Friday, August 10, 2007

மொக்கை போட்டி முடிவுகள்!


இன்னும் யாரும் சரியா அர்த்தம் சொல்ல முடியாத ஒரே வார்த்தை "மொக்கை". ஏன்னா இதுக்குன்னு ஒரு வடிவமோ, அழகோ இல்லே. சரி, இப்படியே மொக்கை போட்டா எப்படி? போட்டியில கலந்துகிட்டவங்கள்ல அஞ்சு பேரை கடைசி சுத்து வரைக்கும் வந்தாங்க. அதை போன பதிவிலேயே சொல்லி இருந்தோம். மொக்கை போடாம இந்த முடிவை அறிவிச்சுடறோம்.




மொக்கை கிங் 2007


"செந்தழல்" ரவி!


ஒன்னுமே இல்லாத விசயத்தை பெரிசு பண்ணி சூடாக்குறதுல ரவி'ய அடிச்சுக்க இன்னும் ஆள் வரவே இல்லே. இப்படி மொக்கைன்னு ஒரு trend set பண்ணினதும் ரவிதான். வாழ்த்துக்கள் ரவி!





8 comments:

  1. கும்தலக்கடி கும்மா!...

    ரவிக்கு ஒரு உம்மா!...

    ReplyDelete
  2. மெய்யாலுமே மொக்கைனா அர்த்தம் தெரியாதா உங்களுக்கு ,

    மொக்கை ,கடலைக்கு எதிர்ப்பதம் , ஒரு பொண்ணுகூட பேசி டைம் பாஸ் பண்ணா கடலை (இது தெரியாத மனிதன் உண்டா) பொண்ணுங்க எதுவும் சிக்காத வேளைகளில் பக்கத்தில இருக்க பசங்க கூட கடமைக்கு ஏதோ பேசனும்னு பேசி நேரத்தை கொல்வது தான் மொக்கை! நிறைய பசங்களுக்கு பேச்சு துணைக்கு ஒரு பொண்ணு கூட அகப்படாது அவங்க என்னேரமும் பசங்க கூட பேசியே கொல்வாங்க அவங்கல எல்லாம் மொக்கை பசங்கனு தான் காலேஜ்ல சொல்வாங்க!

    இப்போ சினிமா தியேட்டரில் ஒருத்தர பார்த்து ஹி ..ஹி எங்கே இந்த பக்கம் சினிமாவுக்கனு கேட்பது போலத்தான்!

    அப்போ ரவி மொட்டை மாடு போல பொண்ணுங்க எதுவும் சிக்காம தான் இப்படிலாம் மொக்கை போடுரார் சொல்றிங்களா( கொரிய பிகர்களிடமே பிகுள் ஊதியவர் ஆச்சே)

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் போட்டி நடத்தினீங்களா, என்ன?

    மொக்கன்னா, stupid என்று தானே அர்த்தம்?

    Forrest Gump படம் பார்த்தீங்களா, இல்லையா? ஒரு சிறுவனை அறிமுகப்படுத்தி, இவன் உன் மகன் என்று சொன்னதும், FGக்கு அவன் தன்னைப் போல் தான் இருப்பானோ என்று சந்தேகத்தோடு பார்க்க, "No, No - Your son is not a stupid lke you" என்று சொல்வாள்.

    அதுபோலத்தானே, இதுவும்?

    Innocent to the core,

    No intended harm,

    Deeply enjoyable,

    Lovable

    but

    considered STUPID by "Normals" who in the name of intelligence exhibits mere arrogance, and selfish motives.


    அன்புடன்
    நண்பன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ரவி!
    வாழ்த்துக்கள் இளா! :-)

    மொக்கை கிங் ஆக்கினா போதுமா?
    அடுத்து நம்ம கிங், வரி வூசூல் எல்லாம் செஞ்சு, சங்கத்துக் கடனை அடைக்க வேண்டாமா? :-)))

    ReplyDelete
  5. நன்றி-நண்பன், வவ்வால், KRS

    ReplyDelete
  6. பிகர்- Please contact Ravi @ Mokkai King :))

    ReplyDelete
  7. என்னமோ போடுங்க... மொக்கயா இருந்தாலும் சரி... கடலயா இருந்தாலும் சரி.

    ReplyDelete
  8. Congratulation Ravi anna!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)