Wednesday, June 11, 2008

காதலனா? கேனையனா?

வாங்கம்மா வாங்க..
ரெண்டு நாளா உங்களுக்கு வகுப்பெடுக்க விடாம நம்ம பசங்க வந்து லொள்ளு பண்ணிட்டிருந்தாங்க..
நீங்க வாங்க..நாம அவனுங்களுக்கு ஆப்பு வைக்கலாம்.

இனி மேட்டருக்கு போகலாம்..ஒவ்வொண்ணா சொல்லித்தர்ரேன்..
இன்னிக்கு வகுப்புக்கு வராத பொண்ணுங்களுக்கெல்லாம் கூட நீங்கதான் இதையெல்லாம் சொல்லி எச்சரிச்சு வைக்கணும்.அதனால கவனமாக் கேட்டுக்குங்க..

இன்னிக்கு இன்னும் காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு...

1.நல்லா தலை முடிக்கு விதவிதமா ஜெல் போட்டுப்பான்.சிலநேரம் கலரைக் கூட மாத்துவான் (நரையை மறைக்கவும் தான்).
சிம்பு மாதிரி நெனச்ச நேரம் நெனச்ச மாதிரி முடியை வச்சுப்பான்..அதுல மயங்கி நீங்க விழுந்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையே கரை படிஞ்சிடும்.


2.பொய்யா துயரக் கதையெல்லாம் சொல்லி,பார்த்தாலே நமக்கு அழுகை வர்ற மாதிரி மூஞ்சை வச்சிட்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவான்..வாங்கிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்க சொல்லிட்டுத் திரிவீங்க..
3.நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீர்ன்னு ஒருநாள் நீங்க (அன்னிக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட,வாசனையெல்லாம் பூசி,தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்..சாக்கிரத... 4.உங்களுக்கு மியூசிக் ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன்குற நெனப்புல.நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

5.ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான்.அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் ரோபோல நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன்.மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம்,பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான்.அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு ,நிஜமாவே ரோபோல நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1 CM புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..

6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்..உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

7.நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது..பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்..எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

8.அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,விகடனையெல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

9.பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது..வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட அலைவான்..'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல..அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி..
கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..



10.ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு ,டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க..உடனே நம்பி ஏமாந்திடாதீங்க.அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும். 11.எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க..மெண்டலாவோ,லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு. 12.திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்..தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க..அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு தத்துவம் பேச ஆரம்பிப்பான்.அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க. 13.பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது,ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது,கூலிங்கிளாஸ் போட்டுக்குறது,அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க..எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான்.அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க..பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

இன்னும் நிறைய இருக்கு..ஆனாலும் பொண்ணுங்களா...காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும்.அதனால நல்லாப் படிச்சு அம்மா,அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்குங்க..

என்னது? சில பொண்ணுங்க காதலிச்சிட்டிருக்காங்களா? அவங்களுக்கும் அட்வைஸ் பண்ணனுமா? அட்லாஸ் சிங்கத்தை அட்வைஸ் சிங்கமாக்குறீங்களே..சரி சரி..அந்தப் பொண்ணுங்களுக்கு இன்னொரு நாளைக்கு வரச் சொல்லுங்க..
ஆம்பளைப் பசங்களா இன்னொரு நாளைக்கும் உங்களுக்கிருக்குது ஆப்பு..இந்தப் பக்கம் எட்டிப்பார்த்துடாதீங்க.

ஆங்...அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.

இங்க நான் உதாரணத்துக்கு விளக்கின படங்கள்ல சினிமா ஹீரோக்களோட சேர்த்து நிஜ ஹீரோக்களும் இருக்காங்க.வாழ்நாள் முழுக்க கல்யாணமே பண்ணிக்கிறதில்லைங்குற முடிவோட இருக்கிற இவங்கள்ல யாராவது ஒருத்தர் பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னா.....

கொஞ்சம் கூடத் தயங்காம உடனே சரின்னு சொல்லிடுங்க.அம்புட்டு நல்ல பசங்க.

(பசங்களா..நீங்க சொல்லித் தந்த மாதிரியே உங்களைப் பத்திச்சொல்லிட்டேன்..இப்பவாச்சும் என் கழுத்துல வச்சிருக்குற கத்தியை எடுங்க )

91 comments:

  1. (பசங்களா..நீங்க சொல்லித் தந்த மாதிரியே உங்களைப் பத்திச்சொல்லிட்டேன்..இப்பவாச்சும் என் கழுத்துல வச்சிருக்குற கத்தியை எடுங்க )

    அட்டை கத்திக்கு பயந்த அட்லாஸ் சிங்கம் வாழ்க!!

    புதுவை சிவா.

    ReplyDelete
  2. அப்போ நீங்க சொல்லி இருக்கிற குணாதிசியங்கள் இருக்கறவங்க எல்லாம் கேனையனுங்க, இவங்களுக்கெல்லாம் விழுந்திடாதீங்கன்னு சொல்றீங்களா? :P

    ReplyDelete
  3. /
    வாங்கம்மா வாங்க..
    ரெண்டு நாளா உங்களுக்கு வகுப்பெடுக்க விடாம நம்ம பசங்க வந்து லொள்ளு பண்ணிட்டிருந்தாங்க..
    நீங்க வாங்க..


    இனி மேட்டருக்கு போகலாம்

    /

    இவனை எல்லாம் நம்பி வகுப்புக்கு வராங்களே அவிங்களை நினைச்சா சிப்பு வருது மேன் சிப்பு

    ReplyDelete
  4. /
    வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..
    /

    ஆனாலும் உண்மைய இப்பிடி பப்ளிக்ல போட்டு உடைக்கப்பிடாது ரிசானு!!


    :))

    ReplyDelete
  5. /
    .ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட அலைவான்..'
    /

    :))))))))

    ReplyDelete
  6. /
    'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.
    /

    அப்பிடியா !?!?

    ஜொல்லவே இல்ல

    :)))))

    ReplyDelete
  7. /
    அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி..
    /

    ஏன் ஸ்டூல் , ஸோபா அதெல்லாம் இல்லியா????


    :)))))

    ReplyDelete
  8. /
    எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க..மெண்டலாவோ,லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.
    /

    இப்பிடி கெக்கே பிக்கேனு காரணம் இல்லாம சிரிச்சிகிட்டிருக்கிறது பசங்களா பொண்ணுங்களான்னு உங்க யூகத்துக்கே விட்டுடறேன்பா

    :))))

    ReplyDelete
  9. லைலா போட்டோ சூப்பர்.


    (டிஸ்கி : இதுக்கு மேல இருக்கிற பின்னூட்டத்துக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

    ReplyDelete
  10. /
    தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..
    /

    இவளுங்களே பர்கரும் பீசாவும் தின்னு பீப்பா மாதிரி இருந்துகிட்டு எந்த ட்ரெஸ் போட்டாலும் கேவலமா திரியறாளுவ இதுல இவக அட்வைஸ் கேக்கணுமா!?!?

    தலைஎழுத்து :((

    ReplyDelete
  11. /
    அன்னிக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட,வாசனையெல்லாம் பூசி,தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க
    /

    அப்ப மீதி நாள்லாம் ஒரே கப்பா ரிசானு!?!?!?

    :((((((((

    ReplyDelete
  12. /
    இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்..
    /

    மாப்பி ரிசானு கழண்டு விழுகற மாதிரி ஜீன்ஸ் போட்டு திரியறது யாரு பொண்ணுங்களா பசங்களா நல்லா கண்ண தொறந்து பாரு ராசா

    ReplyDelete
  13. /
    காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும்.அதனால நல்லாப் படிச்சு அம்மா,அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்குங்க..
    /

    அம்மிணிகளா நீங்க காதலிக்க வேணாம் அடுத்தவன் தாலிய அறுக்காம இருங்கடி அது போதும்!!!!

    ReplyDelete
  14. /
    நான் உதாரணத்துக்கு விளக்கின படங்கள்ல சினிமா ஹீரோக்களோட சேர்த்து நிஜ ஹீரோக்களும் இருக்காங்க.
    /

    இது மேட்டரு
    :))


    /

    வாழ்நாள் முழுக்க கல்யாணமே பண்ணிக்கிறதில்லைங்குற முடிவோட
    /

    யாருப்பா அது ???

    டிஸ்கி : நான் அவன் இல்லை

    ReplyDelete
  15. ஹிஹி, இதுக்கு தான் என்னை மாதிரி பச்ச புள்ளை போட்டோவ புரபைலுல போடனும்னு சொல்றது. நான் தப்பிச்சேன்.

    கேஆரேஸுக்கு போடப்பட்ட பிட்டு சூப்பர்.


    Disci: பிட்டுனா இங்க விளக்கவுரைனு பொருள் கொள்க.

    அவரு உடனே பித்தா! பிறை சூடி பிட்டுக்கு மண் சுமந்த சித்தா!னு பதில் பிட்டு போட்டுட போறாரு. :))

    ReplyDelete
  16. @rishaan, முந்தின பதிவும் பார்த்தேன் ரசித்தேன். :))

    ReplyDelete
  17. அடேங்கப்பா! இவ்ளோ பெரீய்ய்ய்ய லிஸ்டா! சரிசரி. வகுப்புக்கு வர பொண்ணுங்களுக்கு ஹோம்வொர்க் ஒண்ணும் இல்லயா சாரே? இதெல்லாம் மனப்பாடம் பண்றதுக்கு காதல்ல விழறதே பெட்டர்னு போயிடப் போறாங்க! அப்பறம் நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டதெல்லாம் என்ன ஆவுறது?

    ReplyDelete
  18. //அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,விகடனையெல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..//

    இது நல்ல ஐடியாவ இருக்கே, ட்ரை பண்ணி பாத்துடலாம்

    வால்பையன்

    ReplyDelete
  19. /
    வால்பையன் said...

    //அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,விகடனையெல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..//

    இது நல்ல ஐடியாவ இருக்கே, ட்ரை பண்ணி பாத்துடலாம்

    வால்பையன்
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  20. சூப்பர்

    ReplyDelete
  21. என் காலேஜ் டீச்சரைவிட சூப்பரா பாடம் எடுக்குறீங்க! என் காலேஜுல இந்த மாதிரி ஒரு பாடம்கூட கிடையாது.. இப்படி மட்டும் ஒரு பாடம் இருந்துச்சு!! கண்டிப்பா 100 மார்க் தான் போங்க!!
    சரி theory class ok. practicals கிடையாதா?? :)))

    ReplyDelete
  22. //10.ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு ,டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க..உடனே நம்பி ஏமாந்திடாதீங்க.அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும். //
    டை உங்க ஊருல இவ்ளோ சின்னதாவா இருக்கும்..?

    ReplyDelete
  23. //வாழ்நாள் முழுக்க கல்யாணமே பண்ணிக்கிறதில்லைங்குற முடிவோட இருக்கிற இவங்கள்ல யாராவது ஒருத்தர் பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னா.....//

    யோவ் ரிஷானு ஏன் இந்த கொலைவெறி..? போறபோக்குல இப்பிடியா கொளுத்திப்போட்டு போறது..?

    ReplyDelete
  24. //இவங்கள்ல யாராவது ஒருத்தர் பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னா.....

    கொஞ்சம் கூடத் தயங்காம உடனே சரின்னு சொல்லிடுங்க.அம்புட்டு நல்ல பசங்க.// சித்தப்பு உங்க சூது வாது எங்களுக்கும் தெரியும்..

    ReplyDelete
  25. //ஆம்பளைப் பசங்களா இன்னொரு நாளைக்கும் உங்களுக்கிருக்குது ஆப்பு..இந்தப் பக்கம் எட்டிப்பார்த்துடாதீங்க.
    //
    இன்னைக்கு போட்ட பிட்டே ஓவரு.. இதுல
    இன்னொரு நாளைக்கு வேறயாஆஆ..?

    ReplyDelete
  26. //என் காலேஜ் டீச்சரைவிட சூப்பரா பாடம் எடுக்குறீங்க! என் காலேஜுல இந்த மாதிரி ஒரு பாடம்கூட கிடையாது.. இப்படி மட்டும் ஒரு பாடம் இருந்துச்சு!! கண்டிப்பா 100 மார்க் தான் போங்க!!
    சரி theory class ok. practicals கிடையாதா?? :)))//
    ஆத்தா தியரியிலேயே இந்த மார்க்கு அள்ளுறீங்க... இதுல ப்ராக்டிகல்ஸ் வேறயாஆஆஆ..?
    (ஆமா நீங்க இப்போ நார்மலா பண்ணீட்டிருக்கிறதே ப்ராக்டிகல்ஸ் தானே...?!)

    ReplyDelete
  27. வாங்க புதுவை சிவா :)

    //அட்டை கத்திக்கு பயந்த அட்லாஸ் சிங்கம் வாழ்க!!//

    ஐயோ..அது அட்டைக்கத்தி இல்லீங்க அண்ணாச்சி..அம்புட்டுப் பயலுங்களும் திருப்பாச்சி அருவாளத் தீட்டிக்கிட்டில்ல வந்தாங்க..

    நானெங்கிட்டு ஓடுறது?
    சுத்துவாற சூதுவாது தெரியாத பொம்புளப் புள்ளைங்க வேற..அதுங்களக் காப்பாத்தணும்ல..
    அதேன்..சிங்கம் கொஞ்சம் சீற்றத்தக் கொறச்சிக்கிட்டது :P

    ReplyDelete
  28. //அப்போ நீங்க சொல்லி இருக்கிற குணாதிசியங்கள் இருக்கறவங்க எல்லாம் கேனையனுங்க, இவங்களுக்கெல்லாம் விழுந்திடாதீங்கன்னு சொல்றீங்களா? :P//

    இம்புட்டு நேரம் பாடத்துல அதத்தான் சொல்றேன் வயசுப் பொண்ணு... :)
    ரொம்ப வெவரமாத்தான் இருக்கீக..
    சுத்துவட்டாரத்துல இருக்குற புள்ளகளுக்கும் இதக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க..
    புண்ணியமாப் போகும்.. :)

    ReplyDelete
  29. //இவனை எல்லாம் நம்பி வகுப்புக்கு வராங்களே அவிங்களை நினைச்சா சிப்பு வருது மேன் சிப்பு //

    என்னை நம்பி வராம உங்களை நம்பியா வருவாங்க சிவா?
    நான் நல்ல வாத்தியார்னு அம்புட்டுப் புள்ளைகளுக்கும் தெரியும்.. :)
    வராம இருப்பாகளா?

    ReplyDelete
  30. //ஆனாலும் உண்மைய இப்பிடி பப்ளிக்ல போட்டு உடைக்கப்பிடாது ரிசானு!! //

    ஓஹ்..அப்ப அது உண்மை தானா?

    புள்ளைங்களா..லிஸ்ட்ல பேக் ஓட இருக்குற ஆளத் தூக்கிடுங்க மகராசிகளா.. :P

    ReplyDelete
  31. // மங்களூர் சிவா said...
    /
    அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி..
    /

    ஏன் ஸ்டூல் , ஸோபா அதெல்லாம் இல்லியா??? //

    கொஞ்சூண்டு இடம் கொடுத்தாப் போதுமே..குத்த வச்சு உக்காந்து கும்மியடிச்சிடுவீகளே :P

    ReplyDelete
  32. //லைலா போட்டோ சூப்பர்.//

    பார்த்தீங்களா பொண்ணுங்களா?
    உங்க முன்னாடியே கல்யாணமான ஒரு புள்ளை பேர் சொல்லி எப்படி ஜொள்ளு விடறாரு பாருங்க இந்த சிவா:P

    ReplyDelete
  33. //இப்பிடி கெக்கே பிக்கேனு காரணம் இல்லாம சிரிச்சிகிட்டிருக்கிறது பசங்களா பொண்ணுங்களான்னு உங்க யூகத்துக்கே விட்டுடறேன்பா //

    //இவளுங்களே பர்கரும் பீசாவும் தின்னு பீப்பா மாதிரி இருந்துகிட்டு எந்த ட்ரெஸ் போட்டாலும் கேவலமா திரியறாளுவ இதுல இவக அட்வைஸ் கேக்கணுமா!?!?

    தலைஎழுத்து :((//

    //அப்ப மீதி நாள்லாம் ஒரே கப்பா ரிசானு!?!?!?

    :(((((((( //

    //மாப்பி ரிசானு கழண்டு விழுகற மாதிரி ஜீன்ஸ் போட்டு திரியறது யாரு பொண்ணுங்களா பசங்களா நல்லா கண்ண தொறந்து பாரு ராசா//

    //அம்மிணிகளா நீங்க காதலிக்க வேணாம் அடுத்தவன் தாலிய அறுக்காம இருங்கடி அது போதும்!!!!//

    அன்பான தாய்மார்களே,இளம்பெண்களே...

    மங்களூர்லிருந்து சிவான்னு ஒருத்தர் முதுகுல ஒரு பையோட கிளம்பிவந்து இப்படிப்பட்ட வில்லங்கமான கேள்விகளோட ஊருக்குள்ள உலாத்திட்டுத் திரியுறார்..

    ஆள் கைவசமா சிக்கிட்டார்னா கேள்விகளுக்கான பதிலை நல்லா விளக்கு மாறு கேட்டுக் கொள்வதோடு அவருக்கு கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி,மொட்டையடித்து சாமியாராக்கி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  34. //ஹிஹி, இதுக்கு தான் என்னை மாதிரி பச்ச புள்ளை போட்டோவ புரபைலுல போடனும்னு சொல்றது. நான் தப்பிச்சேன்.//

    அம்பி அண்ணாச்சி... பச்சப்புள்ள போட்டோ போட்டும் படம் ஓட்டுவேன்ல :P
    இன்னொரு பதிவு இருக்கு அண்ணாச்சி :)

    //கேஆரேஸுக்கு போடப்பட்ட பிட்டு சூப்பர். //

    இது சுமாருங்க...இன்னும் இருக்கு அவருக்கு :P


    //Disci: பிட்டுனா இங்க விளக்கவுரைனு பொருள் கொள்க.

    அவரு உடனே பித்தா! பிறை சூடி பிட்டுக்கு மண் சுமந்த சித்தா!னு பதில் பிட்டு போட்டுட போறாரு. :))//

    கேயாரெஸ் அங்கிள்..இது உங்கள் கவனத்திற்கு ! :)

    ReplyDelete
  35. வாங்க அம்பி :)

    //@rishaan, முந்தின பதிவும் பார்த்தேன் ரசித்தேன். :))//

    பதிவையா?பிகருங்களையான்னு தெளிவா ஜொள்ளணும்ல? :P

    ReplyDelete
  36. வாங்க கவிநயா :)

    //அடேங்கப்பா! இவ்ளோ பெரீய்ய்ய்ய லிஸ்டா! சரிசரி. வகுப்புக்கு வர பொண்ணுங்களுக்கு ஹோம்வொர்க் ஒண்ணும் இல்லயா சாரே?//

    இந்தப் பதிவை ஒரு நாளைக்கு நாலு வாட்டி பார்த்து எழுதச் சொல்லியிருக்கேன்.

    //இதெல்லாம் மனப்பாடம் பண்றதுக்கு காதல்ல விழறதே பெட்டர்னு போயிடப் போறாங்க! அப்பறம் நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டதெல்லாம் என்ன ஆவுறது? //

    காதல்ல விழ விடுவேனா என்ன?
    அவளுக ஆத்தாக்களுக்கும் அப்பன்களுக்கும் கூட ஒரு கிளாஸ் எடுப்பேன்ல :P

    ReplyDelete
  37. //இது நல்ல ஐடியாவ இருக்கே, ட்ரை பண்ணி பாத்துடலாம் //

    இதே வேலையாத்தான் அலையுறீங்களா வால்பையன் ? :P
    உங்க போட்டோ ஒண்ணும் அனுப்பிட்டீங்கன்னா அடுத்த பதிவுக்கு யூஸ் ஆகுமே ? :)

    ReplyDelete
  38. வாங்க தூயா :)

    //சூப்பர்//

    அப்ப பாடம் நல்லாப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  39. எல்லாம் சரி அங்கிள்,சில பேரு பழைய போடோ வச்சுக்கிட்டு வயசக்கேட்ட திரிஷா (பாட்டி ?) வயசு தான் என்வயசும்னு சொல்லிட்டு சுத்துரவங்ககிட்ட தப்பிப்பது எப்படின்னு வகுப்பெடுத்திருந்தா பொண்ணுங்க மத்தில ஒரு அவர்னஸ் கிரியேட் பண்ணுன மாதிரியும் இருக்கும்.

    ReplyDelete
  40. வாங்க தமிழ்மாங்கனி :)

    //என் காலேஜ் டீச்சரைவிட சூப்பரா பாடம் எடுக்குறீங்க! //

    நன்றிங் :)

    //என் காலேஜுல இந்த மாதிரி ஒரு பாடம்கூட கிடையாது.. இப்படி மட்டும் ஒரு பாடம் இருந்துச்சு!! கண்டிப்பா 100 மார்க் தான் போங்க!!//

    எந்தக் காலேசுன்னு சொல்லிட்டிங்கன்னா அங்கேயும் வந்து கிளாஸ் எடுப்பேனுங்... :)

    //சரி theory class ok. practicals கிடையாதா?? :)))//

    தியறி கிளாஸ்ல இங்கிட்டு உலாவிட்டிருக்குற பசங்க போட்டோ போட்டதுக்கே புள்ளைங்க எல்லாம் மிரண்டிடுச்சுங்...இதுல பிராக்டிகல்ங்க்ற விஷப்பரீட்சை எல்லாம் வேணாமுங்..

    ReplyDelete
  41. //டை உங்க ஊருல இவ்ளோ சின்னதாவா இருக்கும்..? //

    என்கிட்ட டைன்னு சொல்லிட்டு ரெண்டு ரிப்பன் துண்டை வச்சிட்டா இம்புட்டு நாள் ஷோ காட்டுறீங்க தமிழ்ப்பறவை..?

    உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு கொடியில காயப்போட்ட நீலக் கலர் ரிப்பனைத் தேடுது பாருங்க..கொண்டு போய்க் கொடுத்துடுங்க ராசா :P

    ReplyDelete
  42. //இன்னைக்கு போட்ட பிட்டே ஓவரு.. இதுல
    இன்னொரு நாளைக்கு வேறயாஆஆ..?//

    தமிழ்ப்பறவை ,அதான் பசங்க தப்பித் தவறிக்கூட எட்டிப்பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன்ல.. :)

    ReplyDelete
  43. வாங்க கார்த்திக் :)

    //எல்லாம் சரி அங்கிள்,//

    அங்கிளா? ஒரு வேளை கேயாரெஸ்ஸைச் சொல்றீங்களோ?

    //சில பேரு பழைய போடோ வச்சுக்கிட்டு வயசக்கேட்ட திரிஷா (பாட்டி ?) வயசு தான் என்வயசும்னு சொல்லிட்டு சுத்துரவங்ககிட்ட தப்பிப்பது எப்படின்னு வகுப்பெடுத்திருந்தா பொண்ணுங்க மத்தில ஒரு அவர்னஸ் கிரியேட் பண்ணுன மாதிரியும் இருக்கும்.//

    எலே மக்கா..நம்ம திரிஷாவப் போய்,16 வயசுப் புள்ளையப் போய் ஒருத்தர் பாட்டின்னு சொல்லி வாத்தியார் நெஞ்சைச் சுட்டுட்டாகடா சுட்டுட்டாக.. :(
    இன்னிக்கு எல்லா இடத்திலயும் இதுக்காகக் கலவரம் வெடிக்கணும் பயலுகளே..
    தலைமை தாங்க நானும் திரிஷாவும் வந்துட்டே இருக்கோம் :)

    ReplyDelete
  44. அடே...கொழுப்பு புடிச்ச ரிஷானு!
    :-))))))))))))))))))))))))))

    ReplyDelete
  45. //கேஆரேஸுக்கு போடப்பட்ட பிட்டு சூப்பர்//

    அம்பி அப்பா!
    அது என்னப்பா என் மேல உனக்கு இம்"பிட்டு" பாசம்? :-)

    //அவரு உடனே பித்தா! பிறை சூடி பிட்டுக்கு மண் சுமந்த சித்தா!னு பதில் பிட்டு போட்டுட போறாரு. :))//

    இவ்ளோ தானா என்னய பத்தி தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்க?
    மங்களூர் சிவாவே என்னைய பத்திக் கதை கதையா சொல்லுவாரே!
    பச்சை மா மலை போல் சாலட்,
    பவழ வாய் கென்டக்கி சிக்கன்-னு பாசுரத்தயே மாத்திப் பாடுனவங்க ஆச்சே நாங்க!

    இந்தா பிட்டு!

    பிட்டா, ஃபிகர் தேடி, பெண் மானை அருளாளா!
    எத்தா, மறவாமல், நயனை நான் நினைக்கின்றேன்!
    வைத்தாய் பெண்ணை என் வீட்டு எதிர் வீட்டில்!
    அத்தா, என் ஆளு, இனி அவளே எனலாமே!
    :-))))

    ReplyDelete
  46. ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்.... இதுல இவ்வளவு விவகாரங்க இருக்கா....... வெவரமாச் சொல்லீருக்கீங்க. பொண்ணுங்க ஏற்கனவே ரொம்பத் தெளிவு. இனிமே ஒன்னும்........ சொல்ல வேண்டாம்....

    // (அன்னிக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட,வாசனையெல்லாம் பூசி,தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்..சாக்கிரத... //

    கிழிஞ்சது... ஏற்கனவே நம்மள யாரும் பாக்கலையேன்னு பொலம்பீட்டிருக்கேன். இதுல இது வேறையா! நல்லாருங்க...ரொம்ப நல்லாருங்க...

    ReplyDelete
  47. //உங்களுக்கு மியூசிக் ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..//

    ஜிக்குனு ஸ்டார்ட் த மீ-ஜிக் பண்ணிடுவாராக்கும்!

    //அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான்//

    அவர் ரேஞ்சுக்கு இன்ஸ்ட்ரூமெண்ட்டே தேவையில்ல! எங்க மாதவன் விசில் அடிச்சாருன்னாலே போதும்! மீஜிக் சும்மா கொட்டும்!

    விசில் அடிச்சி அசின் புடிச்ச ஜிரா என்பது கோலிவுட்டில் இருந்து பம்பரவுட் வரைக்கும் பிரபலம்!

    அவரை பூஜா-கூஜா என்று பழித்துச் சொன்ன ரிஷானை கன்னிப் பெண்கள் நாளை முதல் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்!

    ReplyDelete
  48. //லைலா போட்டோ சூப்பர்//

    மங்களூர் மாப்பியைக் கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்!

    //
    இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்..
    /
    மாப்பி ரிசானு கழண்டு விழுகற மாதிரி ஜீன்ஸ் போட்டு திரியறது யாரு பொண்ணுங்களா பசங்களா நல்லா கண்ண தொறந்து பாரு ராசா//

    அதெல்லாம் நல்லாவே கண்ணைத் தொறந்து, ஜீன்ஸ் சைஸ் மொதக் கொண்டு பாத்துட்டு தான், இப்பிடி மாத்தி எழுதி இருக்கான் மாப்பி!

    இதுக்காகவே ரிஷான் ஜீன்ஸ் கொளுத்தும் போராட்டம் ஆரம்பி சிவா! அந்நியன் துணியைப் பகிஷ்கரிப்போம்! :-)

    ரிசானு, உன் ஜீன்ஸ் அத்தனையும் கொண்டாந்து இக்கட போடுப்பா ராசா!

    ReplyDelete
  49. ரெண்டு நாள் இந்தப்பக்கம் வரல்ல...அதுக்குள்ள இப்படியா?...

    யப்பா ரிஷான், உங்க அங்கிள் எங்கிட்டோ போறாரு....கொஞ்சம் கவனிச்சுக்க :))

    ReplyDelete
  50. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    விசில் அடிச்சி அசின் புடிச்ச ஜிரா என்பது கோலிவுட்டில் இருந்து பம்பரவுட் வரைக்கும் பிரபலம்! //

    ஐயா....ஆஆஆஆஆஆஆஆ ஐயா...ஆஆஆஆஆ ஏன் இப்பிடி? ஏன் இப்பிடி...நான் எங்க பிடிச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    // அவரை பூஜா-கூஜா என்று பழித்துச் சொன்ன ரிஷானை கன்னிப் பெண்கள் நாளை முதல் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்! //

    முற்றுகையா முத்தக்கையா? ரிஷானுக்கு அப்ப முத்த யோகம்தான்.

    ReplyDelete
  51. Annachi pasanga mela yen intha kola veri ???

    ippadi oru nalla payyan image create panni entha ponnukku route podreengalo yaarukku theriyum ?! :P

    Ippove yaarum engalai kandukka maatengaraanga... ithula ithu veraya ? :P

    Aana onnu, ennathaan neenga pathivu pottu ponnungalai ippadi thisai thiruppinaalum "kidaikkarathu kidaikkaama irukkathu, kidaikkaama irukkarathu kidaikaathu"...
    he he he

    ReplyDelete
  52. //அது என்னப்பா என் மேல உனக்கு இம்"பிட்டு" பாசம்//

    ஏப்பா அம்பி இன்னுமா ஒனக்கு
    பிட்டு மேல பாசம்?.... ?.

    ReplyDelete
  53. //ippadi oru nalla payyan image create panni entha ponnukku route podreengalo yaarukku theriyum ?! //

    nathas, palarum puriyama kummi adichukittu irundhalum, neenga correct-a point-a pidichuteenga :))

    ReplyDelete
  54. @நாதாஸ அண்ணாச்சி
    //Ippove yaarum engalai kandukka maatengaraanga//

    இது காமிராவில் ஃபில்டர் செட் பண்ணிச் சொன்ன பொய் தான் என்றாலும்....

    // ponnungalai ippadi thisai thiruppinaalum "kidaikkarathu kidaikkaama irukkathu, kidaikkaama irukkarathu kidaikaathu"...//

    இது மட்டும் ஒரு வாசகம், திரு வாசகம், தெரு வாசகம்!

    கையைக் கொடுங்க நாதாஸ்! சூப்பருங்க!
    ரிஷானின் கன்னித் தந்திரங்கள், கன்னிப் பேச்சு, கன்னிப் பதிவு எதுவும் பலிக்காது! (போனாப் போவுது...கன்னிக் கனவு மட்டும் பலிக்கட்டூம்) :-)

    ReplyDelete
  55. //
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //
    இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்..
    /
    மாப்பி ரிசானு கழண்டு விழுகற மாதிரி ஜீன்ஸ் போட்டு திரியறது யாரு பொண்ணுங்களா பசங்களா நல்லா கண்ண தொறந்து பாரு ராசா//

    அதெல்லாம் நல்லாவே கண்ணைத் தொறந்து, ஜீன்ஸ் சைஸ் மொதக் கொண்டு பாத்துட்டு தான், இப்பிடி மாத்தி எழுதி இருக்கான் மாப்பி!


    //

    http://i237.photobucket.com/albums/ff163/mglrssr/madhumitha003.jpg
    http://i237.photobucket.com/albums/ff163/mglrssr/madhumitha002.jpg
    http://i237.photobucket.com/albums/ff163/mglrssr/madhumitha001.jpg

    ReplyDelete
  56. //பிட்டா, ஃபிகர் தேடி, பெண் மானை அருளாளா!
    எத்தா, மறவாமல், நயனை நான் நினைக்கின்றேன்!
    வைத்தாய் பெண்ணை என் வீட்டு எதிர் வீட்டில்!
    அத்தா, என் ஆளு, இனி அவளே எனலாமே!///

    நயனா!
    ஐயோடா
    உங்க அட்ரஸ் ப்ளீஸ்

    வால்பையன்

    ReplyDelete
  57. அடிக்கடி இந்த பக்கம் வந்தா இந்த 'சின்ன'பையனை பெரிய ஆளாக்கிடுவீங்கன்னு பாத்தா படத்தைப் போட்டு கவுத்திட்டீங்களே சிங்கம்.......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  58. ////பொய்யா துயரக் கதையெல்லாம் சொல்லி,பார்த்தாலே நமக்கு அழுகை வர்ற மாதிரி மூஞ்சை வச்சிட்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவான்..வாங்கிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்க சொல்லிட்டுத் திரிவீங்க..////
    ரகசியத்தை எல்லாம் உடைச்சிட்டியேப்பா... என்ன கொடுமைப்பா இது.... :(((

    ReplyDelete
  59. இப்படி சிங்கம் என்ற போர்வையில் எங்க ரோமியோக்களுடைய ரகசியங்களை எல்லாம் போட்டு உடைத்த ரிஷானை கண்டித்து அண்ணன் மங்களுர் சிவா தலைமையில் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வர அழைப்பு விடுக்கப்படுகின்றது.... :))))

    ReplyDelete
  60. ///(பசங்களா..நீங்க சொல்லித் தந்த மாதிரியே உங்களைப் பத்திச்சொல்லிட்டேன்..இப்பவாச்சும் என் கழுத்துல வச்சிருக்குற கத்தியை எடுங்க )////
    யார் யார்ன்னு உடனடியா வெள்ளை அறிக்கை விடவும். அவர்கள் அனைவரையும் சங்கத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.. :)))

    ReplyDelete
  61. எனது அருமை பெரியப்பா ரிஷானு அவர்களுக்கு..
    வணக்கம்.. நான் வகுப்புக்கு புதுசா வந்து இருக்குற ஸ்டுடண்ட் ..

    இந்த கொலைவெறி பதிவுக்கு மாடல் -லாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள்.
    இங்க கூறப்பட்டு இருக்கும் மேட்டரு எல்லாமே நூறு சதவீதம் உண்மை என அறிவிக்க படுகிறது..
    பெரியப்பா ரிஷானு அவர்களை நான் வன்மையாக கண்டித்து வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  62. //(அன்னிக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட,வாசனையெல்லாம் பூசி,தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்..சாக்கிரத... //

    செம காமெடி போங்க..
    என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிபுட்ட பெரியப்பு.

    ReplyDelete
  63. //அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,விகடனையெல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..//


    எங்களுக்கு புதுசு புதுசா ஐடியா கொடுக்கும் எங்க பெரியப்பு
    ரிஷான் அவர்களுக்கு நன்றிகள் பல..

    ச்சே.. இது தெரியாம போச்சே..
    யாருப்பா.. அங்க.. அந்த தினகரன் பேப்பர எடு..

    ReplyDelete
  64. வாங்க கேயாரெஸ் அங்கிள் :P

    //இவ்ளோ தானா என்னய பத்தி தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்க?
    மங்களூர் சிவாவே என்னைய பத்திக் கதை கதையா சொல்லுவாரே! //

    ஊசியைப் பார்த்து சல்லடை சொல்லிச்சாம் 'உன் மேல ஒரு ஓட்டை'ன்னு..அந்தக் கதையால்ல இருக்கு இங்க :P

    //பச்சை மா மலை போல் சாலட்,
    பவழ வாய் கென்டக்கி சிக்கன்-னு பாசுரத்தயே மாத்திப் பாடுனவங்க ஆச்சே நாங்க! //

    ஆஹா..கவித கவித
    நீங்க சுத்த சைவம்னு கேள்விப்பட்டேனே அங்கிள்..அதெல்லாம் பொய்யா அப்போ?

    //இந்தா பிட்டு!
    //

    கொடுங்க கொடுங்க :)

    //பிட்டா, ஃபிகர் தேடி, பெண் மானை அருளாளா!
    எத்தா, மறவாமல், நயனை நான் நினைக்கின்றேன்!
    வைத்தாய் பெண்ணை என் வீட்டு எதிர் வீட்டில்!
    அத்தா, என் ஆளு, இனி அவளே எனலாமே!//

    சூப்பர்..ஆனா வாழ்நாள் முழுக்க கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொன்னீங்க? நயனு எங்கிட்டாச்சும் தப்பிச்சு ஓடிடும்மா..

    ReplyDelete
  65. வாங்க குட்டி மாதவா ஜிரா :)
    (யாரும் ஐஸ் வைக்கிறதா நெனச்சுக்க வேணாம்.)

    //ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்.... இதுல இவ்வளவு விவகாரங்க இருக்கா....... வெவரமாச் சொல்லீருக்கீங்க.//

    அதே அதே...

    //பொண்ணுங்க ஏற்கனவே ரொம்பத் தெளிவு.//

    ஆமாங்க..அவங்க தண்ணியெல்லாம் அடிக்கிறதில்ல..அதான் :P

    //இனிமே ஒன்னும்........ சொல்ல வேண்டாம்....//

    என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?இன்னும் கத்துக் கொடுக்க எவ்ளோ இருக்கில்ல...

    //கிழிஞ்சது... ஏற்கனவே நம்மள யாரும் பாக்கலையேன்னு பொலம்பீட்டிருக்கேன். இதுல இது வேறையா! நல்லாருங்க...ரொம்ப நல்லாருங்க...//

    என்னது பார்க்கலியா?
    அதான் வ.வா.சங்கத்துல ஹீரோ போட்டோ போட்டுட்டம்ல..இனி ஊரே பார்க்கும்..அப்புறம் உங்க பூஜா பார்க்க மாட்டாங்களா என்ன? :P

    ReplyDelete
  66. //அவர் ரேஞ்சுக்கு இன்ஸ்ட்ரூமெண்ட்டே தேவையில்ல! எங்க மாதவன் விசில் அடிச்சாருன்னாலே போதும்! மீஜிக் சும்மா கொட்டும்!//

    அட அட அட..
    ஜிரா இதுக்குப் பேர்தானா ஜால்ரா?

    //விசில் அடிச்சி அசின் புடிச்ச ஜிரா என்பது கோலிவுட்டில் இருந்து பம்பரவுட் வரைக்கும் பிரபலம்!//

    அப்படியா? எவனும் என்கிட்ட ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்லையே :(

    //அவரை பூஜா-கூஜா என்று பழித்துச் சொன்ன ரிஷானை கன்னிப் பெண்கள் நாளை முதல் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்!
    //

    அட...அப்படியே போராட்டத்துக்கு வர்ற பொண்ணுங்களை வச்சு இன்னொரு வகுப்பு ஆரம்பிச்சிட்டாப் போச்சு.. :P

    ReplyDelete
  67. //அதெல்லாம் நல்லாவே கண்ணைத் தொறந்து, ஜீன்ஸ் சைஸ் மொதக் கொண்டு பாத்துட்டு தான், இப்பிடி மாத்தி எழுதி இருக்கான் மாப்பி!//

    இப்படியே பொதுவுல போட்டு உடைக்கிறது?இது நல்லா இல்ல..சிங்கம் வருத்தப்படுது பாருங்க :P

    //இதுக்காகவே ரிஷான் ஜீன்ஸ் கொளுத்தும் போராட்டம் ஆரம்பி சிவா! அந்நியன் துணியைப் பகிஷ்கரிப்போம்! :-)//

    ஆகவே இனிமுதற்கொண்டு நமது கேயாரெஸ் மற்றும் சிவா அவர்கள் வெளிநாட்டு ஆடைகள் எதையும் தவிர்த்து தனது கைகளால் நெய்யப்பட்ட ஆடையையே அணிவாரெனத் தெரிகிறது.அது கோவணமா என மக்கள் கேள்விகள் கேட்கக் கூடாது :P

    //ரிசானு, உன் ஜீன்ஸ் அத்தனையும் கொண்டாந்து இக்கட போடுப்பா ராசா!//

    இதே சான்ஸ்னு சிங்கத்தோட ஜீன்ஸ் எல்லாத்தையும் ஏலம் போடப் போறீங்கன்னு எனக்குத் தெரியும்.

    பன்னிகள் தான் தொப்பையோடு வரும்.
    சிங்கம் எப்பவும் ஜீன்ஸோடத்தான் வரும் :P
    (இந்த வாரப் பஞ்ச் டயலாக் :P )

    ReplyDelete
  68. //ரெண்டு நாள் இந்தப்பக்கம் வரல்ல...//
    வாங்க மௌலி :)
    என்ன எடுத்துட்டு வந்தீங்க? :P

    //அதுக்குள்ள இப்படியா?...//
    எதுக்குள்ள எப்படியா?

    //யப்பா ரிஷான், உங்க அங்கிள் எங்கிட்டோ போறாரு....கொஞ்சம் கவனிச்சுக்க :))//

    கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்.ஆண்ட்டிக்கிட்ட போட்டுக்குடுத்தாத்தான் சரிப்படுவார்.

    உருட்டுக்கட்டையொன்றே உருப்பட வைக்கும் வழியெனப்படும்.

    ReplyDelete
  69. //ஐயா....ஆஆஆஆஆஆஆஆ ஐயா...ஆஆஆஆஆ ஏன் இப்பிடி? ஏன் இப்பிடி...நான் எங்க பிடிச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    இதுக்கெல்லாம் அழக்கூடாது ஜிரா..
    உண்மைன்னா உண்மைன்னு தெளிவா சொல்லணும்.எங்க சொல்லுங்க பார்ப்போம்..
    'நான் தான் அசின் கையைப் பிடித்தேன்'

    // அவரை பூஜா-கூஜா என்று பழித்துச் சொன்ன ரிஷானை கன்னிப் பெண்கள் நாளை முதல் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்! //

    ///முற்றுகையா முத்தக்கையா? ரிஷானுக்கு அப்ப முத்த யோகம்தான்.///

    சின்னக் குழந்தைன்னா எல்லோரும் முத்தம் கொடுக்கத்தானே செய்வாங்க..இதுக்குப் போய் இப்படியா பொறாமப் படுறது ? :P

    ReplyDelete
  70. வாங்க நாதாஸ் :)

    //Annachi pasanga mela yen intha kola veri ???//

    ஐயோ..அதெல்லாம் இல்லீங்ணா.

    //ippadi oru nalla payyan image create panni entha ponnukku route podreengalo yaarukku theriyum ?! :P//

    அப்படியில்லீங்ணா..நான் ரொம்பச் சின்னப் பையங்ணா..ஏதோ இப்படிப் போகுது பொழப்பு..அதுல இப்படி லோடு லோடா மண்ணள்ளிப் போடாதீங்ணா..

    //Ippove yaarum engalai kandukka maatengaraanga... ithula ithu veraya ? :P//

    ரொம்ப நல்லதாப் போச்சுங்ணா..
    புள்ளைக அம்புட்டுப் பேரும் தப்பிச்சிடாளுங்க.. :)

    //Aana onnu, ennathaan neenga pathivu pottu ponnungalai ippadi thisai thiruppinaalum "kidaikkarathu kidaikkaama irukkathu, kidaikkaama irukkarathu kidaikaathu"...//
    தத்துவாமாண்ணா? நல்லாயிருக்குங்ணா.

    ஆனா கிடைக்கிறது கிடைச்சாலும் கிடைக்காம இருக்குறது கிடைச்சாலும் கிடைக்காதுன்னு நெனச்சது கிடைச்சாலும்,கிடைக்கும்னு நெனச்சது கிடைச்சாலும்,கிடைக்கிறது கிடைக்காமப் போனாலும் கிடைக்காம இருக்குறது கிடைக்காமப் போனாலும் கிடைக்காதுன்னு நெனச்சது கிடைக்காமப் போனாலும்,கிடைக்கும்னு நெனச்சது கிடைக்காமப் போனாலும் வருத்தப்படக் கூடாதுங்ணா :)

    ReplyDelete
  71. மௌலிண்ணா..

    //nathas, palarum puriyama kummi adichukittu irundhalum, neenga correct-a point-a pidichuteenga :))//

    நாதாஸ் கூடக் கூட்டு சேர்ந்துட்டு இப்படி எல்லார் முன்னாடியும் போட்டு உடைச்சிட்டீங்களே... :(

    ReplyDelete
  72. //கையைக் கொடுங்க நாதாஸ்! சூப்பருங்க!
    ரிஷானின் கன்னித் தந்திரங்கள், கன்னிப் பேச்சு, கன்னிப் பதிவு எதுவும் பலிக்காது! (போனாப் போவுது...கன்னிக் கனவு மட்டும் பலிக்கட்டூம்) :-)//

    யாரங்கே..?
    உடனே நம் கேயாரெஸ்ஸைக் கன்னித் தீவில் கொண்டு போய் ஓராண்டுக்குச் சிறைவைத்து தினமும் 'குருவி'படத்தை மட்டும் ஒரு நாளைக்கு நான்கு முறை காட்டிச் சித்திரவதை செய்யுங்கள்.

    ReplyDelete
  73. சிவாண்ணே..
    சின்னப்பையனுக்குப் போய் படம் காட்டி விளக்குறீங்களே..
    பாவம் அந்தப் புள்ளைக்கு என்ன கஷ்டமோ?
    வேணும்னா வலைப்பதிவர்களெல்லாம் சேர்ந்து டாலர்ல காசு சேர்த்து அந்தப் பொண்ணுக்குக் கொடுப்போமா?உங்க எல்லோர் சார்பா நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன்.. :P

    ReplyDelete
  74. வாங்க வால்பையன் :)

    http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_13.html

    இங்கிட்டு உங்களை இன்னிக்கு கேள்வியின் நாயகனாக்கியிருக்கேன்..பாருங்க :P

    ReplyDelete
  75. // தமிழ் பிரியன் said...
    அடிக்கடி இந்த பக்கம் வந்தா இந்த 'சின்ன'பையனை பெரிய ஆளாக்கிடுவீங்கன்னு பாத்தா படத்தைப் போட்டு கவுத்திட்டீங்களே சிங்கம்.......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹீரோ சார்..இப்படியெல்லாம் அவசரப்பட்டு அழக்கூடாதுங்க..பாருங்க பதிவையே சாக்கா வச்சு உங்க படத்தை உலகத்துக்கே காட்டிட்டேன் பார்த்தீங்களா? எந்தப் பொண்ணாவது பார்த்து ஏமாறாமப் போகுமா என்ன? :P

    ReplyDelete
  76. // தமிழ் பிரியன் said...
    இப்படி சிங்கம் என்ற போர்வையில் எங்க ரோமியோக்களுடைய ரகசியங்களை எல்லாம் போட்டு உடைத்த ரிஷானை கண்டித்து அண்ணன் மங்களுர் சிவா தலைமையில் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வர அழைப்பு விடுக்கப்படுகின்றது.... :))))//

    இப்படி என்னைப் பெரிய ஆளு ஆக்குறீங்களே தல...

    ஆர்ப்பாட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அண்ணன் தமிழ்ப்பிரியன் செலவில் கோழி பிரியாணியும்,பீரும் இலவசமாக வழங்கப்படும் என இத்தால் அறிவித்துக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  77. // தமிழ் பிரியன் said...
    ///(பசங்களா..நீங்க சொல்லித் தந்த மாதிரியே உங்களைப் பத்திச்சொல்லிட்டேன்..இப்பவாச்சும் என் கழுத்துல வச்சிருக்குற கத்தியை எடுங்க )////
    யார் யார்ன்னு உடனடியா வெள்ளை அறிக்கை விடவும். அவர்கள் அனைவரையும் சங்கத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.. :)))//

    ஹீரோ சார்..முதல் ஆளு நீங்க தான்ணே.. :P
    ஆமா..அது என்ன வெள்ளை அறிக்கை?
    அறிக்கை வேற கலர்ல இருக்கக்கூடாதா? :P

    ReplyDelete
  78. நமது வகுப்புக்கு இன்னிக்கு புது மாணவராக 'மகாராஜா பராக் பராக் பராக்' :P

    //எனது அருமை பெரியப்பா ரிஷானு அவர்களுக்கு..
    வணக்கம்.. நான் வகுப்புக்கு புதுசா வந்து இருக்குற ஸ்டுடண்ட் ..//

    பெரியப்பாவா? முதல்ல கண்ணாடியை மாத்துங்கப்பா :P

    //இந்த கொலைவெறி பதிவுக்கு மாடல் -லாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள்.//

    ஹி ஹி ..இப்படியெல்லாம் சொன்னீங்கன்னா நம்ம மாடல்களெல்லாம் என்கிட்ட மாடலா இருந்ததுக்குக் காசு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க.. :(

    //இங்க கூறப்பட்டு இருக்கும் மேட்டரு எல்லாமே நூறு சதவீதம் உண்மை என அறிவிக்க படுகிறது..
    பெரியப்பா ரிஷானு அவர்களை நான் வன்மையாக கண்டித்து வழிமொழிகிறேன்..//

    100 சதவீதம் உண்மைன்னா எதுக்குங்க கண்டிக்குறீங்க?புரியலையே :(

    ReplyDelete
  79. //எங்களுக்கு புதுசு புதுசா ஐடியா கொடுக்கும் எங்க பெரியப்பு
    ரிஷான் அவர்களுக்கு நன்றிகள் பல..

    ச்சே.. இது தெரியாம போச்சே..
    யாருப்பா.. அங்க.. அந்த தினகரன் பேப்பர எடு..//

    எம்புட்டுக் கெட்ட மகாராசாவா இருக்காரு இவரு?
    புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்தா இவரு உள்ளார புகுந்து அட்வைஸ்களை அள்ளிட்டுப் போறாரே..
    புள்ளைங்களா..சூதானமா இருந்துக்குங்க.. :)

    ReplyDelete
  80. மக்கா லே ரிஷான் யாமுடா இந்த கொலை வெறி தங்கமணி மேல உள்ள கோவத்தை எல்லாம் இங்கிட்டா காட்டுறது நல்லா இல்லடே

    எவளும் மாட்டலயேன்னு சந்தோசமா சிரிச்சிக்கிட்டு இருக்கேன் இப்படியே கண்டினிவ் பண்ணுப்பா சந்தோசம் :))

    ReplyDelete
  81. இந்த பதிவ போட்டதுக்கு மொவனே உனக்கு உட்டுக்கு போ இவ்த வாரம் முழுக்க தங்கமணி கய்யால பூரிக்கட்டை அடி வாங்குவாயாக

    வலையுலக ரோமியோக்கள் கோரசாக "ஆமாம்"

    ReplyDelete
  82. //எவளும் மாட்டலயேன்னு சந்தோசமா சிரிச்சிக்கிட்டு இருக்கேன் இப்படியே கண்டினிவ் பண்ணுப்பா சந்தோசம் :))//

    ஓஹ் அவனா நீயி ? :P
    புள்ளைங்களா..நம்ம மீறான் அன்வரைப் பார்த்துக்குங்க..
    போட்டோல மட்டுமில்ல..
    அவரொரு வாழும் உதாரணம் :P

    ReplyDelete
  83. // மீறான் அன்வர் said...
    இந்த பதிவ போட்டதுக்கு மொவனே உனக்கு உட்டுக்கு போ இவ்த வாரம் முழுக்க தங்கமணி கய்யால பூரிக்கட்டை அடி வாங்குவாயாக //

    ஊட்டுலதான் ஆரும் இல்லையே...இப்படியெல்லாம் பதிவு போடும்போதே கண்டுபிடிச்சிருக்கணும் பா :)

    ReplyDelete
  84. hahahahaha...

    ada paavameyy...enna aachu rishan??

    neenga anupina 'application'-a edhuvum reject aayiducha?? ;))

    andha kadupula thaan ithanai advice-aa?

    :))))))))

    ReplyDelete
  85. சும்மா கதை விடாதீங்க பாஸ், அதெல்லாம் சரித்திர காலம்.
    இன்னிக்கி அப்பிடி இல்ல. மங்களூர் சிவா சொல்லுறதுதான் உண்மை...

    ReplyDelete
  86. // malligai said...
    hahahahaha...

    ada paavameyy...enna aachu rishan??

    neenga anupina 'application'-a edhuvum reject aayiducha?? ;))

    andha kadupula thaan ithanai advice-aa?//

    அட என்னங்க மல்லிகை..
    ஒரு வாத்தியார்க்கிட்டப் போய் இப்படியெல்லாம் பேசலாமா? :P

    ReplyDelete
  87. //J J Reegan said...
    சும்மா கதை விடாதீங்க பாஸ், அதெல்லாம் சரித்திர காலம்.
    இன்னிக்கி அப்பிடி இல்ல. மங்களூர் சிவா சொல்லுறதுதான் உண்மை...//

    சும்மா ஜே ஜேன்னு வார்ரீங்களே ரீகன் :P

    பொண்ணுங்களா..புதுப்பையன் போலிருக்கு..பாவம் பொழச்சிப் போகட்டும்..விட்டுருவோமா?

    ReplyDelete
  88. // Mangalore SIVA Said...

    அம்மிணிகளா நீங்க காதலிக்க வேணாம் அடுத்தவன் தாலிய அறுக்காம இருங்கடி அது போதும்!!!!

    //

    கொஞ்சம் மங்களூர் சிவா அண்ணன்கிட்ட ஆபிஸ் லீவ் போட்டு உட்காந்து பேசுங்க தெரியும்..

    ReplyDelete
  89. //கொஞ்சம் மங்களூர் சிவா அண்ணன்கிட்ட ஆபிஸ் லீவ் போட்டு உட்காந்து பேசுங்க தெரியும்..//

    அவர் ஆபிஸுக்கா? என்னோட ஆபிஸுக்கா? தெளிவாச் சொல்லணும் ரீகன்.. :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)