Thursday, June 26, 2008

கல்யாணத்துக்கு காத்துட்டிருக்குற சகபதிவர்கள் கவனத்திற்கு..!

முதல்ல உங்க செல்போன் பத்திரமா இருக்கான்னு பார்த்துக்குங்க..
ஏன்னா சமீபகாலமா ஆம்புளப்பசங்க தொலைக்குற முதல் பொருள் கைபேசி தானாம்.
பொண்ணுங்க தொலைக்குறது கைக்குட்டையாம்.

இந்தக் கைபேசிங்குற செல்போன் இல்லேன்னா மொபைல் இருக்கே...
அதை சிலவங்க வேணும்னே தொலைச்சிடுவாங்களாம்.காரணம் என்னன்னா அதால வர்ற தொந்தரவு தாங்க..

தொந்தரவு யார்க்கிட்டிருந்து வரும்..?

பெரும்பாலும் ஆபிஸ்லிருந்து வரும்.

அப்புறம் பிரண்ட்ஸ்கிட்டிருந்து உங்க பொறந்த நாளுக்கோ,கல்யாண நாளுக்கோ இல்ல உங்க எதிரியோட கருமாதி நாளுக்கோ ட்ரீட் கேட்டு வரும்..இல்லேன்னா அவங்க பொறந்த நாளுக்கோ,கல்யாண நாளுக்கோ இல்ல அவங்க எதிரியோட கருமாதி நாளுக்கோ கடன் கேட்டு கூட வரும்.

இது பத்தி பேசிட்டிருக்கும் போது நம்ம சக பதிவர் அங்கிள் 'நாமக்கல் சிபி' இருக்காரில்லையா?
அவர் என்ன சொல்றாருன்னா அவர் இப்படி அடிக்கடி செல்போனை வேணுமின்னே தொலைச்சிடுவாராம்.

'ஏனுங் அங்கிள்? எதுக்குத் தொலைக்கிறீங்?' கன்னு கேட்டா, 'உனக்குக் கல்யாணம் ஆனா நீயே புரிஞ்சுக்குவே'ங்குறார்.

அவர் செல்போனைத் தொலைக்குறதுக்காகவெல்லாம் போய் நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன? அதுல வேற 'பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.

அதான் அவரை நோண்டி,நொங்கெடுத்துக் கேட்க அங்கிள் என்ன சொல்றாருன்னா கல்யாணம் பண்ணிட்டு செல்போனும் வச்சிருந்தா வீட்டுக்காரம்மா அதாங்க wife செல்போன் ல கூப்பிடும் போதெல்லாம் எதிர்பேச்சுப் பேசாம 'ம்ம் ம்ம்'னு சொல்லிட்டே இருக்கணுமாம்.வீட்டுல இருக்கும் போது தலையாட்டிட்டே 'ம்ம்' சொல்லிப் பழகி செல்போன் ல பேசும் போதும் தலையாடுறதால பார்க்குறவங்க 'கொஞ்சம் மெண்டலோ'ன்னு நினைக்குறாங்களாம்.அதனால எப்ப 'ம்ம்' கொட்டி அலுத்துப் போகுமோ அன்னிக்கு செல்போனை வேணுமின்னே தொலைச்சிடுவாராம்.

இதனால என்ன சொல்றேன்னா நம்ம சக பதிவர்கள்ல இந்த வருஷம் கல்யாணத்துக்காகக் காத்திருக்கிறவங்க எல்லோரும் எக்ஸ்ட்ராவா நிறைய செல்போன் வாங்கி வச்சுக்குங்க..
நீங்க போடுற பந்தியில சாப்பிட்டுட்டு விரலை நக்கிட்டுப் போற பசங்க எல்லோர்க்கிட்டயும் கிfப்டா செல்போனையே கேட்டு வாங்கி வச்சுக்குங்க.

இந்த வீடியோ நம்ம நாமக்கல் சிபி ஆண்ட்டிக்காக...





' ஆண்ட்டி..இனிமே நீங்க சொல்றதுக்கெல்லாம் அங்கிள் செல்போன்ல 'ம்ம் ம்ம்' கொட்டும் போதெல்லாம் அவர் குரலை நல்லாக் கவனிச்சிட்டே இருங்க.இல்லேன்னா இப்படித்தான் ஏதாவது கோல்மால் பண்ணிடுவார்.அப்படிப்பட்ட அங்கிள் அவரு.அப்புறம் இந்தப் பதிவை நீங்க பார்த்துட்டீங்கன்னா இனிமே அவர் செல்போனைத் தொலைக்கவே மாட்டார் '

50 comments:

  1. அண்ணி
    ரிசானை நம்பாதீங்க!
    உங்களுக்கே தெரியாதா? சிபி அண்ணன் ரொம்ப நல்லவரு!:-)

    ஜொள் போன் வேணாம்-னு தான் செல் போனைத் தொலைக்கறாரு!
    நம்புங்க! நம்புங்க! நம்புங்க!

    ReplyDelete
  2. கேயார்ரெஸ் அங்கிள்..
    நான் சொல்வதெல்லாம் உண்மை..
    உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

    நீங்க கூட உங்க வீட்டுக்காரம்மாக்கிட்ட அப்படித்தான் :P

    ReplyDelete
  3. இங்க இன்னொருத்தர் சொ-செ-சூ போட்டுக்கிட்டார்..

    ReplyDelete
  4. தள சிபியைபற்றிய உண்மைகளை...

    ReplyDelete
  5. தள சிபிக்காக இனிமேல் நான் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் போடமாட்டேன்...

    ReplyDelete
  6. 'பாலகன்' அண்ணே சூப்பர்:)

    ReplyDelete
  7. //இந்தப்பதிவுக்கு...
    கடுமையான கண்டனங்கள்!//

    repeatuuu ;-)

    ReplyDelete
  8. ரிஷான் தத்தா
    அந்த வீடியோ ஓடலை அதைக்கொஞ்சம் பாருங்கோ.

    ReplyDelete
  9. அதுல வேற 'பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.

    நல்ல காமெடி

    ReplyDelete
  10. //அண்ணி
    ரிசானை நம்பாதீங்க!
    உங்களுக்கே தெரியாதா? சிபி அண்ணன் ரொம்ப நல்லவரு!:-)
    //

    கேயாரெஸ் அங்கிள்..இவ்ளோ உள்குத்தா? பாவமுங்க சிபி அங்கிள்.. :P

    //ஜொள் போன் வேணாம்-னு தான் செல் போனைத் தொலைக்கறாரு!
    நம்புங்க! நம்புங்க! நம்புங்க! //

    ஜொள் போனுன்னா?
    பொண்ணுங்க இவரப் பார்த்து ஜொள்ளு விடறாங்கன்னு சொல்ல வர்றீங்களா?

    சிபி ஆண்ட்டி,கொஞ்சம் கவனிங்க அவரை... :P

    ReplyDelete
  11. // தமிழன்... said...
    இங்க இன்னொருத்தர் சொ-செ-சூ போட்டுக்கிட்டார்..//

    ஆஹா...யாரு அவரு திரும்பவும் சொந்தச் செலவுல சூனியம் வச்சுக்கிட்டது தமிழன்?

    ReplyDelete
  12. //தள சிபிக்காக இனிமேல் நான் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் போடமாட்டேன்...//

    ஆஹா தமிழன்...
    சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டு கடைசியா இப்படி ஒரு பின்னூட்டமா?
    என்ன மாதிரியெல்லாம் எஸ்கேப் ஆகுறீங்கப்பா?

    ReplyDelete
  13. வாங்க குமரன் :)

    // குமரன் (Kumaran) said...
    :-)) //

    சூப்பரா சிரிக்கிறீங்க..எத்தனை செல்போனைத் தொலைச்சீங்க ?

    ReplyDelete
  14. // வெட்டிப்பயல் said...
    :-) //

    வாங்க வெட்டிப்பயல்,

    உங்க பொழப்பும் சிரிப்பா சிரிக்குது போலிருக்கு? :P

    ReplyDelete
  15. //கவிநயா said...
    ம்ஹ்ம்... :))) //

    வாங்க கவிநயா :)
    எதுக்குங்க இவ்ளோ பெரிய பெருமூச்சு?

    ReplyDelete
  16. //நிஜமா நல்லவன் said...
    'பாலகன்' அண்ணே சூப்பர்:) //

    பாலகன் ஓகே..
    அது என்ன அண்ணா?
    நிஜமாவே நல்லவன் தானா நீங்க ?

    ReplyDelete
  17. // கானா பிரபா said...
    //இந்தப்பதிவுக்கு...
    கடுமையான கண்டனங்கள்!//

    repeatuuu ;-)//

    சொல்லாம இருப்பீங்களா என்ன கானா அண்ணா?உங்க வீட்டுக்காரம்மாவுக்கும் இந்த வீடியோவைக் காட்டணும்?

    ReplyDelete
  18. // கார்த்திக் said...
    ரிஷான் தத்தா
    அந்த வீடியோ ஓடலை அதைக்கொஞ்சம் பாருங்கோ.//

    கார்த்தி அங்கிள்,அது நல்லா ஓடுது அங்கிள்...திரும்பவும் பாருங்க அங்கிள்..

    ReplyDelete
  19. //Anonymous said...
    அதுல வேற 'பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.//

    அது..அதான்...அதே தான் அனானி :)

    ReplyDelete
  20. // முரளிகண்ணன் said...
    :-))))))))))))))))))))))//

    முரளிகண்ணன்..ரொம்பப் பெரிய சிரிப்போட வந்திருக்கீங்க...வாங்க வாங்க :)

    ReplyDelete
  21. // புதுகைத் தென்றல் said...
    haa haa haa haa //

    வாங்க புதுகைத் தென்றல் :)
    ரொம்ப சிரிக்கிறீங்க..வீட்ல செல்போன் அடிக்கடி தொலையுதா?

    ReplyDelete
  22. தாத்தானு உங்ககிட்ட சொன்ன நீங்க வேற யோரோ அங்கிளுக்கு பதில் சொல்லறிங்க. இந்த பேரனுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க தாத்தா.

    ReplyDelete
  23. //எதுக்குங்க இவ்ளோ பெரிய பெருமூச்சு?//

    hiyo! athu perumoochchu illai. video-la irukkavar maathiri cholli paarththen - mhmm... :)

    ReplyDelete
  24. //தாத்தானு உங்ககிட்ட சொன்ன நீங்க வேற யோரோ அங்கிளுக்கு பதில் சொல்லறிங்க. இந்த பேரனுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க தாத்தா.//

    கார்த்திக் தாத்தா..உங்க வயசைக் குறைச்சி அங்கிள்னு கூப்டா உங்களுக்கு இவ்ளோ லொள்ளா? :P

    ReplyDelete
  25. அண்ணி
    ரிசானை நம்பாதீங்க!
    உங்களுக்கே தெரியாதா? சிபி அண்ணன் ரொம்ப நல்லவரு!:-)

    ஜொள் போன் வேணாம்-னு தான் செல் போனைத் தொலைக்கறாரு!
    நம்புங்க! நம்புங்க! நம்புங்க!

    ReplyDelete
  26. வீடியோ ஐடியாவுக்கு நன்றி!

    :))

    ReplyDelete
  27. //அதுல வேற 'பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.//

    ரிஷி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல உனக்கு....

    நான் அனுப்பின வீடியோ நல்ல யூஸ் பண்ணிட்டயே...இப்படி கணவர்களை மாட்டி விட்டுட்டயே...எல்லா கணவரிகளின் சாபமும் உனக்கு வந்துரப்போகுது..அப்புறம் நீ உன் மனைவிகிட்ட மாட்டிக்கும் போது காப்பாத்த யாரும் வரமாட்டாங்க தம்பி....:))))))))))))))

    அன்புடன்

    நட்சத்திரா..

    ReplyDelete
  28. உங்க ரவுசு தாங்க முடியல :-)))

    ReplyDelete
  29. //hiyo! athu perumoochchu illai. video-la irukkavar maathiri cholli paarththen - mhmm... :)//

    ஆமாம்..பொண்ணுங்க இப்படி சொல்லிப்பார்த்தாத்தான் உண்டு..வீட்டுக்காரர்கள் தான் எப்பவுமே சொல்லிட்டிருக்காங்களே.. :P

    ReplyDelete
  30. //வீடியோ ஐடியாவுக்கு நன்றி!

    :))///

    ஏன் சிவா?
    ஆகஸ்ட் 15க்குபிறகு தேவைப்படுமா?

    ReplyDelete
  31. //ரிஷி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல உனக்கு....//

    வாங்க நட்சத்திரா.. :)
    ஓவரில்லப்பா...உண்மையை வீடியோ போட்டு காட்டிட்டேன் :P

    //நான் அனுப்பின வீடியோ நல்ல யூஸ் பண்ணிட்டயே...இப்படி கணவர்களை மாட்டி விட்டுட்டயே...எல்லா கணவரிகளின் சாபமும் உனக்கு வந்துரப்போகுது..அப்புறம் நீ உன் மனைவிகிட்ட மாட்டிக்கும் போது காப்பாத்த யாரும் வரமாட்டாங்க தம்பி....:))))))))))))))//

    நானாவது மாட்டிக்கிறதாவது?
    நானின்னும் பாலகனுங்கோ :P

    ReplyDelete
  32. // கிரி said...
    உங்க ரவுசு தாங்க முடியல :-)))//

    ஓஹ் நீங்களும் உங்க வீட்டுக்காரம்மாக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டீங்களா?

    ReplyDelete
  33. என்னது? வலையுலகில் இன்னொரு அங்கிளா?

    ReplyDelete
  34. //பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.//

    இதெல்லாம் உங்களோட 2வது பையன் கவலை பட வேண்டிய மேட்டர் ரிஷான் அண்ணா.

    ReplyDelete
  35. //லதானந்த் said...
    என்னது? வலையுலகில் இன்னொரு அங்கிளா? //

    ஒருத்தரில்லைங்க அங்கிள்..
    என்னைத் தவிர மத்த அம்புட்டுப் பேரும் அங்கிள்ஸ் தானுங்க :P

    ReplyDelete
  36. //SanJai said...
    //பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.//

    இதெல்லாம் உங்களோட 2வது பையன் கவலை பட வேண்டிய மேட்டர் ரிஷான் அண்ணா. //

    இன்னும் 40 வருஷங் கழிச்சு அவருக்கும் இப்பதிவைக் காட்டுறேனுங்கோ :P

    ReplyDelete
  37. //எம்.ரிஷான் ஷெரீப் said...

    //SanJai said...
    //பால்ய வயது திருமணம்' எல்லாம் சட்டப்படி குற்றம் பாருங்க.//

    இதெல்லாம் உங்களோட 2வது பையன் கவலை பட வேண்டிய மேட்டர் ரிஷான் அண்ணா. //

    இன்னும் 40 வருஷங் கழிச்சு அவருக்கும் இப்பதிவைக் காட்டுறேனுங்கோ :P//

    அதுவும் சரி தான்.. அப்போ தான் அவரோட 3 வது பையனுக்கு பால்ய விவாகம் பண்ணாம இருப்பார். நீங்களும் ஒரு நல்ல தாத்தாவுக்கான கடமை பண்ண மாதிரி இருக்கும். :P

    ReplyDelete
  38. ரிஷான் சிபி ரொம்ப நல்லவருப்பா.
    ஏன் மொபைலைத் தொலச்சாரு. அமீரகத்தில கூட ஒருத்தர் செல் தொலைன்சுட்டதாவோ நம்பர் தொலைஞ்சிட்டதாவோ சொன்னார். விசாரிக்கணும்:))
    சூப்பர் வீடியோ.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)