Monday, September 1, 2008

பெரியோர்களே!!! தாய்மார்களே!!!


தம்பி வாப்பா... வந்து இந்த மாதம் அட்லஸா இருன்னு சொன்னப்போ.. எனக்கு என்னமோ வடிவேலுக்கு பார்த்திபன் குடை பிடிச்சிண்டு வரும்போது அந்தப் பக்கமா ஒரு ஊர்வலம் வருமே, அந்த சீன் தான் டக்குன்னு நினைவுக்கு வந்தது... அது ஏன்னு தெரியல....

அண்ணாச்சி, ஏதாவது பிரச்சினை கிரச்சினை ஆயிடப்போகுதுன்னு சொன்னப்போ - அப்படி ஏதாச்சும் ஆயிட்டா, என்னிடம் வா நான் பார்த்துக்கொள்கிறேன்னு திருவிளையாடல் ஸ்டைல்லே சொல்லிட்டாங்க.

வழக்கமா என்னோட பதிவுன்னா, மனசிலே தோணினத கடகடன்னு எழுதி போட்டுடுவேன். (அப்போ இங்கே போடறதுக்கு மண்டபத்திலே யார்கிட்டேயாவது வாங்கப்போறியான்னு கேக்கப்படாது!!!).

ஆனா, பல பெரிய தலைகள் பதிவுகள் போட்டு ஜெயிச்ச இந்த பாடல் பெற்ற தலத்திலே பதிவுகள் போடறதுக்கு மூணுக்கு முப்பது தடவை யோசிக்கவேண்டியிருக்கு. அதனாலே... சரி சரி நிறுத்திட்டு ஒழுங்கா பதிவு போடற வழியப்பாருப்பான்னு யாரோ சொல்றதாலே... ஸ்டார்ட் மீஜிக்...

வழக்கம்போல் என்னோட பதிவுலே ஆதரவு தர்ற மாதிரி இல்லாமே, ரொம்ப நல்லாவே ஆதரவு தாங்க மக்களே!!!

47 comments:

  1. ச்சின்னப்பையன்

    வருக வருக - நல்வரவு

    நல்வாழ்த்துகள்

    கலக்குக

    ReplyDelete
  2. //ஏதாவது பிரச்சினை கிரச்சினை ஆயிடப்போகுதுன்னு சொன்னப்போ//

    ச்சின்ன பையன்,

    கும்மி கோஷ்டிகள் சார்பாக முதல் பின்னூட்டத்தை பதித்து 'நாங்கள் இருக்கிறோம்' என்பதை உறுதி செய்கிறேன்.

    ReplyDelete
  3. //வழக்கம்போல் என்னோட பதிவுலே ஆதரவு தர்ற மாதிரி இல்லாமே, ரொம்ப நல்லாவே ஆதரவு தாங்க மக்களே!!!//

    இதெல்லாம் சொல்லனுமா ?

    பேரைப் பார்த்தாலே ஓடியாந்துட மாட்டொமா ?

    "ச்சின்னப் பையன்" பேரைப் பார்த்தேலே பின்னூட்டம் பொழியுதுள்ள ...

    ReplyDelete
  4. "பெரியோர்களே!!! தாய்மார்களே!!!"

    யாரைக்கூப்பிடறிங்க...:)

    ReplyDelete
  5. "பெரியோர்களே!!! தாய்மார்களே!!!"

    யாருப்பா அது இவரு கட்சி மீட்டிங் போடறவரு இவரைப்போய் சின்னப்பையன்னு சொல்லிக்கிட்டு...:)

    ReplyDelete
  6. "பெரியோர்களே!!! தாய்மார்களே!!!"


    இந்த லிஸ்ட்டுல நாங்க இன்னும் வரலை அண்ணே :)

    ReplyDelete
  7. "பெரியோர்களே!!! தாய்மார்களே!!!"

    வருத்தப்படாத வாலிப சங்கம்னு பெயரை வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் ஆரம்பிச்சா சும்மா விட்டுடுவமா...:)

    ReplyDelete
  8. சரி சரி வந்துட்டிங்க அப்புறம் என்ன பேசிக்கிட்டு ஆரம்பிங்க...

    ReplyDelete
  9. //மூணுக்கு முப்பது தடவை யோசிக்கவேண்டியிருக்கு. //

    அந்த 30 யோசனையையும்,
    அதை அப்படியே எழுதினால் 30 பதிவு கிடைச்சிடும்.

    ReplyDelete
  10. நல்வரவு.

    என்னென்னமோ (தேவையில்லாத) பழமொழிகள் வந்து நின்னு(மனக்) கண்முன்னே கும்மியடிக்குது.

    அது கிடக்கட்டும் ஒரு பக்கம்.:-)


    நல்வரவு சொல்லிட்டுப்போறேன்

    ReplyDelete
  11. வாங்க சீனா ஐயா -> நன்றி...

    வாங்க கண்ணன் -> அவ்வ்வ். நீங்கதான் கும்மிகளின் அறிவிக்கப்படாத தலையா?......

    வாங்க தமிழன் -> சரிங்க. 'வருங்கால' அப்படின்னு ஒரு வார்த்தை விட்டுப்போயிடுச்சு... அதுக்காக இப்படியா?.... அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  12. //அந்த 30 யோசனையையும்,
    அதை அப்படியே எழுதினால் 30 பதிவு கிடைச்சிடும்.//

    வாங்க கண்ணன் -> ஹிஹி... அதான் பண்ணலாம்னு இருக்கேன்.

    வாங்க துளசி மேடம் -> அவ்வ்வ்வ்.... நீங்களுமா?..... கடவுளே... (எல்லாரையும்) காப்பாத்துப்பா...... :-))))

    ReplyDelete
  13. பாராட்டுக்கள் ச்சின்னப்பையன்...இன்று 'கால ஓட்டத்தில்..காணாமல் போனது'என்ற என் பதிவைப்பாருங்கள்.அதில் உங்களை கோத்து விட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  14. ஆகா! இந்த மாத சிங்கம் ச்சின்ன பையனா? ம்ம்ம் கலக்குங்க... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ச்சின்ன பையன்! ஞாபகம் இருக்கட்டும்... தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் பதிவுகள் கண்டிப்பா வரணும்... ;)

    ReplyDelete
  16. /தமிழ் பிரியன் said...
    ச்சின்ன பையன்! ஞாபகம் இருக்கட்டும்... தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் பதிவுகள் கண்டிப்பா வரணும்... ;)
    //

    ஆமாம்

    கண்டிப்பா வந்தே தீரணும்! :))

    ReplyDelete
  17. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அவ்வ்வ்... கோத்துவிட்டீங்களா?........

    வாங்க தமிழ் பிரியன், ஆயில்யன் -> கண்டிப்பா. ஜேகே இல்லாமலா... முதல் போணியே அவரோட பதிவுதான்... நாளைக்கு பாருங்க..... :-))))

    வாங்க ஷேர்பாயிண்ட் த க்ரேட், விஜய் ஆனந்த் -> நன்றி...

    ReplyDelete
  18. ச்சின்னப்பையன்

    வருக வருக - நல்வரவு

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  19. கலக்குங்க தலைவா...

    ReplyDelete
  20. ஒரு சிறு ஆலோசனை. உங்களோட பதிவுல இந்த விசயத்த பத்தி ஒரு வார்த்தை போட்டிருங்களேன். காரணம் உங்கள் பதிவு மட்டுமே ரீடரில் இருக்கும் மக்களுக்கு நீங்கள் இங்கே வந்தது தெரியாமல் போக வாய்ப்புண்டு.

    தவறுதலாக வ வா சங்கம் என் ரீடரில் இல்லாததால் எனக்கு இந்த விசயமே தெரியாது. அதிர்ஷ்டவசமாக உங்கள் சாட் ஸ்டேட்டஸ் பார்த்து இங்கே வந்தேன். :)

    ReplyDelete
  21. //பெரியோர்களே!!! தாய்மார்களே!!!"
    //

    அப்ப இந்த அழைப்பு எனக்கில்லையா???

    ReplyDelete
  22. //அப்ப இந்த அழைப்பு எனக்கில்லையா???//

    அட முதல்ல அது உங்களுக்கே இல்லையே... நீங்கதா 'ச்சின்ன' 'ப்பையன்' ஆச்சே??

    ReplyDelete
  23. //அந்த சீன் தான் டக்குன்னு நினைவுக்கு வந்தது... //

    அப்பவும் வந்து தலைய குடுத்துட்டீங்க.. விடுங்க மிச்சத்த நாங்க பாத்துக்கறோம்..

    ReplyDelete
  24. //வழக்கமா என்னோட பதிவுன்னா, மனசிலே தோணினத கடகடன்னு எழுதி போட்டுடுவேன்.//

    பெரிய கட வித்வானோ நீங்க????

    ReplyDelete
  25. //வழக்கம்போல் என்னோட பதிவுலே ஆதரவு தர்ற மாதிரி இல்லாமே, ரொம்ப நல்லாவே ஆதரவு தாங்க மக்களே!!!//

    அப்படின்னா மொக்க பின்னூட்டம், கும்மி இதெல்லாம் வேணாம்றீங்களா?

    ReplyDelete
  26. வாங்க சிவா -> நன்றி...

    வாங்க வெண்பூ -> இன்னிக்கு மறுபடியும் ஒரு அறிவிப்பு பதிவு போட்டுடறேன்.... நாளையிலேந்துதான் இங்கே மொக்கை பதிவுகள் ஆரம்பம்.

    ReplyDelete
  27. வாங்க ச்சின்னபையன்,


    கலக்கலா வந்திருக்கீங்க.... உங்க பிளாக்'லே நீங்க போட்ட பதிவும், அதுக்கு நம்ம மக்கள் சொல்லியிருந்த கருத்துக்களும் செம அட்டகாசம்....

    அங்கே என்னாலே கருத்து எதுவும் சொல்லமுடியாமே ஸ்மைலி போட்டு வந்தேன்... :))

    ஸ்டார்ட் மீசிக்... நம்ம சிங்கம் JKR பத்தி பதிவுகளை போட்டு கலக்கி எடுங்க...

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்.

    //பெரியோர்களே!!! தாய்மார்களே!!!//

    அப்போ நீங்க மட்டும் தான் சின்ன பையனா

    ReplyDelete
  29. //வழக்கம்போல் என்னோட பதிவுலே ஆதரவு தர்ற மாதிரி இல்லாமே, ரொம்ப நல்லாவே ஆதரவு தாங்க மக்களே!!!//

    தந்துட்டா போச்சு!

    உங்களுக்கில்லாத ஆதரவா...

    ReplyDelete
  30. வாங்க தல! கலக்குங்க! :)

    ReplyDelete
  31. welcome Mr. Small Boy of south india. :)

    ReplyDelete
  32. //ஆனா, பல பெரிய தலைகள் பதிவுகள் போட்டு ஜெயிச்ச இந்த பாடல் பெற்ற தலத்திலே// தல பட்டைய கிளப்பு..

    ReplyDelete
  33. //வாங்க ச்சின்னபையன்,


    கலக்கலா வந்திருக்கீங்க.... உங்க பிளாக்'லே நீங்க போட்ட பதிவும், அதுக்கு நம்ம மக்கள் சொல்லியிருந்த கருத்துக்களும் செம அட்டகாசம்....

    அங்கே என்னாலே கருத்து எதுவும் சொல்லமுடியாமே ஸ்மைலி போட்டு வந்தேன்... :))

    ஸ்டார்ட் மீசிக்... நம்ம சிங்கம் JKR பத்தி பதிவுகளை போட்டு கலக்கி எடுங்க...//

    rippeettaaaaiiii...:-)

    ReplyDelete
  34. //நாமக்கல் சிபி said...
    ட்ரிங் ட்ரிங் ட்ரிங்......

    தேவ் : "ஹல்லோ"

    சிபி: "தேவ், நான் சிபி பேசுறேன்"

    தேவ் : "சொல்லுங்க தள? யாராச்சும் மாட்டி இருக்காங்களா?"

    சிபி : "ஆமா தேவ், ச்சின்னப்பையன் ஒருத்தர் கிடைச்சிருக்கார்"

    தேவ் : "அப்படியா! உடனே அவரை ஒரு மீன் பாடி வண்டில போட்டு இந்தப் பக்கம் அனுப்புங்க, நாங்க கவனிக்குறோம்"

    சிபி : "ஸாரி தேவ், அது முடியாது"

    தேவ் : "தள! என்ன சொல்றீங்க! அட்லாஸ்னா ஆப்பு அடிக்கணும்தானே! அதுதான நம்ம ரூல்ஸு"

    சிபி : "தெரியும் தேவ். ரொம்ப நாள் கழிச்சி இந்தப் பக்கம் வந்திருக்கேன், இன்னிக்கு கொஞ்ச நேரம் நான் கவனிக்குறேன். அதுக்கப்புறம வண்டில போடு அனுப்புறேன். சரியா"

    தேவ் : "அப்படியா! தள! கலக்குங்க! வேணும்ங்குற நேரம் எடுத்துக்குங்க! அப்பப்போ மூஞ்சில சோடா தெளிச்சி, தெளிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு கண்டினியூ பண்ணுங்க"

    Wed Apr 04, 12:39:00 AM IST //

    ReplyDelete
  35. //நாமக்கல் சிபி said...
    தேவ் : "சிபி, ரொம்ப நேரம் தாங்குப் பிடிப்பாரா இந்த புது அட்லாஸ்?"

    சிபி : "பார்க்க ரொம்ப நல்லவரா தெரியறாரு! தாக்குப் பிடிப்பாருன்னுதான் நினைக்கிறென்"

    Wed Apr 04, 12:41:00 AM IST //

    ReplyDelete
  36. 'அவிங்களுக்கு' ச் கொடுக்கும் அந்த ச்-சின்னப்பையன் நீங்க தானா? :)
    பரவாயில்ல! பேருலயே ச் இருக்கு!

    சுற்றுப்பயணம் முடிஞ்சி இப்ப தான் வர முடிஞ்சுது! கலக்குங்க அட்லாஸே! நல்வரவு! :)

    ReplyDelete
  37. //தேவ் : "தள! என்ன சொல்றீங்க! அட்லாஸ்னா ஆப்பு அடிக்கணும்தானே! அதுதான நம்ம ரூல்ஸு"//

    இல்லீயே!
    தேவ் அண்ணா அடியேன் அட்லாஸா இருந்த போது இந்த ரூல்ஸைப் போடலியே! :)

    ஆன்மீகத்தைப் போலவே ஜேகே ரித்தீஷையும் ட்ரீட் பண்ணுங்கப்பு! :))

    ReplyDelete
  38. வாங்க இராம் -> அங்கே ஏன் கருத்து சொல்லமுடியல?... சந்தோஷத்திலே வார்த்தையே வரலியா.... அவ்வ்வ்வ்....

    வாங்க குடுகுடுப்பை -> இதிலென்ன சந்தேகம்....

    வாங்க பரிசல் -> நன்றி...

    வாங்க காரையன் -> டாங்ஸ்....

    ReplyDelete
  39. வாங்க தாமிரா -> நன்றி...

    வாங்க ஸ்யாம் -> இராம் அவ்ளோ கஷ்டப்பட்டு அடிச்சதுக்கு ஒரு ரிப்பீட்டா... அதுவும் இங்லீபிஸ்லே.... அவ்வ்வ்வ்....

    வாங்க கேயாரெஸ்: நன்றி....

    ReplyDelete
  40. வருத்தபடாத வாலிபர் சங்கத்துல ச்சின்ன்ப்பையன யாரு சேர்த்தா? அதனாலதான் எல்லோர்க்கிட்டயும் ஆதரவு கேட்கிறார்.. நாமதான் வருத்தபடாத வாலிபர்களாச்சே, அப்புறம் ஆதரவு கிடைச்சா என்ன,கிடைக்கலன்னா என்ன? நம்ம மொக்கய போடுவோம்...

    ReplyDelete
  41. ஒன்னு பேர மாத்துங்க, இல்லன்னா ஃபோட்டோவ மாத்துங்க.. வீரத்தளபதி நாயகனுக்கப்புறம் பெரிய ஆளுப்பா...

    ReplyDelete
  42. வாங்க அப்துல்லா -> லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க... நன்றி...

    வாங்க கார்க்கி -> அப்போ என் பேரை மாத்தணுமா.... அவ்வ்வ்....

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)