Wednesday, November 15, 2006

வ. வா. ஆட்டோகிராப் - 3!!!

முந்தைய பாகம் பார்க்க

பாகம் 1
பாகம் 2

நமக்கும் நம்ம தமிழ் வாத்தியாருக்கும் எப்பவுமே பிரச்சனைதாங்க....
அதுக்கு முக்கிய காரணம் இந்த திருக்குறள் தான்...

எனக்கு தெரிஞ்சது மொத்தமே 2 குறள் தான்

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பழகு

அடுத்து

இனிய உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

இந்த இரண்டு குறளை மட்டும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு நானும் எவ்வளவு நாள்தான் சமாளிப்பேன்.

நமக்கு முதல் வார்த்தைய சொல்லி திருக்குறள் எழுத சொன்னாலே வராது. இதுல கடைசி வார்த்தைய வேற சொல்லி எழுத சொல்லுவானுங்க...

பரிட்சைல எப்படி கேட்பானுங்கனா அருளென்னும் என்று தொடங்கும் குறளையும், பிறர்க்கு என்று முடியும் குறளையும் எழுதுகனு கேப்பாங்க...

சரினு நானும் வேற வழியில்லைனு

அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பிறர்க்கு

இப்படி எழுதிடுவேன். இதுக்கு அவர் மார்க் போடமாட்டாரு. அப்பறம் அவர்ட போய் சண்டை போட்டா அரை மார்க் போடுவாரு.

அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.

எனக்கும் சொல்லி கொடுக்க அவர் ரொம்ப முயற்சி பண்ணாரு. பாவம் அவருக்கு அனுபவம் பத்தல.

இது இல்லாம அணினு (நமக்கு ஞாபகம் இருக்கறது வஞ்ச புகழ்ச்சி அணிதான்) ஒண்ணு இருக்கு. பாட்ட சொல்லி அது எந்த அணினு கேப்பாரு. நமக்கு பாட்டை சொல்லி எந்த படம்னு கேட்டா கரெக்டா சொல்லிடுவோம். இல்லை க்ரிக்கெட் ப்ளேயர சொல்லி எந்த அணினு கேட்ட கரெக்டா சொல்லுவோம். ரெண்டும் இல்லாம பாட்ட சொல்லி எந்த அணினு கேட்டா மனுசன் என்னதாங்க பண்ண முடியும்.

கடைசியா அவரால எனக்கும் எங்க கணக்கு வாத்தியாருக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்... அந்த சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு...

சுமார் 9 வருடங்களுக்கு முன்னால்... கணக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்தது (கொசு வத்திய சுத்துங்க)

கணக்கு வாத்தியார், "பாலாஜி! எழுந்திரி"

எழுந்து நின்றேன்...

"கைல என்ன புக்?"

"தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்" (நான் ஆங்கில மீடியம்)

"என்னடா காப்பி அடிக்கறயா?"

"இல்லை சார்... தமிழய்யா சொன்னதைத்தான் பண்ணேன்"

"என்னடா உளற?"

"எனக்கு தமிழய்யா தான் சொன்னாரு... வேற மொழில இருக்கறத பார்த்து எழுதினா அது காப்பியில்லைனு. வேணும்னா நீங்களே அவரை கூப்பிட்டு கேளுங்க"

"டேய் குமாரு நீ போய் உங்க தமிழய்யாவை கூப்பிட்டு வாடா"

குமார் சென்று தமிழய்யாவை கூப்பிட்டு வந்தான். நானும் கணக்கு வாத்தியாரும் (கையில் கணக்கு புத்தகத்துடன்) நின்றிருந்ததை பார்த்ததும் தமிழய்யாவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

"என்னா சார்... ஏதாவது பிரச்சனையா?" தயக்கத்துடன் தமிழய்யா கணக்கு வாத்தியாரை கேட்டார்...

"இங்க பாருங்க சார்... தமிழ் மீடிய புக்கை வெச்சி காப்பி அடிச்சிட்டு நீங்க தான் அந்த மாதிரி பண்ண சொன்னீங்கனு சொல்றான்"

"பாலாஜி... என்ன இது? நான் எப்ப உனக்கு சொன்னேன்"

"சார்... ஏன் பொய் சொல்றீங்க? போன வாரம் கம்ப ராமாயணம் கிளாஸ் ஞாபகமில்லை?"

மீண்டும் கொசுவர்த்தி...

"பாலாஜி எழுந்திரி... கம்பரின் பெருமைகள் என்னனு நேத்து நடத்தனனே சொல்லு பார்ப்போம்?"

""

"இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?
கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் இந்த பூமிதனில் எங்கேயும் காணோம் (தூர்தஷன்ல சொல்லி அறிவிப்புகள்ல போட சொல்ல வேண்டியதுதான?)

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

இது கூட ஞாபகம் இல்லையா?"

"சார்... இது அநியாயம். வால்மீகி எழுதனத அவ்ர் காப்பிதான அடிச்சாரு"

"இங்க பாரு... அவர் ஒன்னும் காப்பி அடிக்கல... வடமொழில இருந்ததை தமிழுக்கு ஏத்த மாதிரி எழுதினார்"

இப்ப திரும்ப பரிட்சை ஹாலுக்கு வாங்க... (பரிட்சை எழுத இல்லை)

"சார் நீங்க சொன்ன மாதிரி நான் தமிழ்மீடியம்ல இருக்கறதை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துட்டு இருக்கேன்... நியாயமா பார்த்தா நீங்க என்னய புகழ்ந்து தான் சொல்லனும்...
பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்.

நானும் அப்படியே காப்பி அடிக்கல. அதுல x,y,z னு இருக்கறத a,b,cனு மாத்திதான் போடறேன்"

அதுக்கு அப்பறம் நமக்கு அட்வைஸ் பண்றதையே நிறுத்திட்டாரு...

59 comments:

  1. கொசுவர்த்தி சுத்தி நல்லதா இரண்டு குரளு கொடுத்தீங்க.. நானும் சுத்தனதுல நியாபகம் வந்தது இது....


    கற்றக கசடற கல்கிகுமுதம் கற்றபின்
    விற்க பாதி விலைக்கு

    ReplyDelete
  2. //வானமே எல்லை said...
    //நமக்கு ஞாபகம் இருக்கறது வஞ்ச புகழ்ச்சி அணிதான்//

    நம்ம கேஸா நீங்க??? //

    வா.எ,
    ஆமாம் அத வெச்ச்சிதான் நம்ம காலத்தயே ஓட்டிட்டு இருக்கோம் ;)

    ReplyDelete
  3. //சாத்வீகன் said...
    கொசுவர்த்தி சுத்தி நல்லதா இரண்டு குரளு கொடுத்தீங்க.. நானும் சுத்தனதுல நியாபகம் வந்தது இது....


    கற்றக கசடற கல்கிகுமுதம் கற்றபின்
    விற்க பாதி விலைக்கு//

    சாத்வீகன்,
    கலக்கறீங்க ;)

    ReplyDelete
  4. சூப்பரா எழுதியிருக்கீங்க பாலாஜி.
    ஒரே கலக்கல் தான். இப்பதான் புரியுது... ஏன் என்னோட பதிவ நீங்க முழுசா படிக்காம போயிட்டீங்கன்னு :)

    தமிழ் இலக்கணமா?? நமக்கு Allergy !!!

    ReplyDelete
  5. //Arunkumar said...
    சூப்பரா எழுதியிருக்கீங்க பாலாஜி.
    //
    மிக்க நன்றி!!!

    //
    ஒரே கலக்கல் தான். இப்பதான் புரியுது... ஏன் என்னோட பதிவ நீங்க முழுசா படிக்காம போயிட்டீங்கன்னு :)
    //
    ஆமாங்க... திருக்குறள்னு பார்த்தவுடனே நம்ம பதிவ முடிச்சிட்டு வரலாம்னு விட்டுட்டேன் :-)

    //
    தமிழ் இலக்கணமா?? நமக்கு Allergy !!! //
    உண்மையா இலக்கணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... இப்ப எல்லாம் மறந்து போச்சு :-(

    ReplyDelete
  6. நீர் எழுதிய மொக்கை குறளுக்கு ஆசிரியரை மிரட்டி அரை மார்க் வேற வாங்கிட்டீங்க...

    வகுப்புல கடைசி பெஞ்சா ?

    ReplyDelete
  7. //செந்தழல் ரவி said...
    நீர் எழுதிய மொக்கை குறளுக்கு ஆசிரியரை மிரட்டி அரை மார்க் வேற வாங்கிட்டீங்க...

    வகுப்புல கடைசி பெஞ்சா ? //
    மிரட்டியா? நான் ரொம்ப நல்ல பையன்... பாசாமா சொன்னேன் போட்டாரு... இல்லைனா சைக்கிள் பஞ்சர் ஆயிடும்னு தெரியாதா ;)

    தொடர படிக்கறதில்லையா? நம்மலத்தான் முதல் பெஞ்ச்ல உக்கார வெச்சிட்டாங்களே :-(

    ReplyDelete
  8. //அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
    நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.//

    :))))))

    ReplyDelete
  9. //அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
    நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.//


    :))

    ReplyDelete
  10. //அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
    கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று//

    ஆஹா கவிஞசரையா நீர்

    ReplyDelete
  11. //பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்//
    இது கொஞ்சம் ஓவர்

    ReplyDelete
  12. //தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்" (நான் ஆங்கில மீடியம்)//

    ஆத்தாடி நீ எம்பூட்டு பெரிய ஆளூ!!!!

    ReplyDelete
  13. //தேவ் | Dev said...

    //அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
    நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.//

    :)))))) //

    //தம்பி said...

    //அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
    நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.//


    :)) //

    போர் வாளும், தம்பியும் ஒரே மேட்டரை ரசிச்சிருக்கீங்க ;)

    ReplyDelete
  14. //ILA(a)இளா said...

    //அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
    கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று//

    ஆஹா கவிஞசரையா நீர் //

    யாரு நானா?
    கப்பி,
    இந்த பாவத்துக்கெல்லாம் நான் காரணமில்லை ;)

    ReplyDelete
  15. //ILA(a)இளா said...

    //பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்//
    இது கொஞ்சம் ஓவர் //

    ஏன்? இதுல என்னா தப்பு :-)

    ReplyDelete
  16. //ராம் said...

    //தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்" (நான் ஆங்கில மீடியம்)//

    ஆத்தாடி நீ எம்பூட்டு பெரிய ஆளூ!!!! //

    ஆமாம்... ஆனா நான் தமிழ் மீடிய புக்ல தான் பாதி படிப்பேன் ;)

    ReplyDelete
  17. //ஆமாம்... ஆனா நான் தமிழ் மீடிய புக்ல தான் பாதி படிப்பேன் ;) //

    அப்போ நீ நம்ம இனந்தான்.
    ;)

    ReplyDelete
  18. //ராம் said...

    //ஆமாம்... ஆனா நான் தமிழ் மீடிய புக்ல தான் பாதி படிப்பேன் ;) //

    அப்போ நீ நம்ம இனந்தான்.
    ;) //

    இதுதான் முன்னாடியே தெரியுமே!!!
    அப்பறம் ஒவ்வொரு பதிவுலையும் நம்பாக கேள்விய கேட்டு திரும்ப திரும்ப சொல்லனுமா?

    ReplyDelete
  19. //இதுதான் முன்னாடியே தெரியுமே!!!//

    இல்லே இப்போதானே சொன்னே நீ இங்கிலிபிசு மீடியமின்னு, அதுதான் கொஞ்சம் டவுட் ஆச்சு!!!! ;)

    தமிழ்மீடியம், கடைசிபெஞ்சு இப்பிடி பலவிஷயங்கள் ஒத்துப் போனதில்லே நீ நம்ம இனமா இருந்தேன்னு முன்னாடி சொன்னேன், ஆனா நீ இங்கிலிபிசு மீடியம் வேறே!!!

    சரி பரவாயில்லே.... எப்பிடியோ அந்த பொஸ்தகமெல்லாம் படிக்க தமிழ்மீடியம் பொஸ்தகமெல்லாம் யூஸ் பண்ணிருக்கேலே!!!!! :)

    உன்னயும் சேர்த்துக்கலாம் இனத்திலே!!

    //அப்பறம் ஒவ்வொரு பதிவுலையும் நம்பாக கேள்விய கேட்டு திரும்ப திரும்ப சொல்லனுமா? //


    ஒரு சந்தேகத்தே தீர்த்துகனுமின்னா திரும்ப திரும்ப எத்தனை தடவை வேணுமின்னாலும் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கலாமின்னு நம்ம தலயே சொல்லிருக்காரு!!!!!!

    :)

    ReplyDelete
  20. வெட்டி

    நம்ம சங்கத்தில் நீ ஒரு பொறுக்கி

    ReplyDelete
  21. எடுத்த முத்துப்பா!

    ReplyDelete
  22. நாங்களும் அப்ப அப்ப கிளாஸ்க்கு போய் இருக்கோம்ல

    எங்க தமிழ் ஐயா கத்தினது எங்க காதிலும் விழ்ந்து இருக்குல

    எங்களுக்கும் வ.பு.அணி வரும்ல

    ReplyDelete
  23. நாங்களும் அப்ப அப்ப கிளாஸ்க்கு போய் இருக்கோம்ல

    எங்க தமிழ் ஐயா கத்தினது எங்க காதிலும் விழ்ந்து இருக்குல

    எங்களுக்கும் வ.பு.அணி வரும்ல

    ReplyDelete
  24. //கற்றக கசடற கல்கிகுமுதம் கற்றபின்
    விற்க பாதி விலைக்கு //

    இட்லிக்கு சட்னி இல்லையென்றால் சிறிது
    சாம்பார் ஈயப்படும்

    பிரேக் என்ப பெல் என்ப இவ் விரண்டும்
    கண் என்ப சைக்கிளுக்கு

    நாங்களும் குறள் சொல்லுவோம்ல

    ReplyDelete
  25. :)))
    கலக்கல் வெட்டி

    ReplyDelete
  26. //வெட்டி

    நம்ம சங்கத்தில் நீ ஒரு பொறுக்கி

    //

    இதை நான் வழிமொழிகிறேன்!!

    ReplyDelete
  27. //நாகை சிவா said...

    வெட்டி

    நம்ம சங்கத்தில் நீ ஒரு பொறுக்கி எடுத்த முத்துப்பா!//

    என்ன இது முத்தப்பா, செல்லப்பானு பேரரசு மாதிரி பேசிட்டு இருக்க?

    ReplyDelete
  28. //நாகை சிவா said...

    நாங்களும் அப்ப அப்ப கிளாஸ்க்கு போய் இருக்கோம்ல

    எங்க தமிழ் ஐயா கத்தினது எங்க காதிலும் விழ்ந்து இருக்குல

    எங்களுக்கும் வ.பு.அணி வரும்ல //

    உனக்கு வ.பு. அணி வரும்னு உலகத்துக்கே தெரியுமே ;)

    ReplyDelete
  29. //எடுத்த முத்துப்பா! //

    இதையும் வழிமொழிஞ்சு வச்சுக்கறேன்!

    ReplyDelete
  30. //இல்லே இப்போதானே சொன்னே நீ இங்கிலிபிசு மீடியமின்னு, அதுதான் கொஞ்சம் டவுட் ஆச்சு!!!! ;)

    தமிழ்மீடியம், கடைசிபெஞ்சு இப்பிடி பலவிஷயங்கள் ஒத்துப் போனதில்லே நீ நம்ம இனமா இருந்தேன்னு முன்னாடி சொன்னேன், ஆனா நீ இங்கிலிபிசு மீடியம் வேறே!!!
    //
    ரெண்டுத்துக்கும் ஒண்ணும் வித்தியாசமில்லை... நாம இங்கிலிஷ்ல எழுதற பார்த்துட்டு எங்க வாத்தியார் எப்பவும் சொல்றது...

    "இந்த கொடுமையெல்லாம் பார்க்க கூடாதுனு தாண்டா வெள்ளைக்காரன் இந்தியாவ விட்டுட்டு போயிட்டான்"

    //சரி பரவாயில்லே.... எப்பிடியோ அந்த பொஸ்தகமெல்லாம் படிக்க தமிழ்மீடியம் பொஸ்தகமெல்லாம் யூஸ் பண்ணிருக்கேலே!!!!! :)

    உன்னயும் சேர்த்துக்கலாம் இனத்திலே!!

    //அப்பறம் ஒவ்வொரு பதிவுலையும் நம்பாக கேள்விய கேட்டு திரும்ப திரும்ப சொல்லனுமா? //


    ஒரு சந்தேகத்தே தீர்த்துகனுமின்னா திரும்ப திரும்ப எத்தனை தடவை வேணுமின்னாலும் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கலாமின்னு நம்ம தலயே சொல்லிருக்காரு!!!!!!

    :)//

    சரி இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு இல்ல ;)

    ReplyDelete
  31. //நாகை சிவா said...

    //கற்றக கசடற கல்கிகுமுதம் கற்றபின்
    விற்க பாதி விலைக்கு //

    இட்லிக்கு சட்னி இல்லையென்றால் சிறிது
    சாம்பார் ஈயப்படும்

    பிரேக் என்ப பெல் என்ப இவ் விரண்டும்
    கண் என்ப சைக்கிளுக்கு

    நாங்களும் குறள் சொல்லுவோம்ல //

    புலி,
    நீ இவ்வளவு பெரிய கவிஞ்சரா?
    ஜாவா பாவலர் கப்பி நிலவனுக்கு போட்டியா இருப்ப போலிருக்கே ;)

    ReplyDelete
  32. ஐ.நா சபையின் வருங்காலத் தலைவன்,
    கவிஞ்சர் புலிப்பாண்டி...

    வாழ்க!!! வாழ்க!!!

    ReplyDelete
  33. //கப்பி பய said...

    :)))
    கலக்கல் வெட்டி //

    மிக்க நன்றி கப்பி

    ReplyDelete
  34. //கப்பி பய said...

    //வெட்டி

    நம்ம சங்கத்தில் நீ ஒரு பொறுக்கி

    //

    இதை நான் வழிமொழிகிறேன்!! //

    அதான பார்த்தேன்,
    பேரரசுனு சொன்னவுடனே ஆஜராயிட்ட பார்த்தியா? இதுதான் உங்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது ;)

    ReplyDelete
  35. //கப்பி பய said...

    //எடுத்த முத்துப்பா! //

    இதையும் வழிமொழிஞ்சு வச்சுக்கறேன்! //

    ஆப்படிக்கறதுனா ஆஜராயிடற...
    இருக்கட்டும் ;)

    ReplyDelete
  36. //புலி,
    நீ இவ்வளவு பெரிய கவிஞ்சரா?
    ஜாவா பாவலர் கப்பி நிலவனுக்கு போட்டியா இருப்ப போலிருக்கே ;) //

    //கவிஞ்சர் புலிப்பாண்டி... //

    வெட்டி..கைப்புக்கு 'என்ன' வண்டு கடிச்சா மாதிரி உனக்கு 'கவிஞ்சர்' வண்டு கடிச்சிடுச்சா?? :))

    ReplyDelete
  37. //கப்பி பய said...

    //புலி,
    நீ இவ்வளவு பெரிய கவிஞ்சரா?
    ஜாவா பாவலர் கப்பி நிலவனுக்கு போட்டியா இருப்ப போலிருக்கே ;) //

    //கவிஞ்சர் புலிப்பாண்டி... //

    வெட்டி..கைப்புக்கு 'என்ன' வண்டு கடிச்சா மாதிரி உனக்கு 'கவிஞ்சர்' வண்டு கடிச்சிடுச்சா?? :)) //

    ஏன் உனக்கு இந்த பொறாமை...
    நீ மட்டும்தான் கவிஞ்சரா இருக்கனுமா?

    எங்க தம்பி, புலிப்பாண்டி ரெண்டு பேரும் உனக்கு போட்டியா களம் இறங்கிருக்காங்க ;)

    இனிமே உனக்கு பல முனைகளில் இருந்து கவிதையால் பதில் சொல்வார்கள்!!!

    ReplyDelete
  38. இது சூப்பர் டா..! ரசித்து படித்தேன்

    ReplyDelete
  39. //தமிழ்ப்பிரியன் said...

    இது சூப்பர் டா..! ரசித்து படித்தேன் //
    ரொம்ப நன்றி சங்கர்...

    ReplyDelete
  40. //ஏன் உனக்கு இந்த பொறாமை...
    நீ மட்டும்தான் கவிஞ்சரா இருக்கனுமா?

    எங்க தம்பி, புலிப்பாண்டி ரெண்டு பேரும் உனக்கு போட்டியா களம் இறங்கிருக்காங்க ;)

    இனிமே உனக்கு பல முனைகளில் இருந்து கவிதையால் பதில் சொல்வார்கள்!!!
    //

    நீங்களா அபபடி சொல்லிட்டு இப்ப இப்படி திசை திருப்பற வேலை வேறயா?? ஏற்கனவே பலமுனைகளிலிருந்து ஆப்பு வந்துட்டுதானேய்யா இருக்கு?? கைப்பு காப்பாத்து ;)

    ReplyDelete
  41. வெட்டி, Super ஆ எழுதியிருகிறீங்க, அசத்தல்!

    ReplyDelete
  42. //நீங்களா அபபடி சொல்லிட்டு இப்ப இப்படி திசை திருப்பற வேலை வேறயா?? ஏற்கனவே பலமுனைகளிலிருந்து ஆப்பு வந்துட்டுதானேய்யா இருக்கு?? கைப்பு காப்பாத்து ;)//

    தலய வண்டு கடிச்சத பத்தியும் தப்பா பேசிட்டு தலகிட்டயே சரணடைஞ்சிட்டயா?

    புலிப்பாண்டிய இப்ப நீ கவிஞ்சர்னு ஒத்துக்கரயா இல்லையா? ;)

    ReplyDelete
  43. //Divya said...

    வெட்டி, Super ஆ எழுதியிருகிறீங்க, அசத்தல்! //

    மிக்க நன்றி திவ்யா ;)

    ReplyDelete
  44. தலிவா புதுசா கட்சி ஆரம்பிச்சிட்டியா?

    கலர் கலரா கொடி ஏத்திருக்க!
    புதுசு புதுசா ஆள் வர்ராங்க!

    என்னையும் கட்சில சேத்திக்கோ.
    என்ன சொல்ற?

    ReplyDelete
  45. வாத்தியாரை எல்லாம் கோவில் கட்டி கும்பிடணும் ஆனா சங்கம்ன்னு சொல்லி கும்பலாக் கூடி கிண்டல் பண்றாங்க... கேக்க யாரும் இல்லங்கற தைரியமா.. இந்த பஞச் பாலா புறப்பட்டுட்டான்ய்யா..
    உங்களை எல்லாம் அடக்கி அண்டாக்குள்ளே போட்டு அமுக்காம விட மாட்டான்.

    ReplyDelete
  46. //வாத்தியாரை எல்லாம் கோவில் கட்டி கும்பிடணும் ஆனா சங்கம்ன்னு சொல்லி கும்பலாக் கூடி கிண்டல் பண்றாங்க... //

    எத்தனை பெயருக்கு தாம்ப்பா கோவில் கட்டுறது.... அவங்களையாச்சும் விட்டு வைக்கலாமே அப்படிங்குற ஒரு நல்ல எண்ணம் தான்...

    //உங்களை எல்லாம் அடக்கி அண்டாக்குள்ளே போட்டு அமுக்காம விட மாட்டான். //

    நாங்க எல்லாம் ஏற்கனவே ரொம்ப அடக்கமான பசங்க தான். நீங்க வேற இன்னும் அடக்கி அமுக்குனுமா... சரி பரவாயில்லை, உங்க சவாலை ஏத்துக்குறோம்....

    எங்க தல கைப்புள்ளைய அடக்கி அண்டாக்குள்ள அமுக்கி காட்டுங்க அப்ப ஒத்துக்குறோம் நீங்க உண்மையிலே பஞ்ச் பாலா என்று.....

    ஆனா பாத்து எங்க தலக்கிட்ட தகராறு பண்ணுறேன் என்று பஞ்சர் ஆயிடாதீங்க.... சொல்லிட்டேன்....

    ReplyDelete
  47. //என்ன இது முத்தப்பா, செல்லப்பானு பேரரசு மாதிரி பேசிட்டு இருக்க? //

    வெட்டி நீ கேடிங்குறது எனக்கு தெரியாதா என்ன, நான் முத்து என்று சொன்னதை முத்தப்பா மாத்தி இருக்கியே இது நியாயமா?

    ReplyDelete
  48. //ஐ.நா சபையின் வருங்காலத் தலைவன்,
    கவிஞ்சர் புலிப்பாண்டி...

    வாழ்க!!! வாழ்க!!! //

    உனக்கு ஏன் என் மேல இப்படி ஒரு கொல வெறி.... ஏதா இருந்தாலும் நம்ம தலயை வச்சு பேசி சரி பண்ணிக்கலாம்ப்பா.....

    ReplyDelete
  49. //புலிப்பாண்டிய இப்ப நீ கவிஞ்சர்னு ஒத்துக்கரயா இல்லையா? ;) //

    யோவ் வெட்டி, எனக்கு கவுஜ வராதுய்யா அதைவிட ஆவாது. நீ வேற ஒவரா சவுண்ட் விட்டு கப்பிய கிளப்பி விடாதா.....

    ReplyDelete
  50. //Boston Bala said...

    Hilarious :))) //
    மிக்க நன்றி பாபா :-)

    ReplyDelete
  51. //கார்மேகராஜா said...

    தலிவா புதுசா கட்சி ஆரம்பிச்சிட்டியா?

    கலர் கலரா கொடி ஏத்திருக்க!
    புதுசு புதுசா ஆள் வர்ராங்க!

    என்னையும் கட்சில சேத்திக்கோ.
    என்ன சொல்ற? //

    கட்சியா?
    இது சங்கம்ப்பா...

    ReplyDelete
  52. //Punch பாலா said...

    வாத்தியாரை எல்லாம் கோவில் கட்டி கும்பிடணும் ஆனா சங்கம்ன்னு சொல்லி கும்பலாக் கூடி கிண்டல் பண்றாங்க... கேக்க யாரும் இல்லங்கற தைரியமா.. இந்த பஞச் பாலா புறப்பட்டுட்டான்ய்யா..
    உங்களை எல்லாம் அடக்கி அண்டாக்குள்ளே போட்டு அமுக்காம விட மாட்டான். //

    சரி இப்ப உங்களை யார் கோவில் கட்ட வேணாம்னு சொன்னா?

    ஆமாம்... உண்டியல்ல விழற காசு எல்லாம் யாருக்கு?

    ReplyDelete
  53. வெட்டி, டவுஸர் போட்டு (க்ளாஸுக்குள்ள மட்டும்) சுத்துன அந்த பொற்காலத்தை கொசுவர்த்தியெல்லாம் சுத்தி ஞாபகப்படுத்தற.. நல்லாயிரு(க்கு)! அப்படியே இன்னும் நிறைய சுத்து!!

    குறள் ரெண்டும் கலக்கல்..அதுலையும் "இனிய உளவாக இன்னாத கூறல்
    கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று" ஒரிஜினல விட இது ஈஸியா புரியுது :-) அடடா, யாராவது சண்டைக்கு வந்து 'இன்னாத கூறி'டப் போராங்க..எஸ்கேப்.. :)

    -விநய்

    ReplyDelete
  54. //வெட்டி நீ கேடிங்குறது எனக்கு தெரியாதா என்ன, நான் முத்து என்று சொன்னதை முத்தப்பா மாத்தி இருக்கியே இது நியாயமா?
    //
    யோவ் புலி,
    முத்தப்பானு நீதான் சொல்லியிருக்க...
    கண்ணாடி போட்டு நல்லா பாரு...

    ReplyDelete
  55. //உனக்கு ஏன் என் மேல இப்படி ஒரு கொல வெறி.... ஏதா இருந்தாலும் நம்ம தலயை வச்சு பேசி சரி பண்ணிக்கலாம்ப்பா..... //

    புலி,
    எனக்கு உன் மேல இல்ல
    கொல வெறி!!!

    இதெல்லாம் பாசமா செய்யறது... கொடுத்த பட்டத்த வாங்கிக்கோ :)

    ReplyDelete
  56. //யோவ் வெட்டி, எனக்கு கவுஜ வராதுய்யா அதைவிட ஆவாது. நீ வேற ஒவரா சவுண்ட் விட்டு கப்பிய கிளப்பி விடாதா..... //

    அதெல்லாம் நீ கவலைப்படாத நாம டப்பிங் கொடுத்து சரி பண்ணிடலாம் ;)

    ReplyDelete
  57. //Anonymous said...
    வெட்டி, டவுஸர் போட்டு (க்ளாஸுக்குள்ள மட்டும்) சுத்துன அந்த பொற்காலத்தை கொசுவர்த்தியெல்லாம் சுத்தி ஞாபகப்படுத்தற.. நல்லாயிரு(க்கு)! அப்படியே இன்னும் நிறைய சுத்து!!
    //
    சுத்தறன் சுத்தறன் :-)

    //
    குறள் ரெண்டும் கலக்கல்..அதுலையும் "இனிய உளவாக இன்னாத கூறல்
    கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று" ஒரிஜினல விட இது ஈஸியா புரியுது :-) அடடா, யாராவது சண்டைக்கு வந்து 'இன்னாத கூறி'டப் போராங்க..எஸ்கேப்.. :)

    -விநய்
    //
    மிக்க நன்றி விநய்...
    யாரும் இன்னாத சொல்ல மாட்டாங்க...
    அப்படி பண்ணா நம்ம புலிய விட்டு பொராண்டி விட்டுடலாம் ;)

    ReplyDelete
  58. Very Nice
    Really made us to laugh
    Thanx yaar

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)