Thursday, July 17, 2008

காதலிச்சா கவிதை வருமா?

திருவள்ளுவர் காலத்துல இருந்தே தீர்க்கப் படாத கேள்வி இதுதாங்க. காதலிச்சா கவிதை வருமா? சரி... நாமதான் 'ப்ரம்மாண்டம் என்பது நமிதாவா? மாளவிகாவா?' போன்ற மில்லியன் டாலர் அறிவியல் கேள்விக்கெல்லாம் விடை காண விக்கில இருந்து வில்லுப்பாட்டு வரைக்கும் தேடுற ஆளாச்சே. சரி நமக்குத் தெரிஞ்ச சில பல காதலர்கள கேட்டுப் பாப்போம்னு தேடிப் பாத்தா, உருபடாத பயலுங்க!! எங்க செட்ல எல்லாருமே இன்னும் சிங்கிளாதான் காஃபி டேல கப்பச்சினோ குடிச்சிட்டு திரியறானுவ‌. அப்புறம் தேடி புடிச்சு கடைசியா காதலிச்சிட்டு இருக்குற ஒருத்தன் சிக்குனான்.

அவங்கிட்ட நம்ம கேள்வியக் கேட்டா 'அப்படியா?'ங்றான். 'அடப்பாவி... நீ கவிதை எழுதலைனா அது உண்மக் காதலே இல்லை'னு நாமளும் கொளுத்திப் போட, பயபுள்ள அதுக்குள்ள பேனாவையும் டைரியையும் தூக்கிட்டு பீச் பக்கமா போயிட்டான். அப்புறம் அவனும் கஷ்டப்பட்டு ஒரு கவுஜைய எழுதி அவன் காதலிக்கிட்டக் காட்டிருக்கான். அதப் பாத்துட்டு அவனோட காதலி விழுந்து விழுந்து சிரிச்சிருக்கா. அதுமட்டுமில்லாம இனி இது மாதிரி காமெடி பண்ணா அப்புறம் டைவர்ஸ் பண்ணிடுவேன்னு மெரட்டிப்புட்டா. பயபுள்ள வந்து என் மூஞ்சிலேயே குத்திருப்பான். நல்ல வேளை அவன் இந்தியாலையும் நான் புதரகத்துலையும் இருந்ததால எஸ்கேப்.

சரி.. இங்கதான் பல பேரு கவுஜன்னு டைட்டில போட்டுக்கிட்டு சுத்துறானுவளே.. அவிங்கக் கிட்ட கேக்கலாம்னு சில மக்கள புடிச்சேன். மொதல்ல, 'இந்த கவுஜைய எப்படி எழுதித் தொலயிறிய?'னு கேட்டேன்.

"மொதல்ல யாருமே இல்லாத தனிமையான நேரத்துல.."னு ஆரம்பிச்சாரு.

"என்னங்க இது... ஏதோ பெரிய வில்லங்கமான வேலய பண்ண போற மாதிரி பிட்ட போடுறீங்க?"

"சொல்லுறத முழுசா கேளுல வீணப் பயல‌... தனிமையான நேரத்துல அப்படியே விட்டத்தப் பாத்துக்கிட்டே இருந்தா..

விரைந்து வரும்
விட்டில் பூச்சியாய்
விட்டத்தில் முழைக்கும் விடியல்... கவிதை

அப்டீனு கவுஜ வரும்"னு சொல்றார்.

நானும் அப்படியே அண்ணாந்துப் பாத்தா பாட்டி வட சுட்ட படந்தான் ஓடிச்சு.

அப்புறம் அவரே... 'காதலிச்சா கவிதை வருமோ, வராதோ தெரியாது... ஆனா கவித எழுத ஆரம்பிச்சா, கவிதைல காதல் ரொம்ப ஈஸியா வரும். அப்படியே நடக்க முடியாத ஒரு மேட்டர எழுதி அது "அன்பே உன்னாலதான்"னு ஒரு பிட்ட ஆட் பண்ணிட்டா அதுதான் காதல் கவித.'னு சொன்னாரு.

சரி... நாமளும் கொஞ்சம் உக்காந்து விட்டத்தப் பாத்துக்கிட்டே வட்டம் போட்டு யோசிச்சதால வந்த விளைவுதாங்க இந்தக் காதல் கவுஜைஸ்...

---------

அடித்து திருத்தப் படாமலேயே
கவிதையாகிறது
எல்லா கிறுக்கல்களும்
உனை எழுதும் போது மட்டும்...

*****

என் நட்புப் பட்டியலில்
முந்திச் செல்கிற‌து...
நான் இல்லாத நேரங்களில்
உன் தேகம் தொட முற்படும்
வில்லத்தன மழையைத்
தடுத்து நிறுத்தும்
உன் கத்தரிப்பூ நிற‌ குடை!!

*****

சென்னைக் கண்ணையும் மிஞ்சிய‌
தொற்று நோயுனக்கு...

உன் விழிவிழுந்த நாள்முதல்
இமைகள் மூடியபின்தான்
விரிகிறது காட்சிகளெனக்கு...

*****

உன் பெயரை வைக்கச் சொல்லி
மொழி வளர்ச்சிக் கழக‌ வாயில்களிலெல்லாம்
உண்ணாவிரதமிருந்து அடம்பிடிக்கிறது
அழகு!!

*****

நீ...
புன்னகை தேசத்திலும்
போர்தொடுக்கும் சமாதான புறா...

47 comments:

  1. \\உன் விழிவிழுந்த நாள்முதல்
    இமைகள் மூடியபின்தான்
    விரிகிறது காட்சிகளெனக்கு...\\

    இந்த வரிகள் அருமை!!

    ReplyDelete
  2. me the first?

    காதலிக்க கவிதை எழுத தெரிய வேண்டாம், பேச தெரிந்தாலே போதும், முக்கியமா காதலியை ஐஸ் வைக்க தெரியனும்.

    ReplyDelete
  3. எல்லா வரிகளும் அருமை...ஜி

    ReplyDelete
  4. Enna Orey ladies mayamai irrukku...

    Kavithaigal(Kirukkalgal) Arumai...

    ReplyDelete
  5. //காதலிச்சா கவிதை வருமா? //

    வந்தாலும் வரும்... :-)

    ReplyDelete
  6. ஐய்யா ராசா கவுஜ எல்லாம் பார்த்தா...என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... :-)

    ReplyDelete
  7. //கயல்விழி said...
    me the first?
    //

    இல்ல நான் தான் பர்ஸ்ட் :-)

    ReplyDelete
  8. கரெக்ட் செந்தில், நான்கூட 'மகளிர் மட்டும்' போல இருக்கே, பின்னூட்டலாமா என்று யோசித்தேன். எல்லாமே கலக்கல்ஸ் ஜி.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. கரெக்ட் செந்தில், நான்கூட 'மகளிர் மட்டும்' போல இருக்கே, பின்னூட்டலாமா என்று யோசித்தேன். எல்லாமே கலக்கல்ஸ் ஜி.

    அனுஜன்யா

    ReplyDelete
  10. இதனால் வலையுலக மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் நம்ம ஜி தற்போது காதலில்....
    இதுக்குத்தான் இவ்வளவு பெரிய பிட்ட போட்டீங்களா ஜீ??

    ReplyDelete
  11. //
    காதலிக்க கவிதை எழுத தெரிய வேண்டாம், பேச தெரிந்தாலே போதும், முக்கியமா காதலியை ஐஸ் வைக்க தெரியனும்.//


    கயல்விழி note பண்ணிக்கிறேன் எனக்கு தேவைப்படும்

    ReplyDelete
  12. //நீ...
    புன்னகை தேசத்திலும்
    போர்தொடுக்கும் சமாதான புறா...//

    நல்லா இருக்கு.

    காதலிச்ச கவித வருமோ இல்லையோ, கடன் வரும் ஜாக்கிரதை

    ReplyDelete
  13. எல்லா கவுஜையுமே சூப்பரு :)

    //என் நட்புப் பட்டியலில்
    முந்திச் செல்கிற‌து...
    நான் இல்லாத நேரங்களில்
    உன் தேகம் தொட முற்படும்
    வில்லத்தன மழையைத்
    தடுத்து நிறுத்தும்
    உன் கத்தரிப்பு நிர குடை!!//

    இது டாப்பு :))

    ReplyDelete
  14. காதல் வயப்பட்ட கவிதைகள் அருமை:)

    ReplyDelete
  15. :))

    ஒன்னும் சொல்றதுக்கில்ல..நீ நடத்து ராசா :))

    ReplyDelete
  16. //Divya said...
    இந்த வரிகள் அருமை!!//

    வாங்க திவ்யா... என்னாது இது?? எம்புட்டு பெரிய கேள்விய தலைப்புல கேட்டிருக்கேன்... அதுக்கும் பதில சொல்லிட்டு போங்க அம்மணி

    -------------

    //Sri said...
    Wow anna super kavithai's :-)//

    Thankies Sis...

    ReplyDelete
  17. // கயல்விழி said...
    me the first?

    காதலிக்க கவிதை எழுத தெரிய வேண்டாம், பேச தெரிந்தாலே போதும், முக்கியமா காதலியை ஐஸ் வைக்க தெரியனும்.
    //

    என்னங்க சொல்றீங்க?? காதலி மொதல்ல கெடைக்கனும்ல.. அப்புறம்தானே ஐஸ், சர்பத் லாம் வைக்க முடியும்... அதுக்கு என்ன வழி?? ;))

    ReplyDelete
  18. //இனியவள் புனிதா said...
    எல்லா வரிகளும் அருமை...ஜி//

    // Ramya Ramani said...
    அருமை :))//

    நன்றி தோழிஸ்... உங்களுக்காவது விடை தெரியுமா?? ;))

    ReplyDelete
  19. //Sen22 said...
    Enna Orey ladies mayamai irrukku...

    Kavithaigal(Kirukkalgal) Arumai...
    //

    அடடா... என்ன தல?? போற போக்குல அப்படியே கொளுத்திட்டு போறீங்க?? :)) ஒரு வேள அவிங்களுக்குத்தான் இந்த கேள்விக்கெல்லாம் விடை தெரியும் போலிருக்கு :))

    ReplyDelete
  20. //Syam said...
    ஐய்யா ராசா கவுஜ எல்லாம் பார்த்தா...என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... :-)//

    நாட்டாமை... புது தீர்ப்பா சொல்வீங்கன்னு பாத்தா... :(((

    ReplyDelete
  21. //அனுஜன்யா said...
    கரெக்ட் செந்தில், நான்கூட 'மகளிர் மட்டும்' போல இருக்கே, பின்னூட்டலாமா என்று யோசித்தேன். எல்லாமே கலக்கல்ஸ் ஜி. //

    வாங்க அனுஜன்யா... இதுக்கெல்லாமா யோசிப்பாய்ங்க... ஒருத்தன போட்டுத் தாக்குறதுன்னா எதுக்குமே யோசிக்கக் கூடாது... அவ்வ்வ்... இப்படி எனக்கு ஆப்படிக்க ஐடியா கொடுக்குறனே... சங்கத்தோட ராசி அப்படி... கைப்ஸ் பழக்கம் ஒட்டிக்கிது...

    ReplyDelete
  22. //இவன் said...
    இதனால் வலையுலக மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் நம்ம ஜி தற்போது காதலில்....
    இதுக்குத்தான் இவ்வளவு பெரிய பிட்ட போட்டீங்களா ஜீ??
    //

    யோவ் இவனே... வந்தோமா... கயல்விழி கொடுத்த டிப்ஸ படிச்சோமானு இருக்கனும்.. இப்படி புதுசா கொளுத்திப் போட்டு சல்லித்தனம் பண்ணப் படாது... ஓகே?? :))))

    ReplyDelete
  23. // வடகரை வேலன் said...
    காதலிச்ச கவித வருமோ இல்லையோ, கடன் வரும் ஜாக்கிரதை//

    அனுபவசாலி சொல்றீங்க... கேட்டுக்குறேன் :)))

    ReplyDelete
  24. //G3 said...
    எல்லா கவுஜையுமே சூப்பரு :)
    இது டாப்பு :))//

    வாங்க அம்மணி... ஒரு பெரிய கேள்விய எழுப்புனா அதுக்கு ஒருத்தருமே பதில சொல்ல மாட்டேங்கிறீங்களே... :((

    ---------

    //கவிநயா said...
    காதல் வயப்பட்ட கவிதைகள் அருமை:)//

    நன்றி ஹே கவிநயா....

    ReplyDelete
  25. // கப்பி பய said...
    :))

    ஒன்னும் சொல்றதுக்கில்ல..நீ நடத்து ராசா :))//

    வாடே... என்ன சொல்றதுக்கில்லன்னு நைஸா நழுவ பாக்குத?? வாயில வந்தத சொல்லிரு.. ஏன் தயங்குற?? ;))

    ReplyDelete
  26. ஜி! நான் எதுவுமேக் கேக்கல.:D

    தலைப்புக்குப் பதில் தான வேணும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... நீங்க இப்பக் கவிதை எழுதியிருக்கீங்க....ஆங்.......

    ஜி! நான் எதுவுமேக் கேக்கல. :)))

    கவிதைகள் நன்று! :))

    ReplyDelete
  27. //உன் பெயரை வைக்கச் சொல்லி
    மொழி வளர்ச்சிக் கழக‌ வாயில்களிலெல்லாம்
    உண்ணாவிரதமிருந்து அடம்பிடிக்கிறது
    அழகு!!//
    அருமையான கவிதை... 'காதல்' எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி பதிவு எழுதும்போதே (அதுவும் சங்கத்தில்) கவிதை ,கற்கண்டு மழையாய்ப் பொழிகிறதே... உண்மையில் காதலிக்க ஆரம்பித்தால்... பூமி பூவாய் மாற,
    வான் வண்டாய் சுற்ற,இரவு வெள்ளையாக,நிலவு கொள்ளை போக..
    என்னதிது..? வார்த்தைல்லாம் குந்தாங்குறையா வருது...
    போங்கப்பா... போய் ஒழுங்கா மொக்கை,கும்மி வேலையப் பாருங்க...
    காதலாம், கவிதையாம்...சங்கத்துல சிங்கமா இருக்கணும்... மானா மாறக்கூடாது....

    ReplyDelete
  28. காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னயே, எனக்கு சும்மாத் தானாவே கவித ஊத்தெடுத்து ஆறா ஓடுச்சே, அதுக்கென்ன சொல்றீங்க:):):)

    ReplyDelete
  29. //இல்ல நான் தான் பர்ஸ்ட் :-)
    //

    அப்படியா? என்ன ஒரு சாதனை? ரொம்ப சந்தோஷம் :):)

    ReplyDelete
  30. //என்னங்க சொல்றீங்க?? காதலி மொதல்ல கெடைக்கனும்ல.. அப்புறம்தானே ஐஸ், சர்பத் லாம் வைக்க முடியும்... அதுக்கு என்ன வழி?? ;))
    //

    உங்களுக்கு காதலி வேண்டுமென்றால் வருணிடம் டிப்ஸ் கேளுங்க, நிறைய கிடைக்கும்.

    ReplyDelete
  31. //காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னயே, எனக்கு சும்மாத் தானாவே கவித ஊத்தெடுத்து ஆறா ஓடுச்சே, அதுக்கென்ன சொல்றீங்க:):):)

    //

    அதுக்கு தான் உங்களுக்கு கவுஜாயினி பட்டத்தை குடுத்திருக்கோம்ல?

    ReplyDelete
  32. //காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னயே, எனக்கு சும்மாத் தானாவே கவித ஊத்தெடுத்து ஆறா ஓடுச்சே, அதுக்கென்ன சொல்றீங்க:):):)

    //

    அதுக்கு தான் உங்களுக்கு கவுஜாயினி பட்டத்தை குடுத்திருக்கோம்ல?

    ReplyDelete
  33. //கப்பி பய said...

    :))

    ஒன்னும் சொல்றதுக்கில்ல..நீ நடத்து ராசா :))//

    ரிப்பீட்டே!!!

    ReplyDelete
  34. காதலிக்க ஆரம்பிக்கும் முன்னரே கவிதை அருவியாய் கொடுகிறதே,தேனினும் இனிய சொற்கள்

    தி.விஜய்
    pugaippezhai.blogspot.com
    வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

    ReplyDelete
  35. //காதலிச்சா கவிதை வருமா? //
    எழுதுனாலோ, சொன்னாலோ, தட்டினாலோதான் கவிதை வரும்....காதலிச்சா வேற நெறைய வரும்

    ReplyDelete
  36. //காதலிச்சா கவிதை வருமா? //

    அது தெரியல. ஆனா நிச்சயம் blog ல வந்து கவிதை எழுதமாட்டீங்க

    ReplyDelete
  37. காதலிச்சா,கவிதை வருமான்னு தெரியாது.. ஆனா,

    மாசம் செல்போன் பில் பயயங்கரமா வரும்.

    நிமிசத்துக்கு ஒரு முறை ஸ் எம் ஸ் வரும்

    எப்ப பாத்தாலும் சிரிப்பு வரும்

    அதுக்கு நமக்கு 'லூசு'ன்னு ஒரு பெயர் வரும்!:)))))

    ReplyDelete
  38. //என் நட்புப் பட்டியலில்
    முந்திச் செல்கிற‌து...
    நான் இல்லாத நேரங்களில்
    உன் தேகம் தொட முற்படும்
    வில்லத்தன மழையைத்
    தடுத்து நிறுத்தும்
    உன் கத்தரிப்பு நிர குடை!!//
    \\உன் விழிவிழுந்த நாள்முதல்
    இமைகள் மூடியபின்தான்
    விரிகிறது காட்சிகளெனக்கு...\\

    இவ்விரு கவிதைகளையும் வெகுவாக ரசித்தேன்.வாழ்த்துக்கள் ஜி..!

    "நிர - நிற" தட்டச்சும் போது எழுந்த பிழையென நினைக்கிறேன்,சரி பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே.

    ReplyDelete
  39. அட்லாஸ் வாலிபர் 'ஜி'க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. /
    அடித்து திருத்தப் படாமலேயே
    கவிதையாகிறது
    எல்லா கிறுக்கல்களும்
    உனை எழுதும் போது மட்டும்...
    /

    இந்த மாதிரி கவுஜன்களை எல்லாம் அடித்து இல்ல அடித்து உதைத்து திருத்தனும்யா

    :))))))))))

    ReplyDelete
  41. /
    கயல்விழி said...

    காதலிக்க கவிதை எழுத தெரிய வேண்டாம், பேச தெரிந்தாலே போதும், முக்கியமா காதலியை ஐஸ் வைக்க தெரியனும்.
    /

    பாத்தாலே பம்மனும்!?!?!?
    :)))))))))

    ReplyDelete
  42. /
    வடகரை வேலன் said...

    //நீ...
    புன்னகை தேசத்திலும்
    போர்தொடுக்கும் சமாதான புறா...//

    நல்லா இருக்கு.

    காதலிச்ச கவித வருமோ இல்லையோ, கடன் வரும் ஜாக்கிரதை
    /

    தெய்வமே !!!!!!!!!!!!
    :)))))))))

    நல்லா இருங்க.

    ReplyDelete
  43. /
    ILA said...

    //காதலிச்சா கவிதை வருமா? //
    எழுதுனாலோ, சொன்னாலோ, தட்டினாலோதான் கவிதை வரும்....காதலிச்சா வேற நெறைய வரும்
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  44. /
    கயல்விழி said...

    //காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னயே, எனக்கு சும்மாத் தானாவே கவித ஊத்தெடுத்து ஆறா ஓடுச்சே, அதுக்கென்ன சொல்றீங்க:):):)

    //

    அதுக்கு தான் உங்களுக்கு கவுஜாயினி பட்டத்தை குடுத்திருக்கோம்ல?
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  45. அருமையான கவிதைகள்
    அட்டகாசமான சங்கத்து அக்மார்க் நகைச்சுவையும்.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)