Tuesday, September 19, 2006

முதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology

மனைவிக்கவிதைகள்

காதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன. "வீட்டுல அதைப் பாடுங்க - பொண்டாட்டிய லவ் பண்ணுங்க"என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும் "மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து" என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.

கவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!

மனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை

மனைவி ஒரு டெலிவிஷன்


இன்னும் யாரும் அதற்கு
ரிமோட் கண்டுபிடிக்கவில்லை.

மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர்

பழைய சண்டைநினைவுகளையும்
கெடாமல் காப்பவள் -
தேவையான நேரத்தில்
கொடுப்பவள்

மனைவி ஒரு வாட்ச்

காலையில் எழுப்ப,
கண் போகும் பாதையை
கவனிக்க,
எல்லா அர்த்தத்திலேயும்:-(

மனைவி ஒரு குக்கர்

வேலை செய்வதைவிட
செய்ததைக்காட்ட
விசில் அடிப்பதில்தான்
ஆர்வம் அதிகம்!

மனைவி ஒரு வாஷிங் மெஷின்

துவைப்பதில்,
பிழிவதில்
வெளுத்துக்கட்டுவதில்!

மனைவி ஒரு தொழில்நுட்பப்புரட்சி

மனைவி ஒரு செல்போன்


இன்கமிங்கில் வசதிகள்
இருந்தாலும்
அவுட்கோயிங்
எப்போதும் செலவுதான்.

மனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு..

பழிவாங்குதலை
உடனே செய்யும் பூத் கார்டு;
கொஞ்சநாள் தாங்கும் ப்ரீபெய்டு
சேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு..
விடாது ஆப்பு!

மனைவி ஒரு கணினி

உதவி போல் உள்ளே வந்து
எல்லா நேரத்தையும்
ஆக்கிரமிக்கும்.
அதன் கீபோர்டில்
கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்
மட்டும் கிடையாது!

மனைவி ஒரு இ-மெயில்

அட்டாச்மெண்டுகள் அதிகமானால்
வேகம் குறையும்.

மனைவி ஒரு இலக்கியம்

மனைவி ஒரு சிறுகதை

எப்போதுமே
எதிர்பாராத முடிவுதான்.

மனைவி ஒரு நாவல்

முரண்படும்
பல பாத்திரங்களை
முழுதாக உள்ளே கொண்டவள்

மனைவி ஒரு கவிதை

படைத்தவனையும்
சேர்த்து யாருக்கும்
புரியாத கவிதை.

மனைவி ஒரு நாடகம்

காட்சி அமைப்பில்
இன்னும் சிலர் இருப்பினும்
ஓரங்கம் மட்டுமே பேசும்.

இப்போதைக்கு இவ்வளவுதான்.

முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்.

முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்.

84 comments:

  1. கலக்கல் கவிதை!

    கவிதையெல்லாம் சொந்த அனுபவமா?

    ReplyDelete
  2. (சில அ-கவிதைகள்)

    தொலைக்காட்சி பெட்டி.

    ரிமோட் ஒன்றுதான்
    பயனாளி ஒன்றல்ல
    அடிதடி நிச்சயம்

    குளிர்பதனப்பெட்டி

    ப்ரீசரில் மெளனமாய் உறங்குபவை
    சமயம் பார்த்து உயிர்த்தெழுந்து
    இருப்பை உணர்த்தும்

    வாஷிங்மெஷின்

    இது இல்லை எனில்
    வாழ்க்கையில்லை
    என்றால் மிகையில்லை

    கடிகாரம்

    பார்த்து பார்த்து
    வாங்கி அழகு பார்த்தாலும்
    அடுத்தவள் கையிலிருப்பவை
    நன்றாக வேலை செய்வதாய் தோன்றும்

    செல்பேசி

    நல்ல மாடல் என்று வாங்கினால்
    பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும்
    சுலபமாய் களவுப் போக வாய்ப்புண்டு
    அதனால் ஒரு கண் எப்பொழுதும் வைத்திருக்கவும்

    குக்கர்

    சிலசமயங்களில் விசில்
    தராமல் மெளனமாய் உறுமும்
    தட்டினால் சரியாகிவிடும்.

    தொடரும்

    ReplyDelete
  3. Yennathu ithu sirupillai thanama irukku..ippadi kavithai solli yellam wife ah vilaka mudiyumma...oru vela..7 varsham kalichu than antha thelivu pirakummo....

    (I dont know how to type in tamil..People who know can help me out..)

    ReplyDelete
  4. இந்த கோர்ஸ் எந்த காலேஜில இருக்குனு சொன்னா புண்ணியமா போகும் உங்களுக்கு...:)

    ReplyDelete
  5. கல்க்கீட்டீங்க போங்க...இப்படி ஒரு அருமையான கவிதய குடுத்ததுனால...ஆப்பு வைக்கனும்னு தோனினாலும் ஆப்பு வைக்க மனசு வராம போறேன் :-)

    ReplyDelete
  6. //ப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும//

    இங்க வந்து கவிதை நல்லா இருக்குனு சொன்னேனு என் மனைவியிடம் சொல்பவர்களுக்கும் சேம் பிளட் கிடைக்கும் :-)

    ReplyDelete
  7. //தொடரும்//
    வாங்க உஷா, தொடரும்னு போட்டு பீதிய கிளப்புறீங்க.

    ReplyDelete
  8. //naan avan illlai//

    மயூரேசன் உங்களுக்காகவே ஒரு பதிவு போட்டு இருக்கார் பாருங்க

    http://thamizhblog.blogspot.com/2006/09/20.html

    நன்றி-மயூரேசன்

    ReplyDelete
  9. தலைவா இன்று முதல் முதுகலை இல்லறவியல் துறையில் வ.வா.சங்கம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கக் கோரி சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் வைக்க உள்ளது...

    பினாத்தாலாரே காலையிலே கலகலப்பாக்கிட்டீங்க... சிரிப்புடன் தொடங்கியாச்சு...சிரிப்புடன் தொடங்கும் ஒவ்வோரு நாளும் இனிய நாளே:)))

    ReplyDelete
  10. ஆகா உஷா அக்காவும் கோதாவில் இறங்கிட்டாங்களா... தொடரும் வேற போட்டிருக்காங்க... ம்ம் சபாஷ் சரியானப் போட்டி தான்.. அக்கா அடுத்தப் பாகம் படிக்க நாங்க ரெடி.. சிக்கீரம் எடுத்து விடுங்க:))

    ReplyDelete
  11. //இந்த கோர்ஸ் எந்த காலேஜில இருக்குனு சொன்னா புண்ணியமா போகும் உங்களுக்கு...:) //

    முதல்ல இல்லறவியல் பவுண்டேஷன் கோர்ஸ் படிக்கணும்.. அதுக்கு நம்ம இளவஞ்சி வாத்தியார் பதிவுகளைப் பொரட்டுங்க.. கோர்ஸ் மேட்டிரியல் கிடைக்கும்.. அதை முடிச்சுட்டு வாங்க நம்ம முனைவர் பினாத்தலாரின் வகுப்பில் அட்மிஷன் போட்டுருவோம்...

    ReplyDelete
  12. உஷாவும் எழுதறாங்க, பினாத்தலாரும் எழுதறாங்க. பெரிசா நமக்கு எழுதவராட்டாலும் சுருக்கமா ஒன்னு

    "மனைவியே கவிதைளாய்"

    ReplyDelete
  13. //மனைவி ஒரு வாட்ச்

    காலையில் எழுப்ப,
    கண் போகும் பாதையை
    கவனிக்க,
    எல்லா அர்த்தத்திலேயும்:-(//
    :)))))))))))))))))))

    //மனைவி ஒரு குக்கர்

    வேலை செய்வதைவிட
    செய்ததைக்காட்ட
    விசில் அடிப்பதில்தான்
    ஆர்வம் அதிகம்!//
    இதில் பொருட்குற்றம் இருப்பதாகத் தெரிகிறது.. வேற மனைவிகள் யாராச்சும் வந்து வாங்குவாங்க!

    //மனைவி ஒரு செல்போன்

    இன்கமிங்கில் வசதிகள்
    இருந்தாலும்
    அவுட்கோயிங்
    எப்போதும் செலவுதான்.//
    ரொம்ப பழைய கனெக்ஷன் வச்சிருக்கீங்களோ? இப்போ எல்லாம் அவுட்கோயிங் கூட சில கால்கள் வரை இலவசமாத் தராங்க பினாத்தலாரே...

    ஆனா, மொத்தத்துல இல்லறவியல் அற்புதமாத் தான் வந்திருக்கு :)

    ReplyDelete
  14. வெள்ளிக்கிழமை சந்திக்கலாம்னு இருந்தேன் (சென்னையிலிருந்து மனைவி மக்கள் வருகிறார்கள்)சந்திச்சா கண்டிப்பா இதபத்தி பேசனும்.. அப்ப ரெண்டு பேரயும் டின் கட்டிடுவங்க நான் வர்லப்பா இந்த விளையாட்டுக்கு

    லியோ சுரேஷ்
    துபாய்

    ReplyDelete
  15. இதை வாசிக்கும் துபாய் நண்பர்களின் மேலானக் கவனத்திற்கு

    முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்.

    ReplyDelete
  16. பொன்ஸ் அக்கா என்னப் பொருட் குற்றம் கண்டீர்கள் முனைவரின் கவிதையில்.... மனைவி குலத்தையேத் தமிழால் தாக்கி தள்ளாட வைத்திருக்கும் முனைவரின் இக்கவிதையில் என்ன குற்றம் உள்ளது?

    ReplyDelete
  17. வெறும்(!!!!) ஏழு வருசத்துக்கே இப்படின்னா 32 வருசம் ஆனவுங்க கதி (???) எப்படி இருக்குமுன்னு
    ஒருத்தரைக் கேக்கணும்:-)

    கேட்டால்............

    கவிதை போதாது.... ஒரு காப்பியமே பாடணுமுன்னு சொல்றார்.

    ReplyDelete
  18. //சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்//
    அதையும் MR.கைப்புவே வாங்கிக்கொள்வார்

    ReplyDelete
  19. //கவிதை போதாது.... ஒரு காப்பியமே பாடணுமுன்னு சொல்றார்//

    அது யாருன்னு எங்களுக்குத் தெரியும் துளசி அக்கா அவர்களே!

    ReplyDelete
  20. கலக்கல் பினாத்தலாரே!....

    ஆனா இத நீங்க எழுத மட்டும் தான் ஏழு வ்ருடங்களாகியிருக்கும்...
    அறிந்ததென்னமோ 2-3வருடங்களிலேயே என்பது எனது அனுமானம்....ஹிஹிஹி...

    ReplyDelete
  21. ஓய் பெனாத்தலாரே,

    ரொம்ப நன்னா வந்திருக்கு உங்க தீஸிஸ்
    கவிதைகள்.

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  22. //
    முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்.
    //
    enakku intha vaazthu vendaaaaaaaaaaaaaaaaaaaaaaaam

    ReplyDelete
  23. //பார்த்து பார்த்து
    வாங்கி அழகு பார்த்தாலும்
    அடுத்தவள் கையிலிருப்பவை
    நன்றாக வேலை செய்வதாய் தோன்றும் //

    ஆபாசமான கவிதை!

    ReplyDelete
  24. //வெறும்(!!!!) ஏழு வருசத்துக்கே இப்படின்னா 32 வருசம் ஆனவுங்க கதி (???) எப்படி இருக்குமுன்னு
    ஒருத்தரைக் கேக்கணும்:-)//


    துளசி அக்கா 32 வருஷமா.. மெய்யாலுமே அவர் தான் எங்க அட்லாஸ் வாலிபர் பதவிக்கே ரோல் மாடலா இருப்பார் போலிருக்கு... கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க அவரோட அந்தக் காப்பியத்தை நம்ம வ.வா.சங்கத்துல்லயே ரிலீஸ் பண்ணிருவோம்.

    ReplyDelete
  25. சீயாம் நோ சில்லி பீலிங்க்ஸ் எது எப்படி இருந்தாலும் நீங்க உங்க கட்மையில்ல இருந்து தவறவே கூடாது ஆமா நம்ம முனைவரை நல்லாக் கவனிச்சு அனுப்ப வேண்டியது நம்ம கடமை இல்லையா.. SO PROCEED

    ReplyDelete
  26. அனானி ஐயா,
    சொந்த சகோதர்கள் முதல் கொண்டு பெற்ற தந்தைவரை எப்படி தங்கள் மனைவியை தாங்குகிறார்கள்,
    பொறுப்பை குடும்பததை கவனிக்கிறார்கள், பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று கம்பேர் செய்து புலம்புவதை சொன்னேன். மற்றப்படி கண்ராவி இரட்டை அர்த்தம் எல்லாம் வேண்டாங்கைய்யா

    ReplyDelete
  27. ஒவ்வொரு கஷ்டத்தையும் கவிதையாக மாத்தீட்டீக..சபாஷ்...

    கஷ்டம் வரும்பபோது கவிதையும் கூடவெ வரும்னு ஒருத்தன் சொன்னது சரிதான் போல..

    ReplyDelete
  28. அல்லாமே சூப்பரு...

    //படைத்தவனையும்
    சேர்த்து யாருக்கும்
    புரியாத கவிதை.//
    இது டாப்பு..

    ஆடி வாங்கினாலும் பரவயில்ல...பொண்டாட்டிகிட்ட இந்த பதிவ கொண்டு போய் காட்டனும்...

    ReplyDelete
  29. ////மனைவி ஒரு குக்கர்

    வேலை செய்வதைவிட
    செய்ததைக்காட்ட
    விசில் அடிப்பதில்தான்
    ஆர்வம் அதிகம்!//
    இதில் பொருட்குற்றம் இருப்பதாகத் தெரிகிறது.. வேற மனைவிகள் யாராச்சும் வந்து வாங்குவாங்க! //

    என்னாது.. பொருட்குற்றமா.. ஒன்னும் இல்ல.. ரொம்ப கரிக்டுதான்...நாங்க அனுபவச்தங்க சொல்றோம்.. கேட்டுக்கங்க..சரியா?


    //ரொம்ப பழைய கனெக்ஷன் வச்சிருக்கீங்களோ? //

    7 வருஷம் முன்னடி வாங்கின் மாடல்னு சொன்னாரில்ல..

    ஆமாம்.. நீங்க என்ன சொல்ல வரீங்க? புது மாடல் வாங்க சொல்றீங்களா? ஆஹா.. பழைய மாடலுக்கு மேட்டர் தெரிஞ்சா உங்க நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா?

    ReplyDelete
  30. //கேட்டால்............

    கவிதை போதாது.... ஒரு காப்பியமே பாடணுமுன்னு சொல்றார். //

    ஓ.. இன்னும் தைரியமா வாய திறந்து உங்களுக்கு பதில் வேற சொல்றாரா?ரொப பெரிய ஆளா இருப்பர் போல இருக்கே..

    ReplyDelete
  31. அதெப்படிங்க...

    இந்தப் பொண்டாட்டிகள்ளெல்லாம் சொல்லிவச்சது போல ஒரே மாதிரியே நடந்துக்கிறாள்க. அநியாயம்பா..

    ச்சே!.. சரி சரி.. நான் இப்படிப் புலம்புனதை போட்டுக் கொடுத்திராதியய்யா..

    ReplyDelete
  32. //துவைப்பதில்,
    பிழிவதில்
    வெளுத்துக்கட்டுவதில்!//

    எதோ அனுபவசாலிங்க சொல்லறீங்க. இப்போதைக்கு பவ்யமா கேட்டுக்கறேன். புழிஞ்சு காயப்போடப் படும் போது உங்களை எல்லாம் நெனச்சிக்கிறேன்.
    :))

    ReplyDelete
  33. //"வீட்டுல அதைப் பாடுங்க - பொண்டாட்டிய லவ் பண்ணுங்க"என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.//

    பெனாத்தலாரே,
    நீங்களும் ஆண்பாவம் படத்தை ரசிச்சுப் பாத்திருப்பீங்க போல? முந்துன பதிவுல கொல்லங்குடி கருப்பாயி பத்தி சொன்னீங்க...இந்த பதிவுல ஆண்பாவம் டைட்டில் சாங்குலேருந்து க்ளிப்பிங்ஸ்?

    மெய்யாலுமே பாவம் தான்...
    :)

    ReplyDelete
  34. உங்க சோகத்திலே பங்கு எடுக்க முடியாதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு அட்லாஸ் வாலிபரே.... :-)

    ReplyDelete
  35. நன்றி தம்பி..

    சொந்த அனுபவமில்லாம, மண்டபத்திலே யாரோட அனுபவத்தையோவா நான் கவிதை எழுத முடியும்?

    ReplyDelete
  36. உஷா அக்கா,

    நீங்க கணவன் சீரிஸ் எழுதப்போறீங்களா? நல்லது. ஒடுக்கப்பட்ட் சமுதாயத்தைப்பத்தியும் யாராவது எழுதணுமில்லையா? நன்றி:-))

    ReplyDelete
  37. நான் அவனில்லை, (என்ன ஒரு பேருடா சாமி! இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பீங்களோ?)

    தெளிவு ரொம்ப சீக்கிரமே கிடைச்சிடும். அதை வெளிப்படுத்தற தைரியம் சில பேருக்கு ஏழு வருஷத்துலே, இன்னும் சிலருக்கு (அய்யோ பாவம்) 32 வருஷத்துலே கிடைக்கும். ஏன், கிடைக்காமலே கூட போகலாம்!

    ReplyDelete
  38. நன்றி சின்னபுள்ள.. தேவ் உங்களுக்கு அருமையான பதில் சொல்லிட்டாரு:-)

    ReplyDelete
  39. ஸ்யாம்..

    கவிதையை உடன் ரசித்ததற்கு அனுதாபங்கள்:-(

    யாரும் சொல்ல மாட்டாங்க .. பயப்படாதீங்க!

    ReplyDelete
  40. என்ன இராமநாதன், சும்மா:)) பண்ணிட்டுப் போயிருக்கீங்க? எங்கள் மனப்பூர்வமான வாழ்த்து:-))

    ReplyDelete
  41. தேவ்,

    இதுக்கு முனைவர் பட்டத்தை விட மனைவர் பட்டம் பொருத்தமா இருக்காது?

    ReplyDelete
  42. இளா,

    அது என்ன ரத்தினச் சுருக்கமா எழுதறீங்க? "மனைவியே கவிதைகளாய்"னு? அவங்க என்ன அவ்வளோ சுருக்கமாவா பேசறாங்க?

    ஞாபகம் இருக்கா? இந்த ரீசார்ஜ் மேட்டரை பெங்களூர்லே டிஸ்கஸ் செஞ்சது?

    ReplyDelete
  43. பொன்ஸக்கா,

    என்னவோ மனைவிகள்ன்ற ஜாதி எங்கேயோ வானத்துலே இருந்து குதிச்ச மாதிரி பேசறீங்க! இன்றைய இளைஞி நாளைய மனைவி (கொலைஞின்னு ரைமிங்காப் போட்டு அடிவாங்க வேணாமுன்னு விட்டுட்டேன்)

    அது என்ன பொருள் குற்றம்? விசில் அடிப்பது குக்கரின் முக்கிய நோக்கமாய் இருக்கவேண்டும் என்றா நினைக்கிறீர்கள்?

    அவுட்கோயிங் இலவசமா? செல்போன் அப்போ பெட்டரா?

    ReplyDelete
  44. லியோ சுரேஷ்,

    இதைப்பத்தி இப்போ இல்லே.. எப்போ பேசினாலும் டின்னு நிச்சயம். நாளைக்கு போன் பண்றேன். நிச்சயம் சந்திப்போம் (இதைப்பத்தி பேசாமல்:-))

    ReplyDelete
  45. அக்கா!

    நம்பினா நம்புங்க, நான் இந்தக்கவிதையையே கோபால் சாருக்கு டெடிகேட் செய்யலாமுன்னு நெனைச்சேன். ஒரு சங்கத்துனுடைய தலைவரா அவர் இருந்தாரே ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
  46. இளா,

    கைப்பு பாவமய்யா..சங்கத்து சிங்கங்கள் யாராவது பங்கு போட வாருங்களேன்.

    ReplyDelete
  47. அமானுஷ்ய ஆவி,

    உங்க பூர்வாசிரமக்கதையக் கொஞ்சம் சொல்லுங்களேன். உங்கள் கணவரை பேயாப்படுத்தினீங்களா:-))

    ReplyDelete
  48. //
    செல்போன் அப்போ பெட்டரா?
    //

    தங்கமணி சுரேஷ் ஐடி கிடைக்குமா? ;)

    ReplyDelete
  49. மௌல்ஸ்,

    இந்த உண்மைகளை உணர்வது கடவுளை அறிவது போல அவரவர் பூர்வஜன்ம பலன். சிலருக்கு சீக்கிரம், சிலருக்கு தாமதமாகலாம். ஆனால்!!!!

    ReplyDelete
  50. நன்றி ஹரிஹரன். நீங்க எந்தப்பக்கம்? (மேலே உள்ள வாழ்த்து பெறத் தகுதி உடையவரா?)

    ReplyDelete
  51. பிரபுராஜா,

    அதான் பின்னூட்டம் போட்டுட்டீங்க ள்ள? பயப்படாதீங்க:-))

    ReplyDelete
  52. மனதின் ஓசை,

    உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதையாய் இருக்கிறதே.. கொஞ்சம் படி கட்டணும் அவ்வளவுதான்.

    கஷ்டங்கள்
    கவிதை தருகின்றன..

    மனைவியும் கவிதைதான்!

    எப்படி?

    ReplyDelete
  53. //ஆஹா.. பழைய மாடலுக்கு மேட்டர் தெரிஞ்சா உங்க நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா? //

    அதானே!

    ReplyDelete
  54. திருவடியான்

    வாங்க, ஜோதியில ஐக்கியம் ஆகுங்க!

    ReplyDelete
  55. வாங்க தலை!

    நீங்களாவது கண்டுபிடிச்சீங்களே "ஆண் பாவத்தை"; அந்தப்பாட்டுலேயே நான் வெச்ச உள்குத்தை கண்டுபிடிச்சிட்டீங்களா?

    ஆண் பாவம் மட்டுமில்லை! காமெடிப்படங்கள் (மட்டும்)பெரும்பாலானவற்றின் வசனங்கள் உள்பட ஞாபகம் இருக்குமளவிற்கு ரசிப்பேன்.

    ReplyDelete
  56. மனதின் ஓசை,

    //ஆடி வாங்கினாலும் பரவயில்ல...பொண்டாட்டிகிட்ட இந்த பதிவ கொண்டு போய் காட்டனும்//

    இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தெரியலையே.. அடி பத்தி பேசறீங்களா, ஆடித்தள்ளுபடி புடவையைப்பத்தி பேசறீங்களா?

    ReplyDelete
  57. ராம்,

    உங்கள் அனுதாபத்துக்கு என் நன்றி.

    //உங்க சோகத்திலே பங்கு எடுக்க முடியாதுக்கு//

    இன்னிக்கு நான், நாளைக்கு நீ..

    ReplyDelete
  58. பொன்ஸ்,

    தங்கமணி சுரேஷ் ஐடி-யா வேணும்? நூறு கசையடிக்குத் தயாரா?

    ReplyDelete
  59. //மனதின் ஓசை,

    உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதையாய் இருக்கிறதே.. கொஞ்சம் படி கட்டணும் அவ்வளவுதான்.//

    உங்களுக்கு 7 வருச அனுபவம்.. எனக்கு மூணுதான்..7வது வருஷத்துல கான்சப்ட கவிதைய மாத்தர அளவுக்கு தேறிடுவேன்னு நினைக்கிறேன்... சரிதானா சீனியர்?


    //கஷ்டங்கள்
    கவிதை தருகின்றன..

    மனைவியும் கவிதைதான்!

    எப்படி? //

    ஆஹா ஆஹா.. கவித கவித..சூப்பர்...
    (உண்மையிலேயே அழகான கவிதை...வாக்கியத்திற்கும் கவிதைக்கும் இருக்கும் ஈர்ப்புத்தன்மையின் வித்தியாசம் அழகாக வெளிப்படுகிறது.)

    ReplyDelete
  60. //புழிஞ்சு காயப்போடப் படும் போது உங்களை எல்லாம் நெனச்சிக்கிறேன்.
    :))
    //
    நனைச்சது போதும்.. தோவச்சதையெல்லாம் (துணியத்தான்!!!) எடுத்து காயப்போடுங்க.. பொண்டாட்டி வர சத்தம் கேக்குது..

    ReplyDelete
  61. //ஞாபகம் இருக்கா? இந்த ரீசார்ஜ் மேட்டரை பெங்களூர்லே டிஸ்கஸ் செஞ்சது? //

    என்னாது அது.. எங்களுக்கும் சொல்றது?

    ReplyDelete
  62. //இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தெரியலையே.. அடி பத்தி பேசறீங்களா, ஆடித்தள்ளுபடி புடவையைப்பத்தி பேசறீங்களா? //

    அதெல்லாம் நல்லா கேளுங்க.. சின்ன பையன்..புரியாம தப்பு பன்ன போறானே.. புத்தி சொல்வோம்னு நினைச்சீங்களா?.. இப்ப உடம்பெல்லாம் வீங்கிடுச்சு..தெரியுமா..

    அப்புறம் இன்னொன்னு.. அவ இதை எழுதின ஆளோட அட்ரஸ் கேட்கிறாள்.. உங்க அட்ரஸ் என்னா?

    ReplyDelete
  63. //கஷ்டங்கள்
    கவிதை தருகின்றன..

    மனைவியும் கவிதைதான்!

    எப்படி? //

    சுரேஷ், இந்த முறை மாட்டினீங்க.. பொருட் குற்றம் வெளிப்படையா இருக்கு!
    கஷ்டங்கள் கவிதை தரும் - அப்போ கவிதை அவுட்புட். கஷ்டம் இன்புட்..

    மனைவியும் கவிதை - அப்படீன்னா, எந்தக் கஷ்டத்தால் உங்களுக்கு இந்தக் கவிதை கிடைத்தது? what is the input?

    (மனதின் ஓசை, முகவரி கிடைத்தால், எனக்கும் கொடுக்கவும். தங்கமணி சுரேஷ் முகவரியும் அதுவாகத் தானே இருக்கும்.. );)

    ReplyDelete
  64. //சுரேஷ், இந்த முறை மாட்டினீங்க.. பொருட் குற்றம் வெளிப்படையா இருக்கு! //

    ஆஹா...காத்துகிட்டு இருப்பீங்க போல... வருங்கால கொலைஞி.. சாரி...சாரி.. மனைவின்னு இப்பவே நிரூபிக்கரீங்க..

    சுரேஸ்.. இதுக்கும்(கண்டிப்பா தப்பு செய்வான்..அப்ப பாதுக்கலாம்னு காத்துகிட்டு இருந்து பிடிக்கிறது) ஒரு கவிதைய எடுத்து விடுங்க..

    //மனைவியும் கவிதை - அப்படீன்னா, எந்தக் கஷ்டத்தால் உங்களுக்கு இந்தக் கவிதை கிடைத்தது? what is the input? //

    என்னாம்மா..இது ஒன்னும் புரியாத ஆளா இருக்கியே..

    input மனைவிதான்.அததானே கிளியரா பக்கம் பூரா கவிதையா கொட்டி இருக்காரே.. எங்க எல்லாத்துக்கும் நல்லா புரியுது..(சேம் பிலட்)

    //(மனதின் ஓசை, முகவரி கிடைத்தால், எனக்கும் கொடுக்கவும். தங்கமணி சுரேஷ் முகவரியும் அதுவாகத் தானே இருக்கும்.. );) //

    logic கரக்டுதான்..ஆன அதுக்கு அப்புரம் அவருக்கு கிடைக்கர inputடையும் கொஞ்ச நேரம் கழிச்சி உடம்புல தெரியப்போற outputடையும் நனச்சாதான் பாவமா இருக்கு..

    ReplyDelete
  65. //மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர்

    பழைய சண்டைநினைவுகளையும்
    கெடாமல் காப்பவள் -
    தேவையான நேரத்தில்
    கொடுப்பவள்//

    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் இப்படியே பல பட்டங்கள் வாங்க வாழ்த்துக்கள் பினாத்தலாரே

    ReplyDelete
  66. //எதோ அனுபவசாலிங்க சொல்லறீங்க. இப்போதைக்கு பவ்யமா கேட்டுக்கறேன். புழிஞ்சு காயப்போடப் படும் போது உங்களை எல்லாம் நெனச்சிக்கிறேன்.
    :))//

    அட கைப்புவ புழிஞ்சு காயப்போட இங்கேயே இத்தனை பேர் இருக்க வூட்ல வாங்குனதில்லையாம்ல நம்புறமாதிரியா இருக்கு

    ReplyDelete
  67. //இன்னிக்கு நான், நாளைக்கு நீ..//
    இன்று நான்... நாளை நீ எங்க ஊர் சுடுகாட்டுக்கு அப்புறம் இங்கதான் பார்க்கிறேன் நான் ஒன்னும் அ.ஆ பக்கத்துக்கு போயிரலயே?

    ReplyDelete
  68. ஒரு கவிதை

    பார்த்து பார்த்து
    வாங்கி அழகு பார்த்தாலும்

    அடுத்தவள் கையிலிருப்பவை
    நன்றாக வேலை செய்வதாய் தோன்றும்

    ஒரு விளக்கம்

    சொந்த சகோதர்கள் முதல் கொண்டு பெற்ற தந்தைவரை எப்படி தங்கள் மனைவியை தாங்குகிறார்கள்,
    பொறுப்பை குடும்பததை கவனிக்கிறார்கள், பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று கம்பேர் செய்து புலம்புவதை சொன்னேன். மற்றப்படி கண்ராவி இரட்டை அர்த்தம் எல்லாம் வேண்டாங்கைய்யா

    ஒரு ரஜினி பாட்டு

    தாயைத் தேர்ந்தெடுக்கும்
    தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை...


    உஷா,

    ச்சும்மா.........தமாசுக்கு.....:-))

    ReplyDelete
  69. போஸ்ட்பெய்ட்டோ
    ப்ரீ பெய்டோ
    பெற்றோருக்கு
    செலவுதான்

    கணிணி

    வைரஸ்க்கு பயந்து
    கணிணியை
    ஒதுக்க முடியுமா?

    ஈ மெயில்

    தேவையோ இல்லையோ
    அட்டாச்சுமெண்டுகளை
    வந்தே தீரும்
    அதை கையாளுவது
    உங்கள் சாமர்த்தியம்

    சிறுகதை
    எதிர்ப்பார்த்தப்படி
    பல எதிர்ப்பாராத
    முடிவுகள் கொண்டது


    நாவல்
    காதலில் ஆரம்பித்து
    செண்டிமெண்ட்ஸ்
    சண்டைக்காட்சிகள் என்று
    கன்னாபின்னாவென்று
    போனாலும் கடைசியில்
    எப்பொழுதுமே பாசக்காவியத்தில்
    முடியும் என்பது அதிசயமே

    நாடகம்

    காதலா, செண்டிமெண்ட்ஸா
    என்றால் பலமுறை
    செண்டிமெண்ஸ்ஸே வெல்லும்

    கவிதை

    புபுது புது வடிவமெடுத்தாலும்
    உள்ளடக்கம் மாறவே இல்லை
    என்பது நூற்றாண்டுகளாய்
    தொடரும் சோகம்

    பி.கு முமுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் எழுதப்பட்டது. தவறாக யாரும்
    கற்பனை செய்துக்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  70. //ஞாபகம் இருக்கா? இந்த ரீசார்ஜ் மேட்டரை பெங்களூர்லே டிஸ்கஸ் செஞ்சது? //

    என்னாது அது.. எங்களுக்கும் சொல்றது? //

    அது ஒண்ணுமில்லை, இந்த ஐடியா அப்போவே வந்தது, அதைத்தான் இப்போ டெவலப் பண்ணேன்

    ReplyDelete
  71. //பி.கு முமுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் எழுதப்பட்டது. தவறாக யாரும்
    கற்பனை செய்துக்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    உஷா அக்கா சங்கத்தின் கொள்கையைப் பின்குறிப்பாப் போட்டிருக்கீங்க. நன்றி

    வ.வா.சங்கத்தின் நோக்கம் நகைச்சுவையே நகைச்சுவை மட்டுமே. அதுன்னாலே இதைப் படிக்கும் எல்லோரும் இதில் உள்ள நகைச்சுவையை நிச்சயம் ரசிப்பார்கள். உஷாக்கா தொடரட்டும் உங்கள் நகைச்சுவைப் பின்னூட்டங்களின் அணிவகுப்பு.

    மனைவர் பினாத்தலார் உஷா அவர்களின் கவிதைகளுக்குத் தரப் போகும் பதிலடி என்ன? ஆவலாகக் காத்திருப்போம்.

    ReplyDelete
  72. சுரேஷ்- அந்த "1" என்ன ஆச்சு?

    ReplyDelete
  73. //அதெல்லாம் நல்லா கேளுங்க.. சின்ன பையன்..புரியாம தப்பு பன்ன போறானே.. புத்தி சொல்வோம்னு நினைச்சீங்களா?.. இப்ப உடம்பெல்லாம் வீங்கிடுச்சு..தெரியுமா..//

    அவரவர்க்கு விதித்தது அவரவர்க்கு!

    என் நிரந்தர முகவரி: தூண்
    தற்காலிக முகவரிகள்: துரும்பு உள்படப் பல.

    ReplyDelete
  74. //கஷ்டங்கள் கவிதை தரும் - அப்போ கவிதை அவுட்புட். கஷ்டம் இன்புட்..

    மனைவியும் கவிதை - அப்படீன்னா, எந்தக் கஷ்டத்தால் உங்களுக்கு இந்தக் கவிதை கிடைத்தது? what is the input? //

    சார்லஸ் பாபேஜிடம் நண்பர் ஒருவர் கவிதை கொடுத்திருந்தாராம்.

    "ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிர் பிறக்கிறது..
    ஒவ்வொரு நிமிடமும் ஒரு உயிர் மரிக்கிறது"

    பாபேஜ் கணக்கு வல்லுநராச்சே, அவர் பதில் சொன்னாராம்.. ஒவ்வொரு நிமிடமும் ஒருவன் பிறந்து ஒருவன் இறந்தால் உலக ஜனத்தொகை கூடவே கூடாது. கவிதையில் பிழை இருக்கிறது என்றாராம்.

    இப்படித்தான் இருக்கிறது பொன்ஸ் உங்கள் வாதம்:-))

    இது கணினி மொழியில் பார்க்கப்படவேண்டியது அல்ல.. இலக்கணப்படி பாருங்கள்:

    இலக்கணக்குறிப்பு வரைக:

    மனைவி, கஷ்டம்

    விடை:

    ஒருபொருட்பன்மொழி.

    ReplyDelete
  75. பல பட்டங்கள் வாங்க வாழ்த்தும் ராசுக்குட்டி அவர்களே, நன்றி.. (இப்படிப்பட்ட பட்டம் இன்னும் ஒன்று வாங்கினாலும் நான் காலி)

    ReplyDelete
  76. உஷா அக்கா,

    தொடர்ந்து கவிதையா?

    எனக்குள்ள இருக்கிற கவிஞனை மீண்டும் சீண்டி விட்டுடாதீங்க!

    ReplyDelete
  77. தேவ்,

    பதிலடி தானே, கொடுத்துட்டாப் போச்சு; வெயிட் அ மினிட் பார் 2 டேஸ்.

    ReplyDelete
  78. இளா,

    அந்த 1 மேட்டர் ரொம்ப காண்ட்ரவர்சியல்.. அதுக்கான சரியான நேரம் வரும்போது போட்டுடலாம்!

    ReplyDelete
  79. //
    முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்.
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பின்னூட்டங்கள், அதற்கு பதில் பின்னூட்டங்கள் சூப்பர்

    இந்த பதிவுக்கு வலைச்சரத்தில் சுட்டி கொடுத்ததுக்கு நன்றி நாகை சிவா

    ReplyDelete
  80. யாரங்கே ?

    யாரங்கே ?

    யாரடா அங்கே ???

    எனக்கு ஒரு ப்ரிண்ட் அவுட் !!! இன்னைக்கு ப்ரிண்ட் அவுட், நாளைக்கு நாக்(கு) அவுட் !!!

    ReplyDelete
  81. சங்கம் ரொம்பப் பெருசா இருக்கே... பாதிக்கப்பட்டவங்க நெறயா பேர் இருக்காங்க போல.. என்னயும் சேத்து :))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)