவு அதற்கான திட்டம் வகுத்தேன், அதற்கு மெல்லிய வெளிச்சம் தேவையா அல்லது தேவையில்லையா என்று எனக்குள் குழப்பம் இருந்தது, காரணம் எனக்கு அது புதிது, படுக்கையில் படுத்து, அந்த ஆயுதத்தை மறைவாக வைத்து கொண்டேன்,
சில நிமிடங்களில் அந்த சத்தத்தை உணர்தேன், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் வசதியாக இருக்கும் போல தோன்றியது, கொஞ்சம் காத்திருந்தேன்,

இது தான் சரியான நேரம், கையில் அந்த ஆயுதத்தை கெட்டியாக பற்றி கொண்டு வீசினேன், சட சட வென்று சத்தம், அத்தனை கொசுக்களும் உயிரற்ற நிலையில் அந்த பேட்டில் ஒட்டி கொண்டது, இதுவரை என் தூக்கத்தை கெடுத்த கொசுக்களை கொன்ற மகிழ்ச்சியில் தூங்கினேன்,அது ஒரு பேட்டரியில் இயங்கும் மின் பேட்




தயவுசெய்து மன்னிச்சிடுங்க நண்பர்களே!
சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு பஸ்ஸில் வரும் போது ஒரு பாட்டு போட்டார்கள். அதை கேட்டவுடன் இந்த மொக்கை தோன்றியது, அது என்ன பாட்டுன்னா

"கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்குதடா என்ன அடிக்கடி

கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்கவந்தா அதை நசுக்கடி"

என்ன படம்ன்னு தெரியாது
ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா

30 comments:

  1. சரிதான்....

    நீங்க ஒரு கொலைகாரன் தலைவா....

    எப்படி நீங்க இத பண்ணலாம்...

    //என்ன படம்ன்னு தெரியாது
    ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //

    இதுல மட்டும் கரீக்கிட்டா இருக்கீங்க...

    // வால்பையன் said...

    ஹிஹிஹிஹி//

    கொலைய பண்ணிட்டு...

    என்னா வில்லத்தனம்...

    ReplyDelete
  2. கொலைகாரப்பாவி!!!

    பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வால்பையன் said...
    ஹிஹிஹிஹி///

    ரிப்பீட்டு...::))

    ReplyDelete
  4. முக்காவாசி கதை சுவாரசிஸியமாதான் போச்சு..மாளவிகா எங்க டான்ஸ் ஆடராங்க. ஒரு மாதிரி உதட்ட திறந்து வெச்சிகிட்டு கை காலையும் ஸ்டெயிலா ஆட்டராங்க..

    ReplyDelete
  5. mudiyalaaaaaa

    ennaaaaaaa villathaaaanaaaaaaam

    ReplyDelete
  6. நீ தான் ஈரோட்டுக் கொலைகாரனா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஹா ஹா.. எப்போ சரண்டர் ஆகா போறீங்க..,
    //என்ன படம்ன்னு தெரியாது
    ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //
    S .j சூர்யா நடிச்ச திருமகன்..,
    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

    பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இந்த கொசுக்கு என்ன வெறித்தனம்
    http://athiradenews.blogspot.com

    ReplyDelete
  9. வாலு....இனிக் கவனமாத்தான் இருக்கணும் உங்க பக்கம் வரப் பயமாத்தான் இருக்கு.என்ன ஒரு கொலை வெறி உங்களுக்கு.

    இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அதானே பார்த்தேன். தலைக்கு கொலை பண்ற ஐடியா எல்லாம் இருக்காதே .. பேசியே அவனை பைத்தியம் ஆக்கிடுவின்களே.

    ReplyDelete
  11. கொசுவை பிடிச்சு ஒரு சரக்கு மேட்டர் விளக்கம் கொடுத்திருந்தா அதுவே தற்கொலை பண்ணிருக்குமே...:))

    ReplyDelete
  12. ஹா ஹா.. எப்போ சரண்டர் ஆகா போறீங்க..,
    //என்ன படம்ன்னு தெரியாது
    ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //
    S .j சூர்யா நடிச்ச திருமகன்..,
    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

    பொங்கல் வாழ்த்துக்கள்...
    ////

    அய்யா பேனாமூடி அது திருமகன் இல்லை என்று நினைக்கிறேன் அது வியபாரி

    திருமகனில் சாக்கடிக்குது சாக்கடிக்குதுன்னு பாட்டு வரும்

    வரலாறு முக்கியம் அமைச்சரே................

    ReplyDelete
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. //கொலைகாரப்பாவி!!!

    பொங்கல் வாழ்த்துக்கள்!!

    //

    repeataiiiiiiiiiii

    ReplyDelete
  15. பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  16. அன்பின் வால்

    நான் முதல் இரண்டு பத்தி படித்த உடனேயே கொசு அடிக்கும் கட்டுரை இதெனத் தீர்மானித்து விட்டேன். எப்படி - தெரியாது - ஏன் முடிவு - தெரியாது

    இறுதி வரை படித்தால் நாம் இருவரும் ஒரே மாதிரியாக்த்தான் சிந்தித்திருக்கிறோம். எப்படி தெரியாது - ஏன் தெரியாது

    நல்ல கட்டுரை - நல்வாழ்த்துகள் வாலு

    ReplyDelete
  17. கொசுக்கடியைவிட இந்தக் கடி தாங்கமுடியலையே..!!

    ReplyDelete
  18. கடிக்கு இத்தன கும்மியா?

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
    இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

    ReplyDelete
  20. கடவுளே இந்த கொசுத்தொல்லை தாங்கலப்பா... ஹீஹீ

    கொசுவைக்கொன்ற வள்ளலே வாழ்க..:p

    ReplyDelete
  21. D.R.Ashok

    முக்காவாசி கதை சுவாரசிஸியமாதான் போச்சு..மாளவிகா எங்க டான்ஸ் ஆடராங்க. ஒரு மாதிரி உதட்ட திறந்து வெச்சிகிட்டு கை காலையும் ஸ்டெயிலா ஆட்டராங்க..

    டாக்டர்..,
    அப்ஜெக்‌ஷன் சஸ்டெய்ண்டு.
    கை...கால்..

    ReplyDelete
  22. இனி கொசுக்கொண்ட பேட்டீரோட்டான் என சரித்திரத்தில் நீவிர் அழக்கபடுவீர்....

    ReplyDelete
  23. ரெண்டு வரி படிக்கையிலே நானும் கண்டு புடிச்சிட்டேன்...
    ஏன்னா போன வாரம் தான் எங்கப்பா பேட் வாங்கீட்டு வந்தாரு..
    மொதல் நாளே நல்ல போணி...
    சசினோட மொத்த ரெகார்ட ஒரே நாள்ல முரியடிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்.ஒரு சுருள் ஒரு நைட் புல்லா செய்யுற வேலைய 10 நிமிஷத்துல செஞ்சுருது.. வீடியோ கேம் வெளயாடுற பசங்க கையில குடுத்தா அவன் விளையாட்ட நிருத்தன மாறியும் இருக்கும், நமக்கு கொசுவ அடிச்ச மாறியும் இருக்கும். ஆனா மனசில ஓரமா கொஞ்சம் வருத்தம்.. நாம கொடும கொலை காரனா ஆயிட்டமொன்னு.. நமக்கு ஏகப்பட்ட உணவு இருக்கு., ஆனா அதுக நம்மள நம்பித்தான் இருக்கு.. என்ன செய்யுறது.. இயற்கையின் படைப்பு...

    ReplyDelete
  24. அப்பிடியே, எங்க ப்ளாக் பக்கமும் எட்டிப் பாக்குறது... நாங்கல்லாம் இப்பத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கோம்.. உங்கள மாறி பெரிய தலைகளோட சப்போர்ட் எல்லாம் தேவையில்ல.. சமயத்துல சாட்சிக் கையெழுத்து போடுவீங்கள்ள...

    ReplyDelete
  25. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரா

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)