Friday, September 12, 2008

கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!



என் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் சிரிக்கமுடியவில்லை!!!




என் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் பேசமுடியவில்லை!!!




என் பணம் அவளுக்குப் பிடித்திருந்தது...
திருமணமாகிப் போகும்போது
அதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்
அதன்பிறகு என்னால் செலவழிக்கமுடியவில்லை!!!

அதனால், கொஞ்சம் காசு இருந்தா குடுங்க...!!!

22 comments:

  1. கவலைப்படாதீக.. ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் AOL ஒரு டாலர் அனுப்புவதாக சொல்லியுள்ளதுன்னு சொல்லுங்க.. பின்னூட்ட மழைதான்.. டாலர் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..

    இவண்
    Ex. கோபிகா ரசிகன், தற்போது பாவனாவின் பரம ரசிகன்

    ReplyDelete
  2. ஓணம் வந்தாலும் வந்தது, இதுதான் சாக்குன்னு எல்லாரும் மல்லு ஃபிகருங்க ஃபோட்டோவா போட்டு.... அட போங்கப்பா :)))))

    ReplyDelete
  3. அட லேபிள இப்பதான் பார்த்தேன். இதுதான் கவிதையா??? வலையுலகத்துக்கு இன்னொரு கவுஜர் கெடச்சிட்டாருப்பா!!!!!!! :)))))))))))

    ReplyDelete
  4. கவிதை அருமை..... :)

    ஆனா கவிதைகளுக்கு இடையே ஏதோ கருப்பு கலரில் எழுதி இருப்பது மட்டும் தெரியலை... :(

    ReplyDelete
  5. தமிழ்பிரியனின் கமெண்ட் சூப்பர்!

    (இதைச் சொல்லத்தான் இங்க வந்தியான்னு கேட்கக் கூடாது!)

    ReplyDelete
  6. //வெண்பூ said...

    ஓணம் வந்தாலும் வந்தது, இதுதான் சாக்குன்னு எல்லாரும் மல்லு ஃபிகருங்க ஃபோட்டோவா போட்டு.... அட போங்கப்பா//

    இந்தப் பெரிசுகளே இப்படித்தாம்ப்பா...

    ReplyDelete
  7. //
    //வெண்பூ said...

    ஓணம் வந்தாலும் வந்தது, இதுதான் சாக்குன்னு எல்லாரும் மல்லு ஃபிகருங்க ஃபோட்டோவா போட்டு.... அட போங்கப்பா//

    இந்தப் பெரிசுகளே இப்படித்தாம்ப்பா... //

    நானே எனக்கு ஒண்ணு கெடக்கமாட்டேங்குதேன்னு வருத்தத்துல இருக்கேன். நான் ஃபோட்டோவை சொன்னேன் பதிவு போட.

    ReplyDelete
  8. வாங்க ராகவ் -> ஹாஹா... சீசனுக்கு ஏத்தா மாதிரி ரசிகர் மன்றத்தையும் மாத்திக்கிட்டே இருப்பீங்களோ?????

    வாங்க வெண்பூ -> ச்சீ போங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது!!!

    வாங்க தமிழ் பிரியன் -> அவ்வ்வ். நீங்க இவ்ளோ நல்லவரா...... இப்பத்தான் எனக்கு தெரிஞ்சுது!!!!

    ReplyDelete
  9. வாங்க பரிசல் -> ஆமாமா. இந்த பெரிசுங்க தொல்லை தாங்கமுடியல.... இனிமே சின்ன வயசு நடிகையா பாத்து படம் போடறேன்... சரிங்களா????

    வாங்க வெண்பூ -> வீட்டு தொலைபேசி எண்ணை கொடுப்பா..... ஒருத்தர்கிட்டே பேசணும்......

    ReplyDelete
  10. // ச்சின்னப் பையன் said...
    வாங்க பரிசல் -> வயசு நடிகையா பாத்து படம் போடறேன்... சரிங்களா????
    //
    அண்ணனுக்கு ஒரு ஜே போடுங்கப்பா...

    //
    வாங்க வெண்பூ -> வீட்டு தொலைபேசி எண்ணை கொடுப்பா..... ஒருத்தர்கிட்டே பேசணும்......
    //
    எதுக்கு??? போட்டோவை எதுக்கு என் தங்கமணிக்கு அனுப்புறீங்க? எனக்கே அனுப்பிச்சா நான் பதிவு போடுவனில்ல.. :)

    ReplyDelete
  11. வெண்பூ -> அவ்வ்வ். நீங்களும் என்னை மாதிரியே இவ்ளோ வெகுளியா இருக்கீங்களா????????. நான் வெளுத்ததெல்லாம் தயிருன்னு நினைக்கறவன்...

    ReplyDelete
  12. பேச்சை அவள் எடுத்துப் போனப்பின் இப்படி எழுதி காட்டித்தான் பிழைப்பை நடத்த வேண்டும்..என்ன செய்வது?

    ReplyDelete
  13. எழுதும் திறமையை அக்கா விட்டுவிட்டார்கள் போலும் !
    அதையும் வாங்கி போயிருந்தால் எங்களின் கதி ?

    ReplyDelete
  14. மூன்றும் ஒரே கவிதைன்னாலும். மூனும் மூனு விதம்.

    ReplyDelete
  15. நீங்கள் எழுதி கொண்டிருப்பது வருத்தப் படாத வாலிபர் சங்கம் தளத்தில், ஏன் சோக கவிதைகள், உடனடியாக நாலு கும்மி பதிவுகள் எழுதவேண்டும் என்பதே இதற்கு தண்டனை

    ReplyDelete
  16. வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நல்லவேளை. நீங்க சொன்னபிறகுதான் நானே கவனிச்சேன்... ரொம்ப நன்றிங்க... :-))

    வாங்க பாஸ்கர் -> அதைத்தான் சொல்லிக்கிட்டேயிருந்தேன். நீங்க கேட்டுட்டீங்க..... :-))

    வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ். நீங்க எதை சொல்றீங்கன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கலாங்களா!!!!!

    ReplyDelete
  17. வாங்க விஜய் -> என்ன, சந்தோஷத்துலே வார்த்தையெ வரலியா???????

    வாங்க வால் -> அடிவாங்கிக்கிட்டே, அழுதுகிட்டே மத்தவங்களை சிரிக்கவெக்கறதில்லையா? அது மாதிரி செய்யலாமேன்னு நினைச்சேன்.... தப்புன்னா சொல்லிடுங்க... ..... அப்பவும் நிறுத்தமாட்டேன்.... அவ்வ்வ்........:-)))

    ReplyDelete
  18. என் பணம் அவளுக்குப் பிடித்திருந்தது...திருமணமாகிப் போகும்போதுஅதை எடுத்துக்கொண்டுப் போய்விட்டாள்அதன்பிறகு என்னால் செலவழிக்கமுடியவில்லை!!!
    //

    இங்க எல்லார் கதயும் அதுதான். வாங்க ரெண்டு பேரும் வேற எங்கயாவது போய் கேப்போம் :)

    ReplyDelete
  19. நல்லா டைமிங்காத்தான் போட்டிருக்கீங்க. ஆனா ஒனத்தொட ஸ்பெஷாலிட்டியே அன்னைய கலேக்ஷந்தானே:):):)

    ReplyDelete
  20. வாங்க அப்துல்லாஜி -> எல்லாரோட கதையும் அவ்ளோதானாம்... :-(((

    வாங்க ராப் -> நெஜம்ம்ம்ம்மா நான் டைமிங்கா போடலை... தானா அமைஞ்சிடுச்சு..... ஹிஹி...

    ReplyDelete
  21. ஆஹா
    இவுக கோபிகா ஆன்ட்டி தானே?
    குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீக தல :P

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)