Friday, June 8, 2007

சங்கத்து சிங்கம் பற்றிய ரகசியம்!

நமது சங்கத்து சிங்கம் விவசாயி ஆரம்ப காலத்தில் அதாவது பல்பம் பிடிக்கும் வயதில் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தார்.. பொறிகடலை வாங்க 50 ரூபாய் அவசரமாக தேவைப்பட்டது அவருக்கு. அப்பாவிடம் 50 ரூபாய் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. கேட்டால் அடிப்பாரோ உதைப்பாரோ என்ற பயம் வேறு. களத்துமேட்டில் அவருக்கு உதவ யாருமே முன்வரவில்லை. ஆதலால் பிரச்னையை கடவுளிடம் நேரடியாக கொண்டு செல்ல முடிவு செய்தார்..

அன்புள்ள கடவுள் அவர்களுக்கு,

தற்போது எனது நிதிநிலைமை மோசமாக இருப்பதால் அவசரமாக என் பெயருக்கு ரூபாய் 50 அனுப்பி வைத்து உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு,
விவசாயி
சங்கத்து சிங்கம்
வ.வா. சங்கம்


என்று கையொப்பமும் இட்டு அதனை கடவுள், இந்தியா என்று விலாசமிட்டு தபால் பெட்டியில் போட்டார். அந்த தபாலைப் பார்த்த குசும்பு புடிச்ச தபால்காரர் அதை நம்ம இந்திய நிதித்துறை மந்திரிக்கு அனுப்பி வைத்து விட்டார்...

அந்த கடிதத்தை பிரித்து படித்துப் பார்த்து உச்சு கொட்டிய மந்திரி, சிங்கத்தின் மீது பச்சாதாபம் பார்த்து போனாபோகுதுன்னு இரக்கம் கொண்டு 20 ரூபாய் அவருக்கு பெரிய உதவியாக இருக்கும் என எண்ணி அதை அனுப்பி வைக்க தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார்!

அந்த தொகையை பெற்ற நம் சிங்கத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரவால்லியே... சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அந்த ஆண்டவரே நமக்கு காசு அனுப்பி இருக்காரேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டார்! நன்றி மறப்பது நன்றன்று...! எனவே கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பி பதில் கடிதம் எழுதினார் நம்ம சிங்கம்..

"என் மீது தனிப்பட்ட அன்புள்ள கடவுளுக்கு நன்றி.. நீங்கள் அனுப்பிய பணம் வந்து கிடைத்தது. பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. இருந்த போதிலும் அந்த பணத்தை நீங்கள் இந்திய நிதித்துறை மந்திரி மூலமாக அனுப்பி வைத்திருக்கிறீர்...அந்த குரங்குகள் 30 ரூபாயை வரிப்பணமாக பிடித்து விட்டனர்! அடுத்தமாதச் செலவுக்கும் 50 ரூபாய் தேவைப்படுகிறது எனக்கு. எனவே இனிமேல் நீங்கள் எனக்கு பணம் அனுப்புவதாக இருந்தால் நேரடியாக அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்!"

அதுக்குப் பிறகும் பணம் வந்துதான்னு கேட்கறீங்க...!... இது நம்ம சிங்கம் டவுசர் போட்டு அஞ்சாப்பூ படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி. உண்மையா பொய்யா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

*போட்டுக் கொடுத்தவர்: கருப்பு!*

15 comments:

  1. //பொறிகடலை வாங்க 50 ரூபாய் அவசரமாக தேவைப்பட்டது அவருக்கு.//

    அந்த ஆளு சின்ன வயசிலேயே
    கடலைபோடும் பழக்கம் உள்ளவரா ?
    ம் ம்
    :)))))

    ReplyDelete
  2. Ada paavi sollave illa, kettathu than kette oru 500 illa 1000 nu periya amounta kettu iruka koodatha.

    ReplyDelete
  3. :)


    கருப்பு!
    தலைக்கு மட்டும்தான் ஆப்பு வைக்கணும்னு உங்ககிட்ட தெளிவா சொல்லி கூட்டியாரலையா?

    !?

    ReplyDelete
  4. //தலைக்கு மட்டும்தான் ஆப்பு வைக்கணும்னு உங்ககிட்ட தெளிவா சொல்லி கூட்டியாரலையா?
    //

    கருப்பு,
    ஃபார் யொஉவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்!

    இப்போ தலை யாருன்னும் தெளிவா கேட்டு வெச்சிக்குங்க!

    ReplyDelete
  5. //இப்போ தலை யாருன்னும் தெளிவா கேட்டு வெச்சிக்குங்க! //


    ஏக் கீ சூரத் ஹை! இஸ் ஜக் கேலியே!

    ஒரே ஒரு சூரியன்தான்! உலகுக்கெல்லாம்!

    ReplyDelete
  6. ரா ராரா ராமைய்யா!

    ReplyDelete
  7. தெனமும் ஒரு பதிவு போட்டுக் கலக்குறீங்க....

    இந்த மேட்டர் நல்லா இருக்குதே.. நானும் அடுத்த தடவ ஒரு ஐநூறோ இல்ல ஆயிரமோ கேட்டு ஒரு ஈ-மெயில் அனுப்புறேன்..

    தாமதமா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :))

    ReplyDelete
  8. //அந்த ஆளு சின்ன வயசிலேயே
    கடலைபோடும் பழக்கம் உள்ளவரா ?
    ம் ம்
    :))))) //

    கோவி கனக்கச்சிதமாப் பதிவின் நோக்கத்தைக் கவ்வி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.. இது பற்றிய ஒரு விவரமான பதிவு ஒன்றை உங்களிடமிருந்து சங்கத்தின் சிங்கங்கள் அனைவரும் ( இளா உட்பட) எதிர்பார்க்கிறோம்... ஏமாத்தாமல் சீக்கிரம் போடுங்கய்யா

    ReplyDelete
  9. வ.வா.சங்கத்திற்கு அன்றும் இன்றும் என்றும் ஒரே தல தான்.... இதில் எந்த குழப்பமும் யாருக்கும் வர வேண்டாம்....

    தல ஒன்றானாலும் முகங்கள் மட்டும் மாறும்.

    ReplyDelete
  10. //கோவி கனக்கச்சிதமாப் பதிவின் நோக்கத்தைக் கவ்வி விட்டீர்கள் வாழ்த்துக்கள்//

    கோவி,
    க.க.க.போ!

    ReplyDelete
  11. //அந்த ஆளு சின்ன வயசிலேயே
    கடலைபோடும் பழக்கம் உள்ளவரா ?
    ம் ம்
    //

    //தலைக்கு மட்டும்தான் ஆப்பு வைக்கணும்னு உங்ககிட்ட தெளிவா சொல்லி கூட்டியாரலையா?
    //

    //ரா ராரா ராமைய்யா//



    இன்னிக்கு யாரு ஊருகாய்னு கொஞ்சம் தெளிவாச் சொன்னா நல்லா இருக்கும்?

    பிக்காஸ் ஐ டோண்ட் வாண்ட் டூ டேக் ரிஸ்க்!

    ReplyDelete
  12. //அந்த ஆளு சின்ன வயசிலேயே
    கடலைபோடும் பழக்கம் உள்ளவரா ?
    ம் ம்//
    சாரி, ராம் நம்பர், சீ சீ ராங் நம்பர்..

    ReplyDelete
  13. //கோவி கனக்கச்சிதமாப் பதிவின் நோக்கத்தைக் கவ்வி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.. இது பற்றிய ஒரு விவரமான பதிவு ஒன்றை உங்களிடமிருந்து சங்கத்தின் சிங்கங்கள் அனைவரும் ( இளா உட்பட) எதிர்பார்க்கிறோம்... ஏமாத்தாமல் சீக்கிரம் போடுங்கய்யா //

    யாரும் எதிர்ப்பார்க்காவே இல்லை. (இளா உட்பட). இப்படி என்ன கலாய்ப்ப்பீங்கன்னு :(( ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. //இன்றும் என்றும் ஒரே தல தான்.... இதில் எந்த குழப்பமும் யாருக்கும் வர வேண்டாம்....

    தல ஒன்றானாலும் முகங்கள் மட்டும் மாறும். //

    ஷ்ஷ் இப்பவே கண்ண கட்டுதே!

    ReplyDelete
  15. அவரு பல்பம் பிடிக்கிற காலத்துல ஒரு ரூவாய்க்கு பொறிகடலை வாங்கினாவே ரொம்ப நெறையா இருக்கும் இதுல 50 ரூவா வேணுமா? எதுனா வியாபாரம் பண்ணா போறாரா அவரு...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)